Thursday, June 25, 2009

பாரதம் அன்றும் இன்றும்


பாரதம் அன்றும் இன்றும்

கடந்த 10,000 ஆண்டுகளாக எந்தநாட்டின் மீதும் பாரதம் படையெடுக்கவில்லை.

கணக்கிடுவதற்குத் தேவையான பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது பாரதம் தான்.பூஜ்ஜியத்திற்கு மதிப்பைக் கண்டறிந்தவர் தமிழ்நாட்டுக் கணிதமேதை ராமானுஜம்தான்.

உலகின் முதல் பல்கலைக்கழகம் தட்சசீலம் ஆகும்.இது கிறிஸ்து பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது.
உலகம் முழுவதுமிருந்து 10,500 மாணவர்கள் இங்கு பயின்றனர்.600 க்கும் மேற்பட்ட பாட வகைகள் இங்கு கற்பிக்கப்பட்டன.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழி சமஸ்க்ருதம் தான்.கணிப்பொறி எனப்படும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்க ஏற்ற மொழி சமஸ்க்ருதம் தான் அமெரிக்கப் பத்திரிகையான
போர்ப்ஸ் 1987 ஜீலை மாத வெளியீட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

ஆதிகாலத்தில் மனிதன் கண்டறிந்த முதல் வைத்திய முறை ஆயுர்வேதம் தான்.இதை சரகர் என்ற இந்து ரிஷி கண்டுபிடித்து முறைப்படுத்தினார்.இன்று இங்கிலாந்தின் அரசி எலிசபெத் யோகாசனம் சார்ந்த ஆயுர்வேத வைத்திய முறையை பின்பற்றி வருகிறார்.45 வயதான பாப் பாடகி மடோனாவின் குரல் வளமும், கட்டுடலும் யோகாசனப்பயிற்சியால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

நாவிகேஷன் என்ற சொல்லப்படும் கப்பல்,படகு செலுத்தும் கலையை 6000 ஆண்டுகளுக்கு முன் சிந்து நதிக்கரையில் நிகழ்த்திக்காட்டியவர்கள் இந்துக்கள்.நவ்கத் என்ற சமஸ்க்ருத சொல்லே ஆங்கிலத்தில் நாவிகேஷன் ஆனது.

அதே போல தீ என்றால் நெருப்பு.ஆதிகாலத்தில் தீயை தமிழர்கள் வழிபட்டார்கள்.ஆங்கிலத்தில் கடவுள் என்ற வார்த்தைக்கு thee என்று பெயர்.எழுதப்படாத வரலாற்றுக்கு முன்பே இந்துயாவுடன் இங்கிலாந்து வாணிகத் தொடர்பு இருந்ததற்கு இந்த வார்த்தை ஒரு ஆதாரமாகும்.

பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக்கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்ததாக கூறுவதற்கு முன்பே கி.பி.5 ஆம் நூற்றாண்டிலேயே பாரதத்தின் பட்டாச்சாரியார் கண்டுபிடித்துவிட்டார்.மிகச்சரியாக
365.258756584 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியார் கண்டுபிடித்தார்.

கணிதத்தில் பையின் மதிப்பை கணிக்கிட்டவர் போதாயனார் என்ற பாரத ரிஷி ஆவார்.ஐரோப்பிய கணித மேதைகள் பிதோகரஸ் தேற்றத்தை விளக்குவதற்கு முன்பே அதாவது 6 ஆம் நூற்றாண்டிலேயே போதயனார் விளக்கிவிட்டார்.

கணிதத்தில் அல்ஜீப்ரா,டிரிக்னாமெட்ரி,கால்குலஸ் ஆகியவை பாரதத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.குவார்ட்ராடிக் சமன்பாடுகள் ஸ்ரீதராச்சாரியார் என்ற பாரதீயரால் 11 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டன.

கம்பியில்லாத தகவல் தொடர்பை பாரதத்தின் ஜகதீஷ் சந்திர போஸ் முதலில் கண்டுபிடித்தார்.மார்க்கோனி அல்ல என அமெரிக்க நிறுவனமான I.E.E.E. உறுதியாக கூறுகிறது.

சுஸ்ருதர் என்ற பாரதீயர் 2600 வருடங்களுக்கு முன்பே சிசேரியன்,கேடராக்ட்,செயற்கைக்கால்,கை, கால் எலும்புமுறிவு, மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.
அறுவைசிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்துவ சிகிச்சையும் செய்து இருக்கிறார்.125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக் கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.

