Wednesday, March 23, 2011

அனாதையாக இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்யும் தொண்டுநிறுவனம்


சென்னையில் ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை கி.பி.2004 ஆம் ஆண்டில் நிறுவி,அனாதையாக இறப்பவர்களின் உடலை உரிய மரியாதையோடு ஈமச்சடங்கு செய்து வைக்கின்றனர்.இப்படிச் செய்வதும் புண்ணிய காரியங்களில் தலைசிறந்தது ஆகும்.

இவ்விதம் புறக்கணிக்கப்பட்ட சடலங்களுக்கு அந்திமக்கிரியைகளைச் செய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு என்பதை தர்ம சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

இப்படிச் செய்வது பத்து அஸ்வமேத யாகப்பலன்களுக்கான பலன்களை இது அளிக்கும் என நமது முன்னோர்களாகிய ரிஷிகள் அருளியுள்ளனர்.

“அனாத பிரேத சம்ஸ்காராத் தச அஸ்வமேத பலம் லபேத்”

இதற்காக காஞ்சி ஸ்ரீபூஜ்யஸ்ரீ மகாப்பெரியவரின் அருள் கட்டளையினால் ஆரம்பிக்கப்பட்டு,தமிழக அரசு காவல்துறையினரின் அனுமதியோடும்,ஒத்துழைப்போடும் செயல்பட்டுவருகிறது.

இப்படி அனாதைச்சடலங்களுக்கு அந்திமச்சடங்குகள் செய்வதன் மூலம் இறந்தவர்களின் ஆத்மா உரிய புண்ணிய உலகத்தை அடையும்.இப்படி அனாதையாக இறப்பவர்களில் சிறு குழந்தைகள்,சிசுக்கள்,நடுத்தர வயதினர்,வயோதிகர்கள் என எல்லா வயதினரும் அடங்குவர்.

ஒவ்வொரு அந்திமக்கிரியைக்கும் கி.பி.2007 ஆம் ஆண்டில் ரூ.750/- செலவாகிறது.இந்தப் புண்ணியக்காரியத்துக்கு,அன்பளிப்பு வழங்கிட விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரி,செல் எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

திரு.எம்.வி.ரமணி,மானேஜிங் டிரஸ்ட்,

செல்:98410 12779,98410 115322

திரு.ஆர்.சுப்பிரமணியன்,சேர்மன்,ஜீவாத்மா கைங்கர்ய டிரஸ்ட்,பழைய எண்:41,புது எண்:42,சுப்பிரமணியன் தெரு,மேற்கு மாம்பலம்,சென்னை-33.

செல்:98409 22614.

Tuesday, March 22, 2011

சொர்ண ஆகர்ஷண பைரவரை நேரில் சென்று வழிபட முடியாதவர்களுக்கு:





அவரது மூல மந்திரத்தைக் கொடுத்துள்ளோம்:இதை 26.3.11 சனிக்கிழமை  9.00am முதல்10.30am  மணி வரையிலும் வரும் தேய்பிறை அஷ்டமியுடன் கூடிய இராகு காலத்தில் 330 முறை சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும் முன்பு,ஒலி இரைச்சல்கள்,செல்போன்,டிவி,வானொலியை அணைத்து வைப்பது நல்லது/அவசியம்,

சொர்ண ஆகர்ஷண பைரவர் இணையப் பெருங்கடலில் கிடைக்கிறது.அதை பெரிய அளவில் ப்ரிண்ட் எடுக்கவும்.எடுத்து பிரேம் போட்டு பூஜையறையில் வைத்துக்கொள்ளவும்.

பூஜையறையை சுத்தப்படுத்தி,பத்தி,தசாங்கம் ஏற்றி வைக்கவும்.நீங்களும் குளித்து சுத்தமாக்கிக்கொள்ளுங்கள்.நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பினை தயார் செய்து படையல் போட்டுக் கொள்ளுங்கள்.இவை அனைத்தும் 26.3.11 சனிக்கிழமை  9.00amக்குள் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்வரும் மந்திரத்தை 330 முறை வாய்விட்டுச் சொல்லாமல்,மனதுக்குள் ஜபித்துவர வேண்டும்.முடியும் போது ஜபித்தவர் ஒரு தம்ளர் இளநீர் அருந்த வேண்டும்.அதன் பிறகு,சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தூபதீபம் காட்டி,இனிப்பை(சர்க்கரைப்பொங்கல்,டைமண்டு கல்கண்டு,)அருகிலிருப்போருக்கு விநியோகிக்கலாம்.

