Monday, November 16, 2009

AFTER2010AD


ஜோதிட தீர்க்க தரிசனங்கள்:2010க்குப்பின்

பிருஹத் சம்ஹிதை, நாரத ஸம்ஹிதை, குமார சுவாமீயம்,ஜாதக அலங்காரம், திருமூலரின் திருமந்திரம் போன்ற ஜோதிட புராதனங்கள் விவரிப்பது என்னவென்றால், 26.12.2004 ஆம் நாளன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியானது இந்த பூமியில் மிகப்பெரிய மாறுதலுக்கான ஆரம்ப அறிகுறி!!!

கி.பி.2010க்குப் பிறகு உலக அளவில் பூகோள மாறுதல் ஏற்படும்.உலகம் முழுவதும் அழிவுகள் ஏற்பட்டாலும், இந்திய நிலப்பகுதி முழுவதுமாக அழிந்துவிடாது.இந்தியா குபேர நாடாக மாறும்.150 ஆண்டுகளுக்கு உலகத்தை இந்தியா வழிநடத்தும்.(ஆர்.எஸ்.எஸ்.ஸின் லட்சியமே இதுதான்.அவர்கள் தினமும் பாடும் பாடலில் உலகின் குருவாய் பாரதம் ஆகிட. . .)
காகிதப்பணம் அழிந்து மீண்டும் தங்க நாணங்கள்புழக்கத்துக்கு வரும்.
ஆன்மீகம்,இந்துப்பண்பாடு இவற்றை வெளிநாட்டவர் இந்தியாவுக்கு நேரில் வந்து பணம் கொட்டிக் கற்றுக் கொள்ளுவர்.சித்தர்களின் ஆசியால் எழுதப்பட்ட புராதன சுவடிகளும் இதையே விவரிக்கின்றன.
தகவல் ஆதாரம்:ஜோதிட பூமி பக்கம் 28,பிப்ரவரி 2008.

THIRUKAIYLAYAM


திருக்கையிலாய மலையின் சிறப்புகள்

சிவபெருமான் வாழுமிடம்.திருக்கையிலாயமலைக்குச் செல்லும் வழியில், திருக்கையிலாயத்திலிருந்து தென்கிழக்காக 40 கி.மீ.தூரத்தில் உலகிலேயே உயரமான இடத்தில் (கடல் மட்டத்திலிருந்து 15,000 அடிகள்) நன்னீர்த் தடாகம்தான் மானசரோவர்!இது பிரம்மாவால் மானசீகமாகப் படைக்கப்பட்டது.இது 24 கி.மீ.அகலமும்,90 கி.மீ.சுற்றளவும் கொண்டது.320 கி.மீ.பரப்பளவுடன் 250 அடி ஆழத்துடன் உள்நாட்டுக்கடல் போலக் காட்சியளிக்கிறது.
திருக்கையிலாய மலைக்கும் குர்லா மந்தாதா மலைக்கும் இடையே மானசரோவர் இருக்கிறது.

மானசரோவரின் புனித நீரை அருந்துவோர் பல நூறு பிறவியின் பாவங்கள் நீங்கி சுவர்க்கம் அடைவர்.தடாகக்கரை மணல் பல நிறங்களில் காட்சியளிக்கிறது.
இவ்வளவு சிறப்புமிக்க நமது சிவபெருமானின் வீடு, தற்போது சீனாவின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கிறது.எனவே, இங்கு செல்ல விரும்புவோர் பாஸ்போர்ட் எடுத்து சீனா செல்வதற்கான விசா எடுத்துச் செல்ல வேண்டும்.
எப்போது நாம் நமது சிவபூமியை திரும்பப்பெறப் போகிறோம்?
இந்த சிவபூமி சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை சீனாவின் அசுர வளர்ச்சியைத் தடுக்க உலகில் யாராலும் முடியாது.
தமிழக இந்திய அரசியல் கட்சிகளின் தலைவர்களே! ஆளும் கட்சியினரே தன்மானச்சின்னமும்,95 கோடி இந்துக்களின் புனித ஸ்தலமுமான திருக்கையிலாயத்தை எப்போது சீனாவிடமிருந்து மீட்கப் போகிறீர்கள்?

