Saturday, April 9, 2011

மதுரை சேதுபதி பள்ளியில் திருக்கல்யாண விருந்து


சோலைமலை முருகன் கோயிலில் 35 ஆண்டுகள் கார்த்திகை மாதம் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.


  13 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்தவர் தேனய்யா அவர்கள். அவர் மீனாட்சி கோயிலுக்கு இடமாற்றப்பட்ட போது. எனது தந்தை திரு சாமுண்டி விவேகானந்தன் அவர்களை அணுகினார். "திருக்கல்யாணத்தின் போது ஊழியர்களுக்கு ஓட்டலில் சாப்பாடு வாங்கி தந்து கொண்டிருக்கிறோம். அவர்களுக்கு நீங்கள் ஏதாவது செய்யக்கூடாதா' என்று கேட்டபோது, திருமண விருந்து யோசனை தோன்றியது. பொதுமக்கள் கொடுக்கும் பொருட்களை கொண்டு முதன்முதலில் மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ளே செவ்வந்தீஸ்வரர் சன்னதி முன்பு 1500 பேருக்கு திருமண விருந்து
அளிக்க ஆரம்பித்தோம். இன்று வரை இது இறைவனின் அருளால் தடையின்றி நடந்து கொண்டு வருகிறது. அம்மன் சமைக்கிறார். நாங்கள் கரண்டியாக இருந்து பரிமாறுகிறோம்'' .

ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்  திருக்கல்யாணத்தன்று, 30,000 பேருக்கு பக்த சபை சார்பில், ஆடி வீதிகளில் விருந்து அளிக்கப்பட்டு வந்தது. கடந்தா இரண்டாண்டு பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு , காவல்துறை தடைவிதித்தனர்.இந்த ஆண்டு திருக்கல்யாணம் 15-04-2011 அன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை சார்பில், மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடத்தப்படுகிறது.  இந்த விருந்தில், பூந்தி, மூன்று வகை காய்கறிகள், அப்பளம், வடை, பாயாசம், சாம்பார், ரசம், மோர், வாழைப்பழம் இடம்பெறுகிறது.


14-04-2011 அன்று மாலை 5 மணி முதல் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காய்கறி நறுக்குதல் போன்ற பணி துவங்குகிறது ,மாப்பிள்ளை அழைப்பு விருந்தில் கேசரி ,பொங்கல், வடை இடம்பெறும். விருந்துக்கு தேவையான மளிகைப் பொருட்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம்.


 திருக்கல்யாண விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.


"பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை"
C/o சாமுண்டி விவேகானந்தன்
சாமுண்டி பாக்கு
New 41 old 20/3 மேலக்கோபுரத்தெரு
மதுரை -625 001
cell:9442408009 , Shop:0452 2345601

Friday, April 8, 2011

நடுத்தரக்குடும்பத் தேவையை நிறைவேற்றும் ஓம்சிவசிவஓம்






தினந்தோறும் உயரும் விலைவாசியால் இந்தியாவின் 121 கோடி பேர்களில் 120.5 கோடி இந்தியர்கள் படும் கஷ்டத்தை ஒரு பக்கத்தில் விவரிக்க முடியாது;மன்மோகன் துவங்கி,நமது முதல்வர் வரையிலும் தேசபக்தியும் கருணையும் கொண்டவர்கள் நமது நாட்டில் நமது தலைவர்களாக இருக்கிறார்களா?

ஓம்சிவசிவஓம் மட்டுமே துணையிருக்கிறது!!!

மாதக்கடைசி நாட்களான 25 ஆம் தேதி முதல் 30,31 ஆம் தேதி வரையிலும் சமாளிக்கும் குடும்பத்தலைவிகளின் கஷ்டத்தை ஒரு ஆண்டு வரையிலாவது இந்தியாவின் பெண் அரசியல் வாதிகளுக்கு உணர்த்திட வேண்டும்.சரி அது போகட்டும்.எதற்கு வீண் கற்பனை?

ஒரு குடும்பத்தில் ஒரு மகனும்,மகளும் பெற்றோரும்!

குடும்பத்தலைவரும்,குடும்பத்தலைவியும் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகின்றனர்.ஜபிக்கத் துவங்கும் முன்பாக இருந்த குடும்ப சூழ்நிலை இப்போது மெதுவாக மாறிவருகிறது.

ஒரு நாள் இந்த குடும்பத் தலைவர்,ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குகையில் தனக்கு இன்று ரூ.500/- கிடைக்க வேண்டும் என்ற சிற்ற்ற்ற்று கோரிக்கையோடு ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கினார்.ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு, அலுவலகம் புறப்பட்டுவிட்டார்.

