Monday, March 4, 2019

தமிழர்களின் ஆதிகுரு அகத்தீஸ்வரர் ஆலயங்கள் பட்டியல்-52


தமிழ்நாடு முழுவதும் 1008 க்கும் மேற்பட்ட சிவாலயங்கள் அகத்திய மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன;
இந்த ஆலயங்களில் அகத்தியர் 12 தேவ ஆண்டுகள் வரை தினமும் சிவபூஜை செய்திருக்கின்றார்;

12 தேவ ஆண்டுகள் என்பது பூலோகக் கணக்கில் 16,00,000 ஆண்டுகள் ஆகும்;

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வெறும் அடுக்கு மொழி அல்ல;

குருவின் அருள் கிட்டினால் மட்டுமே தெய்வத்தின் அனுக்கிரகமும்,ஆசிகளும்,வரங்களும் நமக்குக் கிட்டும்;

தமிழ் மொழியின் தந்தை அகத்திய மகரிஷியின் அருள் கிட்டிட அவர் உருவாக்கிய சிவாலயங்களில் 108 சிவாலயங்கள் சென்று வழிபட்டால்,நிச்சயமாக அகத்திய மகரிஷியின் அருள் நமக்கு கிட்டும்;

இங்கே காணப்படும் ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் உங்கள் ஜன்ம நட்சத்திர நாளன்று அல்லது அமாவாசை அன்று அகத்திய மகரிஷியின் பெயரால் அன்னதானம் தொடர்ந்து செய்து வரலாம்;நமது வாழ்நாள் முழுவதும் இப்படி அன்னதானம் செய்து வருவது நன்று;


இதை வாசிக்கும் ஆத்மாக்கள் உங்களுக்குத் தெரிந்த ஆலயங்களைத் தெரிவிக்கவும்;

அகத்திய லிங்கம் என்று பல சிவாலயங்களில் இருக்கின்றன;இங்கே வருகை தந்து அகத்திய மகரிஷி சிவ வழிபாடு செய்திருக்கின்றார்;

அகத்தீஸ்வரம் அல்லது அகத்திய....என்|ற பெயரில் பல ஆலயங்களும்,கிராமங்களும் தமிழ்நாடு முழுவதும் உள்ளன;இவைகள் தான் அகத்திய மகரிஷி முந்தைய யுகங்களில் உருவாக்கிய சிவாலயங்கள் ஆகும்;

1. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,  அனகாபுத்தூர்,சென்னை
2. அருள்மிகு ஸ்வர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிவாக்கம்,சென்னை -49.   (ஐஸ்வர்ய வீரபத்திரர் சன்னதியும்,அம்பிகையின் நேரடிப்பார்வையில் குரு பகவான் சன்னதியும் இருக்கும் ஆலயம்)
3. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,         பொழிச்சலூர்,பல்லாவரம் அருகில்,சென்னை(விமான நிலையம் பின்புறம் 2 கி மீ  தொலைவில்,பல்லாவரம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ தொலைவில்)
4.தாராபுரம்,கோவை நெடுஞ்சாலை
5.அருள்மிகு காமாட்சியம்மன் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நாபளூர்,திருத்தணி(திருத்தணியில் இருந்து 10 கி மீ தொலைவில் லஷ்மாபுரம் பேருந்து நிலையத்திற்கு தெற்கே 1 கி மீ தொலைவில்)
6.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகிலாண்டபுரம்,காங்கேயம்

7.அருள்மிகு அசலம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில்,நுங்கம்பாக்கம்,சென்னை;.

8.அருள்மிகு பாகம்பிரியாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,அகத்தியான்பள்ளி,வேதாரண்யம்.நாகை மாவட்டம்.(வேதாரண்யம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி மீ)

9.ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்,துஞ்சனூர்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.


10.ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில்,ஏம்பல்,இரும்பாநாடு அருகில்,ஆவுடையார்கோவில்,புதுக்கோட்டை மாவட்டம்.

11.ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையூர்,பெருகமணி; (வழி=திருச்சி டூ கரூர் சாலை)

12.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில்,மேல்தானம் கிராமம்;திருக்கோளக்குடி அருகில்,புதுக்கோட்டை மாவட்டம்.

