Monday, September 10, 2012

சின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள்!!!




நாம் பயன்படுத்தும் சின்னம்/சின்னங்கள் நமது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன;அல்லது நமது லட்சியத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கின்றன;தகுந்த ஆன்மீக/ஜோதிட குருவின் மூலமாக இதைத் தேர்ந்தெடுப்பதால் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும்.நமது வலதுபக்கமூளையானது கற்பனை,படைப்பாற்றலைக் கொண்டது;இதை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களே தமது துறையில் சாதனையாளராகிறார்கள்.



தீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமே சிவகாசி ஆகும்.கொல்கத்தாவில்   1910களில் தீப்பெட்டித் தொழிலின் ரகசியத்தைக் கற்றுக்கொண்டு வந்த ஒருவர்,சிவகாசியில் முதன்முதலில் தீப்பெட்டித்  தொழிலை ஆரம்பித்தார்.அவரைத்  தொடர்ந்தே இன்று இந்தியா மொத்தத்திற்குமே தீப்பெட்டியை அனுப்பிவைக்கும் தொழிலாக வளர்ந்திருக்கிறது.காகா தீப்பெட்டி என்று ஒன்று இன்றும் இருக்கிறது.இந்த நிறுவனர் காகா சண்முகநாடார்,அவரது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது தீப்பெட்டித் தயாரிப்புக்கான அடையாளச்சின்னமாக காகாவை வைத்தார்.அவரது ஜாதகப்படி,அவரது பிறந்த நட்சத்திரத்துக்குரிய பஞ்ச பட்சியாக காகா வருகிறது.அதையே தனது தொழிலின் சின்னமாக வைத்தபடியால்,தீப்பெட்டியில் கோடிகளை சம்பாதித்தார்.இதே போல சுமார் 4000 சின்னங்களில் சிவகாசி முழுவதுமே தீப்பெட்டிகள் தயாராகிவருகின்றன.ஆனால்,ஒருசில சின்னங்களில் தயாராகும் தீப்பெட்டிகளே கோடி ரூபாய்களை சம்பாதித்து தந்துகொண்டிருக்கிறது.



பஞ்சபட்சி என்பது ஜோதிடக்கலையில் ஒரு சூட்சுமமான அதே சமயம் அதிசக்திவாய்ந்த ரகசியக்கலை ஆகும்.நாம் வளர்பிறையில் பிறந்திருக்கிறோமா? அல்லது தேய்பிறையில் பிறந்திருக்கிறோமா? என்பதை நமது பிறந்த ஜாதகப்படி அறிந்து,அந்த வளர்பிறை அல்லது தேய்பிறை நட்சத்திரப்படி ஐந்து(பஞ்ச) பட்சிகளில் ஒன்று நமது பட்சியாக(பறவையாக) வரும்.அதையே நமது தொழிலின் சின்னமாக வைத்து,தொழிலைத் துவக்கினால்,நமது தொழிலில் நம்மை எந்தக் கொம்பனாலும் போட்டிபோட்டு நம்மை ஜெயிக்க முடியாது.நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் இந்தக் கலையில் நிபுணர்கள் ஆலோசகர்களாக இருக்கின்றனர்.



உதாரணமாக வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் எனில்,அவரது பஞ்ச பட்சியானது ஆந்தையாக வரும்;(உதாரணம் தான்;நிஜமான பட்சியைச் சொல்லவில்லை);இந்த வளர்பிறை ரோகிணியில்  பிறந்தவர்,ஒரு தமிழ் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது தொழிலை ஆரம்பிக்க வேண்டும்;அந்த குறிப்பிட்ட நேரமானது ராகு காலமாகவோ அல்லது எமகண்டமாகவோ கூட வரலாம்;ஆனால்,அந்த ராகு காலமோ/எம கண்டமோ அவருக்கு கெடுதல் செய்யாது;ஏனெனில்,அவர் தனது பிறந்த பட்சியின் அடிப்படையில் ஒரு தொழிலை அந்த நேரத்தில் ஆரம்பித்துவைக்கிறார்.



ஒரு தனிமனிதனுக்கே இப்படி எனில்,ஒரு நாட்டுக்கு? 



ஆமாம்,1940களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் சிலர் நமது இந்தியாவுக்கு வந்தார்கள்.மிகச் சிறந்த ஞானி ஒருவரை நமது இந்தியர் மூலமாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.அப்படிக் கண்டு கொண்டு,அந்த ஞானியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர்;


