Saturday, August 12, 2017

ஊர்த்தொகை


திருச்சிற்றம்பலம்
1. காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! 
கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!
மாட்(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
2.கொங்கில் குறும்பில் குரக்குத் தளியாய்! குழகா! குற்றாலா!
மங்குல்-திரிவாய்! வானோர் தலைவா! வாய்மூர் மணவாளா!
சங்கக் குழை ஆர் செவியா! அழகா! அவியா அனல் ஏந்திக்
 கங்குல் புறங்காட்டு ஆடீ! அடியார் கவலை களையாயே!
3.நிறைக் காட்டானே! நெஞ்சத்தானே! நின்றியூரானே!
மிறை(க்)க் காட்டானே! புனல் சேர் சடையாய்! அனல் சேர் கையானே!
மறைக்காட்டானே! திரு மாந்துறையாய்! மாகோணத்தானே!
இறைக்(க்) காட்டாயே, எங்கட்கு உன்னை! எம்மான் தம்மானே!
4.ஆரூர் அத்தா! ஐயாற்று அமுதே! அளப்பூர் அம்மானே!
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே!
பேரூர் உறைவாய்! பட்டிப் பெருமான்! பிறவா நெறியானே!
 பார் ஊர் பலரும் பரவப்படுவாய்! பாரூர் அம்மானே!
5.மருகல் உறைவாய்! மாகாளத்தாய்! மதியம் சடையானே!
 அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே!
கருகல் குரலாய்! வெண்ணிக் கரும்பே! கானூர்க் கட்டியே!
பருகப் பணியாய், அடியார்க்கு உன்னை! பவளப்படியானே!
6.தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய்! விளமர் நகராய்! விடை ஆர் கொடியானே!
நாங்கூர் உறைவாய்! தேங்கூர் நகராய்! நல்லூர் நம்பானே!
பாங்கு ஊர் பலி தேர் பரனே! பரமா! பழனப்பதியானே!
7.தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந் தாராய்!
வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே!
ஆனைக்காவில் அரனே! பரனே! அண்ணாமலையானே!
ஊனைக் காவல் கைவிட்டு, உன்னை உகப்பார் உணர்வாரே.
8.துருத்திச் சுடரே! நெய்த்தானத்தாய்! சொல்லாய், கல்லாலா!
பருத்(த்)தி நியமத்து உறைவாய்! வெயில் ஆய், பல ஆய், காற்று ஆனாய்;
திருத்தித் திருத்தி வந்து, என் சிந்தை இடம் கொள் கயிலாயா!
அருத்தித்து, உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே!
9.புலியூர்ச் சிற்றம்பலத்தாய்! புகலூர்ப் போதா! மூதூரா!
பொலி சேர் புரம் மூன்று எரியச் செற்ற புரி புன்சடையானே!
வலி சேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான்கு அடர்த்த மதிசூடீ!
 கலி சேர் புறவில் கடவூர் ஆளீ! காண அருளாயே!
10.கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி,
மைம் மாந் தடங்கண் மதுரம் அன்ன மொழியாள் மடச் சிங்கடி-
தம்மான்-ஊரன், சடையன் சிறுவன், அடியன்-தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே.
திருச்சிற்றம்பலம்

