Sunday, July 15, 2018

அஷ்டமச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய பைரவர் வழிபாடு





16.12.2017 முதல் பிப்ரவரி 2020 வரையிலும் ரிஷப ராசியினருக்கு அஷ்டமச்சனி இருக்கின்றது.எனது ஜோதிட குரு  அஷ்டமச்சனி பற்றி சொன்னதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

ஏழரைச்சனி முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின்னர்,வருவது அஷ்டமச்சனி ஆகும்.இந்த 15 ஆண்டுகளில் நாம் நீதியோடும்,நியாயத்தோடும் நடந்திருக்கிறோமா என்பதை கண்டறிந்து அதற்கேற்றாற்போல நல்ல பலன்கள் அல்லது தீய பலன்களைத் தரவே அஷ்டமச்சனி வருகிறார்.அதாவது,நமது வாழ்க்கையில் நாம் செய்த பாவபுண்ணியங்களை தணிக்கை செய்யவே வருகிறார்.


கடந்த 15 ஆண்டுகளில் ஆடாத ஆட்டம் ஆடியிருந்தால்,அஷ்டமச்சனியில் படாத பாடுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும்.இது அனைத்து ராசியினருக்கும் இது பொருந்தும்.


அஷ்டமச்சனி நடைபெறும்போது செய்ய வேண்டிய கால பைரவர் வழிபாடு இது:சனிக்கிழமை இரவு 7.30 முதல் 9.30க்குள் கால பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவிக்க வேண்டும்.இந்த கறுப்பு பட்டுத்துணியை உரிய ராசிக்காரர்கள் தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தில் வாங்கியிருக்க வேண்டும்.உளுந்துவடை மாலை,கருங்குவளை மாலை,நீலோற்பவ மாலை போன்றவைகளில் ஏதாவது ஒரு மாலையை கால பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.


பிறகு புனுகு பூசி,கறிவேப்பிலை சாதம் படையலிட வேண்டும்.இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும்.அர்ச்சனை செய்த பின்னர்,பைரவர் அஷ்டோத்திரம் அல்லதுபைரவர் நாமாவளியை கால பைரவரது சன்னிதியில் வாசிக்க வேண்டும்.(மனதுக்குள்தான்) 


தொலை தூர நாடுகளில் வசிப்பவர்களால்,இவ்வாறு செய்ய முடியாது இல்லையா? அவர்கள் தமது வீட்டில் பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி எலுமிச்சையால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்.அப்படி வரைந்தபின்னர்,பைரவ நாமாவளி அல்லது பைரவ அஷ்டோத்திரம் மேற்கூறிய நேரத்தில் வாசித்தால் போதுமானது.கண்டிப்பாக அசைவத்தை தவிர்க்கவும்.


இந்தியாவுக்குள்ளும்,தமிழ்நாட்டுக்குள்ளும் இருப்பவர்கள் அசைவத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.அப்படி கைவிட்ட பின்னரே,மேற்கூறிய வழிபாடு செய்ய வேண்டும்.

அல்லது

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று வீட்டில் எழுதி வர வேண்டும்;இயலாத பட்சத்தில் 108 முறை எழுதலாம்; பிப்ரவரி 2020 வரை தினமும் எழுதி வர வேண்டும்;பெண்கள் மாத விலக்கு நாட்கள் தவிர பிற நாட்களில் எழுதலாம்;


சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவர் கால தேவன் என்ற கால பைரவர் ஆவார்;கால பைரவரை யார் தொடர்ந்து வழிபடுகின்றார்களோ அதை எண்ணி மன மகிழ்ச்சி அடைபவர் சனிபகவான்;இதனால்,தனது உக்கிரத்தை குறைத்துக் கொள்வார்;

ஜன்மச்சனிதுயரம் நீங்கிட செய்ய வேண்டிய பைரவர் வழிபாடு


16.12.2017 முதல் முன்றாண்டுகளுக்கு தனுசு ராசியை சனிபகவான் கடக்கிறார்இதுவே தனுசு ராசியினருக்கு ஏழரைச்சனியில் இரண்டாவது பகுதியான ஜன்மச்சனி ஆகும்.இந்த ஜன்மச்சனியின் தாக்கத்தைக் குறைக்க பின்வரும் முறையில் பைரவர் வழிபாடு செய்துவர வேண்டும்.

