Wednesday, January 4, 2012

அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை

ஒரு ஜோதிடராக தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் " ஹோரையும் " ஒன்று.

ஜோதிடராக இருப்பதை விட்டுத் தள்ளுங்கள். அன்றாட நடைமுறையில் , இது உங்களுக்கு அளப்பரிய பலன்கள் தரும். ஹோரை அறிந்து நடப்பவனை . யாரும் ஜெயிக்க முடியாது என்பது சித்தர்கள் வாக்கு. அப்படிப் பட்ட ஒரு மகத்தான விஷயம் பற்றி நாம் இன்று பார்க்க விருக்கிறோம்.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. சூரியனின் சுற்றுப்பாதை, சூரியனுக்கு அருகில் இருக்கக் கூடிய கிரகங்கள், தொலைவில் இருக்கக் கூடிய கிரகங்கள், அதனுடைய ஈர்ப்பு சக்தி, அதன் ஒளிக்கற்றைகள் பூமியை அடைவதற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கான கால நேரம் இதை எல்லாம் அடிப்படையாக வைத்துதான் நமது முன்னோர்கள் ஓரைகளை கணக்கிட்டுள்ளனர்.

சூரியன் மற்றும் அதன் அருகே அல்லது தொலைவில் உள்ள கிரகங்களின் அமைப்பைக் கொண்டு வானவியல் அறிஞர்கள் ஓரைகளை உருவாக்கினர். இதன்படி வாரத்தின் முதல் நாளான ஞாயிறன்று முதல் ஓரையை சூரியனுக்கு அளித்தனர்.

அதற்கு அடுத்து சுக்கிரன் , அதற்கு அடுத்து புதன் ஓரை , 4வது இடம் சந்திரனுக்கும், 5வது இடம் சனிக்கும், 6வது இடம் குருவுக்கும், 7வது இடம் செவ்வாய்க்கும் வழங்கினர்.

இதற்கு சுற்றுப்பாதை, கிரகங்களின் கதிர் வீச்சுதான் காரணம்.
இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. எந்த ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றாலும் - இந்த ஹோரைகளில் துவங்கலாம்.


ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.


6 - 1- 8 - 3

இந்த வரிசையை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும் ஓரை , திரும்பவும் மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்பு அதிகாலை 3 மணிக்கும் வரும்.

சூரிய ஓரை :

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளை சந்தித்தல், போன்ற பெருந்தலைகளை சந்திக்கும் காரியம் செய்யலாம்.

இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ உடன் பாடுகளையோ செய்வது நல்லதல்ல, சுபகாரியங்கள் செய்யயவும் இந்த ஓரை ஏற்றதல்ல. இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.

சுக்கிர ஓரை :
சகல சுப காரியங்களுக்கு வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் மிகவும் ஏற்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட சகல காரியங்களிலும் நன்மை ஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள் செய்யும் நல்லது. இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

புதன் ஓரை :
கல்வி மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும் ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம்.இந்த ஓரையில் காணாமல் போகும் பொருள் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும்.

சந்திர ஓரை :

வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ல ஓரையாகவே கருதப்படுகிறது.
இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றைச் செய்யலாம். இந்த ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம்.குறிப்பாக பெண்கள் தொடர்பு கொண்ட காரியங்களையும் மிகவும் ஏற்றது. வியாபார விஷயமாகவோ அல்லது புனித யாத்திரையாகவோ பயணம் செய்ய ஏற்றது.பிறரைச் சந்தித்துப் பேசவும் செய்யலாம். இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

சனி ஓரை :

இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது.
உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.


குரு ஓரை : எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், வியாபாரம், விவசாயம் செய்ய நல்லது. ஆடை ஆபரணப் பொருள்கள் வாங்கவும், வீடு மனை வாங்கவோ,விற்கவோ ஏற்றது.எதுவும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் புறம்பான காரியமாக இருக்கக்கூடாது. கப்பற்பயணம் செய்வதற்கு இந்த ஓரை சிலாக்கிய்மானது அல்ல. இந்த நேரத்தில் காணாமல் போனபொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் . உடனே கிடைத்து விடும்.


செவ்வாய் ஓரை
செவ்வாய் ஓரை நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் . அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய். எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. இருப்பினும் தெய்வீகத் தொடர்பான விஷய்ங்களையோ, சண்டை சச்சரவுக்கான் விஷயங்களையோ பற்றிய் பேசலாம். இருப்பினும் இந்த ஓரையை தவிர்ப்பது நல்லது. இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் உடனே முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.தாமதித்தால் கிடைக்காது.



===================================================

ஒரு சிறந்த ஜோதிடராக நீங்கள் ஹோரை சம்பந்தமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் உண்டு. நவ கிரகங்களில் - ஒன்றுக்கொன்று கடும் பகை கிரகங்களும் உண்டு. அல்லவா ? அதையும் நீங்கள் மனதில் கொண்டு , ஹோரை தேர்ந்தெடுங்கள். என்னதான் குரு ஓரை சுப ஓரை என்றாலும், வெள்ளிக் கிழமை - குரு ஹோரை தேர்ந்தெடுக்க வேண்டாம்.
ஏன்..? அதுதான் உங்களுக்கு தெரியுமே..?

சரி, நிஜமாகவே இந்த ஹோரையின் செயல்பாடு அறிய - நீங்களே ஒரு சில விஷயங்களில் , துவங்கிப் பாருங்கள். வியந்து போவீர்கள். மனித வாழ்வில் ஓரைகளின் பங்களிப்பு முக்கியமானது. நம்மை அறியாமலேயே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும். அதை உணர்ந்து நடந்தால் நலம் பெறுவீர்கள்.

