ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Friday, June 22, 2012
ஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;காமரீதியான அவமானங்களைத் தடுப்போம்!!!
மும்மூர்த்திகளை இயக்கி இந்த பிரபஞ்சத்தையே கட்டிகாத்து வருபவர் சிவபெருமானின் அவதாரமான பைரவர் ஆவார்.பைரவரின் வடிவங்கள் மொத்தம் 64 ஆகும்.இதில் வீட்டில் வைத்து வழிபடத் தக்கவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி போன்றவைகளின் வேதனைகளைத் தீர்க்க பைரவர் வழிபாட்டால் மட்டுமே முடியும்.
ஏனெனில்,நவக்கிரகங்களில் சனிபகவானின் குருவாக இருப்பவர் பைரவரே! நம் ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகப்படி நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனிபகவானே! தொழிலை தந்ததற்கு சனிக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோமா?அவரால் மட்டுமே நமக்கு ,நமது குணம்,சுபாவம்,திறமை,ஆளுமை,இருக்கும் செல்வ வளம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு தொழில் அல்லது வேலையை நிர்ணயம் செய்கிறார்.அந்த சனிக்கே நவக்கிரக பதவியைக் கொடுத்தவர் பைரவர் ஆவார்.இந்த பூமி,உயிர்கள்,நவக்கிரகங்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது காலச்சக்கரத்தின் மூலம் இயக்குபவரே கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.பைரவரின் திருவிளையாடல்கள் நமது தமிழ்நாட்டிலேதான் நிகழ்ந்திருக்கிறது.
ஏனெனில்,நவக்கிரகங்களில் சனிபகவானின் குருவாக இருப்பவர் பைரவரே! நம் ஒவ்வொருவரின் பிறந்த ஜாதகப்படி நமது தொழிலையும்,ஆயுளையும் நிர்ணயிப்பவர் சனிபகவானே! தொழிலை தந்ததற்கு சனிக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோமா?அவரால் மட்டுமே நமக்கு ,நமது குணம்,சுபாவம்,திறமை,ஆளுமை,இருக்கும் செல்வ வளம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு தொழில் அல்லது வேலையை நிர்ணயம் செய்கிறார்.அந்த சனிக்கே நவக்கிரக பதவியைக் கொடுத்தவர் பைரவர் ஆவார்.இந்த பூமி,உயிர்கள்,நவக்கிரகங்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் தனது காலச்சக்கரத்தின் மூலம் இயக்குபவரே கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.பைரவரின் திருவிளையாடல்கள் நமது தமிழ்நாட்டிலேதான் நிகழ்ந்திருக்கிறது.
ஏமாற்றுதலும்,பித்தலாட்டமும்,ஒழுங்கீனமும் கொண்ட இந்த கலியுகத்தில் ஒழுக்கரீதியாக எந்தத் தவறுமே செய்யாமலேயே வீண்பழி ஒருவர் சுமக்கிறாரெனில் அவர் நிச்சயமாக சென்ற பிறவிகளில் செய்த தவறுகளை அனுபவித்துவருகிறார் என்றே அர்த்தமாகும்.அவரது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு 1,2,4,8,10 ஆம் இடங்களில் ஏதாவது ஒன்றில் இராகு அல்லது கேது அமைந்திருக்கும்.அப்படி அமைந்திருந்து ராகு அல்லது கேது மஹாதிசை வந்து,ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி வந்தால்,அவர்கள் வீண்பழியை சுமந்தே ஆகவேண்டும்.பல தம்பதியரிடம் காமம் கலந்த ஈகோ விளையாட்டு உருவாகி அதன் முடிவாக இருவருமே அவமானப்படுகிறார்கள்.இந்த சூழ்நிலையை தடுக்கவும்,ஏற்கனவே உண்டான சூழ்நிலையை மாற்றவும் ஏற்படுத்தப்பட்ட பைரவரே ஸர்ப்ப பைரவர் ஆவார்.இவர் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இருக்கும் சங்கர நயினார்கோவிலில் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
செவ்வரளி மாலை,சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது போன்றவைகளுடன் வீட்டில் சமைக்கப்பட்ட வெண்பொங்கல் அல்லது பாசிப்பருப்பு சாதம் இவைகளுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் சன்னதிக்கு வருகை தந்து,இந்த பொருட்களால் ஸர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.(பூசாரியிடம் கொடுத்துதான்!)அபிஷேகம் நடைபெறும்போது பைரவரின் அஷ்டோத்திரம் அல்லது பைரவ பாடல் ஏதாவது மனதுக்குள் ஜபிப்பது அவசியம்.அபிஷேகம் நிறைவடைந்தபின்னர்,கொண்டு வந்திருக்கும் படையலான பாசிப்பருப்பு சாதம் அல்லது வெண்பொங்கல் சாதத்தை கோவிலுக்கு வந்திருப்பவர்களுக்கு பாதியை பரிமாற வேண்டும்.