Wednesday, March 6, 2013

பசுமைப் புரட்சி போலியானது: நம்மாழ்வார் ஆவேசம்

மதுரை: ""இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது,'' என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
மதுரையில் நடந்த சுற்றுச்சூழல் சீர்கேடுகளும், தீர்வுகளும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பேசியதாவது: செயற்கை விவசாயத்தால், தாய்ப் பால், பசும்பால் கூட, விஷமாகிவிட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதும், செயற்கை விவசாயம் தான். விவசாயத்தில் பயன்படுத்தப்படும் "ஆர்கானிக் பாஸ்பெடிக்' ரசாயனம், உடலின் கொழுப்புச்சத்தில் தங்கி, மூளை, மார்பகம், இடுப்பு பகுதிகளை பாதிக்கும். பசுமைப் புரட்சி செய்வதாகக் கூறி, ரசாயனங்களை தாராளமாக்கிவிட்டனர். இயற்கை விவசாயத்தை அழித்த பசுமைப் புரட்சி போலியானது. ரத்தசோகை நோய், செயற்கை விவசாயத்தால் தான் ஏற்படுகிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை கூட பாதிக்கும், அபாய நோய் அது. செயற்கை விவசாயத்தால், கிராமங்களிலிருந்த 75 சதவீதம் விவசாயிகள், 56 சதவீதமாக குறைந்துவிட்டனர். விவசாயிகள், கிராமங்களில் வசிக்கும் வகையில், அவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். கிராமங்களில் காடுகள் வளர்க்க வேண்டும்; தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. கிராமங்களின் நீர்வளத்தை அதிகரிக்க வேண்டும். செயற்கை நெல் விவசாயத்தால், ஒரு ஏக்கருக்கு 2,000 கிலோ மகசூல் மட்டுமே பெற முடியும். இயற்கை விவசாயத்தால் 5,000 கிலோ மகசூல் செய்து, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோலைமலை சாதனை படைத்துள்ளார். அவரின் திருத்திய நெல் சாகுபடிக்கு, மத்திய, மாநில அரசுகளின் விருது கிடைத்துள்ளது. இயற்கை விவசாயத்தை, ஊக்குவிக்க வேண்டும், என்றார். பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சம்பத்குமார், செயற்பொறியாளர் அயூப்கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tuesday, March 5, 2013

வெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!



சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;



(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)



இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.


20.2.2013 புதன் மாலை 6.37 முதல் இரவு 8.37 வரை
27.2.2013 புதன் மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
6.3.2013 புதன் மாலை 6.26 முதல் இரவு 8.26 வரை
13.3.2013 புதன் மாலை 6.20 முதல் இரவு 8.20 வரை
20.3.2013 புதன் மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை
27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை

நீண்ட நாட்களாக தகுந்த வரன்  கிடைக்கவில்லையே? என்று ஏங்குபவர்கள்,அவர்களின் பெற்றோர்,சகோதர சகோதரிகள்,நட்பு வட்டம் என யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மேற்கூறிய வழிமுறையில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் நிச்சயம் தகுந்த வரன் விரைவில் அமைந்துவிடும்.


அலுவலகத்தில் நியாயமான பதவி உயர்வு,சம்பள உயர்வு கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இவ்வழிபாடு மூலமாக நிச்சயமாக அவர்கள் மகழ்ச்சியை அடைவார்கள்.


நீண்டகாலமாக குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் இந்த நேரத்தில் மனமுருகி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயமாக ஸ்ரீகாலபைரவரின் அருளால் புத்தரபாக்கியத்தைப் பெறுவார்கள்


பிறரின் சதிச்செயல்களால் பிரிந்திருக்கும் கணவன்/மனைவி இருவரில் யாராவது ஒருவர் மட்டும் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவரிடம் முறையிட்டால்,பிரிந்தவர் சேருவர்.(அர்ச்சகர்/பூசாரியிடம் புலம்ப வேண்டாம்.அது புதுச்சிக்கல்களை உருவாக்கிவிடும்)


கடுமையான பண நெருக்கடியில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் வேண்டினால் நிச்சயமாக பணவரவு நிச்சயம்!


தனது திறமையும்,படிப்புக்கும் ஏற்ற வேலை தேடுவோர் அல்லது வேறு சிறந்த சம்பளத்தில் இடமாற்றத்துக்கு விரும்புவோர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவ வழிபாடு செய்தால் அவர்கள் விரும்பும் வேலை கிட்டிவிடும்.


அன்புக்கு ஏங்கித் தவிப்பவர்கள்,தனிமையில் வாழ்ந்து தன்னையே வெறுத்து தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்தால் அவர்களின் தனிமை போய்விடும்;தகுந்த நட்பு அல்லது வாழ்க்கைத் துணை அல்லது நெருக்கமான சிநேகிதம் உண்டாகும்.