“உலக நாடுகள் அனைத்தும் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும்;இந்த பூமியில் எங்களுடைய ஆட்சியே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளிலும் நிலவ வேண்டும்;அதற்கு ஏற்றாற்போல ஒரு சின்னத்தை எங்களுக்கு தாங்கள் அருள வேண்டும்”என்று வேண்டி நின்றார்கள்.
அந்த ஞானிக்கு அமெரிக்காவுடைய எதிர்காலம் முழுமையாகத் தெரிந்திருக்கிறது.இந்த பதிவின் முகப்பில் நாம் கொடுத்திருக்கும் சின்னத்தை அந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வரைந்தே காட்டியிருக்கிறார்.இதன்படி,கழுகுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி உண்டு;அதையே அந்த அமெரிக்கர்கள் தமது நாட்டின் முக்கியமான சின்னமாக வைத்துக்கொண்டனர்.அந்த கழுகின் ஒரு கையில் வில்லும் அம்பும் இருக்கிறது;மறு கையில் சமாதானத்தை காட்டும் ஆலிவ் இலை இருக்கிறது.(இதன் அர்த்தம் என்னவெனில்,போரையும்,அமைதியையும் யுக்திகளாகக்கொண்டு,இந்த பூமியையே ஆட்சி செய்வோம்)கடந்த எழுபது ஆண்டுகளாக இதுதானே உலக அரசியலில் அமெரிக்கா செய்கிறது.


இந்த சின்னத்தைப் போல,நமது நாட்டுக்கும்,நாட்டு அரசாங்கத்துக்கும் என்று ஒரு தீரம் மிக்க சின்னத்தை நமது ஆளும் வர்க்கம் தேர்ந்தெடுத்தார்களா? அப்படி தேர்ந்தெடுத்திருந்தால் நாம் ஏன் இப்போதைய இழிவான நிலையை எட்டியிருக்கப் போகிறோம்? உலகத்துக்கே நாம் தான் வழிகாட்டியாக இருப்போமாம்;ஆனால்,நமது நாட்டு மக்கள் மட்டும் பல்வேறு விதங்களில் கஷ்டப்பட வேண்டுமாம்;எனது வாசக,வாசகிகளே, எப்போது நமது இந்தியா இந்த உலகத்தையே ஆளும்?


ஓம்சிவசிவஓம்

Sunday, September 9, 2012

சர்வாதிகாரத்தை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறார்களா நமது இந்தியாவின் முன்னணி அரசியல்த் தலைவர்கள்?



தினமும் பேப்பர் வாசிப்பவர்களுக்கும்,இந்தியாவை வல்லரசாக்க நினைப்பவர்களுக்கும் இந்த தலைப்பு ரொம்ப பிடிக்கும்;எனவே,இந்த தலைப்பிற்குரிய தகவல்களை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்; அல்லது அதற்குரிய காரணங்களை காமெண்டு பகுதியில் எழுதுங்கள்!!!

ஓம்சிவசிவஓம்

Saturday, September 8, 2012

நம்மை சிவ அம்சமான ருத்ரனாக்கும் திருவாதிரை கிரிவலம்!!!





மும்மூர்த்திகளான பிரம்மா எனப்படும் அயன்,திருமால் எனப்படும் விஷ்ணு,ருத்ரன் என்ற மூர்த்தி=இம்மூவரையும் நிர்வாகிப்பவர் பைரவப் பெருமான்.பைரவப் பெருமானை உருவாக்கியவர் சதாசிவன் எனப்படும் ஆதிசிவன்.இந்த சதாசிவனின் இருப்பிடமே திரு அண்ணாமலை ஆகும்.நாம் வாழும் பூமிக்கும் நவக்கிரகமண்டலங்களான சந்திரன்,செவ்வாய்,சுக்கிரன்,சனி,புதன்,சூரியன்,ராகு,கேது இவைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு மையமே விழுப்புரம் அருகில் இருக்கும் அருணாச்சலம் எனப்படும் அண்ணாமலை ஆகும்.அருணாச்சலத்தின் அவதார நட்சத்திரமே திருவாதிரை ஆகும்.


திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் விதங்களே ஒரு லட்சத்து எட்டு விதங்களாக இருக்கின்றன.சிவராத்திரி கிரிவலம்,அமாவாசை கிரிவலம்,துவாதசி கிரிவலம்,பவுர்ணமி கிரிவலம்,அவரவர் ஜன்ம நட்சத்திர கிரிவலம்,அவரவர்ஜன்ம திதி கிரிவலம்,அங்கப்பிரதட்சண கிரிவலம்,அடிக்கொரு 1008 அருணாச்சல மந்திர ஜப கிரிவலம்(இதை ஒரு தடவை முடிக்க சில மாதங்கள் ஆகும்) என்று இருக்கின்றன.திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நாளில் கிரிவலம் செல்வது  சிறந்த அதே சமயம் தகுதி வாய்ந்த சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கிரிவலம் ஆகும்.



நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு யோகக்காரகன் என்று பெயர்;நமது உடலில் இருக்கும் பிறப்பு உறுப்பையும்,அதற்குள்ளே இருக்கும் விந்து,சுக்கிலம்,சுரோணிதம் போன்றவைகளையும் நிர்வாகித்து பாதுகாத்து வருவது ராகுபகவானே.இவரது சாரமுள்ள நட்சத்திரங்கள் திருவாதிரை,சுவாதி,சதயம் ஆகும்.இந்த மூன்று நட்ச்த்திரங்களில் பிறப்பவர்கள் இந்த கலியுகத்தில் அதிகம்.இவர்கள் அளவுக்கதிகமாக உணர்ச்சிவயப்படுபவர்களாக இருக்கிறார்கள்:ஒரே நேரத்தில் நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளை செய்வதில் வல்லவர்கள்;அந்த நான்கு அல்லது ஐந்து விதமான வேலைகளையும் நுணுக்கமாகவும்,நேர்த்தியாகவும் செய்வதில் சமர்த்தர்கள்.குடும்பம்,நிறுவனம்,நட்பு வட்டம்,அரசியல் போன்றவைகளில் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் செய்யும் திறனும்,ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் பெரும் குழப்பத்தை சில நிமிடங்களில் சீர்செய்யும் சாகதபுத்தியும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உண்டு.

தொடர்ந்து 108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அண்ணாமலைக்கு வருகை தந்து கிரிவலம் செல்பவர்களுக்கு இப்பிறவியிலேயே அவர்கள் விரும்பும் எதையும் அருளுவார் அண்ணாமலையார்.ஒரு  நாளில் எந்த நேரத்தில் திருவாதிரை நட்சத்திரம் துவங்குகிறது என்பதை அறிந்து,அந்த நேரத்தில் இரட்டைப்பிள்ளையார் கோவிலில் கிரிவலத்தைத்  துவக்க வேண்டும்;அவ்வாறு துவக்கும்போது மஞ்சள் நிற வேட்டி அணிந்திருக்க வேண்டும்;பெண்கள் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்திருப்பது அவசியம் ஆகும்; இரண்டு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ஐந்து  முக ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்; நமது உச்சந்தலையில் மூன்று மடல்களைக் கொண்ட வில்வ இலையை ஒட்டி வைத்து புறப்பட வேண்டும்.இரட்டைப்பிள்ளையாரை வழிபட்டப்பின்னர்,தேரடி முனீஸ்வரரை வழிபட்டுவிட்டு,கிழக்கு கோபுரவாசலுக்கு நேராக சாலையில் நின்று அண்ணாமலையாரை மனப்பூர்வமாக தியானித்து நமக்கு வேண்டியதை அங்கேயே கேட்டுவிட வேண்டும்;இதற்கு கிரிவல வேண்டுதல் என்று பெயர்.(இது பலருக்குத் தெரியாது)இப்படி இங்கேயே வேண்டுவதன் மூலமாக கிரிவலப்பாதையில் இருக்கும் ஒன்பது லிங்கங்களிடமும் வேண்டிவிட்டதாகவே அர்த்தமாகிறது என்று ஒரு சிவனடியார் சொன்னது ஆச்சரியமளித்தது.(கடந்த காலங்களில்-கிரிவலம் புறப்படும் போது- கிழக்கு கோபுர வாசலில் நின்று வேண்டியதுதான் இதுவரை நிறைவேறியிருக்கிறது.கிரிவலப்பயணத்தில் வேண்டியது நிறைவேற வில்லை;)பிறகு கிரிவலம் செல்ல வேண்டும்;கிரிவலப் பயணம் முழுவதுமே ஓம்சிவசிவஓம் என்று ஜபித்தவாறு செல்ல வேண்டும்;


14 கி.மீ.தூரமுள்ள கிரிவலப்பாதையினை கடக்க குறைந்தது நான்கு மணி நேரமும்,அதிகபட்சம் எட்டு மணிநேரமும் ஆகிறது.இந்த கிரிவலப்பயணம் முழுவதும் எவரிடமும் பேசாமலும்,விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறும் சென்றால் நமது ஜப எண்ணிக்கை நிச்சயமாக ஒரு லட்சத்தைத் தொட்டுவிடுகிறது.இப்படி ஜபித்துவரும்போது நாம் இந்த மந்திர ஜபத்தை எண்ண வேண்டிய அவசியமில்லை;





கிரிவலப்பயணத்தில் ஆங்காங்கே தண்ணீர் அல்லது இளநீர் மட்டும் அருந்திக்கொள்ளலாம்.(காபி,டீ,பால்,குளிர்பானங்கள் அருந்தக் கூடாது) இவ்வாறு தண்ணீர் அல்லது இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபமானது நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.அண்ணாமலையின்  கிரிவலப்பாதையில் ஜபித்த ஓம்சிவசிவஓம் மந்திர ஜபமானது உடனே நமது உடலுக்குள் பதிவானால் வெகுவிரைவில் சிவனது அம்சமான ருத்ரனாக மாற நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.(தண்ணீர்,இளநீரைத்  தவிர வேறு எதை அருந்தினாலும்,எதை சாப்பிட்டாலும் மந்திரம் உடலுக்குள் பதியாமல் போய்விடும்;வீணாக எதைப்பேசினாலும் இதே கதிதான்)




