Wednesday, January 30, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-3


நரேனும் நண்பர்களும் ஒருவருக்கொருவர் கைரேகை பார்த்துக் கொள்வார்கள். எல்லாம் விளையாட்டுதான்! நரேன்தான் கைரேகை நிபுணர்! தன் கையிலுள்ள ஏதாவது ரேகை ஒன்றைக் காட்டி, இதோ பாருங்கள், இந்த ரேகை இருப்பதால் நான் துறவியாவேன் என்பான். இப்படித் தம்மிடம் தாத்தா ஒருவர் கூறியிருப்பதாகவும் தெரிவிப்பான். நரேன் நீ துறவியானால் நாங்களும் துறவிகளாகி விடுவோம் என்று நண்பர்கள் கூறுவார்கள். அந்த அளவிற்கு நண்பர் மனதில் இடம் பிடித்திருந்தான் அவன்.
நரேன் தனது பாட்டனாரான துர்க்கா பிரசாதின் சாயலை ஒத்திருந்தான். பாருங்கள், நானும் ஒருநாள் என் தாத்தாவைப் போல் சன்னியாசி ஆகிவிடுவேன் என்று தன் நண்பர்களிடம் கூறுவான்.
எல்லா தெய்வங்களிலும் நரேனுக்கு மிகவும் பிடித்திருந்தது சிவபெருமானைத்தான். அனைத்தையும் துறந்து, தியாகத்தின் வடிவமாக அவர் வீற்றிருப்பது அவனது மனத்தை மிகவும் கவர்ந்தது. சில வேளைகளில் அவனும் துணிகளை எல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு திரிவான். புவனேசுவரியின் மனத்தை இது நெருடும், எங்கே இவனும் இவனது தாத்தாவை போல் துறவியாகி போய்விடுவானோ! என்று கவலை கொண்டார் அவர். நரேன் என்ன இது? இது என்ன கோலமடா? என்று கேட்டார்.
'நான் சிவனாகிவிட்டேன், பார் நான் சிவனாகி விட்டேன். 'நானே சிவன்' என்றான் நரேன். அவன் தெரிந்து சொன்னானோ, தெரியாமல் சொன்னானோ! ஆனால் மிகவும் உயர்நிலை மந்திரமான 'நானே சிவன்' (சிவோஹம்) என்பதை அந்தக் குழந்தைப் பருவத்திலேயே சொன்னான் அவன்!
மாடியறையிலுள்ள சிவபெருமானின் முன்னால் சென்று அமரும் போதெல்லாம் நரேனுக்குத் தன் தாயார் அடிக்கடி கூறுகின்ற வார்த்தைகள் நினைவுக்கு வரும். தமது பூதங்களில் ஒன்றை சிவபெருமான் வெளியில் துரத்தி விட்டதாகவும், அந்தப் பூதம்தான் என்றும் அவர் குறிப்பிட்டது அவனை மிகவும் சிந்திக்கச் செய்தது; 'அப்படியானால் நான் ஏதோ குறும்பு செய்ததற்காக, ஏதோ தவறு செய்ததற்காக சிவபெருமான் என்னை அனுப்பிவிட்டாரா? என்று அவன் மனத்தில் சந்தேகமும் தவிப்பும் எழும்.
உடனே தாயிடம் ஓடிச் சென்று, 'அம்மா ஏனோ தெரியவில்லை. நான் எப்போதோ துறவியாக இருந்திருப்பேன் என்று தோன்றுகிறது. தவறுகள் செய்யாமல், குறும்புகள் செய்யாமல் இருந்தால் சிவபெருமான் மீண்டும் என்னை ஏற்றுக் கொள்வாரா?' என்று கேட்டான். அதற்கு நரேனின் கேள்வி புவனேசுவரியின் மனத்தை உறுத்தியது. 'இவனும் சிவபெருமானை நாடி, துறவியாகி விடுவானா?' என்ற சிந்தனை அவருள் எழுந்தது. 'அப்படி நடப்பதற்கில்லை. அதுபற்றியெல்லாம் சிந்திக்கின்ற வயது இவனுக்கில்லை என்று தெளிந்தார் அவர்.

Tuesday, January 29, 2013

மாடுகளுக்குத் தவிடு..மனிதர்களுக்கு சர்க்கரை !


சிவப்பு அரிசியின் சிறப்பையும், கறுப்பு அரிசியின் மகத்துவத்தை யும் இதுவரை பார்த் தோம். ஆனாலும், உல கின் 60% மக்கள் அன்றா டம் உண்பது (நம்மையும் சேர்த்துதான்) வெள்ளை அரிசியே!
வெள்ளை அரிசியும் நல்ல அரிசிதான். ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக ஹீரோவாக இருந்த இந்த அரிசி, வில்லனாக மாறியது அண்மையில் தான். முன்பெல்லாம், கைக்குத்தல் அரிசியையே நாம் உபயோகித்து வந் தோம். அப்போது நம்நாடு சர்க்கரை நோயில் உலகில் முதலிடத்தில் இல்லை. இன்று, உரல், உலக்கை என்பதெல்லாம், காட்சிப் பொருளாகவே மியூசி யத்தில் வைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கி றோம். இன்றைய தலை முறை இளம் பெண்களில் பலரும் உரல், உலக்கையை பார்த்திருக்கக்கூட மாட் டார்கள். 'மண்வாசனை’ திரைப்படத்தில் 'அரிசி குத்தும் அக்கா மகளே’ என்ற பாடலில், ரேவதி உலக்கையில் அரிசி குத்துவதை டி.வி-யில் பார்த்த என் மகள், 'அப்பா, இது என்ன game? (விளையாட்டு)’ என்று கேட்டாள்!