திருக்கடவூர்மயானம்


திருச்சிற்றம்பலம்
1.மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போல 
வருவார், விடை மேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ;
திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும்,
பெருமான்-கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
2.விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்; வேதகீதத்தர்;
கண் ஆர் நுதலர்; நகுதலையர்; காலகாலர்; கடவூரர்;
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர்; உமை ஓர் ஒருபாகம்,
பெண் ஆண் ஆவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
3.காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்; எண்தோள் கடவூரர்;
தாயும் தந்தை, பல் உயிர்க்கும், தாமே ஆன தலைவனார்;
பாயும் விடை ஒன்று அது ஏறிப் பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
4.நறை சேர் மலர் ஐங்கணை யானை நயனத் தீயால் பொடி செய்த
இறையார் ஆவர்; எல்லார்க்கும் இல்லை என்னாது அருள் செய்வார்;
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்ப்
பிறை ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
5.கொத்து ஆர் கொன்றை மதி சூடி, கோள் நாகங்கள் பூண் ஆக,
மத்த யானை உரி போர்த்து, மருப்பும் ஆமைத் தாலியார்;
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலி கொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
6.துணி வார் கீளும் கோவணமும் துதைந்து, சுடலைப் பொடி அணிந்து,
பணி மேல் இட்ட பாசுபதர்; பஞ்சவடி மார்பினர்; கடவூர்த்
திணிவு ஆர் குழையார்; புரம் மூன்றும் தீவாய்ப் படுத்த சேவகனார்;
பிணி வார் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
7.கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர்; கடவூர் உறை வாணர்;
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்;
ஊர் தான் ஆவது, உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர், ஆரூர்;
பேர் ஆயிரவர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
8.வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில் வேடுவனாய்க்
கோடு ஆர் கேழல் பின் சென்று, குறுகி, விசயன் தவம் அழித்து,
நாடா வண்ணம் செருச் செய்து, ஆவ நாழி நிலை அருள் செய்
பீடு ஆர் சடையார் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
9.வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்; சிரம் அறுப்பர்;
ஆழி அளிப்பர், அரிதனக்கு; ஆன் அஞ்சு உகப்பர்; அறம் உரைப்பர்;
ஏழைத் தலைவர்; கடவூரில் இறைவர்; சிறு மான்மறிக் கையர்;
பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
10.மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து,
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி, நாவல் ஆரூரன் நம்பி சொன்ன நல்-தமிழ்கள்
பாடும் அடியார், கேட்பார் மேல், பாவம் ஆன பறையுமே.
திருச்சிற்றம்பலம்

திருப்புன்கூர்


திருச்சிற்றம்பலம்
1.அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணம் ஆக,
வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன்,
எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், “இவன் மற்று என் அடியான்” என விலக்கும்
சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
2.“வையகம் முற்றும் மா மழை மறந்து, வயலில் நீர் இலை; மா நிலம் தருகோம்;
உய்யக் கொள்க, மற்று எங்களை!” என்ன, ஒலி கொள் வெண்முகில் ஆய்ப் பரந்து எங்கும்
பெய்யும் மா மழைப் பெரு வெள்ளம் தவிர்த்து, பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
3.ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து,
கோதனங்களின் பால் கறந்து ஆட்டக் கோல வெண்மணல் சிவன் தன்மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக் கண்டு,
பூத ஆளி! நின் பொன் அடி அடைந்தேன்-பூம்பொழில்-திருப் புன்கூர் உளானே! .
4.நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன், நாளைப் போவானும்,
கற்ற சூதன், நல் சாக்கியன், சிலந்தி, கண்ணப்பன், கணம் புல்லன், என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு, நின் குரை கழல் அடைந்தேன்-
பொன்திரள் மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திருப் புன்கூர் உளானே! .
5.கோலம் மால் வரை மத்து என நாட்டி, கோள் அர(வ்)வு சுற்றி, கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய, அமரர்கட்கு அருள் புரிவது கருதி,
நீலம் ஆர் கடல் விடம் தனை உண்டு, கண்டத்தே வைத்த பித்த! நீ செய்த
சீலம் கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
6.இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு தீ, வளி, ஞாயிறு, திங்கள்
மயக்கம் இல் புலி, வானரம், நாகம், வசுக்கள், வானவர், தானவர், எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார்; பெறும் ஆர் அருள் கண்டு,
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
7. போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து,
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய்; பண்டு பகீரதன் வேண்ட,
ஆர்த்து வந்து இழியும் புனல் கங்கை-நங்கையாளை நின் சடைமிசைக் கரந்த
தீர்த்தனே! நின் தன் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
8.மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக்கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை, ஒருவன்-நீ கரிகாடு அரங்கு ஆக,
மானை நோக்கி ஓர் மாநடம் மகிழ மணி முழா முழக்க(வ்) அருள் செய்த
தேவ தேவ! நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
9.அறிவினால் மிக்க அறுவகைச் சமயம் அவ் அவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து,
எறியும் மா கடல் இலங்கையர் கோனைத் துலங்க மால் வரைக்கீழ் அடர்த்திட்டு,
குறி கொள் பாடலின் இன் இசை கேட்டு, கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு, நின் திருவடி அடைந்தேன்-செழும் பொழில்-திருப் புன்கூர் உளானே! .
10.கம்பம் மால் களிற்றின்(ன்) உரியானை, காமற் காய்ந்தது ஓர் கண் உடையானை,
செம்பொனே ஒக்கும் திரு உருவானை, செழும் பொழில்-திருப் புன்கூர் உளானை,
உம்பர் ஆளியை, உமையவள் கோனை, ஊரன்-வன்தொண்டன்-உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அருந்தமிழ் ஐந்தோடு-ஐந்தும் வல்லவர் அருவினை இலரே .
திருச்சிற்றம்பலம்

