Sunday, September 16, 2012

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05



சிவமயம்



திரு ஆருரா! தியாகேசா ! 

நால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வழிபாட்டு முறை 

உலகத்தில் உள்ள சிவனடியார்களும் , திருஆரூர் பெருமானின் திருஅருள் துணை கொண்டு தினசரி மாலை 7 மணி முதல் 7.05 மணி வரை வடதிசை நோக்கி அவரவர் விண்ணப்பங்கள் , வேண்டுதல்களை இந்த குறிபிட்ட நேரத்தில் வைத்து கூட்டு வழிபாடு பிரார்த்தனைகளை கடைபிடிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள்.

இந்த வழிபாடு நேரத்தில் சொல்லவேண்டிய பதிகங்களும் , முறைகளும்

1 எந்த இடத்திலும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வட திசை நோக்கி பிரார்த்தனை செய்யலாம் .( கைலாயம் வட திசையில் இருப்பதினால் )

2 முதலில் அவரவர் விண்ணப்பங்களை பெருமானை நினைத்து வைக்க வேண்டும்

3 நால்வர் துதி சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும் .

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,, 

4 சிவாய நம முடிந்தவரை சொல்ல வேண்டும்.

5 வான்முகில் வழாது பெய்க என தொடங்கும் வாழ்த்து சொல்லி முடிக்க வேண்டும்.

வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம் 


திருஆருரா வீதிவிடங்கா

நாமும் நாடும் வளம் பெற தினசரி 7 மணி அளவில் ஒரு ஐந்து நிமிடம் ஆரூர் பெருமான் உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருள் புரிய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம் .

மேலும் தொடர்புக்கு :

சிவத்திரு . மாரிமுத்து ஐயா
திருஆரூர் 
            9842545536      

காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்களின் பட்டியல்

கோவில்களின் நகரம் காஞ்சிபுரம் ஆகும்.சுமார் 10,000 ஆண்டுகளாக இருக்கும் காஞ்சிபுரத்தில் புராணகாலத்தில் ஒரு பல்கலைக்கழகம் செயல்பட்டுவந்திருக்கிறது.தமிழ்ப்பண்பாடே இன்றைய இந்துப்பண்பாடாக பரிணமித்திருக்கிறது.காஞ்சிபுரத்தில் ஒரு வருடம் முழுவதும் ஏதாவது ஒரு கோவிலில் ஏதாவது ஒரு திருவிழா நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.கும்பகோணத்தைப்போலவே காஞ்சிபுரமும் புராதனமும்,பெருமையும் நிறைந்த நகரம் ஆகும்.காஞ்சிபுரத்தில் இருக்கும் புராதனமாக 190 சிவாலயங்களை சிலபல ஆன்மிக அன்பர்கள் தொகுத்துள்ளார்கள்.அந்த தொகுப்பை அறியவும்,பதிவிறக்கம் செய்யவும் இங்கே சொடுக்கவும்.ஓம்சிவசிவஓம்

