Thursday, October 11, 2012

இந்தியாவில் வால்மார்ட்டுக்கு பூச்செண்டு!!! வால்மார்ட் உருவான அமெரிக்காவிலோ “கல்தா”!!!!!!




அதுதான் விதியின் விளையாட்டு.முரண்களை வெளிப்படுத்திய விளையாட்டு.பிரதமர் மன்மோகன்சிங், வால்மார்ட் நிறுவனத்திற்கு சிகப்புக் கம்பளம் விரித்த அதே 2012,செப்டம்பர் 14 ஆம் தேதி அமெரிக்காவின் மிகப்பெரிய நகரமான நியூயார்க் நகரம் வால்மார்ட் நிறுவனத்தினை மூட உத்தரவிட்டது;அது மட்டுமல்ல;அதே தினத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டினை இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதித்த அதே தினத்தில்,பன்னாட்டு நிறுவனங்களின் தரகர்களாகச் செயல்பட்டு இந்திய அரசின் கொள்கைமுடிவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டால் சிறு விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள்’ என்று உறுதி சொன்ன அதே தினத்தில், இணையதளச் செய்தித்தாளான அட்லாண்டிக் சிடிஸ், “பரவும் மரணம்;உள்ளூர் சிறு வணிகத்தினை அழிக்கும் வால்மார்ட் நிறுவனம்” என்ற தலைப்புச் செய்தி வெளியிட்டது.

இரு மாதங்களுக்கு முன்புதான், ஜீன் 30 இல் 10,000க்கும் மேற்பட்டோர் “வால்மார்ட் என்றால் வறுமை”(Please search at search engines Walmart means poverty)என்ற கோஷத்தினை எழுப்பி அமெரிக்காவின் பணக்கார நகரான லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் வால்மார்ட் கடைகளுக்கெதிராக ஊர்வலம் வந்தனர். “வால்மார்ட்டிற்கு இல்லை என்போம்”(SAY NO TO WALMART)என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் முழுவதும் நடைபெறும் இயக்கமாகும்.

வால்மார்ட் மீது ஏன் இத்தனை தாக்குதல்?
உலகின் சக்தி வாய்ந்த சில்லரை வர்த்தக நிறுவனம் வால்மார்ட்.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு இந்தியாவில் அனுமதிக்கப்பட அது அதிக அளவில் “செலவழித்துள்ளது”.கொள்கைத் தரகர்கள் இதனைக் கொண்டாடிவரும் வேளையில், அது பிறந்த அமெரிக்க மண்ணிலேயே அது தீண்டத்தகாததாகி விட்டது.அமெரிக்காவிலேயே ஏன் இந்த எதிர்ப்பு? “அது உள்ளூர் சந்தையை அழித்துவிடும்” என நியூயார்க் தொழிற்சங்கங்களும் உள்ளூர் சமூகங்களும் கூறுகின்றன.இதையேதான் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரில் ஆர்பாட்டம் செய்தவர்களும் கூறினார்கள். “வால்மார்ட்டிற்கு இதயமோ,ஒழுக்கக்கூறுகளோ,சமூக சிந்தனைகளோ ஏதும் இல்லை” என அவர்கள் கதறுகிறார்கள்.ஆனால்,அந்த ஊர் அரசியல்வாதிகளும்,நம்மூர்(இந்தியா) ஐக்கிய முற்போக்கு கூட்டணியினர் சகலைகள் போலும். கடந்த மார்ச்சில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் மன்றம்(முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன்) பெரிய வர்த்தகர்களுக்கு பல்வேறுகெடுபிடிகளை விதித்தது. ஆனால்,வால்மார்ட் நிறுவனத்திற்கு அந்தக்கெடு விதிக்கப்படுவதற்கு முந்தைய நாள் அனுமதி வழங்கியது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நினைவுக்கு வருகிறதா?

இருந்த போதிலும் ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி வால்மார்டிற்கும் அதன் போட்டியாளர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்குகின்றனர்.அவர்கள் சிறு விவசாயிகள் மற்றும் குறு வியாபாரிகள் விஷயத்தில் கனிவாக நடந்துகொள்வார்கள் என்கிறார்கள்;பல லட்சம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்கிறார்கள்.ஆனால்,அமெரிக்காவின் நிலவரம் அதற்கு மாறாக உள்ளது.

வால்மார்ட்,ஆகஸ்டின் என்னும் சிகாகோ நகரின் அருகில் உள்ள நகரில் 2006 இல் நுழைந்தது;2008 க்குள் 306 கடைகளுள் 82 மூடப்பட்டு விட்டன என்கிறது அட்லாண்டிக் சிடி இதழ்=பொருளாதார வளர்ச்சி காலாண்டிதழ்.வால்மார்ட் தடம் பதித்த இடங்களில் 35 முதல் 60 சதவீதம் வரை சிறு வணிக நிறுவனங்களின் மூடுவிழா நடக்கிறது என்கிறது.அதன் சுற்றுவட்டாரத்தில் 20% மருந்துக்கடைகளும்,15% வீட்டுச்சாமான்கடைகளும், 25% பொம்மைக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.அமெரிக்க ஆய்வுகள், ‘வால்மார்ட்டால் சிறு கடைகள் பாதிக்காது’ என்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பொய்யினை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.வால்மார்ட் உருவாக்கும் 2 வேலைகளுக்கு 3 பேர்களின் வேலையினை அழிக்கிறது என்று நியூயார்க் வக்கில் சங்கம் தயாரித்த “வால்மார்ட்டின் பொருளாதாரத் தடங்கள்” என்ற ஆய்வு சொல்கிறது.
விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பது அடுத்த பொய்.வால்மார்ட் நேரடியாக பொருட்களை வாங்குவதில்லை என்ற உண்மையினை மறைக்கின்றனர்.அடுத்தடுத்து வரும் அறுவடை காலங்களில் அறுவடை செய்யப்படும் தானியங்களள அது ஊக முன் பேர வணிகத்தில் வாங்கி பொருட்களின் விலையை நிர்ணயிக்கிறது.மலிவான சீன பொருட்களை வாங்கி அமெரிக்காவின் உள்ளூர் தொழிலை அழிக்கிறது.எப்படி?
ஜனவரி 2007 இல் இருந்ததைப் போல ஏப்ரல் 2008 இல் அரிசியின் விலை அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமல்லாது உலகெங்கும் மூன்றுமடங்கு அதிகரித்தது.இது குறித்துக் கேட்டபோது அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்கள், “புதுப் பணக்காரர்களான இந்தியர்கள் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்” என்று வேடிக்கையாக கூறினார்.ஆனால்,உண்மை என்ன?கலிஃபோர்னியா அரிசி இணையமும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரிசி இணையமும் அரிசிக்கு கிராக்கி இருக்கிறது என்பதை மறுத்து, இருப்பு போதுமான அளவு இருக்கிறது எனக்கூறியதை “யு.எஸ்.ஏ.டுடே” மற்றும் சி.என்.என்.மேற்கோள் காட்டியிருந்தன.பின் எதனால் அரிசி விலையேற்றம்?