அரிசியில் நான்கு பகுதிகள் உண்டென்று சொல்லி இருக்கிறேன். வெளிப்பகுதியான உமியை நீக்கிவிடுகிறோம். அடுத்த பகுதியான தவிடுதான் முக்கியமான பகுதி. இதில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கி உள்ளன. தவிடு நீக்காத அரிசி, பழுப்பு அரிசி (Brown rice)என்றும், தவிடு நீக்கிய அரிசி வெள்ளை அரிசி (White rice) என்றும் அழைக்கப்படுகின்றன. கைக்குத்தல் அரிசி முதல் வகையைச் சார்ந்தது. இந்த இரண்டு அரிசிக்கும் உள்ள ஊட்டச்சத்து வித்தியாசங்களைப் பட்டிய லிட்டால், கைக்குத்தல் அரிசியின் சிறப்பு புரியும்.
ஒரு கப் (160 கிராம்) அரிசியில் உள்ள உணவுச் சத்துக்கள் பின் வரும் அட்டவணையில்...
நார்ச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்து, வைட்டமின் சத்துக்கள் போன்றவையெல்லாம் அதிகமாகவும், கொழுப்பு போன்றவை குறைவாக வும் இருக்க வேண்டும். அதுதான் உடலுக்கு நல் லது. இங்கே இரண்டு அரிசியையும் ஒப்பிட்டுப் பாருங்கள்... வெள்ளை அரிசியைவிட, பழுப்பு அரிசி பல மடங்கு உயர்ந்தது என்பது புரியும்!
அரிசியைத் தீட்டும் வழக்கம் ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்டது. பழுப்பு நிற அரிசியை பரிசுத்த வெள்ளை ஆக்கிவிட வேண்டும் என்கிற வெறியில் அவர்கள் அதைத் தீட்டினார்கள். முதலில் 2% தீட்டினார்கள். பின்னர் 5% தீட்டினார்கள். இப்போது 12% தீட்டப்படுகிறது. விளைவு - இன்றைய அரிசி மல்லிகைப் பூபோல வெண்மையாகக் கிடைக் கிறது. இதன் மற்றொரு விளைவு - ஏற்கெனவே சத்துக்கள் இழந்த வெள்ளை அரிசி, தற்போது அத்தனை சத்துக்களையும் மொத்தமாக இழந்து, வெறும் சர்க்கரைப் பண்டமாக மாறிவிட்டது.
1963-ல் நம் நாட்டில் வெறும் ஏழு ரப்பர் - ரோலர் அரிசி மில்கள்தான் இருந்தன. இதுவே 1999-ல் 35,088 மில்களாக அதிகரித்தன. தற்போது இன்னும் பெருகி, அரிசியை அரைத்துத் தள்ளு கின்றன. சர்க்கரை நோயின் தாக்கமும் இதே வேகத்தில் அதிகரித்து வருகிறது.
அரிசியின் வெளிப்புறத் தவிடு, மருத்துவ ரீதி யாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் கண்டு பிடித்த வரலாறு சுவையானது. 1884-ல் கானிரோ என்ற ஜப்பானிய கடற்படை டாக்டர், ஜப்பானில் இருந்து ஹவாய் நோக்கிப் பயணம் செய்தபோது, 9 மாத பயணத்தில் 169 கப்பல் ஊழியர்களில் 76 பேருக்கு 'பெரிபெரி' (Beriberi)என்கிற நோய் தாக்கி, 25 பேர் உயிர் இழந்ததைப் பார்த்தார் ('பெரிபெரி’ நோய் - நரம்பு பாதிப்பால் கை, கால் வலி, அசதி, பசியின்றி உடல் எடை குறைதல், இதய செயல்திறன் பாதிப்பு, மூச்சுத் திணறல், உடல் வீக்கம், மூளை பாதிப்பால் சுயநினைவு இழத்தல் முதலியவை ஏற்பட்டு இறுதியாக மரணம்கூட ஏற்படலாம்).
கப்பல் ஊழியர்களை பாதித்த இந்த நோயை ஆராய்ந்த டாக்டர் கானிரோ, அவர்களுக்கு  பட்டை தீட்டிய பச்சரிசி சாதம் மட்டுமே உணவாகக் கொடுக்கப்பட்டதை கவனித்தார். உடனே, இன்னொரு கப்பலில் இதே அளவு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு, இதே பயணத்தை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை, அரிசி தவிர, பார்லி, காய்கறிகள், மீன், இறைச்சி போன்ற உணவும் பரிமாறப்பட்டது. இதில் 14 பேருக்கு மட்டுமே 'பெரிபெரி’ வந்தது. ஆனால், யாரும் இறக்கவில்லை. ஆகவே, உணவுதான் இந்த வியாதிக்குக் காரணம் என்ற முடிவுக்கு வந்தார்.