நவக்கிரகங்களில் சனிக்கிரகத்தின் குருவாக கால பைரவர் இருக்கின்றார்;சனிக்கிரகத்திற்கு நவக்கிரக பதவி கொடுத்தவரும் கால தேவன் என்ற கால பைரவப் பெருமானே!!!


சனிக்கிழமை வரும் இராகு காலத்தில் கால பைரவர் சன்னிதியில் மண் அகல் விளக்கை,கருப்பு வண்ணம் பூசி,அதில் பாதி நெய்யும்,பாதி இலுப்பெண்ணெய்யும்,ஒரு சொட்டு எலுமிச்சை சாறும் கலந்து விளக்கு ஏற்றிட வேண்டும்.அதன்பிறகு பைரவ அஷ்டகம் மனதுக்குள் வாசிக்க வேண்டும்.ஓய்வு நேரமிருப்பவர்கள் பைரவ அஷ்டகத்தை எட்டு முறை வாசிப்பது நன்று.

அதே சமயம்,இந்த மூன்றாண்டுகளும் துலாம் ராசியினர் அசைவம் சாப்பிடக்கூடாது;முட்டை,முட்டை கலந்த பொருட்கள்,புரோட்டா போன்றவைகளையும் சாப்பிடுவது தவறு.

மேலும் எளிய வாழ்க்கை வாழ வேண்டும்.தரையில் படுத்து தூங்க வேண்டும் .(ஆடம்பரமான படுக்கையில் தூங்கக்கூடாது)ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முகத்தை மழிக்க வேண்டும்.சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றோர்களுக்கும்,அனாதைகளுக்கும் அன்னதானம் செய்துவரவேண்டும்.எண்ணிக்கை உங்களது பண வசதியைப் பொருத்தது.



 சனிப்பிரதோஷ நாட்களில்        திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

அல்லது

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்.

அல்லது

வீட்டிலேயே தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்ற மந்திரத்தை எழுதி வர வேண்டும்; இது முடியாதவர்கள் 108 முறையாவது தினமும் ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று எழுதி வர வேண்டும்; பிப்ரவரி 2020 வரை தனுசு ராசிக்காரர்களுக்கு ஜன்மச்சனி நடைபெற்று வருவதால் பைரவரின் அருளைப் பெற முயற்சிப்பது அவசியம்;

W.புதுப்பட்டியில் அமைந்திருக்கும் மூன்று சக்தி வாய்ந்த ஜீவ சமாதிகள்



சதுரகிரிக்குச் செல்ல விரும்பும் எவராக இருந்தாலும் , மதுரை செங்கோட்டை நெடுஞ்சாலையில் இருக்கும் க்ருஷ்ணன் கோவிலில் இறங்கி,அங்கிருந்து வடக்கு நோக்கிப் பிரியும் சாலையில் வத்ராப் நோக்கிப் பயணிக்க வேண்டும்.வத்ராப் நோக்கிப் பயணிக்கையில் கோபாலபுரத்தைக் கடந்ததும்,ஒரு சாலை பிரிந்து தெற்கே செல்லும்.அந்த சாலை W.புதுப்பட்டி என்னும் கிராமத்திற்குச் செல்லுகிறது.இங்கே அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெரு இருக்கிறது.இந்தத் தெருவின் நீட்சியாக புதுத்தெரு இருக்கிறது.இங்கிருக்கும் அருள்மிகு பாலசுப்ரமணி ஆரம்பப்பள்ளியை ஒட்டி கிழக்கு நோக்கி இந்த புதுத்தெரு அமைந்திருக்கிறது. இந்த புதுத் தெருவின் கிழக்கு கடைசியில் அமைந்திருப்பதுதான் மூவர் ஜீவ சமாதி ஆகும்.                                                                                                                                          இந்த மூவர் ஜீவசமாதியின் நடுநாயகமாக இருந்து அருள்பாலிப்பவர் திரு.கருப்பஞானியார் அவர்கள்;(மிக தடிமனான சிவலிங்கம் இருக்கும் படம்)இவரது வலது பக்கம்(தெற்குப்புறம்) இருந்து அருள்பாலிப்பவர் திரு. யாழ்ப்பாணம் சுவாமிகள்( சிவலிங்கத்தின் மீது விபூதிபூசியிருக்கும் படம்); இடது பக்கத்தில் இருந்து அருள்பாலிப்பவர் திரு. ஆறுமுகச்சாமிகள்(சிறியதான சிவலிங்கம் இருக்கும் படம்)                                                                                                                       W.புதுப்பட்டி மக்களின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றிவருபவர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.இவர் கருப்பஞானியர் சுவாமிகளின் சீடராக பல்லாண்டுகளாக வாழ்ந்து வந்தார்;    
                                                                                 விருதுநகர் மாவட்டம்,இராஜபாளையம் மாநகர் தெற்கு வைத்திய்நாதபுரம் தெருவில் கிழக்கு எல்லையில் இருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும்,இங்கிருக்கும் கருப்பஞானியர் கோவிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.இவருவரும் ஒருவரே!ஒரே நேரத்தில் இரண்டு ஊர்களிலும் காட்சியளித்த மகான் திரு.கருப்பஞானியார் சுவாமிகள்!!!!  