குறிப்பாக கணவன் , மனைவி ஏதாவது வாக்குவாதம் செய்யத் துவங்கினால் , செவ்வாய் அல்லது சனி ஓரை வந்தால், அடக்கி வாசியுங்கள். அது மிகப் பெரிய சண்டையாகிவிடும். கணவன் . மனைவி என்றில்லை. மற்றவருக்கும் பொருந்தும். ஆதலால் , காலத்தின் இந்த ரகசிய கணக்கு - நீங்களும் தெரிந்து வைத்திருப்பதில் தவறில்லை...

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் - மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

ஹோரை பார்த்து நீங்க செய்ற எல்லாவேலையும் - சும்மா நச்சு நச்சுன்னு முடிக்கலாம்....

ஹோரை அட்டவணை :


மணி-முதல்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
6.00 - 7.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
7.00 - 8.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
8.00 - 9.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
9.00 -10.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
10.00 -11.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
11.00 -12.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
12.00 -01.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
01.00 -02.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
02.00- 03.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
03.00-04.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
04.00-05.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
05.00-06.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
06.00 -07.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
07.00 -08.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
08.00 -09.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
09.00 -10.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
10.00 -11.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
11.00 -12.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
12.00 -01.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
01.00 -02.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
02.00- 03.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
03.00-04.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
04.00-05.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
05.00-06.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்


சரி, அட்டவணையை கையில வைச்சுக்கிட்டே இருக்கவும் முடியாது... சுலபமா ஞாபகம் வைச்சுக்க என்ன வழி ன்னு நம்ம நண்பர் ஒருத்தர் கேட்டு இருந்தார்...

அந்த நாளைக்கு உரிய ஹோரை முதல்ல வரும், காலை 6 மணிக்கு. ஒரு மணி நேரத்துக்கு பிறகு அடுத்த ஹோரை ஆரம்பிக்கும். செவ்வாய் கிழமைன்னு வைச்சுக்கோங்க... முதல் ஹோரை செவ்வாய் ஹோரை - காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரைக்கும் வரும்..

மதியம் ஒரு மணிக்கு திரும்ப செவ்வாய் ஹோரை வரும். அதே மாதிரி இரவு எட்டு மணிக்கு வரும்.

Cycle time : 6 - 1 - 8 - 3

சரி, முதல் ஹோரை தெரிய வந்திடுச்சு , இரண்டாவது எப்படி கண்டு பிடிக்க?

நிஜமா, நாம் இப்போ சொல்லப் போறது, எனக்கு யாருமே சொல்லிக் கொடுக்கலை.. நானா கண்டு பிடிச்சது , சுலபமா எப்படி ஞாபகம் வைச்சுக்கிடாம்னு ... எப்படின்னு பாருங்க..... ( உனக்கு வேற வேலையே இல்லையா... இப்படியா லூசு மாதிரி இருப்பேன்னு , நீங்க அக்கறையோட கேட்குறது , எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பாஸூ...)

ஞாயிறு - சூரியன்
திங்கள் - சந்திரன்
செவ்வாய்
புதன்
வியாழன் - குரு
வெள்ளி - சுக்கிரன்
சனி

வரிசைப்படுத்திக்கிட்டோமா ?

இப்போ , reverse ல - ஒன்னு விட்டு ஒன்னு போகணும்....

செவ்வாய் ஹோரைக்கு அடுத்து , சூரியன், அடுத்து சுக்கிரன், அடுத்து புதன், அடுத்து சந்திரன் , அடுத்து சனி , அடுத்து குரு , அடுத்து திரும்ப செவ்வாய்....

சொல்ல வந்த விஷயம் தெளிவா புரியுதா?






‌நெ‌ட் பை‌த்‌தியமா? ‌சி‌கி‌ச்சை தேவை!


பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.


இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்...

இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே ‌நீ‌ங்களாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அத‌ற்காக எ‌ங்க‌ள் இணைய‌ தளத்தை‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதை‌ப் பா‌ர்‌த்தா‌ல்தானே இ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌‌ன்று உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய வரு‌ம். எ‌ன்ன நா‌ன் சொ‌ல்வது?

சாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது?


நம்மில் பலருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவ்வப்போது ஓரிரு மிடறு தண்ணீர் அருந்தும் வழக்கம் உண்டு. இவ்வாறு சாப்பிடும்போது தண்ணீர் அருந்துவது, சாப்பிட்ட உணவு ஜீரணமடைவதை பாதிக்கும் என்று அலாரம் அடிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

அதுமட்டுமல்லாது ரத்தத்தில் உள்ள இன்சுலினின் அளவும் தாறுமாறாக ஏறி இறங்கும் என்று எச்சரிக்கிறார்கள்.

ஒருவர் போதுமான தண்ணீர் அருந்துகிறாரா என்பதை அந்த நபரின் தாகம் உணர்வை வைத்தஅறிந்துகொள்ளலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்திக் கொள்ளலாம்.

நாளொன்றுக்கு ஒருவர் குறைந்தது எட்டு தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பதெல்லாம் கட்டாயமில்லை. ஒவ்வொருவரது உடல்வாகு, வசிப்பிட சீதோஷ்ண நிலை போன்றவற்றிற்கு ஏற்ப தண்ணீரின் தேவை அளவு மாறலாம். அதாவது நமது உடலுக்கு தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்ளும்.

அப்படி ஒரு நிலையில் நாமே கட்டாயப்படுத்தி அளவுக்கு அதிகமாக தண்ணீரஅருந்த தேவையில்லை.அதிலும் சாப்பாட்டிற்கு இடையே அதிக காரம், விக்கல் போன்ற தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களை தவிர்த்து தண்ணீர் அருந்தவே கூடாது.

ஏனெனில் நாம் உணவு உண்ண தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்க செய்வதற்கான திரவம் சுரக்க தொடங்கிவிடும். அந்த சமயத்தில் சாப்பாட்டுடன் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தினால், ந்த தண்ணீர் ஜீரண திரவத்துடன் சேர்ந்து,வயிற்றின் ஜீரண பணியை பாதித்துவிடும்.