Monday, November 9, 2009

HINDSWARAJ


காந்திஜி எழுதிய “ஹிந்த் ஸ்வராஜ்”

கி.பி.1910 எழுதி வெளிவந்த இந்த புத்தகம் அவரது எண்ணங்களை வெளிப்படுதுகிறது.இதை அவர் பத்தே நாட்களில் எழுதினார்.எழுதி எழுதி தனது வலது கை ஓய்ந்த போது இடது கையாலும் எழுதினார்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது போல இந்தப் புத்தகம் சின்னஞ்சிறுபுத்தகமே!

இந்த புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.

இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:

ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும் டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை வஞ்சிக்கிறார்கள்.

மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச் சுரண்டுகிறார்கள்.

“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும் ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.

ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடுமைமுதலியன அதிகரித்துவிட்டன.ஆங்கிலம் அறிந்த இந்தியர்கள் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.

ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும் அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.

சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!

தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.

சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.

இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப் புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டதாகும்.


நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும் அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.

சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.

மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.

GOLDGANESH


ஸ்வர்ண கணேசர் தியான மந்திரம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய
மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா

இம்மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டுப்பூஜையறையில் 108 முறைவீதம் ஜபித்துவரவேண்டும்.இப்படி குறைந்தது 90 நாட்கள்(மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்துவந்தால் வீட்டில் பணம்,தங்கம் சேரும்; மிச்சமாகும்.

SWADESHIQUESTIONS

சுதேசியனின் தேசபக்தி கேள்வி பதில்கள்
(நன்றி:சுதேசிச் செய்தி மாத இதழ்கள்-2009)

1.அமெரிக்காவின் இன்றைய உண்மையான பொருளாதார நிலை என்ன?

சீனாவை விட பொய் சொல்லுவதில் தேர்ந்துவிட்டநிலை!

2.சீனாவின் எல்லைப்புற ஆக்கிரமிப்பு பற்றியும், தாக்குதல் பற்றியும் செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நிருபர்கள் மீது(இந்திய) மத்திய அரசு நடவடிக்கை அறிவித்துள்ளது நியாயமா?

பொய்யான செய்தி என்கிறது மத்திய அரசு.அப்படியானால் மறுப்பு வெளியிட்டால் போதுமே! ஏன் இந்த நடவடிக்கை?
உண்மையை மறைக்க அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவே தோன்றுகிறது.
தலைதூக்குகிறது சர்வாதிகாரம்.ஆனாலும்,பத்திரிகை சுதந்திரம் பேசுபவர்கள்(பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள்) வாயைத் திறக்கக் காணுமே?!


3.பொக்ரான் 2 அணுச்சோதனை தோல்வி என சில விஞ்ஞானிகள் மூலம் கூறப்பட்டு வருகிறதே?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலே (இந்திய) தேசம் சிறுமைப் படுத்தப்படும்.தேசத்தின் தன்னம்பிக்கை வெட்டியெறியப்படும்.அப்போதுதானே வெட்கமின்ரி அந்நியரிடம் கையேந்தலாம்! இதுவும் ஒரு சதிதான்.

4.ஆசியன் ஒப்பந்தம் பற்ரி எதிர்க்கருத்து கொண்டிருந்த முதல்வர்கள் அது சம்பந்தமாக பேச அணுகிய போது அவர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் தன்னை சந்திக்க நேரம் தரவில்லையாமே?

அந்நியர்க்கு ஏவல் செய்ய ஒரு சர்வாதிகார அரசு உருவாகி வருகிறது.இது நல்லதல்ல.

நன்றி:அக்டோபர் 2009

5.பொருளாதாரம் உட்பட (இன்றுடன் 120 அமெரிக்க வங்கிகள் திவால்) பல விஷயங்களில் ஆட்டம் கண்டு விட்ட அமெரிக்காவிடம் இன்னமும் பல நாடுகள் அடங்கி நடப்பதேன்?

கோடிகோடிகளாக பணத்தை அங்கு (முதலீடு என்ற பெயரில்) கொட்டியாகிவிட்டது.பணம் திரும்ப வர வேண்டாமா என்ன? மரியாதையால் அடங்கி நடக்கவில்லை.பயத்தால்!!!

