Monday, September 3, 2012

ஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத்தின் பரிதாப நிலையும்


முகவுரை: விஜயன் என்ற இளவரசன் தனது தோழர்களுடன் வட இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, இலங்கைத்தீவில் கரையிறங்குவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே, ஈழத் திருநாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கு வரலாற்று மற்றும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.

இராமாயணக் கதையின் முக்கிய வில்லன் பாத்திரமான இராவணன் என்ற அரசன் இலங்கையில் மிகச் சிறப்புடன் அரசாட்சி செய்து வந்தான் என்று இராமாயணம் மட்டுமல்ல, மேலும் பல சமய, இலக்கிய நூல்கள் எடுத்தியம்புகின்றன.
இராவணன் மிகவும் சிறந்த சிவபக்தன் எனப் புராணங்களும், இராமாயணமும்கூட எடுத்துரைக்கின்றன. (இராவணன் செய்த ஒரே குற்றம் மாற்றான் மனைவிமேல் மையல் கொண்டதுதான். அது வேறு தனிக்கதை.)

இராவணன் காலத்திலேயே இலங்கையில் சிவ வழிபாடு இருந்திருக்கின்றது என்பதைச் சிறு பிள்ளைகூட உணர்ந்துகொள்ள முடியும்.
இதற்கு பல ஆதாரங்கள் இலங்கைத் தீவிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. இவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழர்களால் இயலவில்லை.
இதற்கு முக்கிய காரணம், இலங்கைத் தீவின் ஆட்சி எல்லாளன் என்ற தமிழ் மன்னனின் கையிலிருந்து துட்டகைமுனு என்ற சிங்கள அரசனிடம் பறிபோன நாளிலிருந்து, இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பலவித உரிமைகளையும், அதிகாரங்களையும் இழந்தே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள்.
ஆகவே, இலங்கைத் தீவு முழுவதிலும் ஆட்சி செய்துவந்த தமிழர்கள் தமது வரலாற்று ஆதாரங்களைப் புதைபொருள் ஆராய்ச்சி மூலம் தேடி வெளிக்கொணர்வதற்குரிய வசதி வாய்ப்புகளை இழந்து வாழ்ந்தார்கள்.
போதாக்குறைக்கு, அக்காலத்திலிருந்து, புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பரணவிதான முதலிய சிங்கள ஆராய்ச்சியாளர்கள், தங்கள் கைகளில் கிடைத்த தமிழர்களுக்குச் சாதகமான ஆய்வுகளை மறைப்பதிலும், சிங்களவர்களுக்குச் சாதகமானவற்றை வெளியிடுவதிலுமே முழுக் கவனம் செலுத்தினார்கள்.
ஆயினும், போர்த்துகேயர் முதலிய அந்நிய ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகள் மற்றும் எமது திருக்கோயில்களை இடித்தொழிப்பதற்கு முன்னர் அவற்றின் அழகினால் கவரப்பட்டு அவர்கள் வரைந்த ஓவியங்கள் ஆகியவற்றின்மூலம் நமது பண்டைய வரலாற்றுச் சிறப்புகளில் சில துளிகளை அறியக்கூடியதாக உள்ளது.

அவைகளில் குறிப்பிடத்தக்கதோர் உண்மை, விஜயன் வருகைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இலங்கைத் தீவின் கரையோரங்களில் புராண காலத்து வரலாற்றுச் சிறப்பைக்கொண்ட ஐந்து ஈஸ்வரங்கள் (ஐந்து சிவன் திருக்கோயில்கள்) மிகச் சிறந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டு, வழிபடப்பட்டு வந்திருக்கின்றன என்பதாகும்.
இந்த ஐந்து ஈஸ்வரங்கள் எவை என்று பார்ப்போமா?