(பலதமிழ்நாட்டுக்குடும்பங்களில் பணம்,பணம் என்று ஏங்குவதால் ரத்த உறவுகளிடம் ஆறுதலாகக்கூட பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள்;அல்லது வேண்டுமென்றே பேசுவதைத் தவிர்க்கிறார்கள்.இதனால் தான் பருவ வயதில் இருக்கும் மகன்/ள் அல்லது மனைவி/கணவன் தடம் மாறிச் செல்கிறார்கள்)

ஏழரைச்சனியால் அவதிப்படும் கன்னி ராசி,துலாம் ராசி,விருச்சிக ராசியினர் மற்றும் அஷ்டமச்சனியால் கஷ்டப்படும் மீனராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரைச் சரணடைந்தால் அவர்களின் மன உளைச்சல்கள்,பண நெருக்கடிகள்,வர இருக்கும் அவமானங்கள் விலகிச் சென்றுவிடும்.

ப்ளாக் மெயில் அல்லது வீண் பழியால் சிக்கித் தவிப்பவர்கள் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் நிச்சயம் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

வெளிநாட்டு வேலைக்குக் காத்திருப்போர் அல்லது டெபுடேஷனுக்காக காத்திருப்போர் இந்த நேரத்தில் ஸ்ரீகாலபைரவரை மனதார வழிபட்டால் நிச்சயமாக அவர்கள் வேண்டியது கிட்டும்.
தொலை தூர நாடுகளில் வசிப்போர் இங்கே இருக்கும் எட்டு பைரவர்களை நோக்கியவாறு அமர்ந்து பைரவ சஷ்டிக்  கவசம் பாடினாலே போதுமானது;

மேற்கூறிய நேரத்தில்,ஸ்ரீகாலபைரவர் சன்னதியின் முன்பாக பைரவ சஷ்டிக்கவசம் பாடலாம்;ஸ்ரீகால பைரவர் மந்திரத்தை தொடர்ந்து ஜபிக்கலாம்.
முயன்று பார்ப்போமா!!! ஸ்ரீகால பைரவரின் அருளைப்பெறுவோமா!!!


ஓம்சிவசிவஓம்

Friday, March 1, 2013

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழிபாடு!!!



நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;


கடந்த  மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை  செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.


பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதை மனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.


நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்: 

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:


1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)


4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்


7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8.சிதம்பரம்


9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)


22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்


24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)
25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.                                            26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.
27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)
28.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
29.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


மாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 4.3.13 திங்கள் மாலை 4.19க்குத் துவங்கி, 5.3.13 செவ்வாய் மதியம் 1.58க்கு நிறைவடைகிறது.இந்த நாளில் ராகுகாலம்,தேய்பிறை அஷ்டமி திதிக்குள் வரவில்லை;எனவே,உங்களுக்கு வசதியான நேரத்தில் மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:3.4.13 புதன்;இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 வரை


ஓம் சிவசிவ ஓம்

ஆறு ராசிக்காரர்கள் அவசியம் ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.ஏன்? எப்படி?



மைத்ர முகூர்த்தப்பட்டியல்-துண்டறிக்கை வடிவில்!!!


ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறை


உலகின் மூத்த இனம் தமிழ் இனமே என்பதற்கான ஆதாரம் கிடைத்துவிட்டது!!!





நமது ஆன்மீகக்கடலில் ஏற்கனவே எழுதியிருந்தோம்.இலங்கைக்குத் தெற்கே இரண்டாயிரம் கி.மீ.தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பு கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கக் கண்டம் வரை இருந்தது;அங்கேதான் தமிழினம் தோன்றியது;அங்கே வாழ்ந்த நமது முன்னோர்களுக்கு மரணமே கிடையாது;அவர்களாக விரும்பும் வரை பூமியில் உயிர்வாழலாம்;அதே சமயம்,அங்கே ஐந்து சதுர கி.மீ.பரப்பளவுக்கு சிவாலயங்கள் இருந்திருக்கின்றன.இதை எதிர்கால விஞ்ஞானம் நிரூபிக்கும்.


அங்கே இதுவரை நாம் காணாத,கேள்விப்படாத,உணரமுடியாத ஸ்ரீகாலபைரவ வடிவங்களும் வழிபாட்டுமுறைகளும் நமக்குக்குக் கிட்டும்.இன்றைய இந்து தர்மத்தின் பிறப்பிடமும் இதுவே என்பதும்,இந்து தர்மத்தின் தொப்புள்கொடி தமிழ்ப்பண்பாடுதான் என்பதும் அடுத்துவரும் காலத்தில் நிரூபணமாகும்.(ஏற்கனவே,காஞ்சி சங்கராச்சாரியார் மஹான் அவர்களின் பேச்சுக்களின்  தொகுப்பாகிய தெய்வத்தின்குரல் என்ற புத்தகத்தில் இதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன!!!)

மொரிஷிஸ் தீவுக்கு அருகே ஆராய்ச்சி செய்து அதன்முடிவுகள் இணையத்தில் வெளிவந்திருக்கின்றன.அதற்கான ஆதாரங்கள் ஆங்கிலத்தில் செய்தியாக வெளிவந்திருக்கின்றன.தமிழ் இனமாகிய நாம் எப்போது இந்த பூமியை ஆளப்போகிறோம்?

ஓம்சிவசிவஓம்
ஓம் ஸ்ரீகால பைரவாய போற்றி!!!