Tuesday, April 16, 2013

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோர்களின் கவனத்திற்கு!!!




நீங்கள் ஒரு சுயதொழில் செய்யத் துவங்கிட விரும்பினால்,உடனே அதில் இறங்கிவிடக் கூடாது;அந்தத் தொழிலில் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வரையிலும்;அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரையிலும் வேலை பார்க்க வேண்டும்;அதன் பிறகு,இந்தத் தொழில் நமக்குச் சரிப்பட்டு வருமா? என்பதை நமது மனசாட்சியிடம் கேட்க வேண்டும்.மனசாட்சி சரி என்று சொன்னால் மட்டுமே அந்தத் தொழிலில் இறங்க வேண்டும்.
சொந்தத் தொழிலில் இற(ய)ங்கியப் பிறகு,குறைந்தது ஒரு வருடத்திற்குப்பிறகுதான் நீங்கள் அந்தத் தொழில் செய்து வருகிறீர்கள் என்பது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்குத் தெரியவரும்.ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே அதில் செமத்தியாக சம்பாதிக்க முடியும்.இதுதான் தொழிலின் நடைமுறை.இந்த நடைமுறை ராகு மஹாதிசை மற்றும் ராகு சார மஹாதிசை யாருக்கெல்லாம் நடைபெறுகிறதோ அவர்களுக்குப் பொருந்தாது;


சுய தொழில் ஆரம்பித்து,சில ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் எந்தெந்த டெக்னிக்குகளைப் பயன்படுத்தி பணம் குவிக்கிறீர்கள் என்பதை யாரிடமாவது சொல்லியிருக்கிறீர்களா? அல்லது கற்றுக் கொடுத்துள்ளீர்களா?
ஆம் எனில்,  உங்கள் ‘பிழைப்பிற்கு’ நீங்களே குழி வெட்டுகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

சுமாராக இருபது அல்லது முப்பது ஆண்டுகள் ஒரே தொழில் செய்து அதில் மாநில/தேசிய/சர்வதேச அளவில் வளர்ந்தப் பின்னரும்,உங்களுக்குப் பிறகு தகுதியான உங்கள் தொழில் வாரிசுக்கு மட்டும் இந்த டெக்னிக்கைச் சொல்லித் தரலாம்.இப்படித்தான் இந்திய நிறுவனங்கள் ‘பன்னாட்டு நிறுவனங்களாக’ உயர்ந்தன.


இன்றைய அரசியல் கட்சிகள் தேர்தல் சமயத்தில் தொழில் அதிபர்களிடம் நன்கொடை வசூல் செய்யும்.அவ்வாறு வசூல் செய்யப் போகும் போது தனது கூட்டணிக் கட்சிக்காரர்களைக் கூட அழைத்துச் செல்வது கிடையாது;ஏனெனில்,இந்த டெக்னிக்கை அவர்களும் கற்றுக் கொண்டுவிட்டால்?


தனி மனிதர்கள்,குடும்பங்கள்,குடும்பத் தொழில்கள் இவைகளில் எங்கே சொத்து இருக்கிறது? எவ்வளவு இருக்கிறது? என்பதெல்லாம் அனைவருக்கும் தெரிவதில்லை;குடும்ப நிறுவனம்/ஒரே ஒரு குடும்பத்தார் நடத்தும் தொழில்கள்/குடும்பத்தின் அடுத்த தலைமை பொறுப்பு ஏற்கும் போது மட்டுமே உரியவர்களிடம் எங்கே என்ன சொத்துக்கள் இருக்கின்றன; எவ்வளவு கடன்கள் இருக்கின்றன;யார் நமது தொழிலுக்கு/குடும்பத்திற்கு எதிரி; தொழில் எதிரியை எவ்வாறு கையாளவேண்டும்? குடும்ப எதிரியை எப்படி அணுக வேண்டும் என்பதெல்லாம் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.


இதே போலத் தான்,நாம் வழிபடும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டையும் ரகசியமாகச் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்;மேலும்,அவ்வாறு கிட்டியப் பின்னரும் அதை வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும்.


கலியுகத்தில் ஒரு மல்யுத்த வீரனைப் பார்த்து இன்னொரு மல்யுத்தவீரன் மட்டும் பொறாமைப்பட்டால் அது தப்பில்லை;ஒரு ஆசிரியர் இன்னொரு ஆசிரியரைப் பார்த்து பொறாமைப் பட்டால் அது தப்பில்லை;ஒரு வலைப்பூ எழுத்தாளர் இன்னொரு வலைப்பூ எழுத்தாளரைப் பார்த்து பொறாமைப் பட்டால் அது தப்பில்லை;ஆனால்,நிஜத்தில் சம அந்தஸ்து உள்ளவர்களா பொறாமைப்படுகிறார்கள்?


(எந்த ஒரு மந்திர ஜபம் ஜபிப்பவர்களுக்கும்=ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கும்=இது பொருந்தும்)


பலர் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வதை தமக்கு வேண்டியவர்களிடம் சொல்லி,அவர்களையும் செய்யத் தூண்டியதால் இவர்களின் வழிபாட்டைத் தொடர முடியவில்லை;


ஓம்சிவசிவஓம்

5 comments:

  1. //இந்த நடைமுறை ராகு மஹாதிசை மற்றும் ராகு சார மஹாதிசை யாருக்கெல்லாம் நடைபெறுகிறதோ அவர்களுக்குப் பொருந்தாது;//

    ஐயா! ஏன் அவர்களுக்கு பொருந்தாது? சற்று விளக்குங்களேன்.

    ReplyDelete
  2. ராகு மஹாதிசை,ராகு சார மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அவர் எந்த ஒரு தொழில்/வேலையையும் அதிகபட்சமாகவே ஒன்றரை ஆண்டுகள்தான் செய்வார்;அதன்பிறகு வேறு வேலை/தொழிலுக்கு மாறிவிடுவார்.ராகு மஹாதிசைகாலமான 18 ஆண்டுகளில் முதல் பாதி வருடங்களுக்கு இந்த நிலை தொடரும்.யோகம் தரும் ராகு திசையாக இருந்தால் எப்போது ஒருவரை கோடீஸ்வரராக்கும் என்றே தெரியாது.சூதாட்டம்,அதிரடி செல்வாக்கு,திடீர் அசுர வளர்ச்சி இவைகளுக்கு ராகுபகவானே பொறுப்பாக இருக்கிறார்.இதற்கு மேல் விளக்கம் தந்தால் அந்த விளக்கம் ஜோதிடர்களுக்கு மட்டுமே புரியும்.

    ReplyDelete
  3. Pairavai vazhipattai yaarukkume solla kudaatha?

    ReplyDelete
  4. மீண்டும் இந்தப் பதிவினை அமைதியான மனநிலையில் வாசித்துப் பாருங்கள்.சொல்லவா வேண்டாமா என்று புரியும்.

    ReplyDelete
  5. மீண்டும் இந்தப் பதிவினை அமைதியான மனநிலையில் வாசித்துப் பாருங்கள்.சொல்லவா வேண்டாமா என்று புரியும்.

    ReplyDelete