6.பொன்விழா பாராட்டு நிகழ்ச்சியில் கமலஹாசன்,
‘பகுத்தறிவாளர்கல் அன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.இனி ஆத்திகர்களே கோவில்களை இடிப்பார்கள்.நாங்கள் இடிக்கவேண்டிய அவசியமில்லை’ என பேசியுள்ளாரே!

வக்கிரத்தின் மற்றொரு பெயர் கமலஹாசன்.ஹே ராம்,தசாவதாரம்,குருதிப்புனல் எல்லாம் தலைப்புத் திருட்டு.அவரது பல படங்கள் ஆங்கிலத் திருட்டு.திருட்டு நாயகனை உலக நாயகன் என்றால்,திருடன் ஏன் உங்களை மதிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்?
தசாவதாரம் படத்தில் முஸ்லீம் கமலஹாசன்,சீக்கிய கமலஹாசன் பக்தியை வெளிப்படுத்துவார்கள்.ஹிந்து கமலஹாசன் நாத்திகம் பேசுவார்.இதுதான் கமலஹாசனின் பகுத்தறிவு!

7.விஜய் டிவி, நீயா நானா நிகழ்ச்சியில் “தாலி பெண்களுக்கு அவசியமற்றது” என நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி கூறியது சரியா?

விஜய் டிவியும் சரி, கோபியும் சரி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் மெல்லக்கொல்லும் விஷங்கள்.
மெக்காலே படிப்பு படித்த மேல்தட்டு வர்க்கம்தான் இதன் பார்வையாளர்கள்.பஜனை,பக்தி எல்லாம் இருக்கும்.படிப்பும் பணமும் இருந்தால் கெடுவது எளிதல்லவா!
இந்துதர்மத்தின் மற்றும் இந்தியாவின் ஆணிவேரான குடும்பங்களை சீர்குலைப்பதே இவர்களது முதல் குறி!

8.பின்லேடன், தாவூத் ஆகியோரை மறைத்துக் கொண்டு மற்ற நாடுகளிடமிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பணம் வாங்குகிறதே பாகிஸ்தான்?

வளர்த்துவிட்ட நாடுகள்தான் இன்று ஒடுக்கவும் பணம் கொடுக்கின்றன.பாகிஸ்தானும் அதைப் புரிந்துகொண்டுவிட்டது பனம் கொட்டும் மரத்தை யாராவது வேருடன் பிடுங்குவார்களா என்ன?

நன்றி:நவம்பர் 2009

9.அமெரிக்கா மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பில் மட்டும் கம்யூனிஸ்டுகள் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்துடன் ஒத்துப்போவது ஏன்?

கம்யூனிஸ்டுகளின் கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பிற்கும்,சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் எதிர்ப்பிற்கும் நிறைய்ய வேறுபாடுகள் உள்ளன.நமக்கு (இந்திய)தேசம் முக்கியம்.அவர்களுக்கு சீனா,ரஷ்யா முக்கியம்.
நமக்கு குடும்பம்,பெண்மை,சமுதாயம்,இந்துப்பண்பாடு இவைகளின் பாதுகாப்பு முக்கியம்.
அவர்களுக்கு அப்படி அல்ல.

10.திருவள்ளுவர் சர்வக்ஞர் சிலை திறப்புகள் பிரச்னைகளுக்குத் தீர்வாகுமா?

நாம் இருவரல்ல ஒருவர் என்பதை புரிந்து கொள்ள முதல் படியாக இருக்குமே!
1991 லும் கூட பா.ஜ.க.ஆண்ட மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இரண்டாவது மொழியாக சில பள்ளிகளில் தென்மாநில மொழிகளை கற்பிக்க முன்வந்து, தமிழகத்திடம் (இதே முதல்வர்தான்) 5000 தமிழ் ஆசிரியர்கள் கேட்டன என்பது நினைவுகூரத் தக்கது.

11.இந்தியாவில் 4% போலி நோட்டுக்கள் இருப்பது ஆபத்தானது அல்ல என்கிறாரே ரிசர்வ் வங்கி துணை கவர்னர்?

