Thursday, November 5, 2009

SANSKRITCOURSE

வெளிநாடுகளில் சமஸ்க்ருதம் கல்வி

எம்.ஐ.டி என்றழைக்கப்படும் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர் ஒருவர் சமஸ்க்ருத வகுப்புக்களை நடத்துகிறார்.ஹார்வேர்டு, யேல் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களில் சமஸ்க்ருதப் பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.கலிபோர்னியா,பிட்ஸ்பர்க்,நியூயார்க் மற்றும் டல்லஸ் ஆகிய நகரங்களிலும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் சமஸ்க்ருத பட்டப்படிப்பு இருக்கிறது.

REALATHISUM

இந்து வேதங்களில் பகுத்தறிவு

பகவத் கீதையில் அர்ஜீனனுக்கு பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார்:
நான் கூறியது யாவையும் ஆராய்ந்து
பிறகு உன் விருப்பப்படி செயல்படு

“இந்திய மொழிகளிலேயே நாத்திகம் தொடர்பான கருத்துக்களை அதிகமாகக் கொண்டிருப்பது சம்ஸ்க்ருதம் தான்” சொன்னவர் நோபல்பரிசு பெற்ற அறிஞர் அமர்த்தியா சென்.

“பகுத்தறிவோடு பொருந்தாத அறிவுரைகளை முனிவர்கள் சொன்னாலும் பகுத்தறிவாளர்கள் ஏற்கவேண்டியதில்லை;அறிவோடு பொருந்தும் வாசகங்களை பாமரர்கள் கூறினாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம்” என்கிறது யோகவாசிட்டம் என்ற நூல்(11.18.2.3)

பகவத்கீதைக்கு உரை எழுதிய ஆதிசங்கரர்,
‘நெருப்பு சுடாது என நூறுமுறை வேதத்தில் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்;அனுபவம் தான் பிரமாணம்(கல்வி/பிரதானம்/முக்கியம்)’என்கிறார்.

இதுதான் நேர்மையான பகுத்தறிவு.தமிழகத்து அரசியல்வாதிகளில் சில ரம்ஜான் கஞ்சி குடித்துவிட்டு இந்துக்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசுகிறார்களே அது பகுத்தறிவு அல்ல; சேம் சைட் கோல்!!!!

NATIONALSHAME

அந்தமான் தீவுகளை இலங்கையுடன் இணைக்க வேண்டுமாம்
கொழும்பு , வியாழன், 5 நவம்பர் 2009( 20:08 IST )
-->
ஐ।நா.வின் கடற்படுகை உரிமை தொடர்பான புதிய கொள்கையின் கீழ் இந்தியாவுக்குரிய அந்தமான் தீவு,தங்கள் நாட்டுக்குச் சொந்தமான கடற்படுகைக்குள் வருவதாக இலங்கை அயல்விவகாரத் துறை அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இதுவிடயமாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இப்பகுதிக்கு உரிமை கோருவது தொடர்பான யோசனையை ஐ.நா. ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிப்போம் என்றும் கூறினார்.இலங்கையின் கடல்படுக்கை உரிமைகள் குறித்து கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி எம்.பி ரவி கருணாநாயக்கா கேட்டிருந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே ரோகித மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் ஐ.நா ஆணைக்குழுவுக்கு இலங்கை சமர்ப்பிக்கவிருக்கும் உரிமை கோரலானது,தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான தரவுகளை உள்ளடக்கி மிகச்சரியாக தீர்மானிக்கப்படும் என்றும்,ஐ.நா இதை 2025 ஆம் ஆண்டுவாக்கில் கவனத்தில் என்றும் கூறினார்.மேலும் ஐ.நா. வின் இந்த நீண்ட காலதாமதம் குறித்து தமது அதிருப்தியையும் ரோகித போகொல்லாகம வெளியிட்டார்.