13.ஸ்ரீ அகஸ்த்தீஸ்வரர் திருக்கோவில், எட்டயத்தளி,பேராவூரணி அருகில்(புதுக்கோட்டை)=கேட்டை நட்சத்திர ஸ்தலம்

14.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,கருவளர்ச்சேரி என்ற பீஜபுரம்.(வழி=கும்பகோணம் டூ மருதாநல்லூர் டூ ஆலங்குடி பேருந்து வழித்தடத்தில் மருதாநல்லூரில் இருந்து 1 கி மீ தொலைவில்)

15.அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள்,அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில்,மாகறல்(வழி),காஞ்சிபுரம்(உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)

16.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,பஞ்செட்டி,பொன்னேரி,திருவள்ளூர் மாவட்டம்,(வழி:சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில்,சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்;பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது;(பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)

17.ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம்,அம்பாசமுத்திரம்,திருநெல்வேலி மாவட்டம்;

18.ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருவொற்றியூர்,சென்னை;

19.அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வில்லிப்பாக்கம்(வில்லிவாக்கம் அல்ல),சென்னை(வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்;அங்கிருந்து  வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்;அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;

20.அருள்மிகு  முத்தாம்பிகை சமேத    அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புத்திரன் கோட்டை,செய்யூர் வட்டம்,காஞ்சிபுரம் மாவட்டம்.(வழி:மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது;மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது;புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)

21.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாலவேடு,வந்தவாசி வட்டம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

22.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சோமூர்,கரூர் மாவட்டம்(மிகவும் பாழடைந்திருக்கின்றது;வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்=2018)

23.அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,திருச்சுனை.(வழி:மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்;அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோவிலை அடையலாம்)

24.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நெமிலிச்சேரி,சென்னை(வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)

25.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மேலக்காட்டூர்,தஞ்சாவூர் மாவட்டம்;(திருப்பனந்தாளில் இருந்து 5 கி மீ)


26.அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர்,பூந்தோட்டம்.(மயிலாடுதுறை டூ பேரளம்)

27.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பொதட்டூர் பேட்டை,திருத்தணி அருகில்,சென்னை;

28.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சாம்பவர் வடகரை;திருநெல்வேலி மாவட்டம்;

29.அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோவில்,நஞ்சுண்டாபுரம்,தாராபுரம் தாலுகா;

30.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புரிசை.(செய்யாறு டூ வந்தவாசி சாலையில் அமைந்திருக்கின்றது)

31.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழைய பாளையம்,துவரங்குறிச்சி அருகில்;(வேறு அருகு ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது;1.9.2018

32.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர்(முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது)சேத்தியாத்தோப்பு;கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்கு காத்துக்கொண்டிருக்கின்றது 1.9.2018

33.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா.(2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)

34.அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,வன்னிவேடு,வாலாஜாபேட்டை;

35.அருள்மிகு  சிவகாமிசுந்தரி சமேத      அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி.திருச்சி அருகில்

36.அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பாதூர்,உளுந்தூர்ப்பேட்டை.

37.அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,மணப்பாறை(ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்),திருச்சி மாவட்டம்.


38.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,சிறுமலை,திண்டுக்கல் மாவட்டம்.(வழி:திண்டுக்கல் டூ நத்தம் சாலை)

39.அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,புதுப்பாளையம் கிராமம்,வெம்பாக்கம்,திரு அண்ணாமலை மாவட்டம்.

40.அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,திருப்பதி நகர்,வடசேரி,நாகர்கோவில்.

41.அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில்,பெருங்குடி டூ வயலூர் சாலை,மல்லையம்பட்டு,ஸ்ரீரங்கம் தாலுகா,திருச்சி மாவட்டம்.(கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)

42.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,அயத்தூர்,வேப்பம்பட்டு,திருவள்ளூர் மாவட்டம்.

43.அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.

44.அருள்மிகு அகத்தியர் கோவில்,ஓரத்தூர்,மாடம்பாக்கம்,நீலாமங்கலம்,கூடுவாஞ்சேரி,காஞ்சிபுரம் மாவட்டம்-603202

45.அருள்மிகு பெரிய நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,நெய்வாசல் கிராமம்,கீழச்செவல்பட்டி அருகே,திருமயம் புதுக்கோட்டை மாவட்டம்;

46.அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயம்,கும்பமுனி மங்கலம்,பொன்னேரி.(சென்னைக்கு அருகில்)

47.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;

48.அருள்மிகு வண்டார்க்குழலி (ஸ்ரீபிரம்மராம்பிகை) சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையங்குடி,ஆலத்தம்பாடி அருகில்,திருவாரூர்.

49.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம்,செம்மங்குடி(கும்பகோணம்  குடவாசல் அருகில்)

50.அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம்,கீழ்த்தானம்(பொன்னமராவதி - காரையூர் அருகில்)

51.அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,ஆடையூர்,திருஅண்ணாமலை கிரிவலப்பாதை(வாயுலிங்கத்திற்கும் சந்திர லிங்கத்திற்கும் இடையே காஞ்சி சாலையில் 0.5 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது) (காஞ்சி சாலை தான்;காஞ்சிபுரம் அல்ல)

52.அருள்மிகு யோகாம்பாள் சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,குளவாய்ப்பட்டி(புதுக்கோட்டை டூ அறந்தாங்கி)=புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைவிடவும் மிகவும் பழமையான ஆலயம்;யோகா ஆசான்கள் அடிக்கடி வந்து செல்ல வேண்டிய ஆலயம் இது;

108.அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,வடுகன்பற்று,  அகத்தீஸ்வரம்,குமரி மாவட்டம்.


