Wednesday, February 9, 2011

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்




சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்



ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்



ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்



யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.



செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி



ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்



ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்



செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.



புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி



ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்



ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வராஹி ப்ரசோதயாத்



புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.



குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்



ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்



குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.



சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி



ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்



ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்



சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.



சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி



ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்



ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்



சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.



ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ



ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்



ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ: சண்டி ப்ரசோதயாத்



ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.



கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி



ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்



ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; காளி ப்ரசோதயாத்



கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

இவற்றில் தந்நோ: என்பதை தந்நோஹ் என்று உச்சரிக்க வேண்டும்.

பைரவரை வழிபாடு செய்வது எப்படி?




பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அஷ்டமி என கருதப்படுகிறது.பொதுவாக,மக்கள் அஷ்டமி அன்று எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள்.அதன் உண்மைக்காரணம் வேறு.

இறையாணைப்படி,அனைத்து ஜீவராசிகளுக்கும் எல்லா ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் பணியினை நிறைவேற்றுபவர்கள் அஷ்ட லட்சுமிகள்.சொர்ணபைரவரிடம்,சக்திகளைப் பெற்று தாங்கள் பெற்ற அதனை பக்தர்களுக்கு விநியோகம் செய்துவருகின்றனர்.தாங்கள் பெற்ற சக்தி குறைய குறைய,ஒவ்வொரு அஷ்டமியிலும் பைரவரை வழிபாடு செய்து தங்கள் சக்தியை பெருக்கிக் கொள்ளுகின்றார்கள்.அஷ்டமிஅன்று,அஷ்ட லட்சுமிகளே பைரவ வழிபாட்டில் ஈடுபடுவதால்,அவர்களால் அன்று நடைபெறும் நற்காரியங்களில் ஈடுபட முடியாது.

ஆகவே,அஷ்ட லட்சுமிகளே வழிபடும் அந்த அஷ்டமி நன்னாளில்,நாம் நேரடியாக ஸ்ரீபைரவரை வணங்கிவந்தால்,அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமி,குறிப்பாக கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவ வணக்கத்திற்கு மிகவும் சிறந்தது.



சாதாரணமாக,நாய் வாகனம் பைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.சில இடங்களில் இடப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்.



மிக அரிதாக,சில இடங்களில் மட்டுமே இருபக்கமும் நாய்வாகனங்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.இவ்வாறு,இடப்பக்கம் மற்றும் இரு வாகனங்களுடன் உள்ள பைரவ பெருமான்,மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம்.ஏவல்,பில்லி சூனியம்,பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய,வாழ்வில் வளம் பெற,திருமணத்தடைகள் நீங்கிட,பிதுர்தோஷம்,சனி தோஷம்,வாஸ்து குறைபாடுகள் நீங்கி பைரவர் வழிபாடு மிகவும் உதவும்.

தமிழகம் முழுவதும் இருக்கும் பழமையான சிவாலயங்களில் கோவிலின் பாதுகாவலராக பைரவர் இருக்கிறார்.அவரை வழிபாடு செய்தால் போதுமானது.இந்தத் தகவல்களை நமக்கு தேடி ஆராய்ந்து கண்டறிந்தவர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.அவர்களுக்கு நாம் ஆத்மார்த்தமான நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம்.

ஏன் பைரவ வழிபாடு செய்ய வேண்டும்?




12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் ஸ்ரீபைரவர். நவக்கிரகங்களுக்கும் பிராண தேவதையாக இருப்பவரும் பைரவரே.



தேவ,அசுர,மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான் ஆவார்.சனிக்கு வரம் தந்து,இக்கடமையைச் செய்ய வைத்த சனியின் குரு ஸ்ரீபைரவரே ஆவார்.சனியின் வாத நோயை நீக்கியவரும் பைரவரே.



தன் தமையன் எமன்,பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன்,பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான்.தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி,மும்மூர்த்திகள் உள்பட அனைவரையும்,கால வர்த்தமான நிர்ணயப்படி(ஜோதிட ரீதியாக சனிப்பெயர்ச்சிப்படி) நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப்பிரமாணம் பெற்றுக்கொண்டார்.



சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும்,அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார்.



அதனால்தான் ,ஏழரை நாட்டுச்சனி,அஷ்டமச்சனி,ஜன்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு ஒன்றினால் மட்டுமே அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும்.

பைரவர் உருவான புராணக்கதை



அந்தகாசுரன் என்னும் சிவபக்தன் நீண்ட வலிய தவம் புரிந்து,சிவபெருமானிடம் வரம் பெற்றான்.அந்த வரத்தின் சக்தியால் மும்மூர்த்திகளையும்,மற்ற தேவர்களையும் துன்புறுத்தினான்.அவர்களை சேலை அணிந்து,கையில் வளையிட்டு,கண்ணில் மைதீட்டி,பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசி பணிபுரியச்செய்து,இழிவு படுத்தினான்.அந்தகாசுரன் இருள் என்னும் சக்தியைப் பெற்றதால்,பிரபஞ்சம் முழுவதும் இருளைக்கொண்டு ஆட்சி நடத்தினான்.

இவர்கள் அனைவரும் அந்தகாசுரனிடம் போரிட்டுத் தோற்றனர்.பின்னர்,முழு முதற்கடவுளான சிவபெருமானைத் தஞ்சமடைந்து முறையிட்டனர்.



தாருகாபுரத்தை எரித்த காலாக்னி ,சாந்தமாகி சிவபெருமானின் நெஞ்சில் ஓர் பகுதியாக இருந்தது.தேவர்களின் துயர் துடைக்க சிவபெருமான் அந்த அக்னிக்குஞ்சுக்கு ஆணையிட்டார்.அதில் விஸ்வரூபம் எடுத்து வந்தவர்தான் ஸ்ரீபைரவர்.

அதுவும் எப்படி விஸ்வரூபம் எடுத்தார் எனில்,எட்டு திக்குகளிலும் அந்தகாசுரனால் உருவாகிய இருளை நீக்கிட எட்டு பைரவர்களை சக்தியுடன் புறப்பட உத்தரவிட்டார்.

அதன்படி,

1)அசிதாங்க பைரவர் + பிராம்மி

2)ருரு பைரவர் + மகேஸ்வரி

3)உன்மத்த பைரவர் + வாராஹி

4)குரோதன பைரவர் +வைஷ்ணவி

5)சண்டபைரவர் + கவுமாரி

6)கபால பைரவர் + இந்திராணி

7)பீஷண பைரவர் + சாமுண்டி

8)சம்ஹார பைரவர் + சண்டிகா

ஆகியோர் தம்பதி சகிதமாக புறப்பட்டு,அந்தகாசூரனை அழித்து உலகிற்கு ஒளியைக் கொடுத்தனர்.



இதனால்,தேவர்கள் மகிழ்ச்சியடைந்து அனைவரும் தத்தம் ஆயுதங்களை பைரவருக்குக் கொடுத்தனர்.



பைரவரை ஜைன சமயத்தில் விஜயபத்திரர்,வீரபத்திரர்,மணிபத்திரர்,ஸ்ரீபைரவர்,அபராஜிதர் என அழைக்கின்றனர்.

ஜைன சமயத்தில் 96 வகையான பைரவர்கள் உள்ளனர்.பௌத்த சமயத்தில் 84 வகையான பைரவர்களும்,வாமம் என்னும் சாக்த மதத்தில் 64 வகையான பைரவர்களும் உண்டு.கிறிஸ்தவ சமயத்தில் “நோவாஸ் ஆர்க்”, “செயிண்ட் மைக்கேல்”, “செயிண்ட் ஜார்ஜ்” ஆகியோர் பைரவ அம்சங்களே.



ஆகமங்கள்,சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள அஷ்ட பைரவர் விளக்கங்களை கூர்ந்து நோக்கினால் மேலே கூறப்பட்டவை,தெள்ளத்தெளிவாக விளங்கும்.

