Monday, February 15, 2016

ஒழுங்கீனத்தைச் சீரமைக்கும் ஈசன் மயிலாப்பூர் ஸ்ரீமரகதாம்பாள் சமேத ஸ்ரீமல்லீஸ்வரர்!


கலியுகத்தில் மனிதனை இயக்குவது மனமே! நல்ல புத்தி இருந்தால்தான் மனம் நல்வழிக்கு வரும்;மனம் நல்வழிபட்டால் உடல் நற்காரியங்களை மட்டுமே செய்யும்;ஈனவே,நாம் வாழ்ந்து வரும் இக்கலியுகத்தில் நற்காரியங்களை ஆற்றுவது பூர்வவினைகளையும்,மனதையும்,உள்ளத்தையும் பொறுத்தது;லக்னத்துக்கு இரண்டாமிடத்தில் அல்லது எட்டாமிடத்தில் சனி இருக்கப் பிறந்தவர்கள்,எப்போதும் பிறருக்கு கெடுதி செய்வதையே தனது சுபாவமாகக் கொண்டவர்கள்;ஒருபோதும் திருந்தவே மாட்டார்கள்;இவர்களது அகங்காரம் வானளாவி நிற்கும் தன்மையுடையது;இருப்பினும்,இதில் இருந்து மீள சிவபக்தி,பைரவ பக்தி,வராகி பக்தி இம்மூன்றில் ஏதாவது ஒரு பக்தி இருந்தால் கடைத்தேற முடியும்;

கண்ணால் கண்டதை எல்லாம் கண்டு,மனத்தால் ஆடுகின்ற சராசரி கலியுக மனிதன் தவறான செய்கைகளுக்கு ஆட்பட்டுவிடுகின்றனா;இதனால் தான் புகை,மது,முறையற்ற காம இச்சைகள் போன்ற தீய மனதுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்;

மனிதன் தீய எண்ணங்கள்,தீய சக்திகள்,தீய ஒழுக்கங்களுக்கு ஆளாகாமல் எப்போதும் ஆன்ம நறுமணத்துடன் துலங்குவதற்கு மனதில் உள்ள இறை நாம பூக்களானது வாடாமல்லியாகப் பூத்துக் குலுங்க வேண்டும்;

நறுமணம் என்பது எப்போதும் இறைமனத்துடன் ஒன்றுதலாகும்;இதனால் தான் இறைவழிபாட்டில் மந்திர ஒலி மணத்தோடு நறுமணப் பூக்களும்,ஊதுபத்தி மற்றும் தூபங்கள்,சாம்பிராணி,குங்கிலியம்,அத்தர்,ஜவ்வாது,புனுகு,
கோரோசனை,கஸ்தூரி போன்றவையும் பங்குபெறும்;

எத்தகைய உடல்,மன,உள்ளத்திறனை,ஆரோக்கியத்தைப் பெற்றாலும் நறுமணத்தோடு,நல்ல மனத்தோடு எப்போதும் இறை நினைவோடு வாழ்வதற்கு உதவுவதே ஸ்ரீமல்லீஸ்வர ஆலய வழிபாடாகும்;

கணவன்,மனைவி,குழந்தைகள் நல் ஒழுக்கத்துடன் வாழ விரும்புவோர்(கணவனுக்காக மனைவியும்,மனைவிக்காக கணவனும்,சகோதரனுக்காக சகோதரியும்,சகோதரிக்காக சகோதரனும்,மகன்/ளுக்காக பெற்றோர்களும்) பின்வரும் வழிபாடு செய்து வரவேண்டும்;

தொடர்ந்து முடியாவிட்டாலும்,6 திங்கட்கிழமைகளில் இங்கே அபிஷேகம்,ஆராதனைகள் செய்து மணம் நிறைந்த உணவுகளை படையல் இட வேண்டும்;உரியவர்களின் பெயரை அர்ச்சனை செய்துவிட்டு,படையலை தாமரை இலையில் வைத்து இங்கே வரும் சிவபக்தர்களுக்குத் தானம் தரவேண்டும்;
இப்படிச் செய்வதன் மூலமாக வழிமாறிச் சென்றவர்கள் நிச்சயமாகத் திருந்தி வாழத் துவங்குவர்;