பழங்கள் தரும் பலங்கள்


ழங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பேசாத உணவியலாளர்கள் இல்லை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில் தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தைத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.
 ஆனால், எந்தப் பழம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது சிக்கலான கேள்வி. ஏனென்றால், எது நல்ல பழம் என்று உங்களுக்குப் பரிந்துரைப்பதற்குப் பின் பல்லாயிரம் கோடிச் சந்தை இருக்கிறது. பல நாடுகளின் வியாபாரக் கனவுகள், திட்டங்கள் இருக்கின்றன. எனக்கு அப்படி எல்லாம் திட்டங் கள் ஏதும் இல்லை என்பதால், உண்மையை நேர்மையாகச் சொல்கிறேன்.
தங்கம் விலை ஏறிக்கொண்டேபோவது செய்தியாகிறது. ஆனால், ஆப்பிள் விலை ஏறிக்கொண்டேபோவதை நீங்கள் கவனிக்கிறீர்களா? கடந்த வார நிலவரம்... பழ விற்பனை அங்காடிகளில் பளபளக்கும் ஆப்பிள் விலை ஒரு கிலோ 200 ரூபாய். ஆனால், பழ வண்டிக்காரரிடம் பூவன் வாழைப் பழம் ஒரு ரூபாய்க்கும் கற்பூரவல்லி வாழைப் பழம் இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கிறது. இந்த ஆப்பிள் விலை மட்டும் பறக்கிறதே... எப்படி? அமெரிக்க ஆப்பிள், சீன ஆப்பிள் என்று விதவிதமாக வந்து இறங்குகின்றனவே எப்படி? எல்லாம் சந்தை உருவாக்கி இருக்கும் மாயை.
ஆப்பிள் சத்துள்ள பழம்தான். ஆனால், அதைவிடவும் பல மடங்கு சத்துள்ள பழங்கள் நம்முடைய நாட்டுப் பழங்கள் (பார்க்க: ஒப்பீட்டு அட்டவணை). தவிர, உணவியல் தொடர்பான ஆராய்ச்சிகள் திரும்பத் திரும்பச் சொல்லும் விஷயம்... நீங்கள் எந்த மண்ணில் வாழ்கிறீர்களோ, அந்த மண்ணில் விளையும் காய், கனிகளே உங்கள் உடலுக்கு மிகச் சிறந்த பலன்களைத் தருபவை என்பது. சரி, நாட்டுப் பழங்களில் எங்கும் கிடைக்கும் தலையாய ஐந்து பழங்களைப் பார்ப்போமா?
மலிவு விலை வாழையில் இருந்தே தொடங்கலாம். 'வாழைப் பழமா? ஐயையோ! வெயிட் போட்டுடும். அப்புறம் என் ஜீரோ சைஸ் என்னாவது?’ என்று பதறுவோருக்கு ஒரு செய்தி. சின்ன வாழைப் பழம் வெறும் 60-80 கலோரிதான் தரும். ஆனால், கூடவே, எலும்புக்கு கால்சியம், இதயத்துக்கு பொட்டாசியம், மலமிளக்க நார்ச்சத்து, மனம் களிக்க ஹார்மோன் ஊட்டம், உடனடியாக உடலுக்கு ஆற்றல் தேவைப்படும்போது குளுக்கோஸ் தரும் ஹைகிளைசிமிக் என அது தரும் பலன்களில் பல இங்கிலீஷ் கனிகளில் கிடையாது.
அதுவும் வாழையின் ஒவ்வொரு ரகத்துக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. பாலூட்டியும் போதாதபோது, திடீர் திட உணவுக்குத் திரும்பும் பச்சிளம் குழந்தைக்கு நாகர்கோவில் மட்டி அல்லது கூழாஞ்செண்டு ரகம் சிறந்தது. நடுத்தர வயதுக்காரர்களுக்கு, நார் நிறைய உள்ள திருநெல்வேலி நாட்டு வாழைப் பழம் சிறந்தது. மெலிந்து நோஞ்சானாக உள்ள குழந்தை எடை அதிகரிக்க வேண்டுமானால், நேந்திரன் வாழைப்பழம் சிறந்தது. மூட்டெல்லாம் வலிக்கிறது; குறிப்பாக குதிகாலில் வலிக்கிறது என்போருக்கு செவ்வாழைப் பழம் சிறந்தது. இப்படி குன்னூர் மலைப்பழம், கிருஷ்ணகிரி ஏலக்கி என இதன் ரகங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ள