ஆனாலும், அடுத்த 13 வருடங்கள் கழித்து, 1897-ல்தான் டாக்டர் கிறிஸ்டியன் ஜெக்மேன் மற்றும் டாக்டர் ஃபெரடரிக் ஹாப்கின்ஸ் ஆகியோர், அரிசியின் தவிடு கொடுத்தால்... இந்நோய் தடுக்கப்படும்/குணமடையும் என்று பரிசோதனைகள் மூலம் நிரூபித்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக, 1929-ல் இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
'பெரிபெரி’யின் தாக்கம் இப்போதும் ஆங் காங்கே உண்டு. ஆனாலும், வைட்டமின் பி1 வேறு உணவுகள் மூலம் கொஞ்சமாவது கிடைத்து விடுவதால், பெரும்பாலானோர் இதிலிருந்து தப்பிவிடுகிறார்கள். மதுவுக்கு பி1 சத்தை அழிக்கும் குணம் உள்ளதால், மதுவுக்கு அடிமையானோர் பலரிடம் இந்த வியாதியை அடிக்கடி பார்க்கிறோம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்... அரிசியைத் தீட்டுவதற்கு நமக்குக் கற்றுத் தந்த ஆங்கிலேயர்கள், தாங்கள் மட்டும் 'பெரிபெரி’, சர்க்கரை நோய் இவற்றில் இருந்து தப்பிவிடுகிறார்கள். அரிசியில் இருந்து பி1 மற்றும் சத்துக்களை நீக்கிய பிறகு, செயற்கையாக அவற்றை மீண்டும் அரிசியில் கலந்து விடுகிறார்கள் - சமையல் உப்பில் அயோடின் கலப்பதைப்போல (உப்பு கதை பற்றி பிறகு விரிவாக பேசுவோம்). மேலும், கோதுமை, நார்ச்சத்து மிக்க காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி போன்ற வற்றை அவர்கள் வெகுவாக எடுத்துக் கொள் கிறார்கள். நம்மவர்களோ, நோபல் பரிசு பெற்றுத் தந்த தவிட்டை மாடுகளுக்குக் கொடுத்துவிட்டு, தீட்டிய அரிசிச் சோற்றை உண்டு, சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.
அடுத்து நாம் கவனிக்க வேண்டியது - பச்சரிசியா... புழுங்கல் அரிசியா என்பது. பச்சரிசி என்பது பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசி. புழுங்கல் அரிசி என்பது, நெல்லை தண்ணீரில் ஊற வைத்து, அவித்து, அதன்பின் தீட்டுவது. இப்படி அவிக்கும்போது, தவிட்டுப் பகுதியில் உள்ள பல சத்துக்கள் சற்று உருகி, உள்ளே உள்ள மாவுப்பகுதியில் கலந்து விடுகின்றன. ஆகவே, தீட்டப்பட்ட பிறகுகூட, பச்சரிசியை விட, புழுங்கல் அரிசியில் நிறைய சத்துக்கள் மிஞ்சியிருக்கின்றன என்பதே உண்மை.
ஊட்டப்பொருட்களையும் இழந்து, நச்சுத் தன்மையை அடைந்துவிட்ட ஆலை அரிசியை நாம் ஏன் உண்ண வேண்டும்? கைக்குத்தல் அரிசிக்கு மாறலாமே? இல்லை, ஆலை அரிசி தான் விதி என்றால்கூட, குறைந்தபட்சம் புழுங்கல் அரிசிக்கு ஏன் மாறக்கூடாது?!
- நலம் வரும்...

Monday, January 28, 2013

அருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் மாவட்டம்.



> காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள், காசு இல்லை என்றால்
> குண்டடத்துக்கு வாருங்கள் என்று குண்டடம் ஸ்ரீ காலபைரவ வடுகநாதரின்
> சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார். பைரவர் என்றால்
> எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான
> ஸ்ரீ காலபைரவர்தான். புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய
> சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர் அங்கே குடி கொண்டுள்ள
> ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது அவரைத்
> தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.
>
> பைரவர் என்பவர், சிவனின் அம்சம். சேத்திரங்களை இவர் காப்பதால்
> சேத்திரபாலகர் என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு வேதங்களே நாய் வடிவில்
> பைரவருக்குக் காவலாக இருக்கின்றன. 64 வேறுபட்ட வடிவங்களில் பைரவர்
> திருமேனிகளைப் பிரித்துச் சொல்வார்கள். பைரவரை வழிபட்டால் அனைத்து
> வளங்களும் கிடைக்கம். பொன்னும், பொருளும் மன அமைதியும், மகிழ்ச்சியும்
> இவரை வழிபட்டால் கிடைக்கக் கூடிய சில செல்வங்கள். பதினெட்டு சித்தர்களுள்
> ஒருவரான கொங்கணர், பைரவரை வழிபட்டு அட்டமாசித்திகளை அடைந்தார். செம்பைத்
> தங்கமாக்குதல், எத்தகைய நோயையும் குணமாக்க வல்ல மூலிகை மருந்துகளைத்
> தயாரித்தல் போன்ற பிரமிப்பான கலைகளில் கொங்கணர் தேர்ந்து விளங்கியதற்கு
> பைரவரின் அருளே பிரதான காரணம்.
>
> பிரம்மதேவன் செருக்கடைந்து திரிந்த ஒரு காலம் உண்டு. அப்போது
> பிரம்மனுக்கு ஐந்து தலைகள் (நான் முகன் என்ற பெயர் பிற்பாடு வந்திருக்க
> வேண்டும். திசைகளின் காவலனாக, படைப்புத் தொழிலின் அதிபதியாக
> விளங்கியதாலும், ஐந்து தலைகளுடன் அவதரித்தாலும் உலக இரட்சகனான சிவ
> பெருமானையே மதிக்கத் தவறினார் பிரம்மன். அதோடு, தேவர்கள் மற்றும்
> முனிவர்கள் அனைவரும் தன்னையே வணங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
> இதுகுறித்து சிவனிடம் சென்று முறையிட்டனர் தேவர்கள். சினம் கொண்டார்
> சிவபெருமான். பிரம்மனின் செருக்கை அடக்கத் தீர்மானித்தார். தனது
> சக்தியால் பைரவரை உருவாக்கி, பிரம்மனின் தலைகளில் ஒன்றை கிள்ளி வரும்படி
> ஆணையிட்டார். வீராவேசத்துடன் புறப்பட்ட பைரவர், பிரம்மனின் ஐந்து
> தலைகளுள் நடுவில் இருந்த ஒரு தலையைத் தன் நகத்தால் கிள்ளி எடுத்தார்.
> இந்த பைரவர் அம்சமே வடுகதேவர். (வடுகன் என்றால் பிரம்மச்சாரி)
> புராணத்தில் சொல்லப்பட்ட தகவல் இது.