திருக்கேதீஸ்வரம் - மன்னார்
திருக்கோணேஸ்வரம் - திருகோணமலை
முன்னேஸ்வரம் - புத்தளம்
நகுலேஸ்வரம் - யாழ்ப்பாணம்
தொண்டீஸ்வரம் என்ற தேவன்துறை - மாத்தறை

இலங்கைத் தீவின் வரைபடத்தை எடுத்து வைத்து, இத் திருக்கோயில்கள் அமைந்திருக்கும்/ அமைந்திருந்த இடங்களை அவதானிப்போமானால், இலங்கைத் தீவின் கரையோரமாக, ஐந்து முக்கிய முனைகளில் இத் திருக்கோயில்கள் அமைந்திருப்பதை / அமைந்திருந்ததை நாம் உணர முடியும்.
'அமைந்திருந்ததை' என்று ஏன் இறந்த காலத்தில் சொல்கின்றேன் என்றால், இந்த ஐந்து புராதனச் சிறப்பு வாய்ந்த ஈஸ்வரங்களுள் முக்கியமானதொன்றான 'தேனவரம் என்ற தேவன்துறை' என்று அழைக்கப்பட்ட சிவன் - விஷ்ணு திருக்கோயில் இன்று அடியோடு அழிக்கப்பட்டு விட்டது.
இத் திருக்கோயில் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் அனைத்தையுமே அழித்தொழிப்பதற்கு பெரும்பான்மையினத்தோர் முழுமூச்சாக முயன்று மறைத்து விட்டார்கள்.- ஆனாலும், ஆதாரங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆகவே, எமது இக் கட்டுரைத் தொடரின் நோக்கம் - இலங்கைத் தீவில் புராதன காலந்தொட்டு மிகச் சிறப்புடன் திகழ்ந்துவந்த ஐந்து ஈஸ்வரங்கள் பற்றிய உண்மைத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதேயாகும்.
sltemple
இவற்றில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் நால்வரான சமய குரவர்களால் பாடப் பெற்ற சில தலங்களும் உள்ளன.
இத்தலங்களிலே பதிந்து 'ஈழபதீஸ்வரர்' ஆக அருள் வழங்குகின்றார், சிவபெருமான். நன்றி:www.sivantemple.org

அருட்சிவம் !!!!

பொதுவாக ஆன்மீக அமைப்புக்களில் சம்பளத்துக்கு பணிபுரிவர்கள்,தான் உண்டு தனது வேலை உண்டு என்று மட்டுமே இருப்பார்கள்: தொடர்ந்து பணிபுரிபவர்களில் ஒருசிலர் மட்டுமே அந்த ஆன்மீக அமைப்பின் செயல்பாடுகளால் ஈர்க்கப்படுவார்கள்.அப்படி ஈர்க்கப்பட்ட ஒருவர் நடத்தும் இணையதளத்துக்குச் செல்வோமா? ஓரளவு ஆன்மீக முன்னேற்றத்தை எட்டியவர்களுக்கு இந்த தளம் பல ஆன்மீக விஷயங்களைத் தருகிறது.

மகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்

காவல்துறையில் உயர்ந்த பதவியில் உள்ள அந்த நண்பர் எப்போதுமே, "டிப்ரஷன்' - "மன அழுத்தம்... மன அழுத்தம்' என்று கூறிக் கொண்டே இருப்பார். மகிழ்ச்சி என்பது துளிகூட கிடையாது அவரிடம். நேரம் கிடைக்கும் போதெல்லாம், மன அழுத்தத்தையும், மகிழ்ச்சி இன்மையையும் போக்கிக் கொள்ள, போதையில் மூழ்கி விடுவார்.
இப்பிரச்னையிலிருந்து அவரை மீட்க முடிவு செய்து, நண்பரான மன நல மருத்துவர் ஒருவரை அணுகினேன். 
மருத்துவரிடம் விஷயத்தை கூறினேன். போலீஸ் அதிகாரியை அழைத்து வர நேரம் கொடுத்தார். பின் பல விஷயங்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, "நம்மில், யாருக்கு வருத்தம், கஷ்டம் இல்லை! நாம் அனைவருமே உழைப்பது, கஷ்டப்படுவது எதற்கு? நாமும், நம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்கத் தானே!' எனக் கேட்டார்.
பெரியதாக தலை ஆட்டினேன்.
அவரே தொடர்ந்தார்:
வாழ்க்கையில் ஏற்ற, தாழ்வுகள் சகஜம். நாம் எப்படி இருக்கிறோமோ, நம்மிடம் என்ன இருக்கிறதோ அதை அப்படியே ஏற்று, எப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதோ, அப்போதெல்லாம் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும். நமக்கு கிடைத்துள்ள வாழ்க்கை எவ்வளவு அரிய நல்ல விஷயம் என்று நாம் புரிந்து கொள்ள, நினைவுபடுத்திக் கொள்ள, 25 வழிகள் சொல்கிறேன், என்றவர், கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சொன்னார்...



