Friday, March 8, 2013

சிவராத்திரியன்று(10.3.13)இரவில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்!!!



ஒவ்வொரு தமிழ் ஆண்டும் வரும் மாசி மாதத்து சிவராத்திரியே மஹாசிவராத்திரி எனப்படும்.இந்த நன்னாளில் மட்டும் இரவில்,நமது வீட்டில் ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே,பத்தாயிரம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.பழமையான ஆலயங்களில் அல்லது மலைமீதிருக்கும் ஆலயங்களில் அல்லது பழமையான ஜீவசமாதிகளில் ஒரே ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ஒரு லட்சம் தடவை ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.



அதுவும் நமது குலதெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர்களின் ஜிவசமாதிகளில் சிவராத்திரி இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப ஆற்றலால் நமது குலதெய்வத்தின் சக்தி பலகோடி மடங்கு அதிகரிக்கும்;நமது ஆத்மபலமும் அதிகரிக்கும்.குலதெய்வம் தெரியாதவர்கள் அருகில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதியில் ஜபிப்பது நல்லது.



இந்த நந்தன வருடம்,சிவராத்திரி மாசி 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(10/3/13) அன்று இரவு வருகிறது.இந்த நாளில் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரையிலும் நமது குல தெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர் ஜீவசமாதி அல்லது சதுரகிரி அல்லது அண்ணாமலை கிரிவலப்பாதை அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது நமது வீட்டு பூஜையறையில் கிழக்கு நோக்கி அமரவேண்டும்;ஒரு மஞ்சள்துண்டை விரித்து,அதற்குள்ளாக அமர்ந்து கொள்ள வேண்டும்;இருகைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்;முதலில் நமது குலதெய்வத்தை நினைக்க வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்);

 பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு,நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்;

(ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவாய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்) பிறகு ஓம்சிவசிவஓம் ,ஓம்சிவசிவஓம் என்று வேகமாக ஒப்பிப்பது அல்லாமல்,மெதுவாக ஜபிக்க வேண்டும்.ஜபத்தின் முடிவில்

ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஒம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ
ஓம் காகாசிவமே நமஹ

என்று ஜபித்துவிட்டு,ஜபத்தை முடிக்க வேண்டும்.ஒருவேளை இந்த மூன்றுமணி நேரமும் ஜபிக்க முடியாவிட்டால்,10/3/13 ஞாயிறு நள்ளிரவு 12 முதல் 12.30 வரையிலும்,1 முதல் 1.30 வரையிலும்,    2 முதல் 2.30 வரையிலும் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு,ஜபித்து முடித்தப்பின்னர்,கோவில் பிரசாதமாக அபிஷேகத் தீர்த்தம் அல்லது (சித்தர் ஜீவசமாதி எனில்) கொண்டு வந்திருக்கும் இளநீரை அருந்த வேண்டும்.



இந்த நாளில் மட்டும், நள்ளிரவு நேரத்தில் விண்வெளியில் இருந்து ஆல்பா,பீட்டா,காமாக் கதிர்கள் பூமியில் இருக்கும் புனித இடங்களை நோக்கிப் பாயும்;இந்தக்கதிர்களுக்கு அறிவியல் பூர்வமான சுபாவங்கள் இருந்தாலும்,அதைவிட அபூர்வமான ஆன்மீக பேராற்றல்களும் இருக்கின்றன; பாராசைக்காலஜி கற்றவர்களிடம் கேட்டால் மணிக்கணக்காக இது தொடர்பான விளக்கங்களை அளிப்பார்கள்;அவ்வாறு பாயும் போது மேலே கூறிய வழிமுறைப்படி ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,சதாசிவனின் அருளாற்றல் முழுமையாகக் கிட்டும்.சிவராத்திரி முடிந்த மூன்று நாட்களுக்கு 14/3/13 வரை யாரிடமும்,எக்காரணம் கொண்டும் கோபப்படாமல் இருந்தால் நிச்சயமாக உங்களது ஓம்சிவசிவஓம் ஜப ஆற்றலானது உங்களது உடலையும் ஊடுருவிச் சென்று ஆத்மாவுக்குள் நிரம்பிவிடும்.