"இந்தியர்களில் பெரும்பாலானோர் உணவுக்கு இடையே தண்ணீர் அருந்தும் பழக்கத்தை கொண்டவர்களாகவே உள்ளனர். இது ஏறக்குறைய நாம் உண்ணும் உணவை கழுவி விடுவதாகவே இருக்கிறது. இது எவ்வளவு தவறானது; ஜீரண வேலையை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை மக்கள் அறியாமலேயே இருக்கின்றனர்" என்று ஆதங்கப்படுகிறார் பிரபல டயட்டீஷியன் ஷோனாலி.

உணவு செரிக்காமல் வயிற்றுவலி என்று மருத்துவர்களிடம் செல்வோர்களில் பெரும்பாலானோர் இப்படி சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தும் கேஸ்கள்தான் என்று கூறுகிறார் ஷோனாலி.

அதே சமயம் உணவுக்கு இடையே இலேசாக ஒன்று அல்லது இரண்டு மிடறு தண்ணீர் அருந்துவதினால் பெரிய பாதிப்பு வந்துவிடாது. ஒவ்வொரு கவளத்திற்கும் இடையேயும் விடாமல் தண்ணீர் அருந்துவதுதான் ஆபத்து என்கிறார்கள் நிபுணர்கள்.

அப்படியானால் எப்பொழுதான் தண்ணீர் அருந்துவது என்று கேட்டால், உணவுக்கு இரண்டு மணி நேரம் முன்னர் அல்லது உணவுக்கு இரண்டு மணி நேரம் வேண்டியமட்டும் தாரளமாக தண்ணீர் அருந்துவது நல்லது என ஆராய்ச்சிகள் தெரிவிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

எனவே சாப்பாட்டிற்கிடையே தண்ணீர் அருந்தாமல் இருப்பதற்கு டயட்டீஷியன் ஷோனாலி தரும் சில டிப்ஸ்கள் இதோ:

நீங்கள் உண்ணும் உணவு அதிக உப்பு இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். வ்வாறு அல்லாமல் அதிக உப்பு கொண்ட உணவை உண்ணும்போது அது தாகத்தை தூண்டி, தண்ணீரை அருந்த செய்துவிடும்.அதேப்போன்று உணவில் அதிகம் காரம் சேர்ப்பதையும் தவிருங்கள்.

மேலும் வேகமாகவும் சாப்பிடாதீர்கள்.அவ்வாறு வேகமாக சாப்பிடும்போது, உணவுக்குழாயில் உணவு இறங்காமல் விக்கிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். அதைபோக்க தண்ணீர் அருந்தவேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே உணவு வாயில் மெதுவாக மென்று ஜீரண சக்தி குணம் கொண்ட உமிழ்நீருடன் சேர்த்து விழுங்கினால்,அது உணவை வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் சேர்த்து மேலும் எளிதாக ஜீரணமடைய வைத்துவிடும்.

மார்கழிமாத பவுர்ணமி(8.1.12ஞாயிறு)யைப் பயன்படுத்துவோம்


நம்மை இயக்குபவை நவக்கிரகநாயகர்கள்;இவர்கள் நமது முந்தைய ஐந்துபிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு(பூர்வபுண்ணியம்) ஏற்ப இந்த பிறவியில் யோகங்கள்,அவமானங்கள்,தொழில்,திறமை,மனைவி,குழந்தை,    வீடு,சேமிப்பு,செல்வவளங்கள் முதலானவற்றை வழங்குகின்றனர்.
இந்த நவக்கிரகநாயகர்களை இயக்குவது ,நாம் பிறந்த நேரத்தில் அந்தந்த கிரகங்கள் நின்ற நட்சத்திரங்களே!
இந்த நவக்கிரக நாயகர்களையும்,27 நட்சத்திரங்களையும் கட்டுப்படுத்துவது ஐம்பூதங்கள் எனப்படும் நிலம்,நீர்,காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகும்.