* இன்று தான் நம் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதைப் போல ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு பிழைத்தவர், விபத்தில் சிக்கிப் பிழைத்தவர், நெருங்கிய ஒருவரை இழந்தவர்... இவர்களை பாருங்கள்! வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் விதமே, "பாசிடிவ்'வாக இருக்கும். "அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்!' என்று எதையும் தள்ளிப் போட மாட்டார்கள். எங்கேயாவது போக வேண்டுமா, ஒரு நண்பரை பார்க்க வேண்டுமா? உடனே, செய்து விடுவர்; அவர்களிடம், "பிறகு' என்ற வார்த்தையே இருக்காது.

* நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள். பேச ஆரம்பிக்கும் போது, உங்கள் அருமை குழந்தை என்ன, என்ன வார்த்தைகள் பேசினாள் என்பதையும் எழுதி வையுங்கள். அவற்றையெல்லாம் எழுதி வைக்காவிட்டால், பிறகு ஞாபகம் இருக்காது. பிரச்னைகளை எழுத ஆரம்பியுங்கள்; தீர்வு கிடைக்கும்.

* உங்கள் வாழ்க்கையை பற்றி உங்கள் பேரக் குழந்தைகளிடம் என்ன நினைவு கூற விரும்புகிறீர்கள்? எப்படி உங்களை மற்றவர்கள் நினைவு கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் குழந்தையின் பள்ளி ஆண்டு விழாவை தவிர்த்து, ஆபீஸ் மீட்டிங் தான் முக்கியம் என்று சென்றீர்களே... இப்போது அது முக்கியமா? பெட்ஷிட் வாரா வாரம் மாற்றப்பட வேண்டும், தரை சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுதான் மற்றவற்றை விட முக்கியமா?

* சின்ன, சின்ன தவறுகளை பெரிது படுத்தாதீர்கள். ஓவர் டேக் செ#ய, உங்களை அனுமதிக்காத டிரைவரின் மீது ஏன் கோபம்! புன் சிரிப்பு செய்யுங்கள்; உங்கள் மீது அவருக்கு கோபமாக இருந்தால் அது அவர் பிரச்னை. ரயிலை தவற விட்டு விட்டீர்களா? போகட்டுமே! அதற்கு ஏன் டென்ஷன், ஸ்டேஷனில் ஒரு காபி குடித்து, அடுத்த ரயிலில் போகலாமே!

* பிடிக்காத வேலை, கஷ்டமான வேலை என்றால், ஏன் தள்ளிப் போடுகிறீர்கள்? தள்ளி போடுவது, நம் சக்தியைத்தான் விழுங்குகிறது; வீணாக்குகிறது. கூடவே, "இந்த வேலையை இன்னும் பண்ணவில்லையே...' என்ற கவலை வேறு; அந்த வேலையை உடனே செய்து முடிப்பதே நல்லது.

* புது விஷயங்களில் ஆர்வம் காட்டுங்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் நிறைய தூங்கி லேட்டாக எழுந்து கொள்ளத்தான் வேண்டுமா? சீக்கிரம் எழுந்து அருகே உள்ள பூங்காவில் காலை ப்ரேக் பாஸ்ட்டை ஏன் சாப்பிடக் கூடாது? மற்றவர்கள் வருவதற்கு முன் திரும்பி விடலாம். அன்றைய நாள் நீண்டதாக இருக்கும். மத்தியானம் எப்போதும் தூங்காதவரா? ஒரு,"ஞாயிறு' நன்றாக தூங்குங்கள்.

* அடுத்த வீட்டுக்காரர் புது கார், புது ஸ்டீரியோ சிஸ்டம் வாங்கினால் என்ன? நன்றாக கவனித்து பாருங்கள். அவர் சனி, ஞாயிறு கிழமையிலும் ஆபீசுக்கு போக வேண்டியிருக்கும். உங்களை மாதிரி குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக அவர் இருக்கிறாரா? உங்களை மாதிரி, நண்பர்களை அவர் சந்திக்கிறாரா? இருக்காது.