                                           இன்றும் கூட, தீராத நோய்களுக்கும்,உயிராபத்தான பிரச்னைகளுக்கும் உடனடியான அருளாசிகளை வழங்குபவர் திரு.கருப்பஞானியார் சுவாமிகளின் சீடர் யாழ்ப்பாணம் சுவாமிகள் ஆவார்.நாம் செய்ய வேண்டியது மனப்பூர்வமாக வேண்டுவதோடு,இவரது சன்னிதியில் தீபம் ஏற்றி,இவரது சன்னிதியில் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்வதுதான்.     

                                                                            ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் வரும் அமாவாசை அன்று இவரது குருபூஜை விழா மிகச் சிறப்பாக கடந்த 63 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.                                                                                                                                                 திரு.ஆறுமுகச்சாமிகள் கடந்த 30 ஆண்டுகள் வரையிலும் தினமும் அன்னக்காவடி எடுத்து வந்து,இப்பகுதி மக்களின் பசிப்பிணியைப்  போக்கியவர் ஆவார்.இந்த மூன்று சிவ மகான்களின் வரலாற்றை வெளியிடுவதில்    மஹாவில்வம் பெருமை கொள்கிறது.   

                                                                                  வாசகர்களே,வாசகிகளே நாம் செய்ய வேண்டியது: இந்தப் புகைப்படங்களை அச்சடித்து,பிரேம் போட்டு,நமது வீட்டில் பூஜை அறையில் வைத்து,நெய் தீபம் ஏற்றி வைத்து வழிபடவும்.எனது பிறந்த நாளன்று தங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை எனக்கு நீங்கள் அருளவும் என வேண்டலாமே! அதன் மூலமாக நாம் நிம்மதியை அடைய முடியும் இல்லையா?                                     

பாரதத்தின் பொருளாதார முதுகெலும்பை ஒடித்த கிறிஸ்தவன் ராபர்ட் க்ளைவ்


இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை நிறுவியவர் என்றழைக்கப்படும் இராபர்ட் கிளைவ் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக நமது அரசியல்வாதிகள் அத்தனை பேர்களும் மோசம் என்று கருதிக் கொள்பவர்கள் இராபட் கிளைவ்பற்றி தெரிந்து கொள்வது அவசியமானதாகும்.

மேலை நாட்டு வரலாற்றாசிரியர்கள் இவரைப்பற்றி வானாளவ புகழ்ந்து எழுதித் தள்ளியிருக்கிறார்கள். வரலாறு என்பது எப்போதும் ஜெயித்தவர்களை கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் ஒழிந்திருக்கும் உண்மைகளை ஒரு நாள் வெளியே வரத் தானே செய்யும். .

கிழக்கிந்திய நிறுவனம் தென்னிந்தியாவில் வர்க்கத்தை தொடங்குவதற்காக 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முகலாய சக்ரவர்த்தியின் அனுமதியை பெற்றுருந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் நிறுவியது தான் தற்போது தமிழ்நாட்டு மாநில முதலமைச்சரின் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை. இந்த கோட்டையை அடிப்படையாகக் கொண்டு இப்போது சென்னை என்றழைக்கப்படும் நகரம் வளர்ச்சியடைந்தது. ஏறக்குறைய இந்த கோட்டையை சுற்றியுள்ள பகுதிகள் மேல்மட்டத்தினர் உலாவும் பகுதியாகவே இருந்தது.


இந்த கோட்டைக்கு சாதாரண எழுத்தராக 1743ம் வருடம் வேலைக்கு வந்தவர் தான் இராபட் கிளைவ். அப்போது இவருடைய வருட சம்பளம் 15 பவுண்ட். ஆனால் இவர் சில வருடங்களிலேயே ஜெனரலாக பிற்காலத்தில் பிரபுவாக (பிலாஸி) தன்னை உயர்த்திக் கொண்டார். இவரைப்பற்றி எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் மிகச் சிறந்த மதிநுட்பமும், இராணுவ திறமையும் மிக்கவர்.

