Thursday, February 4, 2021

புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள்!!!

 புனுகு பற்றிய ஆன்மீக உண்மைகள்

எந்த ஒரு தெய்வத்தை வழிபட வேண்டும் என்றாலும் அதற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்ய வேண்டும்.பூஜை அபிஷேகம் ஆராதனையின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.
விநாயகரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை இருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் தினசரி புனுகு சாத்தும் பழக்கம் போன நூற்றாண்டு வரை இருந்து வந்தது. அதனால் நமது நாடு முழுவதும் மக்கள் ஆழ்ந்த மன நிம்மதியோடு தினசரி வாழ்க்கையை நடத்தினார்கள்.
ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி திதி வரும்போதும் ராகு காலம் அல்லது குளிகைகாலத்தில் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபட வேண்டும். குறைந்தது மாதம் ஒரு முறை வீதம் ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் யார் விநாயகருக்கு புனுகு சாத்தி வழிபடுகிறார்களோ அவருக்கு விநாயகப்பெருமானின் அனுக்கிரகம் கிடைத்து அவர் ஆன்மீகத்தில் அடுத்த நிலைக்கு முன்னேறி விடுவார். தேய்பிறை சதுர்த்தி தவிர தேய்பிறை சதுர்த்தசி திதியில் விநாயகருக்கு அபிஷேகமும் புனுகு சார்த்தும் பூஜையும் செய்யலாம்.(பெரும்பாலான சதுர்த்தசி திதி தேய்பிறை சிவராத்திரி அன்று அல்லது அதற்கு முன்பு வரும்)
செவ்வாய் கிரகத்தின் அதிதேவதையான முருகக் கடவுளுக்கு தேய்பிறை சஷ்டி திதி வரும் நாளில் செவ்வாய் ஓரை அல்லது ராகு காலம் அல்லது குளிகை காலத்தில் புனுகு அணிவிக்க வேண்டும். அது தவிர செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது மதியம் ஒரு மணிக்கு மேல் இரண்டு மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் புனுகு சாத்தும் பரிகாரம் பல நூற்றாண்டுகளாக நம்முடைய தமிழ்நாட்டில் இருந்து வந்தது.
மாநிலத்தின் காவல் தெய்வம் மகா வராகி என்று புறநானூறு தெரிவிக்கின்றது.புறநானூறு காலத்தில் மாநிலம் என்பது நமது பாரத நாடு முழுவதையும் குறிக்கும்.
தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக மாந்திரீக பிரச்சினைகள் நம்மையும் நமது குடும்பத்தையும் நமது வேலை அல்லது தொழிலையும் சிறிதும் பாதிக்காது.
அசைவ உணவு உண்ணும் பழக்கத்தையும் மது அருந்தும் பழக்கத்தையும் கைவிட்டு இருக்கவேண்டும்.
ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி திதி அன்றும் சப்தகன்னியர் சன்னதியில் இருக்கும் வராகி தாய்க்கு புனுகு அணிவிக்க வேண்டும். புனுகு அணிவித்த பிறகு கூட்டாக பலபேர் சேர்ந்து வராகி மாலை பாராயணம் செய்ய வேண்டும்.
மிகவும் கொடூரமான ஜின் மாந்திரீகத்தால் தமிழ்நாடு முழுவதும் பலர் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தினமும் வராகிமாலை ஜெபித்து வருவதன் மூலமாக ஜின் மாந்திரீக பாதிப்பு முழுமையாக விலகிவிடும்.
முருகக் கடவுளுக்கு புனுகு சாத்துவது மூலமாக வீடு மனை சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக விலகி விடும். ரத்தம் சார்ந்த நோய்கள் வராது. உடன் பிறந்த சகோதர சகோதரர்களுடன் எப்போதும் நல்லுறவு இருக்கும். எதற்கெடுத்தாலும் பயப்படும் குணம் படிப்படியாக விலகிச் சென்றுவிடும்.
ராகு மகா திசை நடப்பவர்கள் மற்றும் ராகு நட்சத்திரங்களான திருவாதிரை சுவாதி சதயம் ஒன்றிலிருந்து வாழ்ந்து வருபவர்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் துர்க்கை அல்லது வராகியை தினமும் ஜெபித்து வருவது அவசியம். விஷ்ணு துர்க்கை , வனதுர்க்கை, மகா துர்க்கை என்று பல்வேறு விதமான துர்க்கை அவதாரங்கள் உண்டு.
துர்க்கையின் அவதாரங்கள் எதுவாக இருந்தாலும் துர்க்கையின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள் தேய்பிறை சப்தமி திதி அன்று துர்க்கைக்கு அணிவித்து அபிஷேகம் செய்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும். மாதம் ஒரு தேய்பிறை சப்தமி என்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரை இடைவிடாமல் இவ்வாறு துர்க்கை வழிபாடு செய்து வருவதன் மூலமாக வளமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை துர்க்கையின் அருளால் கிடைக்கும்.