திருக்கழுக்குன்றம்

திச்சிற்றம்பலம்
1.கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே 
நின்ற பாவவினைகள் தாம், பல, நீங்கவே
சென்று சென்று தொழுமின் தேவர்பிரான் இடம்-
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
2.இறங்கிச் சென்று தொழுமின், இன் இசை பாடியே!
பிறங்கு கொன்றைச் சடையன், எங்கள் பிரான், இடம்-
நிறங்கள் செய்த மணிகள், நித்திலம், கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.
3.நீள நின்று தொழுமின், நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட-
தோளும் எட்டும் உடைய மா மணிச்சோதியான்,
காளகண்டன், உறையும் தண் கழுக்குன்றமே.!
4.வெளிறு தீரத் தொழுமின், வெண்பொடி ஆடியை!
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவு இடம்-
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம் மதம் மூன்று உடைக்
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
5.புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்,
இலை கொள் சூலப்படையன், எந்தைபிரான், இடம்-
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே!
6.மடம் உடைய அடியார் தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன், விண்ணவர்மேலவன்,
படம் உடைய அரவன் தான், பயிலும்(ம்) இடம்-
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே
7.ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற
ஞானமூர்த்தி, நட்டம் ஆடி, நவிலும்(ம்) இடம்-
தேனும் வண்டும் மது உண்டு இன் இசை பாடியே,
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.
8.அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற
வந்து, நாளும் வணங்கி, மாலொடு நான்முகன்
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.
9.பிழைகள் தீரத் தொழுமின்பின் சடைப் பிஞ்ஞகன்,
குழை கொள் காதன், குழகன், தான் உறையும்(ம்) இடம்-
மழைகள் சாலக் கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே!
10.பல் இல் வெள்ளைத் தலையன் தான் பயிலும்(ம்) இடம்,
கல்லில் வெள்ளை அருவித் தண் கழக்குன்றினை,
மல்லின் மல்கு திரள்தோள் ஊர வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே!
திருச்சிற்றம்பலம்

திருத்தொண்டத்தொகை

திருச்சிற்றம்பலம்
1.தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்;
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;
அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
2. இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்;
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன்;
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன், எஞ்சாத வாள்-தாயன், அடியார்க்கும் அடியேன்;
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
3.மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்; முருகனுக்கும், உருத்திர பசுபதிக்கும், அடியேன்;
செம்மையே திரு நாளைப் போவார்க்கும் அடியேன்; திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் அடியேன்;
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க, வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த,
அம்மையான் அடி சண்டிப் பெருமானுக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
4. திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்;
பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்; பெரு மிழலைக் குறும்பற்கும், பேயார்க்கும், அடியேன்;
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்; ஒலி புனல் சூழ் சாத்த மங்கை நீல நக்கற்கு அடியேன்;
அரு நம்பி நமி நந்தி அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
5.வம்பு அறா வரிவண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான்-சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்;
நம்பிரான்-திருமூலன் அடியார்க்கும் அடியேன்; நாட்டம் மிகு தண்டிக்கும், மூர்க்கற்கும், அடியேன்;
அம்பரான்-சோமாசிமாறனுக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
6.வார் கொண்ட வன முலையாள் உமை பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்;
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்;
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன்; கடல் காழி கணநாதன் அடியார்க்கும் அடியேன்;
ஆர் கொண்ட வேல் கூற்றன்-களந்தைக் கோன்-அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
7.பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்; பொழில் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்;
மெய் அடியான்-நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்;
கை தடிந்த வரிசிலையான்-கலிக் கம்பன், கலியன், கழல் சத்தி-வரிஞ்சையர்கோன்,- அடியார்க்கும் அடியேன்;
ஐயடிகள் காடவர் கோன் அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
8.கறைக் கண்டன் கழல் அடியே காப்புக் கொண்டிருந்த கணம் புல்ல நம்பிக்கும், காரிக்கும், அடியேன்;
நிறைக் கொண்ட சிந்தையான், நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்;
துறைக் கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதித் தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்;
அறைக் கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
9.கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான்-காடவர் கோன்-கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்;
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும், தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை தன் அடியார்க்கும் அடியேன்;
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த் துணைக்கும் அடியேன்;
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
10. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்; பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்;
சித்தத்தைச் சிவன் பாலே வைத்தார்க்கும் அடியேன்; திரு ஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்;
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்; முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்;
அப்பாலும் அடிச் சார்ந்த அடியார்க்கும் அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே .
11.மன்னிய சீர் மறை நாவன்நின்றவூர் பூசல், வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும், அடியேன்;
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன்; திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன்;
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன், இசைஞானி, காதலன்-திரு நாவலூர்க் கோன்,
அன்னவன் ஆம் ஆரூரன்-அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே .
திருச்சிற்றம்பலம்

