Saturday, October 8, 2011

ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை தினசரிக்கடமைகளில் ஒன்றாக்குங்கள்




சிவசிவ என்று தினமும் 15 நிமிடங்கள் ஜபித்தாலே,நம்மை உயர்ந்த துறவறத்தில் கொண்டுபோய்விட்டுவிடும் என மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆன்மீக ஆராய்ச்சியின் மூலமாக தெரிந்திருக்கிறது.இன்றைய வேகமான உலகில் துறவுவாழ்க்கை வாழ்வது சாத்தியக்குறைவே!

குடும்பஸ்தர்களாகிய நமக்கு அருள்வளமும்,பொருள் வளமும் ஒன்றாகக் கிடைக்க வேண்டும்;அதே சமயம் அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது.அப்படி சுலபமான மந்திரம் ஒன்று இருக்குமா? என பல்லாண்டுகளாக மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்,பல சிவனடியார்கள்,சாதுக்கள்,துறவிகள்,மகான்களிடம் தேடித்தேடி நமக்காகக் கண்டுபிடித்த சிவ வைரமே ஓம்சிவசிவஓம்.

சிவசிவ என்ற மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் என்ற மந்திரம் சேர்க்கும்போது அது குடும்பஸ்தர்களுக்காக மாறிவிடுகிறது.இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளோடு எவரும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்;ஒன்று 21 வயது நிரம்பியிருக்கவேண்டும்.(ஏனெனில்,சூட்சுமமாக சிவகணங்கள் அல்லது ஒரு சிவகணம் நமது கோரிக்கையை நிறைவேற்றும்;)மற்றது அசைவம் சாப்பிடக்கூடாது;நமது பிறந்த நேரப்படி,நாமே பலவிதமான கஷ்டங்களுக்கும்.துயரங்களுக்கும் ஆளாகிறோம்.நாம் சாப்பிடும் ஆடு,மாடு,கோழி,நண்டு,மீன் போன்றவைகளுக்கும் ஜாதகம் உண்டு.(யாரும் எழுதுவதில்லை:அதிலும் அவைகளுக்கு பாவ புண்ணியத்தை அனுபவிக்க வேண்டும் என்பது இருக்கும்)அவைகளின் உடலை நாம் சாப்பிடுவதன் மூலமாக அவைகளின் கர்மாக்களையும் நாம்தான் சுமக்க வேண்டும்.மேலும்,அசைவம் சாப்பிடுபவர்களுக்கு சுலபமாக மாந்திரீகம் வைக்க முடியும்.மனதில் மனித நேய எண்ணங்கள் அழிந்துவிடும்.மிருக உணர்ச்சி உண்டாகி,மனிதன் காம வெறிபிடித்தவனாகவோ அல்லது பொறுமையற்றவனாகவோ மாறிவிடுகிறான்.இதனால்,சாத்வீகமான சிவமந்திரத்தை ஜபிக்கும் தகுதியை நாம் இழந்துவிடுகிறோம்.

எனவே,தினமும் அதிகாலை அல்லது காலை அல்லது மதியம் அல்லது இரவு அல்லது நள்ளிரவில் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில்(ஆரம்பகாலத்தில் 10 நிமிடம்,பின்னர் படிப்படியாக 1 மணி நேரம் வரை) ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்குவோம்.நமது முன்வினைகளையும்,முற்பிறவி பாவங்களையும்,நமது முன்னோர்களின் பாவங்களையும் கரைக்கத் துவங்குவோம்;

ஓம்சிவசிவஓம்

விஜயாபதியில் இருக்கும் சித்தர்பீடம்













நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே (இராதாபுரம் தாலுகாவிலிருந்து பத்து கிலோமீட்டர்கள்தூரத்தில் இருக்கும்)விஜயாபதியில் இன்றும் தவம் செய்துவரும் விஸ்வாமித்ர மகரிஷி அவர்களின் அன்பான ஆசிர்வாதத்தினாலும்;

எனது மானசீக ஆன்மீக குரு மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆசியோடு,இந்தப் பதிவு ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.



