Monday, March 9, 2015

தட்சிண பஞ்ச பூதஸ்தலங்கள்




தென் நாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற கோஷம் மனித இனம் நாகரீகம் அடைந்தது முதல் இன்று வரையிலும் சிவாலயங்களில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது;உலகின் ஆதி தெய்வம் ஈசன் எனப்படும் சிவன் என்பதற்கு இந்த கோஷமே முதல் ஆதாரம் ஆகும்; எல்லாம் சிவன் செயல் என்பதும்,சிவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் பிற்காலத்தில் வேறுவிதமாக திரிக்கப்பட்டன;

மனிதர்களாகிய நம் ஒவ்வொருவரையும் மறைமுகமாக இயக்கிவருவது நவக்கிரகங்கள்;இந்த நவக்கிரகங்களை வழிநடத்துவது பஞ்சபூதங்கள்;இந்த பஞ்சபூதங்களாக இருந்து உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் இவைகளில் நீக்கமற நிறைந்திருப்பவர் ஆதிசிவன் ஆவார்.பஞ்சபூதத் திருத்தலங்களாக அண்ணாமலை(அக்னி);திருவானைக்கா(நீர்);சிதம்பரம்(ஆகாயம்);காஞ்சிபுரம்(நிலம்);திருக்காளஹஸ்தி(வாயு) இருக்கின்றன;இவைகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் ஐந்து சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன;

அக்னிஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூரும்,நீர்ஸ்தலமாக தாருகாபுரமும்;நில ஸ்தலமாக சங்கரன் கோவிலும்;வாயுஸ்தலமாக தென் மலையும்;ஆகாயஸ்தலமாக தேவதானமும் அமைந்திருக்கின்றன;
வானியல்படி செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்து தமிழ்நாடு விலகியிருப்பதால்,செவ்வாய் தோஷம் தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு தருவதில்லை;அதே சமயம் செவ்வாய்க்கிரகத்தின் பார்வை தமிழ்நாட்டின் மீது படிவதால் உலகம் முழுவதும் இருந்து சித்தர்கள் இங்கே வருகை தந்து முக்தி பெற்றனர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாத சேதி!

எப்போதெல்லாம் பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை (பூமியின் மொத்த மக்கள் தொகையில்) குறிப்பிட்ட சதவீதத்திற்கும் கீழாக வருகிறோதோ அப்போதெல்லாம் தண்ணீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பதை தேவாரப்பதிகங்களில் ஒன்று தெரிவிக்கிறது;எனவே,தமிழ்நாட்டின் தெற்கு நீர்ஸ்தலமான தாருகாபுரத்தின் பெருமைகளை நாம் முதலில் அறிவோம்:
திருச்சிக்கு அருகில் அமைந்திருக்கும் திருவானைக்காவுக்கு இணையான நீர்ஸ்தலம் இந்த தாருகாபுரம்;ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் வாசுதேவநல்லூருக்கும் புளியங்குடிக்கும் நடுவே சாலையில் இருந்துவிலகி 2 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது;தாருகன் என்ற அசுரன் இந்த ஆலயத்திற்கு வந்து சிவ வழிபாடு செய்து சாப நிவர்த்தி பெற்றான்;அதனால் இதற்கு தாருகாபுரம் என்ற பெயர் தோன்றியது;சுமாராக 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம்,500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெருநகரமாக விளங்கியிருக்கிறது;சில நூற்றாண்டுகள் வழிபாடு விடுபட்டுப் போனது;பின்னர்,மானாபுரப் பாண்டியன் என்ற மன்னனால் மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது;

நவக்கிரக அதிபதிகள் வட்டவடிவில் அமர்ந்து கவனிக்க, அவர்களுக்கு  தட்சிணாமூர்த்தி போதித்துக் கொண்டிருக்கிறார்;இப்படிப்பட்ட விசேஷமான தட்சிணாமூர்த்தி வடிவம் உலகத்திலேயே இங்கே மட்டும்தான் காணப்படுகிறது;இந்த தட்சிணாமூர்த்தியை மூன்று வியாழக்கிழமைகளுக்கு இங்கே வந்து குரு ஓரையில் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வழிபட வேண்டும்;தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் துண்டு சார்த்தி,சுயஜாதகத்தை பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்;கொண்டைக்கடலையை அவித்து பிரசாதமாக வைக்க வேண்டும்;அர்ச்சனைக்குப் பின்னர் கொண்டைக்கடலையில் பாதியை பிரசாதமாக வாங்கிக் கொண்டு அங்கே வருபவர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும்;நாமும் சாப்பிடலாம்;இப்படிச் செய்வதன் மூலமாக குரு கிரகத்தின் பலம் அதிகரிக்கும்;குரு கிரகம் சார்ந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கும்;
இங்கே இருக்கும் மூலவரின் பெயர் அருள்மிகு மத்தியஸ்தநாதர்;இறைவியின் பெயர் அருள்மிகு அகிலாண்ட நாயகி.இந்த மூலவருக்கு நேர்கீழாக பூமிக்கு அடியில் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்;இவர் அருள்மிகு மத்தியஸ்த நாதருக்குச் செய்யும் பூஜைகளை ஏற்றுக்கொள்கிறார் என்பது இப்பகுதி மக்களின் ஆயிராமாண்டு நம்பிக்கை ஆகும்;
இவ்வாலயத்தை தலைவன் கோட்டை ஜமீன் தார்கள் காலம் காலமாக பராமரித்து வருகின்றனர்;மாமரம் இந்த ஆலயத்தின் ஸ்தல விருட்சமாக அமைந்திருக்கிறது.இங்கே உள்ள பைரவருக்கு அக்னி பைரவர் என்று பெயர்;இவர் பில்லி ஏவல் சூனியங்களும் நீக்கும் பைரவப் பெருமானாக அருள்பாலித்து  வருகிறார்;

