Friday, February 22, 2013

இரு நண்பர்களும்,ஒரு பழமொழியும்!!!




நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள் குருகுலக் கல்வியை முடித்துவிட்டு,ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் துவக்கினர்.ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார்;திருமணம் முடிந்து இல்லறதர்மத்தில் ஈடுபட்டார்.மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார்;தேச சஞ்சாரம் செய்தார்;காலச் சக்கரம் உருண்டோடியது;பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி ஊர்க்கோவிலில் தங்கி,தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.


கடமையைக் கண்ணாகக்கருதிய இல்லறத்தார் விவசாயப்பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன்,துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் சகதர்மபத்தினியைப் பணித்தார்.அறுசுவை உண்டி சமைத்து துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப்போனாள்.காரணம் எங்கோ பெய்த கனத்த மழையால் அவ்வூர் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு.அக்கரையிலுள்ள கோவிலை அடைவது எப்படி? என்று கணவனிடம் வந்து கேட்டாள்.



‘பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல்என்று ஒரு உபாயத்தைச் சொன்னார் இல்லறத்தார்.என்னே ஆச்சரியம்!!! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல,ஆறு வழிவிட்டது.அக்கரை சென்றடைந்தாள்.
தன் கணவரின் செய்தியைக்கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள்.ரசித்து,ருசித்து உண்ட சந்நியாசி அவளுக்கு ஆசி கூறியனுப்பி வைத்தார்.ஆற்றில் அதே வெள்ள ஓட்டம்.தன் கணவர் சொன்ன அதே மந்திரத்தை உச்சரித்தாள்.ஆறு வழிவிடவில்லை;செய்வதறியாது திகைத்த அப்பெண் துறவியை அணுகி என்ன செய்வது? எனக் கேட்டாள்.



‘உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற,அப்படியே செய்தாள்.ஆஹா, ஆறு வழிவிட,இக்கரை சேர்ந்தாள்.இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா குழம்பிய அவள் தன் கணவரிடமே வினவினாள்.புன்முறுவலுடன் கணவர் பதிலுரைத்தார்.


“காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல்,வம்சவிருத்திக்காக முறையாக உறவு கொள்ளும் இல்லறத்தானும், வாய் ருசிக்காக உணவுக்கு அடிமையாகாமல் உணவை ருசிக்கும் துறவறத்தானும் ஒரு வகையில் ஆன்மபலம்(தவ ஆற்றல்) கொண்டவர்களே”


இந்த இல்லறத்தான் தினமும் வழிபட்டு வந்தது ஸ்ரீகால பைரவரையே! எனவே தான் இவர் இல்லறத்தானாக இருந்தும் காமத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடிந்திருக்கிறது.தினமும் ஸ்ரீகால பைரவரை வழிபடுபவர்கள் பைரவ உபாசகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.


தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் திருக்கண்டியூர் வீரட்டானத்தில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 29,வெளியீடு 18.1.13
ஓம்சிவசிவஓம்

நமது ஆன்மீகக்கடலின் சேவைகள்!!!












Ashta Bairavar - aaraglur - Remedy for all problems




Kasi is so famous for bairavar worship and ashta bairavar can be found and worshipped  in kasi as it is extremely beneficial. For south indian people, travelling to kasi is not that easy.For those who want to worship ashta bairavar in one place in south india, a temple serves as a boon.The temple is called kamanada eswarar temple.It is situated in Aaragalur , near thalaivasal in salem district of Tamilnadu.




Every ashtami after full moon special pooja is done at midnight in aaragalur.People worship ashtabairavar here for all problems to get easy remedy.




Ashta bairavars are
  1. unmattar
  2. ruruvar
  3. krodhanar
  4. kalasamharar
  5. sandar
  6. ajithangar
  7. beeshana bairavar
  8. kalabairavar 

http://www.tamilhindu.net/t1545-topic  - click for more details 

Remedies offered by Sri Bairavar




Bairavar is the controller of Navagragas and have the power of reducing the ill effects if one person offers proper prayers to lord bairavar during his bad periods.A list of remedies is given here for various problems.

1.to win in court case in your favour

  During pradosham, especially sani pradosham, after pradosha pooja is over one has to offer curd rice to sri kalabairavar and make an archana in his name.Then he has to distribute the curd rice to people who are in temple.The curd rice should be offered until the case is completed.

2.to remove obstacles to get married

During ragu period on friday's (10.30 am to 12.00pm) lord bairavar should be offered santhana kappu, punugu, lotus flower along with kesari, sarkarai pongal and should do archana in his name.The method should be followed up to 8 or 17 or 26 friday's,

3.to get reunion

During wednesday and friday's morning 6-7 or afternoon 2-3 or night 8-9 lord bairavar one should  offer vilva mala and archanai.This should be done upto reunion of separated couples.