முக்கியக் குறிப்பு:இவைகள் அனைத்தும் இணைய தளங்கள் மூலமாக மட்டுமே தேடப்பட்டவை;ஒரே ஆலயம் இரு பெயர்களில் அல்லது இரு ஊர்களின் பெயர்களில்(பழைய பெயர்,புதுப் பெயர்) இருக்கலாம்;இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்;உங்களுக்கு தெரிந்த அகத்தீஸ்வரர் ஆலயங்களின் முகவரிகளை தெரிவிக்கும் படி  தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்;





நமது சத்குரு வெங்கட்ராம சுவாமிகளின் அருளால் சித்தர்களின் தலைவர் அகத்தியர் மகரிஷி ஸ்தாபித்த சிவாலயங்களைத் தேட ஆரம்பித்திருக்கின்றோம்;



அவைகளை தொகுத்துவெளியிடுவோம்;

எல்லோரும் 108 அகத்திய சிவாலயங்களுக்குச் செல்வோம்;

அகத்திய மகரிஷியின் ஆசிகளைப் பெறுவோம்;

அவரது வழிகாட்டுதலால் உயர்ந்த ஆத்மாவாக உயர்வோம்!!!

தமிழ் இனம் உலகத்தை ஆளத் துவங்கும்....!!!

கடுமையான பாவ வினைகளை போக்கும் சிவ மந்திர ஜபம்!!!




உங்கள் வாழ்க்கையில் இனிமேலும் வறுமை,நோய்,எதிரி,துரோகி,துன்பங்கள் தொடராமல் இருக்க ஒரு வழிமுறை கிடைத்திருக்கின்றது;(அண்ணாமலை கிரிவலம்,குலதெய்வ வழிபாடு,கோமாதா பூஜை என்ற கோ சம்ரக்ஷணம் போன்றவைகளும் நமது பாவ வினைகளைப் போக்கும்)


ஒரே ஒரு சிவலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரு சிவ மந்திரத்தை ஜபித்தாலே அதன் பலன் நம்மை வந்து சேரும்;சிலருக்கு இப்பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;பலருக்கு அடுத்த பிறவியில் மந்திர ஜபப் பலன் வந்து சேரும்;யாருக்கு எப்படி எப்போது வந்து சேரும்? என்று ஆராயும் போது,ஜோதிடக் கலை தான் அதற்கு விடையை தந்தது;

ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 1,2,4,5,7,9,10,11 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை இப்பிறவியிலேயே அனுபவிப்பார்;
ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 3,6,8,12 ஆம் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் சுக்கிரன் இருந்தால்,அவர் இப்பிறவியில் செய்யும் பாவ,புண்ணியத்தின் பலனை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்;


சகஸ்ரலிங்கம் என்று ஒருவித சிவலிங்கம் இருக்கின்றது;1964 முதல் 2018 வரை தமிழ்நாட்டில் நாத்திகப் பிரச்சாரம் செய்தார்கள்;அதன் விளைவாக,சிவாலயத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் இருக்கும் தெய்வீக சக்திகளின் வரலாறு,வழிபாடு செய்யும் முறைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது;இதே நிலைதான் மஹாவிஷ்ணு ஆலயங்களிலும் எப்படி,எந்த தெய்வத்தை எந்த திதி அல்லது கிழமையில் என்னென்ன பொருட்களால் அபிஷேகம்,அர்ச்சனை,அலங்காரம்,துதியுடன் வழிபட வேண்டும் என்பது தெரியாமல் போய்விட்டது;


சகஸ்ரலிங்கம் என்பது எல்லா சிவாலயங்களிலும் இருப்பதில்லை;150 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவில் ஒரு சிவாலயத்தில் சுயம்புவாக உருவாகும் அபூர்வமான சிவலிங்கம் ஆகும்;ஒரு பெரிய சிவலிங்கத்தின் மீது சிறிது சிறிதாக 1000 லிங்கங்கள் இருக்கும்;அதுதான் சகஸ்ரலிங்கம் ஆகும்;
சகஸ்ர லிங்கத்தின் முன்பாக அமர்ந்து இம்மந்திரத்தை ஒரு தடவை ஜபித்தால்,அது சகஸ்ரலிங்கத்தின் மீது பட்டு,1000 மடங்காக திரும்பி வந்து நமது உடலுக்குள் சேரும்;