அமெரிக்க டாக்டர்களில் 38%,விஞ்ஞானிகளில் 12% நாசாவில் 36%, மைக்ரோசாப்டில் 34%, இன் டெல்லில் 17%,சிராக்ஸ் ஸில் 13%, ஐ.பி.எம்மில் 28% இந்தியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவ்வளவு பெருமைகள் இருந்தும் நாம் ஏன் இந்த பூமியை ஆளக்கூடாது?

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்

இந்தியாவின் உள்ளார்ந்த பெருமைகள்

இந்தியாவில் தமிழ்நாட்டில் கி.பி.2005 ஆம் வருடம் வரதட்சணை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகார்களில் 260 புகார்களில் 200 பொய்யானவை.கி.பி.2006 ஆம் வருடம் கொடுக்கப்பட்ட புகார்களில் 285 புகார்களில் 220 பொய்யானவை என தெரியவந்துள்ளது.மாமியார் மற்றும் மனைவியின் பெற்றோர்களின் பணத்தாசையே பெரும்பாலும் காரணம்.தன் மகளின் ஒழுக்கமான எதிர்காலம் பற்றி சிறிதும் கவலையில்லை.
ஆக சட்டங்களால் சமுதாய கட்டமைப்பை அழிக்கத்தான் முடியும்.

இந்தியாவில் உள்ள 7 லட்சம் கிராமங்களில் மொத்தம் 12,400 காவல் நிலையங்களே உள்ளன.பெரும்பாலும் தேர்தல் சமயத்தில் மட்டுமே காவலர்கள் 7 லட்சம் கிராமங்களுக்கும் வருவார்கள்.

நாமக்கல்லில் இந்தியாவிலேயே அதிக லாரிகள் வைத்திருக்கும் முதலாளிகள் இருக்கிறார்கள்.டாடா போன்ற பெரிய நிறுவனங்கள் கூட கனரகவாகனங்கள் பற்றி ஆய்வு நடத்திட நாமக்கல்லுக்குத்தான் வருகிறார்கள்.

அமெரிக்காவில் சாலையோர உணவகங்கள் எனப்படும் மோட்டல்களில் 80% குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பட்டேல் சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து மான்செஸ்டர் பஞ்சாலைகளை ராம்காடியா சமுதாயத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

திருப்பூரில் ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய்களுக்கு ஏற்றுமதி செய்பவர்கள் வெறும் 300 தமிழர்கள் மட்டுமே! இவர்களில் 99% பேர் படிப்பில் 6 ஆம் வகுப்பைத் தாண்டாதவர்கள்.

சுதந்திரம் வாங்கிய போது கி.பி.1947 இல் உலக பொருளாதார வளர்ச்சி 4.2%.இந்திய பொருளாதார வளர்ச்சி 2% மட்டுமே!
இன்று(அமெரிக்காவைச் சார்ந்திருப்பதால்) உலக பொருளாதார வளர்ச்சி(கி.பி.2007)3.1%
இந்திய பொருளாதார வளர்ச்சி 7%
நம்மைப் பார்த்தே ஆங்கிலேயர்கள் சமுதாயக் கல்வியில் ஈடுபட்டனர்.

சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்


இலங்கையில் சிங்கள ராணுவம் செய்யும் கொடூரங்கள்

12 வயது முதல் 40 வயது வரை உள்ள தமிழர்களில் ஆண்கள், பெண்களை பிரித்து சித்ரவதைக்கூடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
அங்கு அவர்கள் செய்யும் சித்திரவதைகளை அனுபவிக்கும் போதே காந்தியை நான் தான் கொன்றேன் என ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும்.அப்படி ஒப்புக் கொள்ளாவிட்டால் செத்துத்தான் போக வேண்டும்.
பெண்களின் நிலை மிக மிக மோசம்.கர்ப்பிணிப் பெண்கள் 4-5-6-7 மாத கர்ப்பிணியாக இருந்தாலும் வலுக்கட்டாயமாக கருக்கலைக்கப்படுகின்றனர்.இளம்பெண்களின் மானம் காற்றில் பறக்கிறது.சிங்கள ராணுவம் குழுவாக ஒரே தமிழ்ப்பெண்ணைக் கற்பழிக்கிறார்கள்.கற்பழித்த பிறகு அந்த பெண்ணின் பிறப்புறுப்பினுள் வெடிகுண்டு வைத்து அதை வெடிக்க வைத்துக் கொல்கின்றனர்.சில சித்திரவதைகளை இங்கு எழுத முடியவில்லை.அவ்வளவு கொடுமைகள் இன்னும் இலங்கைத் தீவில் தொடர்கிறது.இந்த நிலை இன்று வரை(25.6.2009) தொடர்கிறது.இனியும் தொடரும்.. .. .. .. .. .. .. ..
இதைக் கூட நாம் கண்டிக்காமல் வாழ்ந்தால் நாமெல்லாம் மனிதர்களா? தமிழன் என்பதை பிறகு பார்ப்போம்.
சரத் பொன் சேகா-இவன் தான் தலைமை ராணுவத் தளபதியாம்,ராஜபக்ஷே தான் இலங்கையின் ஜனாதிபதியாம்.
மானம், மனித நேயம் ,சமதர்மம் என்பது இந்தியாவுக்கு இருக்குமானால் இந்தகொடூரங்களை உடனே நிறுத்தப்படவேண்டும்.ஏன் எனில் இலங்கையை வளமான தீவாக மாற்றியதற்கு சிங்கள ஹிட்லர் அரசு தமிழர்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?
ஒரு நாளும் சீனாவும் பாகிஸ்தானும் மனித நேயம் என்றால் என்னவென்றே உணராது.அவை வெறி பிடித்த நாடுகள்.
இத்தாலிக்காரி சோனியாவை ஜெயிக்க வைத்த நமக்கு நாளைக்கே நம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் மேலே கூறிய கொடூரங்களை அனுபவித்த பின்னர்தான் நமக்கு புத்தி வருமா?

Wednesday, June 24, 2009

ஜாதிகள் பற்றிய சரியான விளக்கம்:காஞ்சி சுவாமிகள்

ஜாதிகளைப் பற்றி சரியான விளக்கம்:காஞ்சி பரமாச்சாரியர் சுவாமிகள் சொன்னது

ஆதியில் பாரம்பரியம் என்ற கட்டுப்பாடாக வைத்தார்கள்.அப்போது தொழிலே ரத்தத்தில் ஊறி, அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலே ஒரு பெருமையுடன் ‘இது நம் அப்பன் பாட்டன் காலச் சொத்து;நம் குல தனம்’ என்ற நிறைவு இருந்தது.அந்தந்தத் தொழிலைச் செய்வதிலும் அந்தரங்க விசுவாசம் இருந்தது.அதனால் நல்ல திறமையும் இருந்தது.
இன்றைக்கு ஒவ்வொருத்தனும் பணத்துக்காகவே என்று வந்துவிட்டதால் தொழிலை ஒழுங்கில்லாமல் செய்கிறான்.
முன்காலத்தில் பணம் இரண்டாம் பட்சம்தான்;விசுவாசத்தோடு ‘தன் தொழில்’ என்று திருப்தியோடு செய்ததால், எல்லாக் காரியங்களும் ஒழுங்காய் நடந்தன.சமுதாயமும் நன்றாயிருந்தது.
ஆதாரம்:பக்கம் 222,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சி சுவாமிகள்.

தமிழ்ப் பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்


தமிழ்ப்பண்பாடே இந்துப்பண்பாடு:ஆதாரத்துடன்

பூர்வத்திலேயே தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.ஆந்திரர்களுக்கும் சோழர்க்கும் கல்யாண கொள்வினை, கொடுப்பினை இருந்த காலத்தில் இப்படி பலர் வடக்கே போயிருக்கிறார்கள்.இப்போது வட நாட்டில் திராவிட் (Dravid)என்று குடும்பப்பெயர் போட்டிருக்கிறார்கள்.
ஆனால் வெளிமாநிலங்களில் குடியேறிய இந்த திராவிடர்களுக்கு தமிழ் மொழி போகப் போக தெரியவில்லை.
ஒரு பகுதியில் குடியேறும் பிற பகுதி மக்கள் நாளாவட்டத்தில் தம் தாய் மொழியை மறந்துவிடுகிறார்கள்.
ஆரியர் திராவிடம் என்ற பேதம் இரு வேறு இனமாக பேதப்படுத்தப்பட்டதற்கு ஆதாரமில்லை.பஞ்ச திராவிடர்கள் என்பது பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டதேயன்றி வேறில்லை;பிற்காலத்தில்தான் இதை அரசியல் சுயநலத்திற்காக இனப்பாகுபாடாக்கிவிட்டனர்.
ஆதாரம்:463-464,தெய்வத்தின் குரல் பாகம்-1
காஞ்சிப் பரமாச்சாரியார் அவர்கள்.வானதிப் பதிப்பகம் வெளியீடு.

