Monday, June 4, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம்,    வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி :-
6.6.2018 புதன் காலை 8.08 முதல் 7.6.2018 வியாழன் காலை 9.10 வரை அமைந்திருக்கின்றது;

ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

 புதன் கிழமை குளிகை காலம் காலை 10.30 முதல் 12 வரை அமைந்திருக்கின்றது;


 புதன் கிழமை  இராகு காலம் மதியம் 12 முதல்  1.30 வரை அமைந்திருக்கின்றது;

வியாழக்கிழமை குளிகை காலம் காலை 9 மணி முதல் 10.30 வரை இருக்கின்றது;(10 நிமிடம் வரை மட்டுமே குளிகை நேரத்தில் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கின்றது)



இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம், ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை

42.அருள்மிகு  நேத்ரதாயினி உடனுறை மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில்,பூந்தமல்லியில் இருந்து 15 கி மீ,தொலைவு,சென்னை.


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 6.7.2018 வெள்ளிக்கிழமை

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Friday, June 1, 2018

பைரவ வழிபாட்டின் நன்மைகள்!!!



உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அந்த ஆதிசிவனின் பெயரால் ஆட்சி செய்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;

ஈசன் ஒருபோதும் அவதாரம் எடுப்பதில்லை;ஆனால்,தேவைப்படும் போது தன்னுடைய சக்தியின் ஒரு சிறு பகுதியை வெளிப்படுத்துவது வழக்கம்;அப்படி வெளிப்பட்டதுதான் பைரவ சக்தி;

ஈசன் வாழும் இடம் திருக்கையிலாயம் என்பது போல,மஹா கால பைரவப் பெருமான் வாழ்ந்து வருவது பைரவ உலகம் ஆகும்;எட்டுவிதமான பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு பைரவ உலகத்திற்கும் ஒவ்வொரு பைரவ பெருமான் தலைவராக இருந்தபடி ஆட்சி செய்து வருகின்றார்கள்;

மனிதனாக வாழ்ந்து வரும் நாம் ஒவ்வொருவரும் தினமும் செய்யும் செயல்களை எட்டுவிதமான ‘கர்மா’க்களுக்குள் அடக்கிவிடலாம்;இந்த எட்டுவிதமான கர்மாக்கள் மூலமாக எட்டுவிதமான பாவச் செயல் அல்லது புண்ணியச் செயலைச் செய்துவிடலாம்;எட்டுவிதமான பாவச் செயல் செய்தால்,64 விதமான தண்டனைகளும்,எட்டுவிதமான புண்ணியச் செயல் செய்தால் 64 விதமான பூர்வ புண்ணியங்களும் உண்டாகின்றன; நமது பாவ புண்ணிய நடவடிக்கைகளை நவக்கிரகங்கள் மூலமாக கண்காணித்து,நமது மறுபிறவியை நிர்ணயிப்பதுதான் எட்டுவிதமான பைரவசக்திகளின் கடமை!!!


அதனால் தான் எட்டுவிதமான பைரவர்கள் ஒவ்வொருவரும் தலா எட்டு எட்டாக பிரிந்து 64 விதமான பைரவர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்:64 விதமான பைரவ வழிபாடுகள் சமண மதம்,புத்த மதம்,ஜைன மதம் என்று அனைத்துவிதமான மதங்களிலும் இன்றுவரையிலும் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன;சில ஆராய்ச்சியாளர்கள் பைரவர்கள் 64 அவதாரங்கள் மட்டும் அல்ல;10,008 பைரவர்கள் உண்டு என்றும்,சிலர் 1,00,008 பைரவர்கள் உண்டு என்றும் கூறுகின்றார்கள்;


தமிழ்நாட்டில் பைரவர்களின் வீரதீரச் செயல்கள் எட்டு இடங்களில் வெவ்வேறு யுகங்களில் நிகழ்ந்துள்ளன;அவைகளை அட்டவீரட்ட திருத்தலங்கள் என்று அழைக்கின்றோம்;இந்த அட்டவீரட்ட திருத்தலங்களுக்கு ஒரே ஒருமுறை சென்று வருபவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குள் அவர்களுடைய முற்பிறப்பு ரகசியங்கள் தேடிவரும் என்பது அனுபவத்தில் கிடைத்த உண்மை;

1.திருக்கண்டியூர் (தஞ்சாவூர் அருகில்)
2.திருக்கோவிலூர்
3.திருக்கடையூர் & திருக்கடையூர் மயானம்
4.திருவதிகை (பண்ருட்டி அருகில்)
5.திருப்பறசலூர்(மயிலாடுதுறை அருகில்)
6.வழுவூர்(மயிலாடுதுறை டூ திருவாரூர் சாலையில் 12 வது கி மீ தூரத்தில்)
7.கொறுக்கை என்ற குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ தூரம் பயணித்து பிறகு உள்ளடங்கிய கிராமப்புற சாலையில் செல்ல வேண்டும்)
8.திருவிற்குடி(திருவாரூரில் இருந்து நாகை செல்லும் சாலையில்)
9.சிதம்பரம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி
அட்ட வீரட்டானங்கள் என்று இவைகள் அழைக்கப்படுகின்றன;

இவைகளின் புராண வரலாறு பற்றி ஒரு சிலர் மட்டுமே நூல்களாக எழுதியுள்ளார்கள்;பழைய புத்தகக் கடைகள் அல்லது 1980 க்கு முந்தைய வெளியீட்டு புத்தகங்களில் இதுபற்றி முழுவிபரங்கள் இருக்கின்றன;

பூமியில் பைரவ சித்தர்களில் ஒருவர் கூட ஜீவசமாதி ஆகவில்லை என்று தெரிகின்றது;பைரவப் பெருமானைச் சரணடைந்தவர்கள் தமது ஆயுள் முடிந்தவுடன் அவர்களது ஆன்மா பைரவ உலகத்தை நோக்கி பயணித்துவிடுகின்றது;

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பாக,காலத்தை நிர்ணயித்தவர் ஸ்ரீவாரதாரக சித்தர் என்ற பைரவ சித்தர் ஆவார்;இவரே,ஒரு நாள் என்பதை 16 முகூர்த்தம்(24 மணி நேரம்);ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள்,ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் என்று நிர்ணயம் செய்தார்;இவர் இன்றும் பைரவ உலகம் ஒன்றில் வாழ்ந்து வருகின்றார்;இவரை உபாசனை செய்து தான் ஆர்ய பட்டர் தமது ஜோதிட நூலையும்,பாஸ்கராச்சாரியார் தனது ஜோதிடம் சார்ந்த வானியல் நூலையும் இயற்றினார்;


நம் ஒவ்வொருவருடைய மனத்திலும் இருக்கும் துணிச்சல் உணர்ச்சியாக இருந்து கொண்டு நம்மை இயக்குபவர் மஹா கால பைரவப்பெருமான் தான்!!!


தினமும் பைரவ வழிபாடு செய்து வருபவர்களுக்கு குரு பக்தி உருவாகி,அது வலுவடைந்துவிடும்;உண்மையான குரு தேடி வருவார்;இன்றைய கலியுகத்தில்,ஒவ்வொரு மனிதனுக்கும் பணத்தாசை/பெண்ணாசை/மண்ணாசை என ஏதாவது ஒரு ஆசை அதிகரிக்கின்றது;இதனால்,பக்தியும்,கடவுள் மீதான அன்பும் குறைகின்றது;குருவைத் தேடும் எண்ணமே இருப்பதில்லை;இதை சரி செய்யும் ஒரே ஜபம் பைரவ ஜபம் மற்றும் பைரவ வழிபாடு மட்டுமே!!!


ஒவ்வொரு நாளும் சூரிய உதய நேரத்தின் முன்னும் பின்னும் இருக்கும் நான்கு நிமிட நேரமே பைரவ முகூர்த்தம் எனப்படும்;உதாரணமாக,சித்திரை மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 5.45க்கு இருக்கும்;இந்த நாளில் பைரவ முகூர்த்தம் காலை 5.41க்கு துவங்கி காலை 5.49 வரை இருக்கின்றது;அதே சமயம்,ஆவணி மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 6 மணியாக இருக்கின்றது;அப்போது,பைரவ முகூர்த்தம் காலை 5.56 முதல் 6.04 வரை இருக்கின்றது;மார்கழி மாதம் 1 ஆம் நாளன்று சூரிய உதயம் காலை 6.45க்கு இருக்கின்றது;அந்த நாளில் பைரவ முகூர்த்தமானது காலை 6.41 முதல் காலை 6.49 வரை இருக்கின்றது;


எட்டு பைரவ உலகங்கள் இருக்கின்றன;ஒவ்வொரு உலகத்தையும் ஒவ்வொரு பைரவப் பெருமான்கள் ஆட்சி செய்வதாக கூறினோம் அல்லவா?இந்த எட்டு பைரவப் பெருமான்களும் பைரவ முகூர்த்தத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்;அதன் மூலமாக இந்த பூமியின் ஒவ்வொரு நாளின் கர்மபரிபாலனத்தையும் அவர்களே ஆரம்பித்து வைக்கின்றார்கள்;


பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக எண்ணி தினமும் அவரது அருளைப் பெற விரும்புவோர், ஒவ்வொரு நாளிலும் வரும் பைரவ முகூர்த்த நேரத்திலும்,ஒவ்வொரு நாளிலும் வரும் குளிகைக் காலத்திலும் 108 முறை அல்லது 1008 முறை “ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ” என்று ஜபித்து வர வேண்டும்; 3 ஆண்டுகளுக்குள் அடுத்த பைரவ வழிபாட்டு முறை தேடி வரும்;


பைரவ ஜபத்தின் போது ருத்ராட்ச மாலை அணிந்து ஜபிக்கலாம்;ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலை அணிந்து ஜபித்து வருவதன் மூலமாக ஓராண்டுக்குள் பைரவ அருள் கிட்டிவிடும்;


செல்வத்தின் தெய்வமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கின்றார்;இவர் தான் மஹாவிஷ்ணுவுக்கு செல்வத்தின் கடவுள் என்ற வரத்தை கொடுத்திருக்கின்றார்;இவரை உபாசனை செய்துதான் திருவிற்குடி என்ற அட்டவீரட்டானத்தில் சங்கு,சக்கரத்தை தனது ஆயுதமாக மஹாவிஷ்ணு பெற்றார்;


ராமாயண யுத்தத்தில் ஒரே நேரத்தில் தனது பத்து தலைகளை யார் வீழ்த்துகின்றார்களோ,அப்போதுதான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை ராவணன் பெற்றிருந்தான்;அதனால்,அகத்திய மகரிஷியின் உபதேசப்படி,அஷ்ட பைரவர்களில் ஒருவரை ஸ்ரீராமபிரான் உபாசனை செய்து,பைரவ பாணம் ஒன்றினை வரமாக பெற்றார்;அதன் பிறகுதான் ஸ்ரீராமனால்,சிவபக்தனாகிய ராவணனை வீழ்த்த முடிந்தது; இருடிகள் ராமாயணத்தில் மட்டுமே இருக்கும் ராமாயண மறை பொருள் இது;

(இருடிகள் ராமாயணம் என்பது சித்தர் பெருமக்களால் எழுதப் பட்ட ராமாயணம் ஆகும்;சித்தர் பெருமக்கள் ராமாயண சம்பவங்கள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து,அதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்துள்ளார்கள்)


எல்லா சிவாலயங்களிலும் ஷேத்திரபாலராக கால பைரவர் இன்றும் இருந்து வருகின்றார்;அதே போல,எல்லா விஷ்ணு ஆலயங்களிலும் ஷேத்திரபாலராக ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருந்திருக்கின்றார்;இன்றைக்கு திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற கிராமத்தில் இருக்கும் அருள் மிகு சவுந்தர ராஜப் பெருமாள் திருக்கோவிலில் மட்டுமே க்ஷேத்திரபாலராக அமைந்திருக்கின்றார்;


ஒரு ஊரில் ஒரு நல்ல காரியம் செய்ய முயலும் போது அதை நிறைவேற்ற விடாமல் நமது மனமே பல எதிர்மறை எண்ணங்களை தோற்றுவிக்கும்;

சில ஊர்களில் எப்போதும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய ஆரம்பிக்கக் கூட முடியாது;காரணம்,இம்மாதிரியான ஊர்களில் தீய ஆத்மாக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதுதான் காரணம்;


நல்ல எண்ணத்திற்கும் தீய எண்ணத்திற்கும் இடையிலான போராட்டம் இந்த பூமியைப் பொறுத்தவரையில் நிரந்தரமானது;

இந்த போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்?


நல்ல சக்தியுள்ள,நல்ல எண்ணமுள்ள,நல்லவனாக வாழ்ந்து வரும் மனித ஆத்மாக்கள் ஓளி உலகத்தை அடையும் வரை இந்த போராட்டம் தொடரும்;

இந்த போராட்டம் விரைவில் முடிவுக்கு வர பின்வரும் அமைப்புடைய சிவாலயத்தில் பைரவ பூஜை,பைரவ யாகம்,பைரவ மந்திர ஜபம்,பைரவ யோகத்தை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும்;

எல்லா சிவாலயங்களிலும் மூலவருக்கு பின்புறமாக லிங்கோத்பவர் சன்னதி அமைந்திருக்கும்;சில பல சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதிக்குப் பதிலாக அர்த்த நாரீஸ்வரரோ அல்லது பிட்சாடனரோ சன்னதியாக அமைக்கப்பட்டிருக்கும்;இவ்வாறு இருக்கும் ஆலயங்களுக்கும் ஒளி உலகங்களுக்கும் நேரடியாகத் தொடர்பு உண்டு;இங்கே தொடர்ந்து செய்யப்படும் பைரவ பூஜை,பைரவ வழிபாடு,பைரவ ஜபம்,பைரவ தவம் எவ்வித தங்குதடையின்றி சுலபமாக நிறைவேறி,ஒளி உலகங்களின் உதவியால் உன்னதமான நிலையை பைரவ பூஜை/யாகம்/தவம்/ஜபம் செய்பவர்கள் அடைந்துவிடுவார்;


ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி மற்றும் வளர்பிறை அஷ்டமி திதி நாட்களில் அண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டே இருந்தால் நமது கஷ்டங்கள்,வேதனைகள்,சோகங்கள் காணாமல் போய்விடும்;108 அஷ்டமிகளுக்கு தொடர்ந்து இவ்வாறு கிரிவலம் வருவதன் மூலமாக பைரவ உலகத்தில் வாழ்ந்துவரும்  பைரவ சித்தர்களின் நேரடித் தொடர்பு கிடைத்துவிடும்;


குரு கிரகம் சுபராகி,சுப ஸ்தானத்தில் இருப்பவர்களால் கட்டப்படும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் அவரே எழுந்தருளி செல்வ வளத்தை அனைத்து மக்களுக்கும் அள்ளித் தருவார்;


அட்டவீரட்டானங்களைக் கடந்தும் பலவிதமான சக்தி வாய்ந்த பைரவ ஆலயங்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கின்றன;அவைகளில் சென்றுமுறையாக வழிபட்டு வர நமது முற்பிறவி பைரவ உபாசனைகள் மீண்டும் தொடரும் சந்தர்ப்பம் வாய்க்கும்;


கோவில்களை வழிபடாமல் விட்டுவிடுதல்,12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் இருப்பது,கோவில் மூலவர் திருட்டு போனால் அதுபற்றி கவலைப்படாமல் வேறு ஒரு மூலவரை ஸ்தாபிப்பது(நாத்திகவாதிகள் செய்த பாவங்களில் முதன்மையானது இது),ஆகம விதிகளை மதிக்காமல் இஷ்டத்துக்கு பூஜைகள் செய்வது,கோவிலை திறப்பது மற்றும் பூட்டுவது போன்றவைகளால் தான் பைரவ சாபம் உண்டாகின்றது;


பைரவரை நம்பினோர் கைவிடப்படார்;

பைரவரை தொடர்ந்து வழிபடும் போது,வராகி வழிபாடு தானாகவே தேடி வரும்;

ஒருவரே ஒரே நாளில் பைரவ வழிபாட்டினை பகல் பொழுதிலும்,வராகி வழிபாட்டினை இரவுப் பொழுதிலும் செய்து வரலாம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!



Friday, May 25, 2018

சாது மிரண்டால் காடு கொள்ளாது;சாதுக்கள் நாடு மிரண்டால்.?


உலகத்தை ஒரு வீடு அளவுக்கு சுருக்கினால்,அதில் நமது பாரதநாடு  அந்த நாட்டின் பூஜை அறையாக இருக்கும்;நம்
பாரத நாட்டின் ஆத்மாவாகவும்,உயிர் மூச்சாகவும் இருப்பது நமது தமிழ்நாடும்,தமிழ் இலக்கியங்களும்,சைவ வழிபாடும்,சித்தர்கள்,ரிஷிகள்,துறவிகளின் ஜீவசமாதிகளும் தான்!


ஈசன் படைத்த தெய்வீக சக்திகளில் ஒருவர் வீரபத்திரர்;தட்சனுடய ஆணவத்தை அடக்கிட அவரை அனுப்பினார்;முருகக் கடவுளுடைய தளபதிகளில் ஒருவராக போர்களில் பங்கேற்றார்;

முருகக் கடவுளின் ஆணைப்படி,அசுரர்களிடம் தூது சென்றவரும் வீரபத்திரர்.அவர் தூது சென்ற இடம் தான் முற்காலத்தில் தூதுகுழி என்று இருந்தது;அதுவே தற்போது தூத்துக்குடி என்று ஆகியிருக்கின்றது;

ஆளுடையத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்= திருசெந்தூர் புராணம்

சென்ற நூற்றாண்டு வரையிலும் தமிழ்நாட்டிலும்,பாரத நாட்டின் பல பகுதிகளிலும் வீரபத்திரர் உபாசனை இருந்துள்ளது;மிகவும் கடினமான மற்றும் அதிக அளவில் பொருள் செலவு பிடிக்கும் இந்த உபாசனை இந்த நூற்றாண்டில் மறைந்துவிட்டது;இதே போலவே மிகவும் கடினமான உபாசனைகள்:நரசிம்மர் உபாசனை,மஹாகால பைரவர் உபாசனை,மஹாவராகி உபாசனை,காளி உபாசனை;துர்கை உபாசனை;


பக்தி மார்கத்தின் மூலமாகவும் இந்த கடவுள்களின் அருளைச் சுலபமாகப் பெற முடியும்;அப்படி அருள் பெற்று அருள் வாக்கு சொல்பவர்களாகவும் பலர் இன்றும் தமிழ்நாட்டிலும்,பாரதநாடு முழுவதிலும் வாழ்ந்து வருகின்றார்கள்;

கிறிஸ்தவ மதமாற்றம்,நாத்திகப் பிரச்சாரம்,தமிழ் டூ சமஸ்க்ருத மொழி பெயர்ப்பு இன்மை,சமஸ்க்ருதம் டூ தமிழ் மொழி பெயர்ப்பு இன்மை,தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியில் ஆன்மீகம் தொடர்பான பாடங்கள்,பாடத்திட்டங்களை நீக்கியது போன்றவைகளால் இம்மாதிரியான பரம ரகசிய வழிபாடு பற்றி பலருக்குத் தெரியாமலேயே போய்விட்டது;

அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில்,வில்லிவாக்கம்,சென்னையில்,பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அகத்தியரின் சிவபூஜைக்கு சில துஷ்ட சக்திகள் இடையூறு செய்திருக்கின்றன;அதை தடுத்து அவரது சிவபூஜை வெற்றியடைய உறுதுணையாக இருந்தவர் வீரபத்திரர் ஆவார்;


மாலிக் காபூர் காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பு நடைபெற்றது;பல அரிய சிவாலயங்கள் இஸ்லாமிய படையெடுப்பினால் சூறையாடப்பட்டன;அப்போது ஒரமுறை,கும்பகோணத்திற்கு இஸ்லாமிய படைகள் வந்தன;
அகத்தியர் ஜீவசமாதியாக ஐக்கியமாகி இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்குள் இஸ்லாமியப் படை புகுந்தது;அவர்களின் கண்ணில் முதலில் பட்டது அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் சன்னதி தான்;மிகவும் நேர்த்தியான வேலைப்பாடும்,அளவற்ற தெய்வீக காந்த சக்தியும் கொண்டது;அதை இஸ்லாமியப் படை சிதைக்க முற்பட்டது;

உடனே,அஷ்ட புஜ அக்னி அகோர வீரபத்திரர் ப்ரசன்னமானார்;இஸ்லாமியப் படைகளை துவம்சம் செய்தார்;ஒவ்வொருவரும் எரிந்து சாம்பலானார்கள்;சுமாராக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த சம்ஹார நிகழ்ச்சியை இன்றும் கும்பகோணம் மக்கள் அடிக்கடி பேசுவதுண்டு;


இந்த சம்பவத்திற்குப் பிறகு,இஸ்லாமிய ஆட்சியாளர்களும் சரி;அதன் பிறகு வந்த கிறிஸ்தவ ஆட்சியாளர்களும் சரி;கோவிலை தொடுவதே இல்லை;

மாறாக,மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பது,மதம் மாற்றுவது,மதம் மாறியவர்கள் மூலமாகவே இந்து கோவில்கள்,வழிபாட்டுக்கு எதிராக பலவிதமான சதித் திட்டங்களை செயல்படுத்துவது,நாத்திகப் பிரச்சாரம் மூலமாக எல்லோரும் சமஸ்க்ருதம் பேசி,எழுதிக் கொண்டு இருந்ததை மாற்றி எல்லோரும் கிறிஸ்தவ ஆங்கிலம் பேச,எழுத வைத்தது,சனாதன தர்மமாகிய இந்து மதத்தின் ஆணி வேர்களாக இருந்த கோவில்,விவசாயம்,பசு,பெண் இனம் இவைகளை சீரழித்தது;இதன் மீது இந்து மக்களுக்கு இருந்த மரியாதையை கெடுத்தது போன்ற துக்கிரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றார்கள்:


1800 வரையிலும் நாடு முழுவதும் ஸ்ரீவித்யா உபாசனை தான் ரகசிய வழிபாடாக இருந்தது;இந்த உபாசனைதான் இந்த தேசத்தை துரோகிகளிடம் இருந்தும்,எதிரிகளிடம் இருந்து பாதுகாத்து வந்தது;எத்தனை ஆண்டுகளாக தெரியுமா? சுமாராக 20,00,000 ஆண்டுகளாக. . .


   

கிழக்கே தட்சிண காளி உபாசனை(அருணாச்சல பிரதேசம் முதல் ஒரிசா வரை);

மேற்கே பவானி உபாசனை (இன்றைய ராஜஸ்தான்,மத்தியப் பிரதேசம்,குஜராத்,கோவா,கர்னாடகா);

வடக்கே வைஷ்ணவி உபாசனை(ஜம்மு காஷ்மீர்,பஞ்சாப்,உத்திரபிரதேசம்,பீகார்,டெல்லி,இமாச்சலப் பிரதேசம்);

தெற்கே வராகி உபாசனை(தமிழ்நாடு,அந்தமான்,கேரளா,ஆந்திரா,ஸ்ரீலங்கா) என்று இருந்த ஸ்ரீவித்யா உபாசனையை சிறுகச் சிறுக கிறிஸ்தவ ஆங்கிலேயன் அழித்துவிட்டான்;எப்படி அழித்தான் தெரியுமா? செயற்கைப் பஞ்சம்,மதமாற்றம்,குருகுலக் கல்வியை அழித்தல்,விவசாயத்தை நிர்மூலமாக்குதல்,நாடு முழுவதும் இருந்து வந்த ஆயுர்வேத,சித்த,இயற்கை மருத்துவக் கல்லூரிகளை இழுத்து மூடுதல் போன்றவைகளால் அழித்துவிட்டான்;


அதனால் தான் இன்று தமிழ் உணர்வாளர் என்ற பெயரில் இதே கிறிஸ்தவ ஆங்கிலேயனின் ஐந்தாம் படையான பாதிரியார் படை,அதன் அரசியல் சக்திகளான டம்ளர்,17 போன்றவை அவநம்பிக்கையையும்,தேச விரோதத்தையும் பரப்பிக் கொண்டே இருக்கின்றன;


ஒரு கோடி தமிழர்கள் தினமும் ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை  மஹா வராகி ஜபம் செய்து வந்தாலே போதும்;தேச துரோகிகள் அழிந்துவிடுவார்கள்;



சனாதன தர்மத்திற்கு மீண்டும் இதே போல ஆபத்து வந்துள்ளது;இதன் முடிவாக இந்த உலகம் முழுவதும் இந்து மதம் பரவிவிடும்;

அனைத்தையும் அள்ளித் தரும் சொப்பன வராகி!!!




உலகமக்கள் ஒவ்வொருவருடைய தலைவிதியையும் நவக்கிரகங்கள் நிர்ணயிக்கின்றன;நவக்கிரகங்களை நிர்வகித்து வருபவர் கால தேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான் ஆவார்;இவர் சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் ஆணைப்படி,உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இம்மூன்றையும் அவரது பெயரால் ஆட்சி புரிந்து வருகின்றார்;


மனிதனாக வாழ்ந்து வரும் ஒவ்வொருவரும் எட்டுவிதமான செயல்களை தினமும் செய்து வருகின்றார்கள்;இந்த எட்டுவிதமான செயல்கள் செய்வதன் மூலமாக 64 விதமான பாவம் அல்லது புண்ணியச் செயல்களை செய்ய முடியும்;எனவே,மனிதனின் கர்ம பரிபாலனத்தை தீர்மானிக்க மஹா கால பைரவப் பெருமான் எட்டுவிதமான பைரவர்களாக தோன்றினார்;இந்த எட்டுவிதமான பைரவர்களும் தோன்றிய வரலாறு வெகுசிலரிடம் மட்டுமே இருக்கின்றது;அட்டவீரட்ட திருத்தலங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன;இவை தான் எட்டு பைரவர்கள் தோன்றியதை நிரூபிக்கும் நேரடி ஆதாரங்கள்;இந்த எட்டு பைரவர்களும் மேலும் எட்டாக உதயமாகி 64 பைரவர்களாக அவதாரங்கள் எடுத்துள்ளார்கள்;

64 பைரவர்களுக்கு துணையாக 64 யோகினிகள் துணையாக இருந்து வருகின்றார்கள்;


இதில் உன்மத்த பைரவரின் துணை சக்தியே உன்மத்த வராகி!
வராகியின் அவதாரங்களும் 64 இருக்கின்றன;அவைகளில் அரிய வராகி அவதாரங்களின் பெயர்களை அறிந்து கொள்வோம்:

1.அஸ்திர வராகி
2.ஆக்ஞேசீ வராகி
3.இந்திர வராகி
4.ஈசான்ய வராகி
5.உச்சிஷ்ட வராகி
6.ஊர்த்வ வராகி
7.ருந்தினி வராகி
8.ரத்னேசீ வராகி
9.லவண வராகி
10.லிகித வராகி
11.ஏகாக்ஷரி வராகி
12.ஐந்தினி வராகி
13.ஓம்கார வராகி
14.ஓளஷத வராகி
15.அஸ்வாரூட வராகி
16.அக்ஷர வராகி
17.காகினீ வராகி
18.காமிய வராகி
19.கபாலினி வராகி
20.கிரிசக்ர வராகி
21.நித்ய வராகி
22.சமயேசீ வராகி
23.சங்கேதா வராகி
24.ஜம்பினி வராகி
25.ஜ்யேஷ்டா வராகி
26.ஞானேசீ வராகி
27.டாகினீ வராகி
28.டாமினீ வராகி
29.டாமர வராகி
30.டீகர வராகி
31.நீலி வராகி
32.தந்திர வராகி
33.தக்ஷிண வராகி
34.தண்டினி வராகி
35.தூம்ர வராகி
36.நவ வராகி
37.பஞ்சமீ வராகி
38.பந்தன வராகி
39.ப்ருஹத் வராகி
40.பக்த வராகி
41.மந்திர வராகி
42.யந்திர வராகி
43.ராகினீ வராகி
44.லாகினீ வராகி
45.வார்த்தாளீ வராகி
46.ஸங்கார வராகி
47.ஷோடேசீ பூஜித வராகி
48.ஸாகினீ வராகி
49.ஹாகினீ வராகி
50.ளளித வராகி
51.க்ஷேத்ர வராகி

அஸ்திர வராகியின் இன்னொரு பெயர் பகளாமுகி.பகளாமுகி உபாசகர்கள் இன்றைய கால கட்டத்தில் அஸ்ஸாம்,நேபாளம்,காசி போன்ற இடங்களில் மட்டுமே இருக்கின்றார்கள்;பகளாமுகி என்ற அஸ்திர வராகி உபாசனைக்கு வளம் சேர்ப்பது ஸ்ரீசதாசிவ உபாசனை ஆகும்;

சதாசிவ உபாசனை புரிந்து,அது ஸித்தி ஆன பின்னரே பகளாமுகீ வித்யை உபாசனை கைகூடும்;பகளாமுகி உபாசனை ஸித்தி ஆகிவிட்டால்,இப்பிறவியிலும்,இனி வரும் பிறவிகளிலும் அனைத்து வளங்களும்,நலன்களும் அஸ்திர வராகியின் அருளால் கைகூடும்;நீடித்து நிலைக்கும்;

ஆதாரம்:ஸ்ரீவாராஹி ஸித்தர் உபாஸனா மார்க்கம்(பகுதி 9)ஜோதிட பூமி,பக்கம் 36,37,வெளியீடு டிசம்பர் 2009


சொப்பன வராகி என்று ஒரு அன்னை இருக்கின்றாள்;இந்த அன்னையை உபாசனை செய்து,இவளில் அருள் நமக்கு கிட்டிவிட்டால்,நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் கனவில் வந்து பதில் கூறுவாள்;எத்தனை முறை அழைத்தாலும் சலிக்காமல் வந்து பதிலளிப்பாள்;தமிழ்நாட்டில் பலர் இந்த அன்னையின் அருள் பெற்று பிறருக்கு வழிகாட்டிக் கொண்டு இருக்கின்றார்கள்;


தாங்களும் அதே போல ஆக வேண்டுமா? ஒருமுறை எம்மை நேரில் வந்து பாருங்கள்;

சொப்பனத்தில் வந்து பதில் தரும் தெய்வங்கள் சில இருக்கின்றன;பத்மாவதி,எட்சிணி,வராகி போன்றவை இன்றும் பலருக்கு வழிகாட்டியாக இருக்கின்றன;

சொப்பன வராகி மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர,வராகி அருளால் சகல சித்திகளும் கூடி வரும்;துஷ்ட பிரயோகங்களால்(ஜின்,குறளி,மோகினி) அவதிப்படுபவர்கள் தினமும் வராகி மந்திரத்தை ஜபித்து வர,அதில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்;அம்பாள் உபாசனை,ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்களுக்கு வராகி மந்திரம் மிகப் பெரிய,மஹா சக்தி வாய்ந்த கவசம் ஆகும்;

வராகியின் சக்தியை மனித மனத்தினால் மதிப்பிடவே முடியாது;வராகித் தாயை தனது அன்னையாக ஏற்றுக் கொண்டு தினமும் (இல்லறவாசிகள்) ஒரு மணி நேரம்;

(உபாசனையின் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள்) இரண்டு மணி நேரம்; 

(இப்பிறவியிலேயே அன்னை வராகியின் பாதத்தில் ஐக்கியமாக விரும்புவோர் அல்லது அரசியலில் உச்சத்துக்குச் செல்ல விரும்புவோர்) மூன்று மணி நேரம் 

வராகியின் 13 பெயர்களை ஜபித்து வந்தால் இப்பிறவி முழுவதும் எதிரிகளும்,துரோகிகளும் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்;

தன்னைச் சரணடைந்தவர்களை பாதுகாக்க எப்பேர்ப்பட்ட மந்திரவாதியாக இருந்தாலும்,அவனது மாந்திரீக ஆற்றல்களை ஒரே விநாடியில் நிர்மூலமாக்கிவிடுவாள்:

தனிமையில் செல்லும் போதும்

இரவில் சுடுகாடு/இடுகாடு வழியாக செல்லும் போதும்

இரவில் வெளியூரில் இருந்து வீடு திரும்பும் போதும்



ஓம் ஐம் க்லெளம் பஞ்சமியை நமஹ என்ற மந்திரத்தையோ

ஸ்ரீவாராஹி ஸகாயம் என்ற மந்திரத்தையோ ஜபித்துக் கொண்டு வரவேண்டும்;

இதனால்,தேவையற்ற பயம் நெருங்காது;நாய்கள் குரைப்பது கூட நின்றுவிடும்;எதிர்பாராமல் வரும் துஷ்ட சக்தி விலகிச் சென்றுவிடும்;நெருப்பால் பாதிக்கப்பட்டிருக்கும் போது அன்னையின் பெயரைச் சொன்னாலே அனைத்தும் விலகிச் சென்றுவிடும்;

சில மாணவ விடுதிகள்,சில தங்கும் லாட்ஜ்கள்,சிலபல வாடகை வீடுகளில் கடந்த காலத்தில் யாராவது தற்கொலை செய்து இறந்திருப்பார்கள்:அவர்களுடைய ஆத்மா அங்கேயே தான் இருக்கும்;அங்கே புதியதாக யார் குடியேறினாலும் அவர்களுக்கு தொல்லையாக ஒவ்வொரு நாளும் நகரும்;இன்றைய கால கட்டத்தில் பலர் ஆத்ம பலம் குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள்;அவர்கள் பின்வரும் அன்னை மஹாவராகியின் 13 பெயர்களை தினமும் ஒரு மணி நேரம் ஜபித்து வந்தால்,ஆவிகள்,பேய்கள்,பிசாசுகளின் தாக்கம் நெருங்காது;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி(சமஸ்க்ருதத்தில் வாராஹி)
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நி

இவைகள் மிகவும் சக்தி வாய்ந்த அன்னை மஹாவராகியின் பெயர்கள்;

அன்னை மஹாவராகியின் மந்திரம் எதுவாக இருந்தாலும்,குரு ஒருவர் உபதேசம் செய்த பின்னர்,ஜபித்தால் மட்டுமே அன்னையின் அருள் கிட்டும்;ஆன்மீகத்தில் இன்றைக்கு உண்மையான குருமார்கள் குறைந்துவிட்டார்கள்;எனவே,அன்னை மஹாவராகியிடம் மன்றாடி வேண்டிக் கொண்டு மந்திரத்தை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;அதன் மூலமாக,அன்னையே கனவில் வந்து உபதேசம் செய்வாள்;

ஒருவருக்கு ஜாதகத்தில் எத்தனை விதமான தோஷங்கள்,சாபங்கள் இருந்தாலும் அன்னை மஹாவராகியைச் சரணடைந்தாலே போதும்;சொப்பன வராகி மந்திரத்தை தினமும் ஒருவர் 1008 முறை ஜபித்து வந்திருக்கின்றார்;ஒவ்வொரு மாதம் ஆனதும்,அவரது கடுமையான சிக்கல்கள் நிறைந்த வாழ்க்கை படிப்படியாக வசந்தம் நிரம்பியதாக மாறியிருக்கின்றது;

சிலருக்கு சொப்பன வராகி மந்திரம் ஸித்தி ஆன, பின்னர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருட்களை அறியும் சக்தி உண்டாகும்;

சொப்பன வராகி மந்திரத்தை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 3 ஆண்டுகள் வரை ஜபித்துவிட்டவர்கள்,யார் வீட்டுக்குச் சென்றாலும் அவர்களுடைய சோகங்களை நீக்கும் ஆற்றல் உண்டாகும்;எனவே,ஜோதிடர்கள்,அருள் வாக்கு சொல்பவர்கள்,குல தெய்வத்தின் ஆசிகளைப் பெற்றுள்ளவர்கள் ஒவ்வொருவருமே தினமும் சொப்பன வராகி மந்திரம் ஜபித்து வருவது அவசியம்;

தினமும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை கிழக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து வர எல்லோரையும் வசீகரிக்கும் சக்தியுள்ளவராக மாறிவிடுவீர்கள்;


மான் தோல் ஆசனத்தில் (வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே வீட்டில் மான் தோல் ஆசனத்தை பயன்படுத்த முடியும்) அமர்ந்து,தாமரை மணிமாலையால் தினமும் இரவு 11 மணி முதல் 12 மணி வரை 1008 முறை ஜபித்து வந்தால்,1008 நாட்களுக்குள் கனவில் சொப்பன வராகியின் தரிசனம் கிடைக்கும்;


ஓடும் நதியில் நின்று சொப்பன வராகி மந்திரத்தை 1008 முறை என்று தினமும் ஜபித்து வர சகலவிதமான செல்வ வளமும் தேடி வரும்;ஒவ்வொரு நாளும் வரும் புதன் ஓரை அல்லது குரு ஓரையில் 1008 முறை ஜபிக்க வேண்டும்;முதல் ஆரம்பித்த ஓரையில் தான் தினமும் ஜபிக்க வேண்டும்;


வீட்டில் பூஜை அறையில் தினமும் இரவு 11 முதல் 12 மணிக்குள் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ள வேண்டும்;   பவளமணி மாலையால் தினமும் 330 முறை உரு செய்து வர வேண்டும்;இதனால்,ஜன வசீகர சக்தியை அன்னை சொப்பன வராகி நமக்கு அருளுவாள்;


ஒவ்வொரு அமாவாசை அன்றும் இரவு 11 முதல் 12 மணிக்குள் வீட்டில் இருக்கும் மஹாவராகி படத்திற்கு சிகப்பு மலர்களால் பூஜிக்க வேண்டும்;ருத்ராட்ச மணி மாலையால் சொப்பன வராகி மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;இதனால்,எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள்;துரோகிகள் சிதறி ஓடிவிடுவார்கள்;ராஜ சன்மானம் கிடைக்கும்;குறைந்தது 1008 நாட்கள் ஜபிக்க வேண்டும்;

பெண்கள் மாத விலக்கு நாட்களைத் தவிர மற்ற நாட்களில் ஜபிக்கலாம்;


துக்க வீடுகளில் கலந்து கொண்டால் ஏழுநாட்களுக்குப் பிறகு,மீண்டும் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;ருது வீடுகளுக்குச் சென்றாலும் இதே நாட்கள் கட்டுப்பாடுதான்;குழந்தை பிறந்த அன்றே சென்று பார்த்தால் மறுநாளில் இருந்து ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


துரோகிகளும்,எதிரிகளும்,பொறாமை பிடித்தவர்களும் அதிகரித்துக் கொண்டே செல்லும் கொடூரங்கள் நிறைந்த கலிகாலம் இது;எனவே.அன்னை மஹாவராகியின் பலவிதமான மந்திரங்களில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது 1008 நாட்கள் ஜபித்து நிம்மதியாகவும்,வலிமை மிக்கவராகவும் வாழ்க!

இணையத்தில் ஒருபோதும் இதுபோன்ற மந்திரங்களை எவரும் வெளியிடுவது இல்லை;ஒரு வேளை யாராவது வெளியிட்டால் அது உண்மையான மந்திரம் அல்ல;என்பதை உணருங்கள்;


சொப்பன வராகி மந்திரம் வேண்டுவோர் நேரில் வந்து சந்திக்கவும்;வாட்ஸ் அப்:9092116990