நீண்ட நாட்களாக அவருக்கு வர வேண்டிய அலுவலகத் தொகை( பயணப்படி) ரூ.512/- அந்த நாளில்,அலுவலகத்திற்குள் நுழைந்ததும் ஒப்படைக்கப்பட்டது.அசந்தே போனார்.மாய்ந்து மாய்ந்து நம்மிடம் இந்த சாதனையைப் பகிர்ந்து கொண்டார்.

மாதக் கடைசி நாட்களில் இந்த ரூ.512/- எப்படியெல்லாம் கைகொடுத்தது? என்பதையும் என்னிடம் விவரிக்க எனக்கு ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.


எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை வந்துவிட்டது.



இந்த மந்திரத்தை எமக்கு புத்தக வடிவில் உணர்த்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!

Thursday, April 7, 2011

அமெரிக்காவின் ஆயுத விற்பனையும் அதில் ஒளிந்திருக்கும் நரித்தனமும்



எப்போதுமே இராணுவ ஆயுதங்கள்,தளவாடங்கள்,விமானங்கள் வாங்குவதில் அமெரிக்காவை நம்புவதை விட,ரஷ்யாவிடம் ஒப்பந்தம் போடுவது நன்று.கடந்த கால வரலாறு இதை அடிக்கடி நிரூபித்திருக்கிறது.

இன்று கணினி வைரஸ்களின் முக்கியப்பணியே உளவு வேலை பார்ப்பதுதான்.

கணினி நிபுணர்களுக்கு ட்ரோஜன் குதிரைகள் பற்றித் தெரியும்.புராதன காலத்தில் கிரேக்கப்போரின் போது எதிரிகளின் கோட்டையை பல மாதங்கள் முற்றுகையிட்டு வெல்ல முடியாமல்,மிகப் பெரிய மரக்குதிரையை தயார் செய்து அந்த கோட்டையின் முன்பாக வைத்துவிட்டுச் சென்றுவிடுவர்.உடனே,கோட்டைக்குள் இருப்பவர்கள் அந்த மகா குதிரையின் அழகில் மயங்கி கோட்டைக்குள் கொண்டு சென்றுவிடுவர்.விளைவு? கோட்டைக்குள் சென்றதும் குதிரைக்குள் ஒளிந்திருந்த அதிரடிப் படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவர்.இதே டெக்னிக்கில் தான் இன்று கணினி வைரஸ் உருவாக்கப்படுகிறது.

உதாரணமாக,ஒரு பத்திரிகையின் இணையதளத்துக்குள் இம்மாதிரியான வைரஸ் நுழைந்துவிட்டால்,அந்தப் பத்திரிகையின் அலுவலகத்தில் நடக்கும் விஷயங்கள்,அந்த பத்திரிகையை எந்தெந்த நாட்டு வாசகர்கள் எவ்வளவு பேர்கள் வாசிக்கிறார்கள்? போன்ற அதிமுக்கிய ரகசியங்களை வைரஸை அனுப்பியவர்களுக்கு அனுப்பிக்கொண்டே இருக்கமுடியும்.இதன் மூலமாக அந்த பத்திரிகையின் வளர்ச்சியை நிர்மூலமாக்கிட முடியும்.

இதே வேலையைத் தான் இந்தியாவின் ஏர்டெல் செல் போன் நிறுவனம் தனது தகவல் தொடர்பு செயற்கைக் கோள் மூலமாக விடுதலைப்புலிகளை சிங்கள அரசுக்குக் காட்டிக்கொடுத்தது.

கணினி கருவிகளில்(சிப்களில்)எம்படேடு கிருமிகளை வைத்துவிட்டால் யார் தகவல் சேகரிக்கிறார்கள் என்பதே தெரியாது)

அமெரிக்க ராணுவ தளவாடங்களில் உள்ள கணினி சிப்களில் பெண்டகனின் ஆதரவு எம்படேடு வைரஸ்கள் பதிக்கப்பட்டே உலக நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.எனவே,அமெரிக்க ராணுவ தளவாடங்களை வாங்கும் நாட்டின் ராணுவத்தின் முதுகெலும்பை இதன் மூலம் முறித்து,எதிரிநாட்டுக்கு வெற்றியை அமெரிக்காவால் தர முடியும்.