இப்படி முதல்முறை மனக்கட்டுப்பாட்டுடன் கிரிவலம் வருவது மட்டும் சிரமமாக இருக்கும்;அசாத்தியமான மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே இப்படி 14 கி.மீ.தூரமும் மவுனமாக வர முடியும்.அப்படி ஒரேஒரு முறை கிரிவலம் மவுனமாக ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு வந்துவிட்டாலே மறு நாளே நமது கடுமையான பிரச்னை ஒன்று தீர்ந்துவிடும்;அல்லது தீர்ந்துவிடக்கூடிய சூழ்நிலை உருவாகிவிடும் என்பது அனுபவ உண்மை.கிரிவலம் முடிந்ததும்,கண்டிப்பாக மூலவரான அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.தரிசனம் செய்து விட்டப்பின்னர்,நேரடியாக நமது வீட்டுக்குச் செல்ல வேண்டும்;வேறு எந்த கோவிலுக்கும்,எவரது வீட்டுக்கும் செல்லக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.



இந்த கிரிவலத்துக்குப் பயன்படுத்தும் மஞ்சள் நிற ஆடைகளை வேறு எப்போதும் பயன்படுத்தக் கூடாது;துவைக்கக் கூடாது;ருத்ராட்சங்களையும் இதே போலத்தான்! ஒவ்வொரு முறையும் வேறுவேறு வில்வதளங்களை பயன்படுத்த வேண்டும்.திருவாதிரை,சுவாதி,சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரிவலம் மிகச் சுலபமாக கைகூடும்;தவிர,வேறு பலருக்கும் கைகூடும்.அந்த வேறு பலரில் நீங்கள் இருக்கிறீர்களா? என்பதை அறிய உங்களது  பிறந்த ஜாதகத்தை அனுப்பி விபரமறிந்து கொள்ளலாம்.அவ்வாறு அறிந்து கொள்ள விரும்புவோர்,மின் அஞ்சலில் subject இல் திருவாதிரை கிரிவலம் செல்லும் தகுதி அல்லது thiruvathirai girivalam என்று டைப் செய்து அனுப்பவும்


இப்படி குறைந்தது 27 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு அதிகபட்சமாக 108 திருவாதிரை நட்சத்திரநாட்களுக்கு கிரிவலம் வந்தால் நாம் சிவகணமாக மாறிவிடுவோம்;அல்லது ருத்ரனாக உயர்ந்து விடுவோம்;ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 13 திருவாதிரை நட்த்திரம் தான் வரும்;108 திருவாதிரை நட்சத்திர நாட்களுக்கு மொத்தம் ஒன்பது வருடங்கள் தேவைப்படுகின்றன.இது ஒரு மிக பிரம்மாண்டமான ஆன்மீகமுயற்சி! களத்தில் இறங்குவோமா?


இந்த நந்தன வருடத்தின் திருவாதிரை நாட்களின் பட்டியல்:



10.09.2012 திங்கள்(திங்களும் திருவாதைரையும் ஒன்றாக வருவது மிக அபூர்வமான தினமாகும்)


7.10.2012 ஞாயிறு காலை 6.08 மணி முதல் 8.10.2012 திங்கள் காலை 8.14 மணி வரை


3.11.2012 சனி மதியம் 1.14 மணி முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 மணி வரை(இரண்டு சூரியோதயங்களுக்குள் ஒரு நட்சத்திரம் வந்தால் அது முழுமை பெற்ற நட்சத்திரம் ஆகும்;இது உடைந்த நட்சத்திரம் ஆகும்.முழுப்பலன் பெற இந்த நட்சத்திரநாளைப் பயன்படுத்த நம்மால் இயலாது)


30.11.2012  வெள்ளி மாலை 5.19 மணி முதல் 1.12.2012 சனி இரவு 10.34 மணி வரை


27.12.2012 வியாழன் நள்ளிரவு மணி 3.24 முதல் 28.12.2012 வெள்ளி நள்ளிரவு மணி 5.45 வரை(மார்கழி மாதத்து பவுர்ணமி)

24.1.2013 வியாழன் காலை மணி 10.36 முதல் 25.1.2013 வெள்ளி மதியம் மணி 12.59 வரை

20.2.2013 புதன் மாலை மணி 5.52 முதல் 21.2.2013 வியாழன் இரவு மணி 8.18 வரை

19.3.2013 செவ்வாய் நள்ளிரவு மணி 1.11 முதல் 20.3.2013 புதன் நள்ளிரவு மணி 3.39 வரை


மீதி திருவாதிரை நட்சத்திர நாட்கள் விபரம் டிசம்பர் 2012 முடியும்போது வெளியிடப்படும்.இந்த பெருமுயற்சியைச் செய்ய விரும்புவோர் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்;முறையற்ற உறவு இருந்தால் அதை தலைமுழுக வேண்டும்.இவை இரண்டும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.இல்லாவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும்.ஜாக்கிரதை!!!




ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

Thursday, September 6, 2012

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை!!!







நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.
பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.
ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?

பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;

அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:

1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,

2.சென்னை அருகே இருக்கும் வானகரம்

3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              

5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி(பூசாரி கார்த்திகேய சர்மா செல் எண்கள்:9786134367,9786134371)

6.சிதம்பரம் கோவில்

7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்

8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)

9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை

10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்

11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)

12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி

13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.


17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.

18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வ விநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில், பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்-1.                    20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்( பஸ் ரூட்: பாகாயம் டூ காட்பாடி பேருந்துகள் எண்கள்:1,2 எனில் கல்யாண மண்டபம்  பஸ் நிறுத்தம்;            1G, 2G எனில் காங்கேயநல்லூர் ஸ்டாப்=ஆர்ச் அருகே இறங்கி நடந்து வரவேண்டும்)                                    21.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி,மத்ய கைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய் நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையார்,சென்னை-20(பேருந்து நிறுத்தம்:மத்திய கைலாஷ்)


இந்த ஆவணி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 8.9.12 சனிக்கிழமை முழுவதும் இருக்கிறது,
சனிக்கிழமை இராகு காலம் காலை 9 மணி முதல் 10.30 வரையிலும் வருகிறது.இந்த நேரத்தில் நாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண  பைரவர் சன்னதிக்கு வந்து மனதார  நமக்குத் தேவையான நியாயமான கோரிக்கைகளை பிரார்த்தனையாக வைக்க வேண்டும்;இந்த ஒன்றரை மணி நேரத்தில்(அந்தக் காலத்தில் இதை முகூர்த்தம் என்பர்) நாம் வேண்டும் நியாயமான எந்த கோரிக்கையும் நிச்சயமாக நிறைவேறும்.


இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.


இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
1.வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

கோவிலுக்குச் செல்ல இயலாதவர்கள்,தங்களுடைய வீட்டின் தெற்குச் சுவற்றில் எலுமிச்சை பழத்தால் ஒரு சூலாயுதம் வரைய வேண்டும்;அந்த சூலாயுதத்தின் மையப்பகுதியை பார்த்தவாறு மேற்கூறிய மூல மந்திரத்தை ஜபிக்கலாம்;

எம்மிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கியிருப்பவர்கள் அவருடைய பாதத்தை பார்த்தவாறு இந்த ராகு கால நேரத்தில் இந்த மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள்,இன்று 8.9.12 சனிக்கிழமை மட்டும் ஜபிப்பதை நிறுத்திவிட்டு,மேற்கூறிய வழிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்பின்பற்றி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்யலாம்.

சனியின் பிடியில் இருக்கும் கன்னி,துலாம்,விருச்சிகம்,மீனம்,மேஷம்,கடகம் ராசிக்காரர்கள் கண்டிப்பாக இந்த தேய்பிறை அஷ்டமியன்று வரும் ராகு கால நேரத்தில்(காலை 9 முதல்  10.30க்குள்)மூலமந்திரத்தை   330 முறை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபிக்கும் முன்பு வெள்ளைப்பூசணிக்காயினை இரண்டாக வெட்டி,அதன் உள்பாகத்தில் இருக்கும் சோற்றுப்பகுதியை நீக்கிவிட்டு,நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவிட்டு ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஓம்சிவசிவஓம்

ஏன் ஒரு கோடி பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்?



நல்ல கேள்வி!!! உங்களிடம் மூன்று கோடி ரூபாய்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்;அதைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம்?

நிச்சயமாக நாம் எதையெல்லாம் நீண்டநாட்களாக விரும்பினோமோ அதை அனுபவித்துவிடுவோம்;இன்றுதான் நமது நாட்டிலேயே விலை உயர்ந்த கார்கள்,விலைமதிப்பற்ற நகைகள்,ஆடம்பரமான வீடுகள் என எல்லாமே கிடைக்கின்றன.
ஒரு முறை எனது ஆஸ்தான ஜோதிடர் ஒருவரிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்டேன்:

அண்ணே,உங்களிடம் ஒரு கோடி ரூபாய் தந்து அதை ஒரே நாளில் செலவழிக்கணும்னு நான் சொன்னா நீங்க என்ன செய்வீங்க?

அவர் மனதுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்.அந்த  சிரிப்பின் ஒரு பகுதி அவரது புன்னகையாக வெளிவந்தது.

சொல்லுங்க; என்று அவரை வற்புறுத்தினேன்.

டெல்லியில் ஒரு ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் நிறுவனம் இருக்குது;அங்கே ஒரு நாள் வாடகை அம்பது லட்சம் ரூபாய்! அதை நம்ம ஊருக்கு வரச் சொல்லுவேன்;மீதியை எப்படிச் செலவழிப்பேன்னு உனக்குத் தான் தெரியுமே?
என அவர் படபடவென சொல்லி முடித்ததும்,நாங்கள் இருவருமே சிரித்தோம்;அந்த சிரிப்பு சிரித்து முடிய சில நிமிடங்கள் ஆனது.