இந்த ஐம்பூதங்களை செயல்பட வைப்பவர் மஹாவிஷ்ணு ஆவார்.ஏனெனில்,மும்மூர்த்திகளில் காக்கும் பணியைச் செய்பவர் மும்மூர்த்திகளில் திருமால் எனப்படும் பெருமாளே! இவருக்கு உறுதுணையாக இருப்பது இவரது மனைவியான மஹாலட்சுமி ஆவார்.
நம்மை முழுமையாக கண்காணிப்பதும்,வளர்ப்பதும்,மறுஜென்மங்களை நிர்ணயிப்பதும் பிரம்மா+கலைவாணி; திருமால்+மஹாலட்சுமி;ருத்ரன்(சிவன் அல்ல;)+பார்வதி!!!
இவர்களை கட்டுப்படுத்துவதே ஆதிசிவன் ஆவார்.இவருக்கும் மேலே ஒரு மஹா சர்வ சக்தி நம்மை ,பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறது.அதுவே வாலை எனப்படும் மனோன்மணி எனப்படும் ஆதிபரப்பிரம்ம சக்தி!!! 12 வயது பெண் வடிவில் இருக்கிறாள்.இவளை இயக்குவது யார் என்று தெரியவில்லை;இவள் எப்படி உண்டானாள் என்பதும் தெரியவில்லை;நம்மில் யாராவது சித்தரை நேரில் சந்தித்தால்,இந்தக் கேள்வியைக் கேட்கலாமா?
ஆதிசிவனின் மனித அவதார நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.இந்த நட்சத்திரத்தில் சந்திரன்,மார்கழி மாதத்தில் பவுர்ணமியாக பிரகாசிக்கிறார்;அந்த நாளே 8.1.12 ஞாயிறு ஆகும்.
இந்த பவித்ரமான நாளில் நாம் காலை 11.00 முதல் 12 வரையிலும்,மாலை 6 முதல் 7 வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இப்படி ஜபிக்கும்போது நாம் சிறிதும் எதிர்பாராத மன நிலையை உணரலாம்;தவிர,நமது கர்மவினைகள் படுவேகமாக கரைய வாய்ப்புகள் உண்டு.ஏனெனில்,மிதமிஞ்சிய சக்தி வாய்ந்த நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது.
இந்த நாளில் அண்ணாமலை பகலிலோ,இரவிலோ கிரிவலம் சென்றவாறு ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,அடுத்த சில நாட்களில் நமது நீண்டகால/கடுமையான பிரச்னைகள் தீர்ந்துவிடும்.அப்படி கிரிவலம் செல்லும்போது மஞ்சள் ஆடை அணிந்திருக்க வேண்டும்;ஆண் எனில்,மஞ்சள் வேட்டி மட்டும் கட்டியிருக்க வேண்டும்.உடலெங்கும் விபூதி பூசி,இடுப்பில்(வேட்டிக்குள்) ஒரு எலுமிச்சைபழத்தை வைத்திருந்து கிரிவலம் வர வேண்டும்.கிரிவலம் நிறைவடைந்தததும்,அண்ணாமலையாரின் நேர் எதிரே கிழக்குக் கோபுர வாசலில் நின்றவாறு.இரு கைகளையும் மேல் நோக்கியவாறு தூக்கி(இரண்டு கைகளுக்குள்ளும் அந்த எலுமிச்சைபழம் இருக்க வேண்டும்) ஒன்பது முறை ஓம் அண்ணாமலையே போற்றி என்று ஜபித்துவிட்டு,அந்த எலுமிச்சைபழத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும்.அந்த எலுமிச்சைபழத்தில் நாம் 14 கி.மீ.தூரத்துக்கு ஜபித்திருந்த ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் பதிந்திருக்கும்;வீட்டு பூஜையறையில் வைத்திருக்க வேண்டும்.அந்த எலுமிச்சை அபாரமான சூட்சும கதிர்வீச்சை வெளியிடும்;நமது கர்மவினைகள்;பிரச்னைகள்;எதிர்மறையான ஆட்களை நம்மிடமிருந்து நீக்கிவிடும்.செய்து பார்க்கலாமா?

Monday, January 2, 2012

மூன்று மகான்கள் சூட்சுமமாகஅருள்பாலித்துவரும் ஸ்ரீவில்லிபுத்தூர்








அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகள்,
அருள்நிறை ஸ்ரீ மாணிக்கம் சுவாமிகள்.
அருள்நிறை ஸ்ரீ மதுரை முனீஸ்வர சுவாமிகள்.
இந்த மூவர்களின் ஜீவசமாதிகளும் விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனி அருகே இருக்கும் சுடுகாட்டை ஒட்டி அமைந்திருக்கிறது.

வெகு காலமாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தவர் அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகள் ஆவார்.இவர் குளித்ததை பார்த்தவர்கள் எவருமில்லை;நானும் இவரைப் பார்த்திருக்கிறேன்.எப்போதும் இவர் பீடி குடித்தபடி காட்சியளிப்பார்;உடலெங்கும் அழுக்குத்துணிகளை அணிந்திருப்பார்;ஆனால், எப்போதும் இவரை நெருங்கும்போது கெட்ட வாடை வந்ததில்லை;நெசவாளர்கள் வாழும் தெருக்களிலும்,பஜார்களிலும் திடீரென யாரிடமாவது காசு கேட்பார்;தெருவுக்குள் எனில் சாப்பாடு கேட்பார்;அப்படிக் கேட்டு யார் இந்த சுவாமிக்குத் தருகிறார்களோ,அவர்களுக்கு அன்றிலிருந்து கஷ்டங்கள் நீங்கியிருக்கின்றன;பணப்புழக்கம் அதிகரித்திருக்கிறது.எனக்குத் தெரிந்து,ஒரு குடும்பத்தினரிடம் தினமும் குறிப்பிட்ட நேரம் வந்து சாப்பாடு கேட்டிருக்கிறார்;பல நாட்களுக்குப் பிறகு,அந்த குடும்பத்தினர் இவரை திட்டிவிட,இவர் அதன்பிறகு அந்த குடும்பத்தார் இருக்கும் வீட்டுப்பக்கமே வருவதில்லை;இவர் வருவது நின்றது முதல் அந்தக்குடும்பம் குடும்பமாக இல்லை;


இவருடன் ஒரு சிலர் எப்போதும் இருந்திருக்கின்றனர்;தான் சமாதியாவதை முன்பே அறிந்திருந்து,இவர் தன்னோடு இருக்கும் கண்பார்வை குறைபாடிருந்த ஒருவரிடம் சொன்னார்: இன்று முழுவதும் என்னோடு இரு;நான் சமாதியானதும் உனக்கு முழுப்பார்வை தருகிறேன்.


ஆனால்,அந்த கண்பார்வை குறைபாடு இருந்தவர்,பயந்துகொண்டு அடுத்த சில நிமிடங்களில் இவரை விட்டு ஓடியே போனார்.
 அருள்நிறை ஸ்ரீமாணிக்கம் சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஒவ்வொரு சித்திரை மாதமும் வரும் மகம் நட்சத்திரத்தன்றும்,இவரது பிறந்த நாள் விழா பங்குனி மாதம் கேட்டை நட்சத்திரத்தன்றும்(15.3.12 வியாழன் ) வரும்.


அருள்நிறை ஸ்ரீ சங்கரானந்த சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் பரணி நட்சத்தன்று(26.3.12 திங்கள்) கொண்டாடி வருகின்றனர்.


அருள்நிறை ஸ்ரீ மதுரை சுவாமிகளின் வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாதம் பூசம் நட்சத்திரத்தன்றும்(22.6.12 வெள்ளி) கொண்டாடிவருகின்றனர்.