ஒன்பது கிரகங்களும் கால தேவன் என்ற காலபைரவரின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. காலபைரவர் தேய்பிறை அஷ்டமி அன்று ஈசனின் அருளால் உதயமானார். தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும்போது பைரவருக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் அர்ச்சனை செய்ய வேண்டும். நம்முடைய கர்மவினைகளை வெகுவேகமாக குறைந்து நிம்மதியோடும் ,வளமோடும், ஆரோக்கியத்தோடும் வாழ விரும்பினால் பைரவர் ஜெபம் அல்லது வராகி ஜெபம் தினமும் செய்துவர வேண்டியது அவசியம்.
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் இருக்கும் நேரத்தில் கால பைரவருக்கு புனுகு அணிவித்தால் கர்ம வினைகள் குறையும் ;நிம்மதியான தினசரி வாழ்க்கை கிடைக்கும்;
தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு புனுகு அணிவிப்பதன் மூலமாக வருமானம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும் ;எவ்வளவு பெரிய அளவில் கடன் இருந்தாலும் அது படிப்படியாக குறைந்து கடன் இல்லாத நிலை நமக்கு வந்து விடும்.
தேய்பிறை நவமி திதி வரும் நாளில் அமைந்திருக்கும் ராகு காலம் அல்லது குளிகை காலம் வரும் நேரத்தில் துர்க்கை அல்லது வராகி அல்லது மகேஸ்வரி அல்லது முத்துமாரி அல்லது செல்லியம்மன் அல்லது மாரியம்மாள் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களை புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வழிபாட்டின் முடிவில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும். இதன் மூலமாக நம்முடைய வாழ்க்கையில் எது நீண்டகால ஏக்கங்கள் இருக்கின்றதோ அவை அனைத்தும் படிப்படியாக தீர்ந்து விடும்.
சிலருக்கு தனது குழந்தைக்கு திருமணம் முடியவில்லையே என்ற ஏக்கம்
சிலருக்கு சொந்த வீடு அமையவில்லையே என்ற ஏக்கம்
சிலருக்கு பூர்விகச் சொத்து கிடைக்காமல் வழக்கு மற்றும் சண்டை சச்சரவு போன்றவைகளால் நிம்மதி இல்லாத வாழ்க்கை.
சிலருக்கு திருமணம் ஆகியும் சில வருடங்களுக்குள் குழந்தையின்மை ஒரு மிகப் பெரிய ஏக்கமாக இருக்கிறது.
சிலருக்கு போதுமான அளவு வருமானம் இல்லை போதுமான அளவு வருமானம் அதிகரிக்கவில்லை என்ற ஏக்கம்.
பலருக்கு எதற்கெடுத்தாலும் யாரைப் பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் பயம் பயம் பயம்
இவை அனைத்தும் தீர தேய்பிறை அஷ்டமி திதி வரும் நாளில் காலபைரவ பெருமானுக்கு தேய்பிறை பஞ்சமி மற்றும் தேய்பிறை நவமி வரும் நாட்களில் உங்கள் ஊரிலுள்ள உக்கிரமான பெண் தெய்வத்திற்கு புனுகு அணிவிக்க வேண்டும்.
தேய்பிறை ஏகாதசி திதிகள் வரும் நாட்களில் ராகு காலம் அல்லது குளிகை கால நேரத்தில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களான பெருமாள் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அல்லது ஸ்ரீ ஹயக்ரீவ பெருமான் அல்லது ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து அன்னதானம் செய்ய வேண்டும்.
தேய்பிறை பிரதோஷம் வரும் நாளில் நந்தி பகவானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கித் தரலாம். இதன் மூலமாக சிவ கடாட்சம் பெருகும். குலதெய்வத்தின் அருளாசியும் நமக்கு வெகு விரைவில் கிடைக்கும்.
அம்மாவாசை அன்று சிவலிங்கம் மற்றும் நடராஜப்பெருமானுக்கு புனுகு அணிவித்து அபிஷேகம் செய்து வர நம்முடைய கர்மவினைகள் வெகுவிரைவில் குறையும் மனம் சார்ந்த பிரச்சனைகள் தீரும்.தெளிவான மனநிலை இருந்தால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய மனிதராக நம்மால் செயல்பட முடியும்.
பௌர்ணமி அன்று நள்ளிரவு 11 30 முதல் 12 30 க்குள் சாந்தமான பெண் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து அதன் முடிவாக புனுகு சாத்தி வர அம்பாள் கனவில் காட்சி தருவாள். ஸ்ரீ பார்வதி தேவி, ஸ்ரீ மகாலட்சுமி தேவி, ஸ்ரீ பத்திரகாளி தேவி, ஸ்ரீ சாந்த அங்காளபரமேஸ்வரி, ஸ்ரீ மகேஸ்வரி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி,ஸ்ரீதுர்க்கா பரமேஸ்வரி போன்ற பல்வேறு பெயர்களில் உள்ள சாந்தமான பெண் தெய்வங்களின் அனுகிரகம் பெற பௌர்ணமி பூஜை அன்று புனுகு சாத்தி அன்னையின் அருள் பெறலாம்.
சனிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் கால பைரவர் அல்லது ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு புனுகு அணிவித்து அர்ச்சனை செய்து அன்னதானம் செய்துவர ஆழ்ந்த நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
