Friday, August 24, 2012

கணவன் மனைவி பிரச்னையை தீர்த்து வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு!!!


அந்த அண்ணனை எனக்கு சுமார் 15 ஆண்டுகளாகத் தெரியும்.அவரது திருமணத்துக்கு முன்பிருந்தே நல்ல அறிமுகம்.எப்போதும் சிரித்த முகம் தான் அவரை நினைத்ததும் மனதில் தோன்றும்;ஆனால்,எப்போது எதற்காக கோபப்படுவார் என்பதை யாராலும் யூகிக்க முடியாது;அவரோடு நெருங்கிப் பழகி சுமார் 5 வருடங்களில் அவரது மனோபாவத்தை முழுமையாக புரிந்து கொண்டேன்.தற்போது அவருக்கு இரண்டு மகள்கள்;ஒரு மகள் பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் இருக்கிறாள்;இன்னொரு மகள் பத்தாம் வகுப்பை நெருங்கிக்கொண்டிருக்கிறாள்.அண்ணியோ அரசு ஊழியர்.

இந்த நிலையில் எம்மிடம் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை தட்சிணை கொடுத்து வாங்கினார்;பிரேம் போட்டதும்,என்னை வீட்டுக்கு அழைத்தார்;அவரது வீட்டுக்குள் உரிமையோடு செல்லும் ஒருசிலரில் நானும் ஒருவன்;அவரது வீட்டுக்குள் சென்றால்,நாம் இருப்பது இந்தியாதானா? என்ற அளவுக்கு பிரம்மாண்டமும்,செல்வச் செழிப்பும் நம்மை மிரளச் செய்யும்;ஆனால்,பழகுவதற்கு மிகவும் எளியவர்;அதே சமயம் அவ்வளவு எளிதில் அவரை நெருங்கிவிட முடியாது;ஆரம்ப கட்டத்தில் அறிமுகமாகும் எவரிடமும் திமிராகத் தான் பேசுவார்;இது அவரது ஆளுமைத்திறனில் இருக்கும் பாதுகாப்புக் கேடயம் ஆகும்.ஏமாற்றுபவர்களிடம் பிராடு மாதிரியே பேசுவார்;ஆன்மீக வாதிகளிடம் உண்மைத்தன்மை இருப்பதை உறுதி செய்துவிட்டால்,அளவற்ற பணிவு அவரிடம் தலைதூக்கும்;அவரை சரியாக யாராலும் புரிந்து கொள்ளமுடியாது.
இந்நிலையில் பிரேம் செய்யப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வைத்துக்கொண்டு அண்ணி,மகள்கள் முன்னிலையில் ஒருமுறை சொர்ண பைரவர் வழிபாட்டை செய்து காட்டச்  சொன்னார்.நானும் அதே போல பைரவர் வழிபாடு செய்து காட்டினேன்;முடிவில் அண்ணியும் இருமகள்களும் நிறைய அதே சமயம் நுணுக்கமான சந்தேகங்கள் கேட்டனர்.அதற்கு விளக்கங்களை விரிவாக தெரிவித்தேன்.மூத்த மகள் அதை அப்படியே குறித்துக் கொண்டார்.
தினமும் குடும்பமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பின்பற்றி வந்தது;14 மாதங்கள் கடந்தன;ஒரு வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு சில நிமிடங்கள் இருக்கும்;பிரதான சாலையில் இருந்து நான்கு தெருக்கள் கடந்து உள்ளே சென்றால்,ஒரு சந்து வரும்;அந்த சந்தில் இருக்கும் மூன்று வீடுகளில் நடு வீடு அவர்களுடையது;பிரதான சாலையில் இருந்து தெருவுக்குள் அந்த அண்ணனின் குடும்பம் நுழைந்தது;வழக்கத்துக்கு மாறாக அனைவருமே நடந்து வந்தார்கள்;திடீரென அந்த மாவட்டத்திலேயே இல்லாத ஒரு வெள்ளை நிற பைரவர்(நாய்தான்!) இவர்களின் கண்களுக்குத் தெரிந்தார்;இவர்களுக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்தார்;இவர்கள் தமது தெருவுக்குள் நுழைந்ததும்,வேகமாக இவர்களின் முன்பாக ஓடிய அந்த பைரவர் இவர்களின் வீடு  இருக்கும் சந்துக்குள் ஓடியது;இதை கவனித்த அந்த அண்ணனின் குடும்பமும் வேகமாக தமது வீடு இருக்கும் சந்துக்கு வந்தனர்;இவர்கள் சந்துக்குள் நுழைவதற்கும்,இவர்கள் முதல் நாள் இரவு வைத்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படையலை அந்த வெள்ளை நிற பைரவர் சாப்பிட்டு முடிப்பதற்கும் நேரம் சரியாக இருந்தது;இவர்கள் தமது வீட்டுக்குள் நுழைந்ததும்,அந்த சந்திலிருந்தே திடீரென மாயமாக மறைந்து போனது;

