Wednesday, November 4, 2009

எதிரிகளை நிர்மூலமாக்கிட

எதிரிகளால் சமாளிக்க முடியாத அளவுக்கு பலவிதமான தொல்லைகள் வந்தால் சமாளிக்க வழி!

நாகப்பட்டிணம் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் இருக்கும் அருள்மிகு நவநீதேசுவர சுவாமி திருக்கோவிலில் ரூ.1000/-அங்குள்ள கோவில் அலுவலகத்தில் செலுத்தி சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்.இப்படிச் செய்தால் எதிரிகளும்,எதிர்ப்புகளும் அழியும்.

நாமே பூஜைப் பொருட்கள் வாங்கினால் ரூ.250/- செலுத்தினால் போதும்.இதற்கு அருணகிரிநாதர் பாடிய பாடலே சாட்சி!

“அழகிய சிக்கற் சிங்கார வேலவ
சமரிடை மெத்தப்
பொங்காரமாய் வரும்
அசுரரை வெட்டிச்
சங்காரமாடிய பெருமாளே!”
பொருள்:முருகக்கடவுள் அரக்கர்களை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர்புரிந்து வென்றார்.

RAREFULLMOON


உலகின் மிகச் சிறந்த அதிசயங்களில் ஒன்று

கி.பி.1866 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பவுர்ணமியன்று முழு நிலவு இல்லை;குறைந்தும் இல்லை.அன்று சந்திரக்கிரகணமும் இல்லை.

இதே போன்ற நிலை இரண்டு கோடி வருடங்களுக்குப் பிறகுதான் ஏற்படும் என வானவியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நன்றி:உலகம் தோன்றிய வரலாறு-புத்தகம்

யாரையெல்லாம் பேய் பிடிக்கும்?

பேய் யாரையெல்லாம் பிடிக்கும்?

தினமும் குளிக்காமல் இருக்கும் பெண்களையும்,

கைகளிலும்,விரல்களிலும் மருதாணி இடாதவர்களையும்,

வெட்டவெளியிலும், மொட்டை மாடியிலும் நிர்வாணமாக(உடல் மீது போர்வை போர்த்தியிருந்தாலும்) தூங்குபவர்களையும்,

உடலுறவுக்குப்பின்னர் வெட்டவெளிகளில் ஆடை உடுத்தாமலும்,குளிக்காமலும்(சுத்தப்படுத்தாமலும்) தூங்குபவர்களையும்,
அடிக்கடி தலையை விரித்துப்போட்டு இருப்பவர்களையும்

பேய் பிடிக்கும்.அல்லது யோகினி எனப்படும் சூட்சும தீய சக்தி பிடிக்கும்.

பெண்களின் விரல் நுனி, தொப்புள்,பிறப்புறுப்பு வழியாக பேய் மற்றும் யோகினி, பெண்களின் உடலுக்குள் புகும்.


எனவே தினமும் குளிக்க வேண்டும்.மஞ்சள் பூசியும்,மருதாணி அரைத்து கைவிரல்களில் பூசியும் வந்தால் நிம்மதியாக வாழமுடியும்.
மஞ்சளும் மருதாணியும் தீயசக்தியை அழிக்கும் சக்தி வாய்ந்தவை.

காதல் ஜெயிக்க ஜெபிக்க வேண்டிய மந்திரம்

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?



அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச் செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.



காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.



ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.
பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.



இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,

Saturday, October 31, 2009

பணம் சார்ந்த பழமொழிகள்


பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள்

தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

எட்டின் மகிமைகள்


எட்டாம் தேதியில் பிறந்து இந்த உலகத்தில் தலையெழுத்தை மாற்றிக்கொண்டிருப்பவர்கள்

நமது மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் பிறந்த தேதி ஜனவரி 17.
இந்துக்களின் விடிவெள்ளி இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।இந்த ஆங்கில எழுத்துக்களின் கூட்டுத் தொகை எட்டு।இதனால் தான் இந்த இயக்கத்தின் நிஜமான நோக்கம் பலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது।ஆனால்,இந்த இயக்கம் இன்று உலகின் மிகப்பெரிய ஒரே சுயச்சார்புள்ள தொண்டர்
இயக்கம் என்ற புகழ் பெற்றுள்ளது।அமெரிக்க உளவுத்துறையான சி।ஐ।ஏ।வால் ஆராயப்படும் முதல் அரசியல் சாராத இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।மட்டுமே।இன்று ஆர்।எஸ்।எஸ்।உலகில் 100நாடுகளில் வளர்ந்துவருகின்றது।இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் புனர்நிர்மாணம் செய்யும் தலைசிறந்த இயக்கம் ஆர்।எஸ்।எஸ்।ஆகும்।இந்த இயக்கத்தின் செயல்பாடுகள்,லட்சியங்கள்,வழிமுறைகளை ஒருவன் தெரிந்துகொள்ளவே ஒருவருக்கு ஒரு வருடம் அகும்.
நடிகை ரோஜாவின் பிறந்த தேதி நவம்பர் 17.