           

ஓம்சிவசிவஓம்

Wednesday, March 6, 2013

நீண்டகால வழக்குகள்,பல ஆண்டுப்பணப்பிரச்னை,தலைமுறைகளுக்கும் தொடரும் வறுமை,பலகாலமாக வாட்டிடும் நோய்,தீராத மன உளைச்சல்களைப் போக்கும் திருக்கண்டியூர் பிரார்த்தனை!!!





விண்வெளியில் பல பூமிகள்  இருக்கின்றன.இந்த பூமிகளில் இதுவரை முப்பதாயிரம் மனித இனங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கின்றன.இந்த மனித இனங்களோடு நமது முன்னோர்களாகிய சித்தர்கள் நட்பு வைத்திருந்தார்கள்;அடிக்கடி ககனக் குளிகையின்  மூலமாகப் போய் வந்தார்கள்; நாமும் இந்த நூற்றாண்டுக்குள் இந்தத் தொடர்பை மீண்டும் புதுப்பிக்கத் துவங்குவோம்;இந்த முப்பதாயிரம் மனித இனங்கள் வாழ்ந்து வரும் பூமிகளை விட்டுவிட்டு,ஸ்ரீகாலபைரவர் தமது வீரதீரச்செயல்களை நாம் வாழும் பூமியில் செய்திருக்கிறார் என்றால்,நமது பூமி பூர்வபுண்ணியம் மிக்கதுதானே!



நாம் ஒரு மெக்ஸிக்கனாகவோ,சீனனாகவோ,ரஷ்யனாகவோ பிறந்திருந்தால் இந்த அட்டவீரட்டானங்களைப் பற்றிய தகவலாவது நம்மைத் தேடி வந்திருக்குமா.அட,நமது பக்கத்து  மாநிலங்களான கேரளா,ஆந்திரா,கர்னாடகாவில் பிறந்திருந்தால் இந்த ஆலயங்களைப் பற்றி அறிந்திருக்க முடியுமா? நமது வாழ்நாளில் ஒரே ஒரு முறை இங்கேதான் செல்லமுடியுமா?


ஸ்ரீகாலபைரவரின் முதல்வீரட்டமான திருக்கண்டியூர் வீரட்டானம்,சிவாலயமாக தஞ்சை டூ பெரம்பலூர் மெயின் ரோட்டில் திருவையாறுக்கு அருகில் அமைந்திருக்கிறது.கோவில் கோபுரத்தைக் கடந்தது,கோவிலுக்குள் நுழைந்ததும் கோவிலின் கொடிமரமும்,அதற்கு முன்பு ஒரு சிறிய கோபுரமும் தெரியும்.(படத்தினுள் இல்லை;கொடிமரத்துக்கும் முன்பாக முதலில் இருப்பது அதுதான்!!!)பல நூற்றாண்டுகளாக பல லட்சக்கணக்கானவர்களின் பிரச்னையை இந்த சிறு கோபுரம் தீர்த்து வைத்திருக்கிறது.ஆமாம்!

மூலவரான பிரம்மச்சிரக்கண்டீஸ்வரருக்கும்,மங்களாம்பிகைக்கும் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று மதியத்திற்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு,இங்கே அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.இந்த ஸ்ரீகாலபைரவருக்கு அபிஷேகம் செய்யும் போது பின்வரும் பொருட்களால் கண்டிப்பாக அபிஷேகம் செய்ய வேண்டும்;அவை:அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்.இந்த அபிஷேகங்களை மாலை ஐந்து மணிக்குள் முடித்துவிட வேண்டும்;இந்த அபிஷேகங்களை முடிக்கும் குருக்கள்/பூசாரிக்கு கண்டிப்பாக ரூ.150/-தட்சிணை தர வேண்டும்.ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்ட குருக்கள் எனில்,ஒவ்வொருக்கும் இதே தொகையை தட்சிணையாகத் தர வேண்டும்;வசதியுள்ளவர்கள் குருக்களுக்கு வேட்டியும்,துண்டும் எடுத்துத் தரலாம்;

பிறகு, மூன்றுக்கு மூன்று என்ற அளவில்  ஒரு சதுரமான கோடு போடாத காகிதத்தில் நமது நீண்டகால ஏக்கத்தை/தீர வேண்டிய பிரச்னையை/குணமாக வேண்டிய நோயை/விரைவாகக் கிடைக்க வேண்டிய தீர்ப்பை எழுத வேண்டும்.அவ்வாறு எழுதியதை யாரிடமும்,எக்காரணம் கொண்டும் காட்டக்கூடாது;அவ்வாறு காட்டினால்,இந்த வழிபாட்டின் பலன் கிட்டாமல் போய்விடும்.எச்சரிக்கை!!!