இந்த சம்பவம் நிகழ்ந்த 19 வது நாளில் அண்ணனுக்கு வர வேண்டிய கடன்கள் ஒவ்வொன்றாக வரத்துவங்கின;அதுவும் எப்படி? சுமார் 2 ஆண்டுகளாக அசலும்,வட்டியும் தராத ஒருவர் மொத்தமாக கடனை ஒரே தவணையில் அடைத்துவிட்டார்;எதற்கெடுத்தாலும் கோபப்படும் அண்ணனின் சுபாவம் மாறியிருப்பதை கூர்ந்து கவனித்த அண்ணி,தனது அலுவலகத்தில் பெருமையாகச் சொல்லி வைக்க,அது எப்படியோ சுற்றிக்கொண்டு எம்மைத் தேடி வந்துவிட்டது.முன்பெல்லாம் ஒரு மாதத்தில் ஒரு வாரமாவது தனது குழந்தைகளோடு அண்ணி தனது அம்மாவீட்டுக்கு போய்விடுவார்;கன்னா பின்னாவென்று திட்டித் தீர்க்கும் அண்ணன் வெறும் 3 மணி நேரத்தில் தனது மாமியார் வீட்டில் தவம் கிடந்து,தனது மனைவியை அழைத்துச் செல்ல வருவார்;ஒரு கட்டத்தில் இவர்களின் சண்டையை இவரது மாமியார் வேடிக்கை மட்டுமே பார்க்குமளவுக்கு சாதாரணமாகிவிட்டது;ஆனால்,அண்ணிக்கு அண்ணனின் கோபத்தின் மீது ஒரு பெரும் பயம் இருந்திருக்கிறது.அதனாலேயே சமைக்கும்போதும்,அலுவலகத்தில் பணிபுரியும் போதும் கவனக்குறைவால் பல்வேறு புதிய சிக்கல்கள் உண்டாகியிருக்கின்றன;

அவர்களின் அனுமதியோடு இந்தப்பதிவினை வெளியிடுகிறேன்.
ஓம்சிவசிவஓம்

இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி


ஜயாநான் உங்களிடம் உதவி கேட்கவில்லை நியாயம் கேட்கிறேன்.நான் ஒரு ஈழத் தமிழன்.
இலங்கையில் இந்து மதத்துக்கும் தமிழிற்கும் இழைக்கப்படும் அநீதி

1. எம் கண்ணுக்கு முன்னால் இந்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன.‌அவற்றிற்கு மேல் புத்த விகாரைகள் கட்டப்படுகின்றன.
2 . இந்து கடவுள்கள் தமிழ் கடவுள் அல்ல சிங்களவர்களுடைய கடவுள் என்கிறார்கள்.
3 . புத்த‌ரை கடவுளாகவும் சிவபெருமானை தேவர் என கூறி வழிபடுகின்றனர்.
4.முருகனையும் பிள்ளையாரையும் புத்தரின் சீடனாக கருதி வழிபடுகின்றனர்.
5.சுற்றுளா பயணிகளாக வந்த சிங்களவர் எமது சிவன் கோயில் வளாகத்தினுள் உள்ள மடைப்பள்ளியினுள் இறால் சமைத்து உண்டனர்.
6.முருகன் வள்ளியை திருமணம் செய்த கதிர்காம தலவளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
7.திருகேதிச்சர வளாகத்தினுள் புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
8.நயினை நாகபுசணி அம்மன் ஆலயத்திற்கு அருகே புத்தவிகாரை கட்டப்பட்டுள்ளது.
9.தமிழ் சிறுமி இளம் பெண்கள் சிங்களவர்களால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.
10 . கிறிஸ்தவ சபைகள் மக்களு்க்கு உதவிகள் பல செய்து கிறிஸ்தவ சமயத்திற்கு மாற்றுகிறது.
11.தமிழரது தொன்மை வாய்ந்த பாரம்பரிய சின்னங்கள் அழி்க்கப்படுகின்றன.