அஷ்ட பைரவர்களும் அறுபத்தி நான்கு காலங்களில்,அறுபத்தி நான்கு தோற்றங்கள் கொண்ட பைரவராகக் காட்சி தருகிறார்கள்.

மந்திரங்களின் சக்தி பற்றிய அனுபவம்:அண்ணன் காளிராஜன் அவர்கள் அனுப்பியது

சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு மந்திரங்களில் நம்பிக்கை கிடையாது. மந்திரங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவரின் அனுபவம் ஒன்றை கூறினார். அவர் ஒரு அரசு ஊழியர். அவருடன் பணிபுரிந்த ஒருவர் திடீர் என்று மூன்று மாதங்களாக அலுவலகம் வரவில்லை. அவர் மீண்டும் அலுவலகம் வந்தபோது கிறிஸ்தவ கண்காணிப்பாளர் வெளியில் அவர் நிற்பதை பார்தவுடன் "இது மடம் என்று நினைத்தாரா. நினைத்தால் வருவதற்கும் போவதற்கும். என்ன செய்கிறேன் என்று பாருங்கள். " என்று திட்ட ஆரம்பித்துள்ளார். என் நண்பர் வெளியே நின்றிருந்த அவரிடம் சென்று " இப்போது அலுவலதிற்குள் வராதீர்கள். கண்காணிப்பாளர் வீட்டில் சென்று பார்த்து விட்டு வாருங்கள். இப்போது கடும் கோபத்தில் இருக்கிறார்." என்று சொல்லி இருக்கிறார்.


அதற்கு அவர் "நான் இப்போது வருகிறேன். என்ன செய்கிறார் என்று பாருங்கள் என்று சொல்லிவிடு சிலநிமிடங்கள் கழித்து அலுவலகதில் வந்திருக்கிறார். கண்காணிப்பாளர் அவரை பார்தவுடன் "சார் வாங்க. எப்படி இருக்கீங்க. " என்றவர் பக்கதிலிருந்த எழுதரிடம் சாருக்குரிய சம்பளம் எல்லாவற்றையும் போட்டுக்கொடு என்று கூறியிருக்கிறார். என் நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. என்ன செய்தீர்கள் என்று கேட்டபோது ஒன்றுமில்லை. ஒரு மந்திரம் சொன்னேன். அவ்வளவுதான் என்றிருக்கிறார். எனக்கும் சொல்லிக்கொடு என்று இவர் கேட்க அவர் மறுத்துவிட்டார். ஆனால் அந்த மந்திர வித்தையை பெண்களை வசியம் செய்ய பயன்படுத்தி அற்ப ஆயுளில் இறந்து விட்டார்.




என் நண்பரே நாயின் வாயை கட்டும் மந்திரம் அறிந்தவர். மற்றொரு பெரியவர் பார்வை பார்த்து தேள் பூரான் பாம்பு கடி விஷங்களை நீக்கி குணமாக்குவார். அவரிடம் பேசியபோது என்ன மந்திரம் சொல்லி குணமாக்குகிறீர்கள் என்று நான் கேட்டபோது நம் தெய்வங்களின் பெயர்கள் தான். ஓடும் தண்ணீரில் நின்று லட்சம் தடவை சொல்லி உரு ஏற்றவேண்டும் அவ்வளவுதான் என்றார். இது போன்ற சில சம்பவங்களினால் மந்திரங்களின் மேல் நம்பிக்கை வந்தது. அகத்தியர் கருவூர் சித்தர் போன்ற சித்தர்கள் பாடல்களை படித்தபோது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கும் வியாதிகளை போக்குவதற்கும், மூலிகை வைத்தியம் மட்டுமல்லாது மந்திரங்களாலும் தீர்க்க முடியும் என்பதை அறிந்தேன்.

எனவே மந்திரங்களுக்கு மாபெரும் சக்தி உண்டு என்பதை உறுதியாக நம்பலாம்.