>
>
>
> குண்டடத்து பைரவரின் திருநாமம், ஸ்ரீகாலபைரவ வடுகநாத சுவாமி. இங்கு
> உறையும் ஈசனின் திருநாமம் விடங்கீஸ்வரர். விடங்கர் என்ற முனிவர் தவம்
> இருந்தமையால் இந்தப் பெயர். அம்பாள் திருநாமம். விசாலாட்சி, என்றாலும்
> பைரவர் கோயில், வடுகநாதர் கோயில் என்று சொன்னால்தான் பலரும் இந்தக்
> கோயிலை அடையாளம் காட்டுகிறார்கள். பைரவருக்கு சிறப்பான வழிபாடு நடந்து
> வருகிறது.
>
> கோவை - மதுரை நெடுஞ்சாலையில் குண்டடம் இருக்கிறது. கோவையில் இருந்து
> சுமார் 82 கி.மீ பல்லடம் - தாராபுரம் மார்க்கத்தில் இரண்டு ஊர்களுக்கம்
> நடுவில் இருக்கிறது குண்டடம். பல்லடத்தில் இருந்து சுமார் 28 கி.மீ
> தாராபுரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவு. மகாபாரத காலத்திலேயே குண்டடம்
> சிறப்புற்று விளங்கியதாக புராணம் சொல்கிறது. கீசகன் என்பவன், திரௌபதியின்
> மேல் மோகம் கொண்டதால் அவனைக் கொன்றான் பீமன். கொன்ற இடம்தான் குண்டடம்.
> இது பின்னாளில் “குண்டடம்” ஆகிவிட்டது.
>
> பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது மறைந்து வாழ்வது குண்டடத்தில் இருந்து
> சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள ருத்ராபதிக்கு வந்தனர். இங்குள்ள தொரட்டி
> மரத்தின் பொந்தில்தான் தனது வில், அம்பு போன்ற ஆயுதங்களை மறைத்து
> வைத்தான் அர்ஜுனன். இதனால் இந்த மரத்தின் அடியில் உள்ள விநாயகர் வில்
> காத்த விநாயகர் என்று இன்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சூழ்ந்த
> பகுதியில் 1990 ஆம் வருடம் கிணறு வெட்டும்போது பூமிக்கடியில் இருந்து
> கைப்பிடி இல்லாத வாள், யானையின் தந்தம், குதிரை மற்றும் யானையின் எலும்பு
> கிடைத்ததாகத் தொல்பொருள் துறையின் ஆய்வு ஒன்று சொல்கிறது.
>
> தற்போது உள்ள தாராபுரத்துக்கு அந்த நாளில் விராடபுரம் என்று பெயர்.
> அஞ்ஞாதவாசத்தின்போது விராடபுரம் அரண்மனையில் ஒரு வருடம் பேடியாக
> இருந்தான் அர்ஜுனன். ஒரு வருடம் முடிந்து திரும்பும்போது ஒரு நாள் சூர்ய
> உதய நேரத்தில் அர்ஜுனனின் பேடி வேஷம் நீங்கியது. இது நீங்கிய இடம்
> சூரியநல்லூர் எனப்படுகிறது. இது தாராபுரத்துக்கும் குண்டடத்துக்கும்
> நடுவே இருக்கிறது.
>
> புராணச் சிறப்பும் வரலாற்று முக்கியத்துவமும் குண்டடத்துக்கு அதிகம்
> உண்டு. அந்நியர்கள் ஆட்சிக் காலத்தில் ஆலயம் தொடர்பான பல ஆதாரங்கள்
> சிதைக்கப்பட்டுள்ளன. அந்தத் தாக்குதலில் பெரியகளந்தை ஆதீஸ்வரர்,
> எரகாம்பட்டி நாகலிங்க ஸ்வாமி, குண்டடம் வடுநாத சுவாமி, தாராபுரம்
> அகஸ்தீஸ்வரர், கூத்தம்பூண்டி சொர்ணேஸ்வரர் முதலான பல சுற்றுப்பட்ட
> ஆலயங்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. பல கல்வெட்டுக்கள் அழிந்து போய்விட்டன.
> ஆனாலும் பெருமைகளையும் மகிமைகளையும் தன்னகத்தே கொண்டு காலபைரவ வடுகநாத
> சுவாமி இன்றைக்கு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார் என்கிறார் குண்டடம்
> ஊர்ப் பெரியவர் ஒருவர்.
>
> தற்போது ஆலயம் அமைந்துள்ள பகுதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இலந்தை,
> அரசு போன்ற மரங்கள் நிறைந்த பெரும் வனமாக திகழ்ந்தது. இந்து வனம்
> எனப்பட்ட இந்தப் பகுதியில் விடங்கர் எனும் முனிவர் இந்த வனத்தில்
> சிவபெருமானை நினைத்து தவத்தில் இருந்தார். அப்போது அரக்கர்களால் தனக்குத்
> தொல்லைகள் நேரக்கூடாது என்று காசியில் உள்ள விஸ்வநாதரை மனமுருகப்
> பிரார்த்தித்தார் விடங்கர். அவரது பிரார்த்தனைக்கு இணங்க காலபைரவ
> மூர்த்திகளுள் ஒருவரான வடுக பைரவரை விடங்கரின் பாதுகாப்புக்காக
> அனுப்பினார் காசிவிஸ்வநாதர். இறைவன் இட்ட பணியைச் செவ்வனே செய்தார்
> வடுகபைரவர். முனிவரது தவத்துக்கு இடையூறு செய்யும் அரக்கர்களை அழித்தார்.
