Thursday, February 10, 2011

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்: மறு பதிவு






உங்கள் மனைவிக்கு கைப்பிடி சோறும்,கட்டுவதற்கு புடவையும் நீ கொடுத்து அவளை காப்பாற்றினால் நீ கால் ஞானி!

பெற்ற பிள்ளைக்கு பிடி சோறும் கற்பதற்குக் கல்வியும் நீ கொடுத்தால் நீ அரை ஞானி!

மூதாதையர்களையும் மூத்தவர்களையும் மதித்து ஆதரித்து நடந்தால் நீ முக்கால் ஞானி!!

இந்த மூன்றையும் நீ கடைசிவரை செய்து வந்தால் நீ முழு ஞானி!!!

நிர்மலான மனதுடன் நிச்சயம் செய்து வந்தால் உன் மனம் நிர்மலாகும்.



உங்களது பிறந்த ஜாதகத்தில் ராகு,கேதுக்கள் உங்கள் வாழ்வில் பிதுர்தோஷத்தை உண்டாக்குகின்றன.உங்களது பிறந்த ஜாதகத்தில் 1,5,7,9-இவ்விடங்களில் ராகு அல்லது கேது நின்றால் உங்கள் வாழ்க்கை தினமும் போராட்டம் தான்!இதுவே பித்ரு தோஷம் ஆகும்.பித்ரு தோஷம் உள்ளவர்கள் என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.

பித்ரு தோஷம் பரிகாரம் செய்தபின்னர்தான் வாழ்க்கை போராட்டம் இன்றி செல்லத்துவங்கும்.பிதுர் தோஷம் தன்னையும், தன்னைச் சேர்ந்த குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும்.நோய்கள், தேவையற்ற வம்புகள், கணவன் மனைவி பிரச்னைகளை உருவாக்கும்.குறைந்தது மூன்று தலைமுறைகள் பாதிப்படையும்.

மகாளய பட்சம் என்று ஒரு காலம் தமிழ்வருடத்தில் ஆண்டுக்கு ஒருமுறை வரும்.புரட்டாசி மாதத்தில் வரும் அமாவசையிலிருந்து முன்னதாக பிரதமை ஆரம்பித்து வரும் பதினைந்து நாட்களாகும்.இந்த 15 நாட்களில் பித்ருக்கள் பூமிக்கு வந்து தனது சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள்.அந்த 15 நாட்களில் நாம் பித்ரு தர்ப்பணம் செய்தால் அந்த தர்ப்பணம் நேரடியாக நமது பித்ருக்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள்.பட்சம் முழுவதும் செய்ய முடியாதவர்கள் மகாபரணியிலும் அமாவசையன்றும் செய்தால் கூட போதும்.ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களிலும் பிதுர்களுக்கு செய்யும் தர்ப்பணம் மற்றும் தானங்கள் நமது அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம்.இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.திலம் என்றால் எள் என்று அர்த்தம்.திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு.சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும்.இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம க்க்க்ஷேத்த்ரம் என்ற ஸ்தலம் உள்ளது.அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

பிதுர்சாந்தி செய்யாமல் செய்கின்ற எந்த பூஜைகளும் பலன் கொடுப்பதில்லை.கேரளாவில் பிதுர்சாந்திக்கு ஜென்ம நட்சத்திரத்தன்று பசுவுக்கு பருத்திக்கொட்டை பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுக்கின்றனர்.

வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா,இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.



ராமேஸ்வரத்தில் பிதுர் தோசம் செய்ய ராஹவ சர்மா என்பவரை அணுகவும்.அவரது செல் எண் 94420 44092, 9994 074647.

மாசி மகம் 18.2.11 வெள்ளியன்று வருகிறது;பயன்படுத்துங்கள்



18.2.2011 வெள்ளிக்கிழமை அன்று மாசி மாதத்து பவுர்ணமி வருகிறது.இந்த நாளை நமது ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கப்பயன்படுத்துவோம்.