4.to get lost assets

Before lord bairavar , 27 milagu should be tied in a small cloth and should be kept in agal vilaku(liitle pot used for worship). nalla ennai(an oil preferred for worship) should be poured in to agal vilaku  and archanai should be done on his/her name till the retrival of lost assets.

5.to get rich

During sunday's in ragu kalam(4.30 pm to 6.00 pm) bairvar should be offered ulundu vadai with poosanikai.Sri swarna agarshana bairavar moola mantra should be recited 330 times for 52 sundays.

Thursday, February 21, 2013

புண்ணியம் ஓசியில் கிடைக்குமா?





  ஒரு கோவில் அறிவிப்பு பலகையில்,  . .தேதி அன்னதானம்  நடைபெறும்.பக்தர்கள்,தங்களால் இயன்ற உதவியை பொருளாகவோ,பணமாகவோ செலுத்தி,அன்னதான நிகழ்ச்சி சிறப்புற ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.குறிப்பு:தயவு செய்து ரேஷன் அரிசியை அன்னதானத்திற்கு தர வேண்டாம்.


விசாரித்தபோது, “அன்னதானத்திற்கு உதவுவது,மிக புண்ணியமான,உன்னதமான விஷயம். ரேஷன் கடைகளில்  கிடைக்கும் அரிசி பெரும்பாலும் நல்ல தரத்துடனேயே உள்ளது.ஆனால்,விஷயம் அதுவல்ல;இப்போது அனைத்து கார்டுகளுக்கும் 20 கிலோ இலவச அரிசி கிடைக்கிறது.அன்னதானத்திற்குக் கொடுப்பது பெருமைக்காக என்று நினைத்து அந்த அரிசியை வாங்கி கோவிலில் கொடுத்துவிட்டு, ‘ஓசியில் அரிசி கிடைத்தது; இங்கு கொடுத்தால் ஓசியில் புண்ணியமும் கிடைச்சிடும்ல’ என்று சிரித்த ஒரு மேதாவியால் எழுந்த ஞானதோயத்தில் எழுதப்பட்டதுதான் இந்த அறிவிப்புப் பலகை”என்று விளக்கினார் கோவில் ஊழியர் ஒருவர்.


அன்னதானத்திற்கு அரிசி கொடுப்பவர்கள் கவனத்திற்கு:
நாம் உழைத்தப் பணத்தில் ஒரு ரூபாய் கொடுத்தாலும் போதும்.இப்படி ஓசியில் கிடைக்கும் புண்ணியம் வேண்டாம்.
இலவசமாகவோ,குறைந்த விலையிலோ ரேஷனில் கிடைக்கும் பொருட்கள் உங்களுக்குத் தேவைப்படவில்லை எனில்,சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் எழுதிக் கொடுத்து,உங்கள் குடும்ப அட்டையிலும் பதிவு செய்து கொள்ளுங்கள்.இது அரசின் பற்றாக்குறையையும் நிதிச்சுமையையும் பெருமளவு குறைக்கும்; சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் ஏற்படும் சிறு சிறு ஊழல்களையும் தடுக்கும்.    

ஆன்மீகம் இல்லாமல் வாழ்க்கை இல்லை;சிக்கனம் இல்லாமல் இந்து தர்மம் இல்லை; 


ஆதாரம்:விஜயபாரதம்,பக்கம் 16, வெளியீடு 25.1.13
ஓம்சிவசிவஓம்

சனிப்பிரதோஷத்தன்று சிவாய நம ஜபிப்போம்;விரைவான சிவகடாட்சத்தைப் பெறுவோம்!!





22.2.13 மற்றும்  9.3.13 என இரண்டு சனிப்பிரதோஷ நாட்கள் அருகில் வர இருக்கின்றன.நம்மைப் படைத்த சக்தியை வழிபடுவது நமது கடமைகளில் ஒன்று.அதுவும் அவரது திருவிளையாடல்கள் நிகழ்ந்த நாள் அல்லது நட்சத்திரம் வரும் நாளில் வழிபட,நமது கடுமையான கஷ்டங்கள் நீங்கிவிடும் என்பது பல கோடி ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள சிவவாக்கின்படி,ஒரு சனிப்பிரதோஷ தினத்தன்று நாம் பிரதோஷ வழிபாடு செய்தால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு தினமும் சிவாலயம் சென்று சிவவழிபாடு தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும்.ஏனெனில்,இந்தப் பிரபஞ்சத்தில் முதன் முதலில் பிரதோஷம் ஒரு சனிக்கிழமையன்றுதான் நிகழ்ந்தது.