மீதியை வீட்டிற்குக் கொண்டுவந்து,குடும்ப உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து எட்டு ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்துவிட்டால்,ராகு மற்றும் கேதுவால் வர இருக்கும் அவமானங்கள் வெகுவாகக்குறைந்துவிடும்.(திருமணமாகாமல் இருக்கும் சர்ப்ப தோஷ ஜாதக,ஜாதகிகள் 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இவ்வாறு சங்கரன்கோவில் ஸர்ப்ப பைரவர் வழிபாட்டைச் செய்ய வேண்டும்.தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்குச் செய்ய முடியாவிட்டாலும்,விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யலாம்.இதன் மூலம் திருமணத் தடை அகலும்;அதே சமயம் ஜாதகத்தில் இருக்கும் ஸர்ப்ப தோஷங்களின் வீரியம் 10 % அளவுக்குச் சுருங்கிவிடும்)
திருமணமானவர்கள் பலருக்கு ஸர்ப்ப தோஷங்கள் செயல்படுவதுண்டு.அப்படி செயல்படும்போது கணவன் மனைவிக்குள் ஏற்படும்பிரச்னைகளால், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளே அதிகம்பாதிக்கப்பட்டுவருகின்றனர்.கணவன் மனைவி பிரிந்துவிடுகின்றனர்.இதனால்,பிற குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன.இதைச் சரிசெய்ய மேலே கூறியதுபோல,6 ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்.
மிக முக்கியமான குறிப்பு என்னவெனில்,எந்த ஞாயிறு அன்று இவ்வாறு ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்கிறோமோ,அந்த ஞாயிறும் அதற்கு முந்தைய நாளும் காமரீதியான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்.அப்போதுதான் வழிபாட்டுக்கான பலன்கள் முழுமையடையும்.
இடைக்காட்டு சித்தரின் ஜீவசமாதி,திருஅண்ணாமலை
சித்தர்களில் முக்கியமானவர் இடைக்காடர்.புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்று(7.10.2012 ஞாயிறு காலை 6.08 மணியிலிருந்து 8.10.2012 திங்கள் காலை 8.14 வரை) மதுரைக்கு அருகில் இருக்கும் இடைக்காட்டூரில் பிறந்தவர்,இவர் தனது கர்மப்படி,ஆடு மேய்த்துகொண்டிருந்தார்;வானில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு சித்தர் ,இவரது ஆத்ம ஒளியை உணர்ந்து,பூமியில் இறங்கி வந்து,இவருக்கு ஜோதிடம்,ப்ராணயாமம்,சித்துக்கலைகளைக்கற்றுக்கொடுத்து விட்டு புறப்பட்டார்.நவக்கிரகங்களையே பூமியில் வாழும் மனிதர்களின் நலனுக்காக மாற்றியவர்.
திரு அண்ணாமலை கோவிலுக்குள்ளே கோசாலை இருக்கிறது.அந்த கோசாலையில் இந்தபதிவில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போன்ற இடம் தெரியும்.இந்த இடமே இடைக்காடர் இன்றும் தவம் செய்யும் இடம் ஆகும்.இங்கே பின்வரும் பொருட்களுடன் எட்டு சனிக்கிழமைகளுக்கு மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் வர வேண்டும்.
1.முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை
2.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
3.விதையில்லாத கறுப்பு திராட்சை அரைக்கிலோ(வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும்)
4.விதைகள் நீக்கப்பட்ட பேரீட்சைபழம் ஒரு பாக்கெட்
5.வெற்றிலை பாக்கு,தரமான பத்திப்பாக்கெட் ஒன்று
6.ஆறு நாட்டு வாழைப்பழங்கள்
7.நெய் தீபம் ஏற்றத் தேவையான பொருட்கள்
இவைகளைக் கொண்டு வந்து,இவரது ஜீவசமாதியில் படையலிடவேண்டும்.அதாவது,டையமண்டு கல்கண்டு பாக்கெட்டை கிழித்து ஒரு காகிதத்தில் கல்கண்டுகளை வைக்க வேண்டும்;வெற்றிலைப்பாக்கினை வைக்க வேண்டும்;விதையில்லாத கறுப்பு திராட்சைகளை தரையில் வைக்க வேண்டும்.ஆறு நாட்டுவாழைப்பழங்கள் மீது பத்தியைப்பொறுத்தி வைக்க வேண்டும்;நெய்தீபத்தை ஏற்ற வேண்டும்.மஞ்சள் துண்டினை விரித்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;ஜபிக்கும்போது இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் கையில் இருக்க வேண்டும்.ஜபிக்க ஆரம்பிக்கும்போது,நமது கோரிக்கைகளை மனதில் நினைத்து வேண்ட வேண்டும்.பிறகு,டையமண்டு கல்கண்டு,விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சை பழங்களை கொஞ்சம் அங்கே விநியோகிக்க வேண்டும்.
