Wednesday, June 26, 2013

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!! (அவசியமான மறுபதிவு)


கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.

2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.
இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
 
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.
  விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;
20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;
29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;
15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;
25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;
11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;
21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;
22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)
9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;
19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;
4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;
15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;
30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;
13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;
14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;
30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;
9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;
6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;
22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;
5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;
21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;
1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;
12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;
இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 
ஓம்சிவசிவஓம்

Saturday, June 22, 2013

ராசிகளை சனிபகவான் கடக்கும் காலமும்;நாம் பின்பற்ற வேண்டிய பைரவ வழிபாட்டு முறைகளும்!!!



விரையச்சனி(ஏழரைச்சனியின் ஆரம்பக் கட்டம்)
          26.6.2012 முதல் 16.12.2014 வரை விருச்சிகராசி
          17.12.2014 முதல் 11.02.2018 வரை தனுசு ராசி
          12.02.2018 முதல் 15.12.2020 வரை மகர ராசி
          16.12.2020 முதல் 16.03.2023 வரை கும்பராசி
          17.03.2023 முதல் 23.02.2026 வரை மீன ராசி

மிகவும் துயரம் தரும் ஜன்மச்சனி(ஏழரைச்சனியின் உச்சகட்டம்)
 26.06.2012 முதல் 16.12.2014 வரை துலாம் ராசி
 17.12.2014 முதல் 11.02.2018 வரை விருச்சிக ராசி
 12.02.2018 முதல் 15.12.2020 வரை தனுசு ராசி
 16.12.2020 முதல் 16.03.2023 வரை மகர ராசி
 17.03.2023 முதல் 23.02.2026 வரை கும்பராசி
 24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை மீனராசி


வாக்குச்சனி/பாதச்சனி(ஏழரைச்சனியின் இறுதிக் கட்டம்)
26.6.2012 முதல் 16.12.2014 வரை கன்னி ராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை துலாம் ராசி
12.02.2014 முதல் 15.12.2020 வரை விருச்சிக ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை தனுசு ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை மகர ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு கும்பராசி


ஏழரை ஆண்டுகளில் தரும் சிரமங்களை இரண்டரை ஆண்டுகளிலேயே தரும் அஷ்டமச்சனி:
26.06.2012 முதல் 16.12.2014 வரை மீனராசி
17.12.2014 முதல் 11.02.2018 வரை மேஷ ராசி
12.02.2018 முதல் 15.12.2020 வரை ரிஷப ராசி
16.12.2020 முதல் 16.03.2023 வரை மிதுன ராசி
17.03.2023 முதல் 23.02.2026 வரை கடக ராசி
24.02.2026 முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்ம ராசி


விரையச்சனி காலத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகிவிடும்;வருமானத்திற்கும்,செலவிற்குமான இடைவெளி படிப்படியாக அதிகரித்துக் கொண்டே செல்லும்;வீண் அலைச்சல்கள் அதிகரிக்கும்;அவ்வாறு அலைச்சல்கள் வருவதற்கு நமது கவனக்குறைவே காரணமாக அமையும்.


ஜன்மச்சனி காலத்தில் உயிரைத் தவிர அனைத்தையும் இழக்கும்(தற்காலிகமாகத்தான்!) சூழ்நிலை படிப்படியாக உருவாகும்;சேமிப்புகள் கரைந்துவிடும்;கணவன் மனைவிக்குள் தவறான புரிந்து கொள்ளுதல் ஏற்பட்டு பிரியவேண்டியிருக்கும்;அடிக்கடி சண்டைகள் வரும்;நிரந்தரமான பிரிவோ,நிரந்தரமான நிம்மதியான வாழ்க்கையோ இருப்பது அரிதாக இருக்கும்;இந்த கால கட்டத்தில் சுயதொழில் துவங்கிடக் கூடாது;ஏற்கனவே செய்துவரும் தொழிலை விரிவு படுத்தாமல் இருப்பதும் அவசியம்;குருப்பெயர்ச்சி ஓரளவு நிம்மதியைத் தரும்;ஆனாலும்,நம்மைச் சுற்றியுள்ளவர்களால் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவோம்;நிரந்தரமான வேலை அமைவது அரிது;அலைந்து திரிந்து பார்க்கும் வேலையைத் தேர்வு செய்வது நன்று;நமது தனித்திறமை நமது மேலிடத்திற்குத் தெரியாமல்,வேறு யாரோ ஒருவர்/ள் தன்னுடையதாகக் காட்டி முன்னேறுவார்;நம்மால் எதுவுமே செய்ய முடியாது; தன்னைத் தானே சிருஷ்டித்துக் கொள்ளும் குணத்தின் மீது ஆளுமைத்திறன் தாக்குதல் நடைபெறும்;அவமானத்தின் முழுப்பரிமாணத்தையும்,புறக்கணிப்பின் அர்த்தத்தையும் உணரும் சூழ்நிலை இந்தக் கால கட்டம் ஆகும்.பலர் கடனால்/நோயால்/தேவையற்ற எதிர்ப்புகளால் படாத பாடு படுவர்;எப்போதும் அகலக்கால் வைக்காமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்;