உங்களுக்கு பாதகம் உள்ள கிரகத்தின் திசை நடைபெற்று கொண்டு இருந்தால் அந்த கிரகத்தின் கிழமை அன்று அந்த கிரகத்தின் ஓரை வரும் நேரத்தில் நவகிரகம் இருக்கும் பழமையான ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த கிரகத்திற்கு புனுகு அணிவித்து பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சூரிய மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சூரியபகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு ரூபாய் 11 கண்டிப்பாகத் தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சந்திர மகா திசை நடைபெற்றுக்கொண்டு இருந்தால் திங்கட்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் சந்திர பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 20 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் குரு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால், வியாழக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியிலுள்ள குருபகவானுக்கு புனுகு அறிவிக்க வேண்டும் .உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலமாக குரு பகவானால் ஏற்படும் பாதகங்கள் பெருமளவு குறையும்.பூசாரிக்கு ரூபாய் 30 கண்டிப்பாகத் தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் ராகு மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால் , ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் (ராகு காலத்தில்) நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் ராகு பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊரில் எனது கிராமத்தில் பழமையான ஆலயம் இல்லாதபட்சத்தில் துர்க்கை அல்லது உக்கிரமான பெண் தெய்வத்திற்கு இதே நேரத்தில் புனுகு அணிவித்து அர்ச்சனை செய்யலாம்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் புதன் மகாதசை நடைபெற்று கொண்டு இருந்தால் புதன்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் புதன் பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சுக்கிர மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தாள் வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் சுக்கிர பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்களது பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 15 தட்சனை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் கேது மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தாள் ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் குளிகை காலத்தில் (மதியம் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை) நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் கேது பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். உங்கள் ஊரில் அல்லது கிராமத்தில் பழமையான சிவாலயம் இல்லாதபட்சத்தில் விநாயகர் ஆலயம் சென்று இதே நேரத்தில் விநாயகருக்கு பூணுல் அணிவித்து அர்ச்சனை செய்யலாம்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 30 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் சனி மகா திசை நடைபெற்று கொண்டு இருந்தால் சனிக்கிழமை வரும் ராகு காலத்தில் காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் அமைந்திருக்கும் சனிபகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும். உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 26 தட்சிணை தர வேண்டும்.
உங்களுக்கு பாதகம் தரும் செவ்வாய் மகாதிசை நடைபெற்றுக் கொண்டு இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் அல்லது இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் நவக்கிரக சன்னதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு புனுகு அணிவிக்க வேண்டும் .உங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 30 தட்சிணை தர வேண்டும்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை நமது நாட்டிலேயே கலப்படம் இல்லாத தரமான புனுகு கிடைத்து வந்தது.தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
நம் ஒவ்வொருவருடைய வீட்டிலும் ஒரு புனுகு சிறிது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
தரமான புனுகு வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.

