Sunday, January 6, 2013

விஜய(1.1.2013 TO 13.4.2014) ஆண்டின் மைத்ர முகூர்த்த நாட்களின் பட்டியல் !!!



கலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.


நந்தன & விஜய ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; 



ஓம்சிவசிவஓம்

Wednesday, January 2, 2013

விஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பிறை அஷ்டமி நாட்கள்!!!




ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற நாள் தேய்பிறை அஷ்டமி ஆகும்.ஏற்ற நேரம் அந்த தேய்பிறைஅஷ்டமி திதி இருக்கும் நாளில் வரும் பகல் நேர ராகு காலம் ஆகும்.கீழே விஜய வருடத்தின் தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களை பட்டியலிட்டிருக்கிறோம்;அடைப்புக்குறிக்குள் ராகு  கால நேரத்தையும் குறிப்பிட்டிருக்கிறோம்;


ஐப்பசி மாதத்தில் தேய்பிறை அஷ்டமிதிதியில் இரண்டு முறை இராகு காலம் வருகிறது;அதே சமயம்,பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமிதிதி  இருக்கும் நேரத்தில் ராகு காலமே வரவில்லை;இந்த சுவாரசியம் ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருநாள் விடாமல் வீட்டில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்துவிட்டால்,இந்தப் பிறவியிலேயே பெரும் செல்வச் செழிப்பை அடைவார்கள் என்பது குரு வாக்கு;அசைவ உணவுப் பழக்கத்தை முழுமையாக கைவிட்டுவிட்டு,ஒரு நாள் கூட விடாமல் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்வது கலியுகத்தில் ஒரு சாதனையே!

துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம்,கன்னி ராசிக்காரர்கள் தினமும் ஸ்ரீகால பைரவரையும்,தேய்பிறை அஷ்டமிகளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரையும் விடாமல் வழிபட்டு வர சனியின் தாக்கம் இராது;ஆனால்,அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டப்பின்னரே,இந்த வழிபாடுகளைத் துவங்க வேண்டும்;
ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் படம் வேண்டுவோர் மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.விலைக்குக் கிடைக்கும்;

3.5.2013 வெள்ளிக்கிழமை காலை 8.28 முதல் 4.5.2013 சனிக்கிழமை காலை 6.51 வரை;(வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 வரை)

1.6.2013 சனிக்கிழமை மாலை 5.54 முதல் 2.6.2013 ஞாயிறு மாலை 5.02 வரை;(ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரை)

30.6.2013 ஞாயிற்றுக்கிழமை முழுவதும்(ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை)



29.8.2013 வியாழக்கிழமை காலை 6.44 முதல் 30.8.2013 வெள்ளி காலை 8.31 வரை;(வியாழக்கிழமை மதியம்1.30 முதல் 3 வரை)

27.9.2013 வெள்ளி இரவு 11.09 முதல் 28.9.2013 சனி நள்ளிரவு 1.11 வரை;(சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 வரை)

27.10.2013 ஞாயிறு மாலை 4.46 முதல் 28.10.2013 திங்கள் மாலை 6.27 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 6 வரையிலும்,திங்கள் காலை 7.30 முதல் 9 வரையிலும்)

26.11.2013 செவ்வாய் காலை 10.24 முதல் 27.11.2013 புதன் காலை 11.12 வரை;(செவ்வாய் மாலை 3 முதல் 4.30 வரை)

26.12.2013 வியாழன் விடிகாலை 2.46 முதல் 27.12.2013 வெள்ளி விடிகாலை 1.49 வரை;(வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை)ஸ்ரீகால பைரவர் பிறந்த அஷ்டமி இது;

24.1.2014 வெள்ளி மாலை 5.09 முதல் 25.1.2014 சனி மாலை 3.58 வரை;(சனி காலை 9 முதல் 10.30 வரை)

23.2.2014 ஞாயிறு விடிகாலை 4.26 முதல் அன்று நள்ளிரவு 1.27 வரை;(ஞாயிறு மாலை 4.30 முதல் 6 வரை)

24.3.2014 திங்கள் மதியம் 3.45 முதல் 25.3.2014 செவ்வாய் மதியம் 1.27 வரை;(இராகு காலம் வரவில்லை;)

ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய போற்றி

ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவா போற்றி! போற்றி!! போற்றி!!!

