Showing posts with label ஜோதிடர் ஆவது எப்படி?. Show all posts
Showing posts with label ஜோதிடர் ஆவது எப்படி?. Show all posts

Wednesday, November 10, 2010

ஜோதிடர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது

கேரளா மாநிலத்தில் கண்ணனூர் அருகில் உள்ள திருவரங்காடு என்ற ஊரில் அச்சுதன்நம்பி,சந்திராவதி தம்பதியரின் மகன் சந்தீப்.இவர் நிதிநிர்வாகத் துறையில்மேற்பட்டம் பெற்றவர்.இவர் வளைகுடா நாடு ஒன்றில் நல்ல வேலையில் இருந்தவர்.சந்தீப்புக்கு வயது 30.இவர் ஷார்ஜாவிலிருந்து கேரளாவில் உள்ள பிரபல சோதிடரிடம் தன்னுடைய எதிர்காலம் பற்றி கேட்டுள்ளார்.அந்த சோதிடர் சந்தீப்பிடம், “உங்களது வாழ்க்கை மிகவும் துன்பமயமாக இருந்துகொண்டே இருக்கும்.உங்களது ஆயுளும் குறைவு” என கூறியுள்ளார்.இதையே சந்தீப் வேதவாக்காக எடுத்துக்கொண்டு சந்தீப் தற்கொலை செய்துகொண்டார்.

சந்தீப்புக்கு சோதிடம் சொன்ன அந்த சோதிடரிடம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பேட்டி எடுத்து அவரது வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிட்டன.இந்த விஷயம் வளைகுடாநாடுகளிலும் பரவி,அங்குள்ள பத்திரிகைகள் சோதிடக்கலையைப் பற்றி மிகவும் தரக்குறைவாக எழுதித் தள்ளிவிட்டன.இந்தச் செய்தி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சென்னைப்பதிப்பில் 21.12.2005 ஆம் வெளியீட்டில் 7 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

எல்லாத்துறைகளிலும் போலிகள் ஊடுருவி விட்டதைப்போல் ஜோதிடத்துறையிலும் போலிகள் இருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை.இந்தச் சம்பவத்தின் மூலம் ஜோதிடர்கள் மிகவும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை ஜோதிடர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த ஒரு ஜோதிடரும் நடுநிலை மனநிலையோடு செயல்பட வேண்டும்;நல்ல மனநிலையில் மட்டுமே ஜோதிடத் தொழிலை செய்ய வேண்டும்;இடம் பொருள் ஏவல் பார்த்து பலன் சொல்ல வேண்டும்;சந்தர்ப்ப சூழ்நிலையறிந்து ஜோதிடப்பலன்களை கூறிட வேண்டும்;முதல் சந்திப்பிலேயே எல்லா நெகடிவ் விஷயங்களையும் சொல்லிவிடுவது மாபெரும் தவறு.

எனது அனுபவத்தில் பெரும்பாலான ஜோதிடர்கள் ஜாதகத்தில் இருக்கும் கஷ்டங்களை மட்டுமேகூறுகின்றனர்.அந்த கஷ்டங்களை எப்படி எதிர்கொள்வது? என்று கூறுபவர்கள் வெகு விரைவில் பிரபலமடைந்துவிடுகிறார்கள்.

ஜோதிடரையே பரிகாரம் செய்யச் சொல்லி வற்புறுத்துவோர் இருக்கத்தான் செய்கிறார்கள்.அது தவறு.அவரவர் கர்மத்தை அவரவரேதான் குறைக்க வேண்டும்;முடிந்தால் அழிக்க வேண்டும்.பரிகாரத்துக்கு ஜோதிடர்கள் பணம் வாங்குவது மாபெரும் தவறு.

எனது மானசீககுரு பி.எஸ்.பி.ஐயா அவர்கள் அடிக்கடி கூறுவது என்னவெனில்,ஒவ்வொரு ஜோதிடரும் ஒரு மனநல மருத்துவருக்குச் சமம்.உளநலசிகிச்சையாளரை(Psycotherobist)ப்போல செயல்படவேண்டும்.ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு,அவர்களின் அப்போதைய மனநிலையறிந்து பலன்களைக்கூற வேண்டும்.

ஒரு வேலை அல்லது தொழில் வாய்ப்பு பற்றிக்கூறும்போது,அவர்களின் குணநலன்கள்,எதிர்காலநிலை,அடிப்படைசுபாவம் இதற்கேற்றார்போல் தொழிலை பரிந்துரைக்க வேண்டும்.

ஜோதிடம் கேட்க வருவோரும்,நிதானமாக அதிக நேரம் ஒதுக்கி,ஒரேதடவையில் தனது வாழ்க்கையில் அடுத்த ஓராண்டு வரை எடுக்க வேண்டிய முடிவுகளைப் பற்றி தெளிவாக சிந்தித்து கேள்விகளைக் கேட்க வேண்டும்.ஜோதிடம் ஒரு மாபெரும் வழிகாட்டி!எனவே,மேலே கூறப்பட்டுள்ள சம்பவத்திற்காக ஆன்மீகக்கடல் வருந்துகிறது.

Thursday, September 30, 2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

சுமார் 20 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை ஆன்மீகக்கடல் வழங்குகிறது.
ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.
காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.
இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!
தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.

தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?
தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.

பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.

நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!
சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.

தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,செல் எண்ணுடன் மின் அஞ்சல் அனுப்பவும்.அடுத்த பேட்ச் வகுப்புக்கள் 7.10.2010 அன்று ஆரம்பாக இருக்கின்றன.