இதன் காரணமாகவே வாழ்வில் உயர்ந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்தியாவில் ஆழமாக வேறூன்ற உதவினார் என்றே எழுதியிருக்கிறார்கள். ஆனால் இவரிடம் இருந்த ராணுவ பலம் என்பது வெகு சொற்பமே. மேலும் இவருடன் இருந்த முக்கால்வாசிப் பேர்கள் பொறுக்கிகளும், காலிகள், சமூகக் கழிசடைகள் போன்றவர்களும் தான் இருந்தனர்.

முகலாயர்களின் வழிவந்த நிலப்பிரபுத்துவ அரசர்கள் தமக்குள் இடைவிடாது சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். தன்னிடம் இருந்த விசுவாசமான போக்கிரிகளை துணை கொண்டு, இராபர்ட் கிளைவ் தந்திரத்தாலும், வஞ்சகம், சூதுக்களாலும் முறியடித்து படிப்பயாக இங்கே சாம்ராஜ்யத்தை விரிவாக்கினார்.

இந்தியாவின் முதல் தலைமுறை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இன்றைய அரசியல்தலைவர்களின் முன்னோடியாக திகழ்ந்தனர். லஞ்சம், ஊழல், பொறாமை, பேராசை, காட்டுமிராண்டித்தனம், எது குறித்தும் அஞ்சாமை போன்றவற்றை குணாதிசியமாக வைத்து இந்தியாவை முடிந்தவரைக்கும் சூறையாடினர்.

இராபட் கிளைவ் கவர்னராக இருந்த போது மற்றொரு காரியத்திலும் கவனமாக இருந்தார். இந்தியாவின் கல்வி முறை, விவசாய முறையையும் நீண்ட ஆராய்ச்சியாக எடுத்துக் கொண்டு முடிவாக இரண்டு தீர்மானத்திற்கு வந்தார். கல்வியை மெக்காலே என்ற புண்ணியவான் எடுத்துக்கொள்ள இவர் விவசாயத்தில் கை வைத்தார்

கால்நடைகள், மற்றும் பசுக்கள் இந்திய விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பதை அழிக்க வேண்டுமென்று கணக்கில் எடுத்துக் கொண்டு 1760 முதல் பசுவதைக்கூடம் நிறுவி நாள்தோறும் கறிக்காக என்ற நோக்கில் 50,000 கால்நடைகளை கொல்லும் புனிதப்பணியை துவங்கினார்.

ஒரு ஆண்டில் மட்டும் கொல்லப்பட்ட கால்நடைகளின் எண்ணிக்கை ஒரு கோடியாகும்.

காரணம் அப்போது இந்தியாவில் இருந்த விவசாயம் நம்முடைய கால்நடைகளின் சாணம், மூத்திரம் இவற்றை அடிப்படையாகக் கொண்டே ஒரு ஏக்கரின் மூலம் 54 குவிண்டால் அரிசியை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. 1910 வரைக்கும் இரவு பகலாக இந்த பசுவதைக் கூடம் இயங்கிக் கொண்டேயிருந்தது. இன்று வரைக்கும் நவீணமாக்கப்பட்டு இந்த தொழில் நடந்து கொண்டேதான் இருக்கிறது. இதன் பலன் இன்று கோடிக்கணக்கான பணத்தை இறக்குமதி ரசாயன உரத்திற்கு கொண்டு போய் கொட்டி மானிய விலையில் உழவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
பழங்கதை பேசாதே என்று எளிதாக பலவற்றை புறந்தள்ளி விடுகின்றோம்.

நமது விவசாயத்தில் இருந்த ஏராளமான சாத்தியக்கூறுகள் இன்று இருந்த சுவடே தெரியாத அளவிற்கு காணாமல் போய்விட்டது.

ஒரு சின்ன உதாரணத்தை பார்த்து விடலாம்.