சந்தர்ப்பம் இருப்பவர்கள்,உங்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்குச் செல்லுங்கள்.அன்று இரவு 10 மணி முதல் 12 அல்லது 1 மணிவரையிலும் பவுர்ணமி பூஜை நடைபெறும்.சென்னை,கோவை,மதுரை முதலான மாநகரங்களில் இரவு 8 முதல் 10 மணிக்குள் பவுர்ணமி பூஜை நடைபெற்று வருகிறது.

இந்த சமயத்தில்,அம்மனின் அபிஷேகம் நடைபெறும்போது,நாம் அம்மனின் சன்னதியில் கடைசி ஆளாக நமது மஞ்சள் துண்டினை விரித்து,இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,உள்ளங்கைகளை மடக்கி,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்.



அம்மன் சன்னதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை;பாவமும் இல்லை;ஏனெனில்,இந்த மந்திரத்தில் அனைத்து தெய்வங்களும் சூட்சுமமாக இருக்கின்றன.எனவே,குற்ற உணர்ச்சி வேண்டாம்.

குறிப்பாக,கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள்,அசுபதி,மகம்,மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று முடிந்தவரையிலும் அதிக நேரத்திற்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பது உங்களின் பாவத்தைப் போக்கும்.



இது செய்ய இயலாதவர்கள்,இந்த நாளில் நள்ளிரவு(வெள்ளிக்கிழமை நள்ளிரவு மணி 11.45 முதல் 1.15 வரை) வீட்டின் மொட்டை மாடியில் ஜபித்துவருவது மிகவும் அதிக நற்பலன்களைத் தரும்.அளவற்ற மன உறுதி உள்ளவர்கள்,இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் ஜபிக்கலாம்.



விடுப்பும்,போதுமான பணமும் இருப்பவர்கள் உங்கள் ஊரில் அமைந்திருக்கும் மலைக்கோவில்களில் (உதாரணமாக கொல்லிமலை,சதுரகிரி,பர்வதமலை,பண்பொழி முருகன் கோவில்,திருத்தணி,பழனிமலை,சத்தியமங்கலம் காட்டுப்பகுதி)அங்கே சென்று,அன்று முழுவதும் விரதமிருந்து இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வரவேண்டும். ஜபித்து முடித்தப்பின்னர், பால் சாப்பிட்டோ அல்லது இளநீர் சாப்பிட்டோ ஜபத்தை முடிக்கலாம்.



எந்த ஒரு மந்திர ஜபத்தையும் ஜபித்து முடித்துவிட்டு,ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால்,நாம் அன்று ஜபித்த மந்திர ஜபத்தின் மொத்த எண்ணிக்கையும் நமது உடலுக்குள் பதிவாகிவிடும்.இளநீர் கிடைக்காதவர்கள்,குடிநீர் அருந்தினாலும் போதுமானது.இந்தக் கருத்தை ஆராய்ந்து நமக்கு உபதேசித்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

வரி விலக்கு கவிதை:தி.உதயக்குமார்




ஜப்பானியப் படம் ஒன்றிலிருந்து

கதையைச் சுட்டோம்

அமெரிக்காவிலிருந்து அனிமேஷனுக்கு

ஆள் கூட்டி வந்தோம்

நடனமாட மும்பை அழகிகளை

இறக்குமதி செய்தோம்

பாடுவதற்கு பாலிவுட் பாடகர்களைப்

பயன்படுத்தினோம்

தெலுங்கு பேசும் ஹீரோவையும்

மலையாள வாசம் வீசும் ஹீரோயினையும்

இடம்பெறச் செய்தோம்

அதிக ஆங்கில வரிகளைச் சேர்க்குமாறு

ரைட்டரிடம் கேட்டுக்கொண்டோம்

கடைசியில். . .

படத்துக்குத் தமிழில் பெயர் வைத்து

வரிவிலக்கும் பெற்றுக்கொண்டோம்.



நன்றி:ஆனந்த விகடன்

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு தொழில்முறை ஜோதிடப்பயிற்சி



ஒரு நாளுக்கு இரண்டு தடவை வீதம்,ஒரே மாதத்தில் ஜோதிடம் தொழில்முறையாக கற்றுக்கொள்ளுமளவுக்கு நமது ஆன்மீகக்கடல் பயிற்சியளித்துவருகிறது.இந்த ஒரு மாதத்திற்குப்பிறகு,நீங்கள் உங்கள் பகுதியில் ஜோதிடத்தொழில் செய்யலாம்.