தினமும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு விடுமுறை நாளிலும் ஒரு மணி நேரம் வரை அல்லது ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் அன்றும் ஒரு மணி நேரம் வரை பின்வரும் மந்திரத்தை ஜபித்து வர வேண்டும்;குறைந்தது 3 ஆண்டுகள் வரை ஜபிக்க வேண்டும்;அதிகபட்சமாக நமது வாழ்நாளில் 40 ஆண்டுகள் வரை ஜபித்து வரலாம்;இதன் மூலமாக,கடுமையான பாவ வினைகள் தீர்ந்துவிடும்;


முக்கிய சுய கட்டுப்பாடு என்னவெனில்,இந்த 3 ஆண்டுகள் வரை(அல்லது 40 ஆண்டுகள் வரை) கண்டிப்பாக மது,அசைவம் தவிர்த்து இருக்க வேண்டும்;இல்லாவிட்டால்,மந்திர ஜபம் பலன் தராது;

காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் நமோ நமஹ

இதுதான் அந்த மந்திரம்! இம் மந்திரத்தை அகத்திய சித்தரின் பேரருளாலும்,அருணாச்சலேஸ்வரரின் கருணையாலும் உங்களுக்கு தெரிவிக்கின்றோம்;


இம் மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை ஜபித்தால்,உங்கள் ஜப எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்திருக்கும்;அப்படி கடந்ததும்,உங்களது தினசரி வாழ்க்கை இப்போது இருப்பதை விடவும் மிகவும் இலகுவாக இருக்கும்;இதுவரை உங்கள் மாத வருமானம் ரூ.12,000/-எனில்,இனிமேல்,உங்கள் 15 நாள் வருமானமாக ரூ.12,000/-உயர்ந்துவிடும்;

ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் அண்ணாமலை கிரிவலம் வரும்போதும் இம்மந்திரத்தை மட்டும் ஜபிக்கலாம்;
திருக்கையிலாயத்தை வலம் வர இங்கிருந்து பலர் செல்கின்றார்கள்;அப்போதும் இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;

அண்ணாமலையைத் தவிர,தமிழ்நாட்டில் பல நூறு சிவாலயங்கள் மலை மீது இருக்கின்றன;அந்த மலையை பவுர்ணமி நாட்களில் பல லட்சம் மக்கள்   வலம் வருகின்றார்கள்;அப்போதும் கூட இம்மந்திரத்தை ஜபிக்கலாம்;



ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

Monday, February 25, 2019

ஒரு மாதம் வரை வருமானத்தை அதிகரிக்கும் தேய்பிறை அஷ்டமி பைரவ ஜபம்!!!

ஓம் ஸ்ரீ வாரதாரக சித்தர் குரு நம ஸ்வாஹா

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,     மாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-

 26.2.2019 செவ்வாய்க்கிழமை காலை 10.36 முதல் 27.2.2019 புதன் கிழமை காலை 11.06 வரை 

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க்கிழமை இராகு காலம் மதியம்  3  மணி முதல் மாலை 4.30 மணி வரை இருக்கின்றது.

 செவ்வாய்க்கிழமை குளிகை காலம் பகல் 12 மணி  முதல் 1.30  மணி வரை அமைந்திருக்கின்றது.

புதன் கிழமை அன்று ராகு காலமும்,குளிகை காலமும் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது வரவில்லை;



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)இங்கே இருக்கும்   பொற்றளி  பைரவர் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்!


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.

43.அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோவில் வளாகம்,படேல் தெரு,நேரு நகர்,குரோம்பேட்டை,சென்னை.

இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது

ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.




அடுத்த தேய்பிறை அஷ்டமி: பங்குனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 28.3.2019 வியாழக்கிழமை அன்று வர இருக்கின்றது;

Tuesday, February 12, 2019

வழிகாட்டும் குருநாதர்கள்

நம் ஒவ்வொருவருக்கும் சத்குரு,வழிகாட்டும் குரு என்று இரண்டு குருவின் அருள் தேவை;
சத்குருவின் அருளைப் பெற இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் நிறைவு செய்ய வேண்டும்;அப்படி நிறைவு செய்துவிட்டால்,நமது ஜன்ம நட்சத்திர சத்குருவை நேரில் சந்திக்கும் பாக்கியத்தை அருணாச்சலேஸ்வரர் அருளுவார்;
நாம் மட்டும் அல்லாமல் நமது மகன்/ளையும் அண்ணாமலை கிரிவலத்திற்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும்;
அதுவரை செவ்வாய்க்கிழமையும்,விசாகம் நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;அதன் மூலமாக சத்குருவின் சூட்சும வழிகாட்டுதல் கிடைக்கும்;29.1.2019 அன்று இரவு 7.49 வரை விசாகம் இருக்கின்றது;
அடுத்து 29.10.2019 அன்று விசாகம் வருகின்றது;
அடுத்து 26.11.2019 அன்று காலை 10.14 வரை விசாகம் இருக்கின்றது;
வழிகாட்டும் குரு என்பவரை எப்படிக் கண்டுபிடிப்பது?
பின்வரும் பட்டியலைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்;
அசுபதியில் பிறந்தவர்கள் சுவாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வீட்டில் போட்டோ வைத்து சில நிமிடங்களாவது வழிபட வேண்டும்;
சுவாதியில் ஐக்கியமானவர்கள்:சுந்தரமூர்த்தி (சைவ சமய அடியார்களில் ஒருவர்!)