வால்மார்ட்டின் மொத்த விற்பனைப்பிரிவான “ஸாம்ஸ் க்ளப்” மிக அதிகளவில் அரிசி கையிருப்பினை பதுக்கி வைத்திருந்து,அரிசி விலையை ஏற்றியது என சி.என்.என்.கூறியது.அரிசியின் விலையேற்றத்திற்கு,அமெரிக்க விவசாயிகள்,ஊக வணிக வியாபாரிகளையும்,முன்பேர வர்த்தகச் சந்தைகளையும் குற்றம் சாட்டினார்கள்.உண்மை என்னவெனில்,அமெரிக்க விவசாயிகள் பண்ணைப்பொருட்களுக்கான ஊக வணிகத்தில் ஈடுபடவில்லை;

ஜனவரி 2008 இல் அமெரிக்க கோதுமை தானிய முன்பேர வர்த்தகத்தில் 40% பங்கு கொண்டிருந்த முதலீட்டு நிதியங்கள் தங்கள் பங்கினை ஏப்ரல் 2008 க்குள் 60% அளவிற்கு உயர்த்திக்கொண்டு விட்டார்கள்.முன்பேர வணிகத்தில் 2007 ஆரம்பத்தில் ஒரு கிலோ 4 டாலருக்கு விற்ற கோதுமை,2008 ஏப்ரல் மாதத்தில் 14 டாலராக உயர்ந்துவிட்டது.தனது அறுவடடயினை ஊக வணிகத்தில் விற்ற அமெரிக்க விவசாயி நஷ்டமடைந்தான்.ஆனால்,அதே முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்ட வால்மார்ட் அதிக லாபமடைந்தது.ஊக வணிகத்தில் ஈடுபடாமல் இருந்த ஒரு சில விவசாயிகளும் மலிவான விலையில் பெருமளவு தானியத்தை வாங்கி வைத்திருந்த வால்மார்ட்டிற்கு அதிக விலையில் தனது தானியத்தை விற்க முடியவில்லை;

இதை மற்றொரு கோணத்திலும் ஆராயலாம்.வால்மார்ட்டிடமிருந்து நல்ல விவசாயினை அமெரிக்க விவசாயி பெறுகிறான் என்றால் அமெரிக்க அரசு தனது மக்கள் தொகையில் 2% மட்டுமே இருக்கும் விவசாயிக்கு ஆண்டு தோறும் 20 பில்லியன் டாலர்(ஒருபில்லியன் டாலர் சுமார் 4500 கோடி ரூபாய்கள்)மானியம்  ஏன் வழங்க வேண்டும்?அதே போல் ஐரோப்பிய யூனியனும் தமது மக்கள் தொகையில் 5% மட்டுமே இருக்கும் தனது விவசாயிகளுக்கு 74.5 பில்லியன் டாலர்களை மானியமாக ஏன் ஆண்டு தோறும் வழங்க வேண்டும்? அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளின் அனுபவங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீட்டிற்கு நியாயம் கற்பிக்கும் மூன்றுபொய்களின் சாயத்தினை வெளுக்க வைக்கின்றன.
அந்நிய முதலீட்டினால் 12 கோடி சில்லறை வியாபாரக்குடும்பங்கள் பாதிப்படையும்.விவசாயிகளுக்கும் அது உதவாது.வேலை வாய்ப்பினை குறைக்கும்;அதனிலும் மேலாக,கிராமப்புற உணவுப்பாதுகாப்பினையே அது அழிக்கும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரு வேறு அறிக்கைகளே-“திட்டக்குழு செயல்குழுவின் 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மை” என்ற தலைப்பிலான அறிக்கை மற்றும் உணவு பற்றிய பாராளுமன்ற நிலைக்குழுவின் 19 வது அறிக்கை;வால்மார்ட் விவசாயிகளுடன் கொள்ளும் நேரடித் தொடர்பு மூலம் இந்திய விவசாயிகள் வளமடைவார்கள் என்ற அரசின் பொய்யினை ஏற்கவில்லை; “5.9 கோடி விவசாயக்குடும்பங்கள் அதாவது 39 கோடி கிராம மக்கள் சராசரியாக ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் குறைவான விளைநிலங்களையே கொண்டிருக்கிறார்கள்.(அமெரிக்காவில் சராசரி இதைப்போல 250 மடங்கு; ஆஸ்திரேலியாவில் இதைப்போல 4000 மடங்கு மற்றும் அதற்கும் அதிகமான மடங்கு).இவர்களது விளைச்சலில் 60%,கிராமத்திற்குள்ளாகவோ,பண்டமாற்றாகவோ அல்லது விவசாயக்குடும்பங்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களால் நுகரப்பட்டோ செலவாகிறது.மீதமுள்ள 40% மட்டுமே வெளியே வர்த்தக சந்தைகளுக்கு செல்கிறது.அமைப்பு ரீதியாக வலுவுள்ள திறமையான வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் இவ்விளைச்சலில் ஒரு சிறிய அளவிற்கு கொள்முதல் செய்தாலும்,கிராமப்புறத்தில்,நகர்த்து விலைவாசி நிர்ணய முறை ஏற்பட்டு,அதிக விலை காரணமாக கிராமப்புற உணவுப்பாதுகாப்பு அழியும்.அதனால்,கிராமத்தில் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பேர் பாதிப்படைவார்கள்” என்று அந்த அறிக்கைகள் கூறுகின்றன.
மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையில் இயங்கும் திட்டக்குழு அறிக்கை ஒன்று, “ சிறு  விவசாயிகள் இன்னும் பல காலத்துக்கு நிலைத்து இருப்பார்கள்” என்று வருத்தப்பட்டுக் கொள்வதோடு, “அவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும்” என்று சலித்துக்கொள்கிறது. ஆனால்,சிறு விவசாயி என்பவன் இந்நாட்டுக்கு வீண் அல்ல; அவன் மிகவும் திறமையானவன்.அவனது உற்பத்தித் திறன் பெரு விவசாயிகளை விட 33% அதிகம்.சிறு விவசாயிகள் மொத்த விளைநிலங்களில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்குப்பயன்படுத்தி 41% விளைச்சலைப் பெற்றுத்தருகிறான்.11 கோடி டன் பாலை உற்பத்தி செய்கிறான்.அவர்களூக்குப்பதிலாக பெருவிவசாயிகள் வந்தால்,இந்திய தேசத்தின் மொத்த உணவு உற்பத்தியில் 7% சரியும்.சிறு மற்றும் பெரு தொழில்களில் காணப்படும் உற்பத்தித்திறன் வேறுபாடு வேளாண்மைத் தொழிலுக்குப்பொருந்தாது என சமீபத்திய  உலகளாவிலான ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியிருப்பதை சீர்திருத்தவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அறிய மாட்டார்கள்.வேளாண்மையைப்பொருத்த வரையில் சிறு விவசாயிகள் தான் அதிகத் திறனுடையவர்களாக இருக்கிறார்கள்.


நீதி: விவசாயிகளின்,வியாபாரிகளின் கல்வியறிவின்மையை காரணம் காட்டி சீர்திருத்தவாதிகள் இந்திய நாட்டிற்குத் துரோகம் இழைக்கிறார்கள்.அவர்கள் “சீர்திருத்தவாதிகள்” என்ற புகழும்,பெயரும் பெற இந்தியாவின் தேச நலனையும்,கோடிக்கணக்கான அப்பாவி இந்தியர்களின் தினசரி வாழ்க்கையையும்  பலிகொடுக்கிறார்கள்.இவர்கள் சீர்திருத்தவாதிகளா? அல்லது சீரழவுவாதிகளா?