கடவுள் இல்லை;இல்லவே இல்லை என சத்தியம் செய்து இந்துமதத்தினை புதுப்பித்தவர் ராமசாமி நாயக்கர் எனப்படும் ஈ.வே.ரா.அவர்கள் பிறந்ததும் ஒரு 17 ஆம் தேதியில் தான்.

தமிழ்நாடு அரசின் பாரன்சிக் துறையில் பணிபுரிந்து கொண்டே அரசியல்கட்சி ஆரம்பித்த அரசியல்வாதி தொல்.திருமாவளவன் பிறந்தது ஆகஸ்டு 17.

இலங்கைத் தமிழர்களின் துருவநட்சத்திரம், மகா சரித்திரம் வே.பிரபாகரன் பிறந்தது டிசம்பர் 26.

கேரளக்கிளி அசின் பிறந்தது 8 ஆம் தேதியில்.கேரளாவில் பிறந்து தென் இந்திய நாட்டையே மயக்கும் அரபுக்கடல் அப்சரஸ்
நயன் தாரா பிறந்தது 26 ஆம் தேதியில்!

பிரும்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருக்கும் ஷங்கர் பிறந்தது ஒரு 26 ஆம் தேதியில்!
ஆந்திரா மாநிலத்தில் பிரஜா ராஜ்ஜியம் கட்சியை ஆரம்பித்த நடிகர் சிரஞ்சீவி முக்கிய முடிவுகள் அறிவிப்பது் எட்டாம் தேதிகளில்தான்!இவர் குடும்ப அமைப்பின் முக்கியத்துவம் உணர்ந்தவர்.

சரி! இவர்களின் விபரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்களா?

கர்மவீரர் காமராஜர் அவர்களால் மதிய உணவுத்திட்டம் பள்ளிக்கூடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.அதை தமிழ்நாடு முழுக்கப்பரவலாக்கியவர் எம்.ஜீ.ஆர்.அநேகமாக 1979 ஆம் வருடம் இந்த முழுமையான சத்துணவுத்திட்டம் தமிழகம் முழுக்க அறிமுகப்படுத்தப்பட்டது என நினைக்கிறேன்.(சில வருடங்கள் முன்பு அல்லது பின்பு இருக்கலாம்)
இன்று வரை இந்தத் திட்டத்தை யாராலும் ரத்து செய்ய நினைக்கவும் இயலாது।இந்தத் திட்டத்தால் எத்தனை கோடி தமிழ்க்குழந்தைகள் உயிர் பிழைத்தது என்பது கடவுளுக்கே தெரியும்।
(ஆக,பலரின் தலையெழுத்தையே மாற்றும் சக்தி 8,17,26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு உண்டு.இந்த மூன்று தேதிகளும் சனியின் முழு அம்சத்துடன் இயங்குவதால் இந்த தேதியில் பிறப்பவர்கள் பலரது தலையெழுத்தையே அடியோடு மாற்றப்பிறந்தவர்கள்!)

நடிகை ரோஜா ஆணைப்போல வேட்டி சட்டை போட்டு தமிழ்ப்படங்களில் நடித்தார்.இன்றும் இந்த நடைமுறைப் பின்பற்றப்படுகிறது.

பிராமணர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி கோயிலிலும்,ஆன்மீகத்திலும் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை.பிராமணர்களை எதிர்த்தால் ஜாதி வெறியன் என்ற பெயர் வரும்.ஆகவே,இந்த பிராமணர்கள் யாரைச் சொல்லி ஏமாற்றிவருகிறார்களோ,அந்த யாரையே இல்லை எனக்கூறிவிட்டால் தமிழன் சிந்திக்கத்துவங்குவான் .சுயமரியாதையுடன் திகழுவான்.அதனால்தான் கடவுள் இல்லை என நான் பிரச்சாரம் செய்கிறேன் என ஈ.வே.ரா. தனது கருத்தை ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ என்ற புத்தகத்தில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பது, ‘கிறிஸ்தவம்,இஸ்லாம் போன்ற வெளிநாட்டு மதங்களைப்பற்றி எனக்குக் கவலையில்லை.எனது இந்து மதம் இந்த மூடநம்பிக்கைகளால் அழிந்துபோய்விடக்கூடாது.அதற்காக என்னால் முடிந்த சீர்திருத்தம் செய்கிறேன்’ என அந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.அவர் இந்த பிரச்சாரம் செய்து 30 வருடங்கள் ஓடிவிட்டன.