தனிச் சிறப்புகளைப் பட்டியலிடலாம். அதிலும் இந்த மொந்தன் பழம் இருக்கிறதே... அது தரும் குளுமைக்கு ஈடு இணையே இல்லை. தினமும் ஒரு மொந்தன் பழத்தைக் கனியவிட்டுச் சாப்பிட்டால், பல நோய்கள் உங்கள் பக்கம் தலை வைத்தும் படுக்காது. குறிப்பாக, மூல நோய். ஆனால், அதன் முரட்டுத் தோலை உறித்துச் சாப்பிட அலுத்துக்கொண்டு, உரிக்க ஏதுவாக மஞ்சளிலும் சேர்த்தி இல்லாமல், பச்சையிலும் சேர்த்தி இல்லாமல் மேக்கப் போட்டு வந்திருக்கும் ஹைப்ரீட் பெங்களூரு வாழையைச் சாப்பிடுகிறோம். இனி, காய்கறிக் கடைப் பக்கம் போனால், வறுக்க வாங்கும் பெரிய வாழைக்காயைப் பழுக்கவைத்துச் சாப்பிடுங்கள். மொந்தன் அதுதான் ஐயா!
ஒருகாலத்தில், 'கூறு போட்டு வித்துக்கோ; அல்லது கூவிக் கூவி வித்துக்கோ’ என்று ஒதுக்கப்பட்ட பழங்களுள் ஒன்று கொய்யா. ஆனால், இன்று உலகம் எங்கும் சிவப்புக் கொய்யாவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறார்கள். இந்தியா வில் கிடைக்கும் பழங்களிலேயே அற்புதமானது என்று கொய்யாவைச் சுட்டிக் காட்டுகிறார்கள் இந்திய உணவியல் கழக விஞ்ஞானிகள். ஆமாம், ஆப்பிளையும் கொய்யா தோற்கடித்துவிட்டது. ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள், உயிர்ச் சத்து, நார்ச் சத்து, இன்னும் பல கனிமச் சத்துகள் எனக் கொய்யாவின் மெய்யான விஷயங்களில் உணவு உலகம் அசந்துபோயிருக்கிறது.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கே ஊட்டம் கொடுக்க, நோயை எதிர்த்து அவர்கள் போராடச் சிறந்த பழமாக எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் தெரியுமா? நெல்லிக்காய்.
பேராசிரியர் தெய்வநாயகம் தலைமையிலான ஆய்வுக் குழுவினர், 'நெல்லி லேகியத்தை வைத்து மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வுகள் நல்ல ஊக்கம் அளிக்கின்றன!' என்கின்றனர்.
பழங்களின் ராணி என்று மாதுளையைச் சொல்வார்கள். புற்றைத் தடுக்கும் ஆற்றலும் ரத்தத்தில் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலும் மாதுளைக்கு உண்டு. உடனே, பளபளப்பான ஆப்கன் மாதுளையை மனக் கண்ணில் கொண்டுவராதீர்கள். புளி மாதுளை, நாட்டு மாதுளை என்று கேட்டு வாங்குங்கள்.
நம் மண்ணில் பிறந்த இன்னோர் அற்புதப் பழம் எலுமிச்சை. வைட்டமின் சி சத்தும் கனிமங்களும் நிறைந்த இந்தப் பழம் உடலின் பித்தத்தைத் தணிக்கக்கூடியது என்று தமிழ் மருத்துவம் நெடுங்காலமாகக் கொண்டாடுகிறது. சாதாரணத் தலைச்சுற்றல், கிறுகிறுப்புப் பிரச்னை முதல் மனப்பதற்றம் / பிறழ்வு வரையிலான பல பித்த நோய்களுக்கு எலுமிச்சை நல்ல மருந்து.
மா, பலா, வாழை, நாவல், நெல்லி, இலந்தை இவை மட்டும்தான் நம் அன்றைய கனி ரகங்கள் என்று நினைத்திருக்கிறோம். அப்படி அல்ல. மணத் தக்காளிப் பழம், கோவைப் பழம், தூதுவளைப் பழம் என்று ஏராளமான பழங்கள் நம்மிடம் உண்டு. இந்தப் பழங்கள் ஒவ்வொன்றுக்கும் தனி வரலாறும் ஏராளமான மருத்துவக் குணங்களும் உண்டு. மெழுகு பூசப்பட்ட ஆப்பிள், பூச்சிக்கொல்லிகளில் நனைக்கப்பட்ட திராட்சை என்று வந்தேறிகள் விட்டுச்சென்ற மாயையில் இருந்து வெளியே வந்தால்தான், அவை எல்லாம் உங்கள் கண்களுக்குப் புலப்படும்.