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள்:22,23,24;வெளியீடு அக்டோபர் 2012

அஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்
















நன்றி:உறையூர் ஸ்ரீதான் தோன்றீஸ்வரர் ஆலயம்,திருச்சி


அஷ்ட பைரவர்களின் கோவில்கள் காசியில் மட்டுமே அமைந்திருப்பதாகத் தெரிகிறது.காசியில் அனுமன் கட்டில் ருரு பைரவர் கோவிலும்,துர்கா மந்திரில் சண்ட பைரவர் சன்னதியும்,விருத்த காளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அமிர்த குண்டத்திற்கு முன்புறம் அசிதாங்க பைரவர் சன்னதியும்,லட் பைரவர் கோவிலில் கபால பைரவர் சன்னதியும்,காமாச்சாவில் வடுக பைரவர் என்ற பெயரில் குரோதன பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவர் கோவிலும்,திரிலோசன கஞ்ச் என்ற இடத்தில் சம்ஹார பைரவர் கோவிலும்,காசிபுராவில் பூத பைரவர் என்ற பெயரில் பீஷண பைரவர் கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த எட்டு ஆலயங்களுக்கும் சென்று வழிபட்டால் அதுவே அஷ்டபைரவர் யாத்திரை எனப்படும்.


நன்றி:அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்,பக்கம் 178,தொகுத்தவர்:இரா.இராமகிருட்டிணன்;வெளியீடு:-நர்மதா பதிப்பகம்,சென்னை.


பைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி!!!





ஆன்மீகக்கடலின் அத்தனை பதிவுகளையும் வாசித்துவிட்டவர்கள் இந்தப்பதிவின் மூலமாக வழிகாட்டப்பட்டிருக்கும் ஸ்ரீகாலபைரவர் வழிபாட்டைப் பின்பற்றலாம்.மற்றவர்கள் தயவு செய்து மட்டுமல்ல;அருள் கூர்ந்து ஆன்மீகக்கடலின் 2008 ஆம் ஆண்டின் முதல் பதிவிலிருந்து இன்றைய பதிவு வரை அனைத்தையும் வாசித்துவிட்டு பிறகு செயலில் இறங்கவும்.

ஒரு புதிய திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சீனுக்கு வந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவே,இந்தப் பதிவினை வாசித்தால் நீங்கள் அதுபோன்ற உணர்வை எட்டுவீர்கள்.பழைய மற்றும் நீண்டகால வாசக,வாசகிகளுக்காக நமது ஆன்மீக குருவும்,பல ஆன்மீக விருதுகள் பெற்றவரும்,மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்காலச் சீடருமான அவர்களிடம் பலமுறை வலியுறுத்தி வேண்டி, இந்தப் பதிவினை உங்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

ஸ்ரீகால பைரவரின் அருள் சுலபமாக நமக்குக் கிடைக்கவும்,நமது முற்பிறவி கர்மாக்கள் முழுமையாக விலகவும் தொடர்ந்து ஆறு பைரவ சஷ்டி நாட்களில் இந்த ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.அவ்வாறு செய்ய ஆரம்பிக்கும் முன்பு நாம் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக்கைவிட வேண்டும்;முறையற்ற உறவு இருந்தால் அதையும் நிரந்தரமாகக் கைவிட வேண்டும்.இந்த இரண்டையும் கண்டிப்பாக பின்பற்றினால் மட்டுமே ஸ்ரீகால பைரவரின் அருள் நமக்குக் கிட்டும்.இந்த வழிபாட்டை 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பின்பற்ற வேண்டும்.

உங்கள் ஊரில் இருக்கும் பழைமையான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவரின் சன்னதிக்கு தொடர்ந்து ஆறு தேய்பிறை சஷ்டிகளுக்கு பின்வரும் பொருட்களை வாங்கிக்கொண்டு  செல்ல வேண்டும். அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை போன்றவைகளுடன் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும்.(நண்பர்கள் சேர்ந்து கூட்டாகவும் செய்யலாம்)அபிஷேகம் முடிந்ததும்,உங்கள் குடும்பத்தாரின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.


ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியின் போதும் இவ்வாறு அபிஷேகம் முடிந்தப்பின்னர்,அந்தக்  கோவிலின் வாசலில் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.இவ்வாறு அன்னதானம் செய்து முடித்தப்பின்னர்,நேராக அவரவர் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.வேறு எந்தக்கோவிலுக்கோ/பிறரது வீடுகளுக்கோ செல்லக் கூடாது.



அடுத்து வர இருக்கும் தேய்பிறை சஷ்டிகளும்,அந்த நாட்களில் வர இருக்கும் ராகு காலமும்:-
4.11.12 ஞாயிறு காலை 11.10 முதல் 5.11.12 திங்கள் மதியம் 12.30 வரை(4.11.12 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 மணி வரை அல்லது 5.11.12 திங்கள் காலை 7.30 முதல் 9 வரை)

4.12.12 செவ்வாய்(மதியம் 3 முதல் 4.30க்குள்)

3.1.13 வியாழன் இரவு 7.02 வரை(மதியம் 1.30 முதல் 3 வரை)

1.2.13 வெள்ளி காலை 9.12 முதல் 2.2.13 சனி காலை 7.40 வரை(.1.2.13 வெள்ளி காலை 10.30 முதல் 12 வரை)

2.3.13 சனி இரவு 8.42 முதல் 3.3.13 ஞாயிறு மாலை 6.34 வரை(3.3.13 ஞாயிறு மாலை 4.30 முதல் 6 வரை)

3.4.13 புதன்(மதியம் 12 முதல் 1.30 வரை)
இவை நந்தன வருடத்தின் தேய்பிறை சஷ்டிகள் ஆகும்.அடுத்து வரும் விஜய ஆண்டின் தேய்பிறை சஷ்டி நாட்கள் ஜனவரி 2013 இல் நமது ஆன்மீகக்கடலில் வெளியாகும்.


இந்த ஆறு தேய்பிறை சஷ்டிகளில் தொடர்ந்து ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்து முடித்தால்,அதன்பிறகு நமது மன உளைச்சல்கள் தீர்ந்திருக்கும்.நமது நீண்டகாலப்பிரச்னைகள் தீர்வதற்கு வழி கிடைத்திருக்கும்.சிலருக்கு கனவில் ஸ்ரீகாலபைரவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கும் என்பது அனுபவ உண்மை ஆகும்.



வீட்டில் தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வருபவர்கள் இந்த வழிபாட்டு முறையைப்பின்பற்றலாம்.
வீட்டில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களும் இந்த வழிபாட்டுமுறையைப்பின்பற்ற எந்தத் தடையும் இல்லை;
அவரவர் சொந்த ஊர்களில் இருக்கும் புராதனமான சிவாலயத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் இந்த வழிபாட்டைப்பின்பற்றினாலே போதுமானது;ஒரு எச்சரிக்கை:எந்த கோவிலில் தேய்பிறை சஷ்டிக்கு ஸ்ரீகால பைரவரை வழிபட  ஆரம்பிக்கிறோமோ அந்தக் கோவிலில் மட்டுமே ஆறு தேய்பிறை சஷ்டிக்கும்  சென்று வழிபாடு செய்ய வேண்டும்;கோவிலை மாற்றினால் எதிர்விளைவு ஏற்படும்.