விதை நெல் கோட்டை என்பது கீழ் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு நன்றாக தெரிந்த வார்த்தை இது. தங்களுக்கு தேவைப்படும் விதை நெல்லை சேகரிக்கும் முறையைத்தான் இப்படி குறிப்பிடுவார்கள். அறுவடை முடிந்ததும் விதை நெல்லை நன்றாக வெயிலில் காய வைத்து சுத்தமான வைக்கோலைக் கொண்டு பிரி (கயிறு போன்று திரித்து) செய்து அதன் மேல் வைக்கோல் பரப்பி அதில் 18 மரக்கால் (55 கிலோ) விதை நெல்லை வைத்து பந்து போல இறுக்கி சுற்றி வைத்து விடுவார்கள். இதற்கு பெயர் தான் விதை நெல் கோட்டை.

இந்த கோட்டையின் மேல் காற்றுப் புகாதவாறு பசு மாட்டு சாணத்தை பூசி நன்றாக காய்ந்த பிறகு தனியாக ஒரு பகுதியில் அடுக்கி வைத்து விடுவார்கள். இது போன்று செய்வதால் உள்ளே உள்ள நெல் ஒரே தட்பவெப்ப நிலையில் இருக்கும். எந்த பூச்சி புழுவும் அண்டாது. தேவைப்படும் போது இதை தனியாக எடுத்து அப்படியே 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மூன்று நாட்கள் முட்டம் போட வைத்து அப்படியே நாற்றாங்காலில் தெளிக்க பயிர்கள் ஜம்மென்று பச்சையாய் சிரிக்கும்.

ஆனால் சணல் பைக்கு மாறி ப்ளாஸ்டிக் பைக்கு மாறி இன்று இன்னும் பல நவீன வசதிகளுடன் வந்து விட்டது. இன்று பச்சையாய் பயிர் சிரிக்கவில்லை. விவசாயிகளுக்குத் தான் பயிர் பலன் தருவதற்குள் இரத்தம் சிவப்பாய் வருகின்றது.

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு சென்று கொண்டிருந்த செல்வம் அங்கே தொழிற்துறையை வெகு சீக்கிரமே முன்னேற்ற உதவியது. இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொண்டிருந்த பிரிட்டன் தொழிலதிபர்களுக்கு கிடைத்த அபரிமிதமான லாபத்தைப் போலுள்ள உதாரணத்தை உலக பொருளாதார உறவுகளின் வரலாற்றிலேயே பார்க்க முடியாது.

உலகத்தின் தொழிற்சாலையாக பிரிட்டன் மாறுவதற்கு இராபட் கிளைவ் உதவினார்.


அத்துடன் தனக்காக சேர்த்த சொத்துக்களும் கணக்கில் அடங்காது. நகையாக, பணமாக, பண்ணை வீடுகளாக என்று சேர்த்து குவித்தார். இதையே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் " இந்தியர்கள் தங்களுடைய பாதாள அறைகளிலிருந்த தங்கத்தையும் மாணிக்கங்களை எனக்கு முன்னால் குவியலாகக் கொட்ட அந்த குவியல்களுக்கிடைய நான் உலாவுவதுண்டு " என்று ஆணவமாக பேசினார்.

இதைத்தான் நேரு பின்வருமாறு எழுதினார்.

"அது பகற்கொள்ளையே. அவர்கள் "பண மரத்தை" ஆட்டினார்கள். பயங்கரமான பஞ்சங்கள் வங்காளத்தை அழிக்கும் வரை அந்த மரத்தை திரும்பத்திரும்ப ஆட்டினார்கள்."

ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடத்திக் காட்டிய இந்த அரசியல் அயோக்கியனுக்கும் இன்றைய அரசியல்வாதிகளுக்கும் என்ன பெரிதான வித்யாசம்?

அப்போதும் இப்போதும் எப்போதும் அரசியல் என்பது தந்திரம், சமார்த்தியம், சுயநலம் இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு தான் இயங்குகின்றது. அன்று நம்முடைய வளங்கள் பிரிட்டனுக்கு மட்டுமே சென்றது. இப்போது கருப்பு பணமாக பல நாட்டு வங்கிகளுக்கும் சென்று கொண்டுருக்கிறது.

தற்போது ஸ்விஸ் வங்கியில் மட்டும் இருக்கும் இந்தியர்களிள் பணம் 25 லட்சம் கோடி. மற்ற வங்கிக் கணக்குத் தொகை எத்தனையோ?. .

இந்தியக் கறுப்புப் பணத்தின் அளவு, இந்தியாவின் மொத்தக் கடன் தொகையிலும் அதிகம் என்கிறார்கள்.

மல்லபுரத்தில் மீண்டும் நரசிம்ம கர்ஜனை!!!


