Friday, January 10, 2020

சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!

சத்குருவின் அருளைத் தரும் அண்ணாமலை கிரிவலம்!!!

உங்கள் ஒவ்வொருவருக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,வழிகாட்டும் குரு,சத்குரு என்று ஐந்து விதமான குருமார்கள் தேவை;இதில் காரண குருவும்,காரிய குருவும் வாழ்க்கைப் பயணத்தில் தானாகவே ,தக்க நேரம் பார்த்து வருகை தருவர்;வருகை தந்து,நமக்கு எதைப் போதிக்க வேண்டுமோ அதை போதித்துவிடுவர்;

வழிகாட்டும் குரு என்பவரை நம்மால் சுலபமாகக் கண்டுபிடிக்க முடியும்;நமது பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் போதும்;நமது பிறந்த நட்சத்திரத்தை 1 வது நட்சத்திரமாகக் கொண்டு,15 வது நட்சத்திரம் எதுவோ அதைக் கண்டுபிடிக்க வேண்டும்;அந்த 15 வது நட்சத்திரத்தில் யார் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்களோ,அவரே நமது வழிகாட்டும் குரு ஆவார்;

இந்த ஜோதிடம் சார்ந்த தெய்வீக ரகசியத்தை அடியேனுக்கு அருணாச்சலேஸ்வரர் அருளால் பாம்பாட்டி சித்தரின் பரம்பரையைச் சேர்ந்த ஒரு ஆத்மா உபதேசம் செய்தார்;
சத்குருவின் அருளும்,வழிகாட்டுதலும் கிட்டினால் மட்டுமே மீண்டும் இந்த பூமியில் பிறவாமல் வாழும் தெய்வீக வாழ்க்கை கிடைக்கும்;

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு அண்ணாமலை என்ற அருணாச்சலத்தில் காத்துக் கொண்டு இருக்கிறார்;நமது பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் நமக்கு என்று ஒரு சத்குரு அண்ணாமலையில் இருக்கின்றார்;அவரை நேரில் சந்திக்கும் பாக்கியம் நமக்கு வேண்டும் எனில்,இரண்டு விதமான முயற்சிகளில் ஒன்றை செயல்படுத்த வேண்டும்;

1.இந்த பிறவிக்குள் அல்லது இந்த பிறவி முதல் அடுத்து வரும் ஒரு சில பிறவிகளுக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;

அல்லது

2.செவ்வாய்க்கிழமையும் விசாகம் நட்சத்திரமும் இணைந்த நாளில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;இப்படிப்பட்ட நாட்கள் ஒரு தமிழ் வருடத்தில் 3 அல்லது 4 நாட்கள் மட்டுமே வரும்;அதில் 1008 நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;

 பின்வரும் சத்குரு இடியாப்ப சித்தரின் மந்திரத்தை மட்டும் ஜபித்தவாறு கிரிவலம் வர வேண்டும்;

இதுவரை இந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் இடியாப்ப சித்தர் பிரான் நமக்கு உபதேசமாக தெரிவித்திருக்கின்றார்;

ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீசாக்த பரப்பிரம்ம மகரிஷி
மகேஸ்வராய கெளஸ்துப புருஷாய
இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்!

ஆத்மபலமும்,குரு அருளும்,அண்ணாமலையாரின் அருளும் பெற்றவர்கள் இரண்டு முறை கூட கிரிவலம் செல்லலாம்;

அடுத்தபடியாக,28.7.2020 செவ்வாய்க்கிழமை மதியம் 12.25 முதல் மறுநாள் காலை 10.58 வரை விசாகம் நட்சத்திரம்  இருக்கின்றது;

இதில் செவ்வாய்க்கிழமை மதியம் 12.25 முதல் மறுநாள் புதன் காலையில் சூரிய உதயத்திற்குள் கிரிவலம் நிறைவு செய்துவிட வேண்டும்.

25.8.2020 செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து அன்று இரவு 7.02 வரை விசாகம் நட்சத்திரம் இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் கிரிவலம் நிறைவு செய்திருக்க வேண்டும்;

குரு அருள் இல்லாமல் திரு(இறை) அருள் கிடைக்காது என்பதற்காக இதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்;

ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் அருளாசியைப் பெற

ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் அருளாசியைப் பெற

உலகத்தின் குருவாக நமது பாரத நாடு எப்போதும் இருக்கின்றது;எல்லா யுகத்திலும் பாரதமே உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டி! 1850 வரை உலகின் முதன்மை வல்லரசு நாடாகவும்,பணக்கார நாடாகவும் இருந்த நமது பாரதம் மீண்டும் 2020 முதல் வல்லரசு நாடாகிவிடும்;2020 நிறைவடையும் போது பாரத நாட்டில் வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும்;