நிலஸ்தலம் சங்கரன் கோவில்:ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் விதமாக இங்கே சங்கரனும் நாராயணனும் இணைந்து சங்கரநாராயணராகக் காட்சியளிக்கிறார்;பார்வதிதேவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு ஒரு ஆடி மாத உத்திராடம் நட்சத்திரநாளன்று(ஆடி பவுர்ணமி) இவ்வாறு சங்கரநாராயணர் பார்வதிதேவிக்குக் காட்சியளித்தார்;பல நூற்றாண்டுகளாக ஆண்டுதோறும் ஆடி பவுர்ணமியன்று ஆடித்தவசு திருவிழாவாக இப்பகுதி மக்கள் இதைக் கொண்டாடிவருகின்றனர்;

கேது தோஷங்களை நீக்கும் ஸர்ப்ப கணபதியும்,ராகுவின் தோஷங்களை நீக்கும் ஸர்ப்ப பைரவரும் இங்கே அருள்பாலித்து வருகின்றனர்;சதயம் நட்சத்திரத்திற்குரிய பைரவ ஆலயமாக சங்கரன் கோவில் விளங்குகிறது;
முற்காலத்தில் பொருநை ஆற்றங்கரையில் உக்கிரமப்பாண்டிய மன்னனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது;இந்த ஆலயத்தின் கோபுரம் 125 அடி உயரமும்,9 நிலைகளும் கொண்டது;கோமதியம்பிகையின் சன்னதியின் எதிரே ஸ்ரீசக்கரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது;வாசியோகம் பயில்வோர்,தினமும் பிராணயாமம் செய்பவர்கள் இந்த சக்கரத்தின் மீது அமர்ந்து தொடர்ந்து 10 நாட்கள் கோமதியம்பிகையை எண்ணி தியானம் செய்தால் அவர்கள் அடுத்த நிலையை எட்டுவர்;
இங்கு அக்னித்தீர்த்தம்,அகத்தியர் தீர்த்தம்,சூர்யதீர்த்தம்,சந்திரத் தீர்த்தம்,இந்திரத்தீர்த்தம் என்று ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன;
சதயம் நட்சத்திரத்தில் பிறந்துள்ளவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சதய நட்சத்திர நாளில் இங்கே அமைந்திருக்கும் சர்ப்ப பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்;அப்படி எட்டு முறைச் செய்தால் அவர்களது அனைத்து முற்பிறப்பு கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;108 முறை அவ்வாறு செய்தால் இப்பிறவியிலேயே தகுந்த ஆன்மீககுருவை அடைவார்கள்;

ஸ்தலவிருட்சமாக புன்னை மரம் இருப்பதால் இந்த ஆலயத்தின் பழைய பெயர் ஆதி புன்னைவனம் என்று இருந்தது;
இங்கு புற்று மண் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது;இதனால் சங்கரநாராயணருக்கு வன்மீக நாதர் என்ற பெயரும் உண்டு;
அமைவிடம்:ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் சாலையில் சங்கரன் கோவில் அமைந்திருக்கிறது.

அக்னிஸ்தலம் கரிவலம்வந்தநல்லூர்:
இந்த ஆலயத்தின் முன் மண்டபம் மாவீரன் புலித்தேவனால் கட்டப்பட்டது;1928 ஆம் ஆண்டில் திரு.அருணாச்சலம் செட்டியார் என்பவர் இந்த ஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தையும்,கிழக்கு மண்டபத்தையும் கட்டினார்;குடமுழுக்கையும் செய்தார்;இவரது சிலை இந்த ஆலயத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ளது;இவர் காரைக்குடி மானகிரியைச் சேர்ந்தவர்;இந்த ஆலயத்தின் கிளாமரம் பூக்கும்;ஆனால் காய்ப்பதில்லை;
அகத்தியர் பராசக்தி பீடத்தை மூன்று இடங்களில் ஸ்தாபித்தார்;அவை குற்றாலம்,வேதாரண்யம் மற்றும் கரிவலம்;
மனிதனுக்கு சிவன் சிரார்த்தம் செய்த இடங்கள் இரண்டு;ஒன்று அண்ணாமலை;மற்றது கரிவலம்;அண்ணாமலையில் வல்லாளமகாராஜாவுக்கு தகப்பனாக இருந்து சிரார்த்தம் செய்தார்;கரிவலத்தில் வரகுணராமபாண்டியனுக்கு மகனாக இருந்து சிரார்த்தம் செய்திருக்கிறார்;வரகுணராமப்பாண்டியன் பதிற்றுப்பத்து அந்தாதி,வெண்பா அந்தாதி,கலித்துறை அந்தாதி என 300 அந்தாதிப்பாடல்களைப் பாடியுள்ளார்;இதை குட்டித் திருவாசகம் என சைவ மரபினர் இன்றும் போற்றிப்பாடிவருகின்றனர்;