 திப்பு சுல்தான் காலத்தில், தற்போது கேரளத்தில் உள்ள, அன்றைய மலபார் பகுதியில் நூற்றுக்கணக்கான கோயில்கள் முஸ்லீம் வெறியர்களால் தகர்க்கப்பட்டன;கோவிலின் விலைமதிப்பற்ற நகைகளும் சொத்துக்களும் சூறையாடப்பட்டன;அவற்றில் இரண்டு கோவில்கள் குறிப்பிடத்தக்கவை: தளி சிவன் கோவில் மற்றும் மல்லபரம்பா நரசிம்ம மூர்த்தி கோவில்.இவை இரண்டுமே தற்போதைய மல்லபுரம் மாவட்டத்தில் இருக்கின்றன.


ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு முதல்வராக இருந்த கம்யூனிஸ்டு ஆட்சியின்போது,நடத்தப்பட்ட பிரம்மாண்டமான கிளர்ச்சிக்குப்பின்னர், தளியில் இருந்த சிவன் கோவில் மீண்டும் கட்டப்ப்பட்டு,குடமுழுக்கு செய்யப்பட்டது.பழையபடி,வழிபாட்டு ஸ்தலமாயிற்று.


இரண்டாவது கோவில், 350 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட ஒரு தனியார் கோவில்.அதை நிர்வகித்து வந்த  குடும்பத்தினரின் அக்கறையின்மையின் காரணமாக ஸ்ரீநரசிம்மமூர்த்தி குடிகொண்டிருந்த அந்தக் கோவில் சிதிலமடைந்தது.1779 இல் திப்பு சுல்தான் மலபார் பகுதிக்கு வந்த போது அது நாசமாக்கப்பட்டது.

கோவிலைச் சுற்றியுள்ள 100 ஏக்கர்நிலத்தை, அந்த இடத்தில் ரப்பர் மரங்களைப் பயிரிடும் நோக்கில் உன்னியன் சாகேப் என்பவர் குத்தகைக்கு எடுத்தார்.1947 ஆம் ஆண்டில் ஓர் இரவு அவர் கனவில் ஒரு காட்சி கண்டார்.பயங்கர முகம் கொண்ட ஓர் உருவம் தன்னை நோக்கி கூச்சலிடுவதைப் போல, அந்த கனவு அவருக்கு பல இரவுகள் தொடர்ந்து வந்தது.மிகவும் பயந்து நடுங்கிப்போன சாகேப், இது குறித்து தனது இந்து நண்பர்களிடம் கூறினார்.அவர்களது ஆலோசனைப்படி,உன்னியன் சாகேப் ஒரு ஜோதிடரை அணுகினார்.அந்த ஜோதிடர் சொன்னார்: “உங்கள் கனவில் தோன்றுவது சாட்சாத் நரசிம்ம மூர்த்திதான்! தனது பழைய இடத்தில் தன்னை மீண்டும் ஸ்தாபனம் செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்!!!”
அவ்வாறே செய்து முடிப்பதாக, உடனே தன் மனதில் முடிவெடுத்தார் அந்த முஸ்லீம்(உன்னியன் சாகேப்).என்ன ஆச்சரியம்! அன்று முதல் ,இரவில் அவருக்கு அந்த பயங்கர கனவு வருவது நின்று விட்டது.


தீவிரமாக வேலையில் இறங்கினார் உன்னியன் சாகேப்!!! நம்பூதிரி பிராமணர்களை சிற்பங்கள் வடிக்கும் கலைஞர்களை கோயில் கட்டுமானப்பணிக்குத் தேவையான அனைத்துத் தொழில்களைச் சார்ந்தவர்களையும் சந்தித்தார்.திருப்பணி துவங்கி கோவில் கட்டி முடிக்கப்பட்டு,குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இருந்தது.
கோவில் கட்டுமானத்தின் போது காணப்பட்ட சூழ்நிலை,அங்கு ஒலிக்கப்பட்ட வேத மந்திரங்கள் காரணமாக ஒரு தாக்கம் ஏற்பட்டு,உன்னியன் சாகேப் தான் ஒரு இந்துவாக மாற விரும்புவதாக விருப்பம் தெரிவித்தார்.
மட்டற்ற மகிழ்ச்சி கொண்ட இந்து சமுதாயத் தலைவர்கள் அவரை 45 மைல்கள் தொலைவில் உள்ள கோழிக்கோடுக்கு அழைத்துச் சென்றார்கள்.அங்கு புத்தாசிங் என்பவரது தலைமையில் இயங்கிய ஆரிய சமாஜ அமைப்பு மூலம் சாகேப் தாய்மதம் திரும்பினார்.தன் மகன்கள் மற்றும் சகோதரருடன் உன்னியன் சாகேப் ராஜசிம்மன் என்றும்,அவரது தம்பி தயாசிம்மன் என்றும், சிறுவர்கள் இருவரும் பதேசிங்,ஜோராவர் சிங்( குரு கோவிந்தசிங்கின் புதல்வர்களின் பெயர்கள்) என்றும் பெயர்கள் சூட்டப்பட்டனர்.