ஒவ்வொரு மனிதரும் தினமும் ஜபிக்க வேண்டிய அகத்திய பதிகங்கள்!!!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும்.
இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை.
ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா?
தேவாரம், திருக்கோவையார்,திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள் இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.
இறைப் பெரும் அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார்.
அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.
ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப்பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான். தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான்.
சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது.
அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது.
இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா?
இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’
கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள்.
ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாக அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான்.
தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன்," என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அகத்திய மாமுனி.
உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்," என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
இவ்வாறு வேத நாயகனான சிவபெருமான் பெருங் கருண கொண்டு நமக்கு அளித்த பாடல்களே ஸ்ரீஅகஸ்தியர் பன்னிரு முறைத் திரட்டு என்னும் இறைப் பாக்கள் ஆகும்.
காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.
தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம்.
இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.
இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும்,
வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.
ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.
பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.
ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்

Saturday, July 15, 2017

சிவனுக்குள் இருக்கும் சக்தியை வெளிப்படுத்துவது எப்படி?



உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆண் உயிரினத்துக்கும் ஒரு பெண் உயிரினம் துணையாக இருக்கின்றது;
உலகத்தை காத்து ரட்சிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு துணை சக்தி இருக்கின்றது;


காசிக்குச் சென்று கால பைரவப் பெருமானை வழிபட்டால்,அவர் உடனே வரம் தந்துவிடுவார்;அப்படி படுவேகமாக வரம் வரும் போது நமது உடல் சில சமயங்களைத் தவிர பெரும்பாலான நேரத்தில் முழுவரத்தை ஏற்றுக் கொள்ளாது;அதை கவனிக்கும் கால பைரவப் பெருமானின் துணை சக்தியாகிய கால பைரவி என்ற வராகி வரத்தை முழுமைப்படுத்துவது வழக்கம்;


யார் தொடர்ந்து மஹாகால பைரவப் பெருமானை வழிபட்டு/ஜபித்து/துதித்து/உபாசித்து வருகின்றார்களோ அவர்கள் அடுத்து வரும் பிறவிகளில் அன்னை மஹாவராகியை வழிபடும் பெரும்பாக்கியம் கிட்டும்;

வெகு அரிதான சிலருக்கு இக்கலியுகத்தில் சில ஆண்டுகள் தொடர்ந்து மஹாகால பைரவப்பெருமானின் புகழைப் பரப்பியவாறு தினமும் ஒரு மணி நேரம் வரை பைரவ ஜபம் செய்து வந்தால்,அவரது கருணையால் மஹாவராகியின் வழிபாடு தேடிவரும்;