இந்த நன்னாளில் நாம் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்திற்கு மாலை நான்கு மணிக்குள் சென்று கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் மஞ்சள் துண்டு விரித்தவாறு நந்தி பகவானை தரிசிக்கும் விதமாக அமர்ந்து கொள்ள வேண்டும்;மாலை ஆறு மணி ஆகும் வரை மனதுக்குள் சிவாய நம ஜபித்துக் கொண்டே இருக்க வேண்டும்;இந்த சனிப்பிரதோஷ நாளில்,பிரதோஷ நேரத்தில் இவ்வாறு தொடர்ந்து சிவாய நம ஜபிப்பதற்கே பூர்வபுண்ணியம் வேண்டும்.

இதைச் செய்ய இயலாதவர்கள் தமது வீடு/அலுவலத்தில் அவரவர் இருக்கையில் அமர்ந்த நிலையில் ஜபிக்கலாம்;முடிந்தால் அண்ணாமலை போன்ற ஆலயங்களுக்கு சென்று ஜபிக்கலாம்;வெகுநாட்களாக தினமும் சிவாய நம ஜபித்து வருபவர்கள் இந்த நாளில் கோவிலுக்குச் செல்ல இயலாவிட்டால்,இந்த நேரத்தில் நமது இருப்பிடத்தில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு மானசீகமாக நாம் விரும்பும் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்;அங்கே நந்தியை மானசீகமாக தரிசித்தவாறே மனதுக்குள் சிவாய நம ஜபித்துவர வேண்டும்.இது எல்லோராலும் இயலாத காரியமே.இருப்பினும்,இவ்வாறு தொடர்ந்து பிரதோஷ நேரம் முழுவதும் ஜபித்தால் சிவதரிசனத்தோடு,நந்தி தரிசனமும் வேறுசில சித்தர்கள் தரிசனமும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.                                மாலை ஆறு மணிக்கு மேல் கொஞ்சம் இளநீர் அல்லது தண்ணீர் அருந்தினால்,அது  வரை நாம் ஜபித்த சிவாய நம நமது உடலுக்குள் பதிவாகிவிடும் என்பதை நமது ஆன்மீககுரு தனது அனுபவத்தை போதித்திருக்கிறார்.
அண்ணாமலைக்குச் செல்வோர் சனிப்பிரதோஷம் நிறைவடைந்ததும்,கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு ஆகும்.


இதே சனிப்பிரதோஷ நேரத்தில் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் சிவாய நம ஜபிக்கலாம்.அந்த ஜீவசமாதியினுள் உறைந்திருக்கும் மகானின் அருட்பார்வை வெகு விரைவில் கிட்டும்.

சிவாய நம

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!

அறுகம்புல்லை 
உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க 
வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். 
இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான 
திருநீறாகும். 

இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் 
கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. 
எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து 
கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. 
திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது.அந்தவகையில் 
உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் 
இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

இதைவிட மனித உடலிலே நெற்றி 
முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் 
வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை 
இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் 
அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

தனது உடலிலே சாம்பல் 
சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி 
இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் 
தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் 
மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில்நீர்த்தன்மையை உறிஞ்சவல்லதிருநீற்றை 
அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு 
அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் 
போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு 
மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. 

இதைவிட இரு புருவங்களுக்கும் 
இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால்அந்த 
இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே 
மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் 
போன்றவைஇடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் 
வெப்பத்தைநீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் 
முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற 
நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் 
சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது. 

சந்தனம் 
இரு புருவங்களுக்கும் இடையில்இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் 
ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு 
ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான 
முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை 
நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் 
காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் 
உண்டு பார்த்தீர்களா! 

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள 
நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும்சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் 
மனதில்ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் 
செய்தால் மனஒருமைப்பாடுதோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் 
புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் 
இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

இந்த 
உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா 
வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். 
மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் 
வென்றது விளக்கம் மறைந்தது. 

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்: 
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தைஈர்த்துக் கொள்ளலாம். 
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம். 
3.நெஞ்சுக்கூட்டின் 
மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, 
மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் 
பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் 
சூட்சுமம் அங்கு உள்ளது. மேலும் விபரமறிய:ஓஷோ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள் என்ற புத்தகத்தை வாசிக்கவும்.                                                                                                                         ஓம்சிவசிவஓம்