Wednesday, August 22, 2012

இந்தியாவின் ஆத்மபலத்தை சிதைத்த மெக்காலே!!!


மெக்காலே சிதைத்தது இருக்கட்டும்;நாம் எப்போது நமது இந்த முதன்மையான தவற்றை சீர்திருத்தப்போகிறோம்?

வசதியுடன் சேர்ந்த விவேகம்!!!



மும்பையில் மிகவும் வசதியான குடும்பங்கள் வாழும் மலபார் ஹில் பகுதியில் 1600 சதுர அடி பிளாட்டில் வசிப்பவர் கிரிஷ் ஷா.இவரது வயது 45.வைர வியாபாரியான இவரது வீடு வித்தியாசமானது;தரை முழுவதும் அரை அங்குல உயர களிமண் பூசப்பட்டு அதற்கு மேல் ஒரு அங்குல கனத்திற்கு பசுஞ்சாணம் முழுமையாக நேர்த்தியாக பூசப்பட்டுள்ளது.இந்த தரையில் படுத்தால் சுறுசுறுப்பு  உண்டாகிறது என்று ஷா சொல்கிறார்.இவரது வீட்டுச் சுவர்களில் சுண்ணாம்பும் சாணமும் கொண்ட கலவை பூசப்பட்டிருக்கிறது.இதற்கு ஆன செலவு ரூ.4000/-மட்டுமே.

இந்த சுதேசிப் பூச்சு பூசியதன் விளைவாக இவரது வீட்டில் மூட்டைப்பூச்சி,கரப்பான் தொல்லை,எலி தொல்லை இருப்பதில்லை;காய்ந்த வேப்பிலை,காய்ந்த மாட்டுச்சாணம்,கொஞ்சம் கற்பூரம் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெண்ணெய் இவற்றைச் சேர்த்து எரித்து வீடு முழுவதும் புகை மூட்டம் போடுவதால் மும்பை முழுவதும் கொசுத்தொல்லை இருந்தாலும் ஒரு கொசு கூட இவர் வீட்டில் நுழைவதில்லை;ஷாவின் வீட்டில் மின்சார விளக்கோ,மின் விசிறியோ,ஏ/சியோ கிடையாது;டைனிங் டேபிள் கிடையாது;தரையில் அமர்ந்தபடி சமையல் செய்கிறார் ஷாவின் மனைவி கிரண்.இதற்கெல்லாம் மேலாக இவர் வீட்டில் இயற்கை விவசாய உணவுப்பொருட்கள்தான்.குடும்பத்துடன் தினமும் தியானம் செய்த பின்னரே அந்த நாள் துவங்குகிறது.
இதே போல அறிய ஆரோக்கியச் சந்தையை அணுகவும்.
நன்றி:பஞ்சாமிர்தம்பகுதி,விஜயபாரதம் பக்கம்16,வெளியீடு 24.8.12

போகரின் ஆசியோடு ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியரின் கோவிலுக்கு நமது எழுத்துக்கள் அஸ்திவாரமாக இருக்கட்டும்!!!

 



கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!
தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.
இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.
15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?
அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11.                                                     in English:Mr.K.MURALIDARAN,TOTAL OIL INDIA P LTD,3,First Floor, Bharathi Park Cross Road-2,Saibaba Colony,COIMBATORE-11.
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம்சிவசிவஓம்

தனி மரம் தோப்பாகாது;ஆனால்,தனி மனிதனால் ஒரு காட்டையே உண்டாக்க முடியும்!!!