இந்த மூன்று நாட்களுமே கோலாகலமாக அன்னதானம் நடைபெற்றுவருகிறது.தவிர,சிறப்பு அன்னதானம் ஒவ்வொரு அமாவாசையன்றும்,பவுர்ணமியன்றும் நிகழ்ந்து வருகிறது.தவிர,தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடைபெற்று வருகிறது. இந்த மூவரும் ஏராளமான அற்புதங்களை செய்து வருகின்றனர்.



கறுப்பு திராட்சை குறைந்தது ஒரு கிலோ; பேரீட்சைம்பழம் மூன்று பாக்கெட்கள்; டையமண்டு கல்கண்டு ஒரு கிலோ;நான்கு வாழைப்பழங்கள்; அரை லிட்டர் நல்லெண்ணெய்;பத்தி பாக்கெட் ஒன்று,கற்பூரம்  இவைகளை வாங்கிக்கொண்டு இந்த மூவர்களின் ஜீவசமாதிகளுக்கு  சனிக்கிழமை தோறும் சென்று காலை 9 முதல் 10.30க்குள் அல்லது மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வேண்டிக்கொண்டு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு எட்டு சனிக்கிழமைகளுக்குச் செய்துவர,  நிரந்தர வேலை கிடைக்கும்;பணக்கஷ்டம் எவ்வளவு நெருக்கடியாக இருந்தாலும் அடியோடு விலகிவிடும்.பல அன்பர்கள் இம்முறையைப் பின்பற்றி இன்று நிம்மதியாகவும்,வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.எட்டு சனிக்கிழமைகளுக்குப்  பிறகும் தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர, படிப்படியான பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் என்பது அனுபவ உண்மை!!!





குறிப்பு: படத்தில் வசீகரிக்கும் காந்தக்கண்களோடு இருப்பவர் அருள்நிறை சங்கரானந்த சுவாமிகள்; அமர்ந்த நிலையில் கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் அருள்நிறை மாணிக்கம் சுவாமிகள்; வயதான தாத்தா ரூபத்தில் அரச மரத்தடி போட்டோவிலிருப்பவர் அருள்நிறை மதுரை சுவாமிகள்;


ஓம்சிவசிவஓம்









இந்தியா வல்லரசாக நாம் செய்யவேண்டிய ஆன்மீகக்கடமைகள்








நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் 2008,2009 ஆம் ஆண்டுப்பதிவுகளில் பல ஆன்மீக,ஜோதிட இதழ்களிலிருந்து எதிர்காலம் பற்றிய கணிப்புகளை வெளியிட்டிருந்தோம்;அதில் பல விஷயங்கள் இந்த ஆண்டுக்குள் நிஜமாகிவிடும்;அப்படி நிஜமாவதை இன்னும் விரைவு படுத்திட நாம் செய்ய வேண்டியது ஊருக்கு 1000 பேர்களை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைக்க வேண்டும்;அந்த 1000 பேர்களும் 31.12.2012க்குள் 1,00,000 தடவைகள் ஓம்சிவசிவஓம் ஜபித்துமுடித்திருக்க வேண்டும்.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது? மூன்று வழிகளில் நீங்கள் இதை செயல்படுத்திடலாம்.

ஒன்று:இந்த பதிவில் தரப்பட்டிருக்கும் படத்தை 1000,2000,5000,1000 பிரதிகளாக அச்சடித்து,உங்கள் ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தில் பிரதோஷநாட்களில் விநியோகிக்க வேண்டும்.உங்களால் வெறும் 10 பேர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்துவிட்டால்,உங்களின் மன உளைச்சல் நீங்கிவிடும்.(ஆமாம்! கடன்,நோய்,எதிரி,கர்மவினை எதுவாக இருந்தாலும் அது அடியோடு நீங்கிவிடும்)எனக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது.எனவே,நீங்களும் சுகமாக,நிம்மதியாக,செல்வச் செழிப்போடு வாழ வழிகாட்டுகிறேன்.


இரண்டு: குறைந்தது 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்கள் உங்கள் ஊரில்,உங்கள் சொந்தச்செலவில் அச்சடித்து ஆன்மீகக்கடலுக்கு தபாலில் அனுப்பி வைக்கலாம்;இந்த 2012 ஆம் ஆண்டில் மட்டும் இவ்வாறு குறைந்தது ஒரு கோடி நோட்டீஸ்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள் மூலமாக விநியோகிக்க தயாராக இருக்கின்றார்கள்.இவ்வாறு விநியோகிக்க தயாராக இருக்கும் ஒவ்வொரு ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகளும் தினமும் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று: இந்த ஓம்சிவசிவஓம் நோட்டீஸை இணையதளங்கள்,குரூப் எனப்படும் மின் அஞ்சல் குழுக்கள் வழியாக வாரம் ஒருமுறை வீதம்,52 வாரங்களுக்கு அனுப்பிக்கொண்டே இருப்பது;இணையதளம் மூலமாக என்பது இலவசமாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும்(அப் லோடு) வலைதளங்களை பயன்படுத்தி,( உதாரணமாக www.picscrazy.com )தினமும் 20 முறை ஓம்சிவசிவஓம் நோட்டீஸை அப் லோடு செய்து கொண்டே இருத்தல்;இவ்வாறு இந்த 2012 ஆண்டு முழுவதும் நீங்கள் செய்ய வேண்டும்.( பிக்ஸ் க்ரேஸியில் நிர்வாணப்படங்களும்,வக்கிரமான படங்களும்  தான் இருக்கின்றன.அவரவர் தமது வக்கிரமான எண்ணங்களை பதிவு செய்கின்றனர்.நாம் அப்படிப்பட்டவைகளிலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்றிட ஓம்சிவசிவஓம் நோட்டீஸை அப் லோடு செய்கிறோம்)
இவற்றில் பங்கேற்க முடியாதவர்கள், வேறு விதங்களிலும் உதவி செய்யலாம்.மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் செய்யும் இந்த சிறு ஆன்மீக சேவையால், பலரது வாழ்க்கையே வளமாக மாறப்போகிறது;எனவே, கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்ப வேண்டுகிறேன்.

