Tuesday, December 24, 2019

வழிகாட்டும் குருமார்கள்: (பல புதிய மகான்களின் ஆசியோடு) பகுதி 7

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;



வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)

அல்லது

ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஜீவசமாதி,அல்சூர் ஏரி அருகில்,பெங்களூர் அவர்களை வழிபடலாம்;இவர் 1915 ஆம் ஆண்டு,தை மாதம் சுவாதி நட்சத்திரம்  அன்று ஐக்கியமானார்;

மனதில் அடிக்கடி தோன்றும் விகாரமான காம எண்ணங்களை நீக்கும் ஆற்றல் உள்ள மஹான் இவர்;விகாரமான  காம எண்ணங்கள் அடியோடு நீங்க வேண்டும் என்று எண்ணும் மனிதர்கள் யார் வேண்டுமானாலும்,சுவாதி நட்சத்திர தினத்தன்று இந்த மஹானின் ஜீவசமாதிக்கு வர வேண்டும்.ஒரு மணி நேரம் வரை மனப்பூர்வமாக தியானிக்க வேண்டும்;அவர்கள் அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்று இல்லை;

பல துறவிகளுக்கு ஞானத்தையும்,முக்தியையும் வழங்கிய அற்புதமான சுவாமிகள் இவர்!!!

அல்லது

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ராஜபாளையம் மாநகரில்(தமிழ்நாட்டில் பல ராஜபாளையம் ஊர்கள் இருக்கின்றன) சஞ்சீவிமலை அடிவாரத்தில் சாந்தானந்தா சுவாமிகள் ஆவணி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;

கோதை மங்கலத்தில் (பழனி அருகில்) மானூர் சுவாமிகள் ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)

அல்லது

நெல்லை மாவட்டம்,ராதாபுரம் தாலுகா,விஜயாபதி என்ற கடலோர கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விஸ்வாமித்ர மஹாலிங்க சுவாமி திருக்கோவிலில் தவம் செய்து கொண்டு இருக்கும் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியை அடிக்கடி வந்து(அனுஷம் நாளன்று) ஜபிக்க வேண்டும்;

அல்லது

பூண்டி மகான் ஐயா அவர்களின் ஜீவசமாதி சென்னை கலசப்பாக்கம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது;இவர் அனுஷம் அன்று ஐக்கியமானவர்! இவரது வரலாறு மிகவும் பிரமிக்கத் தக்கதாக அமைந்திருக்கிறது;

அல்லது

ஆவுடையப்பர் ஐயா அவர்கள் மார்கழி மாத அனுஷம் அன்று திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்.இன்றைய திருச்செந்தூர் முருகன் கோவிலை கட்டிய மூவர் ஜீவசமாதிக்கும் பின்புறம்(தெற்கு பக்கம்) இவரது ஜீவசமாதி இருக்கிறது;


ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;

அல்லது

சென்னை திருவொற்றியூர் நகரில் பட்டினத்தார் சுவாமிகள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கிறார்;


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை

அல்லது

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கும் ஊர் பசுவந்தனை;இங்கே ஒரு ஆவணி மாதத்தில் வரும் அவிட்டம் அன்று சங்கு சுவாமிகள் ஜீவ ஐக்கியமாகி இருக்கிறார்;


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்; அல்லது
மதுரை அழகர்கோவிலில் இருந்து சத்திரப்பட்டி(ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த பெயரில் ஊர்/கிராமம் இருக்கிறது) செல்லும் வழியில் இருக்கும் ஏரியா சிங்கப்பூர் நகர்;இங்கே சதயம் நட்சத்திரத்தன்று முனீஸ்வர சுவாமிகள் ஐக்கியமாகி இருக்கிறார்.


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)

புரட்டாசி மாதத்தின் பரணி அன்று சத்ரு சம்ஹாரமூர்த்தி அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் ஐக்கியமாகி இருக்கிறார்;


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;

ஆடி மாத கார்த்திகை அன்று இலஞ்சி அருகில் அமைந்திருக்கும் ஜீவநல்லூர் என்ற ஊரில் திரு.கண்ணப்பசுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இங்கே சென்று சிவசிவ மந்திரம் 1 மணி நேரம் வரை ஜபித்து வந்தால்,வீண் பழியில் இருந்தும்,நாக தோஷத்தில் இருந்தும் விடுபடலாம்;இது அப்பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்;


