Monday, May 4, 2009

உங்கள் அமெரிக்க மாப்பிள்ளை எப்படிப்பட்டவர்?


உங்கள் மகளுக்கு அமெரிக்க மாப்பிள்ளை பார்த்திருக்கிறீர்களா?
அவர் எப்படிப்பட்டவர்? அவரது சுபாவம், குணம், பழக்கவழக்கம் பற்றிய முழு விபரம் தெரிய வேண்டுமா?
அல்லது உங்கள் மகள் அமெரிக்காவில் தனது கணவனுடன் எப்படி வாழ்கிறாள்? நிஜமாகவே நிம்மதியாக வாழ்கிறாளா? என்பதை அறிய $300 கட்டணம்!!! தொடர்புக்கு:kavithar@aol.com

2 நிமிடத்தில் மூட்டு வலி குணமாக


உங்களது மூட்டுவலி,முதுகுவலி 2 நிமிடத்தில் குணமடைய வேண்டுமா?

அனுபவமிக்க வர்மக்கலை ஆசான் & வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் , கோவை அவர்களைத் தொடர்புகொள்ளவும்.பல லட்சம் மக்கள் முன்பாக நடக்க சிரமப்பட்டவர்களை 2 நிமிட வர்ம மசாஜால் நடக்கவைத்தவர்.ஆதாரம் முன்னாள் திரைப்பட இயக்குனர் விசு அவர்களின் அரட்டை அரங்கம்.,ஜெயா டிவி.3.4.2009
வர்ம வைத்தியர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் அலைபேசி எண்:0-99 94 72 41 23.

அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


அக்கால சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்


நமது இந்துமதத்தின் அடிப்படை ஆதாரங்கள்: பசு, விவசாயம், பெண்.நமது நாட்டில் 15.8.1947 வரை இவைப்போற்றப்பட்டன.
மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்ந்தன.வளர்ந்தன.சுயச்சார்புள்ள கிராமங்கள் இருந்தன.15.8.1947 வரை 6 லட்சம் கிராமங்கள் இருந்தன.
இன்று,4.5.2009 நமது நாடு முழுவதும் 3 1/2 லட்சம் கிராமங்களே உள்ளன.நகர்மயமாதலால் ஏராளமான பிரச்னைகள்.பொறுப்பற்ற பசியை சிறிதும் அறியாத நமது அரசியல்தலைவர்களால் விவசாயம் செத்துக்கொண்டிருக்கிறது.
அக்காலத்தில் கோவில்களைக்கொண்டே குடியிருப்புகள் உருவாகின.கடவுள் பக்தியிருந்ததால் பொய் சொல்லுதல், கொலை செய்தல்,திருட்டு,பிச்சையெடுத்தல் சிறிதும் இல்லாமலிருந்தன. உதாரணமாக, மும்பாதேவியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு மும்பை நகரம் உருவானது.டாக்கீஸ்வரியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு டாக்கா(இன்றைய பங்களாதேஷின் தலைநகரம்) பிறந்தது.காமாட்சியம்மனின் அருளால் காஞ்சிபுரம் தோன்றியது.கி.பி.1900 வரை 1800 கோவில்கள் காஞ்சிபுரம் நகர்முழுக்க இருந்தது.இந்த கோவில் நகரங்கள் சிறப்புப் பொருளாதார மையங்களாக செயல்பட்டு வந்தன.யாரும் யாருக்கும் கெடுதல் செய்யாமல் எந்த சிறிய சச்சரவு கூட இல்லாமல் நமது பாரதம் வளர்ந்தது.கலைகள்,தொழில்நுட்பம் வளர்ந்தன.
கி.பி.1940 வரையிலும் நமது பாரதம் நாடுமுழுக்க உணவு,தண்ணீர்,கல்வி இம்மூன்றும் விற்பனை செய்வது பெரும்பாவம் என கருதப்பட்டது.இன்றோ இவைதான் கொழுத்த லாபம் தரும் தொழில்கள்!!!
ஒரு போதும் இவை இனி இலவசமாக மாறாது.மேலும் விபரமறிய http://www.swadeshitn.org/ என்ற இணையதளம் செல்லவும்.
நமது நாடு எப்படியெல்லாம் அரசின் தயவின்றி சாதனைகள் படைத்துவருகிறது.அரசின் முட்டாள்த்தனமான செயல்பாடுகளால் ஏற்படும் பிரச்னைகள், அதை நாம் எதிர்கொள்ள செய்ய வேண்டியது போன்ற விபரங்களை இவர்கள் சுதேசிச் செய்தி என்ற மாத இதழாக வெளியிடுகின்றனர்.ஆண்டுச்சந்தா ரூ.100/-மட்டுமே! மேலும் விபரமறிய திரு.நம்பிநாராயணன் 0-94431-40930 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு




அக்கால பிரம்மாஸ்திரமே இக்கால அணுகுண்டு

இந்த பூமியில் உள்ள அனைத்து மனித குல முன்னேற்றங்களும் நமது இந்து தர்மத்திலிருந்தே பிறந்தன என்பதற்கு பல்லாயிரம் ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தும் ஓலைச்சுவடிகளாகப்பதிவு செய்யப்பட்டு இருந்தன.அவற்றை நாம் சுதந்திரம் வாங்கும் முன்பே இங்கிலாந்து நாட்டினர் ஒரு கப்பல் முழுக்க
இன்றைய தஞ்சை சரபோஜி நூலகத்திலிருந்து கொண்டு போய்விட்டனர். இங்கிலாந்தும் ஜெர்மனியும் இவற்றை இன்று வரை ஆராய்ந்து கொண்டே இருக்கின்றன.
குந்தம் குன்னாச்சாரி என்பவர் பிரம்மாஸ்திரம் பற்றி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூலை ஆங்கிலத்தில் 1920கள் வாக்கில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்த புத்தகமே இன்றைய அணுகுண்டு கண்டுபிடிக்கக்காரணமாகி விட்டது.ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சிறு தவறால்,அணுகுண்டு இவ்வளவு கோரவடிவம் எடுத்துவிட்டது.
அக்கால பிரம்மாஸ்திரம் யாரை நோக்கி ஏவப்படுகிறதோ அவரை மட்டும் சாம்பலாக்கும்.அருகில் உள்ள மனிதன், தாவரங்கள்,பொருட்களை எதுவும் எந்த பாதிப்பும் செய்யாது.
இக்கால அணுகுண்டு ஏவப்பட்டது வானில் ஒரு கோடி சூரியன் அளவு பிரகாசம் தரும்.பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் இதைப் பார்ப்பவர்களுக்கு பார்வை பறிபோகும்.மேலும் விபரமறிய மகாபாரதம் படியுங்கள்.அல்லது ராமாயணம் படியுங்கள்.ராவணன் மகன் இந்திரஜித் ஆஞ்சனேயர் மீது பிரம்மாஸ்திரம் ஏவுவான்.அப்போது என்ன நடக்கும் என்பதை விரிவான இராமாயணம் படித்துப்பார்க்கவும்.அணுகுண்டின் சக்தியை அறிய இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் எழுச்சி என்ற பாகத்தில் வந்துள்ள புத்தகங்களைப்படித்துப் பாருங்கள்.

செர்னோபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமத உதவியும்


செர்னொபில் அணுமின்நிலைய விபத்தும் இந்துமதத் தீர்வும்

நமது பழைய பங்காளி சோவியத் ருஷ்யாவில் 1990 வாக்கில் செர்நோபில் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு டாங்க் வெடித்துச் சிதறி உடனே பல ஆயிரம் பேர்கள் இறந்தனர்.
இச்சம்பவம் நடந்த உடனே ரஷ்ய விமானங்கள் நமது நாட்டிற்கும் ரஷ்யாவிற்கும் அடிக்கடி பறந்தன. அவை நமது நாட்டுக்கு வந்து டன் கணக்கில் உப்புகலந்த பசுஞ்சாணத்தை அள்ளிக்கொண்டு போய் செர்நோபில் பகுதி முழுவதும் வீசின. இதனால் அணுக்கதிர் வீச்சு பெருமளவு பரவாமல் தடுக்கப்பட்டது.
இப்போது சொல்லுங்கள்.பசுக்களையும் நமது கால்நடைகளையும் நாம் பெருமளவு வளர்ப்பது அவசியமா? இல்லை மாட்டுஇறைச்சியாக்கி வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி டாலர்கள் சம்பாதித்தால் மட்டும் போதுமா?
ஏனெனில் திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளத்தில் 6 அணுமின்நிலையங்களை 20 ஆண்டுகளாக கட்டிக்கொண்டே இருக்கிறோம்.நம்மவர்களின் பொறுப்புணர்ச்சி எவ்வ்வ்வ்வ்வளவு என நமக்கல்லவா தெரியும்?