ஓம்சிவசிவஓம் பரவ,பரவ ஒவ்வொரு மனிதனும் ருத்ர அம்சமாக மாறுவான்;மேலும் சித்தத் தன்மையை அடையப்போவது உறுதி.முயலுவோமா?

ஓம்சிவசிவஓம்









Sunday, January 1, 2012

வேண்டாமே வெளிநாட்டு நிறுவனங்கள்! உரத்த சிந்தனை, ஆர்.ஜி.சந்திரமோகன்


"சில்லரை வணிகத்தில் வெளிநாட்டு முதலீடு தேவை' என, சில நாட்களுக்கு முன், மத்திய அரசு அறிவித்ததும், வணிகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது; மத்திய அரசு பின் வாங்கியது. ஆயினும், திரும்ப கொண்டு வரும் எண்ணத்துடன் உள்ளது.

அன்னிய முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வர அரசு சொல்லும் காரணம் என்ன? "உற்பத்தியாளருக்கு நல்ல விலை கொடுப்பர், நுகர்வோருக்கு சகாயமான விலைக்கு விற்பர்' எனக் கூறுகிறது. "இதை செய்ய முதலீடும், திட்டமும் தேவை என்பதால், வெளிநாட்டு கம்பெனிகளை அழைத்து செய்ய வைக்கலாம்' என, மத்திய அரசு கூறுகிறது. குறிப்பாக அமெரிக்க, "வால்மார்ட்' நிறுவனத்தை இந்தியாவுக்கு கொண்டுவர முயற்சி நடக்கிறது. அமெரிக்காவில், "வால்மார்ட்' என்ற பல்பொருள் வணிக நிறுவனம், 12 ஆயிரத்திற்கும், அதிகமான கடைகள் மூலம், தினசரி, இந்திய மதிப்பில், 6,400 கோடி ரூபாய் வணிகம் செய்கிறது. உலகிலேயே அதிக பணியாளர்களைக் கொண்ட, இந்திய ரயில்வேக்கு அடுத்தபடியாக, பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட ஆட்கள் இங்கு பணி புரிகின்றனர்.

இவர்கள், இவ்வளவு சிறப்பாக தொழில் செய்ய காரணம் என்ன? இவர்கள், நிறுவனத்தில் விற்பனை செய்யும் பொருட்களை உலகத்தில் உள்ள பல நாடுகளிலிருந்தும் வாங்குகின்றனர். வால்மார்ட்டிற்கு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று பொருள்களை தயாரிப்பவர்கள் அணுகினால், வால்மார்ட் அந்த நிறுவனத்தை ஆய்வு செய்து தேர்ந்தெடுக்கும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தை, வால்மார்ட்டை சேர்ந்த நிபுணர்கள் சோதனையிடுவர். சோதனையில் அவர்கள், தயாரிப்பாளர்களின் லாப, நஷ்ட கணக்குகளை சரி பார்த்து, பொருளை இன்னும் குறைந்த விலையில் எப்படி தயார் செய்வது என்று கற்றுக் கொடுப்பர். இயந்திரங்களை இடத்தை மாற்றி அமைப்பதிலிருந்து, வங்கிகளுக்கு கட்டும் வட்டியை குறைக்கும் வரை அனைத்தையும் செய்வர். சிக்கனமாக தயாரிக்க ஏற்பாடு செய்து, கடைசியில் கசக்கி பிழிந்து, அடிமாட்டு விலைக்கு சரக்கை வாங்குவர். அமெரிக்காவிலுள்ள தயாரிப்பாளர் ஒருவர் கேலியாக இப்படிச் சொன்னார்... "பொருளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், தவறு செய்கிறோம்; ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்தால், இரு மடங்கு தவறு செய்கிறோம். காரணம், வால்மார்ட்டுக்கு விற்றாலும் லாபம் கிடைக்காது, மறுத்தால் விற்பனையே செய்ய முடியாது!'

அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில், நுகர்வோருக்கு, 1950ல், 100 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட பொருளுக்கு, விவசாயிக்கு, 40 டாலர் கிடைத்தது. இன்று, 100 டாலருக்கு, விவசாயிக்கு கிடைக்கும் தொகை, 19 டாலராகக் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. "வால்மார்ட் போன்ற நிறுவனம் இந்தியா வந்தால், அனைத்தும் சரியாகிவிடும்' என, பலர் நினைக்கின்றனர். வால்மாட்டின் வளர்ச்சி, அமெரிக்க விவசாயிக்கு, 40 வருடம் முன் கிடைத்த விலையில், பாதி மட்டுமே கிடைக்க செய்கிறது. அமெரிக்க தொழில்கள் பல லாபகரமாக இயங்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேறிவிட்டன. அமெரிக்காவில் சூட்கேஸ், "டிவி' போன்றவை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. சீனாவிலிருந்தும், கொரியாவிலிருந்தும் சுமாரான தரமுடைய பொருள்களை, வால்மார்ட் விற்பனை செய்வது, அமெரிக்க தொழில் வளர்ச்சி மற்றும் பொருள்கள் விற்பனை பாதிப்படைய காரணமாக உள்ளது. வால்மார்ட், 50 ஆண்டுகளுக்கு முன், ஒரே கடையுடன் ஆரம்பமானது. அப்போது அமெரிக்கா ரொக்க வசதியுடன் இருந்தது; வால்மார்ட் அசுர வளர்ச்சி கண்டவுடன், ரொக்க வசதி மாறி, இன்று உலகிலேயே அதிக கடன் உள்ள நாடாகி விட்டது. வால்மார்ட் வளர்ச்சி, அமெரிக்க விவசாயிகளுக்கு, அமெரிக்க தொழில்களுக்கு, ஏன், அந்நாட்டு வளர்ச்சிக்கே உபயோகப்படவில்லை.