இதன் தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியினால்,பாரதநாட்டுக்கு அருகில் இருக்கும் நாடுகளான ஸ்ரீலங்கா,நேபாளம்,பூட்டான்,பங்களாதேஷ்,மியான்மர்,மாலத்தீவு,மொரிசியஷ் போன்ற நாடுகளின் தனி நபர் வருமானம் அதிகரித்து,ஆசியாவின் பொருளாதாரம் வலிமையடையும்;

   மீண்டும் உலக அரசியல்,உலக பொருளாதாரம்,உலக ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அம்சமாக 2020 முதல் 2040க்குள் ஆகிவிடும்;இதன் தாக்கம் அடுத்த 3000 ஆண்டுகள் வரை தொடரும் என்று நாடி நூல்கள் தெரிவிக்கின்றன;

நார்ஸ்டர்டாமஸ் அடுத்த 2000 ஆண்டுகள் வரை என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்று கணித்திருக்கின்றார்;அந்த கணிப்புகளின் தொகுப்புக்கு நூற்றாண்டுகள் என்று பெயர்;இந்த பெயரில் தமிழ் மொழியிலும் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளன;

இவரைவிடவும் அடுத்த 10,000 ஆண்டுகள் வரை நமது உலகத்தில் என்னென்ன நிகழும் என்பதை ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்த வீரப்பிரம்மம் என்ற மகான் கணித்திருக்கின்றார்;அந்த கணிப்புகள் கால ஞானம் என்ற பெயரில் தமிழ் மொழியில் புத்தகமாக வெளிவந்திருக்கின்றது;

கிருத யுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று நான்கு யுகங்களும் சேர்ந்து 43,20,000 ஆண்டுகள் ஆகின்றன;

நாம் இப்போது கலியுகத்தில் 5121 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்;1,72,80,000 ஆண்டுகள் ஆனால்,அதற்கு மஹாயுகம் ஆகும்;
41,47,20,000 ஆண்டுகள் ஆன பிறகு காலக் கணக்கு மாற இருக்கின்றது;இப்போது ஜோதிடக்கலையில் அசுபதி நட்சத்திரம் முதல் நட்சத்திரமாக கணக்கில் எடுக்கப்பட்டு,ரேவதி நட்சத்திரம் இறுதி நட்சத்திரமாகப் போற்றப்படுகின்றது;41,47,20,000 ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டை நட்சத்திரமே முதல் நட்சத்திரமாக எடுக்கப்பட்டு,பின்னோக்கி நட்சத்திரங்களை வரிசைப்படுத்தும் பழக்கம் வர இருக்கின்றது;அந்த அடிப்படையில் மூலம் நட்சத்திரமே இறுதி நட்சத்திரமாக எண்ணப்படும் என்று சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் உபதேசம் செய்துள்ளார்;

விருச்சிக ராசியை செவ்வாய் கடக்கும் போது கேட்டை நட்சத்திரத்தை கடக்கும் காலத்தில் ஜீவசமாதி ஆன மகான்கள் ஒளி வடிவில் வெளிப்படுவார்கள்;

அந்த சமயத்தில் மகான்களுக்கு படையல் இட்டு,சிவ மந்திரங்கள் ஜபித்து,பூஜை,அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் அவருடைய அருளைப் பெறலாம்;ஜீவசமாதி ஆன மகான்கள்,சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகள்,சாதுக்கள் தமிழ்நாடு முழுவதும்  எல்லா ஊர்களில் ஐக்கியமாகி உள்ளார்கள்: 

இவர்களின் எண்ணிக்கை 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும்;

28.1.2020 செவ்வாய்

4.2.2020 செவ்வாய்

20.10.2020 செவ்வாய்

17.11.2020 செவ்வாய்

இந்த இரண்டு நாட்களிலும் உங்கள் ஊரில் ஜீவசமாதி ஆகி இருக்கும் மகான்களின் இருப்பிடத்தில் (அதிஷ்டானம்/ஜீவசமாதி/ஆலயம்) மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில்ஆறு வகையான உணவுகளை படையல் இட்டு,சிவபுராணம் அல்லது சைவ சமயத் திருமுறை பாடிவிட்டு அன்னதானம் செய்தால் போதுமானது;

இப்படி ஒரே ஒரு நாள் மட்டுமாவது தனி ஒருவராகவோ அல்லது கூட்டாக சிலர் சேர்ந்தோ அன்னதானம் செய்வதால்,ஒவ்வொருவருடைய நீண்டகால துக்கங்கள்,கடன்,நோய்,தீராத சோகங்கள் படிப்படியாக அதே சமயம் நிரந்தரமாக தீர்ந்துவிடும்;வருமானம் அதிகரிக்கும்;பூர்வீகச் சொத்துக்கள் பிரச்சினை வேகமாக முடிவுக்கு வந்துவிடும்;யாருக்கு என்ன நியாயமான ஏக்கமோ அது அந்த ஜீவசமாதி ஆன மகான்/துறவி/சித்தரால் நிறைவேறிவிடும்;

மீண்டும் இதே போன்ற நாட்கள் அமைய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்;

உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம் (விகாரி & சார்வரி)

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;

அருணாச்சல குரு  என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை அருணாச்சல குருவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;

இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;

சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(30 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
            மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
             மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;

27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை;

சார்வரி வருடத்தின் மைத்ர முகூர்த்த நாட்கள்:
23.4.2020 வியாழன் காலை 6.22 முதல் காலை 8.22 வரை;

8.5.2020 வெள்ளி மாலை 6.24 முதல் இரவு 8.24 வரை;

20.5.2020 புதன் அதிகாலை 4.24 முதல் காலை 6.24 வரை;

5.6.2020 வெள்ளி மாலை 4.24 முதல் 6.24 வரை;

16.6.2020 செவ்வாய் விடிகாலை 2 முதல் 4 மணி வரை;

2.7.2020 வியாழன் மதியம் 3.05 முதல் மாலை 5.05 வரை;

13.7.2020 திங்கள் இரவு 12.12 முதல் 2.12 வரை;

18.7.2020 சனி காலை 6.08 முதல் 8.08 வரை;மதியம் 12.08 முதல் 2.08 வரை;மாலை 6.08 முதல் இரவு 8.08 வரை;

29.7.2020 புதன் மதியம் 1.52 முதல் 3.52 வரை;

9.8.2020 ஞாயிறு இரவு 10.32 முதல் 12.32 வரை;

26.8.2020 புதன் மதியம் 12.36 முதல் 2.36 வரை;

6.9.2020 ஞாயிறு இரவு 8.48 முதல் 10.48 வரை;

22.9.2020 செவ்வாய் காலை 10.20 முதல் மதியம் 12.20 வரை;

3.10.2020 சனி இரவு 9.00 முதல் 9.32 வரை;

20.10.2020 செவ்வாய் காலை 8.12 முதல் 9.38 வரை;

30.10.2020 வெள்ளி மாலை 4.45 முதல் 6.45 வரை;

31.10.2020 சனி மாலை 4.49 முதல் 6.49 வரை;

16.11.2020 திங்கள் காலை 6.08 முதல் 8.08 வரை;

27.11.2020 வெள்ளி மாலை 5.01 முதல் 7.01 வரை;

12.12.2020 சனி காலை 10.46 முதல் 12.46 வரை;மாலை 4.46 முதல் 6.46 வரை;இரவு 10.46 முதல் 12.46 வரை;

13.12.2020 ஞாயிறு காலை 4.23 முதல் 6.23 வரை;

24.12.2020 வியாழன் மாலை 3.16 முதல் 5.16 வரை;

10.1.2021 ஞாயிறு காலை 5.18 முதல் 7.18 வரை;

20.1.2021 புதன் மதியம் 2.00 முதல் 2.55 வரை;
21.1.2021 வியாழன் மதியம் 1.10 முதல் 3.10 வரை;

17.2.2021 புதன் காலை 10.32 முதல் 12.32 வரை;

5.3.2021 வெள்ளி இரவு 11.05 முதல் 1.05 வரை;

16.3.2021 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை;

1.4.2021 வியாழன் இரவு 8.48 முதல் 10.48 வரை;

13.4.2021 செவ்வாய் காலை 5.45 முதல் 7.45 வரை;

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;

கர்மவினைகளை கரைக்கும் தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் (விகாரி & சார்வரி)

உலகத்தின் மையப்பகுதியாக இருக்கும் அண்ணாமலையில் நாம் வாழ்ந்து வரும் காலத்தில் பவுர்ணமி கிரிவலம் தான் பிரபலமாக இருக்கின்றது;பலர் பவுர்ணமி அன்று மட்டும் தான் கிரிவலம் செல்ல வேண்டும் என்று நம்புகின்றார்கள்;இது முழுத் தவறு;மறு பிறவி இல்லாத முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இப்பிறவிக்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் சென்றால் போதும்.முக்தி உறுதியாக கிட்டும்;இது அருணாச்சலேஸ்வரர் மீது சத்தியமான உண்மை;

உலக வரலாற்றில். . . இல்லையில்லை ப்ரபஞ்ச வரலாற்றில் முதன் முறையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் தாயாகிய அன்னை பார்வதி தேவி;நம் அன்னைக்கு துணையாக கிரிவலம் சென்றது நம் அனைவருக்கும் குருவாக இருப்பவரும்,தமிழ் மொழியை பூமி முழுவதும்(தமிழ்நாட்டில் மட்டும் அல்ல;) பரப்பியவரும்,சித்தர்களின் தலைவரும்,ரிஷிகளின் தலைவருமாகிய அகத்தியர் ஆவார்;