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்-ஆதாரம் 1


விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்:ஆதாரம் 1

இன்றைய நவீன யுகத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுக்க பரப்பப்பட்டுவரும் எந்தவொரு நவீன தொழில்நுட்பமும் நன்மைகளைத் தருவதைவிட தீமைகளையே அதிகம் தருகிறது.உதாரணமாக, செல்போன் தொழில்நுட்பம்,இணையம் அதாங்க இண்டர்நெட்,எம்.எல்.எம் எனப்படும் பல்நிலை வர்த்தகம், கோலா எனப்படும் குளிர்பானங்கள் இந்த நவீன விஞ்ஞான வளர்ச்சியின் பக்கவிளைவுகளை சரிசெய்ய இந்து தர்மத்தால் மட்டுமே முடியும்.அதற்குரிய ஆதாரங்களை மேல்நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ந்து “உலக அமைதிக்கும், மனித குல வளர்ச்சிக்கும்,போர்-இனவெறி இல்லாத உலகிற்கும் இந்துமதம் மட்டுமே காரணமாக இருக்கிறது.எதிர்காலத்தில் இந்துமதம் உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் அவசியம் தேவைப்படும்” என கூறிவிட்டனர்.
இதற்கு ஆதாரமாக இரு உதாரணச்சம்பவங்களைப்பார்ப்போம்:
போபால் விஷவாயு விபத்து:
அமெரிக்காவின் வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனமான யூனியன் கார்பைடு தனது தொழிற்சாலையை நமது இந்துயாவில் மத்தியபிரதேச மாநிலத்தலைநகரான போபாலில் 1980 வாக்கில் நிறுவியது.உலகளவில் ஆபத்தான வேதித்தொழிற்சாலைகள் பெருநகரங்களில்நிறுவக்கூடாது என்பது சட்டம்.இந்த யூனியன் கார்பைடு ஒரு மாநிலத்தலைநகரத்திலேயே நிறுவப்பட்டது.
04.12.1984
யூனியன் கார்பைடு தொழிற்சாலையின் கழிவுவாயு கலன்கள் வெடித்துச்சிதறியது.விஷவாயு போபால் நகரம் முழுவதும் பரவ உடனே 12,000 பேர்கள் மரணம்.இன்று 2009 !!! 25 ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த விஷவாயுப்பரவலால் கோரமான குழந்தைகள் பிறந்து கொண்டேஇருக்கின்றன. அந்த அமெரிக்க பிராடு கம்பெனி யூனியன் கார்பைடு முதலாளி வேறுஒரு கம்பெனிக்கு தனது யூனியன் கார்பைடை விற்றுவிட்டான்.இன்னும் பாதிக்கப்பட்ட நமது இந்திய சகோதர குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.என்ன கொடுமை?
சை போகட்டும்.நமது விஷயத்திற்கு வருவோம்.போபாலில் விஷவாயு பரவிய அந்த 4.12.1984 அன்று ஒரே ஒரு போபால் தெருவில் மட்டும் வாழும் மக்களுக்கு எந்த வித பாதிப்பும் உண்டாகவில்லை.ஏன்? எப்படி?
அந்தத்தெருவில் வாழ்ந்து வரும் ஒருவர் 1972 முதல் 12 வருடங்களாக அக்னிஹோத்திரம் என்ற சிறு அளவிலான ஹோமம் தினமும் வளர்த்து வந்திருந்தார்.காலையில் 30 நிமிடங்களும் மாலையில் 30 நிமிடங்களும் சூரிய உதயமாகும் நேரங்களிலும்,சூரிய அஸ்தமானமாகும் நேரங்களிலும் அக்னி ஹோத்திரம் செய்துவந்தார்.விஷவாயு பரவ ஆரம்பித்ததும் தனதுவீட்டில் அக்னிஹோத்திரம் செய்யத்துவங்கினார். இதனால் அவரது தெருமக்கள் சிறு உடல்பாதிப்பு இல்லாமல் இன்று வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம் அன்றைய தினசரிகளிலும் ,தி ஹிந்து, இண்டியன் எக்ஸ்பிரசிலும் வெளிவந்தது.