அதே போல,சதாசிவனை தொடர்ந்து வழிபடுபவர்கள் அடுத்து வரும் சில பிறவிகளில் அன்னையின் அருமை பெருமைகளை உணர்ந்து அவளைச் சரணடயும் சூழ்நிலையும் உருவாகும்;
மலரில் இருக்கும் வாசம் போல;நெருப்பில் இருக்கும் ஒளி போல;சிவனின் வடிவில் சக்தியும் அடக்கம்;


எல்லாவிதமான கவலைகளுக்கும் மருந்தாக இருப்பது மஹாவராகியின் மந்திர ஜபமே! எல்லாவிதமான மாந்திரீகத் தடைகளையும் உடைத்து துவம்சம் செய்வது மஹாவராகியின் அருள்;

அவளது 12 பெயர்களை தினமும் இரவில் ஒரு மணி நேரம் வரை ஜபித்து வந்தாலே போதும்;நேர்மையாக வாழத் துடிப்பவர்களுக்கு குலதெய்வமாக பாதுகாப்பாள்;

ஆன்மீகத்தை முகமூடியாக கொண்டு அட்டகாசம் செய்யும் மந்திரவாதிகளை உருத்தெரியாமல் நிர்மூலமாக்கிவிடும் சக்தி மஹாவராகி ஜபத்திற்கு உண்டு;


ஓம் ரீங் வாத்தியார் ஐயா
வாத்தியார் ஐயா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இந்த 12 பெயர்களை இரவுப்பொழுதில் நமது வீட்டில் ஒரு பச்சைத் துண்டு மீது அமர்ந்து கொள்ள வேண்டும்;கிழக்கு நோக்கி அமர வேண்டும்;ஒரு மண் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமும்,இன்னொன்றில் நெய் தீபமும் ஏற்றி வைக்க வேண்டும்;அன்னை மஹாவராகியின் படத்தை/சிலையை வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;

அன்னை மஹாவராகியின் முகத்தைப் பார்த்தவாறு ஜபித்து வருவது ஒரு ரகசிய ஜப முறை ஆகும்;அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருந்தால் மட்டும் தான் அன்னையின் அருள் கிட்டும்;

ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் மூன்று ஆண்டுகள் வரை விடாப்பிடியாக ஜபித்து வந்தால் வாழ்க்கையின் அனைத்து துக்கங்களும் நாசமாகிவிடும்;

விரைவான பலன் வேண்டுவோர் ஏதாவது ஒரு பஞ்சமி நாளில் இருந்து 90 நாட்களுக்கு தினமும் ஐந்து முறை வராகி மாலை என்ற வராகி பரணியை ஜபித்து வரவேண்டும்;முறையான உபதேசம் பெற எமது வாட்ஸ் அப் +91 9092116990,9364231011 க்கு தொடர்பு கொள்ளவும்;

கோணல் இல்லாத தேங்காயில் நெய் தீபம் ஏற்றி வைத்து ஜபித்து வந்தால் காரிய வெற்றிகள் கிட்டிக்கொண்டே இருக்கும்;ஒவ்வொரு காரிய வெற்றி கிட்டியதும் அன்னை மஹாவராகிக்கு உடனே மானசீகமாக நன்றிகள் தெரிவிக்க வேண்டும்;

ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமை;ஒவ்வொரு பஞ்சமி,அஷ்டமி திதிகள்;ஒவ்வொரு (வழிபடுபவர்களின்) ஜன்ம நட்சத்திர நாட்களிலும் அன்னை மஹாவராகிக்கு சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் படையல் வைக்க வேண்டும்;சுக்கு அதிகம் சேர்த்த காரமான பானங்களை அன்னை மஹாவராகிக்குப் படைக்க வேண்டும்;


ஒரு குடும்பத்தில் கணவர் மஹாவராகியையும்,மனைவி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரையும் தொடர்ந்து ஜபித்தும்,பூஜித்தும் வந்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் குடும்பத்திற்கு துக்கங்கள் முழுமையாக நாசமாகியிருக்கும்;வறுமை ஒழிந்து மகத்தான பணக்கார வாழ்க்கை வாழ ஆரம்பித்திருப்பார்கள்;சிலருக்கு இந்த கால அளவு ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம்;

இந்த தெய்வீக ரகசியங்களை நமக்கு உபதேசித்த உபாசனை குலபதி ஸ்ரீதுர்கை சித்தர் அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!!!