எனவே,ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரியன்றும் அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டியது நமது கடமை ஆகும்;அவ்வாறு செல்வதன் மூலமாக நமது கடுமையான கர்மவினைகள் நீங்கத் துவங்கும்;நமது முன்னோர்களாகிய பித்ருக்களில் ஒருவர் அல்லது ஒரு சிலர் கிரிவலம் வருவர்;அவர்களை கிரிவலத்தில் சந்திக்கும் பாக்கியம் கிட்டும்;நாம் ஒவ்வொருவருமே ஏதாவது ஒரு சித்தரின் வம்சாவழியைச் சேர்ந்தவரே! எனவே,நமது முன்னோராகிய சித்தர் தரிசனம் கண்டிப்பாக நமக்கு கிட்டும்;

அவரவர் பூர்வ புண்ணியத்தைப் பொறுத்து 12 வது முறையோ அல்லது 36 வது முறையோ கிரிவலம் செல்லும் போது கிட்டும்;மிகுந்த பூர்வ புண்ணியம் செய்தவர்களுக்கு அன்னை பார்வதி தேவியின் தரிசனமும்,நமதுகுரு  அகத்திய மகரிஷியின் தரிசனமும் கிட்டும்;

பஞ்சாங்கம் பார்க்கும் பழக்கம் குறைந்து போனதால்,அடுத்த ஒருவருடத்திற்கு தேய்பிறை சிவராத்திரி நேரத்தை இங்கே குறிப்பிடுகின்றோம்;தேய்பிறை சதுர்த்தசி திதி வரும் சிவராத்திரி திதி என்பதை மறக்காதீர்கள்;

 விகாரி & சார்வரி வருடத்தின் தேய்பிறை சிவராத்திரி நாட்கள்:

24.12.2019 செவ்வாய் மதியம் 12.23 முதல் 25.12.2019 புதன் காலை 11.24 வரை

23.1.2020 வியாழன்(காலை சூரிய உதயத்தில் இருந்து அன்று நள்ளிரவு 2.22 வரை)

21.2.2020 வெள்ளி மாலை 6.14 முதல் 22.2.2020 சனி இரவு 7.19 வரை(மஹாசிவராத்திரி)

22.3.2020 ஞாயிறு காலை 11.23 முதல் 23.3.2020 திங்கள் மதியம் 1.13 வரை

21.4.2020 செவ்வாய்(காலை சூரிய உதயம் முதல் மறுநாள் காலை சூரிய உதயம் வரை)

20.5.2020 புதன் இரவு 9.09 முதல் 21.5.2020 வியாழன் இரவு 10.46 வரை

19.6.2020 வெள்ளி காலை 11.47 முதல் 20.6.2020 சனி மதியம் 12.34 வரை

18.7.2020 சனி இரவு 12.26 முதல் 19.7.2020 ஞாயிறு இரவு 12.15 வரை

17.8.2020 திங்கள் காலை 11.20 முதல் 18.8.2020 செவ்வாய் காலை 10.16 வரை(ஆவணி மாத முதல் தேய்பிறை சிவராத்திரி)

15.9.2020 செவ்வாய் இரவு 9.09 முதல் 16.9.2020 புதன் இரவு 7.23 வரை(ஆவணி மாத இரண்டாவது தேய்பிறை சிவராத்திரி) 

15.10.2020 வியாழன் காலை 6.35 முதல் பின்னிரவு 3.46 வரை

13.11.2020 வெள்ளி மாலை 4.11 முதல் 14.11.2020 சனி மதியம் 1.50 வரை

12.12.2020 சனி நள்ளிரவு 12.09 முதல் 13.12.2020 ஞாயிறு நள்ளிரவு 12.09 வரை(குபேர கிரிவலம் 2020)

11.1.2021 திங்கள் மதியம் 1.28 முதல் 12.1.2021 செவ்வாய் காலை 11.48 வரை

9.2.2021 செவ்வாய் பின்னிரவு 1.44 முதல் 10.2.2021 புதன் நள்ளிரவு 12.53 வரை

11.3.2021 வியாழன் மதியம் 3.17 முதல் 12.3.2021 வெள்ளி மதியம் 3.24 வரை(மஹாசிவராத்திரி)

10.4.2021 சனி காலை 5.54 முதல் 11.4.2021 ஞாயிறு காலை 7.01 வரை(மூன்று நாட்கள் இருக்கும் சிவராத்திரி)

சென்ற நூற்றாண்டு வரை பெரும்பாலான சிவபக்தர்கள்,அருணாச்சல சித்தர்கள் இந்த திதி ஆரம்பிக்கும் போது கிரிவலம் துவங்குவார்கள்;திதி முடியும் போதுதான் கிரிவலத்தை நிறைவு செய்வார்கள்;

400 ஆண்டுகளாகத் தான் தற்போதைய கிரிவலப்பாதையை நாம் பயன்படுத்தி வருகின்றோம்;அதற்கு முன்பாக கிரிவலப்பாதையின் நீளம் 50 கி.மீட்டராக இருந்தது;1000 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிரிவலப்பாதையின் நீளம் 1000 கி மீட்டர்களாக இருந்தது;

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

கர்மவினைகளை கரைத்து சர்வ சுபிட்சம் தரும் துவாதசி அன்னதானம் (விகாரி & சார்வரி)

நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;

அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; 

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;
இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

  விகாரி & சார்வரி வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள் பட்டியல்:-

7.1.2020 சனி

21.1.2020 செவ்வாய்

7.3.2020 வெள்ளி

19.4.2020 ஞாயிறு

4.5.2020 திங்கள்

19.5.2020 செவ்வாய்

17.7.2020 வெள்ளி

31.7.2020 வெள்ளி

14.9.2020 திங்கள்

28.9.2020 திங்கள்

11.12.2020 வெள்ளி

26.12.2020 சனி

25.1.2021 திங்கள்

8.2.2021 திங்கள்

25.3.2021 வியாழன்

8.4.2021 வியாழன்

மேலே குறிப்பிட்டிருக்கும் கிரக அமைப்புகளில் பிறந்தவர்கள் மட்டும் தான் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை;

முக்தியை இப்பிறவியிலேயே அடைய விரும்புவோர் இந்த நாட்களில் அண்ணாமலையில் அன்னதானம் செய்யலாம்;தமது மகன்,மகள் மற்றும் அடுத்த 7 தலைமுறையினர் சீரும் சிறப்புமாகவும்,நிம்மதியாகவும் வசதியாகவும் வாழ வேண்டும் என்று விரும்புவோர் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

தமது சீவனுக்குள் இருக்கும் சிவனை வெளியே கொண்டு வரவேண்டும் என்ற தவிப்பில் வாழ்ந்து வருபவர்களும் இந்த நாட்களில் அன்னதானம் செய்யலாம்;

ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

நமது ஆதிகுரு அகத்தியரின் பிறந்த நாள் மார்கழி ஆயில்யம்!!!

நமது ஆதிகுரு அகத்தியரின் பிறந்த நாள் மார்கழி ஆயில்யம்!!!

உலகம் முழுவதும் பேசப்பட்ட முதல் மனித மொழி தமிழ் தான்! இந்த தமிழ் மொழியினை முருகக்கடவுளிடம் கற்றுக்  கொண்டு பூலோகம் முழுவதும் (இன்றைய ஆசியக் கண்டம்,ஆஸ்திரேலியக் கண்டம்,ஐரோப்பாக் கண்டம்,வட அமெரிக்க கண்டம்,தென் அமெரிக்க கண்டம்,ஆப்ரிக்க கண்டம்) மனிதர்களிடம் பரப்பியவர் அகத்தியர் என்ற சித்தர் ஆவார்.

இவரே சித்தர்களின் தலைவர் ஆவார்.இன்றும் உலகம் முழுவதும் பல்வேறு ஊர்கள்,மாநிலங்கள்,நாடுகளின் பெயர்கள் தமிழில் தான் இருக்கின்றது;உதாரணமாக நாகளேஸ்வரம் என்பது இன்று நாகலாந்து என்று மாறிவிட்டது;அயனீஸ்வரம் என்பது அயர்லாந்து என்று ஆகிவிட்டது;பிள்ளைப்பண் என்பது இன்றைக்கு பிலிப்பைன்ஸ் ஆகிவிட்டது;அகத்தீஸ்வரம் என்பது ஆஸ்திரேலியா ஆகிவிட்டது;இராக்கை என்ற தமிழ் வார்த்தைக்கு இரட்டைப் பசு என்று பெயர்;அது தான் இன்று ஈராக்   என்று இருக்கின்றது;

தமிழ் மொழியின் இலக்கண விதிகளின் தொகுப்பாக அகத்தியம் என்ற நூலை படைத்திருக்கின்றார்;அது இன்று வரையிலும் நமக்கு கிடைக்கவில்லை;ஆனால்,நமது தமிழ்நாட்டில் ஏதோ ஒரு ஆலயத்தில் அகத்தியரின் சன்னதியில் இருக்கலாம்;அவரது சீடரான தொல்காப்பியர் எழுதிய தமிழ் இலக்கண விதிகளின் தொகுப்பு தொல்காப்பியம் கிடைத்திருக்கின்றது;

மூலிகைகள் பற்றிய மருத்துவ ஞானத்தை நம்மிடையே போதித்து சித்த மருத்துவத்தை பூமியில் தோற்றுவித்தவர் அகத்தியர்!

யோகாசனம் என்பது உடல் ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும் ஒரு மருத்துவக் கலை என்பதையும் நமக்கு போதித்தவர் அகத்தியர்!

ஒவ்வொரு மனிதன்,உயிர்கள்,பயிர்கள்,நாடுகள்,நகரங்கள்,நதிகள், ஆலயங்கள் பற்றிய எதிர்காலத்தை நமக்காக போதித்தவர் அகத்தியர்! அதுவே ஜோதிடம் என்று அழைக்கப்படுகின்றது;அவரைத் தொடர்ந்தே பல சித்தர் பெருமக்கள் இதே துறைகளில் மென் மேலும் பல ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து,பல நூல்களை ஓலைச்சுவடிகளாக எழுதி வைத்தனர்;

மூச்சுப் பயிற்சி பற்றிய கலைக்கு சரக்கலை என்று பெயர்;சரக்கலையில் வெற்றிபெறுபவர்களை நவக்கிரகங்களின் தீமை நெருங்காது;சரக்கலை பற்றிய போதனையை நமக்கு உபதேசம் செய்தவர் அகத்தியர்!