நன்றி:தமிழ் வெப்துனியா இன்று।

சுயதர்மமும்,சுயச்சார்பையும் இழக்கும் எந்த நாடும் இப்படித்தான் அவமானப்படவேண்டும்।இலங்கையின் பின்னாடி இருந்து இயக்குவது நம்ம பங்காளி பாம்புதின்னி சீனாவேதான்।இத்தாலிக்காரிக்கு இதைப்பற்றி என்ன கவலை।?
எனது நூறுகோடி மக்களே நாம் தினமும் எதைச்சாப்பிடுகிறோம்? எப்போது நயவஞ்சக அரசியல்வாதிகளிடமிருந்து நாம் நம்மையும் நமது நாட்டையும் நமது தன்மானத்தையும் காக்கப்போகிறோம்?சே அவமானமாக இருக்குது.

THAMIZANNAITEMPLE

தமிழ் அன்னைக்கு பிரம்மாண்டமான கோவில்

தமிழ்நாடு மாநிலம்,திண்டுக்கல் அருகில் உள்ள சின்னாளப்பட்டியில் ஒரு கோடி ரூபாய்கள் செலவில் தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.இங்கு மூலவராக தமிழ் அன்னை சிலை நிறுவப்படவுள்ளது.

இங்கு தமிழ் அன்னைக்கு தினமும் தமிழின் உயிர் எழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன்,தினைமாவு,கனிகள் வழங்கப்படும்.

Wednesday, November 4, 2009

TEENCHILD

உங்கள் குழந்தையின் வயது 12 முதல் 19க்குள் இருக்கிறதா?இந்தக் கட்டுரை உங்களுக்காக . . .

கி.பி.1999 ஆம் ஆண்டில் நம் தமிழ்நாட்டில் பருவ வயது எனப்படும் டீன் ஏஜ்களின் தற்கொலை முயற்சி எண்ணிக்கை ஒரு நாளுக்கு சராசரியாக 400 ஆக இருந்தது.
இன்று கி.பி.2009 இன் விளிம்பில் இருக்கிறோம்.உலக மயமாக்கலின் வேகத்தால் உலகமே அமெரிக்க மயமாகிவிட்டது.பணத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் சிறு நகரங்களிலும் பரவிவருகிறது.இந்த நிலையில் டீன் ஏஜ்கள் எனப்படும் பருவ வயதுகளில் இருப்பவர்களின் தற்கொலை முயற்சி ஒரு நாளுக்கு சராசரியாக 2500!

நீங்கள் வீட்டைவிட்டு வேலை அல்லது தொழில் நிமித்தமாகக் கிளம்புவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்கிக்கொண்டிருப்பான்/ள்.
நீங்கள் வேலை அல்லது தொழிலை விட்டு வீட்டுக்குள் களைத்துப்போய் வருவீர்கள்.உங்கள் மகன் அல்லது மகள் தூங்க ஆரம்பித்துஇருப்பர்.
சரி நாளைக்குப் பேசிக்கலாம் என பேசுவதற்குக்கூட நேரமில்லை.(அதான் செல் இருக்கே என உங்களை நீங்களே ஏமாற்றாதீர்கள்)

பாசமோ,வியாபாரமோ நேரில் பேசுவது போன்ற பரிசு அல்லது வரம் எதுவும் கிடையாது.