ஈசனுக்குத் தெற்கே ஸ்தாபிக்கப்படும் அம்மன் அளவற்ற வரங்கள் அருளும் சக்தியுள்ளவளாகத் திகழ்வாள் என்பதை கோவில் ஆகமவிதிகள் தெரிவிக்கின்றன;இந்த விதிப்படி இங்கே பால்வண்ணநாதருக்குத் தெற்கே ஒப்பனையம்மாள் இருந்து அருள்பாலித்து வருகிறாள்;ஆவணி மாதத்தில் வரும் பூராட நட்சத்திரதினத்தன்று இங்கே தவசு(சங்கரன் கோவிலைப் போல) நடைபெற்று வருகிறது;

ராமாயணப் போரில் இராவணனின் மகன் இந்திரஜித்தை லட்சுமணன் வதம் செய்தான்;அதனால் லட்சுமணனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது;லட்சுமணன் இங்கே வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து சாபவிமோசனம் பெற்றான்;அதனால் லட்சுமணேசுவரர் என்ற லிங்கம் இன்றும் இங்கே காணப்படுகிறது;ராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆவதாக இன்றைய நவீன அறிவியல் தெரிவிக்கிறது;இதன் மூலமாக கரிவலம் அருள்மிகு பால்வண்ணநாதர்+அருள்மிகு ஒப்பனையம்மாள் என்ற   அழகிய சுந்தரியம்மாள் ஆலயத்தின் தொன்மையைப் புரிந்து கொள்ளலாம்;

அகத்தியர் ஸ்தாபித்த பராசக்திபீடமானது தற்காலத்தில் புத்திர தோஷத்தை நீக்கும் அன்னையாகவும்,திருமணத்தடையை தகர்க்கும் அருள் சக்தியாகவும் மிளிர்கிறது;திருமணத்தடை உள்ளவர்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டுவோர் 48 நாட்கள் அவரவர் வீடுகளிலேயே விரதம் இருக்கவேண்டும்;இந்த விரத நாட்களில் அசைவம் சாப்பிடுவதையும்,பழைய உணவு உண்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்;48 ஆம் நாள் அன்று இங்கு வருகை தந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து,புடவை சார்த்த வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் இங்கே தரப்படும் பிரசாதத்தை உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்;இப்படிச் செய்தால்,அடுத்த 90 நாட்களில் திருமணத்தடை இருப்பவர்களுக்கு அது நீங்கி சிறந்த வரன் அமையும்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர்களுக்கு அந்த தோஷத்தை அன்னையானவள் வாங்கிக் கொண்டு மழலைச் செல்வம் அருளுவாள்;புத்திர தோஷம் உள்ள தம்பதியர் இருவருமே இந்த விரதத்தை மேற்கொள்வது நன்று.அகத்தியர் பராசக்தி பீடத்தை ஸ்தாபித்த மற்ற ஆலயங்கள் குற்றாலம் மற்றும் வேதாரண்யம்.

வாயுஸ்தலம் தென்மலை:அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரர்+அருள்மிகு சிவபரிபூரணியம்மாள்
ராஜபாளையத்தில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இந்த கிராமத்திற்குச் செல்கின்றன;மேற்கு நோக்கிய சிவாலயங்கள் பரிகாரக் கோவில்களாகும்;இவர் மேற்கு நோக்கி அமைந்திருப்பதால் நமது கர்மவினைகள்,சாபங்கள்,துயரங்களை நீக்கிவருகிறார்;ஒவ்வொரு பவுர்ணமிக்கும் இங்கே நடைபெறும் கிரிவலம் பிரபலமானது;ஏராளமான சித்தர்கள் இங்கே சூட்சுமமாக வந்து வழிபடுவது வழக்கம்;
ஸர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வர வேண்டும்;அல்லது அவரவர் ஜன்ம நட்சத்திரதினத்தன்று வருகை தந்து மூலவருக்கு அர்ச்சனை செய்தாலே போதுமானது;ஸர்ப்ப தோஷம் விலகிவிடும்;பல ஆண்டுகளாக இப்பகுதி மக்களின் ஸர்ப்ப தோஷத்தை தென்மலை திருபுரநாத ஈஸ்வரர் நீக்கியவர் என்பதால் இப்பகுதி மக்கள் தமக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு இவரது பெயரையே வைப்பது வழக்கம்;