ஓம்சிவசிவஓம்

திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா!!!


விஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திருவாதிரை நட்சத்திர நாட்கள்!!!



தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.
சிவபெருமானது அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால் விரதமிருந்து(சாப்பிடாமல்)  திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;
விரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.

அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக் கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட வேண்டும்.

அஷ்ட லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே கிரிவலம் செல்ல வேண்டும்.
நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும் போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து வைக்கவும்)

நமது இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள் முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வரையிலும் இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில் சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்)
ஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும் தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே இருக்கலாம்;


நாம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள் விரைவாக தீர்ந்துவிடும்.

16.4.2013 செவ்வாய் காலை 8.32 முதல் 17.4.2013 புதன் காலை 11.02 வரை;

13.5.2013 திங்கள் மதியம் 3.54 முதல் 14.5.2013 செவ்வாய் மாலை 6.27 வரை;

9.6.2013 ஞாயிறு இரவு 11.14 முதல் 10.6.2013 திங்கள் இரவு 1.48 வரை;

7.7.2013 ஞாயிறு காலை 6.30 முதல் 8.7.2013 திங்கள் காலை 9.05 வரை;(இந்த நாளில் அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது!)

3.8.2013 சனி மதியம் 1.43 முதல் 4.8.2013 ஞாயிறு மாலை 4.16 வரை;

30.8.2013 வெள்ளி இரவு 8.52 முதல் 31.8.2013 சனி இரவு 11.26 வரை;

27.9.2013 வெள்ளி விடிகாலை 3.57 முதல் 28.9.2013 சனி காலை 6.30 வரை;

24.10.2013 வியாழன் காலை 11.01 முதல் 25.10.2013 வெள்ளி மதியம் 1.32 வரை;

20.10.2013 புதன் மாலை 6.07 முதல் 21.10.2013 வியாழன் இரவு 8.37 வரை;

17.12.2013 செவ்வாய் நள்ளிரவு 1.08 முதல் 18.12.2013 புதன் நள்ளிரவு 3.30 வரை;

14.1.2014 செவ்வாய் காலை 8.19 முதல் 15.1.2014 புதன் இரவு 10.44 வரை;(இன்று பவுர்ணமி திதியும் சேர்ந்தே வருகிறது!!!)

10.2.2014 திங்கள் மதியம் 3.36 முதல் 11.2.2014 செவ்வாய் மாலை 5.58 வரை;

9.3.2014 ஞாயிறு இரவு 10.58 முதல் 10.3.2014 திங்கள் நள்ளிரவு 1.17 வரை;

6.4.2014 ஞாயிறு காலை 6.23 முதல் 7.4.2014 திங்கள் காலை 8.40 வரை;

இது தவிர,இந்த வருடத்தில் வர இருக்கும் சனிப்பிரதோஷ நாட்கள் வருமாறு:

20.7.2013
30.11.2013
14.12.2013
12.4.2014

விஜய வருடத்தில் வர இருக்கும் சோம வார(திங்கள்) பிரதோஷ நாட்கள் வருமாறு:

2.9.2013
30.12.2013

தொலை தூரத்தில் வாழ்ந்து வருபவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமாவாசை அல்லது பவுர்ணமி வரும் திருவாதிரை நாளில் கிரிவலம் வந்தாலே போதுமானது;தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் குறைந்தது ஆறு திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலைகிரிவலம் செல்வது அவசியம்; இனி ஒரு போதும் மனிதப்பிறவி எடுக்கவே கூடாது என்ற சங்கல்பம் உடையவர்கள் தொடர்ந்து திருவாதிரை கிரிவலம் சென்றாலே போதும்;பவுர்ணமி கிரிவலத்தை விடவும்பல கோடி மடங்கு உயர்ந்தது இந்த திருவாதிரை கிரிவலம் ஆகும்.சிவ கணம் ஆக விரும்புவோர்,நமது கர்மவினைகளையும்,நமது முன்னோர்களின் கர்மவினைகளையும் இந்த ஜன்மத்திலேயே கரைத்து,பரிபூரணமான புண்ணிய ஆத்மாவாக்கிட விரும்புவோர் இந்த பட்டியலைப் பின்பற்றி அண்ணாமலை கிரிவலம் செல்வது நன்று.வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை;(முடிந்தால்,இந்த கிரிவலத்தோடு சேர்ந்து அன்னதானமும் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும்;) டெஸ்ட் செய்து பார்ப்போமா?                                 ஓம்சிவசிவஓம்

Tuesday, January 1, 2013

விஜய வருடத்தின்(ஏப்2013 டூ ஏப் 2014) துவாதசி திதி நாட்கள் பட்டியல்!!!