எழுதி,ஒரு சிறு நூலால் கட்டி இந்த கோபுரத்தின் மீது மாலை ஐந்து மணிக்கு மேல் எட்டு மணிக்குள் கட்டிவிட வேண்டும்.கட்டி முடித்தப்பின்னர்,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமல்,யார் வீட்டிற்கும் செல்லாமல் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இந்த அபிஷேகங்களை ஒரே ஒரு முறை செய்தாலே போதும்.இவ்வாறு செய்தால்,நீண்டகால(தலைப்பை பார்க்கவும்) பிரச்னைகள் (அதனதன் தன்மையைப் பொறுத்து) அடுத்த ஒன்பதாவது நாள் அல்லது வாரம் அல்லது மாதத்திற்குள் தீர்ந்துவிடும் என்பது பைரவ நிச்சயம்!!!



ஓம்சிவசிவஓம்

அசைவத்துக்குள் ஒளிந்திருக்கும் கலப்பட எமன்!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் அனைத்து உணவு விடுதிகளிலும் சோதனை நடத்தியதில் 100 கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். காடை கறிக்கு பதிலாக காக்கா கறியும் சில இறந்த நாய் களும் அக்க்கடைகளின் சோதனைகளில் சிக்கியுள்ளது. இது போல நமது ஊரிலும் அனைத்து  கடைகளிலும் சோதனை நடத்தினால் தான் தெரியும்...

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை,
அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................
இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

நன்றி -செந்தமிழ் நாடெனும் facebook page 

கல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்!!!





ஸ்ரீகாலபைரவரின் வீரதீரச் செயல்கள் நிகழ்ந்த எட்டு இடங்களே அட்டவீரட்டானங்கள் என்று அழைக்கப்படுகின்றன.அதில் முதல் வீரட்டானமே திருக்கண்டியூர் வீரட்டானம் ஆகும்.இந்த வீரட்டானம் தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் காவிரிக்கரையோரமாக அமைந்திருக்கிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு,பிரம்மனது ஐந்தாவது தலையை ஸ்ரீகாலபைரவர் கொய்த இடம் இது.அதற்குப் பிறகு,பிரம்மப் பதவிக்கு வந்த வேறு ஒரு பிரம்மன் இங்கே வருகைதந்து லிங்கப் பிரதிட்டை செய்து சாப நிவர்த்தி பெற்றார்.அவ்வாறு சாப நிவர்த்திக்காக தமது மனையாள் கலைவாணி என்ற சரஸ்வதியோடு வந்து பல நூற்றாண்டுகளாக வழிபட்டார்.