> இந்து வனத்தில் ஒரு இலந்தை மரத்தடியில் புற்றில் நிரந்தரமாகக்
> குடிகொண்டார் வடுகபைரவர். காலம் உருண்டது. அருகே ஓர் அரசமரத்தடியில்
> பாம்படீஸ்வரர், சுயம்புமூர்த்தியாகக் கிளம்பினார். இந்த வனம்தான் சேர
> நாட்டின் எல்லைப் பகுதி. எனவே சேர நாட்டைச் சேர்ந்த வாணிபச்
> செட்டியார்கள் வியாபார நிமித்தமாகப் புறப்பட்டு இரவுப் பொழுதை இந்த
> வனத்தில் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மதுரைக்குப் புறப்படுவார்கள்.
> ஒருமுறை சேர நாட்டைச் சேர்ந்த வியாபாரிகள் வண்டிகளில் மிளகு மூட்டைகளை
> எடுத்துப் புறப்பட்டனர். இரவு நேரம் நெருங்கவே இந்த வனத்தில் தங்கிவிட்டு
> மறுநாள் புறப்படத் தீர்மானித்தனர். அப்போது இலந்தை மரத்தின் அடியில்
> குடிகொண்டிருந்த பைரவர் கிழ வடிவம் எடுத்து மிளகு வியாபாரி ஒருவரை
> நெருங்கினார். உடல் நிலை சரியில்லை, கஷாயம் வைக்க வேண்டும். நீங்கள்
> கொண்டு வந்த மூட்டையில் இருந்து சிறிது மிளகு எடுத்துத் தாருங்கள்
> என்றார். வியாபாரிக்கு அதில் விருப்பம் இல்லை. எனவே மூட்டைக்குள்
> இருப்பது மிளகு இல்லை, பாசிப்பயறு என்றார். கிழவரும் அப்படியா என்று
> கேட்டுவிட்டு அங்கிருந்து மறைந்தார்.
>
> நாட்கள் ஓடின. மதுரைக்குப் போய்ச் சேர்ந்த வியாபாரிகள் பாண்டிய மன்னரிடம்
> ஒரு விலை பேசி சரக்குகள் அனைத்தையும் விற்றனர். மூட்டைகளை எடுத்துக்
> கிடங்கில் அடுக்குவதற்கு முன் அரண்மனைச் சிப்பந்தி ஒருவனிடம், ஒரு
> மூட்டையைப் பிரித்து உள்ளே இருப்பது மிளகுதானா என்று சோதிக்கும்படி
> பாண்டிய மன்னன் சொன்னான். அதன்படி சிப்பந்தி ஒரு மூட்டையைப் பிரிக்க,
> உள்ளே இருந்தவை பாசிப்பயறு. மிளகு வியாபாரிகளுக்கோ வியர்த்துவிட்டது.
> முகம் சுளித்த மன்னன், வேறொரு மூட்டையைப் பிரித்துப் பார்க்கச் சொன்னான்.
> அதிலும் பாசிப்பயறு. இப்படி எல்லா மூட்டைகளிலுமே பாசிப்பயறு இருப்பதைக்
> கண்ட மன்னன், சேர நாட்டு வியாபாரிகள் தன்னை ஏமாற்ற முயன்றதாகச் சொல்லி
> அவர்களுக்குத் தண்டனை தரத் தீர்மானித்தான். அப்போது, பைரவரின்
> திருவிளையாடல் நிகழ்ந்தது. எந்த வியாபாரியிடம் பைரவர் மிளகு கேட்டாரோ,
> அவருக்கு திடீரென சாமி வந்தது. மிளகு மூட்டைகளை பாசிப்பயறு ஆக்கியது
> நான்தான்டா என்றார் அந்த வியாபாரி. மற்றவர்கள் நம்பினாலும் மன்னன் இதை
> நம்பத் தயார் இல்லை. எனவே சாமி ஆடிய செட்டியாரைப் பார்த்து “எனக்கு
> இருப்பது இரண்டு குழந்தைகள். பெண்ணுக்கு வாய் பேச முடியாது. பையனுக்கு
> நடக்க முடியாது. இந்த இரு குழந்தைகளையும் நீ குணப்படுத்தினால் நீ சொல்வதை
> நான் நம்புகிறேன்” என்றார்.
>
> நான் குடிகொண்டிருக்கும் புற்றை அழித்து என்னை சந்நிதியில் குடியேற்று;
> அபிஷேகங்கள் செய்; மிளகு சாற்றி வழிபடு; உன் குழந்தைகளைக்
> குணப்பத்துகிறேன்” என்று வியாபாரி வடிவில் வந்த பைரவர் சொன்னார்.
> பாண்டியமன்னனும் அதை சிரமேற்கொண்டு சேரநாட்டு எல்லைக்கு வந்தான். இலந்தை
> மரத்தின் அடியில் புற்றில் குடி கொண்டிருக்கும் பைரவரை வெளியே எடுத்தான்.
> மண்டபம் கட்டி பிரதிஷ்டை செய்தான். பைரவருக்கு மிளகு சாற்றி வழிபட்டான்.
> பைரவர் அருளியபடியே, எட்டுநாட்களில் மன்னனின் குழந்தைகள் நலம் பெற்றன.
> இதனால் இந்த பைரவரை “பயறாக்கிய முத்துவடுகநாத சுவாமி” என்றும் அழைப்பது
> உண்டு.