திங்கட்கிழமையும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்த நாளில்(6.6.16 திங்கள் மதியம் 12.45 முதல் திருவாதிரை நட்சத்திரம் அன்று முழுவதும் இருக்கிறது;4.7.16 திங்களும் அமாவாசையும்,திருவாதிரையும் இணைந்து வருகிறது;3.4.17 அன்றும் வருகிறது) செய்வது சிறப்பு;

திங்கட்கிழமையும் அமாவாசையும் (4.7.16)சேர்ந்து வரும் நாளில் செய்யலாம்;

திங்கட்கிழமையும் சிவராத்திரியும் இணைந்திருக்கும் நாளில்(7.3.16 மகாசிவராத்திரி; 18.7.16; 1.8.16;28.11.16 மதியம் 2.52 வரை சிவராத்திரி;12.12.16 காலை 10.44 முதல் ஆரம்பமாகி மறுநாள் வரை இருக்கிறது;10.4.17 காலை 10.48 வரை இருக்கிறது) செய்வது இன்னும் மிகுந்த புண்ணியத்தையும்,சிவ அருளையும் அள்ளித் தரும்;

ஓம் அகத்தீசாய நமஹ


தற்கொலை மற்றும் விரக்தி எண்ணங்களை நீக்கும் கணபதி வழிபாடு!!!


கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மவினைகளின் தொகுப்பை அனுபவிக்கவே இன்றைய காலகட்டத்தில் பிறந்து வாழ்ந்து வருகிறோம்; கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த நல்ல செயல்களால் இன்று வருமானம்,சுகம்,வீடு,வாகனம்,வசதிகள்,பெற்றோர்கள்,குடும்பம் அமைகின்றது;

கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த திமிர்த்தனங்களால் இன்று அவமானப்படுகிறோம்;கடன் படுகிறோம்;நாம் தந்த கடன் நமக்குத் திரும்பவருவதில்லை;ஒழுக்கமாக வாழ்ந்து ஒழுக்கங்கெட்டவன்/ள் என்று அவப்பெயர் பரவுகிறது;
இவைகளால் நாம் செத்துவிடலாமா? என்று கூட கவலைப்படுவதுண்டு;அல்லது அடிக்கடி நாமெல்லாம் இந்த பூமியில் யாருக்குமே தேவையில்லையோ? என்ற விரக்தி வருவதுண்டு;

இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவர்கள் பின்வரும் அகத்திய உபதேசத்தைப் பின்பற்ற வேண்டும்;

16 தேய்பிறை சதுர்த்தி நாட்களில் உங்கள் ஊரில் இருக்கும் தெருவில் இருக்கும் விநாயகருக்கு வறுத்த முந்திரிப்பருப்பை நைவேத்தியமாக படைக்க வேண்டும்;யார் விரக்தியாக இருக்கிறார்களோ,அவர்களின் மூன்று கைப்பிடி அளவுக்கு வறுத்த முந்திரிப் பருப்பை நைவேத்தியமாகப் படைத்துவிட்டு,பின்வரும் கணபதி மந்திரத்தை 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

ஓம் மஹா கணபதி நமஹ

நேரில் எம்மை சந்திப்பவர்களுக்கு இதைவிடவும் தெய்வீகத் தன்மை நிறைந்த,சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை உபதேசம் செய்ய இயலும்;

பிரபலமான விநாயகர் ஆலயமாக இருந்தால் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யலாம்;அருகம்புல் மாலை வாங்கி அணிவிக்கலாம்;நிறைவாக நைவேத்தியத்தை அங்கே வருபவர்களுக்குப் பிரசாதமாக பகிர்ந்து தரவேண்டும்;இப்படிச் செய்வதன் மூலமாக விரக்தி மனப்பான்மை படிப்படியாக அகலும்;


நிறைவாக(முடிந்தால் மட்டும்) விநாயகர் பிறந்த இடமான வழுவூர் வீரட்டேஸ்வர் ஆலயத்திற்கு 16 வது தேய்பிறை சதுர்த்தி திதி வரும் நாளில் இதே மாதிரி நைவேத்தியம் வைத்து வழிபடலாம்;16 வது தேய்பிறை சதுர்த்தி திதிக்குத்தான் இங்கே செல்ல வேண்டும் என்றில்லை;11 வது தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 16 வது தேய்பிறை சதுர்த்திக்குள் ஏதாவது ஒரு சதுர்த்திக்குச் செல்லலாம்;