தீராத இருமலை தீர்க்கும் திருப்புகழ் பாடல்

 தீராத இருமலால் அவதிப் படுவோருக்கு திருப்புகழிலிலிருந்து ஒரு பாடலைப் பாடுவார்கள்.

தற்போதய புதிய வைரஸ் தாக்கம் இருமலில்தான் ஆரம்பம். தொண்டை வரட்சியும் ,இருமலும், சளியும் உண்டு.
ஒரு தம்ளர் ஆறிய நீரில் சிட்டிகை விபூதியை இட்டு, வலது கையால் மூடிக் கொண்டு இந்தப் பாடலை ஆறு முறை ஓதி, அந்த நீரை அருந்தினால் மேற்கண்ட அவதிகள் தீரும். எந்த வைரஸும் நெருங்காது. அருணகிரிநாதரின் திருப்புகழ், திருத்தணித் தலத்தில் பாடப்பட்டது.
சகல ரோக நிவாரணி. அந்தப் பாடல் நமது நட்புக்களுக்காக இதோ:-
"இருமலு ரோக முயலகன் வாத
மெரிகுண நாசி விடமேநீ ரிழிவுவி டாத தலைவலி சோகை யெழுகள மாலை யிவையோடே பெருவயி றீளை யெரிகுலை சூலை
பெருவலி வேறு முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
படியுள தாள்கள் அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப
தாதி மடியஅ நேக இசைபாடி
வருமொரு கால வயிரவ ராட வடிசுடர் வேலை விடுவோனே தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி தருதிரு மாதின் மணவாளா சலமிடை பூவி னடுவினில் வீறு
தணிமலை மேவு பெருமாளே!"
மேலேயுள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.
தற்போதுள்ள கால நிலைக்கு தினமும் இருவேளை ஓதி நீர் அருந்த நலமாம்.

Varahi Sadayapar, Karthikeyan and 2 others

ஒரு மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!!!