நம் நாட்டில், பத்து லட்சத்துக்கும் மேலானவர்கள், சிறு கடைகள் வைத்து பிழைக்கின்றனர். வால்மார்ட் போன்று நிர்வாகத் திறனும், வசதியும் இவர்களிடம் கிடையாது. ஆனால், இன்று சில்லரை வாணிபத்தில் அத்தியாவசிய பொருள்கள் பல, மிக குறைந்த லாபத்துக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக, சமையல் எண்ணெய் கிலோ, 62 ரூபாய்க்கு உற்பத்தியாளர்கள் விற்றால், வணிகரிடம், 63 ரூபாய்க்கு கிடைக்கும். சர்க்கரை ஆலை விலை கிலோ 30 ரூபாய் என்றால், 31.50க்கு கடையில் கிடைக்கும். "கோணி விற்று லாபம் கிடைத்தால் போதும்' என்று, சர்க்கரை விற்பவர்கள் அதிகம். ஆயினும், காய்கறி, பழம் போன்றவை, பல கைகள் மாறி, நிர்வாகக் கோளாறினால் அழுகி சேதாரமடைகின்றன. நம் நாட்டில் விவசாயி, 15 ரூபாய்க்கு விற்கும் காய்கறி, பழங்கள், நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மேலை நாடுகளில், 40 ரூபாய்க்கு விவசாயி விற்பனை செய்தால், நுகர்வோருக்கு 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. இப்படி நடக்காமல் இருக்க, இந்தியாவில் கட்டுமானம் வேண்டும். பல கைகள் மாறுவதை தவிர்க்க வேண்டும்.

இது, வெளிநாட்டின் உதவி இல்லாமல் இந்தியாவில் முடியுமா? முடியும்! உதாரணமாக, இந்தியாவில் உள்ள ஒரு விவசாயி, பால் உற்பத்தியில் ஒரு நாளுக்கு, 4 லிட்டர் வரை தன்னுடைய ஒரு மாடு கொடுக்கும் பாலை கறந்து, விற்பனை செய்கிறார். அமெரிக்க விவசாயி, ஏறத்தாழ 400 ஏக்கரில், 300 மாடுகள் வளர்த்து, 8,000 லிட்டர் வரை ஒரு நாளுக்கு உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். ஒரு அமெரிக்க விவசாயி கொடுக்கும், 8,000 லிட்டர் பால் வாங்க, இந்தியாவில், குறைந்தது, 2,000 விவசாயிகளிடம், பல கிராமங்கள் சுற்றி, காலை, மாலை பால் வாங்கி சேகரிக்க வேண்டும். இந்தியாவில், பால்காரர், 20 ரூபாய்க்கு விற்கும் பால், நுகர்வோருக்கு, 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால், அமெரிக்காவில் பால்காரர், 20 ரூபாய்க்கு விற்கும் பால், 60 ரூபாய்க்கு வால்மார்ட் நிறுவனத்தால் விற்கப்படுகிறது. நம் நாட்டில் பால் கொள்முதல் செய்யும் தொழில்கள் கட்டுமான வசதிகள் கொண்டுள்ளன. பால்காரர் கொடுக்கும் பால், தொழிற்சாலையால் வாங்கப்பட்டு, பல கைகள் மாறாமல் நுகர்வோரை சென்றடைகிறது. பாலில் செய்வதை நம் நாட்டில், வேறு விவசாய பொருள்களிலும் செய்ய முயற்சி இருந்தால் போதும். ஏற்கனவே கூறியபடி, அமெரிக்க விவசாயிக்கோ, உற்பத்தியாளருக்கோ, அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கோ, வால்மார்ட் பயன்படவில்லை.

இந்தியாவிற்குள் வால்மார்ட் நுழைந்தால், பெரிய இடம் எடுத்து, அதிக பொருட்களை வைத்து வாணிபம் செய்யும். அவர்களுடைய செலவினங்கள், வாடகை, சம்பளம் முதலியவற்றை நுகர்வோரிடம் தானே வாங்கவேண்டும். பாலோ, சர்க்கரையோ, எண்ணெயோ நம் ஊரில் உள்ள சிறு வியாபாரி குறைந்த லாபத்திற்கு விற்பது போல், வால்மார்ட்டால் விற்க முடியாது. சில வருடங்களுக்கு அசல் விலைக்கும் கீழேயே விற்கும் வசதி வால்மார்ட்டுக்கு உள்ளது. முதலில் சிறு வணிகர்கள் அடியோடு ஒழிக்கப்படும் வரை விலை குறைவாக கொடுப்பர்; பின், அவர்கள் நிர்ணயம் செய்யும் விலை தான். இதனால், விவசாயி, உற்பத்தியாளர், நாட்டுப் பொருளாதாரம் அனைத்தும் பாதிக்கும். சீனாவின் தரக்குறைவான பொருள்கள் நம்முடைய தலையில் கட்டப்படும். இங்கு செலவினங்கள், வாடகை கூடுவதால், நுகர்வோருக்கும் ஆரம்ப காலத்தில் கிடைக்கும் அடிமாட்டு விலை, பின்னால் கழுத்தைச் சுறுக்கும் கயிறாக மாறும். விலை தாறுமாறாக கூடும். இந்திய அரசு, விவசாயிக்கு, உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச கொள்முதல் விலையை (Minimum Support Price) அறிவித்து, அரிசி, கோதுமை கொள்முதல் செய்கிறது. மூன்றாண்டுக்கு முன், கோதுமைக்கு நல்ல விலை அறிவித்ததில், 10 லட்சம் டன் கொள்முதல் ஆண்டுக்கு வரும் என எதிர்பார்த்த இடத்தில், நல்ல விலை விவசாயிக்கு கிடைத்ததால், 18 லட்சம் டன்கொள்முதல் ஆனது.கொள்முதல் செய்த சரக்கில், பெரும் பகுதியைப் பாதுகாக்க அரசிடம் வசதி இல்லாததால், மழை, வெயிலில் சேதமடைந்தது. மூடிய கிடங்கு வசதி ஏற்பாடு செய்ய அரசு தவறியது. மேலும், எந்த பாதுகாப்பும் இல்லாத கோதுமையை எலிகள் கடித்து நாசப்படுத்தின. கோதுமை கொள்முதல் விலை குவிண்டாலுக்கு, 1,170 ரூபாயாக, 2010-11ல் அரசு அறிவித்தது. ஆனால், குஜராத்தில், 80 சதவீத விவசாயிக்கு கிடைத்த விலையோ, குவிண்டாலுக்கு, 950 முதல் 1,050 ரூபாய் வரை மட்டுமே. உத்தரபிரதேசத்திலும், 40 சதவீத விவசாயிகளுக்கு, இந்த உறுதிபடுத்தப்பட்ட குறைந்தபட்ச விலை கிடைக்கவில்லை. தேவையான கட்டுமானம் இல்லாததால், மத்திய அரசு கொள்முதலை ஊக்கப்படுத்தாததே இதற்குக் காரணம். இம்மாதிரியான குறைகளை தவிர்க்க, உள்ளூரில் உள்ள தனியாரை முதலீடு செய்ய வைத்து (Public Private Participation), அரிசி, கோதுமை முதலியவற்றை, உயரமான, "சைலே'க்களில் சேர்த்து வைத்தால், சேதாரத்தை தவிர்க்கலாம். நுகர்வோருக்கும், விவசாயிக்கும் சேதாரம் குறைந்து சகாயம் ஏற்படும்.