அண்ணாமலைக்குச் செல்லமுடியாமல் தவிப்பவர்களுக்கும்,அயல் நாடுகளில் இருப்பவர்களுக்கும் என்ன வழி?
இந்த புகைப்படத்தை கம்யூட்டர் வால்பேப்பராக வைத்து வழிபாடு செய்யலாம்; அல்லது புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து பூஜை அறையில் வடக்கு நோக்கி வைத்து இதுபோல வழிபடவேண்டும்.சில நாடுகளில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் கிடைப்பது அரிது;அப்போது,அவர்கள் டயமண்டு கல்கண்டு,விதையில்லாத பேரீட்சை இவைகளுடன் இடைக்காடர் சித்தரின் போட்டோவின் முன்பாக ஒரு பாட்டில் சுத்தமான தண்ணீரை வைத்து தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் என்று ஜபித்து வர வேண்டும்.மாதம் ஒருமுறை பழங்களையும்,தண்ணீரையும் மாற்றினால் போதுமானது.அதுவரை அந்த பழங்கள் அப்படியே படையலாக இருக்கலாம்.இதில் எச்சரிக்கையான விஷயம் என்னவெனில்,இடைக்காடர் சித்தர் படம் இருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.ஒருபோதும் மன்மதச் செயல்களில் ஈடுபடக் கூடாது.மனதைக்கட்டுப்படுத்திட முடியாதவர்கள் இந்த வழிபாட்டுமுறையைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.(வீட்டில் வைத்து வழிபடும் முறையை இவ்வாறு குறிப்பிடுகிறோம்)
அல்லது
திருவாதிரை நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் மட்டும் இவ்வாறு வழிபாடு செய்வது மிகவும் அளவற்ற அருளைத் தரும் என்பது நிரூபிக்கப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி உண்மையாகும்.3.11.2012 சனிக்கிழமை மதியம் 1.14 முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 வரை திருவாதிரை நட்சத்திரம் அமைந்திருக்கிறது.இந்த நாளில் சனிக்கிழமையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.அடுத்தபடியாக 1.12.2012 சனிக்கிழமை முழுவதும் திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.
இவ்வாறு செய்தால்,நேர்மையை தனது சுபாவமாகக் கொண்டிருக்கும் ஜோதிடர்களும்,தன்னலம் கருதாத குணத்தைக்கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,ஆழ்ந்த சிவபக்தி கொண்ட எந்த ராசி/நட்சத்திரக்காரர்களும் மிகுந்த ஏற்றம் பெறுவார்கள்.
Monday, June 18, 2012
யோகா கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு
யோகாசனம் கற்றுக்கொள்ள விரும்புவோர் இந்த யோகா யுவகேந்திரா என்ற வலைப்பூவுக்குச் செல்வது நல்லது.
கடன்களைத் தீர்க்கவும்,தீராத வழக்குகள் தீரவும்,நீண்டகால குடும்பச் சச்சரவுகள் தீரவும் உதவும் திருவாதிரை நட்சத்திர பைரவ வழிபாடு!!!
நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த தவறுகள் மற்றும் நமது முன்னோர்கள் கடந்த ஐந்து தலைமுறைகளாக சேமித்த பூர்வபுண்ணியத்தோடு பாவ கர்மாக்களையும் சேர்த்தே நாம் இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.அப்படி அனுபவிக்கும்போது,அது 1/8 பங்கே நமக்குக்கிடைக்கிறது.ஆனால்,அந்த எட்டில் ஒரு பங்கையே நம்மால் தாங்க முடியவில்லை;தாங்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்.உதாரணமாக,நமது அப்பாவின் தாத்தா(நமது பாட்டனார்) செய்த தவறுகளின் விளைவுகள் நமக்கு எட்டில் ஒரு பங்காக நமக்குக் கிடைக்கின்றன.அவையே நமக்கு தீராத பிரச்னைகள்,குடும்ப சச்சரவுகள்,கடுமையான நோய் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மைத் தொடர்கிறது.நமது பாட்டனாருக்கோ மொத்தம் 20 முதல் 70 பேரன்./பேத்திகள் இருக்கிறார்கள்.அத்தனை பேர்களுக்கும் இது பிரிந்துவிடும்.