முடிந்தால்,ஸ்ரீகாலபைரவரின் திருவிளையாடல்கள் நடைபெற்ற அட்டவீரட்டானங்களில் ஏதாவது ஒரு வீரட்டானத்திற்குச் சென்று ஆறு தேய்பிறை சஷ்டிக்கும் இவ்வாறு வழிபாடு செய்தால்,கிடைக்கும் புண்ணியப்பலன்களை விளக்க இந்த ஒரு ஆன்மீகக்கடல் போதாது;
மயிலாடுதுறையிலும் அதைச் சுற்றிலும் இருப்பவர்கள் வழுவூர் வீரட்டானம்,கொறுக்கை வீரட்டானம்,திருப்பறியலூர் வீரட்டானம் இவைகளில் ஏதாவது ஒரு வீரட்டானத்தில் வழிபாடு செய்யலாம்.

திருவாரூர் மற்றும் அதன் அருகில் வசிப்பவர்கள் திருவிற்குடி வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

தஞ்சாவூர் மற்றும் அதன் அருகில் வாழ்ந்து வருபவர்கள் திருக்கண்டியூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைச் செய்யலாம்.

பண்ருட்டி மற்றும் அதன் அருகில் இருப்பவர்கள் திருவதிகை வீரட்டானத்தில் இந்த வழிபாட்டையும்,திரு அண்ணாமலைக்கு அருகில் இருப்பவர்கள் திருக்கோவிலூர் வீரட்டானத்திலும் இந்த வழிபாட்டை பின்பற்றலாம்.

நாகை மாவட்டத்தில் வசிப்பவர்கள் திருக்கடையூர் வீரட்டானத்தில் இந்த வழிபாட்டைப்பின்பற்றலாம்.


ஓம்சிவசிவஓம்

Wednesday, October 10, 2012

அளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது!




நாம் ஒவ்வொருவரும் இந்த பிறவியில் அளவற்ற புண்ணியங்கள் செய்தால்,இறப்புக்குப்பின்னர்,பூமிக்கு மேலே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சகல சுகபோகங்களையும் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் செல்வந்தராகவும்,வேறு சில செல்வாக்குடனும் பிறப்போம்;

அளவுக்கதிகமாக பாவங்களைச் செய்தால்,இறப்புக்குப்பின்னர்,இந்த பூமிக்கு கீழே இருக்கும் ஏழு உலகங்களில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று வேதனைகள்,சோகங்கள்,வலிகள்,துக்கங்களை குறிப்பிட்ட காலம் வரை அனுபவிப்போம்;அவ்வாறு அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியில் மனிதனாகப் பிறப்போம்;


அதனால் தான் நாம் வாழும் இந்த பூமியை கர்ம பூமி என்று அழைக்கிறோம்.இந்த பதினான்கு உலகங்களையும் ஆட்சி புரிவது தெய்வசக்திகளே! நம்மை நமது பாவ புண்ணியத்தை நிர்ணயிப்பது எது தெரியுமா? காம உணர்வுதான்.எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும்,எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும்,ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காம உணர்வு பொதுவானது.கோடி மனிதர்களில் ஒருவர் மட்டும் இந்த கலியுகத்தில் மஹானாகவோ,சித்தராகவோ,துறவியாகவோ பிறக்கிறார்கள்! அவர்களுக்கு மட்டுமே காம உணர்வு இராது;காம உணர்வு அவர்களின் மன உறுதியை மீறிச் செயல்படாது.ஆனால்,நாம் வாழும் கலியுகத்தில் சராசரி மக்களாகிய நாம் இந்த காம உணர்வால் என்ன பாடுபடுகிறோம்?
14 வயது முதல் 24 வயது வரை காமம் பற்றிய அடிப்படைப் புரிதல்களுக்கான காலகட்டம் ஆகும்.


24 வயது முதல் 34 வயது வரை காமம் பற்றிய நிஜங்களை நாம் ஒவ்வொருவருமே நேரடி அனுபவத்தின் மூலமாக உணர்ந்துகொள்கிறோம்;அப்படி உணர்ந்தப்பின்னர்,நமது வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்கிறோம்;இந்த கால கட்டத்தில் அடுத்தவரின் காம அவமானங்கள் நமக்கு வேடிக்கையாகவும்,கிளுகிளுப்பூட்டுவதாகவும் தெரிகின்றன;மனதில் உடனடியாகப் பதிகின்றன.ஆனால்,அதே அவமானம் நமக்கு வந்தால்?


34 முதல் 44 வயது வரை(சிலருக்கு 74 வயது வரையிலும் கூட) தெய்வ நம்பிக்கை குறைகிறது;அளவற்ற காம இச்சை தோன்றுகிறது.இவர்களெல்லாம் இளவயதான 14 முதல் 24 வயது வரையிலான காலகட்டத்தில் ஒழுக்க சீலர்களாக இருந்திருப்பார்கள்.இப்போது உடல் ஒத்துழைக்காத சூழ்நிலையில் மனமானது வேண்டுமென்றே காம இச்சையை பல மடங்கு தூண்டிவிடும்.


மண்ணுலகிலும்,விண்ணுலகிலும் காமத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி பலருடைய ஆன்மீக முன்னேற்றத்தை தடுத்து நிறுத்திவிடுகிறார்கள்;சிலருடைய ஆன்மீக வளர்ச்சியை சிதைத்தும் விடுகிறார்கள்:காமம் சார்ந்த நிழல் அரசியல் இன்று நமது நாட்டின் மாவட்ட,மாநில,தேசிய அரசியலிலும்,அரசு அலுவலகங்களிலும் கொடிகட்டிப்பறக்கிறது.ஜோதிடப்படி விளக்கினால்,தேவையற்ற சிக்கல் வரும் என்பதால் விளக்குவது பாவம்;எனவே, விஷயத்துக்கு வருவோம்:=


இந்த சூழ்நிலையானது செல்போன்களின் பரவலும்,இணையத்தின் பரவலும் வரும் முன்பு இருந்த காமம் பற்றிய பொதுவாழ்வியல் உண்மைகள் ஆகும்.


ஆனால்,தற்போது 16 வயதிலேயே காமம் பற்றிய அனுபவங்களில் ஈடுபட்டு 26 வயதுக்குள் ‘அனைத்தையும்’ முடித்துவிடும் வேகமான வாழ்க்கையானது தமிழ்நாடெங்கும்,இந்தியாவெங்கும்,உலகமெங்கும் “அமெரிக்காவின் உலகமயமாக்கலால்” பரவிக்கொண்டிருக்கிறது.


இருந்தும் கூட,அளவற்ற காம இச்சையை விட்டு ஒரேயடியாக விலக மாட்டோமா? என்று ஏங்குபவர்கள் இருக்கிறார்கள்.அவர்களுக்கே இந்தப் பதிவு எனது ஆன்மீக குரு  அவர்களின் போதனைப்படியும்,வழிகாட்டுதல் படியும் வெளியிடப்படுகிறது.இந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுவதால், காம இச்சை முழுமையாக நீங்கும் என்று நினைக்காதீர்கள்.அளவற்ற காம இச்சையானது வராது;தாம்பத்தியத்திற்கு எந்த பங்கமும் வராது.