வாக்குச்சனி காலத்தில் நாம் எதைப் பேசினாலும்,அது பிறரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும்;ஜன்மச்சனிகாலத்தில் ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;ஒரு சிறு செயலைக் கூட ஒரே தடவையில் செய்து முடிக்க முடியாமல் 900 நாட்கள் நகர்ந்தால் எப்படி இருக்கும்? அதே போல ஆகிவிடுமோ என்ற அச்சம் தொடரும்;பண வரவு கொஞ்சம் அதிகரிக்கும்;

அஷ்டமச்சனி காலமானது ஏழரைச்சனி முடிந்த 13 வது ஆண்டில் துவங்கும்;இரண்டரை ஆண்டுகளில் ஏழரைச்சனிகாலத்தில் தந்த அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தே ஆகவேண்டும்;இதெல்லாம் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.விதி விலக்காக ஒரு சிலருக்கு மட்டும் பொருந்தாது;ரிஷப லக்னத்தில் பிறந்து,திரிகோணத்தில் சனி இருக்க ஒருவர் பிறந்திருந்தால் அவருக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் நன்மைகளை மட்டுமே செய்யும்.இவர்கள் முற்பிறவிகளில் ஸ்ரீகால பைரவப் பெருமானை முழு முதற்கடவுளாக வழிபட்டவர்கள் ஆவர்.

ஏழரைச்சனி 26.6.2012 அன்றுடன் சிம்மராசிக்காரர்களுக்கு நிறைவடைந்தாலும்,மறுநாளே அவர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை சனிபகவான் தந்துவிட மாட்டார்;அந்த நாளில் இருந்து குறைந்தது ஒரு வருடம் கழிந்தப் பின்னரே,அவரது வயது,கல்வித்தகுதி,திறமை,தனித்திறமை,பேச்சாற்றல்,யூகிக்கும் சாமர்த்தியம் இவைகளுக்குப் பொருத்தமான வேலை/தொழில் அல்லது இரண்டையும் தருவார்;

ஏழரைச்சனி காலத்தில் சாதாரண வேலை அல்லது தொழிலில் இருக்கலாம்;ஏழரை முடிந்த ஒரு வருடத்துக்குள் சிறந்த வேலையில் சேர வேண்டும்;சேமிக்கத் துவங்க வேண்டும்;தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும்;ஒரு போதும் பிறருக்குத் தீங்கு தரக் கூடாது;ஒரு போதும் பிறர் மனதை நோகடிக்கக்கூடாது;ஒரு போதும் தவறான வழியில் சம்பாதிக்கக் கூடாது;தவறான வழியில் சொத்து சேர்க்கக் கூடாது;தவறான வழியில் பெண்களை(ஆண்களும்)/ஆண்களை(பெண்களும்) அணுகக்கூடாது;அப்படி தவறான வழியில் செல்பவர்களுக்கு தண்டனை அஷ்டமச்சனி காலத்தில் கடுமையாக இருக்கும்;அதுவரையிலும் நம் ஒவ்வொருவரின் செயல்களும்,பேச்சும்,சிந்தனையும் நமது ஜாதகத்தில் பத்தாமிடத்தில் பதிவாகிவரும்;

எனவே,அடுத்த 13 ஆண்டுகளுக்கு எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன விதமான சனிப்பெயர்ச்சிகள் வர இருக்கின்றன என்பதை தெரிவித்துவிட்டோம்;அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,தினமும் ஸ்ரீகால பைரவப் பெருமானைச் சரணடைந்து நிம்மதியும்,பணக்கஷ்டமும் இல்லாத வாழ்வைப் பெறுவீர்களாக!!!

ஓம்சிவசிவஓம்

அனுசுயாதேவியின் கற்பும்,ஆன்மீகவளர்ச்சியின் போது நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்!!!