* அணியாத டிரஸ், வெளியே எடுக்காத கிச்சன் பாத்திரங்கள், யூஸ் செ#யாத படுக்கை, இதேபோல பொம்மைகள், புத்தகங்கள், மர சாமான்கள் இவற்றை தர்ம ஸ்தாபனத்திற்கோ, ஏழை, எளியவருக்கோ தானமாக கொடுத்து விடுங்கள்! நிறைய மகிழ்ச்சி கிடைக்கும்; வீட்டிலும் நிறைய இடம் மிஞ்சும்.

* "நோ' சொல்ல கற்றுக் கொள்ளுங்கள். ஏற்கனவே மிகவும், "பிசி'யாக இருக்கிறீர்கள் என்றால், இன்னும் அதிக வேலை என்றால், "நோ' சொல்லுங்கள். உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

* சில ஆண்டுகள் தொடர்ந்து ஓடினால், மெஷினுக்கும் ரிப்பேர் பார்க்க வேண்டும்; அதே போலத் தான் மனித உறவுகளும். காதலித்தவரை திருமணம் செய்து கொள்கிறீர்கள், முன் மாதிரி இன்னும் காதலிக்கிறீர்களா? கணவர், மனைவி, பார்ட்னர் எல்லா உறவுக்கும் ரிப்பேர் தேவை; நேரம் ஒதுக்குங்கள்.

* நண்பர்களுக்கு கொடுக்கும் நேரத்தை, கொஞ்சம் உங்கள் குடும்பத்தினருக்கும் கொடுக்க வேண்டும். அவர்களுக்கு உங்கள் நேரம் கண்டிப்பாக தேவை.

* உங்கள் குடும்பத்தினர், பார்ட்னர், நண்பர்கள் இவர்களிடம் நீங்கள் விரும்பும், பாராட்டும் நல்ல குணங்களை பற்றி சொல்லுங்கள். நன்றாக ஒரு விஷயத்தை செய்தால், அவர்களை வாய்விட்டு பாராட்டுங்கள்; நல்ல டானிக் போன்று அது உதவும். நீங்கள் செய்யும் பல காரியங்களையும் அவர்களும் பாராட்டக் கூடும்.

* எல்லா பிரச்னைகளையும் உங்கள் மீது போட்டு விடுகின்றனரா உங்கள் நண்பர்கள்? அது தவறு. அதற்கு, இனி மேலும் இடம் கொடுக்காதீர்கள். அவர்கள் பிரச்னைகள் உங்களையும் பாதிக்க ஆரம்பித்தால், கொஞ்சம் ஒதுங்குங்கள். தங்கள் பிரச்னையை சந்திக்க, தீர்த்துக் கொள்ள அவர்கள் ஆரம்பித்துக் கொள்ளட்டும்.

* நண்பர்கள், தூரத்து உறவினர்கள் - இவர்களுடன், "டச்' விட்டு போய் விட்டதா? பரவாயில்லை... இன்று துவங்குங்கள்... போனில் பேசலாம், இ-மெயில் அனுப்பலாம், லெட்டர் எழுதலாம். அவர்கள் நிச்சயம் சந்தோஷப்படுவர்.

* உங்கள் மனதுக்கு பசுமை நல்லது. தோட்டத்திலிருந்து புது பூக்களை பறித்து வையுங்கள். விடியற்காலை எழுந்து மார்கெட்டிற்கு சென்று குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கி வாருங்கள். தொட்டிகளில் செடி வளர்ப்பது கூட வீட்டில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
* நிறைய அலைகள், கடல் மணல், வெறும் கால்கள் இவை எல்லாம் உடலுக்கும், உள்ளத்திற்கும், மகிழ்ச்சி அளிப்பவை. கடற்கரைக்குச் செல்லுங்கள்; முடியாதவர்கள், நதிக்கரை செல்லுங்கள். இயற்கை மிகவும் சிறப்பானது.

* ஏதாவது புதியதாக உருவாக்குங்களேன்... சித்திரம் வரைவது, தைப்பது, கேக் செய்வது, தோட்டத்தில் செடி வளர்ப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.

* வீட்டுக்கு வெளியே சென்று நிறைய சுத்தமான காற்றை சுவாசியுங்கள். நுரையீரலின் அடித்தளத்திலிருந்து நிறைய காற்றை உட்கொள்ளுங்கள். பழைய காற்றெல்லாம் போவதை சுகமாக உணர்வீர்கள்.