இந்து தர்மக் காலக் கணக்கின்படி யுகங்கள் நான்கு! அவை க்ருதயுகம்,திரோதா யுகம்,துவாபர யுகம்,கலியுகம்.க்ருதயுகத்தில் மனிதனது உயரம் இருபத்து நான்கு அடிகள்! ஆயுளோ சில லட்சம் ஆண்டுகள்!! திரோதாயுகத்தில் இந்த உயரம் பதினெட்டாக குறைந்துவிடும்;ஆயுளும் சில ஆயிரம் ஆண்டுகளாகச் சுருங்கிவிடும்;இந்த இரண்டு யுகங்களிலும் பிறப்பவர்களை ஐந்தே ஐந்து கிரகங்கள் மட்டுமே இயக்கும்;பாவக் கிரகங்களான செவ்வாய்,சனி,ராகு,கேது இவைகளுக்கு வேலை இராது;துவாபரயுகத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் சனியும்,செவ்வாயும் சேரத் துவங்குகின்றன;நாம் வாழும் கலியுகத்தில் இவைகளுடன் ராகுவும்,கேதுவும் சேர்ந்து செயல்படத் துவங்கும்;துவாபரயுகத்தில் மனித உயரம் பனிரெண்டு அடி உயரங்கள் ஆகும்.ஆயுளோ சில நூறு ஆண்டுகள்! நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மனித உயரம் ஆறடியும்,அதைவிடவும் குறைவாகவும் இருக்கும்;இவர்களின்(கலியுகத்தில் பிறக்கும் நமது) ஆயுளோ ஒரே ஒரு நூறு கூட தொடுவதில்லை;
அதே சமயம்,கடந்த மூன்று யுகங்களில் மனிதர்களாகப் பிறந்து நாம் செய்த கர்மவினைகளை மொத்தமாக கழிக்கவே கலியுகத்தில் பிறப்பெடுக்கிறோம்;நீங்கள் நம்பாவிட்டால் சில நூற்றாண்டுகள் காத்திருங்கள்;மேல்நாட்டு விஞ்ஞானம் இதை விஞ்ஞானபூர்வமாக நிரூபித்தப் பின்னர் நம்பினால் போதும்;ஆனால்,நீங்கள் நம்பாவிட்டாலும்,உங்களுக்கு ஏழரைச்சனி அல்லது அஷ்டமச்சனி நடைபெறும்போது நம்மை மீறிய தெய்வசக்தி இருப்பதை உணருவீர்கள்;அதுவரை வாய்ச்சவடால் தான்!


நமது கர்மவினையை நீக்கும் சக்தி,கலியுகத்தில் மட்டும் அன்னதானத்திற்கு உண்டு;எனவே,விஜய வருடத்தின் துவாதசி திதி வரும் நாட்களின் பட்டியலை பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அன்னதானத்தை ஒருபோதும் நள்ளிரவில் செய்யக் கூடாது;அசைவ அன்னதானம் கூடவே கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக் கூடாது;சிவாலயத்தின் வாசலில் அல்லது அதன் சுற்றுப்புறத்தில் செய்யப்படும் அன்னதானத்திற்கு அளவற்ற சக்தி உண்டு;அதுவும் அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானத்தின் பெருமைகளை வாசித்திருப்பீர்கள்;


புதியவர்கள் இந்த லிங்கை வாசித்துவிட்டு இந்தப்பதிவினை புரிந்து கொள்ளவும்.


பழையவர்கள் இந்த லிங்கை வாசித்துவிட்டு,இந்தப் பதிவினை பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.