நீங்கள் யாருக்காக பணத்தைத் தேடி ஓடுகிறீர்கள்?அவர்களின் நற்பண்புகளை உருவாக்குவதில் 50% நீங்களும் உங்களின் வாழ்க்கைத்துணையும்தான் என்பதை அறிவீர்களா?
அவர்களிடம் நீங்கள் வாரம் ஒரு முறையாவது மனம்விட்டு பேசுகிறீர்களா?
அவர்களின்(உங்கள் பருவ வயது மகன் அல்லது மகள்) தினசரி வாழ்க்கையில் என்ன நடந்துவருகிறது என தினமும் உங்களால் நேரடியாகக் கேட்கமுடிகிறதா?
அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன என்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?(ஆம் எனில் அந்த 2500 தற்கொலை முயற்சியில் நிச்சயம் உங்களின் குழந்தை இருக்காது)
சாப்பிடும் முன்பும்,சாப்பிட்டப்பின்பும் கை கழுவ கற்றுத் தருகிறோம்.காதல்,காமம்,ஏமாற்றுதல்,செல் போன் வழியே உருவாகும் பிரச்னைகள் இவற்றினை எப்படி எதிர்கொள்வது என்பதை உங்கள் மகன் அல்லது மகளுக்கு ஒரு நாளாவது சொல்லிக்கொடுத்ததுண்டா?(உங்களது அனைத்து செல் போன்களையும் அணைத்துவைத்துவிட்டு)


இதையெல்லாம் செய்யாமல் என் மகள் என் பேச்சைக் கேட்க மாட்டேங்குறா? சார் நீங்கதான் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க என டியூசன் ஆசிரியர்களிடம் கெஞ்சாதீர்கள்.
(உங்கள் மகளின் 5 வயது முதல் 15 வயது வரை அவள் கேட்கும் சந்தேகத்தை அவளின் கண்களை நோக்கிப்பார்த்து பொறுமையாகக் கேட்டிருந்தால் யாரோ ஒரு டியூசன் ஆசிரியரிடம் நீங்கள் கெஞ்ச வேண்டாம்)
ஆனால் உங்கள் மகள் உங்களது டியூசன் ஆசிரியர் வார்த்தைகளைக் கேட்பாள்.உங்களை மதிக்க மாட்டாள்.ஏனெனில் டியூசன் வாத்தியாரின் வேலையே மாணவியின் (மகளின் அல்ல) பேச்சுக்களைக் கூர்ந்து கவனிப்பதுதான்.
அதே மகளிடன் அந்தரங்கப் பிரச்னைகளை (பெற்றோராகிய)நீங்கள் பகிர்ந்ததுண்டா?
ஏன் டியூசன் ஆசிரியரை மகன் மற்றும் மகள்கள் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.?
சில இடங்களில் டியூசன் ஆசிரியரே தனது மாணவியைத் திருமணம் செய்யுமளவுக்கு வளர்ந்துவிட்டது .ஏன்?

உங்கள் மகன் அல்லது மகள் அல்லது இருவரும் இன்று முதல் உங்களை அதிசயமாகத் தான் பார்ப்பார்கள்.இன்றே மனம் திறந்து பேசமாட்டார்கள்.
பொறுப்புள்ள எதிர்காலத்தை எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிட உங்கள் குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரம் விளையாடுங்கள் அல்லது அரட்டையடியுங்கள்.
(இவ்வலைப்பூ முழுக்க முழுக்க மனோதத்துவரீதியில் எழுதப்பட்டுள்ளது)

பிதுர் தோஷம்


பிதுர்தோஷமும் பரிகாரங்களும்

உங்கள் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

உங்கள் பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் நமது கணவன் அல்லது மனைவியை கவனிக்காமல் இருந்ததையும், நமது அப்பா அம்மாவை பாடாய் படுத்தியதையும், நமது மகனை அவனது மனைவியுடன் பிரித்துவைத்ததையும், அல்லது நமது மகளை அவளது கணவனுடன் பிரித்துவைத்ததையும், நமது வறிய சகோதரனை அவன் கெஞ்சிக்கேட்டும் அவனுக்கு அவசர உதவிகூட செய்யாமல் பணத்திமிர்,அதிகாரத்திமிரில் இருந்ததையும் காட்டுகிறது.