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
அல்லது
புரட்டாசி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று வள்ளியம்மை திருச்செந்தூர் கடற்கரையில் தனது குருவாகிய ஆவுடையப்பர் ஜீவசமாதிக்கு அருகிலேயே ஐக்கியமாகி இருக்கிறார்.
அல்லது
மார்கழி மாதத்தில் வரும் புனர்பூசம் அன்று சேஷாத்திரி சுவாமிகள் அண்ணாமலையில் ஐக்கியமாகி இருக்கிறார்;

அல்லது

ஸ்ரீமத் லிங்குசுவாமிகள்,சின்னாளப்பட்டி,திண்டுக்கல் அருகில் ஒரு புனர்பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமாகி இருக்கின்றார்;

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;அல்லது

சேர்மன் அருணாச்சல சுவாமிகள் ஜீவசமாதிக்குச் சென்று வரலாம்;இவர் 27.7.1908 அன்று காலை 11 மணி க்கு ஆடி அமாவாசை அன்று பூசம் நட்சத்திரத்தில் ஐக்கியமானார்;இவரது ஜீவசமாதி திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் தென் திருப்பேரை செல்ல வேண்டும்;அங்கிருந்து விசாரித்து சென்றால்,ஏரல் நகரில் தாமிரபரணி நதிக்கரையில் இவரது ஜீவசமாதியைச் சென்றடையலாம்;


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;

அல்லது

திருச்செந்தூர் கடற்கரையில் பங்குனி மாதத்தின் மகம் அன்று ஐயம்பட்டி சங்கரசுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று அவரது தம்பியான யாழ்ப்பாணம் சுவாமிகளும்,இன்னொரு பங்குனி மாதத்தின் மகம் அன்று சூழைவா சுவாமிகளும் ஐக்கியமாகி இருக்கிறார்கள்:திருச்செந்தூரில் இருக்கும் ஐயா வைகுண்டர் கோவிலுக்கு அருகில் இந்த மூவர் சமாதி அமைந்திருக்கிறது;

அல்லது

சிவராஜயோகி சுவாமிகளை வழிபடலாம்;இவரது ஜீவசமாதி கரிவலம் வந்த நல்லூர் அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்திருக்கிறது;இவர் 1945 ஆம் ஆண்டு மாசி மாதம் வரும் மகம் அன்று ஐக்கியமாகி இருக்கிறார்;இங்கே ஒவ்வொரு பவுர்ணமிக்கும் மாலை 6 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;

ஸ்ரீஜெயராம சுவாமிகள் ஆவணி மாத பூரம் அன்று திருத்தணி வட்டம்,ஆற்காடுகுப்பம் என்ற கிராமத்தில் ஐக்கியம் ஆனார்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;

ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;

புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;

சத்குரு சுவாமிகள் பழனிமலை அடிவாரத்தில் ஒரு அஸ்தம் நட்சத்திரத்தன்று ஐக்கியமாகி இருக்கின்றார்;


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.


உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;


ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;


இதில் சண்டிகேஸ்வரர்,டமருகர்,கெள்பாலர்,வியாசர்,சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;


வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

மற்றவர்களை வெற்றி கொள்வது எப்படி?






அ)உங்களுக்கென்று உள்ள கருத்துக்களைக்கொண்டு மற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள்.

ஆ)வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம்.பழகி முடிவு செய்யுங்கள்.

இ)பிற மனிதர்கள் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும்.செல்போனில் கவனமாக இருக்காதீர்கள்;(அவர்களை நீங்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்துவிடுவார்கள்)

ஈ)எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு.அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.

உ)குறைவாகப் பேசுங்கள்;அதனால் நிறைய கற்றுக் கொள்வீர்கள்

ஊ)ஒருவரிடம் கேள்வி கேட்டப்பின் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள்.நீங்களே உடனே விடை கூற முற்படாதீர்கள்.

எ)பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்க வேண்டாம்.பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்காதீர்கள்.

ஏ)ஒருவருக்கு ஓர் உதவியை செய்யும்முன், அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அதைச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.(நட்பு வட்டம்,உறவு வட்டத்தில் மறுத்துப் பேசவும் பழகி கொள்ளுங்கள்)

ஐ)(உங்களிடம் பணிபுரிவர்களிடம்) முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல்,வேலையை முடித்தல் இவற்றில் முழுச்சுதந்திரம் கொடுங்கள்.