இப்படிச் செய்வதன் மூலமாகவும் சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளைப் பெறலாம்.

வேலைப்பளு காரணமாக,இவற்றில் ஏதாவது ஒன்றை தயார் செய்ய முடியாவிட்டால் கூட,சொர்ண ஆகர்ஷண பைரவரின் படத்தினை வைத்து 330 முறை ஜபித்தால் கூட போதுமானது.

ஓம் ஏம் ஐம் க்லாம்

க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்

சகவம்ஸ ஆபதுத்தோரணாய

அஜாமிளபந்தநாய லோகேஸ்வராய

ஸ்வர்ணாகர்ஷண பைரவாய

மமதாரித்திரிய வித்வேஷணாய

ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

விரைவான பலன் தரும் ஓம்சிவசிவஓம்






எனது நண்பர் தனது வீட்டில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையைத் தெரிவித்தார்.நீங்களும் முயன்று பார்க்கலாம்.

அவரது தோட்டம் ஒரு மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது.நமது வலைப்பூவைப் பார்த்து அதுபற்றி தனது ஆன்மீக குருவிடம் ஆலோசித்திருக்கிறார்.அவரது வழிகாட்டுதலின் படி,ஒரு செவ்வகமான கருங்கல்லை பலகை வடிவில் இருப்பதை வீட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.அதை மணை போல்,கொத்தி சமதளமாக்கியிருக்கிறார்.

இந்த கருங்கல் மணையை வீட்டு பூஜையறையில் வைத்து,மண் விளக்கு(கிளிஞ்சட்டி)ஒன்பது வாங்கி,அதில் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய்யை வாங்குவதில்லை)யினை நிரப்பி,அதில் ஒரு சில சொட்டுக்கள் தேங்காய் எண்ணெயை கலந்து,தாமரைநூல் திரியிட்டு,தரமான பத்தியை எரிய விடுவார்.அப்படிச் செய்த கையோடு,அவர்,அவரது மனைவி,அவரது இரண்டு மகள்கள்(மூத்தவளின் வயது 11,இளையவளுக்கு 9) உடன் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறார்.

அது சரி? 21 வயதுக்கு மேற்பட்டவர்தானே ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?எப்படி சிறுமிகளை வைத்து அவர் ஜபிக்கிறார்?

தனது மகள்களுக்கு ஓம்,ஓம்,ஓம் என்று மட்டும் ஜபிக்கும்படி பயிற்சியளித்திருக்கிறார்.

41 நாளிலிருந்து அவருக்கு ஓம்சிவசிவஓம் பலனளிக்கத்துவங்கியிருக்கிறது.ஆம்! சுமார் 18 மாதங்களாக அவருக்கு வராத பணம்(கொடுத்த கடன்) வட்டியோடு திரும்பியிருக்கிறது.அவரால் இதை நம்பவே முடியவில்லை;

அவரது முன்கோபம் பெருமளவு குறைந்திருக்கிறது;வீட்டிற்கு வந்ததும் ஆழ்ந்த மனநிம்மதியை உணர்ந்து வருகிறார்.இப்போது ஓம்சிவசிவஓம் பற்றி நோட்டீஸ் அச்சடித்து,அவரது ஊரிலிருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரதோஷம் தோறும் விநியோகம் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகப்படுத்திய மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கூகுள் (1க்குப்பின்னாடி 100 சைபர்கள்)நன்றிகள்!!!



எந்த ஒரு மந்திரத்தையும்,கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து,இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,இடுப்பில் சுத்தமான மஞ்சள் பட்டு ஆடை அணிந்து,அதிகாலை மணி 4.30 முதல் 6.00 மணி வரையிலும்,கருங்கல்லில் அமர்ந்து ஒரு முறை ஜபிக்க பத்தாயிரம்  மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பது அவரது ஆன்மீக குரு உபதேசித்திருக்கிறார்.

