Saturday, May 18, 2019


ஸ்ரீஇராமபிரானின் முன்னோர்கள் 8 தலைமுறையாக துர்கா வழிபாடு செய்துவந்ததால்தான் அந்த பரந்தாமன் 9 ஆம் தலைமுறையில் சூரிய குலத்தில் ஸ்ரீராமனாக அவதரித்தார்.
கலிகாலத்தில் அம்மன் வழிபாடு மட்டுமே நிம்மதியுடன் கூடிய செல்வ வளம் தரும்.அதிலும் அம்மன் என்பதை இங்கு விளக்க விரும்புகிறேன்.



மனிதர்களை இயக்குவது நவக்கிரகங்கள்!
நவக்கிரகங்களை இயக்குவது பஞ்சபூதங்கள்!!
பஞ்சபூதங்களை இயக்குவது பிரம்மா-விஷ்ணு-சிவன் முதலான மும்மூர்த்திகள்!!
மும்மூர்த்திகள் என்பதும் பதவியே!!
மும்மூர்த்திகளை இயக்குவது ஆதிபராசக்தி எனப்படும் ஆதிபரபிரம்மசக்தி!!!
ஆதிபரபிரம்மசக்தியின் சிறுமி வடிவமே வாலை ஆகும்.
அவளை சிறுமியாக வழிபடும் முறைக்கு வாலை பூஜை என்று பெயர்..


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.ஒரு மனிதன் சொல்லிக்கொடுத்து இன்னொரு மனிதன் நேரில் கற்றால் மட்டுமே புரியும் கலைகள் ஆறு ஆகும்.சுயமாக முயன்றால் தோல்வி அல்லது மரணம் அல்லது அவமானம் உண்டாகும்.
அவை தியானம்,சக்திபூஜை,ஜோதிடம்,மாந்திரீகம்,ஓவியம்,மொழி கற்பது(அது சமஸ்கிருதமாக இருந்தாலும் சரி,ஸ்போக்கன் இங்கிலீஷாக இருந்தாலும் சரி).



அமாவசை தினத்தில் வாலைபூஜையை தொடங்கவேண்டும்.
பராசக்தியை வாலைதெய்வம் என உண்ர்ந்து இயம நியமங்களுடன் தினசரி ஒரு முகூர்த்த நேரம்(90 நிமிடம்)வணங்கி வர வேண்டும்.ஒரு பலகை ஆசனத்தில் அமர்ந்து நம் இரு காதுகளையும் பஞ்சால் அடைத்துக்கொண்டு கண்களை மூடி “இம்” என்று எவ்வளவு சத்தமாக வாய்மூடி சொல்ல முடியுமோ அவ்வளவு நீண்ட நேரம் உள்ளுக்குள்ளேயே உச்சரித்து வரவேண்டும்.



இம்மாதிரி 108 முறை செய்ய வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு தினமும்,இரண்டு வருடம் வரை செய்து வந்தால் வாலையின் அருள் கிடைக்கும்.


ஓம் என்ற அட்சரம் தானுண்டு,அதற்குள்
ஊமையெழுத்தும் இருக்குதடி நாமிந்த
எழுத்தை அறிந்து கொண்டோம்,
வினை நாடி விளையாடி கும்மியடி வாலைப் பெண்ணே
-கொங்கண சித்தர்

ஒரு மாதம் வரை குறைவற்ற வருமானம் தரும் தேய்பிறை அஷ்டமி சொர்ண பைரவர் வழிபாடு!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

Thursday, May 2, 2019

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்


ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள்

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால்  இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்;அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி;விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி;எந்த நாளாக இருந்தாலும் சரி;
பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும்,இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும்,வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும்,கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்;பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்;அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!


3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;


உங்களுடைய அப்பா,அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள்,அம்மாக்கள்,அவர்களுடைய அப்பாக்கள்,அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு,அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து,தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி,உருகி,அழுது,அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்;அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;

 பல விதமான விலங்குகள்,செடி,கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு,இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா,அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக  ஆண் மனிதப் பிறவி எடுக்கும்;பசு பிறவி எடுக்கும் ஆத்மா,அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்;அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது,அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!! 

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்;அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ,அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;


1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும்,புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்;நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

ஒருவேளை,இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால்,நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?


போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்;போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர்,உடன் பிறந்தோர்,வாழ்க்கைத்துணை,வாரிசுகள்,சொத்துக்கள்,படிப்பு,
புகழ்,வருமானம்,லாபம்,பெருமை,பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய்,அவமானங்கள்,கடன்,வம்பு வழக்குகள்,மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல்,விரக்தி மனப்பான்மை,தற்கொலை எண்ணங்கள்,ஏமாறுதல்,துரோகத்தால் துவண்டு போகுதல்,பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல்,சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல்,ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள்,விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம்,தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;


பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன;அதே சமயம்,இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்;பலருக்கு கடினமானதாக இருக்கும்;சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள்,காலில் அடிபட்டு ரத்தம் வருதல்,தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்;இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து,அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;


மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்;அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;


பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம்,அக்னி லிங்கம்,எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்;அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்;ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்;அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்;அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும்,அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால்,உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்;விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்;மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்:அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது;ஆனால்,அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்;அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்;மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே  அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்;ஆனால்,இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;


இந்த வரிகளை வாசித்துவிட்டு,மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே,மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;


ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Monday, April 29, 2019

ஆன்மீக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பேட்டி பகுதி 2


ஆன்மீக உபன்யாசகர் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் அவர்களின் பேட்டி பகுதி 2

கேள்வி: “சனாதன தர்மம் சமத்துவத்திற்கு எதிரானது” என்று ஒரு குற்றச்சாட்டை சிலர் தொடர்ந்து கூறி வருகிறார்களே?


பதில்: அப்படிச் சொல்லி வருபவர்கள் சிறிய கூட்டம்;அவர்களை நாம் புறக்கணித்துவிடலாம்;வக்கீல்,மருத்துவர் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும்,சிலர் தவறாக நடந்து கொள்வார்கள்;சிலர் தவறாக நடந்து கொள்வதால்,அந்தத் துறையே தவறு என்று யாரும் சொல்வதில்லை.

அது போல் மதத்தலைவர்கள் ஒரு சிலர் தவறாக இருக்கலாம்;இதனால்,மதத் தலைவர்களே இருக்கக் கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது;சனாதன தர்மத்தைப் பற்றிக்கூறும் போது, “பெண்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள்.அந்தணர்களுக்கு மட்டுமே பெருமை;மற்ற வர்ணத்தவர்களுக்குப் பெருமை இல்லை;ஜாதி வேறுபாடுகள் அதிக அளவில் இருக்கிறது” என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்:


உண்மையில் சனாதன தர்மத்தின்படி, மனைவி இல்லாமல் கணவன் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடமுடியாது; 200 ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய கலாச்சாரம் மற்றும் கோட்பாடுகளை அழித்தால் மட்டுமே நம்மை அடிமைப்படுத்த முடியும் என்பதை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் புரிந்து கொண்டு,சனாதன தர்மத்தை அழிக்கும்பணியில் ஈடுபட்டார்கள்;

சனாதன தர்மம் அனைவருக்கும் தெரிவதற்குக் காரணமான நூல்களை கல்வி முறையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்;கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் கல்வி முறை தான் உயர்ந்தது என்று சொல்லி நம்மை நம்ப வைத்தார்கள்;

நம்மை அடிமைப்படுத்துவதற்கான வழியைத் தெரிந்து கொண்டு அதை வெற்றிகரமாகச் செய்தும் காட்டினார்கள்;இதனால் தான் நம்முடைய சனாதன தர்மத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளாமல்,நாம் உட்பட பலரும் தவறாகப் பேச வாய்ப்பு ஏற்பட்டு விட்டது;

இந்த விஷயத்தில்,அரசியல் ரீதியாகக் குற்றச்சாட்டுகளை வைக்கும் திராவிட கட்சிகளுக்கு எதிர்வினையாற்ற முயல்கிறோமே தவிர,மக்களுக்கு உண்மை நிலையைப் புரியவைக்க நாம் முயற்சி செய்வதில்லை;

ஒரு காலத்தில் பிராமணர்கள் சனாதன தர்மத்தைப் பற்றி மக்களிடம் சரியான முறையில் பிரச்சாரம் செய்து வந்தார்கள்;இப்போதோ பிராமண சமுதாயத்தில் பாதிப்பேர் அமெரிக்க குடிமக்களாக மாறிவிட்டார்கள்;மீதம் இருப்பவர்களும் சென்னை,பெங்களூரு,மும்பை போன்ற மெட்ரோ சிட்டிகளில் இருக்கிறார்கள்;கிராமப்புறங்களில் போய் திராவிடக் கட்சிகளின் கருத்துக்கள் தவறு என்று எடுத்துச் சொல்வதற்கான ஆட்கள் இப்போது இல்லை;


வெறும் வார்த்தைகளால் சனாதன தர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடுகளில் இருந்தால் எந்த நன்மையும் நடக்காது.முதலில் அவர்கள் தாய் நாடு திரும்பி பிரச்சாரகர்களாக மாற வேண்டும்;இந்த மாற்றம் எல்லாம் உடனடியாக நடக்குமா என்பது தெரியாது;

ஆனால்,இத்தனை 1000 ஆண்டுகளாக,இத்தனைப் படையெடுப்பிற்குப் பிறகும் சனாதன தர்மத்திற்கு எதுவும் ஆகவில்லை.பிரச்சாரம் செய்தாலும்,செய்யாவிட்டாலும் சனாதன தர்மத்தை அழிக்க முடியாது.


கேள்வி:ஹிந்து மத நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியா?