அவுரங்கசீப்பின் ஆட்சிக் காலத்தில் இந்த ஆலயத்தில் சில ஆண்டுகளாக வழிபாடு தொடர இயலாமல் இருந்தது;அந்தக் கால கட்டத்தில் இந்த ஆலயத்தின் காவலாளியிடம் சிறுமி வடிவில் வந்து அன்னை சிவபரிபூரணியம்மன் உண்ண உணவு வாங்கியிருக்கிறார்;இதை இன்றும் இப்பகுதி மக்கள் பெருமையாகச் சொல்வது வழக்கம்;
மூலஸ்தானத்தினுள் ஜன்னல் கிடையாது;மூலவருக்கு அருகில் ஐந்து சர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது;இதில் முதல் தீபம் மட்டும் ஒரு நிமிடம் பிரகாசமாக எரியும்;மறுநிமிடம் அணைவது போல சுருங்கும்; அருள்மிகு திரிபுரநாத ஈஸ்வரரின் மூச்சுக்காற்றுதான் இப்படி முதல் தீபத்தை துடிக்க வைக்கிறது என்பது இப்பகுதி மக்களின் நூற்றாண்டு கால நம்பிக்கை ஆகும்;

அதே போல இங்கே அமைந்திருக்கும் அன்னை சிவபரிபூரணிக்கு வியர்ப்பது வழக்கம்;ஈசன் தம்பதியாக இங்கே சூட்சுமமாக வசித்து வருவதற்கு இந்த இரு சம்பவங்களே  ஆதாரங்கள் ஆகும்;
ஸ்தல விருட்சம் வில்வமரம்
சிவகிரி நாச்சியார் அறக்கட்டளையினர் பரம்பரை பரம்பரையாக நிர்வகித்து வருகின்றனர்;

ஆகாயஸ்தலம் தேவதானம்:இறைவன்:அருள்மிகு நச்சாடைதவிர்த்து அருளிய நாதர்;இறைவி:அருள்மிகு தவம்பெற்ற நாயகி
ராஜபாளையத்தில் இருந்து தென் காசி செல்லும் சாலையில் 16 வது கி.மி.தொலைவில் தேவதானம் அமைந்திருக்கிறது;இந்த கிராமத்தில் இருந்து மேற்கே 2 கி.மீ.தொலைவில் வயல்வெளிக்கு நடுவே இந்த ஆலயம் அமைந்திருக்கிறது;

பல நூற்றாண்டுகளாக இங்கே 7 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன;பார்வதி தேவி ஆகாயம் நோக்கித் தவம் செய்ய இங்கே உருவான சுயம்புலிங்கமே நச்சாடைத் தவிர்த்து அருளிய நாதராகத் திகழுகிறார்;

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு,பாண்டிய நாட்டு மன்னன் பராக்கிரமப் பாண்டியனுக்கும்,சோழ நாட்டு மன்னன் விக்கிரம சோழனுக்கும் போர் மூண்டது;வருடக்கணக்கில் போர் மூண்டதால் இருதரப்பிலும் ஏராளமான வீரர்கள் மாண்டனர்;ஆனால்,போர் முடிவுக்கு வரவில்லை;எனவே,விக்கிரமச் சோழன் ஒரு தந்திரம் செய்தான்;நச்சுச்செடிகளிலிருந்து பிழியப்பட்ட சாறுகள் கலந்த ஒரு பட்டு ஆடையைத் தயார் செய்து பராக்கிரமப் பாண்டியனுக்கு பரிசாக அனுப்பி வைத்தான்;அவ்வாறு அனுப்பியதை கனவில் பராக்கிரமப் பாண்டியனுக்கு தேவதான ஈசன் தெரிவித்ததோடு,அந்தப் பட்டு ஆடையை வாழைத்தண்டு மூலமாக எடுத்து என்மீது போர்த்திவிடு என்று அருளிமறைந்தார்;தன்னைக்  காத்த ஈசனை பராக்கிரமப் பாண்டியன் நச்சாடை தவிர்த்து அருளிய நாதர் என்று போற்றி வழிபட்டு வந்தார்;அவரது பரம்பரையினரும் அந்த நன்றியுணர்வோடு இன்றும் வழிபட்டு வருகின்றனர்;

ஓம் ஆம் ஹெளம் செள
ஒம் அருணாச்சலாய நமஹ

Monday, December 22, 2014

ஜீவ சமாதியும் ஆலய வழிபாடும்



ஆதிசிவன் என்று அழைக்கப்படும் அண்ணாமலையைத் தவிர,இந்த பூமியில் மனிதர்களாகிய நாம் வழிபடும் அனைத்து தெய்வங்களுமே ஆவிநிலையில் இருப்பவையே! சராசரி மக்களிடம் இதைச் சொன்னால் தவறாகப் புரிந்து கொள்ளவே வாய்ப்புக்கள் அதிகம்;

பூமியில் இதுவரை இருக்கும் மதங்களிலும்,இனிமேல் உருவாகப் போகும் மதங்களிலும் இருக்கப் போவது ஒரே ஒரு கருத்துதான்:- இறைவன் ஒருவனே!