பரணியில் பிறந்தவர்கள் விசாகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை வழிபட வேண்டும்;
ஸ்ரீதர் சுவாமிகள்,மம்சாபுரம் பேரூராட்சி,
,ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா ;(சித்திரை மாதத்தில் வரும் விசாகம்)


கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் அடிபணிய வேண்டும்;
காஞ்சிப் பெரியவா,காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு உள்ளே இவரது ஜீவசமாதி இருக்கின்றது;(மார்கழி மாதத்தில் வரும் அனுஷம் அன்று ஜீவசமாதி ஆனார்)


ரோகிணியில் பிறந்தவர்கள்,கேட்டை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
சூட்டுகோல் மாயாண்டி சுவாமிகள்,திருப்பரங்குன்றம்;(புரட்டாசி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்)
வியாசர் ஆடி மாதத்தில் வரும் கேட்டை அன்று ஜீவசமாதி ஆனார்;


மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவர்களில் ஒருவரை தினமும் வழிபட வேண்டும்;
ஆனி மாதத்தின் மூலம் அன்று அருணகிரிநாதர் அண்ணாமலையில் ஐக்கியமானார்;
ஐப்பசி மாத மூலம் அன்று கசவனம்பட்டி சுவாமிகளும்
அதே ஐப்பசி மாத மூலம் அன்று மணவாளமாமுனிகளும்
மார்கழி மாத மூலம் அன்று மூக்குப்பொடி சுவாமிகள் அண்ணாமலையிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூராடம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும்,யாகோபு சித்தர் மெக்காவிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்;


புனர்பூசத்தில் பிறந்தவர்கள் உத்திராடம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
உத்திராடம் நட்சத்திரத்தில் கொங்கண சித்தர் திருப்பதியில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவோணம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஒரு திருவோண நாளன்று மாயம்மாள்,சேலத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;
சித்திரை மாத ஓணம் அன்று அம்மணி அம்மாள் சித்தர் பழனி கிரிவலப் பாதையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;விஜய பைரவர் கோவிலுக்கு அருகில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கின்றது;
வைகாசி மாத ஓணம் அன்று சாக்கடை சித்தர் பழனியில் ஐக்கியமாகி இருக்கின்றார்;


ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அவிட்டம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அவிட்டம் அன்று மாதவானந்த சுவாமிகள்,பாம்புக் கோவில் சந்தையிலும் (சங்கரன் கோவில் அருகில்) ஐக்கியமாகி உள்ளார்கள்;ராஜபாளையம் டூ தென்காசி ரயில் மார்க்கத்தில் இருக்கின்றது;ரயில் நிலையம்:பாம்புக்கோவில் சந்தை


மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சதயம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன கெளபாலரை தினமும் வழிபட வேண்டும்;


பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
பங்குனி மாத பூரட்டாதி அன்று ஜீவசமாதி ஆனவர் சிவப் பிரபாகர்;கேரளா மாநிலம் ஓமலூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இவர் 723 ஆண்டுகள் வாழ்ந்தவர்;பாம்பாட்டி சித்தரின் முதல் சீடர்!!!


உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன டமருகரை தினமும் வழிபட வேண்டும்;


அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரேவதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் பின்புறம் இருக்கும் மூவர் சமாதியில் ஒரு மகான் ரேவதியில் ஜீவசமாதி ஆகியுள்ளார்;


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அசுபதி நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
அசுபதியில் திருச்செந்தூரில் நாழிக்கிணற்றின் அருகில் இருக்கும் மூவர் சமாதியில் ஒருவர் ஐக்கியமாகி இருக்கின்றார்;
ஐப்பசி மாதம் வரும் அசுபதி அன்று திருமூலர் சிதம்பரம் கோவிலுக்குள் ஐக்கியமாகி இருக்கின்றார்;


சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பரணியில் ஜீவசமாதி ஆனவரை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாதம் வரும் பரணி அன்று போகர் பழனியிலும்,
பங்குனி மாதம் வரும் பரணி அன்று சங்கரானந்தர் சுவாமிகள் ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியுள்ளார்கள்(ஸ்ரீவி.சிவகாசி சாலையில் பணியாரத் தோப்புக்கு எதிர்ப்புறம் இருக்கும் சாலியர் சமுதாய இடுகாட்டுக்கு அருகில் ஐக்கியமாகி இருக்கின்றார்.)


விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,கார்த்திகை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத கார்த்திகை அன்று குருசாமி,ராஜபாளையத்திலும்(அம்பலபுளி பஜார் என்ற பகுதியில் இருக்கும் ப்ரம்மாண்டமான ஆலயம்)
ஆவணி மாத கார்த்திகை அன்று ரோமரிஷி எறும்பீஸ்வரர் கோவில் வளாகத்திலும்
சித்திரை மாத கார்த்திகை அன்று சித்த ராஜசுவாமிகளும் ஐக்கியமாகி உள்ளார்கள்;


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ரோகிணியில் ஜிவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத ரோகிணி அன்று மச்சமுனி திருப்பரங்குன்றத்தில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;


கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மிருகசீரிட நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத மிருகசீரிடத்தில் பாம்பாட்டி சித்தர் சங்கரன் கோவிலில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,திருவாதிரையில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
புரட்டாசி மாத திருவாதிரை அன்று இடைக்காடர் அண்ணாமலையில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,புனர்பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
மாசி மாத புனர்பூசம் அன்று கணக்கம்பட்டி சுவாமிகள் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி மாத பூசம் அன்று வல்லநாட்டு சுவாமிகளும்
ஆவணி மாத பூசம் அன்று யூகிமுனியும்
தைப்பூசம் அன்று ராமலிங்க அடிகளாரும் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்கள்;


திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,ஆயில்யம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
கார்த்திகை மாத ஆயில்யம் அன்று கோரக்கர்,வடக்குப் பொய்கை நல்லூரிலும்
மாசி மாத ஆயில்யம் அன்று இன்னொரு சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்திலும்
இன்னொரு ஆயில்யம் அன்று மிஸ்டிக் செல்வம் அவர்கள் தூத்துக்குடி அருகிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்கள்;


அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
முனியாண்டி சுவாமிகள்,மூவர் சமாதி,சாலியர் சமுதாய இடுகாடு அருகில்,ஸ்ரீவில்லிபுத்தூரிலில் சித்திரை மாத மகம் அன்று ஜீவசமாதி ஆனார்;இவர் ஜீவசமாதி ஆன இடத்தில் ஒரு ஆலமரம் வளர்ந்து வருகின்றது;


சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,பூரம் நட்சத்திரத்தில்ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
வைகாசி பூரம் அன்று சண்டிகேஸ்வரரும்;
மாசி பூரம் அன்று ராமதேவர்,அழகர்கோவிலிலும் ஐக்கியமாகி உள்ளார்கள்;


பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உத்திரம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
காகபுஜண்டர் உத்திரம் நாளன்றும்;

ஒரு புரட்டாசி மாத உத்திரம் நட்சத்திர தினத்தன்று,அருள்மிகு குமராண்டி சுவாமிகள் ராஜபாளையம் நகரில் ஜீவசமாதி ஆகி இருக்கின்றார்;இவரது ஜீவசமாதி பார்க் ஸ்டாப் அருகில் ஒரு தெருவின் முனையில் அமைந்திருக்கின்றது;

புரட்டாசி மாத உத்திரம் அன்று சிவப்பிரகாசம் சுவாமிகள்,முதலியார் பட்டித் தெரு,சிவகாசி சாலை,ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


உத்ரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,அஸ்தம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
ஆடி மாத அஸ்தம் அன்று கரூவூர் சித்தர் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஜீவசமாதி ஆனார்;


ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,சித்திரை நட்சத்திரத்தில் ஜீவசமாதி ஆன மகானை தினமும் வழிபட வேண்டும்;
சித்திரை நட்சத்திரத்தில் புண்ணாக்கீஸர்,திருவாரூரில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;


இது முதன்மைப் பட்டியல் தான்;இதில் சில தவறுகள் இருக்கலாம்;சரியான தகவல்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.


உங்கள் ஊரில் ஐக்கியமான மகானின் பெயர்;முகவரி,ஜீவசமாதி ஆன நட்சத்திரத்தை ஆதாரத்தோடு தெரிவித்தால்,அடுத்த பட்டியலில் இணைத்துவிடுவோம்;
உங்கள் வழிகாட்டும் குருவின் படத்தை அல்லது பிறந்த ஜாதகத்தை உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வைத்து தினமும் வழிபடுங்கள்;


ஒவ்வொரு ஆண்டும் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில்,உங்கள் வழிகாட்டும் குருவின் ஜீவசமாதி ஆன நட்சத்திர தினத்தன்று ஜீவசமாதி ஆன இடத்திற்குச் சென்று அபிஷேகமும்,அன்னதானமும் செய்துவாருங்கள்;அப்போது அவருடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்;


இதில் சண்டிகேஸ்வரர்,டமருகர்,கெள்பாலர்,வியாசர்,சுந்தரர் =இவர்களுடைய ஜீவசமாதி பூமியில் கிடையாது;உங்கள் ஊர் சிவாலயம் அல்லது வசிக்கும் ஊரின் சிவாலயத்தில் மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகமும் அன்னதானமும் செய்ய வேண்டும்;


வளமோடும் நலமோடும் வாழ்க!!!
எல்லாப் புகழும் அருணாச்சலேஸ்வரருக்கே அர்ப்பணம்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

Sunday, January 20, 2019

கலியுக குரு ஸ்ரீவீரப்பிரம்மேந்திரர்!!!