இந்த பிதுர்தோஷம், ஜாதகப்படி உங்களுக்கு 25 வயதில் கிடைக்க வேண்டிய அரசாங்க வேலையை 35 வயதில் (மிகத் தாமதமாக) கிடைக்கச் செய்யும். அல்லது 21 வயதில் செய்யவேண்டிய திருமணத்தை 31 வயதுக்கு மேல் செய்யுமளவுக்கு உக்கிரமாக செயல்பட வைக்கிறது.மனைவி,பெற்றோர்,குழந்தைகள்,உறவினர்களிடையே பிரச்னைகளை தீராமல் வளர்க்கக் காரணமாகிறது.

இந்தப்பிறவியில் கூட கடவுளை கேலி செய்பவர்கள்,பிற மதத்தை நிந்தனை செய்பவர்கள் இந்த பிதுர்தோஷத்தை அடுத்த பிறவியில் அனுபவிப்பார்கள்.
பித்ரு தோஷம் ஒருவரது/ஒருத்தியின் பிறந்த ஜாதகத்தில் அமைந்துவிட்டால், மற்றக்கிரகங்களுக்கு என்ன பரிகாரம் செய்தாலும் பலன் கிடைக்காது.பித்ரு தோஷம் நீக்கியப்பிறகுதான் பலன்கள் தரத் துவங்குகின்றன.

ஊரை அடித்து உலையில் போடுமளவுக்கு பணத்தாசை பிடித்து அலைபவர்கள் செய்யும் பாவங்கள் இந்தப்பிறவியிலேயே அவர்களின் மூத்த பிள்ளை (அது பெண்ணாக இருந்தாலும்)யை அல்லது கடைசிப் பிள்ளையைக் கடுமையாகப் பாதிக்கின்றது என்பதை நேரடியாக பலமுறை நான் உணர்ந்திருக்கிறேன்.அரசியலில் இருப்போர்,தேர்தலில் ஜெயித்தவர்கள்,மாநில மத்திய அரசுப் பணியில் இருப்போர்,அரசாங்கத்தின் கொள்கை முடிவுகள் எடுப்போர், பலரது தலையெழுத்தையே மாற்றும் அதிகாரத்தில் இருப்போர்கள் மனிதத் தன்மையின்றி செயல்படுவதால்(துட்டடிக்கும் நோக்கிலேயே கொள்கைகளை வகுப்பதால்) அவர்களுக்கு உடனுக்குடன் பாதிப்பை அவர்களும் அவர்களின் சந்ததிகளும் அனுபவித்துவருகின்றனர்.இவை மிகவும் கடுமையான பித்ரு தோஷத்தை உருவாக்குகின்றன.கலியுகத்தில்தான் நம்முடைய வாழ்க்கையைக் கண்காணிக்கும் அஷ்டதிக் பாலகர்கள் ரொம்ப பிஸி!!!

பிதுர் தோஷம் நீக்கிட உரிய ஜாதகர்கள் இராமேஸ்வரம் செல்ல வேண்டும்.அங்கு வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் அல்லது துலா ஹோமம் செய்ய வேண்டும். நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும்.காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையினில் கொடுத்துவிட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.
திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.ஹோமம் முடிந்ததும் புறப்பட்டு அன்றே தமது ஊருக்குப் போகக்கூடாது.சிரத்தையுடனும்,முழு மனதுடனும்,ஆர்வத்துடனும் செய்ய வேண்டும். திலா ஹோமம் செய்து பிண்டத்தைக் கடல் நீரில் கரைக்கும்போது கருடபகவான் அங்கே அந்த நேரத்தில் வானில் வட்டமிட வேண்டும்.அப்படி வட்டமிட்டால் மகாவிஷ்ணு நம்மை இந்த செயல் செய்தமைக்கு ஆசிர்வதித்தாக அர்த்தம். திலா ஹோமம் செய்ய விரும்புபவர்கள் எனக்குத் தெரிந்த ஒரு வேதியரையும் அணுகலாம்.அவர் பெயர் ராகவசர்மா.அவரின் வசிப்பிடம் இராமேஸ்வரம்.செல்:9994074647,9442044092.