யார் இந்த மாமனிதர்?
இந்தியாவின் பெருமை’ ஜாதவ் பயேங்!!
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது… எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். ‘தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை’ என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துக் கொள்கிறார். அப்படி என்ன செய்தார்?!!
கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்…!
யார் இவர் ?
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமவாசி திரு.ஜாதவ் பயேங், அங்குள்ள மக்கள் இவரை ‘முலாய்’ என அழைக்கின்றனர். பிரம்மபுத்திரா நதியில் 1979ம் ஆண்டில் வெள்ளத்தில் அதிக அளவில் பாம்புகள் அடித்து வரப்பட்டிருக்கிறன. வெள்ளம் வடிந்த பின் மேலும் பல ஊர்வன இறந்த நிலையில் அங்கே கிடந்திருக்கின்றன. மரங்கள் இன்றி அதிகரித்த வெப்பத்தினால்தான் இந்நிலை எனப் புரிந்து கொண்டபோது இவரது வயது 16! பின் இது சம்பந்தமாக வனத்துறையை அணுகி விசாரித்த போது ஆற்றின் நடுவே உள்ள அந்த மணல் படுகையில் மரங்கள் எதுவும் வளராது, மூங்கில் மரம் வேண்டுமானால் வளரலாம், முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்… ஒருவரும் உதவி செய்யாத போது தனி நபராக செயலில் இறங்கி விட்டார்.
1980ம் ஆண்டில் அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் கோகிலமுக் இடத்துக்கு அருகில் 200 ஹெக்டேர் மணல் படுகையில் ‘சமூகக் காடுகள் வளர்ப்பு’ திட்டத்தின்படி வனத்துறையினர், மற்றும் தொழிலாளர்களும் இணைந்து மரக் கன்றுகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டது. பணி முடிந்ததும் மற்றவர்கள் சென்றுவிட, இவர் மட்டும் மரக்கன்றுகளை பராமரித்துக் கொள்ள அனுமதி கேட்டு அங்கேயே தங்கி விட்டார். பின்னர் வனத்துறையினரும், மற்றவர்களும் இதனை அப்படியே மறந்து விட்டனர், அந்த பக்கம் யாரும் எட்டிக் கூட பார்க்கவில்லை…!
மண்ணை வளப்படுத்த புது யுக்தி – எறும்பு
200 ஹெக்டேர் பரப்பில் மூங்கில் மட்டும் வளர்த்து வந்த இவர் பிற மரங்களையும் வளர்க்க முயற்சி எடுத்துள்ளார்… ஆனால் மணல் அதற்கு ஏற்றதாக இல்லை என்பதால் தனது கிராமத்தில் இருந்து ‘சிவப்பு எறும்பு’களை சேகரித்து எடுத்து வந்து மணல் திட்டில் விட்டு இருக்கிறார். இந்த எறும்புகள் இவரை பலமாக தாக்கியும் மனம் தளராமல் இருந்துள்ளார். இந்த எறும்புகள் மண்ணின் பண்பை நல்லதாக மாற்றக்கூடியவை என்கிறார்… வெகு விரைவில் மண் பயன்பாட்டுக்கு மாறியது. பிறகு அந்த இடம் முழுவதிலும் விதைகளை ஊன்றியும், பிற மரக்கன்றுகளை நட்டும் பராமரித்து வந்துள்ளார்… இப்படி ஒன்று இரண்டு வருடங்கள் அல்ல, 30 வருடங்கள்!!
இப்படி 2008 வருடம் வரை உலகில் யாருக்கும் தெரியாமல் ஒரு காடு பரப்பளவிலும், உயரத்திலும், அடர்த்தியிலும் பெருகிக் கொண்டே சென்றிருக்கிறது.
2008ம் ஆண்டு தற்செயலாக 115 யானைகள் இந்த காட்டு பகுதிக்குள் புகுந்துவிட்டது. அதனை துரத்தி சென்ற வனத்துறையினர் இந்த காட்டைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்திருகின்றனர். அரசு பதிவேட்டில் இடம் பெறாத இந்த காடு இங்கே எப்படி சாத்தியம் என்று வியந்திருக்கின்றனர். முலாய் பற்றி கேள்விப்பட்டு அவரை சந்தித்து விஷயம் முழுவதும் அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
காடு வளர்ப்புக்காக வனத்துறையோ மாநில அரசோ எந்த உதவியும் செய்யாத போது யாரையும் எதிர்பார்க்காமல் தனது சமூக கடமை இதுவென எண்ணி இத்தனை வருடங்களாக தனது மண்ணுக்காக உழைத்த இவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது.
குடும்பம்
மரங்களின் மேல் உள்ள அக்கறையினால் சொந்த ஊரை விட்டு இந்த காட்டுக்குள் சிறிய வீட்டை கட்டி தனது மனைவி, இரு மகன்கள், மகளுடன் வாழ்ந்து வருகிறார். வருமானத்திற்காக சில மாடுகளை வளர்த்து பாலை கறந்து விற்று குடும்ப செலவை பார்த்துக் கொள்கிறார்.
டீன் ஏஜ் பருவத்தில் தொடங்கியவர் தற்போது 50 வயதை நெருங்குகிறார். “இந்த காட்டை வனத்துறையினர் நன்கு பராமரிப்பதாக வாக்கு கொடுத்தால் நான் வேறு இடம் சென்று அங்கேயும் காடு வளர்ப்பில் ஈடுபடத் தயார்,” என்கிறார் இந்தத் தன்னலமற்ற மாமனிதர்!!
மரங்கள் மட்டும் அல்ல