பதில்:எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் சீர்திருத்தங்கள் வந்து கொண்டே தான் இருக்க வேண்டும்;ஆனால்,இது போன்ற சீர்திருத்தங்களை,அந்தந்த தர்மங்களை முழுவதும் கற்றறிந்த ஆச்சாரியார்கள் கொண்டு வருவதுதான் சரியாக இருக்கும்;

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமா,இல்லையா என்பதை சபரிமலை தந்திரி மற்றும் கேரளாவில் இருக்கும் மத குருமார்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர,நீதிமன்றம் இதில் தலையிடுவது சரியாக இருக்காது;

நம்முடைய தர்மத்தைப் பற்றியும்,பழக்க வழக்கங்களைப் பற்றியும் தெரியாத ஒருவர்,நாம் பின்பற்றும் நடைமுறை தவறு என்று சொல்வதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்? சீர்திருத்தம் தேவை என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்;

ஆனால்,அவையெல்லாம் எப்படி,யார் மூலமாக வர வேண்டும் என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இருக்கிறது.ஒவ்வொரு சமுதாயத்திற்கும்,உள்ளிருந்துதான் இதுபோன்ற சீர்திருத்தங்கள் வர வேண்டும்.வெளியிலிருந்து யார் திணித்தாலும் இது தேவையில்லாத சண்டையில் தான் போய் முடியும்;

கேள்வி:மனிதர்களிடையே ஜாதிப் பிரிவினை வந்ததற்கும்,தமிழ் மொழி அழிந்ததற்கும் அந்தணர்களே காரணம் என்று கூறுகிறார்கள்.இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:கண்ணன் கீதையில் சொல்லும் போது,தன்னுடைய வாயில் இருந்து அந்தணனும்,தோளில் இருந்து சத்ரியனும்,தொடையில் இருந்து வைசியனும்,காலில் இருந்து நாலாம் வர்ணத்தவனும் தோன்றியதாகக் கூறுகிறார்;

கண்ணன் பிறப்பால் சத்ரியர்;வளர்ப்பால் வைசியர்;

ராமாயணம் எழுதிய வால்மீகி,மகாபாரதம் எழுதிய வியாசர்,மனுதர்ம சாஸ்திரம் எழுதிய மனு முதலான யாருமே அந்தணர்கள் இல்லை;வர்ண தர்மத்தைப் பற்றி பேசி இருக்கின்ற யாருமே அந்தணர்கள் இல்லை;

பிறகு எப்படி வர்ணாசிரமத்தை அந்தணர்கள் உருவாக்கினார்கள் என்று கூற முடியும்?


ராமானுஜர் அனைத்து வர்ணத்தவரும் சமம் என்று வாழ்ந்து காட்டி இருக்கிறார்.பாரதிதாசன் கடவுள் மறுப்பாளராக இருந்தாலும், “முத்தியோ சிலரின் சொத்தென இருக்கையில் இத்தமிழ்நாடு தன் இருந்தவப் பயனாய் இராமானுசனை ஈன்றதன்றோ?” என்று ராமானுஜர் இங்கு பிறந்ததைப் பற்றி மிகவும் உயர்வாகச் சொல்லியிருக்கிறார்.இதன் மூலம் பாரதிதாசனும்,ராமானுஜரை ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று புரிகிறது;


திராவிடக் கழகங்கள் என்னதான் பகுத்தறிவு பேசினாலும்,ராமானுஜரின் பெருமையை அவர்களுடைய தொலைக்காட்சியிலேயே நாடகத் தொடராக ஒளிபரப்பினார்கள்;இதிலிருந்தே இவர்கள் போடும் கூச்சல் எல்லாமே அரசியலுக்கானது என்பது தெரியவில்லையா? 

உண்மையில்,இந்த விஷயங்களை எல்லாம் நாம் புரியவைக்க வேண்டியது சாமானிய மக்களிடம் தான்.மக்களுக்கு உண்மை நிலை புரிந்துவிட்டால்,அரசியலுக்காக என்னதான் திராவிடக் கழகங்கள் பேசினாலும் எடுபடாது;அரசியலுக்காக இப்படிப் பேசும் அரசியல்வாதிகளை நாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

கேள்வி:பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் பெற்றோருக்கு,அவர்கள் இறந்தவுடன் தேவையான கர்மாக்களை யார் செய்ய முடியும்?

பதில்:நான் ஏற்கனவே சொன்னது போல்,நாம் செய்யும் கர்மாக்களால் இறந்தவர்கள் முக்தி அடையப் போவதில்லை;அவர்கள் உயிருடன் இருக்கும் போது செய்த கர்ம பலன்களினால் மட்டுமே மோட்சம் அடைய முடியும்;

ஆண் வாரிசு இல்லாதவர்களுக்கு அவருடைய சகோதரர்கள்,அந்த சகோதரர்களுடைய மகன்கள்,பெண் வயிற்றில் பிறந்த மகன் =அதாவது பேரன் அல்லது மாப்பிள்ளை செய்யலாம்;இந்த வரிசையில்,கண்டிப்பாக யாராவது ஒருவர் இருப்பார்.இதில் யாருமே இல்லை என்றால்,கர்த்தாவே இல்லை என்ற காரணத்தினால்,அந்த நபருக்கு கர்மா செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


கேள்வி:ஹிந்து மதத்தில் ஆண்களை விட பெண்களுக்குத் தான் மோட்சத்திற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்களே?