அதன்பிறகு உலக அளவில் அக்னிஹோத்ரம் பற்றி ஏராளமான ஆய்வுகள் நடத்தப்பட்டன.காற்றில் ஏற்படும் கடுமையான நச்சை முறிக்கும் தன்மை அக்னி ஹோத்திரத்திற்கு உண்டு என அறியப்பட்டது.வீட்டில் தினமும் அக்னி ஹோத்ரம் செய்து வந்தால் உடல் உபாதைகள் நீங்குகின்றன.மாணவர்கள் கல்வியில் சாதனைபடைக்கின்றனர்.பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர்.மன நோயாளிகள் விரைவில் குணமடைகின்றனர். எந்த நோயாக இருந்தாலும் விரைவில் மனிதனைவிட்டு நீங்குகின்றன.
இன்று நாம் ஒவ்வொருவரும் நமது வீடுகளில் அக்னிஹோத்ரம் செய்யமுடியும்.விபரமறிய அருகில் உள்ள கதர்கடைகள், காதிபவன்கள்,காந்தியக்கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகள்,இந்துத்துவ அமைப்புகள்,இந்து மத சங்கங்களைத்தொடர்பு கொள்ளவும்.
http://www.hinduveda.org/ என்ற இணைய தளத்தைத் தொடர்புகொள்ளவும்.அல்லது கூகுளில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தையைக் கொடுத்துத் தேடவும்.

Saturday, May 2, 2009

ருத்ராட்சத்தின் மகிமைகள்


ருத்ராட்சம்:இதுவரை நான் அறிந்தவை

சிவபெருமானின் அம்சமாக ருத்ராட்சம் இருக்கிறது.
இவை பெரும்பாலும் நேபாளத்தில் கிடைக்கிறது.
ஒருமுகம் கொண்ட ருத்ராட்சம் உண்டு.இதை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குபவர்கள் உண்டு.
ஒரு முகம் கொண்ட ருத்ராட்சத்தை குருமுகமாக மட்டுமே அணிவது அவசியம்.
நேபாளம் தவிர அடர்ந்த மலைப்பகுதிகள் முழுவதும் (இந்தியாவெங்கும்) விளைகின்றன.இது தன்னைச்சுற்றிலும் அபூர்வமான அதிர்வலைகளைக் கொண்டிருக்கிறது.எனவே, இதை அணிவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.

ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் அதைச் சுற்றி உண்டாகும் ஒளி சக்திவட்டம் தூய்மையடைகிறது.இந்த ஒளி அவரவர் உடல்நிலை மற்றும் மன நிலையைப் பொறுத்து மாறும்.

நீங்கள் புது இடத்திற்குச் செல்லும் போது அங்கிருக்கும் அதிர்வுகள் உங்களுக்கு ஏற்றதாக இல்லையென்றால் உங்களால் அமைதியாக இருக்க முடியாது.ஆனால்,ருத்ராட்சம் அணிந்தால் எவ்விதமான பாதிப்பும் நம்மை தீண்ட முடியாது.மனநிலை சாந்தமாகவே இருக்கும்.சக்திவட்டம் நம்மை கவசம் போல பாதுகாக்கும்.
32 முக ருத்ராட்சமும் உண்டு.இதுவும் அபூர்வமான ருத்ராட்சமே!
ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் உடல் ஆரோக்கியம் தரும்.ஆண் பெண் பேதமின்றி எல்லோரும் அணியலாம்.இது ரத்த அழுத்தத்தை சீராக்கி,மன அமைதியையும்,சுறுசுறுப்பையும் தரும்.

ஆறு முகம் கொண்ட சண்முகி ருத்ராட்சத்தை 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அணிவதால் தாயின் பூரண அன்பிற்கு பாத்திரமாகலாம்.
நன்றி:ஆன்மீகமலர்,பக்கம் 2. தினமலர் 25.4.2009