>
> விடங்கர் தவம் இருந்த இடத்தில் விடங்கீஸ்வரர் இலிங்கத் திருமேனியை
> அமைத்தான். தவிர விசாலாட்சி அம்மன், கல்யாண சுப்ரமண்யர் மற்றும் பரிவார
> தேவதைகளை பிரதிஷ்டை செய்தான். ஏழு பிராகாரங்களையும் எட்டுத்
> தெப்பக்குளங்களையும் அமைத்தான். இந்த நிகழ்வுக்குப் பிறகு சாமி வந்து
> ஆடிய வியாபாரி பிரதிஷ்டை ஆன பைரவர் சந்நிதிக்குள் வழிபடுவதற்காக
> நுழைந்தார். ஆனால் திரும்பவே இல்லை. உள்ளேயே ஐக்கியமாகிவிட்டதாகக்
> கருதப்படுகிறது. இதுகுறித்து ஆலய அர்ச்சகர் நம்மிடம் சொல்லும்போது காவல்
> தெய்வமான பைரவருக்கே இங்கு காவலாக இருக்கிறார் செட்டியார். இதையே அவர்
> சந்நிதிக்குள் ஐக்கியமான நிகழ்ச்சி உணர்த்துகிறது. ஆதிசைவ
> சிவாச்சார்யர்கள், கொங்கு வேளாளர்கள், யாதவர்கள், வைசியர்கள், தேவர்கள்,
> பண்டிதர்கள், செங்குந்தர்கள் என்று பல தரப்பட்ட குலத்தாருக்கும் இது
> குலதெய்வக் கோயிலாக விளங்குகிறது. ஆலய விசேஷத் திருநாட்களில் இவர்கள்
> குடும்பத்துடன் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
>
> ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன் திருக்குளம். இராஜகோபுரம் தாண்டி உள்ளே
> நுழைகிறோம். விடங்கீஸ்வரர் மற்றும் விசாலாட்சி ஆகிய திருவுருவங்கள்
> கிழக்கு நோக்கியவை. விடங்கீஸ்வரருக்கு இரு பக்கமும் மகா கணபதி,
> பாலமுருகன் ஆகிய விக்கிரகங்கள்.
>
> காலபைரவ வடுகநாதரை வழிபட்டால் நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் விலகும்.
>
> விடங்கீஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா,
> துர்கை ஆகிய திருவுருவங்கள் அருள் பாலிக்கின்றன. தவிர சந்திரன், சூரியன்,
> நர்த்தன விநாயகர், பட்டக்காரர், கல்யாண சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர்,
> பலிபீடம், கருடாழ்வாருடன், கூடிய வரதராஜ பெருமாள், ஸ்ரீராமானுஜர்,
> ஆஞ்சநேயர், நவக்கிரகம் போன்ற பல சந்நிதிகளுடன் ஆலயம் விரிவாக
> அமைந்துள்ளது.
>
> இங்குள்ள சுப்ரமண்யர் சிலை, விசேஷமான ஓர் அம்சம். முருகனின் வாகனமான
> மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக இங்கு இடப்பக்கம் நோக்கி இருக்கிறது.
> சூர சம்ஹாரத்துக்கு முன் இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற
> வடிவம் இது என்கிறார்கள், சிற்ப சாஸ்திர வல்லுநர்கள். தலவிருட்சம் இலந்தை
> மரம்.
>
> திருவிழா:
>
> தேய்பிறை அஷ்டமியில் இவரை தரிசித்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
> அன்றைய தினம் மாலை நேரத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஹோமம் ஆகியவை
> நடைபெறும். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாத அஷ்டமி, பைரவாஷ்டமியாக
> விமரிசையுடன் 3 நாள் திருவிழா நடைபெறுகிறது. லட்சார்ச்சனை, சங்காபிஷேகம்
> என்று பிரமாதமாக இருக்கும்.
>
> கோரிக்கைகள்:
>
> பதினோரு மிளகு வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி எட்டு தீபங்களை
> ஏற்றி வைத்தால் நாம் வேண்டும் பிரார்த்தனை நிறைவேறும்.
>
> நேர்த்திக்கடன்:
>
> ஆஞ்சநேயருக்கு சாற்றுவது போல் இவருக்கு வடை மாலை சாற்றப்படுகிறது.
> உளுந்து, மிளகு ஆகியவை கொண்டு தயார் செய்யப்படும் இந்த வடை மாலை சாற்ற
> விரும்புவோர், ஆலயத்தில் பணம் கட்டினால் போதும். வெண்பொங்கல்
> நைவேத்தியமும் இவருக்கு விசேஷம். தேங்காய் மூடியிலும் வெட்டப்பட்ட
> பூசணித் துண்டிலும் எண்ணெய் ஊற்றி சில பரிகாரத்துக்காக
> விளக்கேற்றுகிறார்கள்.

காப்பி,குளிர் பானங்கள்,டீயால் விளையும் கேடுகள்


இந்த பதிவுகள் எல்லாம் எனக்குள் தோன்றிய கேள்விகளின் பதில்களே.வாத வைத்தியத்திற்கும்,வாதம் வகை 80 ற்கும் (கை கால் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கும்,பக்க வாதத்திற்கும்,கை கால் செயல்படாமல் இருக்கும் நிலைகளுக்கும்) சித்த வைத்தியர்கள்,சிறுநீர் பெருக்கிகளையும் (DIURETICS), பெருமலம் போக்கிகளையும் (PURGATIVES) ஏன் கொடுக்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.
அப்படி இருந்த போது அக்கு பஞ்சரில் இதற்கான கேள்விகளையும் அதற்கான விடையையும் கொடுத்தார்கள் எனது அக்கு பஞ்சர் குருநாதர்கள் ஆன நெல்லிக்குப்பம் திருDr M.N.சங்கர் , சேலம் ஷண்முகா மருத்துவமனையில் பணிபுரியும் திரு Dr ஜோசப்பால் , திரு Drஆன்டன்ஜெயசூர்யா(LATE) (CHAIRMAN MEDICINA ALTERNATIVA), ஆகியோர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.அவர்களுக்கு இந்த இடுகையை சமர்ப்பணமாக்குகிறேன்.