* வாக்கிங் செல்லுங்கள் - மெதுவான, ஆனால், நிச்சயம் பயனுள்ள எக்சர்சைஸ். உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது. ரெகுலராக வாக்கிங் செல்வதால் தினமும் நன்றாக இருப்பதை உணர்வீர்கள்.

* நல்ல, பழைய - புதிய நகைச்சுவை வீடியோக்கள், திரைப்படங்களை வீட்டில் போட்டு பார்த்து, குடும்பம் முழுவதும் நிறைய சிரித்து மகிழுங்கள்.

* வீட்டில் பர்னிச்சர், பொருட்களை இடம் மாற்றி வையுங்கள்; அந்த மாதிரி வீட்டை மாற்றி அமைப்பதே ஒரு நல்ல ஹாலிடே தான்!
* நல்ல, மகிழ்ச்சியான விஷயத்தை விரும்பி, காத்திருந்து அனுபவியுங்கள். விடுமுறையில் ஒரு சுற்றுலாப் பயணம்; வெளியே சென்று சாப்பிடுவது போல!

* உங்கள் வீட்டுக்கு, டின்னருக்கு நண்பர்களை கூப்பிடுங்கள். சாப்பிடும் அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்யுங்கள். விசேஷ மெனு தயாரித்து, அதற்காக பொருட்கள் வாங்குவதும், டின்னரை தயாரிப்பதுமே மகிழ்ச்சியான, "சுமை.' வருபவர்
களும் மகிழ்ந்து பாராட்டுவர். அன்று இரவு எல்லாருக்கும் மகிழ்ச்சி கண்டிப்பாக இருக்கும்.

* சிரியுங்கள். சிரிப்பு ஒரு தொற்று வியாதி! அனைவருக்கும் பிடிக்கும்.

* யாராவது ஒருவருடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஆக்குங்கள். சமயம் கிடைக்கும்போது ஏதாவது நல்ல, தர்ம காரியத்திற்கு உங்கள் நேரத்தை செலவழியுங்கள். குழாயில் தண்ணீர் வரவில்லை, குழந்தையை ஸ்கூலுக்கு அழைத்துப் போக ஆட்டோக்காரன் வரவில்லை, பணிப்பெண் வரவில்லை, பஸ் கிடைக்கவில்லை என்று வாழ்க்கையில் பல கஷ்டங்கள்; இவற்றையெல்லாம் மீறி மகிழ்ச்சியாக இருப்போம்!  

ஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல்

வாஷிங்டன்:ஆபத்து காலத்தில் உடனடியாக உதவுவது, ஏழைகளே என்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட, பேரிடர் தொடர்பான ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:இயற்கை பேரழிவு ஏற்பட்டால், ஏழைகளே ஒருவருக்கு ஒருவர் அதிகம் உதவி செய்து, பிறரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வசதி படைத்த பணக்காரர்களோ, தமது உடைமைகளை பாதுகாக்கும் முயற்சியில் தான் அதிகம் ஈடுபடுகின்றனர்.பேரிடர் ஏற்படும் ஆபத்துக் காலத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மை இழந்து விடுவோம் என்ற எண்ணம், பணக்காரர்களிடம் அதிகமாக இருப்பதில்லை. அவர்கள், மேலும் மேலும் பணத்தை குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். ஏழைகளோ, தமது நண்பர்களுடனும், மனதுக்கு பிடித்தவர்களுடனும் பொழுதை கழிப்பதில் ஈடுபாடு காட்டுகின்றனர்.

கூடுதல் சம்பளம் கிடைத்தாலும், நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்று வேலை செய்ய, ஏழைகள் விரும்புவதில்லை. ஆனால், ""உறவுகள் போனாலும், நட்பு போனாலும் கவலையில்லை; பணமே முக்கியம்; அதற்காக எங்கும் செல்லலாம்'' என்று, வசதி படைத்தோர் நினைக்கின்றனர்.
இவ்வாறு, அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.thanks:dianamalar 3.9.12                                                                                                           ஆன்மீகக்கடலின் கருத்து: தனி மனித மனநிலை தான் தேசத்துக்கும் பொருந்தும்: அமெரிக்கா உலகின் பணக்கார நாடாக இருப்பதால்,நம்மைப் போன்ற ஏழை நாடுகளின் அழுகுரல் அதற்கு ஒரு போதும் கேட்காது.எப்போதும் எந்த சூழ்நிலையிலும் அது சுயநலமாக மட்டுமே நடந்து கொள்ளும்.ஆனால்,இந்தியாவாகிய நாம்,எப்போதும் பிற நாடுகளுக்கு உதவி செய்தே பழகிப் போனோம்;இதுவே இந்து தர்மத்தின் அடையாளங்களில் ஒன்று ஆகும்.சீனாவையும் ஒரு போதும் நம்பக்  கூடாது.

யாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படைவெட்டி கோவிலில் பரபரப்பு


பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உள்ள மாவிலிங்கை அருள்மிகு படைவெட்டி அம்மன் கோவிலில் நடந்த யாகத்தின்போது அம்மன் தோன்றி நடனமாடிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மாவிலிங்கை கிராமத்தில் மட்டவறை எனும் இடத்தில் படைவெட்டி அம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் இக்கோயிலில் கடந்த 10ம் தேதி அன்று பாராயணம் என்ற பூஜை நடந்தது.

காஸ் தீர்ந்தும் எரிந்த அடுப்பு :

ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த அர்ச்சகர் ஸ்ரீராம் என்பவர் இக்கோயிலில் யாகம் நடத்திபோது யாக தீயில் அம்மன் நடனமாடிய காட்சி தோன்றியது. இதை அவர் தனது மொபைலில் போட்டோ எடுத்தார். இதைத்தொடர்ந்து பௌணர்மி அன்று மாலை 5 மணியளவில் இரவு பூஜைக்காக மாவிலிங்கை கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவர் (பிரசாதம்) பொங்கல் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டரில் காஸ் தீர்ந்து அடுப்பு எரிவது நின்றது. இதையடுத்து ஸ்ட்வை ஆப் செய்த விஜயா, ரெகுலேட்டர் வயரை கலட்டி வைத்துவிட்டு, மாற்று சிலிண்டர் கொண்டு வருமாறு அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். இவ்வாறு தெரிவித்த சிறிது நேரத்தில் காஸ் ஸ்ட்வ் சிலிண்டர் இல்லாமல் எரிவது கண்டு திடுக்கிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜயா ஓடிச்சென்று கோயிலுக்கு வந்திருந்தவர்களிடம் இது குறித்து தெரிவித்தார். பொதுமக்கள் திரளாக நின்று இந்த அதிசய சம்பவத்தை பார்த்தனர். இதைபார்த்த பெரியம்மாபாளையம் கிராமத்தை கார் டிரைவரான நந்தகுமார் தனது மொபைலில் இக்காட்சியை போட்டோ எடுத்துள்ளார். அடுத்தடுத்து இக்கோயிலில் அதிசய சம்பவங்கள் நடந்து வருவது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து துறைமங்கலத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் (அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்) கூறியதாவது: கடந்த 2010ம் ஆண்டு ஆவணி மாதம் பௌணர்மி அன்று எனது கனவில் தோன்றி படைவெட்டி அம்மன் மாவிலிங்கை கிராமத்தில் தனக்கு வழிபாடு நடத்தாமல் தனது கோவில் சிதிலமடைந்து கிடப்பதாகவும், தனக்கு பூஜை நடத்துமாறும் தெரிவித்தார். இதையடுத்து கனவில் வந்த ஊருக்கு நான் நேரில் சென்று பார்த்தபோது கனவில் வந்த காட்சி அங்கு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து 2011ம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகமும், 2012ம் ஆண்டு ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினேன். 

தற்போது கோலாட்டத்துடன் பூஜை வேண்டும் :


அம்மன் எனது கனவில் தோன்றி ஒவ்வொரு வாரமும் எவ்வாறு பூஜை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுகிறதோ அதன்படியே ஒவ்வொரு வாரமும் பூஜை நடைபெறுகிறது. தனக்கு பட்டு வேண்டும் என்றும், மூன்று மேளம் வைக்குமாறும் தெரிவித்தது. தற்போது கோலாட்டத்துடன் பூஜை வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இக்கோயிலுக்கு வழிபாடு செய்த சிறுமி ஒருவர் அங்கிருந்த ஏழு சிறுமிகளை பிரகாரம் வரை அழைத்து சென்று ஒவ்வொரு வாசல்படியிலும் அமர வைத்து முகத்தை கழுவி விட்டு பூஜைசெய்தது. அம்மன் வேண்டுகோள்படி அனைத்தையும் நிறைவேற்றி வருகிறேன். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறுவதால் அம்மனை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து பல்வேறு அதிசயங்கள் நடந்து வருகிறது என்றார். thanks:dianamalar 3.9.12