தன ஆகர்ஷன பைரவர் அர்ச்சனை






ஓம் ஸ்ரீம் தன வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

ஓம் ஸ்ரீம் தன நாதா போற்றி

ஓம் ஸ்ரீம் தனத் தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குல தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குருநாதா பொறி

ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

ஓம் ஸ்ரீம் வறுமையின் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் திருவுடைசெல்வா போற்றி

ஓம் ஸ்ரீம் தினம்தினம் காப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி

ஓம் ஸ்ரீம் திருவருள் திரண்டாய் போற்றி

ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தருக்கு சித்தா போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்தாந்த வாழ்வே போற்றி

ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுநிலவினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முழுதனம் தருவாய் போற்றி

ஓம் ஸ்ரீம் முகிழ நகை வயிரவா போற்றி

ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி

ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்யவந்தாய் போற்றி

மீண்டும் ஒரு நினைவூட்டல்:சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு






நீங்கள் செய்யும் தொழிலில் இறங்குமுகமாக இருக்கிறீர்களா? அல்லது

கொடுத்த கடன்/பணம் திரும்ப வராததால் வறுமைக்குள்ளாகிவிட்டீர்களா?

அல்லது

தொழிலில் நொடித்துப்போகும் நிலை வந்துவிட்டதா?(மின்சாரம் வரும் லட்சணத்துக்கு இதை வேற குத்திக்காட்டணுமா? எனக் கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்)

அல்லது

உங்களது குடும்ப உறுப்பினர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் பிரிந்து வாழ்வதை மாற்றிட விருப்பமா?

அல்லது

அரசியலில் நீங்கள் நினைக்கும் பதவிக்கு வர விரும்புகிறீர்களா?



தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் சொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபட்டு வர வேண்டும்.வசதியிருந்தால்,தேய்பிறை அஷ்டமியில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பாலாபிஷேகம்/இளநீர் அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்களை வாங்கித் தந்து அவரது சன்னிதியில் வழிபட வேண்டும்.

இன்று 22.3.2011 செவ்வாய்க்கிழமை!!

இந்த வாரக்கடைசி நாளான 26.3.2011 சனிக்கிழமையன்று தேய்பிறை அஷ்டமி நாளாக அமைந்துள்ளது.

பின்வரும் தமிழ்நாட்டுக்கோவில்களில் சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.(வாசகர்களின் ஊர்களில் சொர்ண பைரவர் சன்னிதி இருந்தால் தகவல் தெரிவிக்கவும்)

இந்த சன்னிதிகளில் உங்களுக்கு அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று இந்த தேய்பிறை அஷ்டமியிலிருந்து வழிபடத் துவங்கவும்.ஒரே ஒரு தேய்பிறை அஷ்டமியில் வழிபடத் துவங்கினாலே உங்களது பொருளாதார வளர்ச்சியை அடுத்த சில நாட்களில் உணரலாம்.

படப்பை ஸ்ரீஜெயதுர்கா பீடம்,

காஞ்சிபுரம் அருகிலிருக்கும் அழிபடைதாங்கி,

சிதம்பரம் கனகசபை,

திருச்சி மலைக்கோட்டை அருகிலிருக்கும் பெரியகடைவீதி,

திருமயம் அருகிலிருக்கும் தபசுமலை,

திண்டுக்கல் அருகிலிருக்கும் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் சவுந்தர ராஜப்பெருமாள் கோவில்,

தேவக்கோட்டை,விருதுநகர் ரயில்வே நிலையம் அருகே,

இராஜபாளையம் முடங்கியார் ரோட்டில் இருக்கும் ரேணுகாம்பாள் ஆலயம்(தாலுகா அலுவலகம் எதிரே குறிப்பிட்ட சமுதாயத்தின் குலதெய்வம்)

ராஜபாளையம் தாலுக்கா சிவகிரியிலிருந்து சங்கரன் கோவிலுக்குச் செல்லும் கிராமத்துப்பாதையில் அமைந்திருக்கும் தென்மலை

26.3.11 சனிக்கிழமை காலை மணி 11.22க்கு அஷ்டமி துவங்குவதால் அன்றைய ராகு காலமாகிய 9.00am முதல் 10.30am மணிக்கு சொர்ண ஆகர்ஷண பைரவர் பூஜையில் கலந்து கொள்ள விரைவான,சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம்.

அடுத்த தேய்பிறை அஷ்டமி 25.4.11 திங்கட்கிழமை காலையில் அஷ்டமி திதி கால் பங்கு நகர்ந்திருக்கும்.தயாராக இருக்கவும்.