மூவுலகிற்கும் பயணித்துக் கொண்டே இருப்பவர் நாரதமஹரிஷி! அவருக்கு ஒரு இரும்புக்குண்டு கிடைத்தது;அந்த இரும்புக்குண்டு எந்த பத்தினிப்பெண்ணின் கையில் வைத்தாலும்,அந்த இரும்புக்குண்டு உடனே உண்ணும் பொரியாக மாறிவிடும்;எனவே,நாரதர் நேராக பிரம்மலோகத்திற்குச் சென்றார்;அந்த இரும்புக் குண்டின் மகத்துவத்தை தனது தாயான கலைவாணியிடம் கூறி,அதை அவரிடம் கொடுக்கிறார்.அந்த இரும்புக் குண்டு மாறவில்லை;
பிறகு,வைகுண்டத்திற்குச் செல்கிறார்.அங்கே,மஹாலட்சுமியிடம் அந்த இரும்புக்குண்டு பற்றிய அதிசயத்தைக் கூறியவாறு,அதை அவரிடம் கொடுக்கிறார்.இரும்புக்குண்டு மாறவில்லை;இதே போல,சிவலோகத்திற்குச் சென்று அங்கே இருக்கும் மலைமகள்(பார்வதி) மூலமாகவும் சோதித்து அறிகிறார்.இரும்புக் குண்டு மாறவில்லை;
முடிவாக,பூலோகம் எனப்படும் நாம் வாழ்ந்துவரும் கர்மபூமிக்கு வருகிறார்;பல ஆசிரமங்களுக்குச் சென்று அங்கே இருக்கும் ரிஷிபத்தினிகளிடம் விளக்கம் சொல்லி,ஒவ்வொருவரிடமும் அந்த இரும்புக் குண்டினைத் தருகிறார்,அது அப்படியே இருக்கிறது;பொரியாக மாறவில்லை;


அதேபோல,அத்திரிமகரிஷி-அனுசியா தேவி தம்பதியர் வாழ்ந்துவரும் வனப்பகுதிக்கு வருகிறார்.அனுசுயா தேவியிடமும் இந்த இரும்புக் குண்டு பற்றிய விளக்கம் சொல்லி,அவரிடமும் தருகிறார்.உடனே,அந்த இரும்புக் குண்டு,பொரியாக மாறிவிடுகிறது.அந்த பொரியை நாரதமகரிஷி சாப்பிட்டுவிட்டு,அனுசுயாவிடம் ஆசி வாங்கிவிட்டுப் போய்விடுகிறார்.
நேராக,பிரம்ம லோகம் என்ற சத்திய லோகம்,வைகுண்டம்,திருக்கையிலாயம் என்ற சிவலோகத்துக்குப் பயணித்து,அனுசுயாதேவியின் கற்புத்திறத்தை விளக்குகிறார்.முப்பெரும்தேவியரான கலைமகள்,அலைமகள்,மலைமகள் மூவரும் ஒன்று கூடி ஒரு முடிவெடுக்கின்றனர்.தங்களுடைய கணவன்மார்களை அத்திரி மகரிஷி அனுசுயா தேவி வசிக்கும் ஆசிரமப்பகுதிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.எதற்காக?
தங்களை விடவும் பூலோகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பத்தினியாக இருப்பதை இம்மூவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை;எனவே,அந்த பெண்ணின் கற்புத்திறன் சிறிதாவது பழுதடையவேண்டும்.


மும்மூர்த்திகளும்(பிரம்மா,விஷ்ணு,ருத்ரன்) துறவி வேடம் பூண்டு அத்திரி மகரிஷி ஆசிரமத்தை அடைகின்றனர்; அதிதி தேவோ பவ: என்ற வேதவாக்கியத்தின் படி(இதற்கு அர்த்தம்:அதிதி=விருந்தினர்;விருந்தினர் கடவுளுக்குச் சமம்)வந்திருக்கும் மூன்று துறவிகளையும் அனுசுயாதேவி வரவேற்று உபசரிக்கிறாள்.அந்த சமயத்தில்,அத்திரிமகரிஷி அங்கே இல்லை;அந்த மூன்று துறவிகளுக்கும் தலைவாழை இலை போட்டு,அறுசுவைஉணவுகளைப் பரிமாறுகிறாள் அனுசுயாதேவி.

