Sunday, April 14, 2013

வெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=பாகம் 2





ஆறு புதன்கிழமைகளின் மாலை நேரத்தில் ஸ்ரீகாலபைரவரின் அருளாற்றல் வெளிப்படுவதை தமது ஆத்மசக்தியால் நமது ஆன்மீக குரு  கண்டறிந்து நமக்கு அந்த தேவ ரகசியத்தை ஆன்மீகக்கடல் மூலமாக அருளினார்.
அவ்வாறு அருளியதன் மூலமாக ஏராளமான வாசக,வாசகிகளின் பல வருடப் பிரச்னைகள் தீர்ந்தன;கடுமையான மன உளைச்சல்கள் விலகின;இது தொடர்பாக பல வாசக,வாசகிகள் தொடர்ந்து அவரவர் அனுபவங்களை தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர்;ஒரே ஒரு புதன் அல்லது இரண்டே இரண்டு புதன் கிழமைகள் என்று ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதாலேயே எப்படியெல்லாம் இருந்த தமது நீண்டகால பிரச்னைகள் தீர்ந்தன என்பதை விவரித்த வண்ணம் இருக்கின்றனர்.அவற்றில் ஒரே ஒரு சம்பவத்தை உரியவரின் அனுமதியோடு வெளியிடுகிறோம்.

36 ஆண்டுகளுக்குப்பிறகு பேசிய அப்பாவும்,மகனும்!!!

அவருக்கு 1977 ஆம் ஆண்டு திருமணம் நிகழ்ந்தது.தனது பெற்றோரின் சம்மதத்தோடு,பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.இவரது தலைத்தீபாவளிக்கு மறு நாளில் இருந்து,இவரிடம் இவர் அப்பா பேசுவதையே தவிர்த்தார்;

இவர் மூத்தவர் என்பதால்,இவருக்குப் பிறகு தனது நான்கு சகோதரர்களுக்கும் உரிய வயதில் இவரே தகுந்த வரன் பார்த்து திருமணம் செய்து வைத்தார்;தனது சொந்தச் செலவில்! இத்தனைக்கும் இவர்களின் குடும்பத்தில் சொத்துக்களுக்கு குறைவில்லை;இருப்பினும்,தான் குடும்பத்தில் மூத்த மகன் என்ற பொறுப்பை சரியாக உணர்ந்தே செயல்பட்டார்;ஒவ்வொரு தம்பியின் திருமணத்தை முடித்து வைத்ததும்,தம்மிடம் தமது அப்பா பேசுவார் என்று ஏங்குவார் மூத்தவர்.ஆனால்,அப்பா இவரைப் பார்த்து ஒரு புன்னகை கூட உதிர்க்க மாட்டார்;
ஒவ்வொரு சகோதரனின் திருமணத்திற்கும் தனது கடந்த சில ஆண்டுகள் சம்பாத்தியத்தை செலவழித்து வர,அடிக்கடி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்.கூடவே,இவரது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.இவரது மனைவியின் சாமர்த்தியத்தால் குடும்பம் கடன் வாங்காமலேயே செயல்பட்டது.

நான்கு சகோதரர்களின் திருமணம் முடியும் வரையிலும் அமைதி காத்த இரண்டாவது தம்பியின் மனைவி,சொத்தைப் பிரிப்பதில் யுத்தத்தைத் துவக்கினார்(அந்த யுத்தத்தின் பின்னால்,இவரது தம்பி இருப்பதை யாரும் யூகிக்கவில்லை).ஒரே வருடத்தில் அனைவருக்கும் சொத்துக்கள் மூத்தவரின் அறிவாற்றலால் முறையாகப் பிரிக்கப்பட்டன;முறையாகப் பிரிக்கப்பட்டது கண்டு,இவரது அப்பாவுக்கு இவரது அறிவுசாதுரியத்தைக் கண்டு வியப்படையவில்லை;மாறாக பொறாமையே பட்டார்;நமது பாரம்பரிய முறைப்படி சொத்துக்களைப் பிரித்தாலும்,இவரது பங்கினை இவரது இரண்டாவது தம்பிக்குத் தரச் சொல்லி இவரது அப்பாவே இவரைக் கட்டாயப்படுத்தினார்.இவரும் தனது அப்பாவின் பாசம் மட்டுமே போதும் என்று தனக்குரிய பங்கினை தனது தம்பிக்கு தாரை வார்த்தார்;தம்பிக்குரிய பங்கினை மனதாரப் பெற்றுக் கொண்டார்;
இவரது அப்பா சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார்;அந்தக் கால கட்டத்தில்,இவரது இரண்டாவது தம்பி அப்பாவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார் என்பதை மற்ற சகோதரர்கள் கண்டறிந்தனர்.