ஆக,நமது முந்தைய ஐந்து மனிதப்பிறவிகளில் நாம் என்னென்ன செய்தோமோ அந்த பூர்வபுண்ணியமும்,பூர்வபாவமும் நாம் பிறக்கும் நேரத்தில் வானில் நவக்கிரகங்களாக அமர்ந்திருக்கின்றன.அதையே நாம் பிறந்த ஜாதகமாக மலருகிறது.ஒரு திறமையான ஜோதிடரால் நாம் என்னென்ன புண்ணியம் மற்றும் பாவங்கள் செய்தோம் ? என்பதை துல்லியமாக கணித்துச் சொல்லிவிட முடியும்.ஆனால்,அதிலிருந்து எப்படி மீள்வது? என்பதை ஒருசில ஜோதிடர்களால் மட்டுமே சொல்ல முடியும்.தினமும் ஏதாவது ஒரு இறைவழிபாடு செய்துவரும் ஜோதிடரால் உரைக்க முடியும்.அப்படி இறைவழிபாடு செய்தாலும்,அதை அந்த ஜோதிடர் மானசீகமாக செய்துவந்தால்,அவரிடம் ஆர்ப்பாட்டமோ,சுய தம்பட்டமோ இராது;அப்படிப்பட்ட ஜோதிடரை நாம் பார்த்தாலே நமது மனதில் மரியாதை தோன்றாது;பழகியபின்னரே அவர் மீது அளவற்ற மரியாதை உருவாகும்.
ஒரு பொதுவான ஆனால் சக்தி வாய்ந்த சுயபரிகாரத்தை உங்களுக்கு சொல்லுவதில்,பெருமை கொள்கிறேன்.இப்படி உங்களுக்கு உரைப்பதற்கு அடியேனை பைரவ பெருமான் தேர்ந்தெடுத்ததற்கு அவருக்கு கோடி கூகுள் நன்றிகளைச் சொல்லிக்கொள்கிறேன்.
மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் ஊர் ஆனந்த தாண்டவபுரம் ஆகும்.இங்கு இருக்கும் பைரவரை 16 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு எட்டு நெய்தீபங்கள் ஏற்றி,நமது பெயர் மற்றும் நமது குடும்பத்தாரின் பெயர்களுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் தீராத வழக்குகள்,தீராத பிரச்னைகள்,குடும்பச் சச்சரவுகள்,நீண்டகால கடன் தொல்லைகள் தீர்ந்துவிடும்.
இதைச் செய்ய முடியாதவர்கள் முதல் திருவாதிரை நாளன்று மட்டும் இவ்வாறு ஆனந்த தாண்டவபுரம் சென்று வழிபட்டுவிட்டு,மீதி 15 திருவாதிரைக்கு உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பைரவருக்கு இதே போல வழிபாடு செய்யலாம்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய காகபுஜண்டருக்கு மானசீகமாக கோடிகோடிகோடி நன்றிகள் சொல்லி இதைச் செயல்படுத்துவோம்!!!
20.6.2012 புதன்
17.7.2012 செவ்வாய்க்கிழமை காலை 8.32 முதல் 18.7.2012 புதன் காலை 10.21 வரை
14.8.2012 செவ்வாய் மதியம் 3.48 முதல் 15.8.2012 புதன் மாலை 5.42 வரை
10.9.2012 திங்கள்
7.10.2012 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.2012 திங்கள் காலை 8.14 வரை
3.11.2012 சனி மதியம் 1.14 முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 வரை
1.12.2012 சனி
28.12.2012 வெள்ளி(திருவாதிரை பவுர்ணமி)
24.1.2013 வியாழன் காலை 10.36 முதல் 25.1.2013 வெள்ளி மதியம் 12.59 வரை
21.2.2013 வியாழன்
20.3.2013 புதன்
இவை அனைத்தும் திருவாதிரை நட்சத்திர நாட்கள் ஆகும்.மீதி திருவாதிரை நாட்கள் அடுத்த வருடமான விஜய வருடத்து பஞ்சாங்கம் வெளிவந்ததும்,இந்தப் பதிவு மறுபதிவாக வெளியிடப்படும்போது,குறிப்பிடப்படும்.