இல்லறமல்லாத துறவறம் நாம் வாழ்ந்து வரும் கலிகாலத்தில் சாத்தியமில்லை;பல்வேறு காரணங்களால் பல இளைஞர்களும்,இளம் பெண்களும், திருமணம் செய்யாமலேயே துறவறத்துக்கு வந்துவிடுகிறார்கள்.இது மாபெரும் தவறு! காமத்தில் முழு இன்பத்தை அனுபவிக்க திருமணம் செய்து சுமார் 25 ஆண்டுகள் வாழ்ந்தப்பின்னரே,நிஜமான துறவறம் அல்லது ஆன்மீகத்துக்குள் மனமானது தயாராகும்.ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கே ரமண மகரிஷி போல சிறு வயதிலேயே துறவறம் வரும்;மற்றவர்களெல்லாம் சும்மா உடான்ஸ் பார்ட்டிகள்.நாம் ரமண மகரிஷி போன்ற பிறவியாக இருந்தால் ஏன் ஊருக்குள் இருக்கப் போகிறோம்? காட்டுக்குள்ளே போய் தானே வாழ்வோம்? நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பாராவை எழுதியிருக்கிறோம்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கை அழிந்து வந்தாலும்,ஓவராக ஆடியவர்கள் படாத பாடு பட்டுத்தான் ஆக வேண்டும்.

உங்கள் ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்கு ஒரு பவுர்ணமிக்குச் செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும்போது நெய்தீபம் ஏற்றிடத் தேவையான பொருட்கள்,ஆறு வாழைப்பழங்கள்,பத்தி,வெற்றிப்பாக்கு,(கொட்டைப்பாக்கு பயன்படுத்தவும்),ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழம் குறைந்தது அரைக்கிலோ.
இவைகளுடன் ஒரு பவுர்ணமியன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் ஏதாவது ஒரு 30 நிமிடத்தை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.


ஜீவசமாதிக்குச் சென்று முதலில் நெய்தீபம் ஏற்றுங்கள்;பாக்கெட்டில் அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கிழித்து வையுங்கள்.30 நிமிடம் அந்த மஹானிடம் மனதார அமர்ந்து ஒரு மஞ்சள் துண்டு விரித்து,அதில் அமர்ந்து அவரை நோக்காமல்(சைடாக அமர்ந்து)பிரார்த்தனை செய்யுங்கள்.(எதிலிருந்தெல்லாம் விலக வேண்டும் என்பதை மனதுக்குள் வேண்டுங்கள்)
பிரார்த்தனை நிறைவடைந்ததும்,திராட்சையையும்,டயமண்டுகல்கண்டையும் அங்கேயே விநியோகம் செய்யுங்கள்;சில ஜீவசமாதிகளில் ஆட்கள் அவ்வளவாக வருவதில்லை;அப்படிப்பட்ட இடங்களில் அனைத்துப்பொருட்களையும் விட்டுவிட்டு நேராக உங்களுடைய வீட்டுக்குச் செல்லுங்கள்;


இப்படி பவுர்ணமி துவங்கி தொடர்ந்து 27 நாட்கள் இதே போல வழிபாடு செய்யுங்கள்.27 ஆம் நாளன்று அந்த ஜீவசமாதியில் அன்னதானம் செய்ய வேண்டும்;அது இயலாதவர்கள், அன்னதானத்துக்குத் தேவையான அரிசி,காய்கறிகளை (உங்கள் சக்திக்கு தக்கவாறு) வாங்கித் தரவும்.ஜீவசமாதியானது யாருடைய நிர்வாகத்திலும் இல்லாமல் இருந்து,ஊருக்கு வெளியே தொலைதூரத்தில் இருந்தால்,உங்கள் ஊரில் இருக்கும் புராதனமான சிவாலயத்தில் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்துவிடுங்கள்:இப்படிச் செய்து முடிப்பதன்  மூலமாக உங்களுடைய அளவற்ற காம இச்சை சராசரியாகிவிடும்.
இந்த நாட்களிலிருந்து எதெல்லாம் உங்கள் மனத்தை அளவற்ற காம இச்சையைத் தூண்டுவதற்குக் காரணமாக இருக்கிறதோ அவைகளிலிருந்து விலகி இருங்கள்;


முயலுவோம்;வெற்றி பெறுவோம்;


ஓம்சிவசிவஓம்

ஓம்சிவசிவஓம் பற்றி திருமந்திர விளக்கம்






தமிழ்,தமிழ்நாடு,தமிழ்ப்பண்பாடு என்று பேசுபவர்களும்,எழுதுபவர்களும் ஒன்றை வேண்டுமென்றே மறந்துவிடுகிறார்கள்:நமக்கு மட்டுமல்ல;இந்த பூமிக்கு தமிழ்மொழியை கொண்டு வந்தவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர்! ஆக,நமது தமிழ்மொழியின் தந்தையாக நாம் அகத்தியரையே போற்றிக் கொண்டாட வேண்டும்.தமிழின் பெயரைக்கொண்டு பிழைத்தவர்கள் அப்படி நமக்கு அறிவுறுத்தினார்களா?

தமிழ் மொழியின் இலக்கியக்களஞ்சியத்தின் அளவு மிகப் பெரியது;தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம்,திருப்பாவை,     யாப்பிலக்கணம்,சிலப்பதிகாரம்,மணிமேகலை,திருக்குறள்,தொல்காப்பியம்,சித்தர்கள் எழுதிய நிகண்டுகள்,வைத்திய நூல்கள்,ரசவாதம் தொடர்பான ஓலைச்சுவடிகள்,ஜோதிடம் தொடர்பான புலிப்பாணி 300 போன்ற பாடல் தொகுப்புகள் முதல் இன்றைய பாரதியார்க் கவிதைகள்,மு.வ.வின் படைப்புகள் வரையிலும் மிக பிரம்மாண்டமானவை.இவைகளின் பெயர்களே இன்று நம்மில் பலருக்குத் தெரியவில்லை;தமிழ் வைத்திய முறையான சித்தமருத்துவமே இன்றைய ஆயுர்வேத மருத்துவமுறைக்கு மூலகர்த்தா என்பதை வைத்தியம் சார்ந்த முனைவர் பட்டம் பெறுபவர்கள் கண்டறிந்துள்ளனர்.அப்படிப் பார்த்தால் தமிழ் வைத்தியமுறையான சித்த மருத்துவத்துக்கு இப்போது போதுமான அங்கீகாரம் கிடைத்துள்ளதா? அப்படிக் கிடைக்க நமது தமிழினத் தலைவர்கள் என்ன முயற்சி எடுத்துள்ளார்கள்?


இந்த உலகத்தில் எந்த ஒரு நாட்டின் முதலீடும்,எந்த ஒரு நாட்டின் அறிவுச் செல்வமும் இல்லாமலேயே சுமார் 20,00,000 ஆண்டுகளாக தன்னிறைவோடும்,சிறந்த மனிதப்பண்பாட்டோடும் வாழ்ந்து வருவது நம் தமிழினம் மட்டுமே!
தமிழினத்தின் அடையாளமாக இருக்கும் திருமந்திரத்திலிருந்து கொஞ்சம் பாடல்களையும்,விளக்கங்களையும் உங்கள் முன் வைப்பதில் பெருமை கொள்கிறோம்:
திருமூலர் வழங்கிய திருமந்திரம் ஒன்பது தந்திரங்களைக் கொண்டது;இருநூற்றி முப்பத்திரண்டு அதிகாரங்களை உடையது;மூவாயிரம் செய்யுள்(ஆதிகாலத்து பாடலின் பெயர்)களைக் கொண்டது என்று நாம் அறிந்திருந்தாலும்,நிஜத்தில் மூவாயிரத்து அறுபத்தொரு செய்யுள்களைக் கொண்டது.கூடுதலாக இருக்கும் செய்யுள்கள்,உரையாசிரியர்களால்(விளக்கமளித்த ஆசிரியர்கள்) எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.