Sunday, September 2, 2012

ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்கும்போது நமது பார்வையில் இருக்க வேண்டிய படம்









கோதை பிறந்த ஊர்;கோவிந்தன் வாழும் ஊர்! நீதி நெறி நல்லார் வாழ்ந்து வழிகாட்டும் ஊர்!!! என்ற பெருமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு;ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டத்தில் மதுரையிலிருந்து குற்றாலம்/செங்கோட்டை செல்லும் துணை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது.



முதலாம் நூற்றாண்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஒரு நந்தவனத்தில் ஸ்ரீஆண்டாளை குழந்தையாக கண்டெடுத்தார்;அப்படி கண்டெடுத்த நேரமே ஆடி மாதம் வந்த பூரம் நட்சத்திர நாளாகும்.(சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும்,சந்திரனின் ராசியான கடகத்தில் சூரியனும் பரிவர்த்தனையாகி இருந்த நாள் அது)ஜோதிடப்படி கணித்துப் பார்த்ததில்,ஆறு கிரகங்கள் அம்ச சக்கரத்தில் உச்சமாக இருந்திருக்கின்றன.


மஹாலட்சுமியின் அம்சமாக ஸ்ரீஆண்டாள் விளங்கியிருக்கிறாள்;அதனாலேயே இன்று வரையிலும்(முதல் நூற்றாண்டிலிருந்து இருபத்தோராம் நூற்றாண்டு வரை) பால் வளத்துக்கு குறைவில்லாத ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து வருகிறது.ஸ்ரீவில்லிபுத்தூர் பாலில் இருந்து தயாராகும் பால்கோவாவின் சுவை வேறு எந்த ஊர் பால்கோவாவிற்கும் வரவில்லை;இது ஸ்ரீஆண்டாளின் ஆசியே காரணம் ஆகும்.



எனது அனுபவத்தில் ஸ்ரீஆண்டாளின் ஜாதகத்தை ஒரு காகிதத்தில் ஒருமுறை எழுதினால்,அன்று ஏதாவது ஒருவழியில் நமக்கு பணம் கிடைக்கிறது;இதை பலமுறை ஆராய்ந்து பார்த்திருக்கிறேன்.செல்வத்தின் அதிபதியான ஸ்ரீமஹாவிஷ்ணுவையே தனது மணாளனாக ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியார் மானசீகமாக ஏற்று வாழ்ந்திருக்கிறாள்.


திருப்பாவை என்னும் 31 பாடல்களைக் கொண்ட நூலை இயற்றியது ஸ்ரீஆண்டாள்! இந்த பாடல்களில் “ஆழி மழைக்கண்ணா!” என்று துவங்கும் பாடலை நமது ஊரில் 41 நாட்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்து வந்தால்,மழை வந்துவிடும்;பலமுறை பல நகரங்களிலும்,பல கிராமங்களிலும் இதை பாடி உணர்ந்திருக்கின்றார்கள்;மார்கழிமாதத்தில் பாவை நோன்பு என்பதை நமக்கு அறிமுகப்படுத்தியது ஸ்ரீஆண்டாளே! இந்த பாவை நோன்பை மார்கழி மாதம் முழுவதும் இருக்கும் கன்னிப்பெண்களுக்கு சிறந்த கணவன் அமைவான்  என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

நான் சென்னையில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது,எனது சொந்த ஊர் எது? என்று பலர் பலமுறை விசாரித்திருக்கின்றனர்;அப்படி விசாரிக்கையில்,ஒருவரிடம் ‘எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்’ என்று சொன்னதும்,அது எங்கே இருக்குது? உங்கள் ஊரில் சிறப்பு என்ன?’ என்று கேட்டார்;நான் கேஷீவலாக, “ஆண்டாள் பிறந்த ஊர் எங்க ஊர்” என்றேன்.சொன்ன மறு நொடியே ‘ஆண்டாள் பிறந்த ஊரிலிருந்தா வந்திருக்கீங்க!!!’ என்றவாறு பொது இடம் என்று கூட பார்க்காமல் எனது காலில் சடாரென அந்த பெரியவர் விழுந்துவிட்டார்.நான் அதிர்ச்சியும்,பெருமையும் அடைந்து திக்குமுக்காடிப்போனேன்.அதன் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை;இப்போது புரிகிறது.