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 12 வது கி.மீ.தொலைவில் ஒரு பேருந்து நிறுத்தம் அமைந்திருக்கிறது;அங்கிருந்து 2 கி.மீ.சென்றால் வழுவூர் வீரட்டானம்(அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம்) வரும்;சபரிமலை ஐயப்பன் பிறந்ததும் இங்கேதான்;ஓம் வராகி சிவசக்தி ஓம் மந்திரம் உதயமானதும் இங்கே தான்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

நமது லட்சியங்களை நிறைவேற்றித் தரும் சோடேச சிவதரிசனம்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்பது கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் முழுவதும் தினமும் போற்றப்படும் போற்றியாகும்;

இராமாயண காலத்தில் ஸ்ரீராமபிரான் வனவாசகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது தந்தையாகிய தசரதருக்கு தர்ப்பணம் கொடுத்திருக்கிறார்;அப்படி தர்ப்பணம் கொடுத்த ஆலயங்களில் பெரும்பாலான ஆலயங்கள் நமது தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன;
அவைகளில் முக்கியமானது மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் அமைந்திருக்கும் உள்ளடங்கிய கிராமக் கோவில் கொறுக்கை ஆகும்;

இங்கேதான் மன்மதனை ஈசன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து சாம்பாலாக்கினார்;கொறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் இன்றும் அந்த சாம்பல் மேடு அமைந்திருக்கிறது;கடந்த மூன்று பிறவிகள் முழுவதும் சிவவழிபாடு அல்லது பைரவ வழிபாடு செய்துள்ளவர்களால் மட்டுமே இந்த இடத்தைச் சென்றடைய முடியும்;

தமிழ்நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கபூர்,பர்மா என்ற மியான்மர்,பங்களாதேஷ் இவைகளில் ஏராளமான சிவாலயங்கள் இன்றும் தெய்வீக அருளாற்றல் நிரம்பி சிவக் கதிர்வீச்சை பரப்பிக் கொண்டே இருக்கின்றன;நாம் வாழும் ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தின் மூலமாகவே நமது நீண்ட கால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்;

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் மட்டுமே,நமது வழிபாடு,பூஜை,மந்திரஜபம் பலன் தரும்;சைவம் என்பது சமயம் மட்டும் அல்ல;உண்ணும் முறையும் கூட!
அசைவம் சாப்பிடுவதால்,நமக்குக் கிடைக்க வேண்டிய வரமானது நமது சூட்சும உடலுக்குள் நுழையாமல் வெளியிலேயே தங்கிவிடுகிறது.அப்புறம்,எந்த ஜோசியரும் சொன்னது பலிக்கலை;எத்தனையோ பரிகாரம் செஞ்சும் என் கஷ்டம் தீரலை;என்று புலம்ப வேண்டியதுதான்;

நாம் வாழ்ந்து வரும் ஊரில் திங்கட்கிழமையன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்;கோவிலுக்குள் நுழைந்தது முதல் கோவிலை விட்டு வெளியே வரும் வரை ஓம் ரீங் சிவசிவ என்று ஜபிக்க வேண்டும்;இப்படி தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் செய்யவேண்டும்;16 திங்கட்கிழமைகளும் ஒரே சிவாலயம் சென்று இப்படி மந்திரம் ஜபிக்க வேண்டும்;அடுத்த 90 நாட்களில் நமது லட்சியம் நிறைவேறத் துவங்கும்;

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இங்கே எங்கள் ஊரை தனது அருட்பார்வையால் நிர்வாகித்து வருபவர் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி! ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கின்றது;நாங்கள் இங்கே தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் வருகை தந்தோம்;கோவிலின் வாசலில் கால் வைத்தது முதல் கோவிலை விட்டு வெளியேறும் வரை ஓம் ரீங் வைத்தியநாதா,வைத்தியநாதா என்று ஜபித்தவாறு கோவிலை வலம் வந்தோம்;16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே வெளியூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு,சிவகடாட்சம் பெற முயற்சித்தோம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமியின் அருளும்,மூலஸ்தானத்தினுள் அமைந்திருக்கும் மனோன்மணியின் ஆசியும் எங்கள் அனைவருக்கும் கிட்டியது;