Friday, September 14, 2012

உங்களது சிந்தனைக்கு ஒரு ஆழமான கருத்து!!!


நாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற வேண்டும்!!! ஏன் தெரியுமா?


தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும் நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக மாறிக்கொண்டிருக்கிறோம்;
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.

உங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை!!!


இதை ஒரு பென் டிரைவ்வில் காப்பி செய்யவும்.உங்களால் முடிந்த அளவுக்கு   ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக அருகிலிருக்கும் அச்சகத்தில் அச்சடிக்கவும்;எதிர் வரும் சனிப்பிரதோஷத்தன்று(13.10.2012, 27.10.2012) உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இந்த ஆயிரம்  பிரதிகளை விநியோகிக்கவும் அல்லது ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கவும்;
ஒரு வேளை இந்த நோட்டீஸை காப்பி செய்ய முடியாத பட்சத்தில் WANTED SWARNA BAIRAVAR NOTICE COPY என்று  subject இல் குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பவும்.அதில் உங்கள் முழு முகவரியைக்குறிப்பிடவும்.ஒரு வாரத்துக்குள் இந்த நோட்டீஸின் பிரதிகள் உங்கள் வீடு தேடி வரும்.

முயற்சி செய்வோமா?

ஓம்சிவசிவஓம்

சீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு!!!




ஸ்ரீமஹாவிஷ்ணு,வாமன அவதாரம் எடுத்து மகாபலியை அடக்கினார்.அவர் வெற்றிபெற்றப் பின்னர் அகங்காரம் குறையாமல் பிரபஞ்சம் நடுங்கத் திரியலானார்;தேவாதிதேவர்களும்,முனிவர்களும் ருத்ரன் மூலமாக சதாசிவனிடம் முறையிட்டனர்;சதாசிவம் வடுகநாதராக அகங்காரம் கொண்டு திரிந்த திருமாலை மார்பில் அடித்து வீழ்த்தினார்;அப்படி வீழ்ந்த திருமால் பூமியில் வீழ்ந்தார்.(வடுகநாதர் என்றால் பைரவர் என்று பொருள்)

பிறகு இலக்குமிதேவியின் மாங்கல்யப்பிச்சைக்கு மனமிரங்கினார்;பூமியில் வீழ்ந்த திருமாலை உயிர்ப்பித்தார்.பின்பு,திருமாலின் அகங்காரமான தோலையும்,முதுகுத் தண்டையும் வடுகநாதர் என்ற பைரவர் எடுத்துக்கொண்டார்;திருமாலின் வாமன அவதாரத்தின் தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் கொண்டார்.அப்படி எடுத்துக் கொண்டதால்,வடுகநாதராகிய பைரவப்பெருமான் தண்டபாணி,சட்டநாதர்,சட்டைநாதர்,ஆபதுத்தோரணர் என பலவிதமான பெயர்களில் புகழப்பட்டார்;அவ்வாறு தோலை சட்டையாகவும்,எலும்பை கதையாகவும் அணிந்து கொண்ட இடமே நமது பூமியில்,நமது தமிழ்நாட்டில் இருக்கும் சீர்காழி!!! அவ்வாறு வாமன அவதாரத்தின் தோலை சட்டையாக அணிந்த போது,அது வடுகநாதர் என்ற பைரவரின் கால்முட்டிவரைதான் வந்ததாம்.ஏனெனில்,வாமன அவதாரம் எடுத்த திருமால்,ஓங்கி உலகளந்த உத்தமரல்லவா?