ஒவ்வொரு ஆலயத்தையும் எப்படி கட்டிட வேண்டும்? என்பதைப் பற்றிய விளக்கங்களுக்கு சில்ப சாஸ்திரம் என்று பெயர்;இதில் கணபதி ஆலயம்,முருகக் கடவுள் ஆலயம்,அம்பாள் ஆலயம்,சிவாலயம்,விஷ்ணு ஆலயம்,குல தெய்வ ஆலயம்,காவல் தெய்வ ஆலயம்   என்று சகலவிதமான  ஆலயங்களும்   அடக்கம்;  இக்கலையை மனிதர்களுக்கு போதித்தவர் அகத்தியர்!

ஒவ்வொரு ஆலயத்திலும் எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்ற வரைமுறைகளை போதித்தவர் அகத்தியர்! இந்த பூஜை முறைகளின் மொத்த தொகுப்புக்கு ஆகமம் என்று பெயர்;

ஒவ்வொரு தெய்வத்தின் அருளையும் எப்படி மந்திரம் ஜபித்து பெற வேண்டும்? எந்தெந்த திதிகளில் என்னென்ன மாதிரியான விரதம் இருக்க வேண்டும்? என்ன விதமான படையல்(தளுவை) வைக்க வேண்டும் என்பதை நமக்கு முதன்முதலில் போதித்தவர் அகத்தியர்!

கணபதி உபாசனை,முருக உபாசனை,அம்பாள் உபாசனை,ஸ்ரீசக்கர உபாசனை,ஸ்ரீவித்யா உபாசனை,லிங்க வழிபாடு,விஷ்ணு உபாசனை,பைரவ உபாசனை,வராகி உபாசனை,காளி உபாசனை,அனுமன் உபாசனை என்று எல்லாவிதமான இறை சக்திகளின் அனுக்கிரகம் பெறும் உபாசனை முறைகளை முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!

இன்றைய கால கட்டத்தில் வீட்டில் சமையல் அறையில் இருக்கும்  அஞ்சறைப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் இருக்க வேண்டும்  என்பதை முதன் முதலில் தீர்மானித்தவர் அகத்தியர்!

என்னென்ன பாவச் செயல்கள் செய்தால்,அதற்கு என்னென்ன தண்டனைகள் கிடைக்கும்? அதில் இருந்து மீள்வதற்கு என்னென்ன விதமான வழிபாடு,பூஜை,யாகம்,தானம்,பரிகாரம் செய்ய வேண்டும் என்ற முழுமையான விளக்கத்தை நமக்கு (மனிதர்களுக்கு) முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!

கலியுகாதி 5121 ஆம் ஆண்டில் நாம் வாழ்ந்து வருகின்றோம்.இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பூமியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை மட்டுமே நமது அறிவால் கண்டறிய முடியும்;ஆனால்,இன்னும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நிகழும்? இன்னும் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் நிகழும்? என்பதை 40,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது தவ ஆற்றலால் எழுதி வைத்தவர் அகத்தியர்!

இவைகள் அனைத்தையும் ஈசனின் அருளால் தான் அடியேன் எழுதினேன் என்று தனது ஒவ்வொரு நூலின் முதல் பக்கத்திலும் தெரிவித்திருப்பவர் அகத்தியர்!(பணிவு தான் தமிழர்களின் இயல்பு;திமிர் அல்ல என்பது இதன் மூலமாக நிரூபணம் ஆகிறது)

இராமாயணத்திலும்,மஹாபாரதத்திலும் மிக முக்கியமான கேரக்டராக அகத்தியர் இருக்கின்றார்;

கர்மவினைகளைப் போக்கும் அண்ணாமலை கிரிவலத்தைப் பற்றி நமக்கு முதன் முதலில் போதித்தவர் அகத்தியர்!

கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள்,வேதனைகள் நிரம்பியது தான் நாம் வாழ்ந்து வரும் கலியுகம் ஆகும்;கலியுகத்தில் வாழும் மக்களால் 24 மணி நேரமும் பக்தியோடு வாழ முடியாது என்பதை உணர்ந்த அகத்தியர்,அவர்களுடைய துயரங்கள் தீர ஈசனை நோக்கி தவம் இருந்து ஒரு வரம் வாங்கி இருக்கின்றார்;

“மகனே,அகத்தியா! உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று ஈசன் கேட்கிறார்;
அதற்கு அகத்தியர், “கலியுக மக்களுக்கு பணம் சம்பாதிக்கவே 24 மணி நேரம் போதாது.இதனால்,சைவ சமயப் பதிகங்கள் அனைத்தையும் அவர்களால் தினமும் பாட இயலாமல் போய்விடும்;எந்தெந்த பதிகங்களை மட்டும் தினமும் பாடினால்,கலியுக மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை தாங்களே உபதேசிக்க வேண்டும்” என்று ஈசனிடம் வேண்டுகிறார்;
ஈசன் 25 பதிகங்களை குறிப்பிடுகிறார்;அதுதான் அகத்தியர் தேவாரத் திரட்டு! நாம் தினமும் இந்த 25 பதிகங்களை பாடினால் போதும்;ஆழ்ந்த மன நிம்மதி கிடைத்துவிடும்;

பூமியில் இருக்கும் எல்லா சிவாலயத்திலும் அகத்திய லிங்கம் என்று ஒரு சிவலிங்கம் இருக்கின்றது;இது தவிர,எந்தெந்த கோவில் மூலவர் அகத்தீஸ்வரர் என்று இருக்கின்றதோ,அவைகள் எல்லாம் அகத்தியரே உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;அந்த அடிப்படையில் சுமாராக 108 அகத்தீஸ்வரர் கோவில்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;இந்த ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு உள்ளே நுழையும் இடத்தில் அகத்தியரின் தெய்வீக உருவச் சிலை அமைந்திருக்கும்;

பூமியில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது “ஓம் அகத்தீசாய நமஹ” என்று நினைக்காவிட்டால்,சொல்லாவிட்டால் அவர்களுக்கு முக்தி கிடைக்காது;

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் வரும் ஆயில்யம் நட்சத்திர நாள் தான் அகத்தியரின் பிறந்த நாள்!!!

இந்த ஆண்டு 12.1.2020 ஞாயிறு மதியம் 1.24 முதல் 13.1.2020 திங்கள் மதியம் 12.10 வரை ஆயில்யம் இருக்கின்றது;
அகத்தீசரின் அருளைப் பெற இந்த நாளில் அருகில் இருக்கும் ஆலயம் செல்வோம்;ஒரு மணி நேரம் ஓம் அகத்தீசாய நமஹ என்று ஜபிப்போம்!

ஈசனும்,அகத்தீசனும் ஒருவரே! ஈசனுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை அன்று காலை 8 முதல் 9 மணி வரையிலான குரு ஓரையில் “ஓம் அகத்தீசாய நமஹ” என்று ஜபிப்போம்;குரு அருள் பெறுவோம்!!!

Wednesday, January 1, 2020

சனி+செவ்வாய் சேர்க்கை & பார்வை உள்ளவர்கள் செய்ய வேண்டிய துவாதசி அன்னதானம்!!!

நமது கர்மவினைகளை முழுமையாக அனுபவிக்கவே இங்கே,இந்த பூமியில் பிறவி எடுத்துள்ளோம்;ஆனாலும்,பரமேஸ்வரன் கருணை மிக்கவன்;திருந்த வேண்டும்;மனம் வருந்தவேண்டும் என்று தவியாய் தவிக்கும் உள்ளங்களுக்கு பரிகாரம்,வழிபாடு,ஜபம்,தானம்,பதிகம் பாடுதல்,வாசியோகம் போன்றவைகள் மூலமாக கர்மவினைகளை அனுபவிக்காமல் குறைத்து நிம்மதியாக வாழ வழிவகுத்துக் கொடுத்துள்ளான்;

துவாதசி திதி அன்று அண்ணாமலையில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள்ளாகவும்;மதியம் 1 மணிக்கு மேல் 2 மணிக்குள்ளாகவும்,இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாகவும் அன்னதானம் செய்ய வேண்டும்;ஒவ்வொரு வேளையும் குறைந்தது 18 சாதுக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;அதன் பிறகு,இரவில் கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலத்தின் போது ஓம் அருணாச்சலாய நமஹ என்று அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தை ஜபித்துக் கொண்டே செல்ல வேண்டும்;கிரிவலம் நிறைவடைந்தப் பின்னர்,அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;

இரட்டைப்பிள்ளையார் கோவில் வாசலில் இருந்து அண்ணாமலை கிரிவலத்தை துவக்க வேண்டும்;கிரிவலப் பாதை முழுவதும் பைரவரின் வாகனமாகிய நாய்களும்,அனைத்து தெய்வங்களும் உறையும் பசுக்களும் இருக்கின்றன;அக்னிலிங்கம் வரை பசுக்கள் அதிகமாக தென்படுகின்றன;எனவே,கிரிவலம் புறப்படும் போது போதுமான அளவுக்கு அகத்திக்கீரைகள் மற்றும் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்;கிரிவலப்பாதையில் தென்படும் பசுக்களுக்கு அகத்திக்கீரைகளையும்,வாழைப்பழங்களையும் தானமாக தர வேண்டும்;நிறைய பிஸ்கட்கள்,பொறைகளை வாங்கிக் கொண்டு செல்வதால் கிரிவலப் பாதை தூரமான 14 கி மீ அளவுக்கு வழியில் தென்படும் பைரவ வாகனத்திற்கு தானம் செய்ய வேண்டும்;இதன் மூலமாக ஒரே சமயத்தில் பைரவரின் அருளும்,அருணாச்சலேஸ்வரின் ஆசிகளும் நமக்கு கிட்டும்;