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருக்கிறது… இரு ஆண்டுகளுக்கு முன் மிக ‘பிரபலத் திரைப்பட தயாரிப்பாளர் டாம் ராபர்ட்’ இந்த காட்டிற்கு வந்து படப்பிடிப்பை நடத்திச் சென்றுள்ளார். ‘ஆற்றின் நடுவே மணல் திட்டில் இவ்வளவு பெரிய காடு வளர்ந்திருப்பது அதிசயம்’ என வியந்திருக்கிறார்.தேக்கு, அகில், சந்தனம், கருங்காலி, ஆச்சா போன்ற மரங்களும், மூங்கில் காடுகளும் இருக்கின்றன. காட்டு விலங்குகளும் பறவைகளும் அதிக அளவில் இங்கே வாழ்ந்து வருகின்றன…!! 100 யானைகளுக்கு மேற்பட்டவை 6 மாதங்களுக்கு மேல் இங்கே வந்து தங்கி செல்கின்றன. பறவைகள், விலங்குகளின் சொர்க்கபுரிதான் இந்த ‘முலாய் காடுகள்’!!
மரம் நடுவதையே ஒரு விழா அளவுக்கு பெரிது படுத்தி புகைபடத்திற்கு முகத்தை காட்டி பெருமைப்பட்டு கொள்ளும் சராசரி மனிதர் போல் அல்ல முலாய். எதையும் எதிர்பார்க்காமல் இந்த மண்ணிற்கு தான் செய்யும் கடமை என சாதாரணமாக கூறும் அவரை அறிந்துகொண்ட பிறகாவது நம் கடமைதனை உணர்ந்து நாம் வாழும் சமூகத்திற்கு நமது சிறிய பங்களிப்பைக் கொடுப்போம்.
உலக வெப்பமயமாதல் என அச்சப்பட்டுக் கொண்டு மட்டும் இருக்காமல் செயலிலும் இறங்க வேண்டிய தருணம் இது. ஒரு தனிமனிதரால் ஒரு காட்டையே உருவாக்க முடிகிறது என்றால் நாம் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு ஒரு மரமாவது ஏன் நட்டு வளர்க்க கூடாது? நகரங்களில் இருப்பவர்கள் இயன்றவரை மொட்டை மாடியில் தோட்டம் போட்டும், தொட்டிகளில் செடிகளை வளர்த்தும் குளிர்ச்சியாக வைத்து நமது சுற்றுச்சூழலை பாதுகாத்துக் கொள்ளலாம்… சிறிது முயன்றுதான் பாருங்களேன்…!!
இவரை அறிவதன் மூலம் எல்லோருக்கும் சுற்றுச்சூழலின் மீதான ஒரு கவனமும், மரங்களை வளர்ப்பதன் மேல் ஒரு ஆர்வமும் வரக்கூடும்…
விருப்பமுள்ளவர்கள் ஈஷாவுடன் இணைந்து இச்செயலில் ஈடுபடலாம். உங்களால் ஒரு மரக்கன்றை நட்டு வளர்க்க இயலாவிட்டாலும், பசுமைக் கரங்கள் திட்டம் அதனை உங்களுக்காக செய்யும்.
குறைந்தது 10 மரங்களாவது நட்டு பேணிக் காப்போம், ஒவ்வொரு மரமும் விலை மதிப்பில்லாதது! நாம் ஒரு மரத்தில் இருந்தாவது துவங்குவோம்!! நன்றி:iisha blogspot