இன்று நமது நாடு இருக்கும் நிலையில் சாதாரணக் குடும்பங்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதே பெரிய சாதனையாக மாறிவிட்டன;ஏனெனில்,தினம் தோறும் விலைவாசி ஏறுகிறது;ஆனால்,சம்பளம் மட்டும் வருடத்துக்கு ஒருமுறைதான் உயருகிறது.எப்படி காலம் தள்ளுவது?



தனிமனிதனின் நிலை உயர்த்தப்பட்டால்,அவனது உயர்வு அவன் பணிபுரியும் நிறுவனம் மற்றும் அமைப்பின் நிலையை உயர்த்திவிடும்.அந்த நிறுவனங்களின் நிலை உயர்ந்தால்,அதன் தொடர் விளைவாக ஒரு நாட்டின் நிலையும் உயர்ந்துவிடும்.எனவே,அடிப்படையில் ஒவ்வொரு தனிமனிதனையும் முன்னேற்றுவதே நமது இறைசேவை ஆகும்.ஆனால்,இன்று இலவசமாக இப்படிப்பட்ட முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக அமைப்புகளைத் தேட வேண்டியிருக்கிறது.அதற்கு தகுந்தாற்போல நமது நாட்டையும் முதலாளித்துவ நாடாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள்.இதனால்,பணம் இருப்பவர்களிடம் மேலும் மேலும் பெருமளவு பணம் குவிந்துகொண்டிருக்கிறது;பணம் இல்லாதவர்கள் தினசரி வாழ்க்கை வாழ்வதே சாதனையாகிக்கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இருப்பவன்,இல்லாதவன் இந்த இருவருக்குமிடையே இருக்கும் இடைவெளியைக் குறைக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாலும்,ஜபிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதாலும் உருவாகிவருகிறது.


தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழுகோடியே ஐம்பது லட்சம் பேர்கள் ஆகும்.தமிழ்நாட்டுக்கு வெளியே சுமார் மூன்று கோடித்தமிழர்கள் இந்தியாவெங்கும் மற்றும் உலக நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களில் பத்தில் ஒருவருக்கு ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்ற வழிமுறை சென்றடைய வேண்டும் என ஆன்மீகக்கடல் விரும்புகிறது.இந்த மகத்தான தெய்வீகம் சார்ந்த தேசசேவையில் நீங்களும் பங்கேற்கலாம்;எப்படித் தெரியுமா?


ஆயிரம் நோட்டீஸ் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு அனுப்பி வைக்கலாம்;ஆயிரம் நோட்டீஸிக்கு ரூ.450/-தான் ஆகிறது.அக்டோபர் 2012 வது மாதத்தில் இரண்டு சனிப்பிரதோஷங்கள் வர இருக்கிறது.இந்த நாட்களில் தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்களை விநியோகிக்கலாம் என்று திட்டமிட்டிருக்கிறோம்;(ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் குறைந்தது  5000 அச்சடித்து எமக்கு அனுப்புவது நல்லது)


அல்லது


நீங்களே அச்சடித்து உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸை விநியோகிக்கலாம்;இதன் மூலமாக உங்களால் உங்களுடைய ஊரில் ஒருசிலராவது ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்பார்கள்;அவர்கள் அவ்வாறு ஜபிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்கப்போவதால்,அவர்களின் ஜபத்தின் பலன்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் உங்களை வந்து சேரும்.இதன் மூலமாக உங்களுடைய மன உளைச்சலும்,பிரச்னைகளும் தீர்ந்துவிடும் அல்லது தீர்ந்துவிடுமளவுக்கு நீங்கள் சக்தி வாய்ந்தவராக மாறிவிடுவீர்கள்.கடந்த காலங்களில்  பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு இதுதான் நிகழ்ந்திருக்கிறது.


அல்லது


எம்மோடு அக்டோபர் 2012 இல் வரும் சனிப்பிரதோஷங்களில் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகிக்க வரலாம்;எங்கே என்பதை அறிய செல் எண்,போட்டோவுடன் மெயில் அனுப்பவும்;


அல்லது


இணையம் வழியாக ஓம்சிவசிவஓம் வலைப்பூவையும்,நோட்டீஸையும் பரப்பலாம்; groups, Facebook, google+,  free image hosting webs மற்றும் உங்களுடைய blogspots,wordpresses,google webpages,freewebs மூலமாக பரப்பலாம்.இப்படி இந்த வருடம் முழுவதும் பரப்புவது அவசியம் மற்றும் அவசரம் ஆகும்.ஏனெனில்,இதன் மூலமாக வர இருக்கும் அழிவுகளை பெருமளவு குறைக்க முடியும்.



நீங்கள் ஒரு நாளுக்கு 30 நிமிடம் வீதம் சுமார் 100 நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தீர்கள் எனில்,மேலே கூறிய அத்தனை விதமான வழிமுறைகளையும் நீங்களே நடைமுறைப்படுத்தத் துவங்குவீர்கள்.