திருமந்திரம் நூலில் ஒன்பது தந்திரங்களும்,இருநூற்றி முப்பத்திரெண்டு அதிகாரங்களையும் பேரின்பத்தினை துய்த்ததற்கரிய வழிகளாகிய சரியை,கிரியை,யோகம்,ஞானம் ஆகிய நான்கு நெறிகளை விளக்கி நிற்கிறது.


“உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த் தேனே”
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்”
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்”
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
“என்னைநன் றாக இறைவன் படைத்தனன்
தன்னைநான் றாகத் தமிழ்செய் யுமாறே”


மேலே கண்டுள்ள இவையும் இவை போன்ற பிறவும் திருமூலர் வழங்கியுள்ள திருமந்திரத்தில் தான் உள்ளன.


சிவனொடொக் கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடொப் பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன் ஓளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே.


விளக்கம்:சிவபெருமானுக்கு ஒப்பாகும் தெய்வம் எங்கு தேடினும் இல்லை;அச் சிவனுக்கு நிகரானவர் யாவரும் இலர்;எல்லா உலகங்கட்கும் அப்பாற்பட்டுள்ளவன்.அச்சிவம் பொன் போல ஒளிவிடும் தீவண்ணம் போன்ற சடைமுடி உடையவன்.அவன் அன்பர்களின் மனத்தாமரையில் அமர்ந்திருப்பவன்.


ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பற்றிய திருமூலரின் விளக்கம்

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே (திருமந்திரம் 330)

இதன் பொருள்:கொடிய பாவத்தையுடையவர்கள் சிவசிவ என்று கூறாமல் இருக்கின்றனரே! சிவசிவ என்பதை முறையோடு(முன்னும் பின்னும் ஓம்காரம் சேர்த்து) கூறினால்,கொடிய பாவங்கள் ஒழியுமே!! சிவசிவ என்பதை (முறையோடு தொடர்ந்து)கூறி வந்தால் தேவர்கள் ஆகலாமே!!! சிவசிவ என்று கூறச் சிவகதியையும் அடையலாம்.

 நன்றி:தினம் ஒரு திருமந்திரம் எளிய அறிமுகம்,பக்கம்175.எளிய உரை: கண்ணப்ப முதலியார்,வெளியீடு:ராமையா பதிப்பகம்,சென்னை-14.


ஓம்சிவசிவஓம்

நமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும் வழுவூர் வீரட்டானம்!!!







உங்களுடைய பிறந்த லக்னம் ரிஷபம் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் இந்தப் பிறவி முழுவதும் செய்யும் நற்செயல்கள் மற்றும் தீயச் செயல்கள் அனைத்தும் ரிஷப லக்னத்துக்கு பத்தாமிடமான கும்பத்தில் பதிவாகிக்கொண்டே வரும்;இந்த ஜன்மம் முடிந்தப்பின்னர்,நீங்கள் செய்திருக்கும் பாவ புண்ணியத்துக்கு ஏற்ப பூமிக்கு மேலே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் அல்லது பூமிக்கு கீழே இருக்கும் உலகங்களில் ஏதாவது ஒன்றில் சில வருடங்கள் அனுபவித்துவிட்டு,மீண்டும் இந்த பூமியிலேயே பிறப்பீர்கள்.அப்படி பிறக்கும்போது உங்களுடைய ஜன்ம லக்னம் கும்பமாக அமையும்.



இரண்டாவது பிறக்கும் இந்த பிறவியில் கும்ப லக்னத்தில் பிறப்பதால்,இந்தப்பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் விருச்சிகராசியில் பதிவாகிவரும்.எனவே,மூன்றாவது பிறவியில் விருச்சிக லக்னத்தில் பிறப்பீர்கள்;விருச்சிக லக்னத்தில் பிறக்கும் உங்களுடைய மூன்றாவது பிறவியில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் சிம்மலக்னத்தில் பதிவாகிவரும்;அதனாலேயே,உங்களுடைய நான்காவதுபிறவியில் நீங்கள் சிம்மலக்னத்தில் பிறப்பீர்கள்;அந்த நான்காவது பிறவியில் சிம்மலக்னத்தில் பிறப்பதால்,அதற்கு பத்தாவது ராசியான ரிஷபத்தில் உங்களுடைய அனைத்து கர்மாக்களும் பதிவாகும்;எனவே,உங்களுடைய ஐந்தாவது பிறவியில் நீங்கள் பிறக்கும் லக்னம் ரிஷபம் ஆகும்.மறுபடியும் முதலில் இருந்து உங்களுடைய வாழ்க்கை வட்டம் ஜன்ம ஜன்மங்களாக அமையத்துவங்குகிறது.

எனவே தான் உங்களுடைய கடந்த நான்கு பிறவிகளில் நீங்கள் செய்திருக்கும் பாவ மற்றும் புண்ணியச்செயல்களை மொத்தமாக அனுபவிக்க இந்தப்பிறவி எடுத்துள்ளீர்கள்;ஒருவேளை அப்படி முழுமையாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை உருவானால் அடுத்தடுத்த பிறவிகளில் மீதியை விட்டகுறை;தொட்ட குறையாக அனுபவிக்க வேண்டியிருக்கும்;சிலருக்கு கடந்த மூன்று பிறவிகளில் யார் கணவன்/மனைவியோ அவரே இந்தப் பிறவியிலும் அமைவதுண்டு;இப்படி அமைவதை அவரவர் பிறந்த ஜாதகம் உறுதிப்படுத்தும்.

ஒரு நாட்டுக்கே அல்லது ஒரு மாநிலத்துக்கே தலைமைப்பதவிக்கு வருபவர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்;ஆனால்,இன்றைய கலியுகத்தில் அது அவ்வளவு சுலபமல்ல;இவர்கள் எடுக்கும் அரசியல் முடிவுகள் கோடிக்கணக்கான மக்களின் வேதனையை அதிகப்படுத்தினாலோ அல்லது லட்சக்கணக்கான மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்தாலே அதை அனுபவிக்கவே இவர்கள் பல ஆயிரக்கணக்கான மனிதப்பிறவிகள் எடுக்க வேண்டியிருக்கும்.
நமது ஆன்மீக குருநாதர்கள் மற்றும் ஜோதிட வழிகாட்டிகளிடம் பிடிவாதம்பிடித்து உங்களுக்காக இந்தப்பதிவினை சமர்ப்பிக்கிறேன்.இந்தப்பதிவில் வெளியிடப்படும் அத்தனையும் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்ட ஜோதிட ரகசியம் ஆகும்.



நாம் கடந்த நான்கு அல்லது ஐந்து பிறவிகளில் செய்திருக்கும் புண்ணியச் செயல்களால் நமக்கு இந்தப்பிறவியில் இவ்வளவு செல்வ வளம்,வசதிகள்,வீடு,வாகன வசதி,வாழ்க்கைத்துணை மற்றும் காதலி/காதலன் கிடைத்திருக்கிறது.