Monday, August 20, 2012

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்







சிவனை வழிபட்டால் பாவங்கள் விலகும்;பெருமாள் எனப்படும் ஹரியை வழிபட்டால் செல்வம் சேரும்;     நமக்கு உடனே பணம் கிடைக்கவேண்டும் என்று விரும்புகிறோம்;அதுவும் நிறைய்ய பணம் கிடைத்தால் கடன்,நோய்,பிரச்னைகள் தீர்த்துவிடலாம் என்று துடிக்கிறோம்;இந்தத் துடிப்பில்தான் மனிதர்களாகிய நாம் நமது திறமைகளை வெளிப்படுத்துகிறோம்;ஒருங்கிணைப்புப் பணி மூலமாக நிறைய்ய சம்பாதிக்கிறோம்;ஆனாலும்,நமது வருமானத்துக்கும் நமது தேவைக்கும் இடையே இருக்கும் இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகிறது.


இந்த பற்றாக்குறையை திறமையாகச் சமாளிக்கும் நமது வீட்டுப்பெண்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்;அவர்களுக்குத் தான் எத்தனை பிரச்னைகள்?அத்தனையையும் பொறுத்துக்கொண்டு,கிடைக்கும் பணத்தில் சாமர்த்தியமாக குடும்பம் என்ற பேருந்தை/கப்பலை ஓட்டிச் செல்வதை ஆண்கள் புரிந்துகொண்டால்,கணவன் மனைவி பிரச்னை வரவே வராது.

இதே போல மன்மோகன்,சோனியா,கபில்சிபில்,மண்டேக்சிங் அலுவாலியா,ப.சிதம்பரம்,ராகுல் போன்றவர்களையும் ஒரு  மாதத்துக்கும் நடுத்தர மக்களாக மாற்றி நாம் படும் பணச் சிக்கல்களை உணர வைக்க வேண்டும்;அப்படிச் செய்தால்தான் இவர்கள் இந்தியாவின் நலனுக்கு ஏற்றவிதத்தில் ஆட்சி புரிவார்கள்;யார் இதைச்  செய்வது? சரி,எதுக்கு கற்பனை?!!?? விஷயத்துக்கு வருவோம்:-

எனக்குத் தெரிந்து தினமும் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளே எனது கஷ்டத்தைத் தீர்க்க மாட்டாயா? என்று புலம்புபவர்களை பார்த்திருக்கிறேன்;அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்களில் பெருமாளை நம்பி பிரயோஜனமில்லை;என்று விரக்தியில் வேறு தெய்வத்தை வழிபடச் சென்றுவிடுகிறார்கள்.(சும்மா உடான்ஸ் அடிக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால்,பெருமாள் கோவில் பூசாரியிடம் விளக்கம் கேட்டுக்கொள்ளவும்)

ஒரு சில பக்தர்கள் விடாமல் 10 வருடமாக அல்லது 12 வருடமாக ஏன் 20 வருடமாக ஒரு நாள் கூட விடாமல் பெருமாளை வழிபட்டு பெரும்  செல்வச் செழிப்பை அடைந்திருக்கிறார்கள்.இதற்கான உதாரணங்களை பல பெருமாள் பக்தர்களை நேரடியாகவே காட்ட முடியும்.
இதேபோல 10 அல்லது 12 அல்லது 15 அல்லது 20 வருடங்களாக சிவனை வழிபட்டு நிம்மதியான வாழ்க்கையை அடைந்தவர்களும் தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேர்கள் இருக்கிறார்கள்.உலகமயமாக்கல் வந்தபிறகு,நம் ஒவ்வொருவருமே பணத்தின் பின்னாடி பின்னங்கால் பிடறி தெரிக்க ஓடியே ஆக வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்துவிட்டோம்;அதுவும் உடனே பணம் கிடைக்க வேண்டும்;நிறைய்ய பணம் வேண்டும் என்று ஏங்குகிறோம்;நியாயமான வழியில் நிறைய பணம் கிடைக்காது என்று நம்புபவர்கள் தடம் மாறிச் சென்றுவிடுகிறார்கள்.இருந்தும் கூட பெரும்பாலான தமிழர்கள் நியாயமான வழியிலேயே பெரும் பணம் சம்பாதிக்க ஆன்மீக வழிமுறைகளைப்பின்பற்றிக் கொண்டே முயற்சி செய்கின்றனர்.அவர்களுக்கு மட்டுமே இந்தப் பதிவு:

