Thursday, December 23, 2010

பாக்குச் சாமிகள்

இவர்தான் பாக்கு சாமிகள் .இவரது படத்தை வெளிடுவதில் ஆன்மிகக்கடல் பெருமை கொள்கிறது. 

thiruchendur murugan

தமிழ்.வெப்துனியா.காம்: பழனி முருகன் என்றால் வழக்கு, குடும்பம், மன நிலையில் மாற்றம், திருமணம் போன்றவற்றிற்காக வழிபடலாம் என்று சொன்னீர்கள். அதேபோல, திருச்செந்தூர் முருகனை எதற்காக வழிபடலாம்?







ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.






செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.






பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல மாற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.






அதேபோல, இப்பவும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்னமும் ஆண் குழந்தை மோகம் நம் நாட்டில் தீரவே இல்லை. அதுபோல வந்து கேட்பவர்களுக்கும் திருச்செந்தூரைத்தான் சொல்கிறோம்.






அதே மாதிரி, கர்ம வினைகள் இருக்கிறதல்லவா, அதாவது ஊழ்வினைப் பயன், அதனை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.






சூரனை சம்ஹாரம் செய்கிறார் என்று சொன்னால், நம்மிடத்தில் இருக்கக்கூடிய சூரத்துவம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போக்கக் கூடிய இடம். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. அதனை அந்த முருகன்தான் தீர்க்க முடியும்.






இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முதன்மையான இடம். அதனைக் கண்கூடாக எவ்வளவோ மக்கள் அனுபவிக்கிறார்கள்.

kukai namasivayar at annamalai

குகை நமச்சிவாயர்:திருஅண்ணாமலையில் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்துவரும் துறவி







பல புத்தகங்களில் அண்ணாமலை துறவிகள்,சித்தர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளன.அவர்களில் முக்கிய துறவிகளில் குகை நமச்சிவாயரும் ஒருவர்.இவரது கோவில் திரு அண்ணாமலையில் பேக்கோபுரத்துக்கு அருகில் மலை மீது அமைந்துள்ளது.அவரது 18 ஆம் தலைமுறை வாரிசுகள் இந்தக்கோவிலில் பூஜை செய்துவருகின்றனர்.






குகை நமச்சிவாயர் கார்த்திகை மாதம் வரக்கூடிய பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தார்.ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் இவரது குருபூஜை விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.


நீங்கள் பூராடம் நட்சத்திரத்தில்(தனுசு ராசி) பிறந்தவரா? ஆம் எனில்,குகை நமச்சிவாயரின் கோவிலில் பூஜை செய்யலாம்.ஒரு முறை உங்களது குடும்பத்தோடு பூஜை செய்ய ரூ.1000/-வரை ஆகும்.நீங்கள் விரும்பும் நாளில் எந்த நாளிலும் பூஜை செய்யலாம்.அன்று தாங்கள் தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து இங்கு வந்து அபிஷேகம் ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம்.இப்படி அடிக்கடி உங்களது பெயரில் அல்லது உங்களது பிறந்த தமிழ் மாதம் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்துவந்தால்,உங்களது நீண்ட காலப்பிரச்னைகள் தீரும் என இங்கு வரும்போது கேள்விப்பட்டேன்.


பூராடம் நட்சத்திரம் தவிர, பிற நட்சத்திரக்காரர்களும் இந்த பூஜையினை நடத்தலாம்.இதற்கான முன்பதிவை குகை நமச்சிவாயரின் வாரிசுகளிடம் தொலைபேசி அல்லது அலைபேசியில் பேசி உறுதிபடுத்திக்கொண்டு குடும்பத்தோடு திருஅண்ணாமலை சென்று குகை நமச்சிவாயரின் அருள் பெறுக!!!


தொலைபேசி:04175 223178


அலைபேசி:94871 19616

ruthratcham+thanks to tamil webdunia

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?




புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன.






ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது.






ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக்கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.






ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்றும் குரோதம் கிடையாது. வட இந்தியப் பெண்கள் சிலர் தலையில் போடும் கிளிப்புகளில் கூட ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.






இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு. பக்கவாதத்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது.






இன்றைக்கும் தரமான, பழமைவாய்ந்த சித்த வைத்தியர்கள் கால் முடக்கம், கை முடக்கம் இதற்கெல்லாம் மருந்தும் கொடுத்து, ருத்ராட்ச மாலையால் கை, கால்களை உருவி மருத்துவம் அளிக்கும் வழக்கமெல்லாம் இன்றைக்கும் இருக்கிறது.






சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளியை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கும். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு. அதனால் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

Wednesday, December 22, 2010

real tamilan

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக் கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.







கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச்


சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.






அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார். ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு


கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.






அதில் ‘மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.






தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.






அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.






விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச்


செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்’ என்று நீண்டது அந்த மனு.






இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.






இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.


“நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால் பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன் கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்காங்க. இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது. சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைகள் இருக்கு. 2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே. கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.? அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற சிரிக்கணுமாக்கும். அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’ என்றார்.






டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.






அந்தக் கடிதத்தில் ‘கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில் 2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்’என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ்


செய்துள்ளார்.






மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும் லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!





பொடிச்சாமிகள்,அண்ணாமலை

இவர்தான் பொடி சாமீ.இவர் அண்ணாமலையில் இருக்கிறார்.இவரது படத்தை வெளியிடுவதில் ஆன்மிகக்கடல்   பெருமை கொள்கிறது.பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் கிரிவலப்பாதைஇல் இவர் தனது பக்தர்களோடு இருந்தார்.அப்போது ஒரு மனிதன்  செல்வதை பார்த்து ,"அதோ குபேரன் கிரிவலம் போகிறான். போங்க எல்லாரும  ஆசிர்வாதம் வாங்குங்க " என அடையாளம்  காட்டினார். . இவரது பார்வை நமது பாவங்களை அழிக்கும்.

thanks to dinamalar 22.12.2010

கம்யூ.,களின் புது சித்தாந்தம்!















அடுத்த ஆண்டு ஏப்ரலில், கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மாநிலத்தில் உள்ள முக்கிய மார்க்சிஸ்ட் தலைவர்கள் அனைவரும், இப்போது அங்குள்ள சர்ச்சுகளில் தான் காட்சி தருகின்றனர். ஆம்... சர்ச்சுகளில் உள்ள பாதிரியார்களை சந்தித்துப் பேசி வருகின்றனர். பாதிரியார்களிடம் தங்களுக்குள்ள நட்பை இன்னும் ஆழமாக்கி வருகின்றனர்.கேரளாவில் உள்ள சிரோ-மலபார் சர்ச்சுக்கும் மார்க்சிஸ்ட்களுக்கும் எப்போதும் ஆகாது.சிறுபான்மையினர் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் முயற்சிகளில் இப்போது, கேரள மார்க்சிஸ்ட்கள் இறங்கியுள்ளனர்.கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன், திருச்சூரில் உள்ள சிரோ-மலபார் பிஷப் இல்லத்தில்தான் அடிக்கடி காட்சி தருகிறார். அங்குள்ள ஆர்ச்பிஷப் மார் ஆன்ட்ரிவ்ஸ் தாழத்து தன் 60ம் பிறந்த நாளிலும், பிஷப் மார் ஜேகப் தூங்குலியின் 80ம் பிறந்த நாளிலும், பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். மார் ஜேகப், இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்.நண்பர்களாக இல்லாவிட்டாலும், எதிரிகளாக இருக்கக் கூடாது என்பது கம்யூனிஸ்டுகளின் லேட்டஸ்ட்


சித்தாந்தம்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ரஷ்யா 16  துண்டுகளாக  உடைந்தது. எனவே அதிகாரம் கிடைக்க கொள்கைகளை இழந்து விட்டனர் தோழர்கள் !!!