ஒம் ரீங் என்ற வார்த்தைக்குப் பின்னால் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஈசனின் பெயரை இரண்டுமுறை ஜபிப்பதன் மூலமாக நமது ஆழ்மனதின் மூலமாக ஈசனின் பாதத்தை மனதால் தொடுவதாக அர்த்தம்;

ஓம் ரீங் சிவசிவ


Tuesday, February 9, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம்!!!


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;
கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;

16.1.15 வெள்ளி விடிகாலை 2.05 முதல் 4.05 வரை
27.1.15 செவ்வாய் மதியம் 12.44 முதல் 2.44 வரை
13.2.15 வெள்ளி இரவு 12.00 முதல் 2.00 வரை
23.2.15 திங்கள் காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
11.3.15 புதன் இரவு 10.15 முதல் 12.15 வரை
23.3.15 திங்கள் காலை 6.34 முதல் 8.06 வரை
8.4.15  புதன் இரவு 8.24 முதல் 10.24 வரை
19.4.15 ஞாயிறு காலை 6.20 முதல் 8.20 வரை
5.5.15 செவ்வாய் மாலை 6.30 முதல் 8.30 வரை
16.5.15 சனி காலை 4.04 முதல் 6.04 வரை
2.6.15 செவ்வாய் மாலை 5.00 முதல் 7.00 வரை
13.6.15 சனி விடிகாலை 2.15 முதல் 4.15 வரை
29.6.15 திங்கள் மதியம் 2.56 முதல் 4.56 வரை
9.7.15 வியாழன் இரவு 12.30 முதல் 2.30 வரை
26.7.15 ஞாயிறு மதியம் 1.30 முதல் 3.30 வரை
6.8.15 வியாழன் இரவு 11.00 முதல் 12.51 வரை
23.8.15 ஞாயிறு மதியம் 12.15 முதல் 2.15 வரை
2.9.15 புதன் இரவு 9.04 முதல் 11.04 வரை
19.9.15 சனி காலை 10.04 முதல் 12.04 வரை
29.9.15 செவ்வாய் இரவு 7.34 முதல் 9.34 வரை
10.10.15 சனி காலை 6.34 முதல் 8.34 வரை
10.10.15 சனி மதியம் 12.34 முதல் 2.34 வரை
10.10.15 சனி மாலை 6.34 முதல் 8.34 வரை
16.10.15 வெள்ளி காலை 8.04 முதல் 10.04 வரை
17.10.15 சனி காலை 8.08 முதல் 10.08 வரை
27.10.15 செவ்வாய்மாலை 5.34 முதல் 7.34 வரை
13.11.15 வெள்ளி காலை 6.24 முதல் 8.24 வரை
23.11.15 திங்கள் மதியம் 3.30 முதல் மாலை 5.30 வரை
10.12.15 வியாழன் காலை 6.00 முதல் 6.30 வரை
21.12.15 திங்கள் மதியம் 1.45 முதல் 3.45 வரை
6.1.16 புதன் காலை 6.22 முதல் 6.40 வரை
7.1.16 வியாழன் அதிகாலை 4.40 முதல் 6.40 வரை
17.1.16 ஞாயிறு மதியம் 12.00 முதல் 2.00 வரை
2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
6.2.16 சனி காலை 6.00 முதல் 6.30 வரை
6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
6.2.16 சனி மாலை 4.30 முதல் 6.30 வரை
6.2.16 சனி இரவு 10.30 முதல் 12.30 வரை
13.2.16 சனி காலை 10.43 முதல் 12.00 வரை
20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 11.22 வரை
12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை

இந்த நேரத்தின் மைய  பாகத்தைப் பயன்படுத்துவது நன்று.


இப்படிக்கு ஜோதிடமுனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.9092116990 & 9364231011

அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!


நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;
அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;

நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.

இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

Monday, February 8, 2016

யாருக்கெல்லாம் வராகி வழிபாடு சுலபமாகக் கைகூடும்?