அதே போல கடந்த நான்கு அல்லது ஐந்துபிறவிகளில் நாம் செய்திருக்கும் பாவச்செயல்களின் விளைவுகளே இந்தப்பிறவியில் நமது நோய்,கடன்,அவமதிப்பு,அரசதண்டனை,தனிமையின் கொடுமை,ஏதாவது ஒரு குறைபாடு,காமரீதியான அவமானங்கள் ஏற்படுகின்றன.


இந்தக் கலியுகத்தில் நாம் பாவம் மிகச் சுலபமாகச் செய்யமுடியும்;புண்ணியத்தை மிக எளிதாக சேர்க்கவும் முடியும்.நமது மனநிலையில் பொறாமை,கோபம்,அளவற்ற காம இச்சை,யாரையும் நம்பாத சுபாவம்,யாரையும் எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் குணம்,தன்னைத் தவிர பிறரை மிகவும் இழிவாக நினைக்கும் குணம்,பிறரது சந்தோஷத்தைப் பார்த்து மனம் புழுங்கும் சுபாவம்,தன்னை விடவும் தனது மகன்/ள் பெயரும் புகழும் பெற்றுவிடக்கூடாது என்ற பொறாமைத்தீ போன்றவைகள் வராமல் பார்த்துக்கொண்டாலே போதுமானது;இப்படிப்பட்ட சுபாவங்கள் அல்லது குணங்கள் இருந்தாலும் இதிலிருந்து மீளமாட்டோமா? என்று ஏங்குபவர்கள் ஏராளம்.அப்படி ஏங்குபவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது!!!


ஏதாவது ஒரு அமாவாசையன்று ஒரு மஞ்சள் துண்டின் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;இரு கைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.(மற்றவைகளை பயன்படுத்தக்கூடாது)செல்போன்,டிவி,ரேடியோ என அனைத்தையும் ம்யூட்டில் வைத்துவிட்டு,முதலில் உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒருமுறை ஜபிக்கவும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒரே ஒருமுறை ஜபித்தால் போதுமானது)குல தெய்வம் தெரியாதவர்கள்,தங்களுடைய இஷ்ட தெய்வத்தை நினைத்து இதுபோல ஒருமுறை மட்டும் ஜபிக்க வேண்டும்;(மஞ்சள் துண்டினை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;மனம் ஒத்த தம்பதி எனில்,இருவரும் ஜபிக்க பயன்படுத்தலாம்)
அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒரு முறை ஜபிக்க வேண்டும்;அடுத்தபடியாக நமது நியாயமான கோரிக்கை ஒன்றை மட்டும் வேண்ட வேண்டும்;(எனது அத்தனை கடன்களும் இன்னும் ஓராண்டில் தீர வேண்டும்/எனது மகளு/னுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்/நான் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும்)பிறகு ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் என்று பத்து நிமிடம் வரையிலும் மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.இப்படி நாம் ஆரம்பித்த அமாவாசையில் இருந்து அடுத்த அமாவாசை வரையிலும் தினமும் 10 நிமிடம் வரை ஜபித்து வர வேண்டும்.



இரண்டாவது அமாவாசை முதல் ஒரு நாளுக்கு 20 நிமிடம் வரையிலும் ஜபிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்;மூன்றாவது அமாவாசை முதல் 30 நிமிடத்துக்கு ஜபிக்க வேண்டும்;நான்காவது மாதத்தில் இருந்து ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த நான்காவது மாதத்தில் இருந்து உங்களுடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் சின்ன சின்ன சிக்கல்கள் தானாகவே அவிழ்ந்து,தினசரி வாழ்க்கை நீங்கள் நினைக்கும் விதமாக மாறத்துவங்கும்;இப்படி ஆறுமாதம் வரை நீங்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,உங்களது ஜப எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துவிடும்.அப்படிக் கடந்ததும்,நீங்கள் சிவனது அருட்பார்வைக்குக் கட்டுப்பட்டவர் ஆவீர்கள்:உங்களை சிவனது சூட்சும அருள் சக்தி பாதுகாக்கத் துவங்கும்;நீங்கள் யார் மீது பாசமாக இருக்கிறீர்களோ,அவர்களையும் சேர்த்தே பாதுகாக்கத் துவங்கும்;வர வேண்டிய ஆபத்துக்களை இந்த மந்திர ஜபம் தடுத்துவிடும்.கிடைக்க வேண்டிய யோகங்களை இரண்டு முதல் ஐந்து மடங்கு அதிகளவில் கிடைக்கச் செய்யும்.


ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் தேவையான தகுதி இரண்டே இரண்டு மட்டுமே:=1)21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்;
2)அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.
பெண்களும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;பெண்கள் இந்த மந்திரத்தை ஜபித்து வரும்போது மாத விலக்கு நாட்களில் ஐந்து நாட்கள் வரையிலும் ஜபிப்பதை நிறுத்த வேண்டும்;இந்த ஐந்து நாட்களிலும் அசைவம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.(மாதவிலக்கு நாட்களில் அசைவம் சாப்பிடுபவர்கள் கூடுதலான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்;மேலும்,மன உறுதியை இழக்கிறார்கள்;தங்களுடைய தேஜஸ்ஸை இழக்கிறார்கள்)




ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் தாம்பத்தியத்தில் ஈடுபட எந்தக் கட்டுப்பாடும் கிடையாது;ஆனால்,பல மந்திரங்களை ஜபிக்க மட்டுமல்ல;உபதேசம் பெறுவதற்கே பூரணமான பிரம்மச்சார்யம் பெற வேண்டும்;ஒருபோதும் மன்மத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.எனவேதான் நமது இந்து தர்மத்தின் பல மந்திரங்களும்,அதை பயன்படுத்தும் முறைகளும் குருமுகமாக மட்டுமே பிரபலப்படுத்தப்படுகின்றன.ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு குரு உபதேசம் கூடத் தேவையில்லை;வாசித்தாலே போதும்.தற்காலத்தில் பல மந்திரங்களை வார இதழ்களிலும்,மாத இதழ்களிலும்,ஜோதிட மற்றும் ஆன்மீக வெளியீடுகளிலும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.அவற்றில்பெரும்பாலானவை சமஸ்க்ருத மந்திரங்களும் உண்டு;இந்த மந்திரங்களை தகுதி உடையவர்கள் மட்டுமே ஜபிக்க வேண்டும்;அதுவும் குரு உபதேசம் பெற்றப்பின்னரே ஜபிக்க வேண்டும்.இது கூட நமக்குத் தெரிவதில்லை;இதுபோன்ற சமஸ்க்ருத மந்திரங்களை தினமும் அல்லது எப்போதும் ஜபித்துக்கொண்டே வருவதால் பலருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது;அல்லது முழுமையான துறவறத்தில் கொண்டு போய்விட்டிருக்கிறது.முறையான குருவைத் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை;எங்குமே போலிகளும்,பந்தா செய்பவர்களும் ,சொந்த ஜாதிப்பாசம் உடையவர்களுமே இருக்கிறார்கள்.தகுதியை பார்க்கும் ஆன்மீக குருநாதர்கள் அருகிப்போய்விட்டனர்.