23.4.2013 செவ்வாய் 6.01காலை முதல்  24.4.2013புதன் 5.08காலை வரை;
7.5.2013 செவ்வாய் காலை 4.25 முதல் 8.5.2013 புதன் விடிகாலை 4.34 வரை;
22.5.2013 புதன் மாலை 4.20 முதல் 23.5.2013 வியாழன் மதியம் 2.40 வரை;
5.6.2013 புதன் மாலை 5.23 முதல் 6.6.2013 வியாழன் மாலை 6.30 வரை;
20.6.2013 வியாழன் நள்ளிரவு 12.40 முதல் 21.6.2013 வெள்ளி இரவு 10.29 வரை;
5.7.2013 சனி காலை 7.52 முதல் 6.7.2013 ஞாயிறு விடிகாலை 3.34 வரை;
20.7.2013 சனி காலை 7.52 முதல் 21.7.2013 ஞாயிறு விடிகாலை 3.34 வரை;
3.8.2013  சனி இரவு 10.36 முதல் 4.8.2013 ஞாயிறு இரவு 12.33 வரை;
18.8.2013 ஞாயிறு மதியம் 2.52 முதல் 19.8.2013 திங்கள்  மதியம் 12.30 வரை;
2.9.2013 திங்கள் மதியம் 2.19 முதல் 3.9.2013 செவ்வாய் மதியம் 3.56 வரை;
16.9.2013 திங்கள் இரவு 10.45 முதல் 17.9.2013 செவ்வாய்  இரவு 8.46 வரை;
1.10.2013 செவ்வாய் காலை 6 முதல் 3.10.2013 வியாழன் காலை 6.45 வரை;(ஆமாம்,மூன்று நாட்களுக்கு துவாதசி திதி அமைந்திருக்கிறது)
16.10.2013 புதன் காலை 8.17 முதல் 17.10.2013 வியாழன் காலை 6.56 வரை;
31.10.2013 வியாழன் இரவு 8.51 முதல் 1.11.2013 வெள்ளி இரவு 8.39 வரை;
14.11.2013 வியாழன் இரவு 8.21 முதல் 15.11.2013 வெள்ளி இரவு 7.59 வரை;
30.11.2013 சனி காலை 10.36 முதல் 1.12.2013 ஞாயிறு காலை 9.29 வரை;
14.12.2013 சனி காலை 11.06 முதல் 15.12.2013 ஞாயிறு காலை 11.49 வரை;
29.12.2013 ஞாயிறு இரவு 11.06 முதல் 30.12.2013 திங்கள் இரவு 9.15 வரை;
13.1.2014 திங்கள் காலை 4.31 முதல் 14.1.2014 செவ்வாய் காலை 6 வரை;
28.1.2014 செவ்வாய் காலை 10.26 முதல் 29.1.2014 புதன்  காலை 8.11 வரை;
11.2.2014 செவ்வாய் இரவு 111.39 முதல் 12.2.2014 புதன் நள்ளிரவு 1.45 வரை;
26.2.2014 புதன் இரவு 8.50 முதல் 27.2.2014 வியாழன் மாலை 6.30 வரை;
13.3.2014 வியாழன் மாலை 6.41 முதல் 14.3.2014 வெள்ளி இரவு 8.33 வரை;
28.3.2014 வெள்ளி காலை 6.27 முதல் நள்ளிரவு 3.52 வரை;
12.4.2014 சனி காலை 11.58 முதல் 13.4.2014 ஞாயிறு மதியம் 1.03 வரை;


அண்ணாமலையில் அன்னதானம் செய்வதால் நமது முன்னோர்கள் சொத்துக்காக சண்டையிட்ட சாபங்கள் தீரும்;குறைந்தது ஆறு துவாதசி திதிகள் வரையிலும்,அதிகபட்சமாக இருபத்து நான்கு துவாதசி திதிகள் வரையிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.