பதில்:உண்மைதான்; ஆண் பிராமணர்களுக்கு நித்ய கர்மா,பூஜை என்று எல்லாவற்றையும் சரியாகப் பின்பற்றினால் மட்டுமே மோட்சம் கிடைக்கும்.இது போன்ற எந்த ஒரு கடுமையான விதிகளும் பெண்களுக்கு இல்லை.

தினமும் தலைக்கு குளித்துவிட்டுதான் பூஜை செய்ய வேண்டும் என்ற விதிமுறை ஆண்களுக்கு மட்டுமே சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.ஆனால்,பெண்கள் தலைக்கு குளிக்காமலும் பூஜை செய்யலாம்.பெண் அந்த  அளவிற்குத் தூய்மையானவள் என்று நம்முடைய சாஸ்திரங்கள் கூறுகின்றன.


வியாசர் நான்கு யுகத்தில்,கலியுகம் சிறந்தது என்றும், ஆண் பெண் இருவரில் பெண் சிறந்தவள் என்றும்,மனு தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிற நான்கு வர்ணத்தில் நாலாவது வர்ணத்தவர் சிறந்தவர் என்றும் கூறுகிறார்.

நமது சாஸ்திரத்தின் படி,பெண்களைப் பாதுகாக்க வேண்டியது ஆண்களின் கடமை.சுலபமாக மோட்சம் பெறும் அளவிற்கு பெண்கள் உயர்ந்தவர்கள்.ஆண் எதைச் செய்து புண்ணியம் சம்பாதித்தாலும்,அதில் மனைவிக்கு பங்கு உண்டு.


தினமும் கடவுளை வேண்டிக் கொள்வது,கணவன் & குழந்தைகளை சரியாக கவனித்துக் கொள்வது,வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு முகம் சுளிக்காமல் உணவு கொடுத்து உபசரிப்பது ஆகியவற்றைச் செய்தாலே பெண்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கேள்வி;இந்தக் கால குழந்தைகளுக்கு நம்முடைய தர்மத்தை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எதுவுமே இல்லை.கோவிலில் ஒரு பத்து நிமிடம் நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கான பொறுமை கூட அவர்களிடம் இல்லை.இதற்கு என்ன தீர்வு?

பதில்:குழந்தைகளை நாம் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம்.குழந்தைகளுக்கு பொறுமை இல்லை என்று நாம் நினைக்கிறோம்.உண்மையில் அவர்களுக்கு நேரம் இல்லை.இன்றைய கல்வி முறையில் குழந்தைகளுக்கு படிக்கவே நேரம் இருப்பதில்லை.ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு பரீட்சை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாம் எல்லோரும் அனுபவித்தது போல இரண்டு மாத கோடை விடுமுறை இன்றைய குழந்தைகளுக்கு இல்லை.கோடை விடுமுறையில் கூட ஏதாவது ஒரு வகுப்புகளுக்கு செல்கிறார்கள்.

எல்லாப் பெற்றோருக்கும் தங்கள் குழந்தை கராத்தே கற்றுக் கொள்ள வேண்டும்,ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள வேண்டும்,நன்றாகப் படிக்க வேண்டும்,பெரியவர்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்,இதைத்தவிர  வேதம் உபநிஷத்துக்களையும் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவை எல்லாவற்றையும் இன்றே செய்து முடித்து விட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.


உண்மையில் பெற்றவர்கள் தான் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்து,குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக நம்முடைய சனாதன தர்மத்தைப் பற்றி குழந்தைகளுக்கு போதிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை.அவர்கள் மீது திணித்தால் அதன் மீது வெறுப்புதான் வளருமே தவிர,அதில் உள்ள நன்மைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

நம்முடைய தர்மத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை,தினமும் விடாமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொண்டே வாருங்கள்.கண்டிப்பாக,குழந்தைகள் நம்முடைய தர்மத்தைப் புரிந்து கொள்வார்கள்.

கேள்வி:கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் நம்முடைய கல்விமுறையை மாற்றிவிட்டார்கள் என்று கூறினீர்கள்.இப்பொழுது நம்முடைய கல்விமுறையில் பகவத் கீதை,ராமாயணம்,மகாபாரதம் போன்றவற்றைப் பாடமாகக் கொண்டு வர முடியாதா?

பதில்:இவற்றையெல்லாம் கொண்டு வர முடியும்;ஆனால்,அவற்றை கற்றுக் கொள்ள ஆட்கள் வர மாட்டார்கள்.கடந்த 200 வருடங்களில்,வேலைக்காக மட்டுமே படிப்பு என்ற நிலை வந்துவிட்டது.