ஏன் நமது குலதெய்வத்தை முதலில் நினைக்க வேண்டும் தெரியுமா? இது ஒரு சக்தி வாய்ந்த அதே சமயம் மிக எளிதான மந்திரம் ஆகும்.ஓம்சிவசிவஓம் ஒரு அற்புதமான ஆச்சரியங்களை தனக்குள் வைத்திருக்கும் கலியுக மந்திரம் ஆகும்.இதை ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் 100 நாட்கள் வரையிலும் தினமும் நீங்கள் ஜபித்தால் இந்த மந்திரத்தின் வலிமை,சக்தி,வீச்சு,உள்ளார்ந்த ஆத்ம மதிப்பீட்டை உணருவீர்கள்.அதன்பிறகு,உங்களால் சும்மா இருக்க முடியாது;இந்த மந்திரத்தை நீங்களே பரப்ப ஆரம்பிப்பீர்கள்;யாம் பெற்ற இந்த இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற தணியாத ஆன்மீக வேட்கை உருவாகும்;

பூர்வ புண்ணியம் வலுத்தவர்களும்,தங்களின் குலதெய்வத்தின் ஆசி உள்ளவர்களும்,முற்பிறவி ஒன்றில் ஆழ்ந்த தெய்வ பக்தி உள்ளவர்களும்,முறையற்ற உறவில் ஈடுபடாதவர்களும்,முறையற்ற உறவுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தராதவர்களும் , இந்தப்பிறவியில் யாருக்கும் எப்போதும்(முடிந்தவரையிலும்) தீங்கு தராதவர்கள் மட்டுமே இந்த மந்திர ஜபத்தைச் செய்ய முடியும்.மற்றவர்களுக்கு இது ஒரு வார்த்தை அவ்வளவே!



குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் இந்த இரண்டு ஆண்டுகளும் ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்க வேண்டும்;ஆறு மாதத்துக்கு ஒரு லட்சம் தடவை வீதம் இரண்டு ஆண்டுகளில் நமது ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டியிருக்கும்.அப்படி நமது எண்ணிக்கை நான்கு லட்சங்களைத் தாண்டிய பிறகு,ஒரு நாள் திடீரென ஸ்ரீகாலபைரவர் மற்றும் சதாசிவனின் பெருமைகள் தகவல்களாக உங்களைத் தேடி வரும்.அட்டவீரட்டானம் பற்றிய பெருமைகள் உங்களை மனதுக்குள் காந்தம் போல இழுக்கும்;அப்போது தாங்கள் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் எட்டாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் வழுவூர் என்னும் கிராமத்துக்குச் செல்வீர்கள்;ஸ்ரீகாலபைரவர் சிவலிங்க வடிவில் இருக்கும் அட்டவீரட்டானங்களில் ஆறாவது வீரட்டானம் இது!



இந்த வழுவூர் வீரட்டானத்துக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும்;ஒவ்வொரு மாதமும் வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்றும் இங்கே வர வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து எட்டுஇ திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு வர வேண்டும்;அப்படி வந்து,திருவாதிரை நாளில் வரும் இராகு காலத்தில் இங்கே வந்து அபிஷேகம் செய்ய வேண்டும்;நைவேத்தியமாக வெண்பொங்கல் வைக்க வேண்டும்;வில்வதளங்கள்,மஞ்சள் பொடி,நல்லெண்ணெய்,அரிசிப்பொடி,விபூதி,தேன் இவைகளால் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்;அப்படி அபிஷேகம் நடக்கும்போதும்,மஞ்சள் துண்டின் மீது அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்;அவ்வாறு ஜபிக்கும்போது சில அரிய காட்சிகளைக் காண்பீர்கள்;சிலருக்கு அபிஷேகம் முடிந்து பிரகாரத்தைச் சுற்றி வரும்போது அரிய சிவ காட்சிகள் தெரியும்;இன்னும் சிலருக்கு வழிபாடு முடிந்து தமது தங்குமிடத்துக்குச் சென்று,இரவில் தூங்கும்போது அரிய,அதே சமயம் இதுவரை கனவில் வராத காட்சி தென்படும்.




இந்த பதிவினை வாசித்துவிட்டு,ஆர்வக் கோளாறில்(இரண்டு ஆண்டுகள் ஓம்சிவசிவஓம் ஜபிக்காமல்) வழுவூருக்குச் செல்பவர்களுக்கு எதுவும் தெரியாது;வெறும் கோவிலுக்குச் சென்று வந்த உணர்வு மட்டுமே மிஞ்சும்;சிவலிங்க வடிவில் இங்கே ஸ்ரீகாலபைரவர் வசித்துவருகிறார்;இவரது திருவிளையாடல் இங்கே நடந்திருப்பதால்,நமது வாழ்க்கையில் இம்மைக்கும்,மறுமைக்கும் தேவையான சிலபல ரகசியங்களை அறியும்முறையை விவரித்துவிட்டோம்.முறைப்படி முயற்சி செய்பவர்கள் ஜன்மாந்திர ரகசியங்களை அடைவார்கள்: பைரவரின் தரிசனம் பெறுவார்கள்:பிறப்பின் நோக்கமறிவார்கள்!!!

ஓம்சிவசிவஓம்

நமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி!!!







நாம் உண்ணும் உணவில் எப்போது மேல்நாடுகளின் முறைகளையும்,மேல்நாட்டு உணவுகளையும் பின்பற்றத் துவங்கினோமோ, அப்போதே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் அடிக்கல் நாட்ட நாம் காரணமாகிவிட்டோம்;மருத்துவத்திற்கான தர்ம விதிகள் காணாமல் போய் இன்று பணமே பிரதானம் என்று ஆகிவிட்டநிலையில் நமது இந்துதர்மத்தின் மருத்துவமுறைகளான ஆயுர்வேதம்,சித்தமருத்துவம் போன்றவை மிகக்குறைந்த கட்டணத்தில் நோய்களை வெகு சுலபமாகத் தீர்க்கின்றன.அந்த வரிசையில் தற்போது நியூரோதெரபியும் சேர்ந்துவிட்டது என்று கூறலாம்.

நமது உடலில் நாடியும் நரம்பும் ஒன்று சேரும் இடங்களே வர்மப்புள்ளிகள் ஆகும்.இந்த வர்மப்புள்ளிகளை சரியான விதத்தில் தூண்டிவிட்டாலே எந்த ஒரு நோயின் தீவிரத்தையும் உடனடியாகக்  குறைக்க முடியும்.இந்த கருத்தின் அடிப்படையில் உருவான போர்க்கலையே களரி;இதே கருத்தின் அடிப்படையில் தோன்றிய மருத்துவசிகிச்சை முறையே நியூரோதெரபி ஆகும்.தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 நியூரோதெரபிஸ்ட்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.இவர்களைப் பற்றி முன்பே நமது ஆன்மீகக்கடலில் எழுதியிருக்கிறோம்.

திருச்சியில் கடந்த எட்டு ஆண்டுகளாக முழுநேரமாக நியூரோதெரபி மருத்துவம் செய்து வரும் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களை ஒருமுறை (முன் அனுமதி பெற்று)சந்தியுங்கள்;பூரணமான உடல் நலத்தைப் பெறுங்கள்.அவருடைய செல் எண்கள்:8124879155,9894487122.இவரது விளக்கத்தை நமது யூட்யூப்பில் காணலாம்.

தனிமனித ஆரோக்கியம் தொடர்பான இவரது பேட்டிகள் மாதம் தோறும் நமது ஆன்மீகக்கடலில் யூட்யூப் மூலமாக வெளிவரும்.

ஓம்சிவசிவஓம்