ஒ)மற்றவரின் குழந்தைகளிடம் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.இதனால் அவர்களிடம் நீங்கள் நன்மதிப்பு பெற முடியும்.

ஓ)ஒருவரைப் பாராட்டும்போது தாராளமாக பாராட்டுங்கள்.போலியான பாராட்டுக்களை வாரிவிடவேண்டாம்.

ஒள)தவறுகள் மனிதர்களிடம் சகஜம்.அதை அனுமதியுங்கள்.மீண்டும் ‘அப்படி’ நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஃ)உங்களைச் சுற்றியிருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்.(உங்கள் உலகமே அவர்கள்தான்)அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் பகைத்துக்கொள்ளவேண்டாம்.

க) உங்களுக்குத் தெரியாவிட்டால், உரியவரிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள்.தெரியும் என்ற நடிப்பு வேண்டாம்.

ங)தவறிழைத்தால் அதை ஒப்புக்கொள்ளத்தயங்காதீர்கள்! இதனால் மற்றவர்களுக்கு உங்களைப் பிடித்துப்போகும்.


ச)வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

செல்வ வளம் தரும் மார்கழி மாதம்!



விகாரி வருடத்தின் மார்கழி மாதம் 17.12.2019 செவ்வாய்க்கிழமை முதல் 13.1.2020 செவ்வாய்க்கிழமை வரை அமைந்திருக்கின்றது;


இந்த மாதம் முழுவதும் யார் தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயம் அல்லது மஹாவிஷ்ணு ஆலயம் சென்று மந்திர ஜபம்.அன்னதானம்,அபிஷேகம்,அடிப்பிரதட்சணம்=இவைகளில் ஏதாவது ஒன்றைச் செய்கின்றீர்களோ அவர்களுக்கு இறை கடாட்சம் மொத்தமாக கிடைக்கின்றது;


மார்கழி முதல் ஆனி மாதம் வரை தேவ உலகங்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு பகல் பொழுது ஆகும்;அதில்,மார்கழி மாதமானது அதிகாலைப்  பொழுதாக அமைந்திருக்கின்றது;அப்படித்தான் கால தேவனாகிய கால பைரவப் பெருமான் அவர்களுடைய காலத்தை வடிவமைத்திருக்கின்றார்;


ஆண்கள் சொர்ண வராகி மந்திரத்தையும்

க்லீம் வராஹ முஹி;ஹ்ரீம் ஸித்திஸ்வ ரூபிணி
ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா

பெண்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரத்தையும் ஜபித்து வர வேண்டும்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷணாய தீமஹி
தந்நோஹ் சொர்ண பைரவ ப்ரசோதயாத்;

ஓம் த்ரிபுராயைச வித்மஹே
பைரவ்யைச தீமஹி
தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்;


மார்கழி 1 ஆம் நாள் முதல் மார்கழி 30 ஆம் நாள் வரையிலும் தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் ஜபித்து வர வேண்டும்;எண்ணிக்கை கூடாது;கோவிலுக்குள் ஏதாவது ஒரு இடத்தில் ஜபித்து வர வருமானம் பெருகும்;வர வேண்டிய தொகை வர ஆரம்பிக்கும்;இது அவரவரின் ஜனன ஜாதகப்படி அமையும்;


வெளிமாநிலம்,வெளிநாடுகளில் வசிப்பவர்கள்,நடமாட முடியாத உடல் அமைப்பில் இருப்பவர்கள் வீட்டில் பூஜை அறையில் ஜபிக்கலாம்;


நதிக்கரையோரம் வாழ்ந்து வருபவர்கள் தினமும் காலையில் சூரிய உதயத்தின் போது,சூரிய உதயத்தை பார்த்தவாறு பின்வரும் வராகி மந்திரத்தை ஜபித்து வரலாம்;கழுத்தளவு தண்ணீரில் நதியில் நின்றவாறு குறைந்தது 30 நிமிடம் வரையிலும்,அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வரையிலும் ஜபிக்கலாம்;


ஒரு போதும் அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருந்தால் மட்டுமே இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இல்லாவிட்டால்,எதிர்விளைவு தான் உண்டாகும்;ஜாக்கிரதை!


ஓம் ஹ்ரீம் நமோ வாராஹி கோரே ஸ்வப்னம் டஹ டஹ ஸ்வாஹா


வீட்டு குளியல் அறையில் ஒரு போதும் இம்மந்திரத்தை ஜபிக்க கூடாது;அதுவும் எதிர்விளைவுகளை உருவாக்கிவிடும்;

இவை அனைத்தும் ரகசிய ஜபமுறைகள் ஆகும்;எனவே,மிக ரகசியமாக ஜபித்து செல்வச் செழிப்பை அடைய வாழ்த்துக்கள்!!!