மனதால் பிறருக்கு தீங்கு நினைக்காமல்,தான் உண்டு;தன்னுடைய வேலை/தொழில் உண்டு என்று இருப்பவர்களுக்கு


திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


தற்போது ராகு மஹாதிசை நடப்பில் உள்ளவர்களுக்கு


பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்களுக்கு


பஞ்சமி திதியில் பிறந்துள்ளவர்களுக்கு


இனி ஒரு பிறவியே வேண்டாம்;என்று மனம் வெறுத்துள்ளவர்களுக்கு


ராகுவுடன் எந்தக் கிரகமாகவது இணைந்து அந்தக் கிரகத்தின் திசை நடப்பில் உள்ளவர்களுக்கு


நிம்மதியாக வாழ விரும்புவோர்களுக்கு


அன்னை அரசாலை(வராகி)யின் வழிபாடு சுலபமாகக் கைகூடும்;
ஆமாம்!

பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் (காலையில் 15 நிமிடமும்,இரவில் 15 நிமிடமும்) ஜபித்து வந்தால் போதும்;மூன்றாவது நாளில் இருந்தே உங்களுக்கு அன்னை அரசாலை(வராகி)யின் அருட்பாதுகாப்பு கிட்டிவிடும்;

4 ஆம் நாளில் இருந்து,கூடவே இருந்து பழகி நமக்கு துரோகம் செய்தவர்கள் படிப்படியாக நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடுவார்கள்;

7 ஆம் நாளில் இருந்து,நாம் அறியாமையால் கஷ்டப்படுவதை நினைத்து வருத்தப்படும் நல்ல ஆத்மாக்கள் நம்மோடு பழக ஆரம்பிப்பார்கள்;எதிர்பாராத உதவிகள் செய்ய ஆரம்பிப்பார்கள்;

30 ஆம் நாளில் இருந்து எதெற்கெடுத்தாலும் புலம்புவதும்,பயப்படுவதும் நம்மைவிட்டு விலகிச் சென்றுவிடும்;

60 ஆம் நாளில் இருந்து நமது வராகி மந்திர ஜபத்தின் பலன் நமது குடும்பத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக் கவசமாக பாதுகாக்கத் துவங்கும்;

நமது குடும்ப உறுப்பினர்கள் நம்மோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி;அல்லது தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்குச் சென்று வந்தாலும் சரி;அல்லது நாம் ஒரு ஊரிலும் நமது குடும்பத்தார் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்து வந்தாலும் சரி;அவர்களுக்கு சூட்சுமமான பாதுகாப்பை அன்னை அரசாலை(வராகி) வழங்குவாள்;இப்படி வழங்கும் பாதுகாப்பை எந்த ஒருவராலும் வழங்க முடியாது;

எனவே,பின்வரும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை தினமும் ஜபிக்கத் துவங்குங்கள்;

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்,அருகில் இருக்கும் பழமையான ஆலயத்தில் மூலவர்,அம்பாள்/தாயார் சன்னதியின் முன்பாக 30 நிமிடத்துக்குக் குறையாமல் ஜபிக்கவும்;

60 நாட்கள் இப்படி தினமும் இருமுறை ஜபித்தப் பின்னர்,வராகி பரணி என்ற வராகி மாலை என்ற வராகி அந்தாதியை ஜபிக்கத் துவங்கலாம்;

அசைவம் தவிர்த்துவிட்டு,ஜபிக்க ஆரம்பிப்பது அவசியம்;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளை ஒருமுறை ஜபித்தாலே,வராகி பரணியை ஒருமுறை பாடியமைக்கான பலன் கிட்டும்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

வராகி பரணி என்ற வராகி அந்தாதி என்ற வராகி மாலை


ஓம் சிங்கம்புணரி முத்துவடுகநாதகுரு வசிவசி(1 முறை)
ஓம் ஸ்ரீமஹா கணபதி வசிவசி(1 முறை)
ஓம் அருணாச்சலாய வசிவசி(1 முறை)
ஓம் கீர்த்திவாசர் பாலகுராம்பிகை வசிவசி(1முறை)
ஓம் (உங்கள் குலதெய்வத்தின் பெயர்) வசிவசி(1முறை)