உங்களை கலியுகத் துன்பங்களில் இருந்து காக்கும் வீரபிரம்மேந்திரர்!!!

உலகம்,உயிர்கள்,ப்ரபஞ்சம் அனைத்தும் காலத்திற்கும்,கால மாற்றத்திற்கும் உட்பட்டவையே! சக்ரா தியானம் என்ற ஆன்மீகப் பயிற்சி வகுப்புகள் நமது பாரத தேசம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன;இலவச இணைய வீடியோக்களிலும் இதுபற்றிய பாடங்கள் இருக்கின்றன;

உலகத்தில் 84,00,000 உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன;ஒரு நாள் ஆயுள் கொண்ட ஈசல் முதல் 300 வருட ஆயுள் கொண்ட ஆமை,6000 வருட ஆயுள் கொன்ட மரங்கள் வரை இருந்தாலும்,மனித இனம் இவைகளில் இருந்து    எப்படி வேறு பட்டது தெரியுமா?


மனிதன் ஒவ்வொருவரின் உடலுக்குள்ளும் ஆறு சக்கரங்கள் சூட்சுமமாக இயங்குகின்றன;மனிதனின் உடலுக்கு வெளியே தலைக்கு மேலே இன்னும் 3 சக்கரங்கள் இயங்குகின்றன;இந்த சக்கரங்கள் மனித இனத்திற்கு மட்டுமே உண்டு;வேறு எந்த உயிரினத்திற்கும் கிடையாது;


இந்த 9 சக்கரங்களையும் பல கோடி ஆண்டுகள் தவ முயற்சியாலும்,பல உலகங்களில் பலப்பல பிறவிகள் எடுத்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சித்தர்கள்!


அதில் ஒரு சித்தர் பிரான் தான் இன்றைய ஆந்திர மாநிலத்தில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீவீரபிரம்மேந்திரர்!!!இவர் கலியுகம் முழுவதும் எப்போது என்ன நடக்கும் என்பதை காலக்ஞானம் என்ற பெயரில் கணித்துள்ளார்;இந்த நூல் தெலுங்கு,தமிழ்,ஹிந்தி,ஆங்கில மொழிகளில் வெளிவந்திருக்கின்றது;


இவர் 175 ஆண்டுகள் வாழ்ந்தார்;கலியுகாதி 4094,விசாக சுத்த தசமி அன்று கடப்பா மாவட்டம்,கந்திமல்லையபல்லி என்ற இடத்தில் ஜீவசமாதி ஆகியிருக்கின்றார்;இன்று அது பிரம்மம்காரி மடம் என்று அழைக்கப்படுகின்றது;

அவர் எழுதிய ஓலைச்சுவடிகள் அனைத்தையும் ஒரு பானையில் போட்டு மூடி வைத்து,அதை பூமியில் புதைத்துள்ளார்கள்;அதன் மீது ஒரு புளியமரம் நடப்பட்டு,இன்றும் வளர்ந்து வருகின்றது;அந்த புளியமரத்தின் வயது 701 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றது;இந்த புளியமரம்,இன்றைய கர்னூல் மாவட்டத்தில் பனகனாபல்லி மடத்தில் இருக்கின்றது;இம்மடத்தை சிந்தமானு மடம் என்று பொது மக்கள் அழைக்கின்றார்கள்;

இருவிதங்களில் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் காலக்ஞானம் நூலை எழுதியிருக்கின்றார்;ஒன்று வசன நடை;மற்றது செய்யுள் போல எழுதியிருக்கின்றார்;இன்று வரையிலும் பனகனாபல்லி நகரத்தில் நாடோடிப் பாடல்கள் போல பாடப்பட்டு வருகின்றது;அவ்வூர் மக்கள் இதை சாந்திர சிந்து வேதம் என்று அழைக்கின்றார்கள்;
கலியுகத்தில் அக்கிரமங்கள் அதிகரிக்கும் போது ,துஷ்டர்களை சம்ஹாரம் செய்ய நான் மீண்டும் வருவேன் என்று ஸ்ரீவீரபிரம்மேந்திரர் தெரிவித்திருக்கின்றார்;அதன் படி,இவரே மஹாவிஷ்ணுவின் கல்கி அவதாரம் என்று மக்கள் போற்றுகின்றார்கள்;