இந்தப்படத்தில் இருப்பது விஜயாபதி ஸ்ரீவிஸ்வாமித்ரமகாலிங்கசுவாமி திருக்கோவிலின் மூலவராகிய விஸ்வாமித்ர மகாலிங்கசுவாமிசன்னிதியின் பின்புறத்தில் அமைந்திருக்கிறது.இந்தக் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்கள் இந்த சித்தர்பீடத்தினுள் அமர்ந்து தியானித்து,தங்களது நியாயமான கோரிக்கைகளை வேண்டினால்,வெகு விரைவில் நிறைவேறும் என்பது அனுபவ உண்மை!!!



இந்தபுகைப்படத்தை பிரிண்ட் எடுத்து,புகைப்படமாக உங்கள் பூஜையறையில் நிறுவிக்கொள்ளவும்.



அல்லது



உங்கள் கணினியின் திரையில் வால்பேப்பராக வைத்துகொள்ளவும்.,உங்களின் நியாயமான கோரிக்கைகளை வேண்டிக்கொண்டு,ஓம்சிவசிவஓம் தினமும் ஜபித்துவரவும்.



இதனால்,இரண்டு விதமான நன்மைகள் உண்டாகும்.இந்த சித்தரின் ஆசி உங்களுக்குக் கிடைக்கும்.நீங்கள் விரைவாக விஜயாபதிக்கு ஒருமுறை வருவதற்கான சந்தர்ப்பம் அமையும்.இந்த சன்னிதியின் எதிரே ஒவ்வொரு பவுர்ணமியன்றும் ஒரு இளைஞர்,ஒற்றைக்காலில் நின்று மணிக்கணக்காக தவம் செய்து வருகிறாராம்.



இந்த சித்தர்பீடத்தை வழிபட்டவாறு ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,மனதில் தேவையற்ற காம எண்ணங்கள் அடியோடு நின்றுவிடும்;வன்மம் எனப்படும் பழிவாங்கும் குணம்,பொறாமை முதலான தீயகுணங்கள் விலகுகின்றன.முயன்றுபார்ப்போமா?



ஓம்சிவசிவஓம்



ஓம்விஸ்வாமித்ர மகரிஷியே போற்றி! போற்றி!! போற்றி!!!




Friday, October 7, 2011

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனப்பெருமாள்,ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கும் முன்பேயிருக்கும் 50,000 ஆண்டு பழமையான கோவில்



அகஸ்திய முனி ஷண்பகராண்ய வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது வேட்டுவ இன அரசர்களைக் கண்டார். வில்லி மற்றும் புத்தன் என்பது அவர்கள் பெயர். அருகிலிருந்த ஆல மரத்தை காட்டி, இதனடியில் ஒரு குகை உண்டு. அந்த குகையில் வடபத்திர சாயி என்ற பெயரில் அந்த மகாவிஷ்ணு அனந்த சயனம் செய்கின்றார். அவருக்கு இந்த வனத்தில் ஒரு கோயில் கட்டு என்றார். அதற்குரிய தங்கமும்&வைரமும் அங்கு குபேரனே வைத்து காவல் செய்கிறான். உடனே இந்த திருப்பணியை தொடங்கு என கட்டளை இட்டார்.




அவர்களும் அகஸ்தியரின் வாக்கு வழி பொக்கிஷத்தை எடுத்து அந்த ஷண்பகராண்ய வனத்தை சற்று அழித்து ஒரு கோயில் கட்டினார்கள். அங்குறை வடபத்திர சயனரே இன்றும் காட்சி தருகிறார். கோயிலைச் சுற்றி, பின் ஒரு ஊர் தோன்றிற்று.வில்லி & புத்தன் என்ற அரசர்கள் உருவாக்கியமையால் வில்லிபுத்தூர் என பின்நாளில் வழங்கப்பட்டது. திருவேங்கடவன் என எல்லோரும் போற்றக்கூடிய வெங்கடாஜலபதி சுவாமியின் பத்தினியான பத்மாவதி தாயாரே, இந்த கோயிலின் பிராகாரத்தில் கோதை நாச்சியார் ஆக அவதாரம் செய்தாள். விஷ்ணு சித்தர் என்ற ஆழ்வாரை, பெரியாழ்வார் என வைஷ்ணவம் போற்றும். அவரே இந்த கோதை நாச்சியாரை எடுத்து வளர்த்தார். அனுதினமும் பூமாலையும் பாமாலையும் ஒரு சேர செய்து வடபத்திர சாயிக்கு சூட்டி பூஜை செய்து வந்தார். கோதை பருவமடையும் காலத்தில் இறைவன் மேல் அளவிலா பக்தி பூண்டு பூமாலை தொடுக்க தந்தைக்கு உதவி வந்தார்.