எனவே,பிரம்மா தனது மனையாளாகிய கலைமகளுடன் சதாசிவனாகிய ஸ்ரீகால பைரவரை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றதால்,மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.இதனால்,இங்கே முறைப்படி,பிரம்மா(அயன்+வாணி) வழிபாடு செய்ய மகிழ்வான வரங்கள் கிட்டும்; கல்வியில் ஆர்வமில்லாத குழந்தைகள்,படிப்பு நன்றாகப் படித்தாலும் தேர்வு சமயத்தில் மறந்து விடுபவர்கள்,போதிய மதிப்பெண்கள் பெற விரும்பும் மாணவ,மாணவிகள் தங்கள் பெற்றோர்/பாதுகாவலருடன் இங்கே தொடர்ந்து ஆறு புதன் கிழமைகளுக்கு வருகை தர வேண்டும்.புதன் கிழமையில் காலை ஆறு முதல் ஏழு மணி அல்லது மதியம் ஒரு  மணி முதல் இரண்டு மணி அல்லது இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணி வரையிலான கால கட்டத்தில் இங்கே மூலவராகிய பிரம்மசிரகண்டீசவரருக்கும்,அம்பிகைக்கும் அர்ச்சனை செய்துவிட்டு,மூலவரின் அருகில் அமைந்திருக்கும் பிரம்மா சரஸ்வதி தம்பதிக்கு பூரண அபிஷேகம் செய்ய வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் ஐந்து லிட்டர் தேனால் அபிஷேகம் செய்து அதில் ஒரு பகுதியை பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்;(பட்டரிடம் தெரிவித்து சேகரித்துத் தரச் சொல்ல வேண்டும்)படிப்பு சரியாக வராத குழந்தைகள் தினமும் அந்த தேனை காலை உணவுக்கு முன்பு அருந்தி வர கல்வித்தடை,மறதி நீங்கிவிடும்.
ஒவ்வொரு புதன் கிழமையும் இவ்வாறு வழிபாடு செய்துமுடித்தப்பின்னர்,அங்கே இருக்கும் ஸ்ரீகால பைரவருக்கு செவ்வரளி மாலை அணிவிக்க வேண்டும்;தமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;இந்த பூஜையைச் செய்து தரும் பட்டருக்கு/பூசாரிக்கு கண்டிப்பாக ரூ.41/-தட்சிணை தர வேண்டும்.பிறகு,வேறு எந்தக்கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் போகாமலும் நேராக அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இதன் மூலமாக,நிச்சயமாக கல்வியில் மகத்தான வளர்ச்சியை அடைவார்கள்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட்ட குழந்தைகள்/மாணவர்/மாணவிகளுக்கே இந்த வழிபாடு பலன் தரும்.
ஓம்சிவசிவஓம்

400 ஆண்டுகளுக்கு தடையில்லா மின்சாரம்: கைவசம் இருக்கு தோரியம்


தேனி: ""நம்நாட்டில், 400 ஆண்டுக்கு மின்சாரம் தயாரிக்க தேவையான தோரியம், தமிழக, கேரள கடலோரங்களில் குவிந்து உள்ளன,'' என, பாபா அணு ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, டேனியல் செல்லப்பா தெரிவித்தார்.
தேனி கம்மவார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன், கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: நீர், அனல் மின்நிலையங்கள் சில ஆண்டுகளுக்கு மட்டுமே பலன் தரக்கூடியவை. இன்னும் சில ஆண்டுகளில், இந்த மின்நிலையங்களை செயல்படுத்த முடியாது; அணு மின்நிலையம், அப்படியல்ல. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல், நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை அணு சக்தி மூலம் பெற முடியும். அமெரிக்காவில், சராசரியாக ஒரு நபர், ஆண்டிற்கு 12 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்துகிறார்; ஐரோப்பிய நாடுகளில், 6,000 யூனிட் பயன்படுத்துகின்றனர்; நம் நாட்டில், ஒரு நபர் 660 யூனிட் மட்டுமே பயன்படுத்துகிறார். இந்த தேவைக்கு கூட, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை. அனல், நீர் மின்நிலையங்கள் மூலம், தமிழகத்திற்கு தினமும் 5500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது; மத்திய தொகுப்பில் இருந்து 3000 மெகாவாட் கிடைக்கிறது. தினமும் 3500 மெகாவாட்டிற்கு மேல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண, அணுமின்சாரமே எளிதானது. கன்னியாகுமரி மணவாளக்குறிச்சி கடற்கரை பகுதிகளிலும், கேரளா ஜாராகுஷா கடற்கரையிலும், ஜார்கண்ட் மாநிலத்திலும் தோரியம் அதிகம் உள்ளது. தோரியத்தை, யுரேனியமாக மாற்றி மின்சாரம் தயாரிக்கலாம்.
வரும் 400 ஆண்டுகளுக்கு, நம் நாட்டின் தேவைக்கு ஏற்ப மின்சாரம் தயாரிக்கும் அளவில், தோரியம் இருப்பு உள்ளது. அதிக மின்சாரம் தயாரிக்கப்படும் போது, பெட்ரோல், டீசல் தேவையை குறைத்துக் கொள்ள முடியும். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும். அணுமின் சக்தி மூலம் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எளிதான தீர்வு காண முடியும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் அணு, சிறந்த தொழில்நுட்பமாக மாறி வருகிறது. அணு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, சுற்றுச்சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த முடியும். எதிர்காலத்தில், ஆக்சிஜன் சிலிண்டர்களை முதுகில் கட்டிக்கொண்டு அலைய நேரிடலாம். இவ்வாறு பேசினார். கல்லூரி செயலாளர் தாமோதரன், முதல்வர் ராஜாமணி, துணை முதல்வர் துரைக்கண்ணன் பங்கேற்றனர்.