1.வசீகரணம்(தியானம்)
இருகுழைக் கோமளம் தாள் புட்பராகம் இரண்டு கண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்த வல்லி
மரகதம் நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே

2.காட்சி(யந்திர ஆவாகனம்)
தோராத வட்டம் முக்கோணம் சட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ் இட்டு ரீங்காரம் உள்ளிட் டிதுநடுவே
ஆராதனை செய்து அருச்சித்துப் பூசித்தடி பணிந்தால்
வாராதிராள் அல்லளே வாலை ஞான வராகியுமே

3.பகைத் தடுப்பு(பிரதாபம்)
மெய்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிக வெகுண்டு
கைச்சிரத்தேந்திப் புலால் நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்க்கடித்துப்
பச்சிரத்தம் குடிப்பாளே வராகி பகைஞரையே

4.மயக்கு(தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத்தடி கொண்டு பேய்கள் அவர் குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வராகி பதினா லுலகம் நடுங்கிடவே

5.வெற்றி ஈர்ப்பு(சத்ரு சங்காரம்) ஆகர்ஷணம்
நடுங்கா வகை அன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித்திட்டு
ஆடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகமிடும்
தொடுமங்கார் மனோன்மணி வராகி நீலித் தொழில் இதுவே

6.உச்சாடனம்(ரோக அரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வராகிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப்பலி கொண்டுப் போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கெளவக் கொடுப்பாள் வராகி என் நாரணியே

7.எதிர்ப்புக்கட்டு(சத்ரு அரம்)
நாசப்படுவர் நடுங்கப்படுவர் நமன் கயிற்றால்
வீசப்படுவர் வினையும் படுவர் இம் மேதினியோர்
ஏசப்படுவர் இழுக்கும் படுவர் என் ஏழை நெஞ்சே
வாசப்புதுமலர்த் தேனாள் வராகியை வாழ்த்திலரே

8.பெருவஸ்யம்(திரிகால ஞானம்)தேவ வசியம்
வாலை புவனை திரிபுரை மூன்றும் இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆக எக்காலத்துமே
ஆலயம் எய்தி வராகிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே

9.பகை முடிப்பு(வித்வேசணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல் முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம் எரித்தோன் வாமபாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வராகி என் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே

10.வாக்கு வெற்றி(சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னையே புகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்டதோ? பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே

11.தேவி வருகை(பூத பந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம் பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வராகி சிவசக்தியே

12.ஆத்மபூஜை(மகாமாரி பசனம்)
சக்தி கவுரி மகமாயி ஆயி என் சத்ருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வராகிஎன் நெஞ்சகத்தே

13.தேவி தாபனம்(பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்ற நிர்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வராகி குலதெய்வமே

14.மந்திரபூஜை(முனி மாரணம்)
மதுமாமிசம் தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாசீனம் செய்திடுவார் அந்த அற்பர்கள் தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர்வாளில் வெட்டி எறிவாள் வராகிஎன் மெய்த்தெய்வமே

15.வராகி அமர்தல்(மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத் தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்)மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண் எதிரே
வையம் துதிக்க வருவாள் வராகி மலர்க்கொடியே

16.வரம் பொழிதல்(எதிரி மாரணம்)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம் தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றிகுறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!

17.வாழ்த்துதல்(உலக மாரணம்)
வருந்துணை என்று வராகி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணாதவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்யப் பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர் கண்டீர் உடல் வேறுபட்டே

18.நன்னீர் வழங்கல்(ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதி பொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப்படையாள் தலை வணங்காதவர்க்கே

19.புனித நீர் அருந்துதல்(துட்டபந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர் தமை
ஓடவிட்டேகை உலக்கை கொண்டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக் கொங்கையாள் எங்கள் அம்பிகையே

20.மலர் வழிபாடு(கர்ம வாசன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு செகம் அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வராகி வந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே

21.தேவி சன்னிதானம்(கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரை இடுவாள் கொன்றைவேணியான்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வராகி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே

22.தேவி துதிமாலை(ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என் அம்மை வராகிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரித்த தலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள் சுக்காக உலர்த்துவளே