ஒருமுறை மாலையைத் தான் அணிந்து எப்படி இருக்கும் என ஒரு கிணற்றில் எட்டிப் பார்த்து ரசித்தார். இதைக் கண்ட தந்தை விஷ்ணு சித்தர் கோதையை கடிந்து கொண்டார். அன்று இரவு இறைவன் பெரியாழ்வார் கனவில் வந்து, ‘இனி எப்போதும் கோதை சூடிய மாலையை மட்டுமேதான் நான் சூடுவேன். இதுவே எனது ஆசை’ என்றார். அன்றிலிருந்து கோதைக்கு சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்று பெயர் விளங்கிற்று. இந்த திருத்தலம், வராக க்ஷேத்திரம் ஆகும். ஆதிவராகர் ஹிரண்ய வதம் முடித்து, பின் சற்று அமர்ந்து, கோபம் தணிந்து, அகம் குளிர்ந்த தலம். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எப்படிப்பட்ட துக்கம் இருந்தாலும் அவை பொடிப் பொடியாய்ப் போகும் என்பது பலரும் அனுபவ பூர்வமாய் கண்ட உண்மை.



இங்கு திருமுக்குள தீர்த்தம் உண்டு. இதில் நீராடி வடபத்திர சாயியை வழிபட்டோர் அடையாத வெற்றியே இல்லை. கண்ணாடி தீர்த்தத்தில் தன் முகத்தை தானே தரிசித்தால் திருஷ்டி நீங்கும். கபால பீடை அகலும் என்பது கண் கண்ட உண்மை. இங்குள்ள விமானம் சம்சண விமானம், தேவர்களுடன் சிவனும் வந்து வணங்கும் விமானம் என்கிறது விஸ்வாமித்ர நாடி.

‘‘தேவருடனே முக்கண் மூர்த்தியும்

முயன்று தொழுமிவ் விமானமது

சம்சணமே’’ & என்ற பாட்டால் தெரியலாம்.

பஞ்ச லோகத்தால் ஆன சக்கரத்தாழ்வாருக்கு எதிரில் விஜயவல்லித் தாயாரின் ஸ்வரூபம். அக்னி, பயம், காத்து, கருப்பு, பேய், பிசாசுகளின் பிடியிலிருந்து நிவாரணம் பெற ஓடி வருவீர் இத்தலத்திற்கு என்கிறார் அகஸ்தியர்.



‘‘எழுந்தோடி வருவீர் வடபத்திர சயனங்கண்டு நிற்ப முடியாதது என் இவ் வையத்தே’’ & நம்மாழ்வார் அவதரித்த இந்த தலத்தை தென்புதுவை என்றும் வட

மகாத்மபுரம் என்றும் ஸ்ரீதன்வபுரி என்றும் போற்றுகின்றனர். முன்னைய மன்னர்கள், விக்கிரம சோழ சதுர்வேதி மங்கலம் என்று வர்ணித்தனர்.

ஆண்டாள் ‘திருப்பாவை’ என்ற தமிழ் வேதத்தை ஓதிய தலம். ஸ்ரீகிருஷ்ணன், ரங்கமன்னாராக

கருடன் மேல் வந்து ஆண்டாளை விவாகம் செய்த தலம். இந்த புண்ய க்ஷேத்திரத்தில்தான் பெரியாழ்வாருக்கு தனது கல்யாண கோலத்தைக் காட்டினார் திருமால். அவர் எப்படி தரிசித்தாரோ அதை அப்படியே ஓவியமாக தீட்டினார் பெரியாழ்வார். பின் பாண்டிய, சோழ மன்னர்களால் ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் சிற்பங்களுடன் கோயில் அமைந்தது.