 ஒரு மாதம் முழுவதும் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு நாள் வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா
(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)
சார்வரி வருடம், தை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-
4 2.2021 வியாழக்கிழமை மதியம் 1.22 முதல் 5.2.2021 வெள்ளிக்கிழமை காலை 11.02 வரை
ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம் ஜபிக்கலாம்;
இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானை அல்லது ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சொர்ண பைரவர் ஜெபம் துதிக்கலாம்;
வியாழக்கிழமை ராகுகாலம் மதியம் 1:30 முதல் 3 வரை
வெள்ளிக்கிழமை ராகுகாலம் 10:30 முதல் மதியம் 12 மணி வரை
வெள்ளிக்கிழமை குளிகை காலம் காலை7.30 முதல் 9 வரை அமைந்தி ருக்கிறது
இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;படிப்படியாக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அனுபவ உண்மை!!!
(தனுசு,மகரம், கும்பம் ,மிதுனம்,கடகம் ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:
1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்
2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)
3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)
4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்
5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)
6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)
7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)
8. சிதம்பரம்
9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை
10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை
11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்
12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும் பொற்றளி பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!
18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்
20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)
21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்
24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.
32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE
33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை
34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)
35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;
37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.
38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;
39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை
40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை
41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை
42.அருள்மிகு நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.
43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.
44. ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷணபைரவர் சன்னதி,
அருள்மிகு கொழுக்கட்டை சுவாமிகள் ஆஸ்ரமம்,
மஹாராஜபுரம்,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா,விருதுநகர் மாவட்டம்
(வத்ராப் டூ அழகாபுரி மார்க்கம்)
சதுரகிரி மலை அடிவாரம்
செல் எண்:7639154787 & 8270772008
45. அருள்மிகு செந்திலண்டவர் திருக்கோயில், சதுரகிரி செல்லும் சாலை (கிருஷ்ணன் கோயில்--- வத்திராயிருப்பு செல்லும் சாலை) எஸ். ராமச்சந்திராபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா.
46. ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி, அருள்மிகு உச்சிஷ்ட கணபதி திருக்கோயில், மணிமூர்த்தீஸ்வரம், திருநெல்வேலி.
47. ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சன்னதி,சொர்ணபுரி, திருவிசநல்லூர், கும்பகோணம் வட்டம்.
இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;
அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஹ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரம்;
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஐம் க்ராம் க்லீம் க்லூம் ஹ்ராம்
ஹ்ரீம் ஹ்ரூம் குரு குரு ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மம தாரித்ரிய வித்வேஷிணேஸானந்தாய ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
அல்லது
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.
அடுத்த தேய்பிறை அஷ்டமி:
சார்வரி வருடம், மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-
6.3.2021 சனிக்கிழமை

Monday, January 11, 2021

தெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு மனிதனின் கஷ்டங்களையும் ஜீவசமாதி வழிபாடு மூலமாக போக்குவோம்!!!

 



டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் என்ற ஆய்வாளர் ‘சக்தியும் ஆதிக்கமும்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த உலகம் தனித்தன்மை வாய்ந்தது.ஏனெனில் இங்கு உள்ள எல்லாமே ஒன்றோடொன்று தொடர்பு உடையவைதான்.சில தொடர்புகள் வெளிப்படையாகத் தெரியலாம்.மற்றவை தெரியாமலேயே இருக்கக்கூடும்.29 ஆண்டு கால ஆழமான ஆராய்ச்சிக்குப் பிறகு டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் பல முடிவுகளை அறுதியிட்டு உரைத்துள்ளார்.

மனிதர்களை ஆற்றலின் அடிப்படையில் பிரித்துக்கொள்ளலாம்.ஆற்றல் அளவில் அடிநிலையில் இருப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.இந்தப் பிரிவின் கீழ் 87 சதவீதத்தினர் உள்ளனர்.இதற்கு மேற்பட்டவர்கள்,எண்ணிக்கையில் சொற்பமே!மேம்பட்ட நிலையில்  உள்ளவர்களையும் பல படிநிலைகளில் உள்ளவர்களாக வகைப்படுத்திக்கொள்ளலாம்.

கடவுளின் கருணையோடு இரண்டறக் கலந்தவர்கள் வெகு சிலரே.இத்தகைய மகான்களின் பார்வையே மற்றவர்களை தூய்மைப்படுத்திவிடும்.அவர்களது உடல்களிலிருந்து,உள்ளங்களிலிருந்து புறப்படுகின்ற அதிர்வுகள் மற்றவர்களின் மாசுகளை சுட்டெரித்துவிடுகின்றன.மற்றவர்களை புனிதர்களாக மாற்றுகின்றன.மற்றவர்களின் குறைபாடுகளை முழுமையாக நீக்குகின்றன.