யார் இருபத்து நான்கு துவாதசி திதிகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்ய வேண்டும் என்பதை அவரவர் பிறந்த ஜாதகத்தைப்பார்த்த பின்னரே சொல்ல முடியும்.
அன்னதானத்தை உள்ளன்போடும்,அர்ப்பணிப்பு மனப்பான்மையோடும் செய்ய வேண்டும்.ஏனோதானோ என்றும்,கடமைக்கு என்றும் செய்வதால் பலன்கள் கிடைக்க தாமதமாகலாம்;அல்லது இந்தப் பிறவியிலேயே கிடைக்காமலேயே போய்விடலாம்;அன்னதானம் செய்யப் போவதையும்,செய்தப் பின்னர் இந்த காரணத்துக்காக இங்கேபோய் இப்படி அன்னதானம் செய்தேன் என்று பகிரங்கப் படுத்தினாலும் பலன்கள் கிடைக்கத் தாமதமாகும்;இந்தக் கருத்துக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் துவாதசி திதி அன்று அன்னதானம் செய்தவர்களின் மனோநிலை,சந்தர்ப்ப சூழ்நிலையை ஆராய்ந்து கண்டுபிடித்து ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் நலனுக்காக மட்டும் வெளியிடுகிறோம்.


ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயத்துக்குள் மூன்று வேளைகள் அன்னதானம் செய்தால் மட்டுமே பலன்கள் கிடைக்கும் என்பதை நினைவிற்கொள்ளவும்.அப்படிப் பார்த்தால்,இந்த பட்டியலில் இருக்கும் அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்ய இயலாது என்பதை மனதில் நிறுத்தவும்;


அண்ணாமலையில் துவாதசி திதியன்று அன்னதானம் செய்ய விரும்புவோர்,உரிய நாளில் காலை நேர அன்னதானத்தை ஒன்பது மணிக்குள்ளும்,மதியம் ஒரு மணிக்குள்ளும்,இரவு எட்டு மணிக்குள்ளும் அன்னதானம் செய்யவும்.ஒரு வேளைக்கு குறைந்த  பட்சம் ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்வது நன்று;வசதியும்,ஆன்மீக ஆர்வமும் உடையவர்கள் ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் குறைந்தது மூன்று சாதுக்களுக்கு அன்னதானம் செய்வது திகைப்பூட்டும் பலன்களைத் தரும்.

சென்ற வருடத்து துவாதசி திதி பட்டியலை ஜனவரி 2012 இல் வெளியிட்டிருக்கிறோம்;





ஓம்சிவசிவஓம்

4 &5/1/13 மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமி வருகிறது!!!




நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.


பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.


ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(காஞ்சிபுரத்திலிருந்து ஆட்டோவில் 25 கி.மீ.தூரம் பயணிக்க வேண்டும்.அடிக்கடி பேருந்து வசதி இல்லை;குண்டும் குழியுமான சாலை வசதி இருக்கிறது.ஆனால்,பழமையான ஸ்ரீசொர்ண பைரவர் ஆவார்)

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)
22.வன்னிவேடு ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோவில்,வாலாஜாபேட்டை.
 23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

***தமிழ்நாட்டின் தெற்கே திண்டுக்கல் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள்  கோவிலில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.இதற்கு தெற்கே கன்னியாக்குமரி வரையிலும் வேறு சன்னதி இல்லை; என்பது வருத்தமான உண்மை ஆகும்.

இந்த மார்கழி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 4.1.2013 வெள்ளிக்கிழமை மாலை 5.54  முதல் 5.1.2013 சனிக்கிழமை மாலை 4.24நான்கு மணி இருபத்து நான்கு நிமிடம் வரை வருகிறது.வெள்ளிக்கிழமை இராகு காலத்தில் தேய்பிறை அஷ்டமி வரவில்லை;(ஆனால்,தாடிக்கொம்பு முதலான சில கோவில்களில் முதல்நாளை கணக்கில் எடுத்துக் கொண்டு,தேய்பிறை அஷ்டமி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்து வருகிறார்கள்);சனிக்கிழமை காலை ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரையிலான நேரத்தில் இராகு காலமும் தேய்பிறை அஷ்டமியும் சேர்ந்தே வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.

இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.


இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள்  ஆகும்.
1.நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்;
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.

ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 5.1.2013 சனிக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு ராகு கால நேரமான காலை 9.00 மணி முதல் 10.30 மணிவரை மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரங்களில் மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.33 என்பது குபேரனுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழங்கிய செல்வ வளச்சின்னம் ஆகும்.

இந்த அற்புதமான நன்னாளில்,வீடு வாசல் இல்லாத ஒரே ஒரு அனாதை அல்லது சாதுவுக்கு அன்னதானம் செய்தால் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மகிழ்ச்சியடைவார்!!!




ஓம்சிவசிவஓம்