அந்த ஒரு இறைவனை மனிதர்கள் வெவ்வேறு பெயர்கள் சொல்லி அழைக்கிறார்கள்;
மனித நிலையில் இருந்து இறைநிலையை அடைய முயலும் போது ஏராளமான ஆன்மீக முன்னேற்றங்களைக் கடக்க வேண்டியிருக்கிறது;அப்படி முன்னேறும் போது உருவாகும் ஒரு நிரந்தர நிலையே சித்தர்கள் நிலை;

ஒரு சித்தர்  பிறவி முழுவதும் எந்த தெய்வத்தை வழிபட்டாரோ,அந்த தெய்வம் இருக்கும் இடமே நாம் வாழும் கலியுகத்தில் பிரபல கோவிலாக வளர்ந்திருக்கிறது;

உதாரணமாக போகர் தனது வாழ்நாள் முழுவதும் முருகக் கடவுளை வழிபட்டார்;அதனால் அவர் வழிபட்ட முருகக்கடவுள் பழம் நீ என்ற பெயரில் பிரபலமான ஆலயமாக ஆகியிருக்கிறது.இன்றும் பழனிமலைக்கு அடியில் ஒரு குகையில் போகர் சித்தர் தவம் செய்வதாகவும்,கலியுகம் முடியும் போது அவர் வெளியே வருவார் என்றும் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்;

படத்தில் நீங்கள் பார்ப்பது குதம்பைச்சித்தரின் ஜீவசமாதி ஆகும்;இவர் ஒரு பிறவி முழுவதும் வினாயகரை வழிபட்டு வந்துள்ளார்;


இன்னும் நிறைய பார்ப்போம். . .

உலக நாடுகளுக்கு எல்லாம் குரு நமது இந்தியா!!!



உலகிலேயே அதிகமான நீரழிவு நோயாளிகள் வாழும் நாடு நமது பாரதம்! இந்த முதலிடத்தை கி.பி.2050 வரையிலும் தொடர்ந்து ‘தக்க’ வைக்கும் என உலக மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களும்,ஆய்வறிக்கைகளும் தெரிவிக்கின்றன;இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
சுதந்திரம் அடையும் முன்பு கோவா கடற்கரையில் ஒரு ஆங்கிலேயத் தளபதிக்கும் நமது நாட்டு மகாராஜாவுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலில் இதற்கான பதில் மறைந்திருக்கிறது.
நமது நாட்டு மஹாராஜா ஒருவர்,தனது ‘நண்பரான’ ஆங்கிலேயத் தளபதியிடம், “ஒரு நாட்டின் தேசபக்தியை அழிப்பது எப்படி?” எனக் கேட்டார்.
அதற்கு அந்த ஆங்கிலேயத் தளபதி, “அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அவர்தம் மொழி இலக்கியங்களை படிக்காமல் பார்த்துக் கொள்;அது போதும்”என்றான்.
இணையம்,செல்போன்,வாட்ஸ் அப்,முகனூல்,டுவிட் என்று தகவல் யுகத்தில் நாம் வாழ்ந்து வந்தாலும் இந்தக் கட்டுரையை வாசிப்பவர்களில் எத்தனை பேர்களுக்கு சித்தர்கள் எழுதிய சர நூல் சாஸ்திரம்,போகர் 7000,திருமூலரின் திருமந்திரம்,மலைவாடகம்,முப்பு,மூலிகை ஜாலரத்தினம்,பதார்த்த குணசிந்தாமணி போன்ற நூல்களைப் பற்றித் தெரியும்?
சாதாரண ஜலதோஷத்தைப் போக்கி ஆரோக்கியமான சுவாசத்தை ஒரு வெங்காயமும்,கொஞ்சம் வென்னீரும் சில நிமிடங்களிலேயே தரும் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?
1980களில் “மேற்கு”நாடுகளில் சூரியகாந்தி எண்ணெயும்,ஆலிவ் எண்ணெயும் அதிகமாக உற்பத்தி  செய்யப்பட்டன;இவைகளை வீணாக்காமல் எப்படி ‘காசு பார்ப்பது?’ என யோசித்தார்கள்.அடுத்த 20 ஆண்டுகளில் நமது நாட்டின் விளம்பரங்கள்,டாக்டர்களின் அறிவுரைகள்,ஹெல்த் கட்டுரைகள்,இலவச மருத்துவக் குறிப்புகள் மூலமாக நமது நாடு முழுக்க=காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை;குஜராத் முதல் அஸ்ஸாம் வரை இந்த எண்ணெய்கள் “ஆரோக்கிய அந்தஸ்தை” பெற்றன;