இந்தக்கோவிலில் தனிக்கட்டுமனையில் ஸ்ரீசட்டைநாதர் எழுந்தருளியுள்ளார்.சட்டைநாதருக்கு நாய் வாகனம் இல்லை;இரு மருங்கிலும் பூதகணங்கள் இருக்கின்றன.
சட்டைநாதர் வழிபாட்டின் தலைமையிடம் சீர்காழி.கட்டுமலையில் மேல் உள்ள சட்டைநாதர் திருமேனி,அத்திமரத்தால் செய்யப்பட்டதால்,இத்திருமேனிக்கு அபிஷேகங்கள் நடப்பதில்லை;அபிஷேகங்கள் நேர் கீழே உள்ள பலிபீடத்திற்கே நடக்கின்றன.வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூஜையில்,சிறப்பாக சட்டைநாதருக்கு புனுகு சட்டம் பூசப்படுகிறது.அடுத்த வெள்ளியன்று,இந்த புனுகுடன் விபூதி கலந்து பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது.
மேலும் நவபாஷாணம் கலந்த சுதையிலான சட்டைநாதர், ஆகாசபைரவராக விமானத்தில் எழுந்தருளியுள்ளார்.இங்கு தெற்கு கோபுரத்தின் இடதுபக்கத்தில்,வடக்கு நோக்கிய வலம்புரி மண்டபம் இருக்கிறது.இது அஷ்டபைரவர்களின் தனிக்கோவிலாகும்.இங்கே அஷ்ட பைரவர்களும்,யோக நிலையில் காட்சியளித்துவருகிறார்கள்.வெள்ளிக்கிழமை மற்றும் அஷ்டமி நாட்களில் மிகச் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.இந்த அஷ்ட பைரவர் கோவிலில் உள்ள ஊஞ்சல்,முட்குறடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.இந்தக் கோவிலில் ஆண்கள் சட்டை அணியாமல் திறந்தமேனியாகவும்,பெண்கள் மலர்களை அணியாமலும் செல்ல வேண்டும்;இங்கு நெய்தீப ஆராதனை மட்டும் நடைபெற்றுவருகிறது.
சீர்காழியில்,இந்த திருக்கோவிலின் மேலரதவீதியில் (பைரவன் கோடியில்) மேற்கு நோக்கி பைரவருக்கு மற்றும் ஓர் தனிக்கோவில் இருக்கிறது.மாடவீதியின் தெற்குப்பகுதியில் கண்நாதர் கோவில் என்று பலிபீடமாக வழிபடப்பட்டுவருகிறது.
நன்றி:வைரவ விஜயம்,பக்கங்கள்45,46.
ஓம்சிவசிவஓம்


Thursday, September 13, 2012

உங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை!!!




இந்த இரண்டையும் ஒரு பென் டிரைவ்வில் காப்பி செய்யவும்.உங்களால் முடிந்த அளவுக்கு இரண்டு பக்கமும் அச்சடிக்கும் விதமாக ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக அருகிலிருக்கும் அச்சகத்தில் அச்சடிக்கவும்;எதிர் வரும் சனிப்பிரதோஷத்தன்று(13.10.2012, 27.10.2012) உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் இந்த ஆயிரம்  பிரதிகளை விநியோகிக்கவும் அல்லது ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கவும்;                                             ஒருவேளை உங்களுக்கு இந்த நோட்டீஸ்கள் சரியாக பதிவிறக்கம் ஆகவில்லையெனில்,WANTED BIT NOTICE COPY என்று subject இல் குறிப்பிட்டு மின் அஞ்சல் அனுப்பவும்.அந்த மின் அஞ்சலில் உங்களின் அஞ்சல்(தபால்)முகவரியை அனுப்பி வைக்கவும்.கூரியரில் இந்த பிரதிகள் சில ஒரு வாரத்துக்குள் அனுப்பி வைக்கப்படும்.


முயற்சி செய்வோமா?

ஓம்சிவசிவஓம்