Showing posts with label விநாயகர். Show all posts
Showing posts with label விநாயகர். Show all posts

Friday, February 3, 2012

கணபதி காயத்ரி மந்திரம்

கணபதி காயத்ரி மந்திரம்

வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் 


கட்டுரை தொகுப்பு:

கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி 

மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே

வக்ர துண்டாய தீமஹி

தந்நோ தந்தி ப்ரசோதயாத்.


இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து 

விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது 

வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து 

வர வேண்டும்.

இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.

உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் 

தொடங்கும்.

இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து 

வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது 

அனுபவ உண்மை.

ஒம் கம் கணபதியே நமஹ

இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து 

ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் 


சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை 

தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல 

ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ 

உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி 

இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது 

என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த 

செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் 

கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.




கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் 


அல்லது தலைவன்) கணபதி!!!


சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று 


உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் 


கணபதி.கணபதிகள் 33 விதமாக 


இருக்கிறார்.இறுதியாக பூமியில் 


பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!

Saturday, September 26, 2009

கடவுளை எப்படி நேரில் தரிசிப்பது?



நம் ஒவ்வொருவராலும் கடவுளை தரிசிக்க முடியும்.அதற்கு முதலில் நாம் மனரீதியாக தயாராக வேண்டும்.அவ்வளவே!

மனிதன் இறந்த பிறகு சூட்சும சரீரம் அதாவது நுண்ணிய உடல் வேறு அதிர்வு நிலை கொண்டதாக ஆகி விடுவதால் நாம் அவர்களைப் பார்க்கவோ தொடர்புகொள்ளவோ முடிவதில்லை.

இதே போலத் தான் தேவர்கள்,கந்தர்வர்கள்,அசுரர்கள்,பூத கணங்கள்,சிவகணங்கள் என ஒவ்வொரு உலகத்தைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொரு அதிர்வு நிலையில் செயல்பட்டுவருகின்றனர்.அவர்களின் உலகமே நமது மனித புலன்களுக்கு எட்டாத அதிர்வில் இயங்கி வருகின்றது.

உருப்பெருக்கி எனப்படும் மைக்ரோஸ்கோப் வைத்துத்தான் கிருமிகள்,பாக்டீரியாக்களை நம்மால் பார்க்கமுடிகின்றது.
தொலைநோக்கி எனப்படும் டெலஸ்கோப்பை வைத்து நாம் இரவு நேர வானத்தைப்பார்த்தால் நாம் எதையெல்லாம் நட்சத்திரங்கள் என வெறுங்கண்ணால் பார்த்தோமோ,அவை கிரகங்களாகத் தெரியும்.
புதன் கிரகம் பச்சைக்கலரிலும்,குருக்கிரகம் மஞ்சள் கலரிலும் தெரியும்.

அதேபோல, யோக சக்தியால் மனதை வெவ்வேறு நிலைகளில் இயக்குவதன் மூலம் வெவ்வேறு அதிர்வு நிலைகளைப் பெற்று பிரபஞ்சத்தில் அதே அதிர்வு நிலையில் இருக்கும் உலகத்துடன் தொடர்புகொள்ள முடியும்.அங்கு நிகழ்வதைக் காணவும்,உணரவும் முடியும்.

யோகிகள் தியானம் மற்றும் சமாதி நிலைகளில் தங்கள் மனத்தை உயர்நிலைகளில் இயக்கும் வல்லமை பெற்றவர்கள்.
இதில் மிக மிக மிக உயர்ந்த நிலைப்பாடுதான் நாம் விரும்பும் கடவுளின் உலகங்கள்.
இந்த வலைப்பூவில் முதல் தகவலை மீண்டும் தேடிப்பார்த்தால் கணபதிஎனப்படும் விநாயகரின் காயத்ரி மந்திரத்தை 4,00,000 தடவை ஜபித்தால் விநாயகரை நேரில் தரிசிக்க முடியும் என எழுதியிருப்பேன்.
அப்படியெனில்,அந்த மந்திர உரு( திரும்ப திரும்ப இடைவிடாமல் ஜபித்தல்) நம்மை விநாயகரின் உயர் அதிர்வு உலகத்துக்குக் கொண்டு சென்றுவிடும்.

நான் கேள்விப்பட்டவரையில், விநாயகரை மட்டுமே சுலபமாக தரிசிக்க முடியும்.
சிவபெருமானில் சதாசிவன் என்ற ஒரு சிவபெருமான் இருக்கிறார்.அவரே ஆதிசிவன் ஆவார்.அவரை தரிசிக்க வேண்டுமானால்,நாம் இதுவரை 27,000 பூமி வருடங்கள் தவம் செய்திருக்க வேண்டுமாம்.
சக்தியில் மனோன்மணி என்ற பெண் தெய்வம் இருக்கிறாள்.அவள் 10 வயதுச் சிறுமி போன்ற தோற்றத்துடன் இருக்கிறாளாம்.அவளைத் தரிசிப்பதுதான் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் மிகப்பிரம்மாண்டமான சாதனை.
அவளை தரிசிப்பதன் வழிமுறைதான் நமது ஆன்மீகக் கடலில் குறிப்பிடப்படும் வாலைப்பூஜை!!!

Tuesday, November 11, 2008

கணபதி காயத்ரி மந்திரம்


வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.
கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!
சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!