அமெரிக்காவிடம் ராணுவ தளவாடங்கள் வாங்கிய நாடுகளுக்கு போர் சமயத்தில் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவாகி,அந்த நாடுகளின் வரலாறே மாறிப்போனது.இதை யாராலும் மறுக்கவோ,மறைக்கவோ முடியாது.ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கும்போதும்,வாங்கியப்பின்னரும் இப்பேர்ப்பட்ட சிக்கல்கள் உருவானதில்லை;

2010 முதல் 2015 வரை இந்தியாவை கட்டாயப்படுத்தி 1,00,000 கோடி ரூபாய்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு,ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

இப்போது சொல்லுங்கள்: அமெரிக்கா இனியும் உலக வல்லரசாக இருக்கணுமா? அமெரிக்காவின் அடிவருடிகளான மன்மோகன்,பசி,மண்டேக்சிங்,சோனியா இந்தியாவை ஆளணுமா?

தகவல் நன்றி:மக்கள் குரல் 26.10.2010 தலையங்கம்

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதில் இன்னொரு முறை




ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும் நீங்கள் உங்களின் வசிப்பிடத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முன்பாக, டையமண்டு கல்கண்டையும் ஏலக்காயையும் அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்ததும்,இந்த பசும்பால் கலவையை அருந்தி வருவதால்,ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் உங்களின் உடலுக்குள் பதிவாகிவிடும்.

இப்படி ஒரு லட்சம் தடவைக்கு மேல் உங்களின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கையைத் தாண்டும்போது நீங்கள் சிவனின் அம்சமாகிய ருத்ரனாக,ருத்ரியாக மாறிவிடுவீர்கள்.
குரு உபதேசம் செய்தவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்!!!

Wednesday, April 6, 2011

புத்திர பாக்ய வேள்வி அழைப்பிதழ்



குழந்தைச் செல்வம் வேண்டும் தம்பதியர்கள் இந்த புத்திர பாக்ய வேள்வியில் கலந்துகொள்ளலாம்.1.5.11 ஞாயிறு மற்றும் 2.5.11 திங்கள் என இரு நாட்களில் கொழுக்கட்டைச் சாமியாரின் பதினெண் சித்தர்கள் தர்ம சேவாசிரமத்தில்,வைத்து நடைபெற இருக்கிறது.

முகவரி:கொழுக்கட்டை சாமியார் ஆசிரமம்,சதுரகிரி அடிவாரம்,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பின்புறம்,வத்திராயிருப்பு சாலை,மகாராஜாபுரம்,வத்திராயிருப்பு.ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்.

மேலும் விபரமறிய:98659 26214

Tuesday, April 5, 2011

செல்வத்தின் அதிபதி திருப்பதி பாலாஜி கோவிலில் சேவை செய்யும் ஊழியராக இருக்க விருப்பமா?




உங்கள் வயது 20 முதல் 60 வரை இருக்க வேண்டும்;உங்கள் ஊரிலிருந்து திருப்பதிக்கு உங்கள் சொந்தச் செலவில் போய் வர ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.குறைந்தது ஒரு வாரம் தங்கிட வேண்டும்.ஒரு நாளுக்கு 4 மணி நேரம் வரை திருப்பதி கோவிலுக்குள் அல்லது கோவில் பகுதியில் கோவில் நிர்வாகம் ஸ்ரீவாரி சேவை செய்ய பொறுப்பு தரும்.

குறைந்தது 10 பேர்கள் கொண்ட குழுவாக இருக்க வேண்டும்.அதிகபட்ச எண்ணிக்கைக்கு வரம்பு ஏதுமில்லை;இந்த குழுவில் எத்தனை ஆண்களும்,எத்தனை பெண்களும் இருக்கலாம்.

இந்த புண்ணிய சேவையில் ஈடுபடவும்,மேலும் விபரமறியவும் தொடர்பு கொள்ள வேண்டிய செல்:MR.PRASANNA 98429 85071

Sunday, April 3, 2011

சுயச்சார்பு அப்துல்கலாமும்;சுயநல இந்திய ஆள்பவர்களும்

3



கி.பி.2006 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ்,இந்தியாவுக்கு வருகை தருவதாக அறிவித்தார்.பாதுகாப்புக்காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகையின் வரவேற்பறை,வராந்தா பகுதி,தரைக் கம்பளங்களை மாற்ற வேண்டும் என்றனர் அமெரிக்க அதிகாரிகள்.



அதோடு, ‘குடியரசுத் தலைவர் மாளிகையை புஷ்ஷின் பாதுகாப்புத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்தியப் பாதுகாப்பை நாங்கள் நம்ப மாட்டோம்’ என்றும் அமெரிக்கத் திமிர்த்தனத்தைக் காட்டினர்.