சில மாதங்கள் கழிந்தன.ராஜசிம்மனாகிய உன்னியன் சாகேப்
தன் தம்பிக்கு ஒரு நம்பூதிரி பிராமணப்பெண்ணை திருமணம் செய்து வைக்க விரும்பினார்.நம்பூதிரி சமூகம்,அவரது விருப்பத்தை ஏற்று,பூர்த்தி செய்தது.சிறுவர்கள் இருவரும் டில்லியில் உள்ள ஆர்ய சமாஜப் பள்ளி ஒன்றில் கல்வி பயில அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி எல்லாம் அங்கிருந்த முஸ்லீம்களிடம் அதிர்ச்சியையும்,ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது.3.8.1947 அன்று இரண்டு லாரிகளில் பயங்கரமான ஆயுதங்களுடன் வந்த முஸ்லீம் முரடர்கள், ராஜசிம்மனையும் இதரர்களையும் படுகொலை செய்தனர்.புதிதாகக் கட்டப்பட்ட கோயிலையும் நாசப்படுத்தினர்.டில்லியில் இருந்ததால் சிறுவர்கள் உயிர் தப்பினர்.


இந்தப் படுகொலையை எதிர்க்க எந்த இந்துவும் முன்வரவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.பயத்தால் நடுங்கிப்போன இந்துக்கள்,தங்கள் வீட்டுக் கதவுகளை உட்பக்கமாக பூட்டிக்கொண்டனர்.இறந்த உடல்களைக் கோர எவரும் முன் வரவில்லை;காவல்துறையினரே அவற்றை எந்த சடங்கும் இன்றி,மலையடிவாரத்தில் புதைத்தனர்.அந்த காலகட்டத்தில் ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம் அங்கே வலுப்பெற்றிருக்கவில்லை;
ஒரு பெரிய செல்வந்தரான ராஜசிம்மனின் மாமனார்,சிறுவர்களை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார்.இன்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ்.அந்தப்பகுதியில் வலுவாக உள்ளது.1947இல் சிறுவர்களாக இருந்தவர்கள்,அந்த கொடூரத்தை அன்று நேரில் கண்டவர்கள்,அறிந்தவர்கள்,தங்களது அந்த காலத்திய இயலாமையைக் குறித்து வருந்தியவர்கள் அனைவரும் 1947இல் செய்ய முடியாததை இன்று சாதிக்க முடிவெடுத்தனர்.


‘நரசிம்ம மூர்த்தி கோவில் டிரஸ்ட்’ அமைக்கப்பட்டது.அதன் மூலம் நீதி மன்றத்தை நாடி அந்த கோவில் நிலங்களை மீட்டு,ராஜசிம்மனின் சந்ததியினர் பொறுப்பில் விடப்பட்டு,அந்த இடத்தில் மீண்டும் கோவில் கட்ட நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டது.
தீவிர,கடுமையான உழைப்புக்குப் பின்,அந்த இடத்தில் ஒரு பிரம்மாண்டமான ஆலயம் எழுந்தது.கோவிலைக் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆயிற்று.நரசிம்மர் கோவிலில் விநாயகர்,சுப்ரமணியர்,ஐயப்பன்,துர்கை விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.குடமுழுக்கு மிகப்பெரிய திருவிழா போல சிறப்பாக செய்யப்பட்டது.இந்து விரோதிகள் மனதில் கிலி ஏற்படுத்தும் விதமாக, மல்லபுரம் இந்துக்கள் நரசிம்மரைப் போல கர்ஜனை செய்யத் துவங்கியுள்ளனர்.இந்த இடத்தில் நரசிம்மர் கோவில் கட்டப்பட்டிருப்பது 5 வது தடவையாகும்.
நவக்கிரகங்களில் சந்திரபகவானால் கட்டப்பட்டது சோமநாதபுரம் சிவாலயம்.பூசாரிகள் மட்டுமே 2000 பேர்களுக்கு மேல் எனில் ,இந்த கோவிலின் பிரம்மாண்டத்தை கற்பனை செய்து பார்க்க முடியுமா? அப்பேர்ப்பட்ட சோமநாதபுரம் கோவிலை முஸ்லீம்கள் 17 முறை நாசமாக்கினர்.அதை மீண்டும் கட்டிட அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல்,முயற்சி செய்தார்.அவருடன் இந்த கோவில் புனர்நிர்மாணத்திற்கு கே.எம்.முன்ஷி போன்றவர்களும் உறுதுணையாக இருந்தனர்.கோவில் குடமுழுக்கு விழாவிற்குச் செல்வதை அன்றைய பிரதமர் நேரு எதிர்த்தாலும்,அதையும் மீறி அன்றைய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திரபிரசாத் கலந்து கொண்டதையும் நாம் மறக்கக் கூடாது.


கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்,நரசிம்மரின் விக்கிரகம் திருவுலாவாக மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அனைத்து ஊர்களிலும் இந்துக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்று வணங்கினர்.மல்லபுரம் இந்துக்களுக்கு ஒரு புதிய தன்னம்பிக்கை உணர்வு ஏற்படுத்தியது.அந்தக் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 கி.மீ.வரை ஒரு இந்துவீடு கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனாலும்,நரசிம்மரை தரிசிக்க தினமும் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர் .
நன்றி:விஜயபாரதம் பக்கம் 18,19; 30.12.11

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு







30 வருட ஜோதிட அனுபவத்தை நேரடியாக கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பினை மஹாவில்வம் வழங்குகிறது.


ஒரு நாளுக்கு இரண்டு முறை வீதம் ஒரே மாதத்தில் நீங்கள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளமுடியும்.


காலை 90 நிமிடங்கள்,மாலை 90 நிமிடங்கள் வீதம் 30 நாட்களுக்குள் தொழில்முறை ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.


இதற்கு உங்களுக்குத் தேவையான தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரையிலும் உங்கள் சொந்தச்செலவில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து தங்கவேண்டும்.அவ்வளவே!


தொழில்முறை ஜோதிடம் கற்க கட்டணம் உண்டு.






தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஜோதிட பயிற்சி வகுப்புகளில் நடைபெறுகின்றன.அவை வார இறுதிநாட்கள் வகுப்பை நடத்துகின்றன.அது நமது வேகமான வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்கின்றதா?


தொழில் முறையாகப் பார்க்க விரும்பாதவர்கள்,பொழுதுபோக்கிற்காகவும் ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகம்,கோவை அவினாசிப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஜோதிட டிப்ளமோ,ஜோதிட டிகிரிகள் படிப்பவர்களும் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு தங்கள் திறனை மெருகுபடுத்திக்கொள்ளலாம்.






பெண்களுக்குத் தனி வகுப்புக்கள் நடைபெறுகின்றன.






நமது எதிர்கால வாழ்க்கையையும்,நம்மைச் சார்ந்தவர்களின் எதிர்காலத்தையும் கணிக்கவும்,ஜோதிடப்படி வழிகாட்டவும்,நமது நட்புவட்டத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையை மதிப்பிடவும் ஜோதிடம் பயன்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!!!


சில ஜோதிட ரகசிங்களினால் நமது ஜாதகத்தில் இருக்கும் பிரச்னைகளையும்,பாவங்களையும் சரி செய்யமுடியும்.நமது சராசரி வாழ்க்கையை அசாதாரணவாழ்க்கையாகவும் மாற்றிட முடியும்.






தொழில்முறை ஜோதிடம் கற்க விரும்புவோர்,உங்களது பிறந்த ஜாதகம்,போட்டோவை 9092116990 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும்;கூடவே Like2Learn Astrology என்று அனுப்புங்கள்;

அகத்தியமகரிஷியை தரிசிப்பது எப்படி?


நீங்கள் அகத்திய மகரிஷியை தரிசிக்க வேண்டுமா?

கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.

ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்.45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.

நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது நேரில் வருவார்.

மந்திரம்:

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.


இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய வேண்டும்.
பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள் 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில்       7 அடி   உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் தரிசனம் கிட்டும்.

முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும்,அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.


அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை;