Tuesday, May 8, 2018

கலியுகமக்கள் பின்பற்ற வேண்டிய சித்தர் உபதேசங்கள்!!!


உலகம், காலம் என்ற சக்கர இயக்கத்தின் படி,சுழன்று கொண்டிருக்கின்றது;காலமோ நான்கு பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன;அவை :

17,28,000 ஆண்டுகள் கொண்ட க்ருத யுகம்
12,96,000 ஆண்டுகள் கொண்ட திரோதா யுகம்
8,64,000 ஆண்டுகள் கொண்ட துவாபர யுகம்
4,32,000 ஆண்டுகள் கொண்ட கலியுகம்;
இதில் நாம் கலியுகாதி 5119 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்;எதிர்கால விஞ்ஞானம் இந்த யுகக்கணக்கினை கண்டுபிடிக்கும்;அதன் பிறகு,தற்போது இருக்கும் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலண்டர் முறை அழிந்துவிடும்;

நாம் இன்றைய காலகட்டத்தில் பணம் அல்லது அரசியல் அதிகாரத்தினை அடைய ஓடிக் கொண்டிருக்கின்றோம்;நாம் வாழ்ந்து வரும் காலத்திலேயே கொடூரங்களும்,துரோகங்களும்,போலி ஆன்மீக தலைவர்களும் பொதுமக்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆன்மீக நம்பிக்கையை சிதைத்து வருகின்றார்கள்;யார் உண்மையான ஆன்மீகவாதி? என்று கண்டுபிடிக்க முடியவில்லை;

வெகு சிலருக்கு மட்டுமே உண்மையான ஆன்மீக குரு கிடைத்து,அவரது வழிகாட்டுதலில் படி நிம்மதியான வாழ்க்கையையும்,ஆன்மீக முன்னேற்றத்தையும் பெற்றுக் கொண்டு இருக்கின்றார்கள்;


ஒவ்வொரு மனிதனுக்கும் காரண குரு,காரிய குரு,வித்தை குரு,ஜன்மாந்திர குரு என்ற சத்குரு என்று நான்கு விதமான குரு நாதர்கள் தேவை;
காரண குருவும்,காரிய குருவும் சூட்சுமமாக நம்மை இயக்கிக் கொண்டு இருப்பார்கள்;


வித்தை குரு என்பது நாம் என்ன தொழில் செய்கின்றோமோ அதற்கு உரிய வாத்தியார் தான்;ஒவ்வொரு தொழிலையும் யாரும் சுயமாக கற்றுக்கொள்ள முடியாது;சைக்கிள் ஒட்டுவது முதல் மது பானம் தயாரிப்பது வரை;கோவிலில் பூசெய் செய்வது முதல் வேறு உலகங்களுக்கு சூட்சும உடலுடன் பறந்து சென்று திரும்புவது வரை ஒவ்வொரு வித்தைக்கும் குருவாக இருப்பவரே வித்தை குரு;

இந்த மூன்று குருநாதர்களையும் அடையாளம் காண ஒரு சுலபமான வழியை அகத்திய மகரிஷியும்,அவரது வம்சாவழியில் பிறந்த ஸ்ரீ இடியாப்ப சித்தரும் நமக்கு போதித்துள்ளார்கள்;
அதுதான் அண்ணாமலை கிரிவலம். . .


நமது இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் வந்துவிட்டால் நமது சத்குருவை நம்மால் நேரில் தரிசிக்க முடியும்;அவரை நேரில் சந்தித்து பேசியப் பின்னர்,காரண குரு,காரிய குரு,வித்தைகுரு மூவரையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும்;


1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்வதற்கும் ஆத்ம பலம்,பண வளம்,தீவிரமான எண்ணம் மூன்றும் தேவை;இம்மூன்றையும் கிடைக்கச் செய்ய மிகவும் எளிமையானசில  வழிமுறைகளை பின்பற்றி வந்தால் போதும்;


இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளை குறைந்தது 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 10 ஆண்டுகள் வரையிலும் விடாப்பிடியாக பின்பற்றி வந்தாலே உங்கள் கர்மவினைகள் தீர்ந்து,அண்ணாமலை கிரிவலம் செல்ல வாய்ப்புகள் தேடி வரும்;


1.தூங்கி எழுந்ததும்,இரு உள்ளங் கைகளையும் பார்த்தவாறு “ஓம் உத்தாதலக மகரிஷிக்கு ஜெய்” என்று 9 முறை ஜபிக்க வேண்டும்;இதனால்,ஈசனது அருள் கிட்டிவிடும்;மூத்த தேவி என்ற மூதேவியின் அனுக்கிரகமும் கிட்டும்;

மூதேவியின் அனுக்கிரகம் கிட்டினால்,மூதேவியின் ஆட்சி நமது வசிப்பிடத்தை விட்டு போய்விடும்;

$குளிக்காமல் சாப்பிட்டால் மூதேவி ஆட்சி வரும்;

$வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் வீசினால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும்போது ஆடையில்லாமல் குளித்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் குளிக்கும் போது உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்தாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் தூங்கும் போது உள்ளாடை கூட அணியாமல் தூங்கினாலும் மூதேவி ஆட்சி வரும்;

$ தொடர்ந்து 3 நாட்களுக்கும் மேலாக ஒரே ஆடையை அணிந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ தினமும் சுய இன்பம் செய்தால் மூதேவி ஆட்சி வரும்;இதில் முற்பிறவி சாபங்களும் காரணமாக இருந்திருக்கும்;

$ வீட்டில் பொருட்கள்,புத்தகங்கள்,ஆடைகள் அடுக்கி வைக்கப்படாமல் இருந்தால் மூதேவி ஆட்சி வரும்;

$ இங்கே விவரிக்க முடியாத சில அடாத செயல்களைச் செய்தாலும் மூதேவி ஆட்சி வரும்;

2.மேற்கு நோக்கி பல் துலக்க வேண்டும்;பாம்பு விரல் கொண்டு பல் துலக்க வேண்டும்;பிரஷ்ஷைப் பயன்படுத்தினாலும்,சில நிமிடங்கள் கண்டிப்பாக பாம்புவிரல்(விரல்களில் நீளமானது) கொண்டு பல் துலக்கியே ஆக வேண்டும்;

$ கிழக்கு அல்லது வேறு எந்த திசையை நோக்கி பல் துலக்கினாலும் சாபம் உண்டு;ஒரு பெரிய புராணக் கதையும் உண்டு;


3.கிழக்கு நோக்கி சாப்பிட்டால் கல்வி வளரும்;
  மேற்கு நோக்கி சாப்பிட்டால் செல்வம் பெருகும்;
  வடக்கு நோக்கி சாப்பிட்டால் நோய் பெருகும்;
 தெற்கு நோக்கி சாப்பிட்டால் தேவையற்ற அவமானங்கள் வரும்;(ஒரு போதும் அழியாத புகழ் வராது)

$ இது நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டுமே பொருந்தும்;உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் சாப்பிடும் போது மேற்கு நோக்கி சாப்பிட்டால் அவர்களுடன் பகை வரும்;உணவகங்களில் இந்த விதிமுறை பொருந்தாது;


4.தெற்கு நோக்கி ஆடைகளை துவைத்தாலும் வேண்டாத ஏச்சுகளும்,பேச்சுக்களும் நம்மைத் தேடி வரும்;


5.கண்களில் கறுப்பு மச்சம் உள்ளவர்கள்,நாக்கில் கறுப்பு மச்சம் அல்லது மச்சங்கள் உள்ளவர்கள்,எப்போதும் நெகட்டிவ்வாகப் பேசிக் கொண்டு இருப்பவர்கள்,கூடாத நாட்களில் பிறந்தவர்கள்=இவர்களிடம் ஒரு போதும் பழகக்கூடாது;

6.இப்பிறவியில் ஒரே ஒருமுறை கூட நீங்கள் அண்ணாமலை கிரிவலம் செல்லாமல் வாழ்ந்திருந்தால்,உங்களுடைய முன்னோர்களின் அருளாசி உங்களுக்கு போதுமான அளவு இன்னும் கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம்;


7.தினமும் அன்னதானம் ஒரு துறவிக்காவது செய்ய வேண்டும்;
இயலாத பட்சத்தில்,வியாழக்கிழமை தோறும் அன்னதானம் செய்யலாம்;அதுவும் இயலாத பட்சத்தில் அமாவாசை தோறும் அன்னதானம் செய்யலாம்;


8.வறுமையும்,பண நெருக்கடியும் தீர தினமும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை வீட்டுப்பூசெய் அறையில் ஜபித்து வர வேண்டும்;தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஜபித்துவர நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள்,சாபங்கள் நீங்கி செல்வ வளம் தேடி வரும்;


9.வாரம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்;அல்லது மாதம் ஒருமுறை குலதெய்வ கோவில் சென்று வழிபடலாம்;அல்லது 90 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சென்று வழிபட்டே ஆக வேண்டும்;குலதெய்வ வழிபாடு ஆண்டுக்கு ஒருமுறை செய்து வந்தால் அந்த தெய்வத்தின் அருள் சிறிது மட்டுமே கிட்டும்;


10.மொத்தம் 32 வகையான தானங்கள் செய்ய வேண்டும் என்று வேதங்களும்,சைவ சித்தாந்தங்களும் தெரிவிக்கின்றன; 

இதில் அன்னதானம்,

ஆடை தானம்,(சாதுக்களுக்கு காவி வேட்டியும்,துண்டும்;ஏழைகளுக்கு வேட்டி,சேலை,துண்டு,விரிப்பு)

பழ தானம்,

ருத்ராட்ச தானம்,

பூ தானம்,(கோவில் பூஜைகள்,விழாக்களுக்குத் தேவையான பூக்களை தானம் செய்தல்)

கோ தானம்,(ஒருபோதும் ஜெர்ஸிப் பசுவை தானம் செய்யக் கூடாது;அதனால் சிறிதும் கூட புண்ணியம் கிட்டாது;ஏனெனில்,அது செயற்கையாக இலுமுனாட்டிகளால் உருவாக்கப்பட்ட இனம்)

கன்னிகா தானம்(நம் மகளுக்கு நமதுசெலவில் திருமணம் செய்து வைப்பது/மகள் இல்லாதவர்கள் உறவினரின் மகளுடைய திருமண முயற்சிக்கு நேரடியாக உதவுவது),

எண்ணெய் தானம்,(ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொருவிதமான எண்ணெய்கள் அபிஷேகம் செய்யத் தேவைப்படுகின்றன)

விருட்ச தானம்(கோவிலுக்குள் அல்லது கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் வில்வமரம்,மா மரம்,வன்னி மரம்,வேப்ப மரம் போன்றவைகளை நட்டு மூன்று ஆண்டுகள் வரை பராமரிப்பது),

விஷய தானம்( ஆன்மீக கருத்துகளை பரப்புவது),

சொர்ண தானம்(ஏழைப்பெண்ணின் திருமணத்திற்கு தாலி செய்து கொடுப்பது அல்லது தெரிந்த கோவிலில் ஐம்பொன் சிலை / தங்கத்தால் சிலை செய்யும் போது தங்கப் பாளம் தானம் செய்வது;தங்க ரதம் செய்ய தங்கப் பாளம் தருவது)

 புண்ணியத்தை தானமாக பெறுவது( வில்லங்கம் இல்லாத உறவினர்களை காசி,கயா,கேதார்நாத்,பத்ரிநாத் போன்ற ஆலயங்களுக்கு நமது சொந்தச் செலவில் அழைத்துச் செல்வது),

தண்ணீர் தானம்

குடை தானம்

காலணிகள் தானம்

வென்னீர் தானம்

பூமி தானம்(விவசாயத்திற்கு இலவசமாக இடம் தானம் செய்தல்,ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்து அதில்,அவர்கள் விரும்பும் விதமாக வீடு கட்டித் தருதல்)

கல்வி தானம்( படிக்கும் ஏழை மாணவ,மாணவிகளுக்கு கட்டணம்,கல்விக் கருவிகள்,சீருடை தயார் செய்துதருதல்)

ஊனமுற்றோர்களுக்கு வாகன தானம்

கண் பார்வைக்குரிய கருவிகள் தானம்

இந்த 19 தவிர இன்னும் 13 தானங்களும் உண்டு;

இவைகள் அனைத்தையும் செய்ய இயலாதவர்கள்,அகத்திய மகரிஷி அருளிய பன்னிரு திருமுறைகளை ஓதி பாடல் பெற்ற ஸ்தலங்களில் குறைந்தது 3 ஆண்டுகள் மாதம் தோறும் அன்னதானம் செய்து வர வேண்டும்;இந்த பதிகங்கள் ஆகஸ்டு 2017 இல் நமது மஹாவில்வம் வலைப்பூவில் வெளியிடப்பட்டுள்ளன;

இப்படிச் செய்து வந்தால், 32 வகையான தானங்கள் செய்த புண்ணியம் மலையளவு திரண்டு வாழ்க்கையில் சகல சுகபோகங்களும் கிடைக்கும்;அப்படி கிடைக்கும் சுகபோகங்களும் கிட்டியப் பின்னர்,மனம் உடல் சுகத்தைத் தேடி ஓடாமல் நின்றுவிடும்;உள் நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிடும்;


அப்படி மனம் உள்நோக்கிச் செல்ல ஆரம்பித்தால்,நமது மனம் நமது ஆத்மாவுடன் ஒன்ற ஆரம்பிக்கும்;நான் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைக்க ஆரம்பிக்கும்;நாம் எங்கிருந்து வந்தோம்? என்ற சூட்சுமம் புரிய ஆரம்பிக்கும்;இதற்குத்தான் ஆத்ம விசாரம் என்று பெயர்;

இதன் அடுத்த நிலைகள் குரு மூலமாக உணரவேண்டியவை ஆகும்;சீடன் தயாராகும் போது குரு தோன்றுவார்;


11.சாட்சி இல்லாத உண்மையை இன்று விளையாட்டுத்னமாக வீடியோ எடுப்பதும்,அதை விளையாட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடுவதும் சர்வசாதாரணமாக தமிழ்நாட்டிலேயே டீன் ஏஜ்ஜினர் செய்து வருகின்றார்கள்;இதன் மூலமாக உங்களது பிறவிகளின் எண்ணிக்கையை பல கோடி மடங்கு அதிகப்படுத்திவிடுகின்றீர்கள்;


ஏற்கனவே,நீங்கள் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப இன்னும் 22,000 முறை மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டும் என்று இருக்கும்;இந்த விளையாட்டுத்தனமான காரியத்தினால் உங்கள் பிறவிகளின் எண்ணிக்கை 3,00,22,000 என்று உயர்ந்துவிடும்;


12.சும்மா இருக்கும் மனதில் பொறாமை,ஏக்கம்,பழிவாங்கும் உணர்ச்சி என்று ஏதாவது உருவாகிக் கொண்டே இருக்கும்;இதைச் சரி செய்யவே ஒவ்வொரு நொடியும் மந்திர ஜபம் செய்யும் படி வலியுறுத்துகின்றோம்; கணபதி மந்திரத்திற்கு எந்த விதமான கட்டுப்பாடும் கிடையாது;கணபதியில் அஷ்ட கணபதி மந்திரத்தை நேரில் வந்து உபதேசம் பெறவும்;


13.கொஞ்சம் பக்குவப்பட்டதும் சிவ மந்திரம் அல்லது மஹா கால பைரவ மந்திரம் அல்லது மஹாவராகி மந்திரம் அல்லது 108 வகையான காளிகளில் ஒரு மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


14.மந்திரங்கள் சாபங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன;எனவே,அசைவம்,மது இரண்டையும் 3 ஆண்டுகள் வரை கைவிட வேண்டும்;தினமும் ஒரு மணி நேரம் வரை ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் மஞ்சள் நிற விரிப்பில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டு பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;ஜப எண்ணிக்கை 3 ஆண்டுகளுக்குள் 1,00,000 ஐ தாண்ட வேண்டும்;

சிவய நம- அம்-உம்- சிம்- கிலீம்- ஸ்ரீம்
ஓம் ரம் மம் யம் ஓம்

இம்மந்திரம் ஸித்தி ஆன பின்னர்,மற்ற மந்திரங்களை ஜபிக்க ஆரம்பிக்கலாம்;


15.எண்ணங்களுக்கு வலிமை உண்டு;நல்ல எண்ணங்கள் எப்போதும் மென்மையாகவும்,மெதுவாகவும் செயல்படும்;
தீய மற்றும் ஆக்ரோஷமான எண்ணங்கள் படுவேகமாக செயல்படும்; என்று மனோதத்துவம் தெரிவிக்கின்றது;


எண்ண அலைகள் நீரின் மேல்புறமும்,கோலத்தின் அடியிலும்,கோவில் மூலவரின் பின்புறமும் படிகின்றது;
அதனால் தான் நாம் பிறர் வீட்டிற்குச் சென்று தண்ணீர் அருந்த ஆரம்பிக்கும் முன்பு,அந்த தண்ணீரை கொஞ்சம் ஸிங்கில் ஊற்ற வேண்டும்;பிறகு,அருந்த வேண்டும்;இதன் மூலமாக,அவர்களது எண்ணங்களின் தாக்கம் நம்மை சிறிதும் நெருங்காது;
அதே போல,வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தின் மீது குழந்தைகள் விளையாண்டு அழித்துவிட்டால்,கோபப்படவேண்டியதில்லை;அக்குழந்தைகளுக்கும்,கோலம் இட்டவர்களுக்கும்,கோலம் எந்த வீட்டின் வாசலில் இருக்கின்றதோ அங்கேயும் நல்ல எண்ணங்கள் வந்து சேர்ந்துவிடும்;


எந்த கோவிலுக்குச் சென்றாலும் மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது மூலவரின் பின்பக்கத்தை தொட்டு கும்பிட்டு வருவதால் நமது கோரிக்கைகள் நிறைவேறிவிடுகின்றன;


15.ஆடை இல்லாமல் குளிக்கும் பழக்கம் நம்மிடையே இருக்கின்றது;இந்த பழக்கத்தை கைவிடாவிட்டால்,40 வயதுக்குப்பிறகு,புத்தி பேதலிக்கும்;புத்தி பேதலித்தால் நாம் என்ன செய்கின்றோம்? என்பதே நமக்குத் தெரியாது;எனவே,இன்று முதல் குளிக்கும் போது ஒரு ஆடையாவது அணிந்து குளிக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள்;சித்தர் பெருமக்கள் நமக்காக கூறியிருக்கும் முக்கியமான உபதேசம் இது;

16.அசைவம்,மது பழக்கம் இருந்தால் அது நமது கஷ்டங்கள்,வேதனைகள் அதிகப்படுத்திட காரணமாக அமைந்துவிடும்;ஏனெனில்,அசைவம்,மது பழக்கம் உள்ளவர்களை சனிக்கிரகத்தினால் எளிதில் வசப்படுத்திட முடியும்;போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களுக்கும் இது பொருந்தும்;


17.மதமாற்றம் நுண்ணிய பயங்கரவாதம் தான்;ஒருவன் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட்டால்,அவனது/அவளது குலதெய்வம் சாபம் உடனே அவர்களை பீடிக்கும்;அடுத்தபடியாக,அவனது/அவளது முன்னோர்களாகிய பித்ருக்களின் சாபமும் அவர்களை பீடிக்கும்;

இதனால்,மதம் மாறிய ஆரம்பத்தில் பணம்,வசதிகள் என்று இருந்தாலும் சாபங்கள் செயல்பட ஆரம்பிக்கும் போது புதிய மதத்தின் தலைவரால் காப்பாற்றிட முடியாது;

2000 ஆண்டுகளுக்கு முன்பு,உலகம் முழுவதும் இந்து மதம் மட்டுமே மக்களால் பின்பற்றப்பட்டு வந்தது;மதம் மாறுவதை தடுப்பதும்,மதம் மாறியவர்களை மீண்டும் நமது மதத்திற்கு கொண்டு வருவதும் மிகப் பெரும் புண்ணியம் ஆகும்;

18. “காமம் புகும் முன்பு காயத்ரி மந்திர ஜபம் மனதில் புக வேண்டும்” என்பது சித்தர்களின் உபதேசம்;இந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் பூணூல் அணிந்திருந்தார்கள்;விவசாயிகள்,கொல்லர்கள்,பறை அடிப்பவர்கள்,நெசவாளர்கள்,க்ஷத்திரியர்கள் என்று அனைவருமே பூணூல் அணிந்து,காயத்ரி மந்திரம் தினமும் ஓதி வந்தார்கள்;

800 ஆண்டு கால இஸ்லாமியப் படையெடுப்பு இதை தகர்த்துவிட்டது;300 ஆண்டு கால கிறிஸ்தவ ஆங்கிலேய படையெடுப்பு நமது பண்பாட்டில் இருந்து பிரித்துவிட்டது;ஆதாரம்;ஓஷொ எழுதிய மறைந்திருக்கும் உண்மைகள்;

எல்லோரும் தினமும் யோகா அல்லது ப்ராணயாமம் அல்லது சரக்கலை பயிற்சி தினமும் செய்து வர வேண்டும்;


19.குலதெய்வம் கோவில் மற்றும் ஊரில் இருக்கும் பழமையான கோவிலை பராமரிப்பு அல்லது புனர்நிர்மாணத்திற்கு யார் முயற்சி செய்தாலும் நம்மால் ஆன உதவிகள் செய்ய வேண்டும்;இதனால்,நமது ஜாதகத்தின் படி இருக்கும் நீண்ட கால தோஷங்களின் உக்கிரம் 95% அளவுக்கு குறைந்துவிடும்;

20.வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற ஆடை அணிய வேண்டும்;சனிக்கிழமை தோறும் உடல் ஊனமுற்றவர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்;

21.வியாழக்கிழமைகள் தோறும் அன்னதானம் செய்து வந்தால்,மறு பிறவியில் நாடாளும் பதவி தேடி வரும்;பாழடைந்த கோவிலை புனர்நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்தால்,நீண்ட காலம் நாடாளும் பதவியில் இருப்பீர்கள்;

22.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்பதுதான் நமது தமிழ்ப்பண்பாடு;இதுவே இந்துப் பண்பாடாக மாறவும் செய்தது;இதன் உள்ளார்த்தம் என்ன? இந்துப் பண்பாடுதான் தமிழ்ப் பண்பாடு;தமிழ்ப் பண்பாடுதான் இந்துப்பண்பாடு;

இதை நிர்மூலமாக்கும் வேலையைத்தான் இன்றைய இணைய தொழில் நுட்பமும்,செல் போன் தொழில் நுட்பமும் செய்து வருகின்றன;மேற்கு நாடுகளில் இருந்து நமது நாட்டில் பிரபலமாகும் எல்லா புதுமைகளும் பண லாபத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டவை;மனித நேயத்தின் அடிப்படையில் ஒருபோதும் உருவாக்கப்படவில்லை;

உதாரணமாக ஃபேஸ்புக்கும்,வாட்ஸ் அப்பும் நேரில் சந்திக்காமலேயே இருவரிடம் பகையையும்,வெறுப்பையும் உருவாக்கி வருகின்றன;ஒற்றுமையை உருவாக்கவில்லை என்பதை உணருங்கள்; எனவே,ஓரளவுக்கு மேல் இவைகளுக்கு முக்கியத்துவம் தருவது பேராபத்தினைத் தரும்;

23.ஒருவனுக்கு ஒருத்தி;ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவத்திலும் மருத்துவம்+மனோதத்துவம்+ சமுதாய ஒற்றுமை போன்றவைகளை உள்ளடக்கிய ஆரோக்கியம் ஒளிந்திருக்கின்றது;இதை தகர்த்தால் மட்டுமே நமது பாரத நாட்டை மதமாற்றிடமுடியும்;இதற்கு மாற்று நாம் நமது குடும்பத்தோடு வாரம்/மாதம் ஒரு முறை கோவிலுக்குச் சென்று வழிபடுவதும்,பண்புப் பயிற்சி முகாம்களுக்கு நமது குழந்தைகளை (15 வயது முதல் 25 வயதிற்குள்) அனுப்பி வைப்பது மட்டுமே!!!

24.புரிந்து கொள்வதும்,விட்டுக் கொடுப்பதும் தான் கணவன்,மனைவி தத்துவம்;தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு ஒரளவாவது விட்டுக்கொடுக்கும் சுபாவம் இருக்கின்றது;இங்கிலீஷ் மீடியத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 12 வரை படித்தவர்கள் பெரும்பாலும் தமது சிறு சிறு தவறுகளைக் கூட ஒப்புக்கொள்வதில்லை;

25.ஒரு போதும் வடக்கு நோக்கி தூங்குவது கூடாது;அது மூளையில் பலவிதமான பிரச்சினைகளை உருவாக்கி,மன நிலையை பாதிக்கின்றது;
தூங்கும் போது,தூங்குபவரின் மூன்று முழம் தூரத்தில் செல் போனை ஆன் செய்து வைப்பது நன்று;அதன் கதிர்வீச்சு பலருக்கு ஞாபக மறதியை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றது;

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 5 மணி நேரம் வரை தூங்க வேண்டும்;

26.ஆடையில்லாமல் தூங்குவதும் மாபெரும் தவறு;ஆடையில்லாமல் போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதும் தவறு; காரணம் நமது குலதெய்வமும்,நாம் தினமும் ஜபிக்கும் தெய்வமும் நள்ளிரவில் நம்மை பார்ப்பதற்கு சூட்சுமமாக வரும்;தினமும் வராது;வாரம் ஒரு நாள் வரும்;அது எந்த நாள் என்பது எவருக்கும் தெரியாது;

அப்படி வரும் போது ஆடையில்லாமல் தூங்கும் போது அந்த தெய்வீக சக்திக்கு வரம் தரும் எண்ணம் இல்லாமல் போய்விடுகின்றது;சித்தர்கள் பல நூற்றாண்டுகளாக ஆராய்ந்து சொன்ன தெய்வீக ரகசியம் இது;

27. “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஒரு பழமொழி;நாம் இன்று தினமும் அவமானப்படுகின்றோம் என்றால் அதற்கு யாரும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ காரணம் அல்ல;நமது முற்பிறவிகளில் 4 இல் நாம் செய்த திமிர்த்தனம் மட்டுமே காரணம்;

28.எக்காரணம் கொண்டும் தற்கொலை செய்வது தவறு;தற்கொலைக்கு பிறரை தூண்டுவதும் மாபெரும் தவறு;தற்கொலை செய்பவர்களுக்கு அவ்வளவு சுலபத்தில் மறுபிறவி அமைவது கிடையாது;பல தற்கொலை செய்த ஆவிகள் 6,000 ஆண்டுகள் வரையும் கூட பசியோடும்,பட்டினியோடும் அலைந்து வருகின்றன;

29.யாரையும் எப்போதும் எதற்காகவும் ஏங்க வைக்க வேண்டாம்;அதுவும் பிறவிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திவிடும்;

கிண்டில்,முகனூல்,வலைப்பூ வாசிப்பு அவசியம் தான்;புத்தகங்களில் தான் உண்மைத் தன்மை இருக்கின்றது;புத்தக வாசிப்புக்கு வாரம் ஒரு முறை நூலகம் செல்லவும்;அங்கே செல் போனை அணைத்துவைத்துவிட்டு வாசிப்புப் பழக்கத்தை தொடரவும்;

30.யாரிடமும்,எப்போதும்,எதற்காகவும் இலவசமாக எதையும் வாங்கக் கூடாது;அப்படி வாங்கினால் பெருமளவு புண்ணியம் உங்களை விட்டுப் போய்விடும்;


Monday, May 7, 2018

ஒரு மாதம் முழுவதும் பணக் கஷ்டத்தை நீக்கும் ஒரு நாள் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ வழிபாடு!



ஓம் ஸ்ரீவாராதர சித்தர் குரு வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

(இவர் தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு காலத்தை 7 நாட்கள்,27 நட்சத்திரங்கள்,9 கிரகங்கள் என்று வரையறுத்த பைரவ சித்தர் பிரான் ஆவார்)


ஹேவிளம்பி வருடம், சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி 7.5.2018 திங்கட்கிழமை மாலை  5.13 முதல் 8.5.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.24 வரை அமைந்திருக்கின்றது;



ராகு காலத்தில் மஹா கால பைரவப்பெருமானை ஜபிக்கலாம்;

இயலாதவர்கள் அல்லது விரைவான பலன் பெற விரும்புவோர் குளிகை காலத்தில் மஹாகால பைரவப் பெருமானைத் துதிக்கலாம்;

செவ்வாய்க் கிழமை குளிகை காலம் மதியம் 12 முதல் 1.30 வரை அமைந்திருக்கின்றது;


 செவ்வாய்க்கிழமை இராகு காலம் மதியம் 3 முதல் மாலை 4.30 வரை அமைந்திருக்கின்றது;


இந்த தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் நேரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப்பெருமானை வழிபட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு பணக் கஷ்டம் இராது;


(விருச்சிகம்,தனுசு,மகரம்,ரிஷபம் ,மிதுனம்,கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது;மதுவையும்,போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்;முட்டையும் புரோட்டாவும் அசைவமே!)


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.சென்னை பள்ளிக்கரணையில் அருள்மிகு சாந்தநாயகி சமேத ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில்(தாம்பரம் டூ வேளச்சேரி சாலை)

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)
13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது.இதுதான் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் உதயமான இடம்!!!)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை
23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது
.
30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.
31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

33.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

34.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

35.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.
36.அருள்மிகு சவுடேஸ்வரி அம்மன் கோவில்,காந்திபுரம்,கோவை;

37.அருள்மிகு வாலைகுருசாமி ஜீவசமாதி கோவில்,கொம்மடிக்கோட்டை,திசையன்விளை;தூத்துக்குடி மாவட்டம்.

38. அருள்மிகு பவானேஸ்வரர் திருக்கோவில்,குடியாத்தம்,வேலூர் மாவட்டம்;

39.அருள்மிகு தெப்பக்குளம் மாரியம்மன் கோவில்,மதுரை

40.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்,ஹார்விப்பட்டி,மதுரை

41.அருள்மிகு பஞ்சமுக ப்ரத்யங்கராதேவி கோவில் வளாகம்,மானாமதுரை


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;
ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;
ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்
அல்லது
ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ
அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை வீட்டிலேயே தினமும் 33 முறை ஜபித்து வரலாம்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி: 6.6.2018 புதன் காலை 8.08 முதல் 7.6.2018 வியாழன் காலை 9.10 வரை அமைந்திருக்கின்றது;

இந்த நிறத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆலயங்கள் பழமையான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் ஆகும்;இவைகள் அளவற்ற வரங்களை அனைத்து மக்களுக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கின்றன;

Tuesday, May 1, 2018

காரிய வெற்றிகளை அள்ளித் தரும் மந்திரம்


உலகில் உள்ள ஒவ்வொருவரும் அவரவர் நினைத்தது நிகழ்ந்துவிட்டால்,உலக வாழ்க்கையே போரடித்துவிடும்;

தீவிரமான எண்ணங்கள் உள்ளவர்கள் தான் தமது லட்சியங்களில் ஜெயிக்கின்றார்கள்;அதுவும் ஒரு நாளுக்கு இரண்டு மணி நேரம் வரை இடைவிடாமல் தனது லட்சியத்தை யார் நினைத்துக்கொண்டே இருக்கின்றார்களோ அவர்களே பிற்காலத்தில் மகத்தான சாதனையாளர்களாகின்றார்கள்;


ஆன்மீகப் பின்னணியும்,சொந்த ஆத்ம பலமும் இல்லாதவர்கள் இன்றைய குழப்பமான கலியுகத்தில் சாதிப்பது மிகவும் கடினமே!


தினமும் 4.30 முதல் 6 மணிக்குள் எழுந்து காலைக் கடமைகளை முடித்துவிட வேண்டும்;சரியாக சூரியன் உதயம் ஆகும் போது அதைப் பார்த்தவாறு பின்வரும் சூர்ய மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;வெறும் 19 முறை ஜபித்தால் மட்டும் போதும்;


இப்படி குறைந்தது 1008 நாட்கள்,அதாவது 3 ஆண்டுகள் ஜபித்துவர வேண்டும்;இதனால்,சுவாசக் கலையில் இருக்கும் தோஷங்கள் நீங்கிவிடும்;செய்கின்ற காரியங்களில் மகத்தான வெற்றியை அடைய முடியும்;


ஜபாகுஸீம சங்காஸம் காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்

இதுதான் அந்த சூர்ய மந்திரம் ஆகும்;3 ஆண்டுகளுக்குப் பிறகு,இதற்கு உரிய எந்திரம்,ஹோம முறைகள்,தர்ப்பண பூஜை முறைகள் உங்களைத் தேடி வரும்;


தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்கள் மற்றும் ரிஷி இனத்தவர்களின் தலைவருமாகிய அகத்திய மகரிஷியின் பேரருளால் இதை தங்களுக்கு வழங்குகின்றோம்;



ஓம் ஸ்ரீலஸ்ரீ சத்குரு வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்!!!

அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளை இப்பிறவியிலேயே அருளும் ஆருத்ரா நட்சத்திர சகஸ்ரலிங்க விரதம்!!!


உலகில் பலவிதமான சிவலிங்கங்கள் இருக்கின்றன;அவைகளில் மிகவும் அரிதான லிங்கமே சகஸ்ரலிங்கம்! இது சுயம்புவாக உருவாகுவது;யாராலும் நிர்மாணிக்க முடியாது;


ஒரு பெரிய சிவலிங்கத்தின் வெளிப்பகுதியில் சிறுசிறு லிங்கமாக 1007 இருந்தால் அதுவே சகஸ்ரலிங்கம் என்று அழைக்கப்படுகின்றது;


ஒரு சிவங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரே ஒரு முறை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் ஒரே ஒருமுறை ஜபித்த பலன் கிட்டும்;ஒரு சகஸ்ரலிங்கத்தின் முன்பாக அமர்ந்து கொண்டு ஒரே ஒருமுறை ஜபித்தால் 1008 முறை ஜபித்த புண்ணியம் உடனே கிட்டும்;



தமிழ்நாட்டில் எல்லா சிவாலயங்களிலும் சகஸ்ரலிங்கம் இல்லை;வெகு அரிதாக சில ஆலயங்களில் இரண்டு சகஸ்ர லிங்கங்கள் இருக்கின்றன;

திருச்சி மலைக்கோட்டையிலும்,திருச்செங்கோடு மலையிலும் இரு சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;

சைவத்தின் தலைநகரம்,பிரபஞ்சத்தின் மையம் திரு அருணாச்சலம் என்ற அண்ணாமலையில் மூன்று சகஸ்ரலிங்கங்கள் இருக்கின்றன;



ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளிலும் விரதம் இருக்க வேண்டும்;ஒரு ஆண்டுக்கு 12 அல்லது 13 திருவாதிரை நட்சத்திரம் வரும்;இப்படி 12 ஆண்டுகள் தொடர்ந்து விரதம் இருந்து சகஸ்ரலிங்கத்தின் அருளைப் பெற்றால் அது பரிபூரணமான குரு கடாட்சத்திற்கு இட்டுச் செல்லும்;இதற்கு திருவாதிரை புஷ்கரிணி பூஜை என்று பெயர்;தொடர்ந்து திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளன்று சகஸ்ரலிங்க பூஜை செய்வதற்கு “சகஸ்ர ஷட்கோண நட்சத்திர் கோ பூஜை” என்று பெயர்;

தோற்றமும் மறைவும் இல்லாத ஈசனுக்கு என்று ஜன்ம நட்சத்திரம் கிடையாது;ஆனால்,தான் படைத்த 27 நட்சத்திரங்களுக்கு ப்ரபஞ்சம் முழுவதும் ஒரு மகிமை கிட்ட வேண்டும் என்பதற்காக ஈசன் தனது ஜன்ம நட்சத்திரமாக தேர்ந்தெடுத்தது திருவாதிரையைத் தான்!


ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் நட்சத்திரம் உதயமாகும் நாளில் இருந்து முடியும் நேரம் வரை உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்;


ஆண்களாக இருந்தால் வெண்மை நிற ஆடையையும்,பெண்களாக இருந்தால் ரோஸ் நிற ஆடையையும் அணிய வேண்டும்;


உள்ளாடைகளையும் அதே நிறத்தில் அணிய வேண்டும்;
தாமே அரைத்த சந்தனத்தை சகஸ்ரலிங்கத்தின் மீது பூச வேண்டும்;(தென் பாரத கோவில்களில் சிவாச்சாரியாரிடம் கொடுத்தும்,வட பாரத கோவில்கள் மற்றும் ஆளரவமற்ற கோவில்களில் தாமேயும்)
தும்பைப் பூவைக் கொண்டு சிவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வணங்கிட வேண்டும்;


சிவனுக்கு என்னென்ன அபிஷேகங்கள் இருக்கின்றனவோ,அதே வரிசையில் சகஸ்ரலிங்கத்திற்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்;குறைந்த பட்சம் தேன் அபிஷேகம் மற்றும் பாஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;இந்த அபிஷேகம் நடைபெறும் போதே சிவ சகஸ்ரநாம அர்ச்சனையை நாம் செய்யலாம்;அல்லது அபிஷேகம் முடிந்த பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனையை சிவாச்சாரியார் மூலமாகச் செய்யலாம்;பிறகு,தக்காளிச்சாதம் முதலான படையல்களை சிறிது மட்டும் சகஸ்ரலிங்கத்திற்கு வைத்துவிட்டு,மற்றவைகளை ஏழைக்குழந்தைகளுக்கு தானமாக தர வேண்டும்;


அபிஷேகம் துவங்கியது முதல் நிறைவு பெறும் வரையிலும் பத்மாசனத்தில் அமர்ந்து,மெளன விரதம் இருக்க வேண்டும்;அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரம் அல்லது சிவசகஸ்ர நாம அர்ச்சனை செய்யவேண்டும்;
இந்த விரதம் இருப்பவர் அகில் கட்டையால் அரைத்த குழம்பினை அபிஷேகத்திற்கு தர வேண்டும்;


திருவாதிரை விரத நேரம்(திருவாதிரை நட்சத்திர நேரம்) முடிந்த பின்னர்,வில்வ தீர்த்தம் அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்;

அடுத்த ஓராண்டுக்கு திருவாதிரை நட்சத்திர நாட்கள் பட்டியல் இதோ:


18.5.2018 வெள்ளி காலை 7.47 முதல் 19.5.2018 சனி காலை 6.11 வரை


14.6.2018 வியாழன் மாலை 4.02 முதல் 15.6.2018 வெள்ளி மதியம் 2.29 வரை


11.7.2018 புதன் இரவு 12.14 முதல் 12.7.2018 வியாழன் இரவு 10.40 வரை(ஆனி மாத அமாவாசை)


8.8.2018 புதன் காலை 8.20 முதல் 9.8.2018 வியாழன் காலை 6.50 வரை


4.9.2018 செவ்வாய் மாலை 4.23 முதல் 5.9.2018 புதன் மதியம் 2.54 வரை


1.10.2018 திங்கள் இரவு 12.22 முதல் 2.10.2018 செவ்வாய் இரவு 10.56 வரை


29.10.2018 திங்கள் காலை 8.21 முதல் 30.10.2018 செவ்வாய் காலை 6.56 வரை


25.11.2018 ஞாயிறு மாலை 4.15 முதல் 26.11.2018 திங்கள் மதியம் 2.55 வரை


22.12.2018 சனி இரவு 12.10 முதல் 23.12.2018 ஞாயிறு இரவு 10.22 வரை(மார்கழி மாத பவுர்ணமி)


19.1.2019 சனி காலை 8.14 முதல் 20.1.2019 ஞாயிறு காலை 6.59 வரை


15.2.2018 வெள்ளி மாலை 4.16 முதல் 16.2.2019 சனி மதியம் 3.06 வரை


14.3.2019 வியாழன் இரவு 12.22 முதல் 15.3.2019 வெள்ளி இரவு 11.14 வரை


11.4.2019 வியாழன் காலை 8.30 முதல் 12.4.2019 வெள்ளி காலை 7.29 வரை


 இதன் மூலமாக அவரவர் பிறந்த ஜாதகப்படி,மாங்கல்ய ப்ராப்தம்,சந்ததி விருத்தி,அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகள்,வியாபாரத்தில் அசுர வளர்ச்சி கிட்டும்;