Wednesday, February 11, 2009

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்-




பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!
பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!
மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!
இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!
நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.

உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.
பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.
மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.
மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.
திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.
வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.
கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.
பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.
வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.






மூலிகைகள் மொத்தமாக கிடைக்குமிடம்


மூலிகைகள் மொத்தமாக வாங்கிட தென் தமிழகத்தில் மிகச் சிறந்த கடை:
இராஜேந்திரா மூலிகை மருந்துக் கடை
பஸ் நிலையம் சமீபம்,இராமன்பறம்பு ரோடு,
தக்கலை,குமரி மாவட்டம்-629 175.
தொலை பேசி எண்:04651-253163.
உலகிலேயே பக்கவிளைவுகளற்ற மருத்துவம் நமது இந்து மூலிகைகளால் மட்டுமே முடியும்.
நமது இந்துயாவில் மட்டும் 36,000 விதமான மூலிகையினங்கள் விளைகின்றன.இவற்றில் 6,000 மூலிகைகளை மட்டுமே மனிதனால் விளைவிக்க முடியும்.

Wednesday, January 28, 2009

நிம்மதி தரும் நவபிருந்தாவனம்,ஆந்திரமாநிலம்



தமிழ்நாட்டில் நாகர்கோவில் டூ மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.அது பற்றி விரைவில் முழுத்தகவல்களுடன்!

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.
உங்கள் பிரச்னைகள் தீர்ந்தால்,இந்த புகைப்படத்தை 10 நகல்கள் எடுங்கள்.உங்கள் வார்த்தைகளுக்கு யார் மதிப்பு தருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நவபிருந்தாவனம் புகைப்படம் தருக!
எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம்.இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது.
மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ சமாதியாகும்.

Tuesday, January 27, 2009

உங்கள் கடன் தீர ஒரு சூப்பர் ஐடியா


உங்கள் கடன் தீர ஒரு ஜோதிட ஆலோசனை

ஜோதிடத்தில் மைத்ர முகூர்த்தம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு.இந்த நேரத்தில் நீங்கள் வாங்கியுள்ள கடனில் ஒரு சிறு பகுதியை (அசலைத் தர வேண்டும்.அசலில் 10-ல் ஒரு பங்காகக் கூட இருக்கலாம்)திருப்பித் தர வேண்டும்.அப்படி ஒரு முறை தந்தால் உங்களது கடன் பல கோடி ரூபாய்களாக இருந்தால் கூட அது விரைவில் அழிந்துவிடும்.
இந்த மைத்ர முகூர்த்தம் நேரம் காலப்பிரகாசிகை என்ற புராதன ஜோதிடப்புத்தகத்திலிருந்து கண்டறியப்பட்டு,பரிசோதிக்கப்பட்டு உலக மக்கள் நலனுக்காக வெளியிடப்படுகிறது.
2.2.2009 திங்கள் காலை 10.45 முதல் 12.45 வரை
7.2.2009 சனி காலை 6.35 முதல் 6.55 வரை
காலை 10.55 முதல் 12.55 வரை
மாலை 4.55 முதல் 6.55 வரை
இரவு 10.55 முதல் 12.55 வரை
1.3.2009 ஞாயிறு காலை 9.10 முதல் 11.10 வரை
16.3.2009 திங்கள்இரவு 10.15 முதல் 12.15 வரை
28.3.2009 சனி காலை 7.00 முதல் 9.00 வரை
12.4.2009 ஞாயிறு இரவு 8.00 முதல் 10.00 வரை
13.4.2009 திங்கள் இரவு 8.01 முதல் 8.58 வரை
24.4.2009 வெள்ளி காலை8.01 முதல் 8.30 வரை
25.4.2009 சனி காலை 5.56 முதல் 7.56 வரை
9.5.2009 சனி இரவு 8.50 முதல் 10.50 வரை
10.5.2009 ஞாயிறு மாலை 5.45 முதல் 7.45 வரை
21.5.2009 வியாழன் மாலை 5.45 முதல் 7.45 வரை
22.5.2009 வெள்ளி காலை 4.48 முதல் 6.48 வரை
6.6.2009 சனி மாலை 4.15 முதல் 6.15 வரை
17.6.2009 புதன் காலை 5.49 முதல் 7.49 வரை
4.7.2009 சனி காலை 6.21 முதல் 8.21 மற்றும் 12.21 முதல் மதியம் 4.20
வரை,மாலை 6.21 முதல் 8.21 வரை
15.7.2009 புதன் மதியம் 2.01 முதல் 4.01 வரை
31.7.2009 வெள்ளி மதியம் 2.01 முதல் 4.01 வரை
27.8.2009 வெள்ளி காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை
7.9.2009 திங்கள் இரவு 8.45 முதல் 10.45 வரை
24.9.2009 வியாழன் காலை 9.45 முதல் 11.45 வரை
5.10.2009 திங்கள் இரவு 7.00 முதல் 9.00 வரை
21.10.2009 புதன் காலை 8.00 முதல் 10.00 வரை
2.11.2009 திங்கள் மாலை 5.00 முதல் இரவு 7.00 வரை
14.11.2009 சனி காலை 6.07 முதல் 6.19 வரை மற்றும்
காலை 10.19 முதல் மதியம் 12.19 வரை
மாலை 4.19 முதல் 6.19 வரை
இரவு 10.19 முதல் 12.19 வரை
18.11.2009 புதன் காலை 6.56 முதல் 7.56 வரை
29.11.2009 ஞாயிறு மதியம் 3.11 முதல் 5.11 வரை
26.12.2009 சனி மதியம் 2.11 முதல் 4.11 வரை
23.1.2010 சனி மதியம் 12.00 முதல் 2.00 வரை