1990களில் வறட்சியின் விளைவாக விவசாயம் நட்டத்தைத் தரத் துவங்கியது;எனவே,தனது அண்ணனின் மதிப்பைச் சீர்குலைக்க ஒரு திட்டமிட்டார் இரண்டாவது தம்பி;தனது அப்பாவின் பங்காக இருக்கும் விளைநிலத்தை அப்பாவே அண்ணனின் மேற்பார்வையில் ஒப்படைக்க வைத்தார். “விவசாயத்தில் வரும் நட்டத்தால் அண்ணன் தனது சொத்தினை விற்க வேண்டி வரும்;அப்பாவிடம் முறையாக கணக்கு ஒப்படைக்கவே படாத பாடு படவேண்டியிருக்கும்” என்ற மதிப்பிட்ட இரண்டாவது தம்பி இப்படி செயல்படுத்தினார்.
மூத்தவரோ நவீன மற்றும் இயற்கை விவசாய டெக்னிக்குகளைப் பயன்படுத்தி அப்பாவின் விளைநிலத்திலும்,தனது விளைநிலத்திலும் இரு மடங்கு சாகுபடியை விளைவித்தார்.தனது கணக்கு பொய்த்தது கண்டு,அப்பாவின் விளைநிலத்தை தனது நிர்வாகத்துக்கு வரும் விதமாக மாற்றினார் இரண்டாவது தம்பி.(இரண்டாவது தம்பி, அப்பாவிடம் சொன்னது: அப்பா,உங்கள் நிலத்தில் எல்லாமே நஷ்டம்;ஆனால்,அண்ணன்,அவன் விளைச்சலை உங்களிடம் உங்கள் பங்காகத் தருகிறான்;இதையெல்லாம் வேணும்ணே அண்ணன் செய்யுறான்=அப்பாவோ நேரடியாகச் சென்று விளைநிலத்தை ஒரே ஒருமுறை போய் பார்க்கவே இல்லை)அப்பாவுக்கும் மூத்த அண்ணனுக்கும் இடையே இணைப்புப் பாலம் போல செயல்பட்ட இரண்டாவது தம்பி இருவரையும் கிட்டத்தட்ட பகையாளியாகவே ஆக்கிவிட்டார்.

யாரையுமே நம்பாத இவர்களின் அப்பா,தனது இரண்டாவது மகனின் நடிப்பில் ஏமாந்துவிட்டார்;புகழ்ச்சிக்கு மயங்கும் மூத்தவர் தனது தம்பி சொல்வதெல்லாம் உண்மை என்று நம்பிவிட்டார்;இந்த சதித்திட்டம் பற்றி இவரது மற்ற சகோதரர்கள் இவரிடம் பலமுறை விளக்கியும்,இவர் தனது தம்பி அப்படிச் செய்வான் என்பதை நம்பவே இல்லை;இருப்பினும்,தமது அப்பா இப்படி மனம் மாறக் காரணம் என்ன? என்று பல ஆண்டுகளாக யோசித்திருக்கிறார்.விடை கிடைக்கவில்லை;அப்பாவிடம் நேரில் சென்று ஒரே ஒருமுறை மனம் விட்டுப் பேசியிருந்தால் தமது தம்பியின் நயவஞ்சகம் புரிந்திருக்கும்;

இந்த சூழ்நிலையில் மூத்தவரின் அனைத்து குழந்தைகளுக்கும் திருமணம் ஆகி,அவர்களுக்கும் குழந்தைகள் பிறந்து,அவர்களும் திருமண வயதை எட்டிவிட்டனர்.


நமது ஆன்மீகக்கடலை வாசித்த இவரது இல்லத்தரசி,இரண்டே இரண்டு புதன் கிழமைகள் ஸ்ரீகால பைரவர் வழிபாட்டை முறையாக செய்து முடித்திருக்கிறார்.மறுநாளே,இவரை இவரது அப்பா நேரில் வரச் சொல்லி எப்படிப்பா இருக்குறே? என்று கேட்டிருக்கிறார்.
பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமே? இவர் தனது அப்பாவின் காலைக் கட்டிக் கொண்டு அழ,அவரோ ஒன்றும் புரியாமல் ஏண்டா என்னடா ஆச்சு என்று கேட்க,வெகு நேரம் கழித்து ஏம்பா, என்னிடம் பேசவில்லை என்று கேட்க,நடந்த ஆரம்ப காலச் சம்பவங்கள் 36 வருடங்கள் கழித்து நினைவிருக்குமா?



தமிழ்நாட்டின் மக்கள் இரண்டே இரண்டு விதமாகத் தான் இருக்கிறார்கள்.


எல்லோரையும் நம்ப வைப்பதில் கில்லாடியாக இருந்து,தனது காரியத்தை கச்சிதமாகச் செயல்படுத்தும் சகுனிகள்!! எல்லோரிடமும் தனது இயல்பு குணத்தோடு இருந்து யாருடைய ஆதரவையும் பெற முடியாமல் தவிக்கும் அப்பாவி+நேர்மையாளர்கள்!!!
சகுனிகள் தனது மனைவி,மகன்,மகள் என எல்லோரிடமும் எப்போதும் நடித்துக் கொண்டே இருப்பார்கள்;இவர்களைப் பற்றி ஒரே ஒரு குறை கூட வெளியே தெரியாது;குடும்பத்துக்காக தன்னையே தியாகம் செய்வது போல காட்டிக் கொள்வார்கள்;ஆனால்,இவர்களைப் போல சுயநலவாதிகளை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது;தனது காரியம் வெற்றியடைய உடன் பிறந்தவர்களுக்கே பில்லி,சூனியம் வைப்பார்கள்;ஆனால்,இவர்களா இப்படியெல்லாம் செய்வார்கள்? என்று நம்ப முடியாத அளவுக்கு நவீனமான ஆளாக தன்னைக் காட்டிக்கொள்வார்கள்;தனக்கு ஏதாவது ஒரு அவமானம் ஏற்பட்டால் ,அதை வேறு யார்மீதாவது பழி சுமத்திவிடுவார்கள்;