சுமாராக 20,00,000 ஆண்டுகளாக நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்த நல்லெண்ணெயும்,தேங்காய் எண்ணெயும் தினசரி பயன்பாட்டில் இருந்து காணாமல் போகத் துவங்கின;கி.பி.2010 இல் அதே ‘மேற்கு’ நாடுகளின் ஆராய்ச்சிகள் உலகில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் எண்ணெய் நல்லெண்ணெய் என்பதை நிரூபித்தன;எண்ணெய்களின் அரசி நல்லெண்ணெய் என்றும் சான்றளித்தன;(தற்காலத்தில் நாம் பயன்படுத்தப்பட்டு வரும் பேக்கிங்கில் வரும் நல்லெண்ணெய்க்கும்,தேங்காய் எண்ணெய்க்கும் இந்த குணம் கிடையாது;செக்கில் ஆட்டப்பட்டு கிராமங்களிலும்,இயற்கை விளைபொருட்கள் கடைகளிலும் கிடைக்கும் எண்ணெய்களுக்கு மட்டுமே இந்த குணம் பொருந்தும்)

Thursday, July 4, 2013

நமது கடுமையான கர்மவினைகளைப் போக்கும் திருவாதிரை அமாவாசை 7.7.13 ஞாயிறு!!!





ஒவ்வொரு மாதமும் ரவியாகிய சூரியனும்,மதியாகிய சந்திரனும் ஒரு ராசியில் ஒரே நட்சத்திரத்தில் ஒன்றிணைவார்கள்;இச்சம்பவம் வெறும் மூன்று விநாடிகள் வரை மட்டுமே நிகழும்;அதுவே அமாவாசைத் திதி எனப்படும்;விண்வெளியில் நிகழும்  அந்த மூன்று விநாடிகள் சம்பவம்,பூமியில் ஐந்து நாட்களுக்கு நீண்டுவிடும்;ஆனி மாதத்தில் வரும் அமாவாசையானது எப்போதுமே திருவாதிரை நட்சத்திரத்தில் உருவாகும்;சதாசிவன் என்ற அண்ணாமலையாரின் அவதார நட்சத்திரம் திருவாதிரை என்ற ஆருத்ரா ஆகும்.


எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! சிவம் இல்லையேல் சவம்!! சிவனின்றி எதுவும் அசையாது;பூமியில் சிவ வழிபாடு குறைந்தால் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்பது போன்ற பழமொழிகள் நம்மிடையே பல யுகங்களாக புழக்கத்தில் இருக்கின்றன;இதில் சிவனின்றி எதுவும் அசையாது என்பதை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அவனின்றி அணுவும் அசையாது என்று மாற்றிவிட்டனர்;எப்படிப் பார்த்தாலும் சிவனருள் கிட்டினால் மட்டுமே இந்த மானுடப்பிறப்பு திரும்பத் திரும்ப எடுப்பது நின்று மறுபிறப்பில்லாத முக்தி கிட்டும்;
எனவே,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பவர்கள் இந்த விஜய வருடம்,ஆனி மாதத்தில் வரும் அமாவாசையன்று(7.7.13 ஞாயிறு) ஜபிக்க ஆரம்பிக்கலாம்;

பல நாட்களாக ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,பல காரணங்களால் தொடர்ந்து ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த அரிய நாளில்     (7.7.13 ஞாயிறு) மீண்டும் ஜபிக்கத் துவங்கலாம்;
சந்தர்ப்பமும்,ஒய்வும் உள்ளவர்கள் இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லலாம்;மஞ்சள் நிற ஆடை அணிந்து,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக் கொண்டு,யாரிடமும் பேசாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டு கிரிவலம் செல்வது மிகவும் நன்று.அதுவும் 7.7.13 ஞாயிறு இரவு அண்ணாமலை கிரிவலம் செல்வது கடுமையான கர்மவினைகள் நீங்கிடக் காரணமாக இருக்கும்;


ஸ்ரீகால பைரவ வழிபாடு செய்பவர்கள்,சனியின் கடுமையான தாக்கத்தில் இருக்கும் கன்னி,துலாம்,மீனம் ராசியினர்;அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கடுமையான தாக்கத்திற்குள் வர இருக்கும் மேஷ ராசி,விருச்சிகராசியினர் இந்த நன்னாளில் ஏதாவது ஒரு பைரவ சன்னதிக்கு இராகு காலத்தில் சென்று ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்;