அப்படியிருக்க, வால்மார்ட்டின் வளர்ச்சிக்கு, நம் அரசும், நிர்வாகமும் ஏன் இந்த ஆர்வம் காட்டுகின்றனர்? முல்லா ஒருமுறை தெருவில், விளக்கு வெளிச்சத்தில், எதையோ தேடிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நண்பர், "என்ன தேடுகிறீர்கள்?' என்றார். முல்லா, "தொலைந்து போன காசை தேடுகிறேன்' என்றார். "எங்கே தொலைத்தீர்கள்?' என, நண்பர் கேட்க, "வீட்டில் தொலைத்து விட்டேன்' என்றார். "பின் ஏன் வீட்டில் தேடாமல், தெருவில் தேடுகிறீர்கள்?' என, நண்பர் கேட்க, முல்லா சொன்னார்... "வீட்டில் இருட்டாக உள்ளது. வெளிச்சம் தெருவில் இருப்பதால் இங்கு தேடுகிறேன்' என்றார். அதேபோல், உள்நாட்டுப் பிரச்னைக்கு, வெளிநாட்டில் தீர்வு கிடைக்கும் என, மத்திய அரசு எண்ணுகிறது. நாம் நம்முடைய சிறப்புகளை உணர்வதில்லை. இங்கு அரிசியையும், கோதுமையையும் பாழாக்கிக் கொண்டு, வெளிநாட்டவர் தான் நமக்கு விடிவு காலம் என எண்ணும் போக்கில் இருந்து வெளியே வரவேண்டும்.

தமிழகத்தின் முதல்வராக காமராஜர் இருந்தபோது, சில அதிகாரிகள் வெளிநாடு செல்ல திட்டமிட்டனர். சென்னை விரிவாக்கத்துக்கு, வெளிநாடுகள் சென்று சுற்றிப் பார்த்து வருவதாக காரணம் கூறியிருந்தனர். விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து, அதிகாரிகளை காமராஜர் கூப்பிட்டு, "மதுரையில், அந்த காலத்தில் பாண்டிய மன்னர்கள், மீனாட்சி அம்மன் கோவிலை மையத்தில் வைத்து, அகலமான சாலைகளை திறம்பட அமைத்துள்ளனர். நகரம் அழகாக திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று முதலில் பார்த்து வாருங்கள்' என்றார். பால் வளத்தில் உலகத்தில் முதல் நாடாக உருவாக அன்று, "அமுல்' நிறுவனம் திட்டமிட்டது. அத்திட்டம், இன்று, இந்தியா முழுவதும் அமலாக்கப்பட்டுள்ளது. இதே முறையில் மீதி விவசாயப் பொருட்களிலும் திறமையாக செயல்படுவது எப்படி என்று, தனியார் துறையை சேர்ந்தவர்களையும் கூப்பிட்டு அரசு யோசனை கேட்டால், சிறப்பாக செய்ய முடியும். பாலில் செய்வதை கோதுமையிலும், அரிசியிலும் செய்ய முடியாதா என்ன? இன்று, பால் உற்பத்தியில், உலகில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் மிக குறைந்த வித்தியாசமே உள்ளது.

நாமே கண்டுபிடித்த நல்ல மாடல் இது. அதை விட்டுவிட்டு, கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு, நெய்க்கு அலையும் வேலை, வால்மார்ட்டை நம்புவது. முல்லா கதையைப் போல், நம் பிரச்னைக்கு வெளியிலிருந்து தீர்வு வரவே வராது. வயிற்றுவலிக்கு வைத்தியனிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிட்டால், வலி படிப்படியாக குறைந்து நான்கைந்து நாட்களில் சரியாகி விடும். வயிற்று வலி உடனே நிற்க வேண்டும் என்று ஒருவன் டாக்டர் யாரையும் பார்க்காமல், மூட்டைப் பூச்சி மருந்தை வாங்கி குடித்தான்; வயிற்று வலி உடனே நின்று விட்டது. அதை தெரிந்து கொள்ள அவன் தான் உயிரோடு இல்லை. மாற்றுக் கட்சிகளை கலக்காமல், திடீரென மத்திய அரசு தன்னிச்சையாக எடுக்க நினைத்த முடிவு அனைத்து குடிமக்களையும் பாதிக்கும். Email: rgc@hatsun.com

- ஆர்.ஜி.சந்திரமோகன், தொழிலதிபர்/சிந்தனையாளர் thanks:dinamalar 1.1.2012