திருவாதிரை நட்சத்திர நாளன்று பைரவர் வழிபாடு செய்வோம்;கடன்,நோய்,எதிரி,கர்மவினைகள் தீர்ந்து
நலமோடும் வளமோடும் வாழ்வோம்!!!
ஓம்சிவசிவஓம்
Sunday, June 17, 2012
ஒரே நாளில் நமது பாவவினைகளைத் தீர்க்க உதவும் அமாவாசைத்திருவாதிரை நாளன்று பைரவ மந்திர ஜபம்!
இந்த நந்தன ஆண்டின் திருவாதிரை அமாவாசையானது 19.6.2012 செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.02க்குத் துவங்கி,20.6.2012 புதன் இரவு 10.11க்கு நிறைவடைகிறது.ஆனால்,திருவாதிரை நட்சத்திரமோ 19.6.12 நள்ளிரவு 1.08(புதன் விடிகாலை)க்குத் துவங்கி,20.6.12 புதன் நள்ளிரவு 2.52க்கு(வியாழன் விடிகாலை)நிறைவடைகிறது.எனவே,செவ்வாய்க்கிழமை இரவு திருவாதிரையும் அமாவாசையும் சேர்ந்துவருவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
மும்மூர்த்திகளின் தலைவராக சிவபெருமான் இருப்பதாலும்,அவரது ஒரே அவதாரமாக பைரவர் இருப்பதாலும் 20.6.2012 புதன் கிழமையன்று முழுவதும் விரதமிருந்து பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஒரு நாள் முழுக்க ஜபிக்கவேண்டும்;இப்படி ஜபிப்பதற்கு 19.6.2012 செவ்வாய்க்கிழமையும்,206.2012 புதன்கிழமையும் ரொமான்ஸ் விஷயங்களை அடியோடு நிறுத்தவேண்டும்;காமரீதியான படங்கள்,வீடியோக்கள்,பேச்சுக்கள்,சிந்தனைகளை நினைக்கவே கூடாது.இப்படிப்பட்ட கட்டுப்பாடு இல்லாமல் இந்த வழிபாட்டுமுறையைச் செய்தால்,நிச்சயம் உங்களை நாய் வந்து கடிக்கும்.தேவையில்லாத புதுப்புதுப்பிரச்னைகள் வெடிக்கும் ஜாக்கிரதை!!!
தமிழ்நாடு தவிர,அயல்நாடுகள்,வெளி மாநிலங்களில் வசிப்போர் தனது அறையை சுத்தப்படுத்தி,ஆடைகளையும் சுத்தமாக்கிவிட்டு, அறையில் மேற்கு திசையில் இருக்கும் சுவற்றில் சந்தனத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;இப்படி மேற்கு சுவற்றில் வரைந்தால் நாம் வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்;தெற்கு சுவற்றில் வரைந்தால், நாம் கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்க வேண்டும்.
பின்வரும் பைரவ ஸ்தலங்கள் பைரவரின் திருவிளையாடல்கள் நிகழ்ந்த இடங்கள் ஆகும்.இதற்கு அட்டவீரட்டானங்கள் என்று பெயர்.இங்கு பைரவர் சிவபெருமானாகவே காட்சியளிப்பதால்,சிவபெருமானின் அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று பைரவரின் மந்திரத்தை ஒரு நாள் முழுக்கவும் ஜபிப்பது நன்று.ஒரு வேளை அப்படி ஜபிக்கமுடியாதவர்கள்,ஒரு மணி நேரம் மட்டுமாவது ஜபிப்பது அவசியம்.இதன் மூலமாக ஒரே நாளில் நமது அனைத்துக் கர்மவினைகளும் தீர்ந்துவிடும்.
1.ஆதி வில்வாரண்யம் என்று போற்றப்படும் திருக்கண்டியூர்.இந்த ஊரில் பிரமசிர கண்டீஸ்வரர்.இங்கு வடமேற்கு திசையில் சுற்றுப்பிரகாரத்தில் பைரவரின் சன்னதி இருக்கிறது.இந்த ஊரானது தஞ்சாவூர் திருவையாறு சாலையில் திருவையாற்றுக்கு அருகில் இருக்கிறது.