ஒரு புள்ளிவிபரப்படி,சென்னையின் மக்கள் தொகை ஒரு கோடியை நெருங்கிவிட்டது;கோயம்புத்தூரின் மக்கள் தொகை பதினேழு லட்சம் ஆகும்.தவிர ,தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத்தொகுதிகள் இருக்கின்றன.இதுவரையிலும் சுமார் 25 நகரங்களில் இருக்கும் 30 சிவாலயங்களில் தான் ஓம்சிவசிவஓம் விநியோகம் ஆகியிருக்கிறது.இது போதவே போதாது;வாருங்கள்! கை கொடுங்கள்!! நமது ஆன்மீக சக்தியை அதிகரிப்போம்;நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆன்மீக வழியில் வலுப்படுத்துவோம்;இந்த உலகத்தின் ஒரே வல்லரசாக மாற்ற முயலுவோம்;


ஓம்சிவசிவஓம்

Wednesday, September 5, 2012

வாழ்க்கை,வக்கிரம் இரண்டில் எது நமக்குத் தேவை?


ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த அந்த இளைஞர்,இங்கிலாந்து தலைநகரில் மேல்படிப்புகள் முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.புது டெல்லியில் பணிபுரிந்துவருகிறார்.அவருக்கு ஒரு பெண்ணை திருமண நிச்சயம் செய்கிறார்கள்.அந்தப் பெண்ணோ புது டெல்லியிலேயே பட்டப்படிப்பு படித்து முடித்து,ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.

நிச்சயித்தப் பின்னர்,ஒரு நாள் அந்த பட்டதாரிப்பெண் இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு முடித்த தனது வருங்காலக் கணவரை சந்திக்கிறார்.அப்போது, “உனது அம்மா பட்டிக்காட்டுப் பெண்ணாக இருக்கிறார்;அவரை நான் எப்படி சமாளிப்பது?”என்று கேட்கிறாள்.
நிச்சயித்த திருமணம் நின்று போனது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மூன்று தலைமுறையாக வர்த்தகம் செய்து வரும் குடும்பம் அது.இந்த தலைமுறையில் வர்த்தகம் செய்பவரின் பெயர் சர்ஜீவ் பன்ஸல்.அவர் தனது மகன் அனின் பன்ஸலை எம்.பி.ஏ.,படிக்க வைக்கிறார்;படித்து முடித்து தனது தந்தையின் வர்த்தகத்தை கவனித்துவருகிறார்;இவருக்கு பட்டப்படிப்பு படித்த மற்றும் நல்லகுடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமண நிச்சயம் செய்கிறார்கள்.அந்த மணப்பெண்ணின் பெயர் ஆகாங்ஷா.
அந்தப்பெண் நிச்சயிக்கப்பட்டப்பிறகு,அனில்பன்ஸலிடம் அடிக்கடி தனியே பேசியிருக்கிறாள்.அப்போது, அவள் சொன்னதைக் கேட்டு சில நாட்களாக அனில் பன்ஸல் இரவு நேரங்களில் தூங்கவில்லை;
உனது தந்தையிடம் சொல்லி,உங்களுடைய வீடு,தொழில் இவைகளை உனது பெயரில் மாற்று;அதுவும் நமது திருமணத்துக்கு முன்பே இதைச் செய்து முடி.அப்போதுதான் நமக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
இதை தொடர்ந்து சில வாரங்களாக அவள் நச்சரிக்கவே அனில் பன்ஸல் ஒரு தீர்க்கமான பதிலை அவளிடம் சொன்னார்: என்னுடன் பிறந்தவர்கள் மூன்று பேர்கள்;நான் எப்படி எல்லாவற்றையும் என் பெயரில் மாற்றச் சொல்ல முடியும்?
ஆனால்,ஆகாங்ஷா தனது பேச்சில் உறுதியாக இருந்தாள்,முடிவாக அனில் பன்ஸல் தனது குடும்பத்தாரிடம் பேசி ஒரு பொது முடிவு எடுத்தார்;விளைவு? இவர்கள் திருமணம் நடைபெறவில்லை;
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