இன்று?!
நான் கோவிலுக்கெல்லாம் போவதில்லை என சும்மா சாதாரணமாக ஒருவர் சொன்னாலே அவரிடம் , ‘ஏன்பா நீ நாத்திகவாதியா?’ என கேட்குமளவுக்கு ஈ.வே.ரா.வின் பிரச்சாரம் அமைந்துள்ளது.
(17 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அனைவரும் சீர்திருத்தவாதிகள்.இவர்கள் மதவிஷயங்களில் ஈடுபாடு கொண்டால் அளவற்ற எதிர்ப்பை சம்பாதிப்பார்கள்.ஆனால்,இவர்களது சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் கடந்தும் பரவிக்கொண்டே இருக்கும்)

இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியாவை இலங்கைக்கு ஆதரவாகவும்,தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய அரசை திருப்பியது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருக்கும் எம்।கே।நாராயணன் என்ற மலையாள அதிகாரிதான்.அந்த அதிகாரியின் நயவஞ்சகத்தை அரசியல் அரங்கில் தோலுரித்துக்காட்டியவர் தொல்.திருமாவளவன்.அதற்காக மத்திய அரசின் மிரட்டலுக்கும் ஆளானார்.ஆதாரம்:1.1.2009 முதல் 1.9.2009 வரை வெளிவந்த தமிழ்நாட்டு தினசரிப்பத்திரிகைகள்.ஆக அவரது பிறந்த தேதியான ஆகஸ்டு 17 இங்கு செயல்படுவது தெரிகின்றது.

கி।பி।1970 முதல் இலங்கைத் தமிழ்இனத்தை அழித்துக்கொண்டே இருக்கும் இலங்கை அரசு பிரபாகரனின் அசுரப்பாய்ச்சலுக்குப் பின்னர் தான் சிங்கள ராணுவத்தின் கொட்டம் அடங்கியது।இலங்கைத் தமிழ்மக்களின் தலையெழுத்தை மட்டுமல்ல,இலங்கை அரசு, இந்திய அரசு இவைகளின் தலையெழுத்தையே மாற்றும் சர்வ வல்லமை சனியின் அம்சத்தில் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு என்பதை இதுவரை நாம் படித்த செய்திகள் சொல்லும்।இந்த உலகத்தில் எந்த ஒரு நாட்டின் உதவியும் இன்றி தனது மக்களை தன்னந்தனியாகவே போராடிக் காப்பாற்றிவரும் பிரபாகரனின் வரலாற்றை எழுதவே 20 லட்சம் பக்கங்கள் தேவைப்படும்.அவர் பிறந்தது டிசம்பர் 26.


பிரபாகரனிடம் சீனா பல முறை ரகசியப்பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றது. சீனா பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் வாங்கித் தருமாம்.அதற்குப் பரிசாக திரு கோணமலையை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு தரவேண்டுமாம்.(இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலைத் துறைமுகத்தின் மீது அமெரிக்காவுக்கு நீண்டநாட்களாக காதல் உண்டு) பிரபாகரன் இந்தியா மீதும்,தமிழ்நாட்டின் மீதும்,தமிழ் சகோதர்கள் மீதும் உள்ள பாசத்தால் இதைச் செய்யவில்லை;(இதைச் செய்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தோடு உலக வரலாறே மாறிப் போயிருக்கும்)
இப்போது, சீனா இலங்கை அரசிடம் இதே கோரிக்கையோடுதான் கொஞ்சிக்குலாவுகிறது। ஆதாரங்கள்:தமிழ்நாட்டில் வெளிவரும் அனைத்து தமிழ்ப்பத்திரிகைகளும். கி.பி.2006,2007,2008,2009.

தமிழ்சினிமாவில் பிரம்மாண்டம் என்பதை நவீனமயமாக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.ஒரு பாடலுக்கு ஒரு கோடி ரூபாயைச் செலவிடும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர்.இவரது ஒவ்வொரு படமும் மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்தாலே 10 பி.எச்.டி.பட்டம் வாங்கலாம்.