ஜன்மச்சனியின் துயரம் நீங்கிட


ஜனவரி 2020 முதல் ஜீன் 2022 வரை மகர ராசியை சனிபகவான் கடக்கிறார்இதுவே மகர ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.

நவக்கிரகங்களில் சனிக்கிரகத்தின் குருவாக கால பைரவர் இருக்கின்றார்;சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவரும் கால தேவன் என்ற கால பைரவப் பெருமானே!!!


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த இரண்டரை ஆண்டுகளும் மகர ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.

மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.


 சனிப்பிரதோஷ நாட்களில்        திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

வீட்டிலேயே தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும்; இது முடியாதவர்கள் 108 முறையாவது தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்; ஜனவரி 2020 முதல் ஜீன் 2022  வரை மகர ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி நடைபெற்று வருவதால் பைரவரின் அருளைப் பெற முயற்சிப்பது அவசியம்;

அஷ்டமச்சனி காலத்திலும் (மிதுன ராசி) நிம்மதியாக வாழ....





ஜனவரி 2020 முதல் ஜீன் 2022  வரையிலும் மிதுன ராசியினருக்கு அஷ்டமச்சனி இருக்கின்றது.

ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.


கடந்த 15 ஆண்டுகளில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால்,அஷ்டமச்சனியில் படாத பாடுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இது அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தும்.


அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லதுபைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.


இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.

அல்லது

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று வீட்டில் எழுதி வர வேண்டும்;இயலாத பட்சத்தில் 108 முறை எழுதலாம்; ஜீன் 2022 வரை தினமும் எழுதி வர வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்கள் தவிர பிற நாட்களில் எழுதலாம்;




சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;கால பைரவரை யார் தொடர்ந்து வழிபடுகின்றார்களோ அதை எண்ணி மன மகிழ்ச்சி அடைபவர் சனிபகவான்;இதனால்,தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார்;

தாய்மொழிக் கல்வியின் முக்கியத்துவம்





உலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.

  கிறிஸ்தவ    ஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். 


சுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரை        ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:

அவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)

மகேஷ்பாண்டேயைக் குறை கூறமுடியுமா?சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது. கிறிஸ்தவ   ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.


அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி? அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.

 கிறிஸ்தவ    ஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.

1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.

2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.


3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.

இதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.

ஊக்கமளிக்கும் ஒரு எடுத்துக்காட்டைக்காண்போம்:

நவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.
ஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.

ஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008

உங்கள் கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்!!!



உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;
கடன் என்பதும் கர்மவினையே!

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;


அருணாச்சல குரு  என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை அருணாச்சல குருவிடம் கொடுக்க வேண்டும்;இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;


இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;


மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;


சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;அவர்கள் ஜோதிட ஆலோசனை பெற எமது வாட்ஸ் அப்:9092116990 க்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி ஜோதிட ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்;(30 வருடமாக ஜோதிடம் பார்ப்பவர்)



24.12.2019 செவ்வாய் காலை 4.40 முதல் 6.40 வரை;

4.1.2020 சனி மதியம் 1.10 முதல் 3.10 வரை;

1.2.2020 சனி காலை 11.52 முதல் மதியம் 1.52 வரை;

16.2.2020 ஞாயிறு இரவு 12.08 முதல் நள்ளிரவு 2.08 வரை;

28.2.2020 வெள்ளி காலை 9 முதல் 11 வரை;

8.3.2020 சனி காலை & இரவு 8.53 முதல் 10.53 வரை;
            மதியம் & நள்ளிரவு 2.53 முதல் 4.53 வரை;

14.3.2020 வெள்ளி இரவு 10.04 முதல் 12.04 வரை;

21.3.2020 சனி காலை & இரவு 8.39 முதல் 10.39 வரை;
             மதியம் & நள்ளிரவு 2.39 முதல் 4.39 வரை;

26.3.2020 வியாழன் காலை 6.52 முதல் 8.52 வரை;

27.3.2020 வெள்ளி காலை 6.56 முதல் 8.56 வரை;

11.4.2020 சனி இரவு 8.12 முதல் 10.12 வரை; 





இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

 ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;