ஸ்ரீவீரபிரம்மேந்திரர் கலியுகம் முடியும் வரை எப்போது என்ன நடைபெறும் என்பதை 3,34,000 பாடல்களாக எழுதியிருக்கின்றார் என்ற கருத்து உண்டு;அதில் சிறு பகுதி மட்டுமே கால ஞானம் என்ற பெயரில் பலர் தமிழ்,தெலுங்கு,ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள்;இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் கந்திமல்லையாபல்லி,முடுமாலா,நகரிபாடு,பனகானபல்லி போன்ற ஊர்களில் இருக்கும் ஸ்ரீவீரபிரம்மேந்திரர் மடங்களில் இருக்கின்றன;


ஸ்ரீவீரபிரம்மேந்திரர் அவர்களின் கணிப்புகள் அனைத்தையும் இந்த இணைய வெளியில் வெளியிட முடியாது;உரிய நூல்களை வாங்கி படித்துக் கொள்ளுங்கள்;ஒரு சில உதாரணங்களை மட்டும் ஸ்ரீவீரபிரம்மேந்திரரின் அருளாசியுடன் இங்கே குறிப்பிடுகின்றோம்;

சுயம் அறிந்த குரு தேவர்கள் வருவது இனி அரிதாகும்;போலிச் சாமியார்கள் பெருகுவார்கள்;


வெண்மை நிறத் தோலுடைய மக்கள் இந்த பாரத நாட்டை ஆள்வார்கள்;

கலியுகாதி 5000 ஆண்டுகள் முடிந்த பின்னர்,இந்த புண்ணிய பூமியான பாரத நாட்டில் தர்மம் படிப்படியாக தேய்ந்து போகும்;தற்போது கலியுகாதி 5119 (கிபி 2019) நடைபெற்று வருகின்றது;கலியுகாதி 4095 இல் (கி.பி.1995) நமது புண்ணிய பூமிக்கு இணைய வசதி வரத் துவங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்;


மிதுனத்தை சனி கடக்கும் போது அழிவுகள் அதிகமாகும்;1913, 1943, 1973, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்;அடுத்தபடியாக 2033 இல் மீண்டும் மிதுனத்தை சனி கடக்க இருக்கின்றார்;பாவங்கள் கடுமையாகச் செய்பவர்கள் மொத்தமாக இறக்கும் காலம் இந்த இரண்டரை ஆண்டுகள் தான்!!!


சுபக்ருதி ஆண்டில் (நவம்பர் 2022) பாரதத்தின் தெற்குப் பகுதியில் வால் நட்சத்திரம் தெரியும்;அதனால்,நிறைய உயிர்ச் சேதங்கள் உண்டாகும்;


யார் ஒருவர் தினமும் 108 முறையாவது பின்வரும் மந்திரத்தை எழுதி வருகின்றார்களோ,அவர்களை நான் காப்பாற்றுவேன்;


ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் நமசிவாய ஸ்ரீவீரப் பிரம்மேந்திர சுவாமினே நமஹ


ஸ்ரீவீரப்பிரம்மேந்திர சுவாமிகள் விசுவாச ஆண்டில் மீண்டும் வெளிப்படுவார்;அடுத்த விசுவாச ஆண்டு கி.பி.2025 டூ 2026 ஆம் ஆண்டு வருகின்றது;


கலியுகம் செல்லச் செல்ல நிம்மதியாக தினசரி வாழ்க்கையை கழிப்பதே பெரும்பாடாக இருக்கும்;இது ஏழைகளுக்கும்,செல்வந்தர்களுக்கும்,மிகப் பெரும் செல்வந்தர்களுக்கும் பொருந்தும்;


எந்த ஒரு நவீன தொழில் நுட்பத்தாலும்,அரசாங்கத்தாலும்,கார்ப்பரேட் நிறுவனத்தாலும் ஒரு தனி மனிதனின் நிம்மதியைத் தர முடியாது;
அவரவர் தனது பக்தி உணர்ச்சியின் மூலமாக நிம்மதியைத் தேடிக் கொள்ள வேண்டியதுதான்;


மேலே கூறப்பட்டிருக்கும் மந்திரத்தை தினமும் சிவாலயத்தில் 30 நிமிடம் வரை ஜபிக்கவும் செய்யலாம்;எந்த ஒரு ஆச்சார அனுஷ்டானங்களும் தேவையில்லை;ஸ்ரீ வீரபிரம்மேந்திரர் என்னைப் பாதுகாக்கும் குரு என்று எண்ணிக் கொண்டு தினமும் ஜபித்து வந்தால் போதும்!!!


குரு அருள் பெற்று,இறைவனின் ஆசிகளை பெறுங்கள்! நிம்மதியாக நீடூழி வாழுங்கள்!!!