கடுமையான கர்மவினைகளால் பல ஆண்டுகளாக சிரமப்பட்டுவருபவர்கள் இந்த நாள் முழுவதும் தமது வீட்டு பூஜை அறை அல்லது அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஸ்ரீகால பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிப்பது நன்று.அவ்வாறு ஜபிக்கும் போது இடையிடையே இளநீர் அல்லது தண்ணீர் அருந்துவது நல்லது; இந்தப் பதிவினை வாசித்துவிட்டு,குறைந்தது மூன்று மணி நேரம் வரை(காலையில் ஒரு மணி நேரம்;மதியம் ஒரு மணி நேரம்;இரவு ஒரு மணி நேரம்) என்றோ அல்லது அதிக பட்சமாக ஆறு மணி நேரம் ஜபிக்க முயற்சி செய்யலாம்;ஆனால்,இந்த முயற்சிக்கு முந்தைய மூன்று நாட்கள் வரை அசைவம் சாப்பிடாமல் இருந்திருக்க வேண்டும்;

ஒரு வருடத்தில் 12 பவுர்ணமிகள் வருவதைப் போல,12 அல்லது 13 அமாவாசைகள் வரும்;அந்த 12 அல்லது 13 அமாவாசைகளில் மிக மிக மிக அரிதான,சக்தி வாய்ந்த அமாவாசை இந்த திருவாதிரை அமாவாசையே! இந்த நன்னாளில் ஸ்ரீகால பைரவரது மந்திரத்தை ஜபித்தாலும் சரி,ஸ்ரீ கால பைரவருக்கு அபிஷேகம் செய்தாலும் சரி! ஒரே நேரத்தில் ஸ்ரீகால பைரவரின் அருளும்,அந்த சதாசிவனின் அருளும் நமக்குக் கிட்டும் என்பது பைரவ நிச்சயம்.
ஸ்ரீகால பைரவப் பெருமானை அபிஷேகம் செய்வதற்குரிய பொருட்கள் பட்டியலை மீண்டும் தருகிறோம்: 

அரகஜா,ஜவ்வாது,புனுகு,அத்தர்,சந்தனாதித்தைலம்,பால்,மரிக்கொழுந்து,செவ்வரளி மாலை மற்றும் உதிரிப்பூக்கள்.(ஒருபோதும் ஸ்ரீகால பைரவருக்கு மல்லிகைப்பூ மாலை அணிவிக்கக் கூடாது)அபிஷேகம் செய்யும் போது ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை ஜபிக்க பல கோடி கோடி மடங்கு பைரவ பலன்கள் கிட்டும்;

யார் முற்பிறவியில் சித்தரின் சீடராகவோ அல்லது பழுத்த சிவனடியாராகவோ இருந்தார்களோ அவர்கள் மட்டுமே இப்பிறவியில் தொடர்ந்து பைரவ வழிபாடு செய்ய முடியும்.அது மட்டுமல்ல;வேறு எந்த கடவுளிடமும் நாம் கேட்கும் வரம் மட்டுமே கிடைக்கும்;அவ்வாறு வரம் கிடைக்க தொடர்ந்து பல வாரங்கள் அல்லது மாதங்கள் வரை அந்தக் கடவுளை வழிபட்டுக்கொண்டே இருக்க வேண்டும்;அதன் பிறகே கேட்ட வரம் கிட்டும்;ஆனால்,ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபடும்போது நாம் பலவிதமான கோரிக்கைகளை வைப்பதாக வைத்துக் கொள்வோம்;அவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒரு சில கோரிக்கைகளை மறந்துவிட்டாலும்,பைரவப் பெருமானின் அருள் கிட்டும்போது நமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிவிடும்;அது மட்டுமல்ல;அவரிடம் நாம் கேட்க மறந்த கோரிக்கைகளும் நிறைவேறிவிடும் என்பதுதான் ஸ்ரீகால பைரவப் பெருமானின் சிறப்பு ஆகும்.மேலும்,நாம் சில நாட்கள்/வாரங்கள்/மாதங்கள் வரை தொடர்ந்து ஸ்ரீகால பைரவப் பெருமானை வழிபட்டாலே நமது பூர்வ கர்மாக்களின் படி விரைவாகவே அல்லது சற்றுத்தாமதமாகவோ அவர் நம்மை ஏற்றுக் கொள்வார்;அவ்வாறு ஏற்றுக் கொண்டப் பின்னர்,நமது குலதெய்வத்தின் சக்தியும் அதிகரிக்கும்;


சந்தர்ப்பம் உடையவர்கள் அவரவர்களின் ஜன்ம நட்சத்திரத்துக்கென்று பைரவ ஆலயங்களைத் தெரிவித்திருக்கிறோம்;முடிந்தால்,அங்கே சென்று அபிஷேகம் செய்து மந்திரம் ஜபிக்கலாம்;            