வைஷ்ணவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திருப்புல்லாணிக்கரையில் திலா ஹோமம் செய்ய வேண்டும்.கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள பரசுராம க்ஷேத்திரம் என்ற கிராமத்தில் பிண்டம் கொடுத்து பிதுர்சாந்தி எனப்படும் திலா ஹோமம் செய்ய வேண்டும்.

கேரளாவில் பித்ரு தோஷம் நீங்கிட பசுவுக்கு அவரவர் ஜன்ம நட்சத்திரத்தன்று பருத்திக்கொட்டைப்பால் எடுத்து வெல்லம் கலந்து பித்ருக்களை வேண்டி உண்பதற்குக் கொடுத்துவருகின்றனர்.(நாமும் இப்படிச் செய்யலாம்)

வாழ்வில் ஒருமுறையாவது காசி,கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று ஹோமம் செய்ய வேண்டும்.வயதில் மூத்தவர்களுக்கு உரிய மரியாதை
கொடுங்கள்.வளமுடன் வாழுங்கள்.

புத்திர தோஷங்கள் எத்தனை வகை?

புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன?

மொத்தம் எட்டுவிதமான புத்திர தோஷங்கள் இருக்கின்றன.இவை அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள பலரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் அது தெரியும்.அவற்றை பார்ப்போம்.

1.சர்ப்பசாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

2.பித்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

3.மாத்ரு சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

4.சகோதர சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

5.மாதுல சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்

6.பிராம்மண சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
7.பத்தினி சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்
8.மந்திர சாபம்,பிரேத சாபத்தால் ஏற்படும் புத்திர தோஷம்


இந்த தோஷம் எப்படி செயல்படுகின்றது?

குழந்தை பிறந்த சில நாட்களில் இறந்து போவது,

பாசமுள்ள பிள்ளைகள் பிறந்து வளர்ந்து இளைஞர்,இளம் பெண்ணாக இருக்கும்போது திடீரென இறந்து போவது;

பெண் குழந்தைகளுக்கு கல்யாணம் தள்ளிப்போவதால் காலங்கடந்து கல்யாணம் நடப்பது,
திருமணம் முடிந்து சில காலத்திற்குள்ளாகவே வாழாவெட்டியாக பெற்றோர் வீட்டிற்குத் திரும்புவது;

மூளை வளர்ச்சியின்றி குழந்தை பிறப்பது.

சரி! எந்த காரணங்களால் இந்த புத்திர தோஷங்கள் உருவாகின்றன?

முற்பிறவியில் பெற்ற தாய் தந்தையரை சரியாக கவனிக்காததாலும்,அவர்களை வேதனைப்படுத்தியதாலும்,அவர்களின் கடைசிக்காலத்தில் சரியான நேரத்தில் உணவு தராமலும் ஏற்படுவது பித்ரு அல்லது பிதுரு சாபம்.

இதனால் இப்பிறவியில் தன் தந்தையரோடும் தன் பிள்ளைகளோடும் ஒத்துப்போக முடியாது.எப்போதும் ரத்த உறவுகளான அப்பா மற்றும் பிள்ளைகளால் அவமானமும்,வேதனையும் தினசரி நடவடிக்கைகளாகும்.

சகோதரர்களுக்குச் சேரவேண்டிய சொத்துக்களைத் தராமல் வஞ்சகம் செய்து எடுத்துக்கொள்வதாலும்,சகோதரர்களைக் கொடுமைப்படுத்துவதாலும் ஏற்படுவது சகோதர சாபம்.அந்த சாபத்தால் புத்திர தோஷம் ஏற்படுவது.சொத்துப்பிரச்னையில் தாய்மாமனை அவமானப்படுத்தியும்,சண்டை போட்டும் தாய்மாமன் சாபத்தால் ஏற்பட்ட புத்திரதோஷம்.
இந்த சாபத்தால் தாய்வழிப்பகையும்,புத்திரர்கள் பகையும் அவமானமும் ஏற்படும்.பெண் பிள்ளைகள் வாழாவெட்டியாவதும்,விவாகரத்து ஆகி வாழ முடியாமல் தவிப்பதும் இந்த சாபத்தால் ஏற்படுகின்றது.