2.திருக்கோவிலூர்.அண்ணாமலைக்கு அருகில் இருக்கிறது.இங்கு அந்தஹாசுர சம்ஹாரமூர்த்தி,சிவானந்தவல்லி என்ற பெரியநாயகி என்ற பெயரில் பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
3.திருவதிகை:பண்ருட்டியிலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கும் இங்கே வீரட்டானேஸ்வரர் என்ற பெயரில் பைரவர் சிவவடிவில் ஆட்சிபுரிந்துவருகிறார்.
4.திருப்பறியலூர்: மாயவரம்(மயிலாடுதுறை) திருக்கடையூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் செம்பொனார் கோவில் இருக்கிறது.இங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் திருப்பறியலூர் அமைந்திருக்கிறது.இங்கே வீரட்டேஸ்வரர் இளங்கொம்பனையாள் என்று தம்பதி சமேதராக பைரவர் சைவவடிவம் தாங்கி இருக்கிறார்.
5.திருவிற்குடி:திருவாரூர் நாகூர் சாலையில் திருப்பயந்தங்குடியிலிருந்து பிரிந்து 2கி.மீ.தூரம் சென்றால் திருவிற்குடியை அடையலாம்.இங்கு ஸ்ரீஜலந்தராசுவதமூர்த்தியாக இருக்கிறார்.
6.வழுவூர்:மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 8 கி.மீ.தூரம் சென்று,வலப்புறம் அரை கி.மீ.தூரத்தில் வழுவூர் அமைந்திருக்கிறது.இங்கே கிருத்திவாஸர் என்ற பெயரில் பைரவர் சிவலிங்கமாகக் காட்சியளித்துவருகிறார்.கேரளமாநிலத்தின் தெய்வம் ஐயப்பன் அவதரித்த இடம் இதுவே!
7.திருக்குறுக்கை:மயிலாடுதுறையிலிருந்து மணல்மேடு சாலையில் கொண்டல் என்ற ஊருக்கு வர வேண்டும்.அங்கிருந்து பிரிந்து 3 கி.மீ.தூரம் சென்றால் திருக்குறுக்கை வரும்.இங்கே வீரட்டேஸ்வரர் ஞானாம்பிகை தம்பதியாக பைரவர் அருள்பாலித்துவருகிறார்.
8.வில்வாரண்யம் என்ற திருக்கடவூர்:இங்கே அமிர்தகடேஸ்வரர் அபிராமி தம்பதியாக பைரவர் ஆண்டு வருகிறார்.
இந்த அட்ட வீரட்டானங்களைத் தவிர,ஏராளமான பைரவ ஸ்தலங்கள் இருக்கின்றன.இவைகளில் ஏதாவது ஒரு ஸ்தலத்தில் 20.6.12 அன்று பின்வரும் பைரவ மந்திரத்தை ஒரு நாள் முழுக்க உபவாசம் எனப்படும் விரதமிருந்து ஜபித்து,நமது கர்மவினைகளைத் தீர்ப்போம்;
எப்படி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்?
இந்த கோவில்களில் மூலவரை நோக்கி அமரலாம்;அல்லது இங்கிருக்கும் பைரவரின் சன்னதியில் மஞ்சள் துண்டு விரித்து,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு,பத்மாசனமிட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்.
முதலில் நமது குலதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ=ஒருமுறை மட்டும்) அடுத்தபடியாக நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக்கொள்ள வேண்டும்.(குல தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை முதலில் நினைத்துக்கொள்ள வேண்டும்=ஓம் பத்திரகாளியே நமஹ=ஒருமுறை மட்டும்)பிறகு ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபித்துக்கொண்டு,
ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ
என்று ஒரு நாள் முழுவதும் அல்லது ஒரு மணி நேரம் வரை மட்டுமாவது ஜபிக்க வேண்டும்.
இறுதியாக இந்த மந்திரத்தை நமக்கு அருளிய காகா சித்தருக்கு கோடி நன்றிகள் என்று ஒரே ஒருமுறை நினைத்துக்கொள்ள வேண்டும்.
பின்குறிப்பு:படத்தில் திரு அண்ணாமலையில் அமைந்திருக்கும் காலபைரவர்!!!
திருவாதிரையில் வரும் அமாவாசையை(19.6.12 செவ்வாய் இரவு) பயன்படுத்துவோம்!!!
மும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,விஷ்ணு எனப்படும் திருமால்,சிவன் என நம்மால் நம்பப்படும் ருத்ரன் =இம்மூவருக்கும் மேலே இருக்கும் உயரதிகாரியே சிவன் ஆவார்.சிவனும் ருத்ரனும் ஒருவரல்ல;சிவன் நிரந்தரமான தெய்வ சக்தி;ருத்ரன் நிரந்தரமில்லாத தெய்வசக்தி.