ஆனால்,அந்த மூன்று துறவிகளும் உண்ணும் இடத்தில் அமர்ந்தார்களே தவிர,சாப்பிட ஆரம்பிக்கவில்லை;மூன்று துறவிகளுமே ஒரே குரலில் அனுசுயா தேவியிடம், “நீ உனது கையால் உணவு ஊட்ட வேண்டும்.அவ்வாறு ஊட்டினால்தான் நாங்கள் சாப்பிடுவோம்”என்று கூறிவிட,ஒருகணம் அனுசுயாதேவி திடுக்கிட்டுப்போனார்.
உடனே,சமையலறைக்குச் சென்று,தனது தனது தவ ஆற்றலால் வந்திருப்பவர்கள் மும்மூர்த்திகள் என்பதையும்,அவர்கள் எதற்காக வந்திருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொள்கிறாள்.எனவே,தான் தவம் செய்யும் போது பயன்படுத்தும் கமண்டல நீரை எடுத்து,தனது கணவர் அத்திரிமகரிஷியை நினைத்து,அந்த மூன்று துறவிகள் மீதும் தெளிக்கிறாள்.அந்த மூவருமே ஒரு வயது குழந்தைகளாக உருமாறிவிடுகிறார்கள்.


இப்போது அந்த மூன்று குழந்தைகளுக்குமே தனது கையால் உணவு ஊட்டிவிடுகிறாள்.(நீங்கள் இந்த இடத்தில் வேறுவிதமாக படித்திருப்பீர்கள்;அதுதான் உண்மை!)
தத்தம் கணவன்மார்கள் பூமிக்குச் சென்று வெகு காலம் ஆகியும் திரும்பவில்லை என்பதை அறிந்து கலவரப்பட்ட மனதோடு கலைமகளாகிய சரஸ்வதி,அலைமகளாகிய மஹாலட்சுமி,மலைமகளாகிய பார்வதி மூவருமே அத்திரிமகரிஷி ஆஸ்ரமத்தை அடைகின்றனர்;அங்கே தமது கணவன் குழந்தையாக இருப்பது கண்டு திகைத்து,மூவருமே அனுசுயாதேவியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.அந்த கணத்தில் அந்த மும்மூர்த்திகளுமே ஒன்றிணைந்து உருவாக்கிய தெய்வமே ஸ்ரீதத்தாத்தரேயர்.


இந்த கதை புராணங்களில் வருகிறது.இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவெனில்,பொறாமை உணர்ச்சியும்,தான் என்ற அகங்காரமும்(திமிரும்) ஈரேழு பதினான்கு உலகங்களிலும் உண்டு;அதைக் கைவிட முறையான பயிற்சி எடுக்க வேண்டும்;


தினசரி ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீகால பைரவரை வழிபட்டு வருவதாலும் அல்லது தினசரி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை வழிபட்டு வருவதாலும் நமது ஆத்ம சக்தி அதிகரிக்கும்;குரு அருள்,திரு அருள்,சிவ அருள் கிட்டும்;அதே சமயம்,நமது மனம் கொஞ்ச காலம் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கும்;பிறகு,நம்மைவிட ஆன்மீகத்தில் முன்னேறியவர்களைக் கண்டு பொறாமைப்படும்;நம்மை விட ஆன்மீகத்தில் பின் தங்கியிருப்பவர்களைக் கண்டு திமிர் கொள்ளும்;பேராசைக்காரனும்,பொறாமைப்பிடித்தவனும் தான் நினைத்ததைச் சாதிக்க எதையும் செய்யத் தயங்க மாட்டான் என்பது சாணக்கிய நீதி சொல்லும் சத்திய வாசகம் ஆகும்.


நமது வேலை அல்லது தொழிலைச் செய்து கொண்டே ஆன்மீக முயற்சிகளில் படிப்படியாக முன்னேறும் போது இரண்டே இரண்டு விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்;ஒன்று முறையான தாம்பத்தியத்தை இறைவனே அனுமதிக்கிறார்;(இல்லறமல்லாமல் துறவறம் இல்லை;என்பதன் அர்த்தம் இதுதான்!)இரண்டு=நானே பெரியவன் என்ற அகங்காரம் வராமல் நமது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்;இந்த இரண்டும் நமது ஒவ்வொரு பிறவியிலும் நம்மோடு வந்தால் அடுத்த சில பிறவிகளிலேயே காம ஆசையே இல்லாத ஞானியாக(ஸ்ரீரமணமகரிஷி/சுவாமி விவேகானந்தர்) பிறக்கும் அளவுக்கு ஆன்மீகத்தில் முன்னேறிவிடுவோம்;அவ்வாறு முன்னேறிவிட்டால்,மறுபிறவி இல்லாத முக்தியை நம்மால் எட்டிவிட முடியும்.





Tuesday, June 18, 2013

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.



ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.


பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 



2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)



தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!




நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.





ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!


இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!
 
 
நன்றி:

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை

தமிழில்ச.நாகராஜன்