அப்பாவி+நேர்மையாளர்கள் எல்லோரிடமும் உண்மையே பேசுவார்கள்;இவர்களுக்கு பொறாமைப் படத்தெரியாது;தனது சாதனைகளை பிரபலப் படுத்திடத் தெரியாது;தனது வேதனைகள்,அவமானங்களை மறைக்கவும் தெரியாது.இவர்கள் மீது ஒரு தனிப்பெரும் மதிப்பு இராது;தேவைப்படும் போது சிடுமூஞ்சிகளாகவும் இருப்பார்கள்;இவர்கள் பில்லி,ஏவல்,சூனியம் இவைகளை நம்பமாட்டார்கள்;தமது நேர்மையே இவைகளிடமிருந்து பாதுகாக்கும் என்று அழுத்தமாக நம்புவார்கள்;யார் எதைக் கொடுத்தாலும் வாங்கிச் சாப்பிடுவார்கள்;தம்மோடு பழகுபவர்களில் யார் நல்லவர்கள் போல நடிப்பவர்கள்,யார் தம் மீது அக்கறையோடு இருப்பவர்கள் என்று பிரித்துப்பார்க்கத் தெரியாது.அப்படியே தெரிந்தாலும்,அவர்களைப் பின்பற்றி தமது வாழ்க்கையை பாதுகாப்பாகவும்,சிறப்பாகவும்,வளமாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற சுயநலம் சிறிதும் இராது;


ஓம்சிவசிவஓம்

Saturday, April 13, 2013

விஜய புத்தாண்டின் முதல்நாளில் நாம் செய்ய வேண்டியது. . .




14.4.13 ஞாயிற்றுக்கிழமை தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.ஜோதிடரீதியாகப் பார்க்கும் போது,ரவி என்ற சூரியன் பனிரெண்டு ராசிகளையும் ஒரு சுற்று சுற்றிவிட்டு மீண்டும் மேஷ ராசிக்குள் நுழையும் நாள் இது.சூரியன் ஒரு ராசிக்குள்  நுழையும் நாளில் சூரியனின் சக்தி பல மடங்கு வெளிப்படும்.இந்த நாளில் நாம் செய்யும் இறைவழிபாடு,தியானம் நமக்கு அளவற்ற சக்தியைத் தரும்.இதன்மூலமாக படிப்படியாக நமது கடுமையான கர்மவினைகள் தீரத் துவங்கும்;


கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த புண்ணியச்செயல்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட திறமைகள்,கல்வித்தகுதி,சாதனைகள்,சொத்துக்கள்,மனைவி,புகழ் அமைந்திருக்கிறது;அதே போல,கடந்த ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவச் செயல்கள்,திமிர்த்தனங்களுக்கு ஏற்ப இப்பிறவியில் நமக்கு குறிப்பிட்ட அவமானங்கள்,குறைகள்,ஏக்கங்கள்,கடன்/நோய்/எதிரி/தோல்விகள் உருவாகின்றன.இதைச் சரி செய்ய நாம் எந்த சித்தரை வணங்கினாலும்,அவர் நம்மை ஆசிர்வாதிப்பார்;அவ்வளவுதான்!நமது கர்மவினைகளை நாமே நமது சுய முயற்சியில் போராடி தீர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்;அவ்வாறு குறைக்க உதவுபவையே அன்னதானம்,ஆடைதானம்,ஓம்சிவசிவஓம் ஜபித்தல்,காலபைரவ மந்திரம் ஜபித்தல்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்தல்,இவைகளை நேரடியாகவோ இணையம் மூலமாகவோ பரப்புதல் ஆகும்.


எமது அனுபவப்படி,இந்த விஜயவருடத்தின் முதல் நாள் 14.4.13 ஞாயிறு வருகிறது.இன்று முதல் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிகராசி,மீன ராசி,மேஷ ராசியினர் ஸ்ரீகால பைரவர் வழிபாடு மற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் துவங்குவது நன்று.இந்த ராசிக்காரர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டாம்.ஏனெனில்,இந்த ஐந்து ராசிக்காரர்களும் சனிபகவானின் பாதிப்பில் படாத பாடு பட்டு வருகிறார்கள்;இதிலிருந்து மீள சனிபகவானின் குருவாகிய ஸ்ரீகாலபைரவரை தினமும் வழிபட்டு வருவது அவசியம்.


இதில் கன்னி ராசி,மீன ராசியினர் 16.12.2014 வரையிலும்;துலாம் ராசி,மேஷ ராசியினர் 1.7.2017 வரையிலும்;விருச்சிகராசியினர் 2021 வரையிலும் தினமும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதே நன்று.மிக எளிமையாக வீட்டில் ஒம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்பதை தினமும் 108 முறை ஜபித்து வருவதும்;ஓவ்வொரு சனிக்கிழமையும் அருகில் இருக்கும் பழமையான சிவாலயம் சென்று அங்கே அவரவர் ராசிப்படி நாம் முன்பே வெளியிட்டபடி ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து வருவது அவசியம்.மேலும்,ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருவதும் அவசியம்.
இந்த ராசிகளைத் தவிர,பிற ராசியில் பிறந்தவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவது நன்று.ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும் காலங்களில் பவுர்ணமி அல்லது திருவாதிரை நாட்களில் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு விடுமுறை விட்டு,அன்று மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றியை எழுதுவது நன்று.


இதுவரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தவர்கள்,இடையில் பல்வேறு காரணங்களால் ஜபிக்க முடியாமல் போயிருக்கலாம்;அவர்கள் அனைவரும் இந்த புத்தாண்டு முதல் நாளில் மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பது நன்று.

இதுவரை ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தவர்கள் ஏதாவது காரணத்தால் நிறுத்தியிருந்தால் இன்று (14.4.13) முதல் மீண்டும் உரிய பைரவ வழிபாட்டைத் துவக்குவது அவசியம்.
இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் எத்தனை பேர்களுக்கு ஆன்மீகக்கடல் தெரிந்திருக்கும்? நமக்கு தெரிந்திருக்கிறது!


ஆன்மீகக்கடலின் ஜோதிட மற்றும் ஆன்மீக ஆலோசனைகளில் ஏதாவது ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் பின்பற்றத் துவங்கியிருந்தாலும் ஆன்மீகக்கடல் உங்களது சிறந்த ஆன்மீக வழிகாட்டி என்பதை புரிந்திருப்பீர்கள்;நாம் முதலில் நமது ஆத்மசக்தியை அதிகரிப்போம்;நம்மைப் பார்த்து,கவனித்து,நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பிறகு நம்மோடு கைகோர்க்கட்டும்!!!


ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஓம்சிவசிவஓம்

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

அனுபவம் நிறைந்த வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர்கள்,சென்னை


வாஸ்து பகவான் (புருஷன் ) என்பவர் யார் ?



சிவனுக்கும் அந்தகன் எனும் அசுரனுக்கும் சண்டை நடந்தது ,அப்போது ஈசன் மிகவும் கோபத்துடன் சண்டையிடும் வேளையில் அவர் உடலில் இருந்து விழுந்த வியர்வை துளி பூமியில் பெரிய மனித உருவம் கொண்ட உடலாக தோன்றியது எனவும் அவனுக்கு தங்க முடியாத பசி ஏற்ப்படதாகவும் , அவன் தேவர், மனிதர், அசுரர் என அனைவரையும் மேலும் பூமியில் உள்ள அனைத்தையும் பிடித்து உண்ண ஆரம்பித்தான்.
உடனே அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.

ஈசன் அனைவரின் விருப்பபடி அந்த மனித உருவத்தை பூமியின் மேல் குப்புற தள்ளி மண்ணை பார்த்து அந்த மனித உருவம் படுத்திருகுமாறு தூங்க வைத்து அவன் மீது 45 தேவதைகளையும் காவலுக்கு வைத்து வருடத்தின் நான்கு பருவகாலத்திலும் ஒரு பருவத்திற்கு மூன்று முறை (மாதத்திற்கு ஒரு முறை ) விழிக்கும் போது வீடு,மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மனை பூஜை செய்வதின் மூலம் அதை கட்டுபவர்கள் தரும் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பசியை போக்கி கொள்ளும் படி ஈசன் பணித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வாஸம் செய்ய இடம் தருவதால் அவனை வாஸ்து புருஷன் (மனையின் தலைவன் )என்று பிரம்மாவால் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .         

வாஸ்து என்பது அறிவியலா ?

ஆமாம் வாஸ்து என்பது முழுமையான அறிவியலே,
வாஸ்து பகவான் எனும் உருவகம் கூட முழுமையான அறிவியலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது  வாஸ்து என்பது ஒரு வடமொழி சொல் நாம் வசிக்கும் இடம் வாஸஸ்தலம் எனப்படும் இந்த வார்த்தையில் இருந்து உருவானதாக சிலர் கூறுகிறார்கள், வேறு சிலரோ வாஸ்தவம் என்ற சொல்லில் இருந்து வந்ததாக கூறுவார் காரணம் வாஸ்தவம் உண்மை என்று பொருள்படும் . ஆக நம் முன்னோர்கள் தான் உணர்ந்ததை உதாரணத்துடன் சொல்ல வார்த்தை கிடைக்காமல் கூறியிருக்கலாம்.
வாஸ்து என்பது எதை அடிப்படையாக கொண்டது என ஆராய்ந்தால் காந்த அலைகளின் அடிப்படையே என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தில் இருந்து வரும் காந்த அலைகள் பூமியின்  மீது நம் கண்களுக்கு புலப்படாத வகையில்  மழை போன்று பெய்து கொண்டே உள்ளது.இந்த காந்த அலைகள் வெவ்வேறு கோள்கள் ,நட்சத்திரங்கள் மற்றும் சூரியன்கள் போன்றவைகள் பிரபஞ்சத்தில் சுழலும் போது வெளிப்படும் காந்த அலைகளே பூமியின் மீது பெய்து கொண்டே உள்ளது. இந்த காந்த அலைகள் பிரபஞ்சத்தில் இருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருப்பதால் அவை சுழன்று ,பயணித்து ,கரைந்துகொண்டே தென் துருவத்தில் இருந்து வடதுருவத்தை நோக்கி பயணிக்கிறது. நாசா வும் பூமியின் மீது தென் துருவத்தில் இருந்து வடக்கு நோக்கி பரவும் காந்த அலையின் படத்தை வெளியிட்டு உள்ளது.
 http://cosmicview.qwriting.org/archives/tag/magnetic-fields 
அது போல் இந்த காந்த ஓட்டத்தில் தடை வரும்போது நாம் செய்யும் செயலில் தடை ,உடல்நலம் பாதிப்பு பொருள் வரவு தடை போன்றவைகள் வருகின்றன

வாஸ்து பகவானின் உருவத்தின் காரணம் 


வாஸ்து பகவானை மனித உருவமாக சித்தரித்து இருப்பதற்கு காரணத்தை ஆராயிந்து பாரத்தால் மிகவும் பிரம்மிப்பாக இருக்கும் நாம் வசிக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைகளை ஆராய்ந்தோமானால் ஒரு மனிதனை வாஸ்து பகவான் போல குப்புற படுத்து இருப்பதாக பார்த்தோமானால் வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ள இடம் அந்த பகுதியில் வரும் மனித உறுப்போடு தொடர்பு உள்ளதாக இருக்கிறது. எனவே இந்த ஒப்பீடு படிதான் வாஸ்து பகவானை அமைத்தனர் .
காரணம் ஆரோக்கியம் தான் மிகபெரிய செல்வம், ஆரோக்கியம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை ,ஆரோக்கியமாக இருந்தால் நன்றாக சிந்திக்க முடியும்,நல்லவற்றை செய்யமுடியும் .தவறு செய்தால் அது ஆரோக்கிய குறைபாடே ,சரியான வைட்டமின் மூளைக்கு செல்லாததால் அவன் தவறு செய்வான் தண்டனை பெறுவான்                                 பத்து வருட அனுபவமுள்ள வாஸ்து நிபுணர் திரு.பழனியப்பன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.உங்களுடைய வீடு,தொழிலகங்கள்,தொழிற்சாலைக்கு வாஸ்து பார்க்க இவரை அணுகலாம்.கட்டுமானத்தை இடிக்காமல் வாஸ்து தோஷத்தை நிவர்த்தி  செய்வதில் வல்லுநராகிய இவரது செல் எண்;9941474877

Friday, April 12, 2013

தீராத கடன்களைத்தீர்க்க உதவும்(விஜய) தமிழ்ப்புத்தாண்டு வழிபாடு!!!