நீங்கள் கூறியவற்றைப் படித்தால் வேலை கிடைக்காது.எதைப் படித்தால் பணம் சம்பாதிக்க முடியுமோ அதை மட்டுமே படித்து வருகிறோம்.முன்பு நம்முடைய வாழ்க்கைக்கான படிப்பும்,பணம் சம்பாதிப்பதற்கான படிப்பும் ஒன்றாகவே இருந்தது.அதை கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் மாற்றிவிட்டார்கள்.இதற்கான பெரிய விலையைத்தான் நாம் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 

இதற்குப் பிறகாவது,அந்தந்த வயதில் நம்முடைய சனாதன தர்மத்தைப் பற்றி நமது குழந்தைகள் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை நம் கல்வி முறையில் கொண்டு வர வேண்டும்.


கேள்வி:சிராத்ததைச் சிலர் ஹ்ரண்யமாகச் செய்கிறார்களே? சாஸ்திரத்தில் இதற்கு அனுமதி உண்டா?


பதில்:ஹிரண்யமாக சிராத்தம் செய்வதற்கு சாஸ்திரத்தில் இடம் உண்டு.ஆனால்,அதற்குரிய காரணம் உண்மையாக இருக்க வேண்டும்.இன்று ஒரு கல்யாணத்திற்குப் போக வேண்டும்.அதனால்,ஹிரண்யமாக சிராத்தம் செய்கிறேன் என்றால் சாஸ்திரம் ஒப்புக் கொள்ளாது.வயோதிகம் காரணமாக,உடல்நிலை போன்ற உண்மையான காரணங்களின் போது இப்படிச் செய்தால் தவறில்லை.

சிராத்தம் செய்வதற்கான வசதி ஒருவனுக்கு இல்லை என்றால்,திதி அன்று பசு மாட்டின் கழுத்தை தடவி ‘சிராத்தம் செய்வதற்கான வசதி இல்லை’ என்றூ கூறி பகவானிடம் வேண்டிக் கொண்டாலே,சிராத்தம் செய்ததற்கான முழுப் பலன் கிடைத்துவிடும்.அதுவும் இல்லையென்றால் எட்டு எள்ளைத் தானமாக கொடுத்தால் முழுப்பலன் கிடைத்துவிடும்.

கேள்வி:உங்களுக்குப் பிடித்த ஆழ்வார் யார்?

பதில்:மதுரகவி ஆழ்வார்.இவர் மற்ற பத்து ஆழ்வார்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக நான் கருதுகிறேன்.ஆசாரியனே தெய்வம் என்று சொன்னவர் அவர்.மற்ற ஆழ்வார்கள் தெய்வத்தைக் குறித்துப் பாடி மோட்சம் பெற்றனர்.மதுரகவி ஆழ்வார் ஆசாரியனான நம்மாழ்வாரைப் பற்றி மட்டுமே பாடி மோட்சம் பெற்றவர்.

கேள்வி:நித்திய ஆராதனையை மானசீகமாக செய்யலாமா?


பதில்: நித்திய ஆராதனை செய்ய முடியாத நிலையில் இருந்தால் மானசீகமாக செய்வதில் தவறில்லை.வேலை நிமித்தமாக செய்ய முடியவில்லை என்று காரணம் சொன்னாலும்,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்டிப்பாக பகவானுக்கு பூஜை செய்ய வேண்டும்.எந்தக் காரணத்தைச் சொன்னாலும்,தினமுமே மானசீகமாக ஆராதனை செய்வது என்பதை ஒப்புக் கொள்ள முடியாது.

கேள்வி:ஹிந்துக் கோவில்களைப் பராமரிக்க,அறநிலையத் துறை தேவையில்லை என்ற கருத்தை இப்போது அதிகம் கேட்க முடிகிறது.இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்:அறநிலையத்துறை சட்டத்தின் படி கோவில்களில் அவர்களுக்குச் சில அதிகாரங்கள் மட்டுமே உள்ளன.இப்பொழுது,கோவில்களை விட்டு அறநிலையைத் துறை வெளியேற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றதற்கான காரணம்,ஹிந்து அறநிலையத்துறை அவர்களுடைய அதிகாரத்தின் கீழ் அனைத்தையும் கொண்டு வந்ததுதான்!


எனவே,முதலில் ஹிந்து அறநிலையத் துறை விதிகளின் படி,அவர்கள் கோவிலின் நிர்வாகப் பணிகளை மட்டுமே பார்க்க வேண்டும்.இதைத் தவிர,கோவிலில் நடைபெற வேண்டிய பூஜை மற்றும் அங்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஹிந்து அறநிலையத் துறை தலையிடக் கூடாது.

கோவிலில் பின்பற்ற வேண்டிய மரபு மற்றும் நடைமுறை பற்றிய புரிதல் இல்லாத அறநிலையத்துறை,இதில் தலையிடுவது சரியாக இருக்காது.