ஆனால்,நமது தேசத்தை நேசிக்கும் நமது நிரந்தர ஜனாதிபதி அப்துல் கலாம் மிகுந்த கண்ணியத்துடனும்,தெளிவான குரலுடனும் இரண்டையும் மறுத்துவிட்டார்.

“உலகப்புகழ் பெற்ற தலைவர்கள்,ஞானிகள் பலரின் பாதம்பட்ட ‘கார்பெட்’களில்,புஷ் அவர்களின் பாதம் படுவது பெருமைக்குரிய விஷயம்.எனவே,அதை மாற்ற இயலாது”என்று இந்தியாவின் சுயமரியாதையை அமெரிக்க அதிகாரிகளுக்கு உணர்த்தினார்.


அத்துடன்,இந்தியாவுக்கு வரும் அமெரிக்க அதிபர் புஷ்ஷை,எங்கள் பாதுகாப்புப் படையினர்,உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாப்பர்.வேண்டுமானால்,அமெரிக்க காவல் துறையிலிருந்து ஒரே ஒரு அதிகாரி மட்டும் வந்து,மாளிகையின் மேலிருந்து கண்காணிக்கலாம்.அதுவும்,கையில் துப்பாக்கி வைத்திருப்பது யாருக்கும் தெரியக்கூடாது என அப்துல் கலாம் அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உத்தரவிட்டார்.

ஆனால்,இன்று கி.பி.2011 இல் நடப்பது என்ன? அணுசக்தி ஆராய்ச்சியில் யுரேனியத்தை விடவும்,சுலபமாகவும்,அதிகமாகவும் தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரிக்க முடியும்;தோரியத்திலிருந்து அணு மின்சாரம் தயாரித்தப்பின்பு ஏற்படும் கதிர்வீச்சு யுரேனியத்தைவிடவும்,புளூட்டோனியத்தை விடவும் மிகக்குறைவாகவும் இருக்கிறது.எனவே,வெகு விரைவில் இந்தியாவால் உலகம் முழுவதும் தோரியத்தினால் இயங்கும் அணு உலைகளை நிறுவிட முடியும்; என்பதை கல்பாக்கம் அணு ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.உலகம் முழுவதும் கிடைக்கும் தோரியத்தில் 90% தென் மாவட்டங்களான நெல்லை,குமரி மாவட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது என்பதும் அமெரிக்காவை தூங்க விடாமல் செய்துவிட்டது.



இராமர் பாலத்தினால் கடலில் இருந்த தோரியத்துகள்கள் 17,50,000 ஆண்டுகளாக சேகரமாகி சுமார் 4000 சதுர கிலோ மீட்டர்களில்(நாகப்பட்டினம் துவங்கி கன்னியாக்குமரி வரை) தோரியம் பரவிக்கிடக்கிறது என்பதும் அமெரிக்காவின் வல்லரசுத் திமிருக்கு அடியாக விழுந்துவிட்டது.எங்கே அடுத்த நூற்றாண்டு துவங்கும் முன்பாகவே தோரியம் மூலமாக மட்டுமே இந்தியா வல்லரசாகிவிடுமோ? என பயந்து போய்,இந்திய அரசினை மறைமுகமாக மிரட்டி,இராமர் பாலத்தை உடைக்கவும்,சேது கால்வாயைக் கொண்டு வரவும் திட்டமிட்டது.

கூடவே,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட மிகக்குறுகிய கடற்பரப்பை சர்வதேச எல்லைப் பகுதியாக (இந்திய பாராளுமன்றத்தின் அனுமதியின்றியே) அறிவிக்க வைத்தது.

இருந்தும் அமெரிக்காவின் பயம் தீர வில்லை;வற்புறுத்தி தன்னுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்ய வைத்தது.இதன் மூலமாக,தோரியம் மூலமாக அணு மின்சாரம் தயாரிக்கும் ரகசியத்தினையும் திருடிச் சென்றுவிட்டது.

இதுஒருபுறம் நடந்துகொண்டிருக்கையில்,நமது நிஜமான பங்காளி சீனாவோ,அமெரிக்காவின் அத்தனை செல்வாக்குகளையும் சர்வதேச அரங்கில் ஒடுக்கும் திட்டத்துடன் செயல்பட்டு,40 ஆண்டுகளுக்குப்பின்னர் அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

தோரியத்தை அமெரிக்கா இங்கு(கன்னியாகுமரி பக்கம் வந்து திருடும் முன்பாக)இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் நோக்குடன் நுழைந்துள்ளது.