தமிழக அரசு முத்திரையில் கம்பீரமாக காட்சி அளிப்பது இந்த வடபத்திரசாயின் ராஜகோபுரமே. இந்த கோயிலுக்கு அனுதினமும் தும்புரு நாரதர், பிரம்மா, சனக ரிஷி, கந்தர்வர்கள், சந்திரன், கின்னர மிதுரர்கள், சூரியன் என யாவரும் வந்து ஹோயாளி பூஜை (விடிவெள்ளி தோன்றுகையில் செய்யும் பூஜைக்கு ஹோயாளி பூஜை என்று பெயர்) செய்து தத்தம் இடம் சேருகின்றனர். எடுத்த காரியம் ஜெயம் பெற, நல்ல புத்திரர்கள் உண்டாக, குழந்தை பாக்கியம் உண்டாக, கல்வியில் முன்னேற, வியாபாரம் அபிவிருத்தி அடைய, வடபத்திர சாயியை பதினெட்டு பௌர்ணமியன்று விரதம் இருந்து, மாலை வேளையில் தொழுது வந்தால்

வேண்டியன சித்திக்கும் என்கிறார் அகஸ்தியர்.

‘‘நாடிய பொருள் கைகூடும் கல்வியும் மேன்மையும் உண்டாம் எண்ணியவாறு மணமுமீடேறும்; கொடிய பிணி கருகும். கடனுபாதை போம் &ஆயுளுமாங்கு பலமாகு மய்யன் வடபத்திரன் முழுமதி முயன்று மூவாறு திதி தொழுபவர்கே!’’
 
thanks: D.Lingam,our favourite reader





இந்தியாவை நேசிப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்கள்





அன்பான ஆன்மீகக்கடல் வாசகர்களே,நமது தேசம் 2001 ஆம் ஆண்டிலேயே வல்லரசு நிலையை எட்டிவிட்டது.சித்தர்களின் ஆசியும்,நேர்மையாக உழைக்கும் இந்தியர்களுமே இதற்குக் காரணம்.ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ரூ.8/-மட்டுமே.இருந்தும் சில ஏற்றுமதியாளர்களுக்காகவும்,அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையாமலிருக்கவும் அமெரிக்காவில் படித்த நமது மத்திய மந்திரிகள் டாலரைத் தாங்கிப் பிடிக்கிறார்கள்.இதுபற்றி விரிவான பதிவு எழுத பல மாதங்களாக எனக்கு ஆசை.ஆனால்,நேரமில்லை;

எனவே,நமது நாட்டின் பொருளாதாரநிலையின் உண்மைத் தன்மையை அறிய மேலே விவரிக்கப்பட்டுள்ள புத்தகப்பட்டியலில் உங்களுக்குப்பிடித்த தலைப்பை விலைக்கு வாங்கி வாசிப்பது நன்று.மிகுந்த நடுநிலையோடு எழுதப்பட்டிருக்கும் புத்தகங்கள் இவை.நிச்சயம் பொருளாதாரம் பற்றி அறியவும்,இந்தியா எப்படி இன்று வரையிலும் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தாக்குப்பிடித்து வாழ்ந்துவருகிறது என்பதையும் இவ்வளவு நடுநிலையோடு யாரும் எழுதியதில்லை.

ஏனெனில்,இந்தியா நாசமாகப்போகவேண்டும் என்ற உயரிய நோக்கோடு இந்தியாவின் பெருமைகளை மறைக்கும் சீனதேசபக்தி கம்யூனிஸ்டுகள்(பெரும்பாலான பத்திரிகையாளர்கள்) செய்துவருகின்றனர்.எனவே, நமது நாட்டின் பெருமைகளை நாம் வெகு விரைவாக அறிவதன் மூலமாக இந்த கம்யூனிஸ்டுகள்,முஸ்லீம் அடிவருடிகள்,இந்திய பொருளாதார எதிரிகளை அவர்களின் நடிப்பை புரிந்து கொள்ள இந்தப் புத்தகங்கள் உதவும்.வாழ்த்துக்கள்.








OUR MATHAJI AT NAVARATHIRI POOJAI FESTIVEL


OUR MATHAJI @ NAVARATHIRI POOJAI FOR MY READERS

NAVARATHIRI POOJAI- OUR MOTHER PATHIRAKALI AMMAL,SRIVILLIPUTHUR