இதற்குத் தேவையான தகுதிகள்:குறைந்தது பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.ஒரு மாதம் வரை உங்கள் சொந்தச்செலவில் இராஜபாளையம்,(விருதுநகர் மாவட்டம்)நகரில் வந்து தங்க வேண்டும்.ஜோதிடம் பயிலுவதற்குக் கட்டணம் உண்டு.

மேலும் விபரமறிய மின் மடலில் aanmigakkadal@gmail.com க்கு தொடர்புகொள்ளவும்.

Wednesday, February 9, 2011

இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல






இந்திய மரபுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ,ரிக் வேதத்தின் அடிப்படையாகக் கொண்டு நவீன காலப்புனைவாக உருவாக்கியுள்ள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாக வெளியாகியுள்ள நூல் “க”.



இந்நூலின் வெளியீட்டுவிழா கடந்த ஜனவரி 16(2011) அன்று சென்னையில் நடைபெற்றது.அவ்விழாவில் பேசிய கலாஸ்ஸோ, “இந்திய தத்துவ மரபு வெறும் கற்பனை அல்ல; இந்திய வேதங்கள்,உபநிஷத்துகள்,புராணங்கள்,இதிகாசங்கள் ஆகியவற்றின் உள்ளுறையாக விளங்குவது அறிவார்த்தமான முடிவற்ற தேடல்தான். இந்திய தத்துவ மரபோடு ஒரு படைப்பாளி என்ற முறையில் நான் நடத்திவரும் உரையாடல் தொடரும்”





ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்




கால பைரவாஷ்டகம் படந்தியே மனோஹரம்

க்ஞானமுக்திஸாதனம் விசித்ர புண்ய வர்த்தனம்

லோகமோஹலோபதைன்ய கோபதாபநாசனம்

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்



நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம்

காசிவாசி லோகபுண்ய பாப சோதகம் விபும்

நீதிமார்க்ககோவிதம் புராதனம் ஜகத்பதிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



பாவங்கள் அழிய தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



அட்டஹாச பின்னபத்மஜாண்ட கோசஸந்ததிம்

த்ருஷ்டிபாத நஷ்டபாப ஜாலம் உக்ரசாஸனம்

அஷ்டஸித்தி தாயகம் கபாலிமாலிகந்தரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



வேண்டுவன கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



பானுகோடி பாஸ்வரம் பவாப்தி காரகம் பரம்

நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்

காலகால மம்புஜாக்ஷ மக்ஷசூல மக்ஷரம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



மரணபயம் நீங்கிட தினமும் ஜபிக்க வேண்டிய காலபைரவ மந்திரம்



தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரிபங்கஜம்

வ்யாலக்ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்

நாரதாதியோகி ப்ருந்த வந்தனம் திகம்பரம்

காசிகா புராதிநாத காலபைரவர் பஜே



மோட்சம் கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்



புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த சாரு விக்ரஹம்

பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விக்ரஹம்

நிக்வணன் மனோக்ஞஹேம கிங்கிணீலஸத்கடிம்

காசிகா புராதிநாத காலபைரவம் பஜே



நன்றி:ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் அருளிய ஸ்ரீகாலபைரவாஷ்டகம்

நன்றி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு

நன்றி:வைரவ வணக்கம்,தொகுத்தவர்:பி.பாலகிருஷ்ணன்,மிஸ்டிக் இந்தியா மிஷன்.

சூரியனின் பிராண தேவதை=சொர்ணாகர்ஷண பைரவர்+பைரவி




ஓம் பைரவாய வித்மஹே

ஆகர்ஷணாய தீமஹி

தந்நோஹ் சொர்ணபைரவ ப்ரசோதயாத்



ஓம் த்ரிபுராயை ச வித்மஹே

பைரவ்யை ச தீமஹி

தந்நோஹ் பைரவி ப்ரசோதயாத்