பூத நாராயணப் பெருமாள் ஆலயத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;கிரிவலம் நிறைவு செய்யும் பூத நாராயணப் பெருமாள் சன்னதியின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசனம் செய்ய வேண்டும்;இந்த தரிசனத்தினால் நீண்டகாலமாக இருந்து வந்த மன உளைச்சல்கள் அடியோடு விலகிவிடும்;

அதன் பிறகு,ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்;மூலஸ்தானத்தை நெருங்கும் போது,(நடராஜர் சன்னதியை பார்க்கும் போது) இடது பக்கத்தில் இருக்கும் உள்பிரகாரத்தில் பயணிக்க வேண்டும்;வடமேற்கு மூலையில் துர்வாசர் மகரிஷியின் சன்னதி அமைக்கப்பட்டிருக்கின்றது;

அவரிடம் மனப்பூர்வமாக தாம் முந்தைய தினத்தற்கு துவாதசி அன்னதானம் செய்துவிட்டோம்;அண்ணாமலையாரை தரிசிக்க அனுமதிப்பீராக என்று மனப்பூர்வமாக வேண்டிக்கொள்ள வேண்டும்;அதன் பிறகே,மீண்டும் வரிசையில் இணைந்து அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்;பிறகு,உண்ணாமுலையம்மன் என்ற அபிதகுஜலாம்பாளைத் தரிசிக்க வேண்டும்;பிறகு,நவக்கிரக சன்னதிக்கு அருகில் சுவற்றை ஒட்டி அமைந்திருக்கும் இரட்டை சித்தரகுப்தர்களை பக்கவாட்டில் தரிசிக்க வேண்டும்;இப்படி தரிசித்தால் மட்டும் தான் அண்ணாமலைக்கு வருகை தந்தது அருணாச்சலேஸ்வரருக்கு முறைப்படி தெரிவிக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;அதன் பிறகு,கொடி மரம் அருகில் விழுந்து வணங்கி விட்டு,மஹா கால பைரவப்பெருமானைத் தரிசிக்க வேண்டும்;இத்துடன் அண்ணாமலை துவாதசி திதி அன்னதானமும்,கிரிவலமும் நிறைவடைகின்றது; 

நாம் பிறந்த நாள் முதல் நமது வாழ்நாளின் இறுதி நாள் வரை காசியில் ஒரு கோடி மனிதர்களுக்கு ஒவ்வொரு நாளும் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியமோ,அதை விடவும் அதிகமான புண்ணியம் முழுத் துவாதசி திதி அன்று அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும் என்று அருணாச்சல புராணம் தெரிவிக்கின்றது;

ஜோதிடப்படி,ஒருவரது ஜனன ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் இணைந்திருந்தால் அல்லது செவ்வாய் இருக்கும் ராசிக்கு 4வது ராசியில் சனி இருந்தால் அவர்களுக்கு முன்னோர்கள் சாபம் பலமாக இருக்கின்றது என்று அர்த்தம்;

சிலருக்கு ராகுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;
இன்னும் சிலருக்கு கேதுவுடன் சனியும்,செவ்வாயும் இணைந்திருக்கும்;இன்னும் சிலருக்கு ராகுவுடன் செவ்வாயும்,கேதுவுடன் சனியும் அல்லது ராகுவுடன் சனியும்,கேதுவுடன் செவ்வாயும் இணைந்திருக்கும்;இந்த மாதிரியான கிரக அமைப்புகள் இவர்களது முன்னோர்கள் வறட்டு கவுரவத்தினாலோ அல்லது சொத்துக்காகவோ அல்லது திமிரான செயல்பாடுகளாலோ பல ஆண்டுகளாக சண்டையிட்டுள்ளார்கள்;வீட்டுப் பெண்கள் இந்த சண்டை முடிவுக்கு வராதா? என்று பல நாட்களாக கதறி அழுதுள்ளார்கள் என்று அர்த்தம்;

இதைச் சரி செய்ய குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்ய வேண்டும்;இரவில் அல்லது மதியம் கிரிவலம் கண்டிப்பாக செல்ல வேண்டும்;

இதைச் செய்ய விரும்பி,ஆனால் வருமானம் ஒத்துழைக்காதவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரை மாதம் தோறும் குலதெய்வம் கோவிலுக்கு படையலிட அரிசி வாங்கித் தரவேண்டும்;

  விகாரி & சார்வரி வருடத்திற்கான முழுத் துவாதசி திதி நாட்கள்;