முதலில் 4% போலி நோட்டுக்கள் இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளதற்கு நன்றி சொல்லுங்கள்.அரசின் கையாலாகத்தனத்திற்கு சான்று வழங்கியுள்ளார்.பாவம் அவர் என்ன செய்ய முடியும்.

நன்றி:செப்டம்பர் 2009

Friday, November 6, 2009

ENGLISHGRAMMER

தமிழும் ஆங்கிலமும் ஒரு ஒப்பீடு

நம் தாய்மொழியாம் தமிழில் இருக்கும் பல சிறப்பியல்புகள் ஆங்கிலத்தில் இருப்பதில்லை;ஆனாலும், தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் தமிழ் மொழியைக் காணவில்லை!!?
அப்பா அம்மா தவிர அனைத்து உறவுமுறைகளும் ஆங்கிலத்தில் தொடர்மொழிகளே!
அதாவது நாம் அண்ணன் என்பதை மூத்த சகோதரன் என்றும்,
தம்பி என்பதை இளைய சகோதரன் என்றும்,
அம்மான் என்பதை தாயுடன் பிறந்தவன் என்றும்,
அத்தை என்பதை தந்தையுடன் பிறந்தவள் என்றும் இங்கனம் தொடர்மொழிகளாகவே ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.(அங்கேதான் இப்படிப்பட்ட உறவுமுறையே கிடையாதே!)
நாம் வந்திலன்,சென்றிலன் என ஒரு சொல்லாய் வழங்கும் எதிர்மறை முற்றுக்களை ஆங்கிலத்தில் பேச/எழுத 3 சொற்கள் வேண்டும்.தெரிநிலையும் குறிப்புமான ஒவ்வொரு வினையாலணையும் பெயரையும் ஆங்கிலத்தில் பல சொற்களின்றி அமைக்கலாகாது.
வந்தாய்க்கு என்பதை வந்தானாகிய உனக்கு எனப்பொருள்படுவதாய் 4 சொற்களால் அமைக்க வேண்டும்.அடியேனுக்கு என்னும் குறிப்பு வினையாலணையும் பெயரை அமைக்க 6 சொற்கள் ஆங்கிலத்தில் வேண்டும்.
நம்முடைய பெயரெச்சம்,வினையெச்சங்களும் சொல் சுருங்குவதற்கு அனுகூலமாக இருக்கின்றன.
வந்த மனிதன் என்பதை அமைக்க அவர்களுக்கு 4 சொற்கள் வேண்டும்.அவன் வந்து போனான் என்னும் ஒரு வாக்கியத்தை அவர்கள் இரண்டு வாக்கியமின்றி உரைக்க இயலாது.
அவர்களுக்கு வேற்றுமைத் தொகை,வினைத் தொகை,உவமைத் தொகை,அன்மொழித்தொகை இல்லை.
தமிழ் வினைகளின் விகுதிகளே திணை,பால்,எண் மூன்றையும் ஒருங்கே காட்டி விடுகின்றன.ஆங்கிலத்தில் வினைகளின் எண்களை மாத்திரம் எளிதில் அறியலாம்.பெருபான்மையாய் எழுவாயின் பொருளறியாமல் முடிபின் திணை பால்களை அறியலாகாது.
சாதாரண பேச்சில் நம் எழுவாயில்லாமல் கருத்தை வெளிப்படுத்த முடியும்.ஆங்கிலத்தில் அது முடியாது.உலக வழக்கில் நாம் செயப்பாட்டு வினைகளை எல்லாம் செய்வினைகளாக வழங்குகின்றோம்.அவர்களுக்குப் பெரும்பான்மையாய் இயலாது.
தான் வியாதியாக இருக்கிற விஷயத்தைப் பிறரிடம் கூற ‘நான் வியாதியாய் இருக்கிறேன்’ என்பதே ஆங்கில மரபு.
நம் தமிழில் ‘எனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது’என்பதே மரபு.இப்படிச் சொல்லுவதால் ஆங்கில மரபு ‘அகம்’பாவத்தை(ஈகோ) உணர்த்துவதாக இருக்கிறது.தமிழ் மரபோ ‘தேக தேகி’ பாவத்தைத் தழுவி ஞானசாரமாக இருக்கின்றது.
தமிழில் பெரியோர்களைப் பலர் பாலால் வழங்குகின்ற மரியாதை ஆங்கிலத்திலும் வேறு எந்த மொழியிலும் இல்லை.பெரியோர்களின் செயல்களை ‘அவர் வந்தருளினார்,செய்தருளினார்’ எனக் கவுரவமாகக் கூறும் விதமும், ஏவுகின்ற வினையின் இறுமாப்பைக்குறைக்கும் வியங்கோள்களின் அழகும் தமிழுக்கே உரியவை.
நன்றி:திருமணம்.செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘தமிழ்’ என்ற கட்டுரையிலிருந்து.