அந்த பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் அபிஷேக்கும்,பூஜாவும் அடிக்கடி வேலை நிமித்தமாக இந்தியா முழுக்க பயணிக்கும் சூழ்நிலையில் இருந்தனர்;இதுவே அவர்களை காதலர்களாக மாற்றிவிட்டது.காதல் இவர்களை வெகு விரைவிலேயே திருமணம் செய்யும் முடிவை எட்ட வைத்துவிட்டது.
இருவரும் திருமணம் செய்யும் முடிவுக்கு வரும் வரையிலும் பூஜாவின் செயல்கள் ஒரு முன்னுதாரணமான பெண்ணைப் போல இருந்தன;ஒவ்வொரு செயலிலும் அவளது புத்திசாலித்தனமும்,சக ஊழியர் மீதான அக்கறையும்,விட்டுக்கொடுத்தலும்,பொறுப்புணர்ச்சியும் தெரிந்தன.இவையே அபிஷேக்கைக் கவர்ந்தன;இந்த குணங்களால் இப்பேர்ப்பட்ட பெண்ணிற்கு தான் கணவனாக இருப்பதே பெருமை என்று எண்ணம் தலைதூக்கியது.
திருமணம் பற்றி இருவரும் பேசி முடிவெடுத்ததும்,அபிஷேக்கிற்கு வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை;தனிமையில் அழுதேவிட்டார்;நாம் இந்தியாவில்தான் வசிக்கிறோமா? என்ற சந்தேகம் அடிக்கடி வரத்துவங்கிவிட்டது.ஏனெனில்,பூஜா சொன்ன வார்த்தைகளால் அபிஷேக் திருமணம் பற்றிய நம்பிக்கையில் நிலைகுலைந்து போனான்;
“நாம் திருமணம் வரை காத்திருக்க வேண்டாம்;ஆனால்,குழந்தை பிறக்கக் கூடாது; இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொண்டால் திருமணம் செய்து கொள்ளலாம்;இல்லாவிட்டால்,வேறு ஒரு பெண்ணை பார்த்துக்கொள்ளுங்கள்”
பூஜாவிற்குப் பிடித்தது திருமணம் அல்ல;திருமணம் செய்து கொள்ளாமல் அபிஷேக் உடன் சேர்ந்து இருப்பது.
முடிவு?
அபிஷேக் ஒரு பி.காம்.படித்து இதுவரை வேலைக்கே செல்லாத பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
தற்போதைய கால கட்டத்தில் பூஜா,ஆகாங்ஷா போன்ற பெண்களின் எண்ணிக்கை குறைவு;இருப்பினும் இந்த எண்ணிக்கை வெகுவேகமாக அதிகரித்து வருகிறது.இந்துப்பண்பாட்டைக் காக்க வேண்டிய இந்தியப் பெண்களிடம் இப்படிப்பட்ட சிந்தனை எப்படி வந்தது?திமிர்த்தனத்தை மட்டுமே காட்ட வைக்கும் மெக்காலே கல்வித் திட்டத்தினால் வந்தது.மலட்டுத்தனம் நிறைந்த மெக்காலே கல்வித்திட்டத்தால் யாரும் யாரையுமே மதிக்காத பட்டதாரிகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.அதுவும் சுமார் 200 ஆண்டுகளாக!!!




திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் LIVING TOGETHER மூலமாக ஐரோப்பாவும்,அமெரிக்காவும் இன்று ஒற்றை இலக்கத்தில் ஜனத்தொகை வீழ்ச்சியைத் தொட்டிருக்கிறது.
பெண் சுதந்திரம் என்ற கருத்துருவாக்கம் 1960களில் ஐரோப்பாவிலும்,அமெரிக்காவிலும் உருவானது;அது 1990களில் யார் வேண்டுமானாலும்,யாரிடம் வேண்டுமானாலும்,எப்படி வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும்,எத்தனை முறை வேண்டுமானாலும் என்ற சுதந்திரமாக உருமாறிவிட,அங்கே குழந்தை பிறப்புவிகிதம் பெரும் சரிவை சந்தித்துவிட்டது;குழந்தை பிறப்பு விகிதிம் குறைந்து போய்விட்ட ஐரோப்பியக் கண்டம் தற்போது கிழட்டு நாடுகளாக மாறிக்கொண்டிருக்கின்றன;ஒரு புள்ளிவிபரப்படி, அமெரிக்காவின் மக்கள் தொகை 31 கோடி! ஆனால்,நமது இந்தியாவில் டீன் ஏஜ் எனப்படும் பருவ வயதினரின் மக்கள் தொகை மட்டும் 45 கோடிகள்!!



இதன் மூலமாக கி.பி.2100க்குள் ஆசியாவினர் நம்மை அடிமைப்படுத்திவிடுவார்களோ? என்ற பயம் வேறு அவர்களுக்குத் தொற்றிவிட்டது.
அதனால் தான்,தாம் எப்படி (பெண் சுதந்திரம்,பெண் உரிமை,ஆணும் பெண்ணும் சமம்,மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கும்,மாணவிகளுக்கும் தனித்தனி ஆஸ்டல் கிடையாது;) நாசமாகப் போனார்களோ,அதை நம்மிடம் பரப்பி வருகிறார்கள்.இந்த உலகமயமாக்கலின் விளைவே பூஜாக்களும்,ஆகாங்ஷாக்களும்!!!


Monday, September 3, 2012

சதுரகிரியில் ஒரு சித்தரின் நடமாட்டம்:நேரடி ஆதாரம்

சித்தர்களின் வீடாக இருக்கும் சதுரகிரியில் ஒரு சித்தர் சூட்சுமமாக நடந்து செல்வதை ஒரு பக்தர் வீடியோ எடுத்து யூட்யூபில் வெளியிட்டிருக்கிறார்.பார்க்கலாமா?