அக்கு பஞ்சரில் என்னை முனைவர் பட்டம் பெறச் செய்ததோடு மட்டுமில்லாமல் எனக்கு எல்லா அக்கு பஞ்சரின் அதி நுட்பங்களைக் கற்பித்தவர்கள் இவர்களே!அக்கு பஞ்சரில் என் கட்டுரையில் வித்துவத்துவம் ஏதேனும் தென்பட்டதென்றால் இவர்களே காரணம்.


காப்பிடீயால் பித்தம் அதிகரிப்பது மட்டுமல்ல,காப்பியிலும்டீயிலும் காஃபீன் என்ற நஞ்சு உள்ளதுகுடித்த எட்டு மணி நேரத்திற்கு மேல் இது ரத்தத்தில் இருந்து தன் கெடுதல் பணியை தொடர்ந்து நடத்துகிறது.
காப்பிக் கரைகள் நமது ஆடைகளில் பட்டாலே பல முறை துவைத்தாலும் போவதில்லை.அவ்வளவு தூரம் கரையை ஏற்படுத்தும் இவற்றை பல ஆண்டுகளாக குடித்து வரும் நம் குடல்களில் எவ்வளவு கறை படியும். யோசித்துப் பாருங்கள்.
சென்ற பதிவின் இடுகையின் திரு தோட்டக்காரன் அவர்களின் பதிலில் குறிப்பிட்டுள்ள விஷயத்தை இங்கே மிக விரிவாகத் தருகிறேன்.டீயில் கிரீன் டீ என்ற ஒன்று உண்டு.அது டீயின் கொழுந்து இலைகளை அப்படியே பறித்து நொதிப்பிற்கு உட்படுத்தாமல்,மிதமாக சூடாக்கப்பட்டு நொதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு நிழலில் உலர்த்தி தயாரிக்கப்படுகிறது. இதனால் அதில் உள்ள ’பாலி பீனால்கள்‘ சிதையாமல் பாதுகாக்கப்படுகிறது.இவை கேன்சரையே தடுக்கும், குணப்படுத்தும் வல்லமை உள்ளவை.
சைனாவில் தங்கள் குருமார்களுக்கு சீடர்கள் கொடுக்கும் குரு தட்சிணையே,இந்த டீதான்இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட இலைத்தேயிலையில் தயாரிக்கப்பட்டு எலுமிச்சம்பழச்சாறு சேர்க்கப்பட்டு இனிப்பு கலக்காமல் பரிமாறப்படுகிறது,என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த டீ மல்லிகை மணத்துடன் இருக்கும்.இந்த டீ கேன்சரைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட்(ANTI OXIDENTS) களை உள்ளடக்கியது.
நமக்கு டீ என்ற பெயரில் டீ இலைத் தூசிகள்தான்(DUST TEA)வழங்கப்படுகிறதுதனியாக செயற்கை மணம்,திடம்,நிறம் ஊட்டப்பட்டு வருகின்றன.இதில் போலிகள் வேறு.பல டீக்கடைகளில் பழைய டீத்தூளை வாங்கிச் சென்று மீண்டும் மேற்கண்ட மூன்றும் ஊட்டப்பட்டு புத்துணர்வுடன் திரும்பி வருகின்றன, நமக்கு புத்துணர்வூட்ட!குப்பையில் போட வேண்டியதை எல்லாம் வேளை தவறாமல் குடித்து வருகிறோம்.
மேலும் நம் உடலில் உள்ள அனைத்து எலும்புகளும் சுண்ணாம்பை (CALCIUM)அடிப்படையாக கொண்டது.இதுதான் நம் உடலைத் தூக்கி நிறுத்துகிறது.இந்த எலும்புச் சட்டகத்தை அரிப்புக்கு உள்ளாகாமல் காக்கவே நம்து இரத்தம் காரத்தன்மையோடு(BASE NATURE)உள்ளதாக இறைவனால் வைக்கப்பட்டுள்ளது.அதன் காரத்தன்மை மாறி அமிலத்தன்மைக்கு(ACID NATURE)மாறினால் எலும்புகள்ஆங்காங்கே அரிக்கப்படும்,குறிப்பாக மூட்டுகளில் இந்த சேதம் அதிகம் இருக்கும்.
இதில் உடலின் இரத்தத்தை காரத்தன்மையில் இருந்து அமிலத் தன்மைக்கு மாற்றும் முக்கிய மூன்று காரணிகளைப் பார்ப்போம்.
(A) குளிர் பானங்கள்
(B) நன்றாக மென்று உமிழ் நீரோடு கலந்து தின்னாமல் அப்படியே விழுங்குவது 
(C) வேகங்கள் ஐந்தனுள் ஒன்றான சிறுநீரை அடக்குவதால் ஏற்படுவது
இந்தக் காரணிகள் எப்படி இந்தப் பிரச்சினைகளை உண்டாக்குகின்றன. அவற்றை விளைவுகளை எப்படி மாற்றுவது,அல்லது தடுப்பது என்று பார்ப்போம் 

(A)முதலில் குளிர் பானங்களுக்கு வருவோம்.இவை பொதுவாகவே கரிய மில வாயுவை பானங்களில் கரைத்தே குளிர் பானங்கள் உருவாக்கப்படுகின்றன. கரியமில வாயு(CARBAN DI OXIDE )தண்ணீரில் கரைந்தால் அமிலமாகவே மாறுகிறது (CARBOLIC ACID).  இவைகளை அருந்துவதால் நம் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
அதன் தொடர்ச்சியாக வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பால் வயிற்றின் இரைப்பை,குடல் இவற்றில் புண் உண்டாகி,அதன் பின் இரத்தத்தில் அமிலத் தன்மை உயர்கிறது.
(B)மேலும் நாம் உண்ணும்போது சீரணம் நம் கைகளில் ஆரம்பித்து வாயில் நடைபெற்று வயிற்றில் முடிவடைகிறது என்பார்கள்.