சிவனுடைய ஆளுமைப்பகுதியே திரு அண்ணாமலை ஆகும்.தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே அமைந்திருக்கும் மாவட்டத்தலைநகரமே திரு அண்ணாமலை ஆகும்.இந்த அண்ணாமலையானது சைவத்தின் சக்தி மையமாகவும்,உலகத்தின் ஆத்ம கட்டுப்பாட்டு மையமாகவும் அமைந்திருக்கிறது.தியானத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தவர்களுக்கு புருவ மத்தியில் அமைந்திருக்கும் மூன்றாவது கண் திறந்துவிடும்;அப்படி மூன்றாவது கண் திறந்தவர்கள் இந்த அண்ணாமலையைப் பார்த்தால்,இந்த அண்ணாமலையானது பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களுக்கான தொடர்பு மையமாக இருப்பதை உணருவார்கள்.மற்றவர்களுக்கு அப்படித் தெரியாது.
ஒருமுறை அண்ணாமலை கிரிவலம்(14 கி.மீ) சென்றால்,நமது கர்மவினைகள் பெரும்பகுதி வலுவிழக்கத் துவங்கும்;36 பவுர்ணமிகளுக்கு கிரிவலம் வந்துகொண்டே இருந்தால்,அதில் ஏதாவது ஒரு பவுர்ணமியன்று நமது முன்னோர்களில் யார் சித்தராக இருக்கிறாரோ,அவரது அருட்பார்வை நமக்குக் கிடைக்கும்.அப்படி ஒரே ஒருமுறை நம்மையறியாமல் கிடைத்துவிட்டால்,அன்றுமுதல் நமது அனைத்துப் பிரச்னைகளும்,வேதனைகளும்,ஏக்கங்களும் அண்ணாமலையின் அருளால் தீர்ந்துவிடும்.எனவே தான் அண்ணாமலைக்கு ஒவ்வொரு பவுர்ணமிக்கும் உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.அடுத்த சில ஆண்டுகளில் பவுர்ணமி கிரிவலத்துக்கு சீனர்களும்,ஆப்ரிக்கர்களும்,ஸ்பானியர்களும் அலைஅலையாக வருவதை பார்க்கப் போகிறோம்.(நம்ப முடியலையா?காத்திருந்து பாருங்கள்)
துவாதசி திதி அன்று அண்ணாமலை கிரிவலம் வந்தவாறு அன்னதானம் செய்தால்,அப்படிச் செய்பவர்களுக்கு மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும் என்று சிவமஹாபுராணம் சொல்லுகிறது.(நடைமுறை அனுபவத்தில் அவ்வாறு செய்தால்,நம்முடைய கடுமையான கர்மவினைகள்தீர்ந்துவிடுகின்றன.துவாதசி திதி அன்னதானம் ஒரே ஒரு முறை செய்தபிறகு,நமது தினசரி வாழ்க்கை எளிமையாகவும்,மென்மையாகவும்,இனிமையாகவும்,செல்வச் செழிப்பாகவும் மாறிவிடுகிறது)ஒவ்வொரு முறையும் நாம் கிரிவலம் செல்லும்போதும் நம்முடன் நமது முந்தைய மனிதப் பிறவிகள் அனைத்தும் நம்மோடு சூட்சுமமாக கிரிவலம் வரும்;இதன்மூலமாக ஓவ்வொரு முற்பிறவிகளின் பாவ வினைகளும் அண்ணாமலையிலிருந்து பரவும் செங்கதிர்களால் அழிந்துகொண்டே வரும்.(இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளியவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்)
சிவனின் அவதார நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.ஒவ்வொரு ஆனி மாதமும் வரும் அமாவாசையானது சிவனது அவதார நட்சத்திரமான திருவாதிரை அன்றுதான் வருகிறது.1,00,008 விதமான அண்ணாமலை கிரிவலங்கள் இருக்கின்றன.
ஒன்று பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வது;
இரண்டு அமாவாசையன்று கிரிவலம் செல்வது;
மூன்று துவாதசி திதியன்று கிரிவலம் சென்றவாறே அன்னதானம் செய்வது;
நான்கு நமது ஜன்ம நட்சத்திர நாளாகப் பார்த்து அந்த நாளில் கிரிவலம் செல்வது(அப்படி 12 முறை கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படிச் செல்லும்போது ஒவ்வொரு முறையும் அன்னதானம் செய்ய வேண்டும்.இதனால் ஓராண்டுக்குள் நமது பொருளாதார வாழ்க்கையும்,ஆன்மீக வாழ்க்கையும் முன்னேற்றமடையும் என்பது அனுபவ உண்மை!!!)