கபிலர் மகரிஷியின் ஆசிரமம்தான் இன்றைய கலிபோர்னியா

அமெரிக்காவும் ஒரு இந்து தேசம்தான் – ஆதாரத்துடன் விளக்கம்

ஸாகரர்கள் குதிரையைத் தேடி பாதாளத்துக்கு வெட்டிக்கொண்டே போனார்கள். அப்போது உண்டான கடலே ‘ஸாகர’மாயிற்று.கடைசியில் கபில மகரிஷி ஆஸ்ரமத்திற்குப் பக்கத்தில் குதிரையைக் கண்டார்கள்.அவரே குதிரையை அபகரித்ததாக எண்ணி அவரை இம்சித்தார்கள்.அவரோ ஸாகரர்களை தனது திருஷ்டியினால் பொசுக்கி சாம்பலாக்கினார்.- இது ராமாயணக்கதை.
நம் தேசத்துக்கு நேர் கீழே உள்ள அமெரிக்காவை பாதாளம் என்று வைத்துக் கொண்டால் அங்கேயிருக்கும் கபிலாரண்யம்(மதுரை என்பது மருதை என்று மாறியது போல)கபிலாரண்யமாக-
கலிபோர்னியாவாக இருக்கலாம்.அதற்குப் பக்கத்தில் குதிரைத்தீவு(Horse Island),சாம்பல் தீவு(Ash Island) இவை உள்ளன.
ஸகரர், ஸாகரம் பற்றி இன்னொன்றும் தோன்றுகிறது.ஸகாரா பாலைவனமும் ஒரு காலத்தில் கடலாக இருந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.ஸாகரம் தான் ஸகாராவாயிற்றோ என்று தோன்றுகிறது.
ஆதாரம்:தெய்வத்தின் குரல் பாகம்-१.காஞ்சிப்பரமாச்சியார் அவர்கள் பக்கம் 168-169 வானதிப் பதிப்பகம் வெளியீடு।இணையதளம்:www.vanathi.in

Sunday, June 21, 2009

பணம் பணம் பணம் பணம்







பணம் பற்றிய பழமொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்கே தெரியாது.பணம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது.

பாதிப் பணக்காரனாகிவிட்டால் முழுப்பணக்காரனாவது எளிது.

செல்வம் சேர்ப்பதற்கு அறிவு வேண்டும்;அப்படி சேர்க்கும் செல்வத்தை கட்டிகாக்க துணிவு வேண்டும்.அறிவு இருக்கிற அளவுக்குப் பலரிடம் துணிவு இருப்பதில்லை.(அதனால் தான் இந்தியா இன்னும் ஏழை நாடாக இருக்கிறது)

வாங்குபவனுக்கு நூறு கண்கள் தேவை.விற்பவனுக்கு ஒரு கண் போதும்.

கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகம் விரும்புபவனே ஏழை.

தேவையற்ற பொருட்களை வாங்கும் வழக்கம், முடிவில் தேவையுள்ள பொருட்களை விற்கும் நிலைக்குக் கொண்டுவந்துவிடும்.

எல்லோரும் பணத்தை வெறுக்கிறார்கள்.அடுத்தவருடைய பணத்தை மட்டும்!!!
ஒரு முறை சம்பாதித்த பணம் இருமுறை சேமித்ததற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் எவ்வளவு தேவைப்படும் என்று இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி பணப்பையை மூடிக்கொள்ளும்.

பணத்தை உங்களுக்கு அடிமையாக்குங்கள்.இல்லையேல் அது உங்களை அடிமைப்படுத்திவிடும்.இதனால் உங்களது ரத்த உறவுகள் சிதைந்துவிடும்(மொத்த தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் இந்த சிதைவு தான் நடக்கிறது.)

காலத்தை வீணாக்குவதே மோசமான செலவு

செல்வச்செருக்குடையவர்கள் தங்களுடைய உடமையை மட்டுமல்ல;உள்ளத்தையும் கூட அடமானம் வைக்கத் தயங்க மாட்டார்கள்.