இதையே நம் ஆன்றோர்கள் நொறுங்கத் தின்றால் நூறு ஆயுசு என்பார்கள்.
வாயில் காரத்தன்மை என்ற {சுண்ணாம்புச் சத்தை (CALCIUM)} அடிப்படையாகக் கொண்ட வாணி என்றழைக்கப்படும் எச்சில் என்ற உமிழ்நீர் உள்ளது.
நாம் உண்ணும் உணவினை நன்றாக மென்று அரைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால்,அது வயிற்றில் போய் உணவு வயிற்றில் இரைப்பையில் உள்ள அமிலங்களால்(HYDRO CHLORIC ACID) கரைக்கப்பட்டு சீரணம் ஆன பின் உமிழ்நீரில் உள்ள காரத்தன்மை{சுண்ணாம்புச் சத்தை( CALCIUM) அடிப்படையாகக்
கொண்டது அமிலத்துடன் வினைபுரிந்து அதை சமநிலைப்படுத்துகிறது.

இப்படி இல்லாமல் அப்படியே உணவை விழுங்கும்போது உணவுடன் உமிழ்நீருடன் கலக்காததால் வயிற்றில் இரைப்பையில் உணவு சீரணமான பின்,சீரணத்துக்குப் பின் எஞ்சி இருக்கும் அமிலம் உமிழ் நீர் அதை நிலைப் படுத்த இல்லாததால் குடலின் சுவர்களை அரிப்பதோடுநெஞ்செரிச்சல் (HEART BURNING) போன்றவைகளை உண்டாக்கிஇரத்தத்தின் அமிலத்தன்மையையும் உயர வைக்கின்றன.
(C)மூன்றாவதாக இங்கு நான் குறிப்பிடுவது நம் உடலில் வேகங்கள் ஐந்து. இவை 96 உடற் தத்துவங்களில் அடங்கும்.அவை வேகமாக வெளியேற முயற்சிக்கும்போது அடக்குவதனால் வரும் விளைவுகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
1)இருமல்
2)தும்மல்
3)விந்து வெளியேறுதல்,நாதம் வெளியேறுதல்
4)மூத்திரம் வெளியேறுதல்
5)மலம் வெளியேறுதல்
இதில் நான்காவது வேகமான மூத்திரத்தை அடக்குவதால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி மட்டும் பார்ப்போம்.வேகமாக வெளியேற முயற்சிக்கும் மூத்திரத்தை அடக்குவதால்,சிறுநீரகம் தனது கழிவுகளை வெளியேற்றும் பணியின் மூலம் வெளியேற்றி தேக்க இடம் இன்றி சிறு நீர்ப்பை நிறைந்து இருப்பதால்அது தன் வேலையான கழிவு அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது.உடனே நமது உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்கிறது.
நமது சிறுநீரகம் நம் இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மையை குறிப்பாக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்ற உடலுக்கு தீங்குபயப்பவற்றை  நீக்கிகாரத்தன்மையை நிலை நாட்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது.இதைப் பற்றி ஏற்கெனவே முன்னொரு பதிவில் விளக்கமாக எழுதிவிட்டேன்.
யூரிக் அமிலம் (URIC ACID&ETC) போன்றவற்றின் அளவு உயர்வதன் விளைவாகஇந்த அமிலங்கள் மூட்டுகளில் உள்ள இரத்த நாளங்கள் நெளிந்து வளைந்து செல்லுவதால் அங்கேயே படிந்துவிடுகின்றன. பின்பு அந்த மூட்டுக்களை அரிக்க ஆரம்பிக்கின்றன.இதனால் மூட்டுக்கள் தேய்ந்துவிடுகின்றன. அதனால் மூட்டுக்களில் வலி ஏற்படுகின்றது.
எனவேதான் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாது என்ற வழக்குச் சொல் வந்தது.
மூட்டுகள் என்பவை தேய்ந்து போக கதவின் கீல்கள் அல்ல.அவற்றைத் தேய்மானம் செய்யும் காரணிகளை நீக்கினாலே,உடல் தன்னைச் சரி செய்து கொள்ளும் தன்மை வாய்ந்தது,மூட்டுத் தேய்மானம் என்பதே இல்லாமல் போய்விடும்.மேலும் தக்காளியில் அதிக யூரிக் அமிலம் (URIC ACID&ETC) இருப்பதாலேயேமூட்டு வலி உள்ளவர்கள் அதை சாப்பிடுவதிலிருந்து தவிர்க்கும்படி வைத்தியர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதையே ஆங்கில வைத்தியத்தில் மூட்டுத் தேய்மானம் என்று கூறி மூட்டுகளில் போய் வைத்தியம் பார்ப்பதும்.வோவிரான் ஜெல்,மற்றும் வோவிரான் ஊசி மருந்துகள் பொடுவதால்,சிறுநீரகத்தின் பழைய பாக்கியிருக்கும் வேலையோடு புதியதாக இந்த மருந்தின் தொல்லையைச் சமாளிக்கும்அதிக வேலைப் பளுவின் காரணமாக சிறுநீரகம் பழுதடைகிறது.நோய் மேலும்மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லுகிறது.
வைத்தியன் காரணம் புரிந்து வைத்தியம் செய்தாலே குணம் கிடைப்பது தாமதம் ஆகும்.காரணமே புரியாமல் வைத்தியம் பார்த்தால் என்ன ஆகும்.
காரணமே புரியாமல் வைத்தியம் புரிவதையே ஆங்கில வைத்தியம் செய்கிறது.
சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல இடம் அதிகம் எடுத்தால் படிப்பவர்க்கு சலிப்பு தட்டும் எனவே,இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் பாருங்கள்.