23.புகழ் சொற்பாமாலை(மெளனானந்த யோகம்)
ஊராகிலும் உடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
யாராகிலும் நமக் காற்றுவரோ? அடல் ஆழி உண்டு
காரார் கனத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வராகி என்னும் மெய்ச் சண்டப் பிரசண்ட வடிவி உண்டே

24.படைக்கள வாழ்த்து( பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழி சங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வராகி என் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்க வல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே

25.பதமலர் வாழ்த்து( பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணாகதி என்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே


26.படைநேமி வாழ்த்து( சிந்தானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்ட வயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர் கண்டீர்
நிலைபெற்ற நேமிப்படையாள் தனை நினையாதவரே

27.அடியார் வாழ்த்து( அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்தி பகல் உன்னை அர்ச்சித்த பேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வராகிநற் பொற்கொடியே

28.திருப்படை வந்தனம்( அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்பு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடி கொண்டு எதிர்த்தவருக்கு
நெருப்புக் குவால் எனக் கொல்வாய் வராகி என் நிர்குணியே

29.பதமலர் வந்தனம்( கைவல்யானந்த யோகம்)

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள் ஆயுதம் கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வராகி குலதெய்வமே

30.சித்தி வந்தனம்( ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடி யார்க்கு முன்னே
சரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வராகி எனும் தெய்வமே


31.நவகோண வந்தனம்( நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே

32.நிறைமங்கலம்(சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கே இடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

நாம் உண்டு,நமது வேலை உண்டு இருப்பவர்கள் உடன் பணிபுரிபவர்களின் பொறாமையும்,நயவஞ்சகமும் பதவி உயர்வு கிடைக்கவிடாமல் தடுக்கின்றது;

குடும்பத்தில் இந்த பொறாமை நிம்மதியாக வாழவிடாமல் தடுக்கிறது;சில குடும்பங்களில் சுமுகமாக சொத்துக்களை பிரிக்கவிடாமலும் தடுப்பதால் நேர்மையாக வாழ முடியாமல் தவித்து வருபவர்கள் கோடிக்கணக்கானவர்கள்;

இப்படிப்பட்டவர்கள் இந்தப் பாடலை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில்/கோவிலில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள் தான்! வாய்விட்டு அல்ல)
அப்படிச் செய்ய ஆரம்பித்த  3வது நாளில் இருந்து இவர்களுக்கு எதிரான சூழ்நிலை (அது நயவஞ்சகமாக இருந்தாலும் சரி;பில்லி ஏவல் சூனியமாக இருந்தாலும் சரி) மாறத் துவங்கும்;90 நாட்கள் தொடர்ந்து பாடி வர மன நிலையில் மாற்றம் உண்டாகும்;120 நாட்கள் தொடர்ந்து பாடி வர துணிச்சலும்,பொருளாதாரத்தில் முன்னேற்றமும்(பண வருவாய் அதிகரிக்கும்) உண்டாகும்;1008 நாட்கள் தொடர்ந்து பாடி வர இப்பிறவி முழுவதும் எந்த ஒரு தீய பாதிப்பும் இன்றி நிம்மதியாகவும்,வலிமையோடும் வாழலாம்;

 பயங்கரவாதம் இன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது;இந்தப் பாடலை தினமும் பாடுபவர்களின் எண்ணிக்கை 10,00,000த் தாண்டும் போது நமது நாடு வலிமை மிக்க நாடாக மாறிவிடும்; பயங்கரவாதம் இந்த நாட்டில் அழிந்துவிடும் என்பது வராகிசத்தியம்!!! 

ஏனெனில்,பாரதமாதா என்பது அன்னை அரசாலை(வராகி)யே! அவளைத் துதிக்கும் போது அவளின் அருள் நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும்,நமது குலதெய்வத்திற்கும்,நமது நாட்டிற்கும் கிடைக்கும்;

ஜின் மாந்திரீகத்தில் இருந்து தப்பிக்க ஒரே வழி அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவதே!!!



இந்தப் பாடலை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பாடலாம்;பாடுபவர்கள் அசைவம்,மது இரண்டையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்;முட்டை,புரோட்டா,ஆம்லெட்,ஆப்பாயில் இவைகளும் அசைவமே!!!