சுவாமிவிவேகானந்தரின் 150 வது பிறந்த நாள் விழா=பகுதி 8= துணிந்து செல்! எதிர்த்து நில்!


பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ வேண்டும். எந்த இடத்திலும் நிலையாகத் தங்காமல் சஞ்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். கைத்தடி, கமண்டலம் இரண்டை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மா ஒன்றையே துணையாகக் கொள்ள வேண்டும். ஒரு துறவி இப்படி வாழவே விரும்புவான். சுவாமிஜியின் எண்ணமும் அதுவாக இருந்தது.
1888 நடுப் பகுதிவரை சுவாமிஜி அருகிலுள்ள ஆன்ட்பூர் போன்ற இடங்களுக்கு ஓரிருமுறை சென்று வந்தார். நீண்ட தூரம் எங்கும் போகவில்லை. 1887 கோடைக்காலத்தில் அவருக்குச் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அப்போது சகோதரத் துறவிகளின் வேண்டுகோளுக்கிணங்க வைத்திய நாதம் போன்ற இடங்களில் சில காலம் தங்கினார். நீண்ட பயணமாக அவர் சென்ற முதல் இடம் வாரணாசி என்று அழைக்கப்படுகின்ற காசிப்பெரும் பதி.
சுவாமிஜியும் தமது பிரிவிராஜக வாழ்க்கையை, அதாவது பயண வாழ்க்கையை இங்கிருந்து ஆரம்பித்தார். பிரேமானந்தர், ஸ்ரீராமகிருஷ்ணரின் இல்லறச் சீடரான பக்கீர் பாபு ஆகியோருடன் காசிக்குச் சென்றார் சுவாமிஜி. அங்கே சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்தார். புனித கங்கை, புத்தரும் சங்கரரும் போதித்த இடங்கள், எண்ணற்ற கோயில்கள், இறைவன் புகழ் பாடுவதும் ஜபதவங்களில் ஈடுபடுவதுமாக இருக்கின்ற துறவியர் கூட்டம் எல்லாம் சுவாமிஜியைப் பரவசத்தில் ஆழ்த்தின.
காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒருநாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து விட்டு, ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வந்துகொண்டிருந்தார் சுவாமிஜி. ஒரு பக்கம் பெரிய குளம், மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர். அந்தப் பாதை வழியாக அவர் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு குரங்குக் கூட்டம் அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைபட்டது. அவர் முன்னேறத் தயங்கினார். அவர் பின்வாங்குவதைக் கண்டதும் குரங்குகள் அவரை நோக்கி முன்னேறின. சுவாமிஜி திரும்பி ஓடத் தொடங்கினார். குரங்குகள் விடாமல் துரத்தின. அவரது வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவையும் விரைந்து முன்னேறி அவர்மீது விழுந்து கடிக்கத் தொடங்கின. இனி சமாளிக்க முடியாது என்று தளரும் நிலைக்கு வந்து விட்டார். அப்போது வயதான துறவி ஒருவரின் குரல் கேட்டது. 'நில், எதிர்த்து நில், மிருகங்களை எதிர்கொள்.' இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சுவாமிஜியிடம் ஒரு புத்துணர்ச்சி பரவியது. ஓடிக் கொண்டிருந்தவர் நின்றார். உறுதியாக நின்று குரங்குகளை வெறித்துப் பார்த்தார். அவ்வளவுதாள், அவை பின்வாங்கத் தொடங்கின. சுவாமிஜி முன்னேறத் தொடங்கியதும் அவை திரும்பி ஓடலாயின.
இந்த நிகழ்ச்சி சுவாமிஜியின் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. இயற்கை வேகங்களையும், பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும், அவற்றிற்கு ஒருபோதும் பணிந்து விடக் கூடாது என்பதை சுவாமிஜி இந்த நிகழ்ச்சியிலிருந்து கற்றுக்கொண்டார். அவரது பல சொற்பொழிவுகளில் இந்த நிகழ்ச்சியிலிருந்து அவர் கற்றுக் கொண்ட படிப்பினையின் தாக்கம் இருப்பதைக் காணலாம்.