சாதுக்கள்,மகான்களையும் சிவனடியார்களையும் அவமானப்படுத்துவதால் ஏற்படுவது பிராம்மண சாபம்.இந்த சாபத்தால் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பது,மூளை வளர்ச்சி இல்லாத பிள்ளைகள் பிறப்பது,ஊமை,குருடு,செவிடு போன்ற குறையுள்ள குழந்தைகள் பிறப்பதும் ஒரு வித ஆனால் கடுமையான புத்திர தோஷம்.

மனைவியைக் கொடுமைப் படுத்துவதாலும், மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வைப்பாட்டி வீடே கதி என இருப்பதாலும், பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து விலகி குடும்பத்தை விட்டுப் பிரிவதாலும், மனைவியின் மனம் கொதித்து அந்த சாபத்தால் ஏற்படுவது பத்தினி சாபம்.இதனால், மனைவி மக்களால் அவமானப்படுதலும்,பண்டாரம்,பரதேசியாகி பிச்சை எடுத்தலும், கடைசிக்காலத்தில் தன்னைக் கவனிக்க ஆளில்லையே என வருந்துதலும், குடும்பத்தோடு இருந்தாலும் குடும்பத்தை விட்டுப் பிரிந்துபோய் அனாதையாக இறந்து போகுதலும் ஏற்படும்.

மந்திர சாபம்,பிரேத சாபம் இவற்றால் ஏற்படும் புத்திர தோஷம் என்பது மாந்தீரிகர்களைத் தேடிப் போய் நமக்கு வேண்டாதவர்களுக்கு பில்லி சூனியம் வைப்பதும், குல தெய்வத்தை மறந்து வணங்காமல் இருப்பதும் ஆகும்.
இந்த சாபத்தால் மருத்துவத்துக்குப் புலப்படாத நோய்கள் உருவாகுவதும், சம்பாதிக்கும் பணம் முழுவதும் அதற்கே செலவழிப்பதும்,குடும்பம் விருத்தியில்லாமல் இருப்பதும், தொழில் நட்டம், தொழில் அமையாமலிருப்பது,பிள்ளைகளால் ஏற்படும் ஊதாரித்தனம்,துஷ்ட குணமுள்ள பிள்ளைகளால் வரும் பிரச்னைகள் போன்ற பலன்கள் ஏற்படும்.

இந்த புத்திர தோஷத்தை நீக்கிட பரிகாரம் என்ன? எப்படிச் செய்வது?

குருபகவானுக்கு வியாழக்கிழமையன்று அர்ச்சனை செய்யலாம்.வியாழக்கிழமை திருச்செந்தூரில் அன்னதானம் செய்யலாம்.

எந்தக்கிரகம் புத்திர தோஷத்தை உருவாக்கியதோ அந்த கிரகத்தின் திசை அல்லது புக்திகாலத்தில் அந்தக் கிரகத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்யலாம்.

குலதெய்வம் கோவிலில் அவரவர் ஜன்ம நட்சத்திரம் அல்லது பவுர்ணமி அல்லது தமிழ் மாதப்பிறப்பு அல்லது தமிழ் வருடப்பிறப்பு அன்று அன்னதானம் ஒரு வருடம் வரை அல்லது ஆயுள் முழுவதும் செய்துவரலாம்.

நமது பாவத்தை நாம் தான் சுமக்கிறோம்.அதுபோல,நமது பரிகாரத்தை நாம்தான் நேரடியாகச் செய்ய வேண்டும்.
முடியாதவர்கள் நம் ரத்த உறவுகளை/ நம்பிக்கையான உறவுகளை வைத்துச் செய்யலாம்.