ஹிந்து கோவில்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அதிக அளவில் எழுந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம்,மற்ற மதங்களில் இப்படி அரசு தலையிடுவதில்லை என்பதாகும்;

முதலில் அனைத்து மதத்தவர்களையும் ஒன்றாகப் பார்க்கும் நிலை இங்கு உருவாக வேண்டும்;ஆனாலும்,உடனடியாக அறநிலையைத் துறையை வெளியேற்றிவிட்டு,உள்ளூர் மக்களே கோவில்களை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்வது சரியாக இருக்காது.

நல்ல நிலையில் இருக்கும் கோவில்களில் இருந்து வரும் வருமானத்தை வைத்து,தமிழ்நாடு முழுவதிலும் இருக்கும் 32,000 கும் அதிகமான கோவில்களை ஹிந்து அறநிலையைத் துறை நிர்வகித்து வருகிறது.


கோவில்களை உள்ளூர் மக்களிடம் கொடுத்துவிட்டால்,இந்த நிலை நீடிக்குமா என்று தெரியவில்லை.இதற்கான பதில்களை அனைத்து மடாதிபதிகளும் சேர்ந்து உட்கார்ந்து பேசித் தெரிந்து கொண்ட பிறகு,அறநிலையத் துறையை கோவில்களை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.


நன்றி:துக்ளக்,பக்கங்கள் 20,21,22,23;வெளியீடு 20/3/2019

Friday, April 12, 2019

அகத்தியரின் அருளைப் பெற நாம் செய்ய வேண்டியது




உங்கள் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் பட்ட சிரமங்கள்,அவமானங்கள்,ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு உங்கள் முற்பிறப்பு கர்மவினைகள் தான் காரணமாக அமைந்திருக்கின்றன;

ஆனால்,எப்போது திருந்தவேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம் உண்டானதோ அப்போதே உங்களுக்கு குருவருள் கிட்டப் போகின்றது என்று அர்த்தம்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது பழமொழி மட்டும் அல்ல;நம்மைப் பெற்றவர்கள் மாதாவும்,பிதாவும்;ஆனால்,குருவின் அருள் கிட்டினால் மட்டுமே திரு (கடவுள்) வின் அருள் கிட்டும்;

உங்களுடைய குரு எந்த சித்தராக இருந்தாலும் சரி;எந்த மஹானாக இருந்தாலும் சரி;எந்த துறவியாக இருந்தாலும் சரி;

இந்த ப்ரபஞ்சத்தில் மனிதப் பிறவி எடுத்த ஆதி மூல முதல் குரு அகத்தியர் மட்டுமே! அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி தேடிக் கண்டுபிடிப்பது? என்பதை பல கோடி யுகங்களுக்கு முன்பே கண்டுபிடித்தவர்;அவர் தமிழ் மொழியின் தாயகமான நமது தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை உருவாக்கி இருக்கின்றார்;

ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 ஆண்டுகள் தினமும் பூஜை செய்திருக்கின்றார்;12 ஆண்டுகள் என்பது பூமி ஆண்டுகள் அல்ல; 12  தேவ ஆண்டுகள்!!! பூமி ஆண்டுகள் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் வருகின்றது; அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள் புனர்நிர்மாணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன;

அகத்தியரின் அருளைப் பெற விரும்புவோரும்

அகத்தியர் உதயமான ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்

ஈசனின் அருளைப் பெற விரும்புவோரும்

சித்தர் ஒருவரின் தரிசனத்தைப் பெற விரும்புவோரும் கீழே இருக்கும் எதாவது ஒரு கோவிலின் திருப்பணியில் கலந்து கொள்ளலாம்;இந்த கட்டுரை 14.12.2018 அன்று எழுதப்பட்டது;அதற்குள் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் திருப்பணிகள் நிறைவடைந்துவிட்டால்,பிற ஆலயங்களில் திருப்பணிக்கு உங்களால் ஆன பொருள் உதவியை நேரில் சென்று செய்யும் படி வேண்டுகின்றோம்;

இதனால்,அகத்தியரின் அருளும்,இந்த ஆலயங்களில் அருளாட்சி புரிந்து கொண்டு இருக்கும் அகத்தீஸ்வரரின் ஆசிகளும் பூரணமாகக் கிட்டிவிடும்;

1.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவி,சோமூர்,கரூர் மாவட்டம்.

மிகவும் பாழடைந்து இருக்கின்றது;

2.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையபாளையம்,துவரங்குறிச்சி அருகில்(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டு இருக்கின்றது; 1.9.2018

3.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர் (முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்துள்ளது)சேத்தியாத்தோப்பு,கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்காக காத்துக் கொண்டு இருக்கின்றது)1.9.2018

4.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

5.
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீமேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

6.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(தற்போது புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன;இன்னும் ரூ.21 லட்சம் தேவை;தொடர்புக்கு:9884995203


 ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ








தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் =54


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.