பேசுவதை காது கொடுத்துக் கேளுங்கள்... கவனிப்பே அவசியம்!!!


நமது குடும்பத்தினரோ, உறவினரோ, நண்பரோ நம்மிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது அதனை காது கொடுத்துக் கேட்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் அவரது பிரச்னை பற்றி கூறும் போது அதனை உதாசீனப்படுத்தக் கூடாது.
குடும்பத்தில் தினமும் ஒரு வேளையாவது அனைவரும் அமர்ந்து ஒன்றாக பேசி சிரித்து உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்று பல மருத்துவக் கட்டுரைகளும், மன நல நிபுணர்களும் அறிவுறுத்துகின்றனர். இதற்குக் காரணம் இருக்கிறது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேச நமக்கெல்லாம் இப்போது நேரம் கிடைப்பதில்லை. ஒரு வேளை உணவையாவது சேர்ந்து உண்ணும் போது, ஒருவரிடம் ஏற்பாடும் மாற்றங்களை மற்றவர்கள் உணர்ந்து கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும்.
எதிர்மறைச் சிந்தனைகள் எப்போதுமே உற்சாகத்தை அளிப்பதில்லை. அதுபோலத்தான் மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு எதிர்மறைச் சிந்தனைகள் அதிகமாக இருக்கும். சிலர் எப்போதும் எதிர்மறையாகவே பேசுவார்கள். அது இயல்பாக இருக்கலாம். ஆனால், சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் திடீரென எதிர்மறையாக பேச ஆரம்பித்தால் எங்கேயோ பிரச்னை இருக்கிறது என்பதை குடும்பத்தார் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு விஷயத்தை சகோதரியோ, சகோதரனோ நம்மிடம் கூறி, இவ்வாறு எனக்கு ஒரு பிரச்னை உள்ளது. அதனை பெற்றோரிடம் கூறி விடாதே என்று சொன்னால்.. அங்கு ரகசியத்தைக் காப்பதா அல்லது சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதா என்ற கேள்வி எழும். இதற்கு பதில் சகோதரி அல்லது சகோதரனைக் காப்பதே முக்கியம் என்பதாகும். எனவே, உடனடியாக இதனை பெற்றோரிடம் தெரியப்படுத்தி, நமது சகோதரி அல்லது சகோதரியை பிரச்னையில் இருந்து விடுபட வைக்க வேண்டும்.
இதே விஷயம் நண்பர்களுக்கும் பொருந்தும், நமது நண்பனைப் பற்றி அவர்களது பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டியது அவர்களது உரிமை. எனவே அதனை தாராளமாக பெற்றோரிடம் கூறி பிரச்னையில் இருந்து விடுபட பெற்றோரின் உதவியை நாடலாம்.
எதுவாக இருப்பினும், ஒரு பிரச்னை உங்களிடம் வரும் போது அதனை காது கொடுத்துக் கேளுங்கள். ஒருவர் சாதாரணமாகக் கூறும் செயலுக்குப் பின் மிகப் பெரிய விஷயம் நடந்திருக்கலாம். அவர்கள் கூறும் விதத்தை நீங்கள் கவனமாகக் கேட்டால் தான் அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முடியும்.
எனவே குழந்தையாக இருந்தாலும், பெரியவராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னையை கவனமாகக் கேட்டு அதற்கேற்ற தீர்வினை உடனடியாகக் காண முயலுங்கள். பெரும்பாலும், ஒருவர் தனது பிரச்னைகளை கவனித்துக் கேட்கிறார் என்பதே, பிரச்னைக்குள்ளானவர்களுக்கு பலம் சேர்க்கிறது. மேலும், அதற்கான தீர்வினைக் காண நீங்கள் முயலுவது அவர்களை மேலும் நம்பிக்கைக் கொள்ள வைக்கும். எனவே, நம்முடன் இருப்பவர்களில் மனச்சோர்வடைந்தோருக்கு உதவுவோம்.. மனநலத்தைக் காப்போம்..