அவளை குழந்தைப்பருவத்தில் கண்டெடுத்த இடத்தை நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளுக்கு தருவதில் பெருமை கொள்கிறேன்.


இந்த படத்தை நோக்கியவாறு ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவந்தால்,விரைவான மந்திர ஸித்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு ஆகும்.


ஓம்ஹரிஹரிஓம்

மொபைல் போனை தூக்கி போடுங்கள் ! நலத்தை கெடுக்கும் ரேடியேஷன் அபாயம்


புதுடில்லி: பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை, அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்பர் . இது போல் இன்றைய காலத்தில் போன் இல்லாதோருக்கு முன்னேற்ற வழி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நம்முடைய வாழ்வில் வர்த்தக ரீதியில் மொபைல் போன் முழு அங்கமாகி விட்டது.

இந்த பயன்பாட்டினால் நமக்கு நன்மை என்றாலும் நம்மை அறியாமலே நமக்கு பெரும் கேட்டினை ஏற்படுத்துகிறது என்பதை யாரும் மறந்து விடுகின்றனர். இதுவும் இன்றைய இளைய தலைமுறையினர் சக நேரமும் ஏன் தூங்கும் போதுகூட நெஞ்சிலே வைத்து தூங்குபவர்களும் உண்டு. குறிப்பாக காதலன்- காதலி உரையாடல் என்றால் அது விடிய, விடிய போய்ச்சேரும் ( எடுத்துக்காட்டு பாலச்சந்தரின் அழகன் திரைப்படம்) இவ்வாறு நம்மை ஆட்டுவிக்கும் மொபைல் போன் தரும் தீமைகள் குறித்து மத்திய அரசே எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கையில் மொபைல்போன் பயன்பாடு மற்றும் ரேடியேஷனில் இருந்து தப்பிக்க வழி கூறியிருக்கிறது. இதன் விவரம் வருமாறு :

மூக்கு கண்ணாடி அணிபவரா நீங்கள் ?

* முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும். * நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. * குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும்.

* போன் பேசும் போது ரேடியோ சிக்னல் வீக்காக இருந்தால் பேசாமல் இருப்பது நல்லது, காரணம் இந்நேரத்தில் இந்த போன்கள் தனது சிக்னலை பெறுவதற்கும் ஒளிபரப்பு தன்மையை அதிகரிக்கவும் கூடுதல் செயல்பாட்டில் இருக்கும். மொத்தத்தில் போன் பேசுவதை குறைத்து எச்சரிக்கையாக வாழ்வது நல்லது.

காக்கை , குருவிகள் மடிந்தன:

இன்றைய உலகில் வானில் பறவைகளை÷யே காண முடியவில்லை. இந்த மொபைல் டவர் வெளியிடும் கண்ணுக்கு தெரியாத அலைகள் பல்வேறு பறவைகளை அழித்து வருகிறது. சிட்டுக்குருவி முழுமையாக முடிந்து போனது. காகத்திற்கு சோறு போட வேண்டுமானால் பல மணி நேரம் மொட்டை மாடியில் காத்திருக்க வேண்டியதாக இருக்கிறது. கா, கா என்று அழைத்தாலும் வர மறுக்கிறது. காரணம் எண்ணிக்கை வீழ்ச்சியில் இருக்கிறது என்பதே ! கூரையில் சோறு போட்டால் ஆயிரம் காக்கை என்ற பழமொழி எல்லாம் மறந்து விட வேண்டியதுதான். காக்கை , குருவிகள் கழுகு, பருந்து உள்ளிட்டவை அழிந்து வரும் நிலையிலல், மனிதர்கள் இதனை விட கூடுதல் பலம் இருப்பதால் அதிக கெடுதல் விரைவில் தாக்காமல் இருக்கிறது என்பதுதான் உண்மை ! நீங்கள் இனி எப்படி மொபைல் போன் பேசப்போகிறீர்கள் ? thanks:dinamalar 1.9.12