38.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

39.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

40.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

41.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

42.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

44.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

45.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

46.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

47.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

48.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

50.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

51.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஆடையூர்,திருஅண்ணாமலை கிரிவலப்பாதை(வாயுலிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே காஞ்சி சாலையில் 0.5 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது) (காஞ்சி சாலை தான்;காஞ்சிபுரம் அல்ல)

52.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

53.அருள்மிகு அங்கம்மாள் உடனுறை அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சித்தாலப்பாக்கம்,தாம்பரம் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.( புனர் நிர்மாணப்பணிகளுக்கு அன்பளிப்பு வழங்கிட செல் எண்:9884995203) இன்று 11.4.2019 தேதிப்படி இவர்களுக்கு ரூ.21 லட்சம் தேவை; சிவத்தொண்டில் விருப்பம் உள்ளவர்கள்,அகத்தியர் தனது குருவாக எண்ணுபவர்கள் தொடர்பு கொண்டு புனர் நிர்மாணப் பணிகளில் இணைத்துக் கொள்ளலாம்

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.


முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;





நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;



அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;

அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!

தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

நடைமுறை வாழ்க்கையில் ஜோதிடம்




நடைமுறை வாழ்க்கையில் ஜோதிடம்



உங்கள் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகிவிட்டதா? உடனே,அக்குழந்தைக்கு ஜாதகம் கணித்து,எழுதி வாங்கி விடுங்கள்;உங்கள் பெற்றோர் அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையின் பெற்றோரின் அறிவுறுத்தல் படி செயல்பட வேண்டாம்; அவர்கள் “குழந்தை பிறந்து 1 ஆண்டு ஆன பின்னர் ஜாதகம் எழுதிக் கொள்ளலாம்” என்பார்கள்;அது இன்றைய வேகமான கால கட்டத்திற்கு அவசியம் இல்லை;


பால அரிஷ்ட தோஷம் என்று ஒரு தோஷம் 1980 வரை நமது தமிழ்நாட்டில் பரவலாக (பிறக்கும் குழந்தைகளுக்கு) இருந்தது;இப்போது அது கிடையாது;


பால அரிஷ்ட தோஷம் என்றால்,ஒரு குழந்தை பிறந்தது முதல்  3 வயது முடியும் வரை அதை பல்வேறு நோய்கள் தாக்கும்;அதனால்,மரணம் அடைந்த குழந்தைகள் 1980 வரை அதிகமாக இருந்தது; இப்போது,மருத்துவமும்,மருத்துவ ஞானம் பற்றிய விழிப்புணர்ச்சியும் நம்மிடையே மிகவும் அதிகமாகிவிட்டது;அதனால்,கர்ப்பிணியாக இருக்கும் காலத்தில் இருந்தே பலவிதமான சத்து மாத்திரைகள்,டானிக்குகள்,உணவுகள் சாப்பிடுவதால்,தாயும் சேயும் நலமாக இருக்கின்றன;இந்த கால மாற்றத்தால் பால அரிஷ்ட தோஷம் அழிந்தே விட்டது;


முற்காலத்தில் ஒரு நாட்டின் மன்னனுக்கு குழந்தை பிறந்தால்,பிறந்த உடனே அக்குழந்தைக்கு ஜாதகம் கணித்து,எழுதி விடுவார்கள்;நாட்டு நலன் கருதி! இன்றைய ஜனநாயக நாட்டில்,நாம் ஒவ்வொருவருமே இந்நாட்டு மன்னர்கள் தானே! எனவே,உங்கள் குழந்தை பிறந்த ஒரு மாதம் ஆனதும் ஜாதகம் எழுதி விடுங்கள்;


கணினியில் கணிக்கப்படும் ஜாதகங்களுக்கு ஆத்ம பலம் இல்லை;எனவே,ஜோதிடரிடம் நேரில் சென்று அவர் மூலமாக ஜாதகம் எழுதி வாங்குவது அவசியம்;


எம்மிடம் ஜாதகம் எழுதி வாங்கலாம்;கட்டணம் உண்டு;இந்தியாவுக்கு 30 நாட்களுக்குள் கூரியரில் உங்களுக்கு கிடைத்துவிடும்; இந்தியாவுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு வாட்ஸ் அப் மூலமாக மட்டுமே ஜாதகம் அனுப்ப முடியும்;

சிலர் ஆயுள் காலப் பலன்களை புத்தகமாக எழுதி வாங்குவதும் உண்டு;இரண்டு நிலைகளைக் கடந்த பின்னர்,ஆயுள் கால பலன்களை உங்கள் ஜாதகத்திற்கு எழுதித்தருகின்றோம்;


1 ஆம் நிலை:வளமான எதிர்காலம் உங்களுக்கு உங்கள் ஜாதகப்படி இருக்கின்றதா? என்பதை பார்க்க வேண்டும்;

2 ஆம் நிலை: அப்படி இருந்தால்,தாங்கள் 60 முதல் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்;

விருப்பம் உள்ளவர்கள்; எமது வாட்ஸ் அப்: +91 9092116990 என்ற எண்ணுக்கு செய்தி அனுப்புங்கள்;பேச முயற்சிக்க வேண்டாம்;ஆடியோ அனுப்பலாம்;