HUMANRESPONSE

கேள்வி: தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன் = இந்த மூன்று கடன்களும் எப்படி ஏற்படுகின்றன?ஜாதக வாயிலாக இதை எப்படி அறியலாம்? அதை எப்படி சரி செய்வது?

பதிலளித்திருப்பவர் ஜோதிடத்திலகம்:ஜானகி மனுவித்யா அவர்கள்:கடமையைச் செய்யாமல் விடுதலே கடன் எனப்படும்.

தேவகடன் என்பது நித்திய பூஜையைச் செய்யாமல் விடுவது;குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது;கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது; நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது;
தவிர கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல்;கோவில் சிலைகளைத் திருடுதல்;கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல்; கோயிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் ஆகும்.
இவற்றை ஜாதகம் வாயிலாக, லக்னத்துக்கு 5ஆம் இடம்,சூரியன்,சனி இவர்களின் இருப்பைக் கொண்டு அறியமுடியும்.

ரிஷி கடன் இந்த கலிகாலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.ஏனெனில், தற்காலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

முற்காலத்தில் வீடு தேடிவந்த ரிஷிகளை சரியாக உபசரிக்காமல் விடுவதால் ரிஷிகள் விடும் சாபமே ரிஷிகடன் ஆகும்.இந்த ரிஷிகடனை 12ஆம் இடம்,குருவின் நிலை,12 மற்றும் 9 ஆம் இடத்து அதிபதிகளைக் கொண்டு அறியலாம்.
ரிஷிகடனைத் தீர்க்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் ஏற்பாடு செய்தல்,ஆன்மீகமடங்களில் உதவி செய்தல்,சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கும்,கோவில்களுக்கும் நேரடியாக உதவி செய்தல் செய்ய வேண்டும்.

பித்ருக்கடன் என்பது தாய் தந்தையரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும்,அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு திதி செய்யாமல் இருத்தல்,அவர்கள் எவ்வளவு அரக்கக் குணங்களுடன் இருந்தாலும் அதை சகிக்காமல் அவர்களிடம் சாபம் வாங்குமளவுக்கு சேஷ்டைகள் செய்யாமல் இருத்தல் போன்றவைகளால் உருவாகுவது.
இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும்.தந்தை வழியில் செய்த காமக்குற்றங்கள், மோசடி,பெண்ணை ஏமாற்றிக்கற்பழித்தல்,உடன் பிறந்தோர் சொத்து அபகரிப்பு இவற்றால் 7 தலைமுறைகள் மிகவும் சிரமப்படுவர்.இந்த பித்ருக்கடனை அவரவர் பிறந்த ஜாதகத்தில் 5ஆம் இடம்,9 ஆம் இடம்,ராகு,கேது,சனி இவற்றைக் கொண்டு அறியலாம்.
சித்தர்களின் தலைவர் அகத்தியர் கர்ம காண்டம் என்னும் நூலில் செய்த பாவங்களுக்குரிய விளைவுகளை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.

பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம்(பூஜை,யாகம் செய்வது மட்டுமல்ல;நாம் நமது மனப்பூர்வமான இறை காரியங்கள் மட்டுமே நம்மை கடன்களிலிருந்து விடுவிக்கும்.நாம்தான் நமது பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.)

தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை இவற்றால் நிம்மதியாக வாழமுடியும்.
நன்றி:ஜோதிட பூமி பக்கம் 24,அக்டோபர் 2009.