7.2.2010 ஞாயிறு காலை 11.00 முதல் மதியம் 1.00 வரை

19.2.2010 வெள்ளி காலை 10.00 முதல் 12.00 வரை

6.3.2010 சனி இரவு 11.05 முதல் நள்ளிரவு 1.05 வரை

13.3.2010 சனி காலை 8.23 முதல் 10.23 வரை

மதியம் 2.23 முதல் மாலை 4.23 வரை

இரவு 8.23 முதல் 10.23 வரை

18.3.2010 வியாழன் காலை 9.57 முதல் 10.30 வரை

19.3.2010 வெள்ளி காலை 8.34 முதல் 10.34 வரை

27.3.2010 சனி காலை 7.13 முதல் 9.13 வரை

மதியம் 1.13 முதல் 3.13 வரை

இரவு 7.13 முதல் 9.13 வரை
2.4.2010 வெள்ளி இரவு 9.05 முதல் 10.40 வரை
3.4.2010 சனி இரவு 8.40 முதல் 9.34 வரை
இந்த நேரங்கள் இந்தியாவின் தென்மாநிலங்களில் உள்ள அனைத்து நகரம்-கிராமங்களுக்கும் பொருந்தும்.ஒருவேளை,இதில் -மேலை கூறப்பட்டுள்ள நேரங்களில்-அல்லது சூரிய உதய நேரத்தில்-சந்தேகம் இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள நேரங்களின் நடுப்பகுதியில் உங்கள் கடனை திருப்பி ஒப்படைக்கலாம்.அது,வடக்கே மும்பை முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பெருந்தும்.
வாழ்க வளமுடன்! வளர்க கடனில்லாமல்!!!

மந்திரங்களை எப்படி ஜபிக்கவேண்டும்?+ காயத்ரிமந்திரத்தின் சிறப்பு


காயத்ரி மந்திரமும் அதன் மகிமைகளும்

சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.
எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.




Monday, January 26, 2009

வாலை பூஜை செய்யுங்கள்:ஆதிபராசக்தி அருள் பெறுங்கள்


ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.
மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்..


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).
அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “ஓம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.
இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.
ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

Thursday, January 22, 2009

திருக்குறள் ஞான அமுது-ஆன்மீகத்தேடல் உள்ளவர்களுக்கான புத்தகம்


திருக்குறள் ஞான அமுது-தவத்திரு.ரெங்கராஜ தேசிகசுவாமிகள்
திருக்குறளைப் பற்றி இவ்வளவு எளிதாக வேறு எவரும் விளக்கம் அளித்திருப்பார்களா? சந்தேகமே!
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அற்புத வழிகாட்டி.
பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமல் கூறுவது போல பழமொழியைச் சொன்னால் புரியாது.அதை அனுபவித்துப்பார்த்தால் தான் புரியும் என்பது போல் இந்த புத்தகம் ஒரு சிறந்த ஆன்மீகப் பொக்கிஷம்.இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
*இதயத்தில் தூய்மை இல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அது பயன் தராது.
*துறவு மேற்கொள்கிறவனுக்கு முன் செய்த நல்வினை இருந்தால்தான் ஞானம் கைகூடும்.
*தினமும் தலைவனை(அகத்தியர் முதலான சித்தர்களில் ஒருவரை) நினைத்து உருகி பூஜை செய்தால் பாவங்கள் சேராது.காமம் அடிபட்டுப் போகும்.கோபம் அடிபட்டுப்போகும்;நான் என்ற கர்வமும் அடிபட்டுப் போகும்.
*காய்கறி உண்பதால் மனதில் சாந்தம் திகழும்.அதே சமயம், எந்த கர்ம வினையும் நம் ஆன்மாவிற்கு வராது.

*அசைவம் உண்பதால் மனதிலும்-உடலிலும் மூர்க்கத்தனம் வளரும்.காம வெறியைத்தூண்டும்.அறிவை(பகுத்தறிவை) மங்கச் செய்யும்.

*ஒருவரது தவம் முற்றுப் பெற 27,000 ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
*தவசிகள்( மாபெரும் துறவிகள்) மனமகிழ்ந்து ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார் சாப்பிட்டதற்குச் சமம்.மேலும் 1024 அண்டங்களில்(காலக்சி)உள்ளவர்கள் சாப்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்கும்.
*தாம்பத்திய உறவுக்கு முன் 10 நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சிமாவட்டம்.தமிழ்நாடு.
விலை.ரூ.38/-ஆடியோவாகவும் கிடைக்கிறது.
போன் எண்:04327-255684,255184.
குறிப்பு:இங்கு சுமார் 12 வருடங்களாக அனாதைகள்,வயதான முதியவர்களுக்கு தினமும் அன்னதானம் 3 வேளையும் வழங்கப்பட்டுவருகிறது.சித்தர் வழிபடும் முறை சொல்லித்தரப்படுகிறது.விரும்பும் அன்பர்கள் அன்பளிப்பு(பணம் அல்லது உணவுப் பொருட்கள்) வழங்கலாம்.
நான் ஒருமுறை கூட இங்கு நேரில் சென்றதில்லை.