எம்.ஜி.ஆர்.(17) அவர்கள் பிரபாகரன்(26) மீது பாசம் வைத்திருந்தார்.தற்போது திருமாவளவன்(17), பிரபாகரன் மீது அக்கறை கொண்டுள்ளார்.

8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எப்போதும் தான் ஒரு அனாதை என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்।எனக்கென இந்த பூமியில் யார் இருக்கிறார்கள் என ஏக்கத்துடன் இருப்பர்। ஆனால் இவர்களைப் போல வேறு யாரும் கடுமையாக உழைப்பது அரிது.

இவர்கள் நண்பர்களை பாதிப்பார்கள்.அதாவது,இவர்களது சில ஆளுமைத்திறனை இவருடன் பழகுபவர்கள் பின்பற்றத்துவங்கி மள மளவென முன்னேறிக்கொண்டே இருப்பர்.இவர்கள் மிக மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுவர்.

இவர்களுக்கு 1 ஆம் எண்காரர்கள் போல வேறு யாரும் உதவ முடியாது.

LONGLIFE


ஒருவரது ஆயுள்பலம் அதிகரிக்க ஆலோசனைகள்

1.தினமும் காலையும், மாலையும் அரைமணிநேரத்திற்கு குறையாமல் ப்ராணயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி செய்துவருதல்.(இந்த ப்ராணயாமப்பயிற்சியை இராமகிருஷ்ணமிஷன் கிளைகளிலும், வேறு பல இந்து மத ஆன்மீக மடங்களிலும் பயிற்றுவிக்கிறார்கள்)

இருபது நிமிடம் தன்னை மறந்த தியானம் செய்யவேண்டும்.(இதன் பெயர் ஆழ்நிலைதியானம்.நமது ஆன்மீகக்கடலில் ஆழ்நிலை தியானம் பயிற்றுவிக்கும் தமிழ்நாட்டு இடங்களை டிசம்பர் 2008 ஆம் வலைப்பூக்களில் குறிப்பிட்டுள்ளோம்..அல்லது http://www.tm.org/ என்ற ஆங்கில இணைய தளத்தில் நீங்கள் உங்கள் பகுதியில் ஆழ்நிலை தியானம் சொல்லித்தரும் இடத்தைக் கேட்டால் மின் அஞ்சல் அனுப்புவார்கள்.)
(இந்த ஆழ்நிலை தியானம் செய்யத்துவங்கிய சில நாட்களில் நமது தேவையற்ற கோபம்,ஆவேசம்,பொறாமை,ஆத்திரம்,வறுமை,பயம்,கூச்சம், தேவையற்ற வெட்கம், பதட்டம்,நோயின் வேதனைகள் எல்லாமே காணாமல் போயிருக்கும்)

2.கீழ்க்கண்ட மந்திரத்தை தினமும் காலையும்,மாலையும் குறைந்தது 32 தடவை ஜபிக்கவேண்டும்.வீட்டில் பூஜை அறை அல்லது அருகில் உள்ள கோவிலில் ஜபிக்கலாம்.

த்ரியம்பகம் யஜாமஹே
ஸீகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர்
முக்ஷிய மாம்ருதாத்

3.பல ஜோதிடர்களிடம் உங்கள் பிறந்த ஜாதகத்தை காண்பிக்காமல் இருத்தல்

(பல ஜோதிடர்கள் சமூகப் பொறுப்புடன் இருப்பதில்லை.சிலருக்கு கருநாக்கு இருக்கும்.ஆனால் நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்.அந்த கருநாக்கு ஜோதிடர் என்ன சொல்லுவார் என்பதை உணருங்கள்.)
(தமிழ்நாட்டில் ஒரு நப்பிக்கூட்டம் இருக்கின்றது.இவர்கள் கையில் எப்போதும்,இவர்களின் பிறந்த ஜாதகக்கட்டம் இருக்கும்.ஒரு நாளுக்கு ஒரு முறையாவது ஜாதகம் யாரிடமாவது ஓசியில் பார்க்காவிட்டால் இவர்கள் தூங்கமாட்டார்கள்.எனக்கு ஜோதிடம் தெரியும் என எவர் சொன்னாலும் போதும்.இந்த ரக மனிதர்கள் உடனே அவர் காலில் விழுந்தாவது தனக்கு ஜோதிடம் சொல்லும்படி கெஞ்சுவர்.இப்படி வாழ்நாள் முழுக்கப்பார்த்துக்கொண்டே இருப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரு டீக்காக இவர்களுக்கு ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்கும் கூத்தும் நடக்கிறது.இது மாபெரும் தவறு)