‘எனது விழி’ என்ற புத்தகத்தையும் டாக்டர் டேவிட் ஹாக்கின்ஸ் இதைத் தொடர்ந்து எழுதியுள்ளார்.மகான்களின் அதிர்வலைகள் எப்படி அடிநிலையில் உள்ளவர்களை மாற்றுகிறது என்பது குறித்தும் மகான்களின் படிநிலைகள் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்துள்ளார்.87 சதவீதத்தினர் ஆன்மீகரீதியில் ஒளிநிலை பெறாதவர்களாக உள்ளனர்.எஞ்சிய 13 சதவீதத்தினரால் 87 சதவீதத்தினரை எப்படி ஒளிநிலைக்கு கொண்டுவர முடியும் என்று கேள்வி எழுவது இயல்பானதே.

ஒளிநிலை பெற்ற ஒருவர், ஒளிநிலை பெறாத ஒருவரை மட்டுமே மாற்ற முடியும் என்று நினைக்கக் கூடாது.ஒளிநிலை பெற்ற ஒருவர் அவரது ஆற்றலுக்கு ஏற்ப பல்லாயிரக்கணக்கான்னோரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

ஓரளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் ஒளிநிலை பெறாத ஒளிநிலை பெறாத 90,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.சுமாரான அளவுக்கு ஒளிநிலை பெற்றவரால் 7,50,000 பேரை ஒளிநிலைக்கு உயர்த்த முடியும்.

குறிப்பிட்டு சொல்லத்தக்க அளவுக்கு ஒளிநிலை பெற்ற ஒருவரால் 1,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திவிட முடியும்.இந்தப்பிரிவைச் சார்ந்த ஒளிநிலை பெற்றவர்களின் எண்ணிக்கை 22 ஆக இருக்கிறது என்று டேவிட் ஹாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.இது ஒரு யூகம்தான்.

மகத்தான மகான்களால் 7,00,00,000 பேர்களை ஒளிநிலைக்கு உயர்த்திட முடியும்.இத்தகைய மகான்கள் சுமார் 10 பேர் வாழ்ந்துவருவதாக டேவிட் ஹாக்கின்ஸ் அனுமானித்துள்ளார்.

உலகம் முழுவதையும் ஒளிநிலைக்கு உயர்த்தக்கூடிய அவதாரங்களாக க்ருஷ்ண பரமாத்மா,புத்தர் ஆகியோரைக் கருதுகிறோம்.இத்தகைய அவதார புருஷர்களால் ஒட்டு மொத்த உலகத்தையும் ஒளிநிலைக்கு ஒரு நொடிப் பொழுதில் உயர்த்திவிட முடியும்.

உலகில் நல்லதிர்வுகளும்(மகான்களின் ஜீவசமாதிகளிலும்,புராதனமான கோவில்களிலும்,சிதிலமடைந்துள்ள கோவில்களிலும்), மோசமான அதிர்வுகளும்( இணைய மையங்களாலும்,மெமரி கார்டுகளாலும்,பொறாமை பிடித்தவர்களாலும்,காவல்நிலையங்களிலும்) சமகாலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மோசமான அதிர்வுகளை வீழ்த்தி நல்லதிர்வுகளை ஓங்கச் செய்வதுதான் மகான்களின் அருட்பணியாகும்.

மகான்களின் நல்லதிர்வுகள் அளவுக்கதிகமாக ஓவ்வொரு அமாவாசை,பவுர்ணமி ,கிரகண நாட்களிலும்,சிவராத்திரி இரவுகளிலும் வெளிப்படும்.அப்போது நாம் அங்கே தங்க வேண்டும்.அந்த இரவுகளில் சில நிமிடங்கள் அந்த ஜீவசமாதிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகளில் பிரார்த்தனை அல்லது தியானம் அல்லது பிராணயாமம் அல்லது சிவாய நம மந்திர ஜபம் செய்தாலே போதுமானது.நமது வேண்டுகோள்கள்,கோரிக்கைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்கள்/மாதங்களில் நிறைவேறிவிடும் என்பது அனுபவ உண்மை!!!