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பிறந்த ஜாதகம் அவசியமா? ருது ஜாதகம் அவசியமா? என்று கேட்டால் பிறந்த ஜாதகம் தான் முக்கியம்;ருது ஜாதகத்தை துல்லியமாக கணிக்க முடியாது;அது திருமண வாழ்க்கையைப் பற்றிய விளக்கங்களைத் தரக் கூடியது;பிறந்த ஜாதகமே முக்கியம்;இன்றும் தமிழ்நாடு முழுவதும் மகன் பிறந்தால் அவனுக்கு ஜாதகம் எழுதுவதும்,மகள் பிறந்தால் அவளுக்கு பிறந்த ஜாதகம் எழுதாமல் இருப்பதும் தொடர்கின்றது;

15 வயது முதல் 35 வயது வரை அரைகுறை ஜோதிடர்களைக் கண்டு,அவர்களுடைய முழுமையற்ற பலனைக் கேட்டுக் கேட்டு பலர் வெறுத்துப் போயிருக்கின்றார்கள்:அதனால், உண்டாகும் எரிச்சலால் தனது ஜாதகத்தையே கிழித்து எறிபவர்களும் இருக்கின்றார்கள்;இது மாபெரும் தவறு;இதனால்,பைரவ தோஷம் அவர்களை பீடிக்கும்;வாழ்நாள் முழுவதும் முக்கியமான சம்பவங்கள் நடைபெறும் காலத்தில் தவிக்க வேண்டி இருக்கும்;


இவர்கள் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்று பைரவர் சன்னதியில் ஒரு முறை சத்தியம் செய்ய வேண்டும்; அதன் பிறகு,ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஒரு நாளுக்கு 108 முறை எழுத வேண்டும் அல்லது ஜபிக்க வேண்டும்; இப்படி 108 நாட்கள் செய்து வர வேண்டும்;




தனது அப்பா அல்லது அம்மா பிரபல ஜோதிடராக வாழ்ந்து வரும் போது அவரை மதிக்காமல் இருந்து,அவர் இறந்த பின்னர் அவர் சேகரித்த ஜோதிட நூல்களை எரித்த மகன்கள் தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்காவில் இன்றும் இருக்கின்றார்கள்:இவர்களுக்கு மிகவும் கடுமையான,பரிகாரத்திற்கு உட்படாத தோஷங்கள் பீடிக்கும்;ஆனாலும்,அதில் இருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு மட்டும் பல ஆண்டுகளுக்குப்பிறகு வருவது உண்டு;


அவர்கள்,குறைந்தது 10 ஆண்டுகள் வரை(அதிக பட்சம் 40 ஆண்டுகள் வரை) தினமும் ஒரு மணி நேரம் வரை கால பைரவ ஜபம் செய்ய வேண்டும்;வீட்டில் அல்லது கோவிலில் கால பைரவர் சன்னதியில் ஜபித்து வர வேண்டும்; மேலும்,ஒரு கால பூஜை நடைபெறும் பழமையான சிவாலயங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;அதில் ஏதாவது ஒரே ஒரு கோவிலில் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்று பைரவ பூஜை நடைபெற முயற்சி செய்ய வேண்டும்;அந்த தேய்பிறை அஷ்டமி பூஜை தொடர்ந்து 10 ஆண்டுகள் நடைபெற்று வருமாறு தனது அக்கறையை செலுத்த வேண்டும்;


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தில்  பலருக்கு ஹ்ரீம் என்ற உச்சரிப்பு சரியாக வராது;அப்படி வராதவர்கள் ஓம் சம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்தாலும் போதுமானது;


பைரவர்கள் வாழும் உலகத்திற்கு பைரவ உலகம் என்று பெயர்;எட்டு விதமான பைரவ உலகங்கள் இருக்கின்றன;அதில் ஒரு பைரவ உலகத்தில் வாழ்ந்து வருபவர் தான் ஸ்ரீவார தாரக சித்தர் ஆவார்;இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய காலக் கணக்கினை உருவாக்கியவர்;


ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி என்று கிழமை வரிசையை உருவாக்கியவர் இவரே! பைரவப் பெருமானின் அருளால் இதை உருவாக்கினார்;இவரை தொடர்ந்து பல ஆண்டுகள் உபாசனை செய்து வந்தவர்களே ஆர்ய பட்டர்,பாஸ்கராச்சாரியார்;அதனால் தான் இவர்களால் ஆர்ய பட்டீயம்,பாஸ்காராச்சார்யம் என்ற புகழ் பெற்ற ஜோதிட நூல்களை உருவாக்கிட முடிந்தது;


இந்த கருத்தினை பரப்பவேண்டும்;ஜோதிடர்களுக்கு ஆண்டு தோறும் பஞ்சாங்கம் வாங்கி அன்பளிப்பாக தர வேண்டும்;ஜோதிடர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சினையில் இருந்து காப்பாற்ற வேண்டும்;இப்படி 10 முதல் 40 ஆண்டுகள் வரை பைரவ சேவை செய்து வருவதால்,30% முதல் 60% வரையிலான தோஷத்தை குறைக்க முடியும்;