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் இருக்கும் கோவில்கள் தமிழ்நாட்டில் இதுவரை 19 கண்டறியப்பட்டுள்ளன;இவைகளில் பழமையானவை சுமார் 5 தான் இருக்கும்;இந்த ஐந்து சன்னதிகளில் திண்டுக்கல் தாடிக்கொம்பு கிராமத்தில் இருக்கும் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும்.

தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்தால்,நமது பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும் என்பது குரு உபதேசம் ஆகும்.ஒரு தேய்பிறை அஷ்டமிக்கு எங்களுக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்குச் சென்று வந்தோம்;வந்த ஒரு மாதத்தில் ஒவ்வொருக்கும் ஒவ்வொருவிதமான பணப்பிரச்னைகள் தீர்ந்தன.எம்மோடு வந்த ஒருவர் நூற்பு ஆலை தொடர்பான சிறிய ஆலை ஒன்று நடத்தி வருகிறார்;அடிக்கடி எம்மிடம் ஜோதிடம் பார்ப்பவர் என்பதால்,அவரை அழைத்துக்கொண்டு முதல் மாதம் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலினுள் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு பயணித்தோம்;பயணிக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அவருக்கு ஜாப் ஆர்டர்(ஒப்பந்தப் பணி) கிடைத்தது;கடவுளையே நம்பாத அவரே இதை ஆச்சரியமாகச் சொன்னார்;


இன்னொருவருக்கு நீண்டகாலமாக வராமல் இருந்த ஒரு தொழில் கடன் ஒரே தவணையில் வசூலானது;இத்தனைக்கும் அந்த தொழில் கடன் சில லட்ச ரூபாய்களைத்தொடும்;அது வட்டியோடு ஒரே தவணையில் கிடைத்ததால்,அவர் தனது தொழிலை ஒரே மாதத்தில் விரிவு படுத்திவிட்டார்.இவருக்கோ தாடிக்கொம்பில்  இருக்கும்       ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதிக்கு தேய்பிறை அஷ்டமிக்குச் சென்று வந்த மூன்றாவது நாள் இரவு கிடைத்தது;
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் சிலர் எம்மோடு தொடர்ந்து இரண்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு தமது குடும்பத்தோடு வந்திருந்தனர்;வந்த மறுநாளிலிருந்தே அவர்களுடைய முதுமைக்கால நோய்களின் தாக்கமும்,வேதனைகளும் பெருமளவு குறைந்து போயிருந்தது;


இதேபோல பலருக்கு ஏராளமான பணச்சிக்கல்கள்,தொழில் முடக்கங்கள்,குடும்பக் குளறுபடிகள் தீர்ந்துபோயிருக்கின்றன;அவைகளை விரிவாக எழுத உரியவர்கள் சம்மதிக்கவில்லை;


முதல் தேய்பிறை அஷ்டமிக்கு நாங்கள் ஆறு பேர்களாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபடச் சென்றோம்;மூன்றாவது தேய்பிறை அஷ்டமிக்கு இந்த எண்ணிக்கை தானாகவே 20 ஆக அதிகரித்தது;10 வது மாதத்தில் இந்த எண்ணிக்கை 45 ஆக எகிற,எங்கள் ஊரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் அருளாசியால் நானும் பிரபலமாகத் துவங்கினேன்.

நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் உங்களது ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்திருக்க வேண்டும்.அமர்ந்து நமது நியாயமான கோரிக்கைகளை மனப்பூர்வமாக வேண்ட வேண்டும்;முடிந்தால் ஓம் ஸ்ரீசொர்ண பைரவரே போற்றி என்று அந்த ராகு காலம்முழுவதும் ஜபித்து வரலாம்;கொஞ்சம் சமஸ்க்ருதம் தெரிந்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரத்தை 330 தடவை(எண்ண வேண்டாம்) விடாமல் மனதுக்குள் ஜபிக்க வேண்டும்;

தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதிக்கு சூட்சுமமாக அஷ்ட லட்சுமிகளும் வருகை தருகிறார்கள்;அவர்கள் சொர்ண பைரவரை வழிபடுகிறார்கள்;அப்படிப்பட்ட நேரத்தில் நாமும் போய் வழிபாடு செய்தால்,கோரிக்கை வைத்தால் அடுத்த தேய்பிறை அஷ்டமிக்குள் நமக்கு திடீரென ஒரு பணப்பிரச்னை/கடன் தீர்ந்துவிடுகிறது;அல்லது பண வரவு நியாயமான வழியில் அதிகரித்துவிடுகிறது.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு போதித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு நாம் எவ்வ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம்?

ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை தேய்பிறை அஷ்டமியில் வரும் ராகு காலத்தில் வழிபாடு செய்தால்,நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;எவ்வளவு தீர்ந்திருக்கிறதோ அதே அளவுக்கு செல்வச் செழிப்பு உடனே நம்மைத் தேடி வரும்;அதாவது ஒரே வழிபாட்டின் மூலமாக சிவனது அருளையும்,பெருமாளின் அருளையும் நாம் பெறலாம்.சிவனையோ அல்லது பெருமாளையோ 10 அல்லது 12 அல்லது 20 ஆண்டுகள் வழிபட்டப்பின்னர்,நாம் பெரும் செல்வச் செழிப்பை அடைய வேண்டியதில்லை;வெறும் எட்டே எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்கு ஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்தாலே போதுமானது;அனுபவப்படி பார்க்கும்போது 12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு வழிபாடு செய்வதன் மூலமாக செல்வச் செழிப்பு கிடைக்கிறது!!!



தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலைப் பொறுத்தவரையிலும்,தேய்பிறை அஷ்டமியன்று சுமார் 5 முறை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவருக்கு அபிஷேகங்கள் செய்துவருகின்றனர்;இதில் எந்த அபிஷேகம் ராகு காலத்தில் வருகிறதோ அந்த நேரத்தில் எமது குழுவினர் வந்து வழிபாடு செய்து முடித்துவிட்டோம்;இதன் மூலமாக எமது குழுவினர் அனைவருமே பொருளாதாரச் சுயச்சார்பு(Economical Self Reliance) அடைந்துவிட்டனர்;
நீங்களும் முயன்று பாருங்கள்:

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு உங்கள் முயற்சியை துவக்குங்கள்;ஆமாம்! நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்.

தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் ராகு காலத்தில் தாடிக்கொம்பு ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டுவிட்டு,நேராக உங்கள் வீடு/அலுவலகத்துக்குச் செல்வதை வழக்கமாக்கி வைத்துக்கொள்ளுங்கள்;
தேய்பிறை அஷ்டமியன்று கூட்டம் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் ஒருமுறை சுமார் 2000 பக்தர்கள் திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலுக்கு வருகிறார்கள்;எனவே,தேய்பிறை அஷ்டமி தினத்தில் மூலவரை தரிசிப்பது சிரமம்;எனவே,நீங்கள் வரத்துவங்கும் முதல் தேய்பிறை அஷ்டமியன்று காலை எட்டு மணிக்குள்ளாகவே வந்துவிடவும்.வந்து மூலவரை தரிசித்து ஆசி வாங்கிக்கொள்ளவும்.
மிகவும் சக்தி வாய்ந்தவராக அருள் மிகு சவுந்தரராஜப்பெருமாள் இருப்பதால் மாதத்தில் சுமார் 7 நாட்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருக்கின்றன;

மிகவும் சக்தி வாய்ந்தவராக இருப்பதால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரைத் தேடி வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.இன்று வரையிலும்(ஆகஸ்டு 20,2012) தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் இருக்கும் ஒரே  ஸ்ரீசொர்ண பைரவர் இவர் மட்டுமே!!
                  
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்