W.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகள்

 



சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் எவராக இருந்தாலும் , மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி,அங்கிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் வத்ராப் நோக்கிப் பயணிக்க வேண்டும்.வத்ராப் நோக்கிப் பயணிக்கையில் கோபாலபுரத்தைக் கடந்ததும்,ஒரு சாலை பிரிந்து தெற்கே செல்லும்.அந்த சாலை W.புதுப்பட்டி என்னும் கிராமத்திற்குச் செல்லுகிறது.இங்கே அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெரு இருக்கிறது.இந்தத் தெருவின் நீட்சியாக புதுத்தெரு இருக்கிறது.இங்கிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணி ஆரம்பப்பள்ளியை ஒட்டி கிழக்கு நோக்கி இந்த புதுத்தெரு அமைந்திருக்கிறது. இந்த புதுத் தெருவின் கிழக்கு கடைசியில் அமைந்திருப்பதுதான் மூவர் ஜீவ சமாதி ஆகும்.    

                                                                                                                                      இந்த மூவர் ஜீவசமாதியின் நடுநாயகமாக இருந்து அருள்பாலிப்பவர் திரு.கருப்பஞானியார் அவர்கள்;(மிக தடிமனான சிவலிங்கம் இருக்கும் படம்)இவரது வலது பக்கம்(தெற்குப்புறம்) இருந்து அருள்பாலிப்பவர் திரு. யாழ்ப்பாணம் சுவாமிகள்( சிவலிங்கத்தின் மீது விபூதிபூசியிருக்கும் படம்); இடது பக்கத்தில் இருந்து அருள்பாலிப்பவர் திரு. ஆறுமுகச்சாமிகள்(சிறியதான சிவலிங்கம் இருக்கும் படம்)     

                                                                                                                  W.புதுப்பட்டி மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிவருபவர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.இவர் கருப்பஞானியர் சுவாமிகளின் சீடராக பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்தார்;    

                                                                                 விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் மாநகர் தெற்கு வைத்திய்நாதபுரம் தெருவில் கிழக்கு எல்லையில் இருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும்,இங்கிருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவருவரும் ஒருவரே!ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களிலும் காட்சியளித்த மகான் திரு.கருப்பஞானியார் சுவாமிகள்!!!!   

                                          இன்றும் கூட, தீராத நோய்களுக்கும்,உயிராபத்தான பிரச்னைகளுக்கும் உடனடியான அருளாசிகளை வழங்குபவர் திரு.கருப்பஞானியார் சுவாமிகளின் சீடர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.நாம் செய்ய வேண்டியது மனப்பூர்வமாக வேண்டுவதோடு,இவரது சன்னிதியில் தீபம் ஏற்றி,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுதான்.                  

                                                               ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று இவரது குருபூஜை விழா மிகச் சிறப்பாக கடந்த 63 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.                                                                                                                                                 திரு.ஆறுமுகச்சாமிகள் கடந்த 30 ஆண்டுகள் வரையிலும் தினமும் அன்னக்காவடி எடுத்து வந்து,இப்பகுதி மக்களின் பசிப்பிணியைப்  போக்கியவர் ஆவார்.இந்த மூன்று சிவ மகான்களின் வரலாற்றை வெளியிடுவதில் மகாவில்வம் பெருமை கொள்கிறது.     

                                                                                வாசகர்களே,வாசகிகளே நாம் செய்ய வேண்டியது: இந்தப் புகைப்படங்களை அச்சடித்து,பிரேம் போட்டு,நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து,நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.எனது பிறந்த நாளன்று தங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருளவும் என வேண்டலாமே! அதன் மூலமாக நாம் நிம்மதியை அடைய முடியும் இல்லையா?