இன்னொரு புறம்,இந்தியாவின் தலையெழுத்தை இத்தாலி நிர்ணயித்துவருகிறது.இதற்கான வரலாற்றுக்காரணங்களை அறிய உலக வரலாற்றில் இனி என்ன நடக்கும்?மூன்று பாகங்கள் என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டு ஆன்மீகக் கடல் வலைப்பதிவுகளை வாசிக்கவும்.

இந்தியாவில் சுதேசத் தொழில்கள் அழிந்து வருவதற்கு உலக மயமாக்கல் காரணம் என கூப்பாடு போட்டு வருகிறோம்.ஆனால்,அது காரணமல்ல;இந்திய குறு மற்றும் சிறு தொழில்களை பாதுகாக்கும் எண்ணமுடைய அரசு வராததே காரணம்.இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் எப்படியெல்லாம் அழிந்து வருகின்றன? என்பதை அறிய சுதேசிச் செய்தி என்ற மாத இதழ் சென்னையிலிருந்து வெளிவருகிறது.அதற்கான முகவரியை நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம்.ஓராண்டுச் சந்தா ரூ.75/மட்டுமே!

உடலுக்கு கடுமையான தீங்கு விளைவிக்கும் சீன மூலிகை சுவையூட்டியான அஜினோமோட்டோவை உலகம் முழுவதும் தடை செய்துவிட்டனர்.இந்தியாவில் மட்டும் அபாரமாக விற்பனையாகி,இந்தியர்களை நோயாளியாக்கி வருகிறது.ஒரே ஒருமுறை 0.01 கிராம் நமது உணவின் மூலமாக நமது உடலுக்குள் போனாலும் சுமார் 64 விதமான நோய்களை உருவாக்கும் திறனுடையது;புரோட்டாவின் குழம்பான சால்னாவின் ரத்த சிகப்புக்கும்,சிக்கன் முதலான சகலவிதமான அசைவ உணவிலும் அஜினோமோட்டோ சர்வ சாதாரணமாகக் கலக்கப்படுகிறது.

அடுத்த படியாக,மலிவு விலை சீனப்பொருட்கள் இந்தியாவின் சிறு மற்றும் குறுந்தொழில்களை அழித்து வருகிறது.விளைவு? இந்தியா குண்டூசிக்குக் கூட வெளிநாட்டைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

எந்த ஒரு இந்திய அரசியல் வாதிக்கும் இந்தியாவின் நலன் முக்கியமில்லை;ஊழல்! ஊழல்!! ஊழல்!!! தான் இவர்களின் லட்சியம்!!!

மீறி தேசபக்தியாக செயல்படும் இந்திய அரசியல்வாதிகளை தீவிரமாக செயல்படவிடாமல் அமெரிக்காவும்,சீனாவும்,பாகிஸ்தான் மற்றும் இத்தாலி உளவுத்துறையால் மிரட்டப்பட்டுவருகின்றனர்.அதற்கும் திமிறுபவர்கள் கொல்லப்பட்டுவருவது சகஜம்.

இவ்வளவு கடுமையான சூழ்நிலையிருந்தும்,கடவுளின் அருள் நமது இந்தியாவுக்கு இருக்கிறதுதான் ஒரு மாபெரும் அதிசயம்.2014க்குள் ஒரு தேசபக்தி நிறைந்த சர்வாதிகாரி இந்தியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்.அந்த சர்வாதிகாரி வட பாரதத்தைச் சேர்ந்த மாவீரன் ஆவார்.அந்த மாவீரன் தென் பாரதத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் அரசியலும் கற்றுக் கொண்டிருக்கிறார்.அந்த மாவீரன் சித்தர்களின் ஆசி பெற்றவர் ஆவார்.அவரது ஆட்சிகாலத்தில் பிராடுகளுக்கு மீள முடியாத நிரந்தர இம்சைகள் துவங்கும்.நீதி நேர்மை,தர்மம் என வாழ்ந்து அனைத்தையும் இழந்துவிட்ட நல்ல மனிதர்கள் இந்தியாவின் முக்கிய அரசு,அரசியல்,வெளியுறவு,கொள்கை வகுப்பு,உலக அரசியல் அரங்கில் முத்திரை பதிப்பார்கள்.ஜெய் ஹிந்த்;ஜெய் விஸ்வம்(உலகம்)!!!