சூரியனுக்கு மிக அருகில் பூமி வரும் மாதமே சித்திரை ஆகும்.இந்த வானியல் பேருண்மையை டெலஸ்கோப்,ரேடியோ டெலஸ்கோப்கள் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது தமிழ் முன்னோர்களாகிய சித்தர் பெருமக்கள் மூலிகைகளின் துணை கொண்டு கண்டுபிடித்துவிட்டனர்;அதனால் தான் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று பல லட்சம் ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.


எதிர்வரும் புத்தாண்டு, கிறிஸ்தவத் தேதியின்படி 14.4.13 ஞாயிற்றுக்கிழமையன்று உதயமாகிறது.இந்த தமிழ் வருடத்தின் பெயர் விஜய ஆகும்.இது தமிழ் வருடத்தின் 27 ஆம் ஆண்டு ஆகும்.



இந்த தமிழ்வருடப்பிறப்பன்று மாலை ஆறு மணிக்கு மேல் பத்து மணிக்குள் நாம் சிங்கம்புணரியில் அமைந்திருக்கும் முத்துவடுக சித்தரின் ஜீவசமாதிக்கு வந்துவிடுவோம்; மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை;தேங்காய்,வாழைப்பழங்கள் ஆறு,நெய்தீபம்,ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,பால்,வெற்றிலையும் கொட்டைப்பாக்கும் நமது ஊரிலிருந்தே வாங்கி வருவோம்;14.4.14 ஞாயிறு நள்ளிரவு பூஜைக்கு இவைகளைத் தந்து,அபிஷேகத்தில் கலந்து கொள்வோம்;பிறகு,அங்கேயே தூங்குவோம்;


(ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இப்படித்தான் இங்கே பூஜை நடைபெற்று வருகிறது;பூஜையின் ஆரம்பத்தில் இரவு ஒன்பது மணியளவில் இங்கே அன்னதானம் நடைபெற்றுவருகிறது)

குறைந்தது ஒரு வருடம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோர்,குறைந்தது ஒரு வருடம் வரை வாரா வாரம் அல்லது தினமும் ஸ்ரீகால பைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்வோருக்கு அந்த இரவுத்தூக்கத்தில் முத்துவடுகசித்தரின் தரிசனமும்,ஆசிர்வாதமும் கிட்டும்;இந்த தமிழ்ப்புத்தாண்டில் இந்த ஜீவசமாதிக்கு வருகை தருவோர் அனைவரின் கடன் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.விடிந்ததும்,வேறுஎந்தக் கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்வோம்;இதன் மூலம் நாம் நேற்று நள்ளிரவு(14.4.13 நள்ளிரவு) முத்து வடுக சித்தரிடம் வேண்டிய பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்.


மிகப்பெரிய அளவில் கடன்கள் தொல்லையால் அவதிப்படுவோர்,இந்த ஜீவசமாதிக்கு தொடர்ந்து ஐந்து பவுர்ணமிகளுக்கு வருகை தர வேண்டும்.வரும்போது எலுமிச்சை மாலை அல்லது மல்லிகைப்பூக்களால் மட்டும் கட்டப்பட்ட மாலை,பால் போன்றவைகளை வாங்கிக் கொண்டு வர வேண்டும்;நள்ளிரவு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு கலந்து கொள்வதன் மூலமாக முத்து வடுகசித்தரின் அருளாசி கிட்டும்;எப்பேர்ப்பட்ட கடனாக இருந்தாலும் வெகு எளிதாகவும்,வெகு விரைவாகவும் தீர்ந்துவிடும்.


சிங்கம்புணரிக்குச் சென்றடையும் வழி:மதுரைக்குத் தெற்கே இருந்து வருபவர்கள்,மதுரை மேலூரைச் சென்றடைய வேண்டும்;மேலூரில் இருந்தும்,மாட்டுத்தாவணியில் இருந்தும் சிங்கம்புணரிக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.தூரம் 28 கி.மீ.


மதுரைக்கு வடக்கே இருந்து வருபவர்கள் கொட்டாம்பட்டியில் இறங்க வேண்டும்;அங்கிருந்து சிங்கம்புணரிக்கு மினி பஸ்கள் அடிக்கடி இருக்கின்றன;இங்கிருந்து ஏழு கி.மி.தூரம் தான்!


மதுரையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருப்பத்தூர் செல்ல வேண்டும்.திருப்பத்தூரில் இருந்து சிங்கம்புணரிக்கு அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன;இங்கிருந்து சிங்கம்புணரி 25 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.இதுவும் ஒரு வழி!


மிக எளிய வழி எதுவெனில்,மதுரை மேலூர் வந்தடைந்து,இங்கிருந்து சிங்கம்புணரி செல்வது மட்டுமே!!!


சிங்கம்புணரி சிறிய ஊர்;இங்கிருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் முத்துவடுக சித்தர் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கே குளிக்கும்,கழிப்பிட வசதிகள் இல்லை;ஆனால்,சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் தனியார் தங்கும் விடுதிகள் ஒருசில இருக்கின்றன;


சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் இறங்கி வாத்தியாரய்யா சமாதி என்று விசாரித்தால் வெகு விரைவில் முத்துவடுக சித்தர் ஜீவசமாதியைச் சென்றடையலாம்.