ஐந்தாவது சிவராத்திரியன்று கிரிவலம் செல்வது;
ஆறாவது தலையில் ஒரு வில்வ இலையை வைத்துக்கொண்டு,உள்ளங்கையில் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் செல்வது;
ஏழாவது சட்டைப்பையில் ஒரு எலுமிச்சை பழம் வைத்துக்கொண்டு கிரிவலம் செல்வது(கிரிவலம் முடிந்ததும்,அந்த எலுமிச்சையை நமது தொழில் ஸ்தானத்தில் பத்திரப்படுத்தி வைக்க அந்த தொழில் விறுவிறுவென வளர்ந்து கொண்டே செல்லும்)
எட்டாவது நமது முழு உடலாலும் கிரிவலம் செல்லுவது;இன்றும் இந்த நடைமுறையை பலர் பின்பற்றிவருகின்றனர்;அண்ணாமலையின் கிழக்குக் கோபுரவாசலின் அருகே இருக்கும் இரட்டைப்பிள்ளையாரை வணங்கி,அங்கப்பிரதட்சணம் செய்தாவாறு அங்கிருந்து உருண்டு வந்து தேரடி முனீஸ்வரரை வழிபட்டு,கிரிவலப்பாதையான 14 கி.மீ.தூரத்தையும் முழு உடலால் உருண்டு வலம் வருவது! நினைக்கவே பிரமிப்பாகவும்,ஆச்சரியமாகவும் இருக்கிறதே! நேரில் பார்த்தால் எப்படி இருக்கும்?
ஒன்பதாவதாக ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என சொல்லிவிட்டு,ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு,அங்கே 1008 முறை ஓம் அண்ணாமலையே போற்றி என மனதுக்குள் சொல்வது;பிறகு ஓருமுறை ஓம் அருணாச்சலாய நமஹ என்று சொல்லிவிட்டு அடுத்த அடி எடுத்து வைத்து 1008 முறை ஓம் அண்ணாமலையே போற்றி என ஜபிப்பது;இந்த முறைப்படி ஒரு முறை கிரிவலம் முடிக்க பல மாதங்கள் ஆகும்.
பத்தாவதாக மிகவும் கடினமான முறை ஆகும்.கால்களின் விரல்களால் மட்டும் கிரிவலம் செல்வது;யோக முறைகளின் மூலமாக மட்டுமே இந்த கிரிவலம் செல்ல முடியும்.
இந்த நந்தன ஆண்டின் திருவாதிரை அமாவாசையானது 19.6.2012 செவ்வாய்க்கிழமை இரவு மணி 9.02க்குத் துவங்கி,20.6.2012 புதன் இரவு 10.11க்கு நிறைவடைகிறது.ஆனால்,திருவாதிரை நட்சத்திரமோ 19.6.12 நள்ளிரவு 1.08(புதன் விடிகாலை)க்குத் துவங்கி,20.6.12 புதன் நள்ளிரவு 2.52க்கு(வியாழன் விடிகாலை)நிறைவடைகிறது.எனவே,செவ்வாய்க்கிழமை இரவு திருவாதிரையும் அமாவாசையும் சேர்ந்துவருவதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த 19.6.12 செவ்வாய் நள்ளிரவு 1.08 மணிக்குப் பிறகு அண்ணாமலையில் கிரிவலம் துவங்கலாம்.அப்படித் துவங்கும்போது,தலையில் வில்வ இலையை பசை வைத்து ஒட்டிக்கொள்ள வேண்டும்;இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபித்துக் கொண்டு கிரிவலம் வருவது நன்று.
அல்லது
அண்ணாமலைக்கு கிரிவலம் வர இயலாதவர்கள் 20.6.12 புதன் கிழமையன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள்ளும்;மாலை 4 மணி முதல் 6 மணிக்குள்ளும் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் உட்பிரகாரத்தைச் சுற்றியவாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
அல்லது
மேற்கூறிய நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் நமது வீட்டில் ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
அல்லது
நமது ஊரில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதிகளில் 20.6.2012 அன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் மஞ்சள் துண்டை கிழக்கு அல்லது வடக்கு நோக்கிவிரித்து,அதில் அமர்ந்து,இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால்,சிவபெருமானின் அருட்கடாட்சம் வெகு விரைவில் நமக்குக் கிடைக்கும்.
ஓம்சிவசிவஓம்
Subscribe to:
Posts (Atom)