Tuesday, February 8, 2011

மெல்ல எழும்பும் நியாயக்குரல்:அசிம் பிரேம்ஜி




பொருளாதாரத்தினை திறந்துவிடுவது பற்றி மேலை நாடுகள் செய்யும் உபதேசங்கள் அலுப்பைத் தருகின்றன.அவர்களது உபதேசத்தை அவர்களே கடைபிடிப்பதில்லை என விப்ரோ நிறுவனத் தலைவர் திரு.அசீம் பிரேம்ஜி அமெரிக்க தடையுத்தரவுகள் பற்றி சாடியுள்ளார்.அவர் இதை உலக பொருளாதார மன்றத்தில் பேசினார்.



பிற நாடுகல் அமெரிக்க பொருட்களுக்கு தடைவிதிக்கக் கூடாது என எதிர்பார்க்கும் அமெரிக்கா,தனது நாட்டில் வெளிநாட்டுப்பொருட்களுக்கு தடை விதிக்கிறது.அமெரிக்காவின் விசா கட்டண உயர்வு மற்றும் சேவை இறக்குமதித் தடைகளை பற்றி அவர் தனது கோபத்தினை வெளிப்படுத்தினார்.

அமெரிக்காவிலிருந்து நாம்(இந்தியா) 50 பில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும்,இந்தியா 50,000 அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 10 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நன்றி:சுதேசி செய்தி,பக்கம் 25,பிப்ரவரி 2011.

Monday, February 7, 2011

மேல்நாட்டு இதழியல் முறையும்,கீழ்நாட்டு இதழியல் வடிவமைப்பும்




இலங்கையின் அதிபர் இராஜபக்ஷேவுக்கு கல்லீரலில் புற்றுநோய் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.இதனால்,இதற்கு முந்தைய புகைப்படங்களை விட,தற்போதைய புகைப்படத்தில் முகத்தில் வீக்கம் தெரிகிறது.

இதுதான் மேல்நாட்டு இதழியல் முறைப்படி உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்தி.



இனி கீழ்நாட்டு இதழியல் முறைப்படி,இந்த செய்தியை வாசிப்போமா?



எத்தனையோ பிறவிகளாக சேர்த்துவைத்த புண்ணியத்தின் விளைவாக இலங்கை நாட்டின் மன்னனாகும் வாய்ப்பு,இந்தப்பிறவியில் இராஜ பக்ஷேவுக்கு கிடைத்தது.அப்படி கிடைத்த வாய்ப்பினை அவர் தனது ராஜதந்திரத்தினால் இலங்கையின் சமாதான புறா என்ற பெயரை எடுத்திருக்கலாம்.உலக வரலாற்றில் அழியாத அற்புதமான தலைவர் என்ற பெயரையும் எடுத்திருக்கலாம்.

ஆனால்,குறுகிய கண்ணோட்டத்தாலும்,அரக்கத்தனத்தை வெளிப்படுத்திட வாய்ப்பு கிடைத்தது போலவும்,தனது சிங்கள இனத்தின் காவலனாகவும் காட்டிக்கொள்ளும் விதமாக தனது நாட்டின் குடிமக்களையே கொடூரமாகவும்,மனித குல தர்மங்களை மீறியும்,ஒரு ட்ரில்லியன் (ஆயிரம் கோடி கோடி)ஹிட்லருக்குச் சமமாகவும் அழித்து இந்த அரிய மானிடப்பிறவியையும்,அற்புத அதிபர் பதவியின் மரியாதையையும் கெடுத்துக்கொண்டார்.

தமிழினத்தைச் சேர்ந்த பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்களை இன்று வரையிலும் நிம்மதியாகவும்,மன மகிழ்ச்சியோடும் வாழ வைக்காவிட்டாலும் பரவாயில்லை;தினசரி வாழ்க்கையையே நரகத்தை விடவும் வாழ வைத்து,புத்த மதத்தின் மாண்பையே சிதைத்து,இன்று கல்லீரல் புற்றுநோயாளியாகிவிட்டார்.

இவர் செய்த கொடூரபாவத்தை இவர் நீக்கிட இன்னும் பல கோடி மனித பிறப்பெடுக்க வேண்டியிருக்கும் என இந்துதர்ம நீதி நூல்கள் தெரிவிக்கின்றன.