ஓம்சிவசிவஓம்

நமது தினசரி வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமைகள்=3




கோவில்களில் தினசரிப் பத்திரிகைகள்,வார இதழ்கள்,மாத இதழ்களின் பக்கங்களை சதுரமாக கிழித்து வைத்திருக்கின்றனர்;நாம் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்ததும்,பூசாரி தீபாராதனை காட்டுவார்;அப்போது அந்த தீபாராதனை மூலமாக நமது கோரிக்கைகள் மூலஸ்தானத்தில் இருக்கும் கடவுளின் திருவடியைப் போய்ச் சேரும்;பிறகு,நம் ஒவ்வொருவரும் பூசாரி/பட்டர்/சிவாச்சாரியார் விபூதி,குங்குமம்,மஞ்சள் காப்பு,சந்தனம் தருவார்;அதை நாம் அங்கே கன கச்சிதமாகக் கிழித்து வைக்கப்பட்டிருக்கும் சதுரகாகிதத்தில் கொட்டி அதை மடித்து வீட்டுக்குக் கொண்டு செல்வோம்;அப்போது அந்த காகிதத்தில் என்ன அச்சடிக்கப்பட்டிருக்குமோ அதை ஒருமுறை மனதால் வாசிப்போம்;அந்த மனதால் வாசிப்பதும் அந்த விபூதி,சந்தனம்,குங்குமம்,மஞ்சள் காப்பில் பதிவாகிவிடும்;இதனாலும் நமது கோரிக்கைகள் நிறைவேறத் தாமதமாகிறது என்பதை நமது ஆன்மீக குரு கண்டுபிடித்திருக்கிறார்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
நமது பூமிக்கு மேலே குறிப்பிட்ட கி.மீ.உயரத்தில் ஆகாய ஏடு என்று ஒன்று உள்ளது;அங்கே நமது தலைவிதி எழுதப்பட்டுள்ளது;அந்த தலைவிதியை நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பது நவக்கிரகங்களின் கதிர்வீச்சுகள் ஆகும்.இதன்படி ஒவ்வொருவருக்கும் தினமும் சாதனை,வேதனை,அவமானம்,அவமரியாதை,புகழ் என ஏதாவது ஒன்று மாறி மாறி வருகிறது.இதை சில நொடிகளில் மாற்றும் சக்தி நாம் வழிபடும் மகான்களுக்கு உண்டு;அந்த மகான்களின் சீடராக நாம் முற்பிறவிகளில் இருந்தால் இப்பிறவியில் அந்த மகானை மட்டுமே வழிபட்டுக்கொண்டே இருப்போம்;நமது வழிபாடு/பிரார்த்தனை/நாம சங்கீர்த்தனம் அவரைச் சென்றடைந்தால்(இதற்கு சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும்) அவர் நமது தலைவிதியை மாற்றுவார்;ஆனால்,ஓரளவுக்கு மட்டுமே மாற்றுவார்;
கூடவே,தினசரி ஓம்சிவசிவஓம் அல்லது ஸ்ரீகால பைரவர் மந்திர ஜபம்(பைரவ சஷ்டிக் கவசம்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணபைரவரின் போற்றிகள்/கால பைரவரின் பாடல்கள்) செய்தால் அந்த ஆகாய ஏட்டில் இருக்கும் நமது அனைத்து துயரங்களையும்,வர இருக்கும் அவமானங்கள்,துக்கங்கள்,சோதனைகளையும் அழித்துவிட முடியும்.அதற்காகத் தான் ஒவ்வொரு அமாவாசை,பவுர்ணமி,தமிழ் மாதப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,தேய்பிறை அஷ்டமி போன்றவைகளை முன்கூட்டியே குறிப்பிட்டு தொடர்ந்து பதிவுகளை எழுதி வருகிறோம்.இதன்மூலமாக நாம் நிம்மதியாகவும்,நோய்/கடன்/எதிரி/துயரங்களை படிப்படியாக ஆனால் நிரந்தரமாக நீக்கி மகிழ்ச்சியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழ முடியும்.ஏனெனில்,அந்த ஆகாய ஏடு நாம் வழிபடும் காலபைரவரின் கையில் இருக்கிறது;காலச் சக்கரத்தின் ஒருபகுதியே அது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தமிழ் சினிமாக்களில் நாம் ஒரு காட்சியைப்பார்த்திருப்போம்;கதாநாயகி குளிப்பதை கதாநாயகன் ‘பார்த்துவிடுவான்’;அதனாலேயே,அந்த கதாநாயகியை,கதாநாயகன் திருமணம் செய்து கொள்வான்;இந்த மாதிரியான காட்சியமைப்பு 1990 வரை தான் அதிகம் வந்திருக்கிறது;இப்போது அப்படியில்லை;இந்த காட்சியமைப்பு மூலமாக நமக்கு உணர்த்துவது என்னவெனில், “ஒரு பெண்ணை முழுமையாக பார்க்கும் தகுதி அவளது கணவனுக்கு மட்டுமே உண்டு”.
ஆனால்,மேற்கு நாடுகள்,அதன் மதங்கள்,சித்தாந்தங்கள்,அதன் செயல்பாடுகள் இந்த ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்க்கை தர்மத்துக்கு எதிராகவே இருக்கிறது.நமது இந்து தர்ம நீதி நூல்கள் நெடுகத் தேடினால்,அவர்கள் சொல்லும் நீதி இதுதான்:ஒரு பெண்ணின் மனதில் ஒருவன் காம இச்சையைத் தூண்டிவிட்டால்,அவனே அவளுக்கு கணவனாக வேண்டும்;ஒரு சமுதாயத்தை/நாட்டை ஒரு குறிபிட்ட குழுவினர் காம இச்சையைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டால் அந்த குழுவினர் மகத்தான அழிவை சந்திப்பார்கள்;இதற்கு பரிகாரமே கிடையாது;