யுத்தகிரகங்களின் நேரடிப்பார்வையும்,உலகளவில் பதட்டமும்




ஜோதிட அறிவியலின் படி,கன்னி ராசியில் சனிபகவான் 26.6.2008 முதல் 2011 இறுதி வரையிலும் சஞ்சாரித்துவருகிறார்.எதிர்வரும் 24.3.2011 விடிகாலை முதல் 45 நாட்களுக்கு மீனராசியில் செவ்வாய் பகவான் சஞ்சாரிக்கப்போகிறார்.இதில் செவ்வாய் நெருப்பு மற்றும் யுத்தக் கிரகம் ஆகும்;சனி காற்றுக்கிரகம் ஆகும்.



சனியின் முழுப்பார்வை மிதுனராசியைப் பார்க்கிறது;செவ்வாயின் நான்காம் பார்வையும் 24.3.11 வியாழன் முதல் மிதுன ராசியைப் பார்க்கப்போகிறது.இதன் விளைவாக,மிதுன ராசியில் பிறந்தவர்கள்,மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத விபத்து,சண்டை,வாக்குவாதம்,அனாவசியமான ஆவேசம் அதனால் ஆத்திரமான செயல்பாடுகள்,தற்கொலை முதலானவைகளில் ஈடுபடுவர்.மிதுன ராசியில் சுமார் ஓராண்டாக KETHU பகவான் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.



மிதுன ராசிக்கும் ,உலக தீவிரவாத நாடு அமெரிக்காவின் தாயகம் இங்கிலாந்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.எனவே,24.3.2011 முதல் 45 நாட்களுக்கு இங்கிலாந்தும் ஏதாவது ஒரு அழிவைச் சந்திக்கும்.



இது தவிர,12 ராசிக்காரர்களும் ஏதாவது ஒருவிதத்தில் இந்த 45 நாட்களுக்குப் பாதிக்கப்படப்போவது உறுதி.

ஆழ்ந்த தெய்வபக்தியும்,தினசரி ஏதாவது ஒரு மந்திர ஜபமும் செய்பவர்களையும்,ஸ்ரீஇராகவேந்திரர்,சித்தர்களில் யாராவது ஒருவர்,குலதெய்வ வழிபாடு தினமும் செய்பவர்,தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் செல்லுவோரை இந்த சனி செவ்வாய்ப் பார்வை பெருமளவு பாதிக்காது.இது அனுபவ உண்மை!!!

Thursday, March 17, 2011

பெண்களால் ஏற்பட்டிருக்கும் தோஷங்கள் நீங்கிட

உங்களை உங்களது ரத்த உறவுகளான அப்பா,அம்மா,சகோதரன்,சகோதரி,மனைவி/கணவன்,மகன், மகள்,மருமகன்,மருமகள் போன்றவர்களே மிக இழிவாகப் பேசுகிறார்களா?

நீங்கள் ஒழுக்கமாக இருந்தும் கூட,உங்கள் நெருங்கிய சொந்தங்கள் மத்தியில் பொறுக்கி /விபச்சாரி/காம வெறிபிடித்தவள் என்ற கெட்ட பெயர் உங்களது ரத்த உறவுகளாலேயே உருவாக்கப்படுகிறதா?

உங்களுக்கு இராகு மகாதிசை அல்லது இராகு சார திசை அல்லது ராகுவுடன் சேர்ந்து வேறு ஏதாவது ஒரு கிரகத்தின் திசை நடைபெறுகிறதா?(இதை உறுதிபடுத்திட,மேற்கூறிய அவமானங்கள் உங்களைப் பின் தொடர்ந்தால் போதும்)

இராகு மகாதிசையுடன் கூடிய ஏழரைச்சனி (2011 தீபாவளி வரையில் சிம்ம ராசி,கன்னி ராசி),அஷ்டமச்சனி(கும்பராசி) நடைபெற்றுவருகிறதா?
ஆம் எனில்,நீங்கள் செல்ல வேண்டிய ஸ்தலம் கேதுபகவானின் ஸ்தலமாகிய கீழப்பெரும்பள்ளம் அருகில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் சிவாலயம் ஆகும்.
இங்கு அடிக்கடி சென்று உங்களின் சொந்தச் செலவில் அபிஷேகம்,பூஜை செய்து கொண்டே வர வேண்டும்.இப்படி குறைந்தது ஒராண்டு வரையிலும் அல்லது 18 தடவை அபிஷேகம் செய்வதால்,அவர்களின் அவதூறுப்பிரச்சாரம் முடிவுக்கு வரும்.
நன்றி:ஷீர்டி சாய்பாபா