1.அசுபதி/அஸ்வினி=ஞான பைரவர்=பேரூர்

2.பரணி=மஹாபைரவர்=பெரிச்சியூர்

3.கார்த்திகை=அண்ணாமலை பைரவர்

4.ரோகிணி=பிரம்ம சிரகண்டீஸ்வரர்=திருக்கண்டியூர்

5.மிருகசீரிடம்=க்ஷேத்ர பாலர்=க்ஷேத்ரபாலபுரம்

6.திருவாதிரை=வடுக பைரவர்=வடுகூர்

7.புனர்பூசம்=விஜயபைரவர்=பழனி

8.பூசம்=ஆஸினபைரவர்=ஸ்ரீவாஞ்சியம்

9.ஆயில்யம்=பாதாள பைரவர்=காளஹஸ்தி

10.மகம்=நர்த்தன பைரவர்=வேலூர்

11.பூரம்=பைரவர்=பட்டீஸ்வரம்

12.உத்திரம்=ஜடாமண்டல பைரவர்=சேரன்மகாதேவி

13.அஸ்தம்=யோகாசன பைரவர்=திருப்பத்தூர்

14.சித்திரை=சக்கர பைரவர்=தருமபுரி

15.சுவாதி=ஜடாமுனி பைரவர்=பொற்பனைக் கோட்டை

16.விசாகம்=கோட்டை பைரவர்=திருமயம்

17.அனுஷம்=சொர்ண பைரவர்=சிதம்பரம்
18.கேட்டை=கதாயுத பைரவர்=சூரக்குடி,டி.வயிரவன்பட்டி,திருவாடுதுறை

19.மூலம்=சட்டைநாதர்=சீர்காழி

20.பூராடம்=வீரபைரவர்=அவிநாசி,ஒழுகமங்கலம்

21.உத்திராடம்=முத்தலைவேல் வடுகர்=கரூர்

22.திருவோணம்=மார்த்தாண்டபைரவர்=வயிரவன் பட்டி

23.அவிட்டம்=பலிபீடமூர்த்தி=சீர்காழி,ஆறகழூர்(அஷ்டபைரவ பலிபீடம்)

24.சதயம்=சர்ப்ப பைரவர்=சங்கரன்கோவில்

25.பூரட்டாதி=அஷ்டபுஜபைரவர்=கொக்கராயன்பேட்டை,தஞ்சை

26.உத்திரட்டாதி=வெண்கலஓசை பைரவர்=சேஞ்ஞலூர்

27.ரேவதி=சம்ஹார பைரவர்=தாத்தையங்கார் பேட்டை


குறிப்பு: ஒரே நட்சத்திரத்தில் பிறந்த ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு தாராளமாகச் செய்யலாம்.ஒரே நட்சத்திரத்தில் பிறந்த கணவன்மனைவி/ சகோதரர்கள்/ ரத்த உறவுகள் சேர்ந்து கூட்டு அபிஷேகம் செய்து வழிபாடும் செய்யலாம்.காலத்தை இயக்குபவராக ஸ்ரீகால பைரவர் இருப்பதால் இந்த நட்சத்திர பைரவர் வழிபாடு ஒன்றே போதும்.நமது அனைத்து வித தோஷங்கள் நீங்கிட!!!



அதென்ன கூகுள்? கூகுள் எனில் ஒன்றுக்குப் பின்னால் நூறு சைபர்கள் போட்டால் எவ்வளவு வரும்! அவ்வளவு நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்

Sunday, June 30, 2013

25,00,000 ஆண்டுகளாக பாரத தேசத்தை வாழ வைத்து வரும் கோமாதா இனம்!!!



 

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவலபூர். இலட்சக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.

மலை, குன்று, மேடு, பள்ளம், பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு எனப் பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.

ஊரைக் கடந்து கொஞ்சத் தூரத்தில் 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.

அர்க் எனும் அருமருந்து!

"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).

22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டுப் பராமரிக்கிறோம்.

அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற்றையும்... அடிமாடுகளாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக்கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத்துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக்கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.

'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந்தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கிப் புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.

உரிய வகையில் அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறுநீரைக் காய்ச்சினால், கிட்டத்தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளியில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களுடையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.

மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"

இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடுகளை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள் என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..

விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்து விடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கியவுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"

பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!

அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்கத் தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.

உணவுச் செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும் என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்.

தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களைத் தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றைப் பேணிக்காத்து பயன்பெறலாமே!

தொடர்புக்கு: Govigyan Anusandhan Kendra, Kamadhenu Bhavan, Ghtae wada (Near bachharaj vyas chowk), Chitar oil, Mahal, Nagpur-32 .phone: 0712-2772273,2734182. Cell: 94221-01324.                  நன்றி:www.farmingnature.blogspot.in

Thursday, June 27, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்(30.6.13ஞாயிற்றுக்கிழமை) வழிபாடு!!!


நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;




பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.
                                                        26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
                                                28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.


29.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

30.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

31.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.

ஆனி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=30.6.2013 ஞாயிற்றுக்கிழமை முழுவதும் இருக்கிறது.(ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை நான்கு முப்பது மணி முதல் ஆறு மணி வரை)ஞாயிற்றுக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி :ஆடி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=29.7.13 திங்கள் மாலை 3.57 முதல் 30.7.13 செவ்வாய் மாலை 4.28 வரை அமைந்திருக்கிறது.


ஓம் சிவசிவ ஓம்