இன்றோ,இணைய சர்வர்களில் ஹோஸ்டிங் செய்யப்படுவது காமவெறியைத் தூண்டும் இணையதளங்களே அதிகம்;இந்த இணையதளங்கள் அனைத்தும் மேல்நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பார்க்கப்படுகின்றன;உலகின் அனைத்து மதங்களையும் அழிக்கவும்,உலகம் முழுவதும் கிறிஸ்தவம் பரவுவதற்கும் உலக வல்லரசுகளின் திட்டமிட்ட மற்றும் ஒருங்கிணைந்த செயல்களில் இதுவும் ஒன்று;இதனால்,ஐரோப்பாவும்,அமெரிக்காவும் வெகுவிரைவில் மீளமுடியாத சிக்கல்களைச் சந்திக்கும்;இந்த நூற்றாண்டின் பிற்பாதியில் பரமஏழைநாடுகளாகி விடும்;அவர்களின் மதங்களின் நிலையும் அதோகதிதான்!

எனவே,நமது தாம்பத்தியம் பற்றிய வீடியோ எடுத்து வைத்திருந்தால் அதை உடனே அழித்துவிடுவோம்;அந்த மெமரிக் கார்டையும் ஒடித்துவிடுவது நல்லது.(ரெக்கவரி சாஃப்ட்வேரின் மூலம் அழிப்பதை எடுப்பதே செல்போன்/கணினி சர்வீஸ் மையங்களின் வேலையே!!!)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சினிமா,டிவிக்களில் முன்பெல்லாம் கவர்ச்சி நடிகைகள் மட்டும் அரைகுறை ஆடையணிந்து கவர்ச்சி காட்டினர்;அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்திலிருந்து கதாநாயகியே தன்னை ‘உரித்து’ காட்ட ஆரம்பித்துவிட்டனர்;அதிலும் தொப்புள் தெரிய ஆடை அணிவதை தேசியமயமாக்கியதே இம்மாதிரியான திரைப்படங்களே!
ஒருபோதும் பெண்கள் தொப்புள் தெரிய ஆடை அணியக்கூடாது என்று இந்து தர்மம் தெரிவிக்கிறது.பெண் இனமே மனோரீதியில் பலவீனமான இனம்(இப்போதெல்லாம் அப்படி இல்லை என்பது தனிக்கதை!).கர்ப்பிணிகள் ஒருபோதும் மரண ஊர்வலத்தை வேடிக்கை பார்க்கக் கூடாது என்பதும் இந்து தர்மக் கோட்பாடுகளில் ஒன்று ஆகும்.
ஏனெனில்,ஒருவர் இயற்கையான முறையில் இறந்துவிட்டால்,அவர் இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரையிலும் அவரது ஆத்மா/ஆவியானது தனது வீட்டைச் சுற்றிச் சுற்றி வரும்.தனது உடலுக்குள் புகுந்துகொள்ள முயலும்;16 ஆம் நாள் தான் தான் ஒரு நீண்ட(ஒரு வருட) பயணம் செய்ய வேண்டிய நிலையை உணரும்;ஆமாம்! 16 ஆம் நாளில் இருந்து அந்த ஆத்மாவை அவரது பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து எமதூதர்களோ அல்லது சிவ தூதர்களோ அல்லது விஷ்ணு தூதர்களோ வந்து அழைத்துச் செல்வார்கள்.இந்த காலகட்டத்தில்,தொப்புள் தெரிய ஒரு பெண்/கர்ப்பிணி அந்த மரண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்தால் அந்த ஆவி/ஆத்மாவானது  அவளது தொப்புள் வழியாக அவளது உடலுக்குள் நுழைந்து விடும்.கர்ப்பிணி எனில்,அவளது கருவுக்குள் நுழைந்து தங்கிவிடும்.இங்கே சில வெளியிடமுடியாத ரகசியங்கள் உண்டு;ஆவியுலக ஆராய்ச்சியாளர்களிடம் இதற்கான முழு பதில்களும் கிடைக்கும்;ஆனால்,நீங்கள் கேள்விப்படுவதை ஒருபோதும் முகநூலிலோ,வலைப்பூவிலோ எழுதிவிடாதீர்கள்;அது தேவரகசியம்!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
போர் அல்லது அடிதடி அல்லது கலவரம் அல்லது தொழிற்சாலை விபத்து அல்லது தற்கொலை மூலமாக இறப்பவர்களின் ஆத்மா இறந்த இடத்திலேயே இருக்கும்.அந்த ஆத்மாவுக்கு முறையான மரணம் வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ அத்தனை ஆண்டுகள் வரை அதே இடத்தில் இருக்கும்.அந்த ஆத்மாவுக்கு ஒவ்வொரு வேளையும் பசிக்கும்;ஆனால்,சாப்பிட முடியாது;தாகம் எடுக்கும்;ஆனால் தண்ணீர் குடிக்க முடியாது;நமது ராசிக்கு ராகு அல்லது கேது வரும்போது,இந்ஹ ஆத்மாக்கள் நமது உடலுக்குள் புகுந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும்;இதில் பெரும்பாலும் ஆண்களை பெண் ஆத்மாவும்,பெண்களை ஆண் ஆத்மாவும் பீடிக்கும்;சில சமயம் ஒரு ஆணை ஒன்றும் மேற்பட்ட ஆத்மாக்களும்,ஒரு பெண்ணை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆத்மாக்களும் பிடிப்பதுண்டு;இதை ‘பேய் பிடித்தல்’ என்று கூறுவர்.மாநகரங்களிலும் இது சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது.வாடகைவீடுகளில்/குடியிருப்புகளில் தற்கொலை செய்தால் உரிய பரிகாரம் செய்து அந்த ஆவியை ஹவுஸ் ஓனர்கள் துரத்துவதில்லை;அப்படியே அடுத்து வருபவர்களுக்கு வாடகைக்கு விட்டுவிடுவதுண்டு;இதனால்,கன்னிப்பெண்களோ,இளைஞர்களோ அந்த தற்கொலை ஆத்மாக்களிடம் சிக்கிக் கொள்வதுண்டு;அடிக்கடி தற்கொலை எண்ணம் அவ்வாறு பீடித்தவர்களுக்கு வரும்;இவர்களால் வெகுநேரம் ஆளுயரக் கண்ணாடியைப் பார்க்க முடியாது;அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் மனநிலையில் விபரீத எண்ணங்கள் உருவாகும்;அருந்ததி,மாவீரன் போன்ற படங்களில் காட்டப்படும் காட்சியமைப்புகள் தொன்னூறு சதவீதம் உண்மையே! மீதி பத்து சதவீதம் திரைக்கதைக்காக பொய்களைக் கலப்பதுண்டு.
தற்கொலை/கொலை செய்யப்பட்ட ஆத்மாக்களுக்கு முறைப்படி மரணம் வரும் நாளில் அவர்களைத் தேடி எமதூதர்கள் வந்து அழைத்துச் செல்வர்;அவ்வாறு அழைத்துச் செல்ல குறைந்தது ஓராண்டு அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் ஆகும்.இங்கிருந்து கன்னிராசி மண்டலத்தில் அமைந்திருக்கும் எமலோகத்திற்கு ஒரு வருடம் வரை பயணிப்பார்கள்;அங்கே சென்று,இவர்களது பாவ புண்ணியக் கணக்கு வாசிக்கப்பட்டு,இவர்களுக்கு மறுபிறப்போ,மோட்சமோ வழங்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் ஒதுக்கப்படுவர்;அங்கே கொதிக்கும் அறையில் அல்லது குளிர்ந்த அறையில் அனுப்பி வைக்கப்படுவர்;அவ்வாறு ஒரு பரம்பரையில் ஐந்து பேர்களுக்கு மேல் வந்துவிட்டால் நமது பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு மூன்று ,ஐந்து,ஒன்பதாம் இடங்களில் ராகு அல்லது கேது வந்து நிற்கும்.இதுவே பித்ரு தோஷம்!!!
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் ஒருவருக்கு பித்ரு தோஷம் இருக்கிறது.பித்ரு தோஷத்தை நீக்காவிடில்,நீங்கள் இந்த பித்ரு தோஷத்தை நீக்கும் வரை செய்த அன்னதானம்,கோவில் கட்டுதல்,ரத்ததானம்,கல்வி தானம்,புண்ணியங்கள் எதுவும் உங்களை வந்து சேராது;எல்லோருக்கும் உதவி செய்வீர்கள்;உங்கள் உதவியால் முன்னேறியவர்கள்,உங்களது வளர்ச்சியை தடுப்பார்கள்;நன்றியுணர்ச்சியைக் காட்ட மாட்டார்கள்;நீங்களே ‘நமது நேர்மையே நம்மை சாதிக்க வைக்கும்;நமக்குத் தேவையான அனைத்தையும் தரும்’ என்று கற்பனையில் வாழ்ந்து கொண்டே வர வேண்டியதுதான்.பித்ருதோஷம் நீங்கிட நமது மஹாவில்வத்தை  தொடர்பு கொண்டு,ஜோதிட ஆலோசனை பெறுவது நல்லது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஹிப்னாட்டிசம்,மெஸ்மரிசம்,ரெய்கி போன்றவைகளை மேல்நாட்டினர் கண்டுபிடித்ததாக பீற்றிக் கொள்கின்றனர்.அது முழுத் தவறு.மேல்நாட்டினர் இங்கிருந்து திருடிச் சென்ற ஓலைச்சுவடிகளில் இருந்து ‘கண்டுபிடிக்கப்’பட்டவையே அவை;அந்த ஓலைச்சுவடிகளில் அவை நயன சல்லியம்,நயன ஒட்டியம் என்ற தலைப்பில் இருந்திருக்கின்றன.இதே போல் ஏராளமான நமது அறிவுச் செல்வங்களை கிறிஸ்தவ ஆங்கிலேயன் மூன்று கப்பல்களில் திருடிச் சென்றுவிட்டான்;அதே சமயம்,நமது தமிழ் இலக்கியங்கள்,சித்தர் பாடல்கள்,சித்த வைத்தியம்,பிராணயாமம் போன்றவைகளின் முக்கியத்துவத்தையும்,பெருமைகளையும் நாம் அறியாதபடி நமது கல்வித் திட்டத்தை மாற்றியமைத்துவிட்டான்;நமது பண்பாடு தழுவிய பாடத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர நமது மாநில,மத்திய அரசுகளுக்கு நேரமில்லை;ஏனெனில்,பாடத்திட்டத்தை வடிவமைக்கும் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் கொள்கைகளால் தயார் செய்யப்பட்டவர்களே!!! இதே நிலைதான் பத்திரிகைகளில் முக்கிய இடங்களில் பணிபுரிபவர்களும்!!!
ஓம்சிவசிவஓம்

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்


உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!
பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.
அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.
இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!
விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.
கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவரில்’ (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.
இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். “தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!
அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-”மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை – தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக – அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.”
அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை – நடனத்தை – சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
“நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்.”
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)
செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள் =அவசியமான மறுபதிவு

:-

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;

அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.

ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.

ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.

ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?

இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.

ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:

தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு

இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.

20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.

ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்

ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்