Friday, January 16, 2009

குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?-அனுபவ விளக்கம்



குடும்பமாக ஏன் வாழ வேண்டும்?
விளக்கமளிப்பவர்:தவத்திரு.வேதாத்திரி மகரிஷி அவர்கள்

கணவன்,மனைவி, அவர்களின் பெற்றோர்கள்,குழந்தைகள் சேர்ந்து இருப்பதுதான் குடும்பம் எனப்படுகிறது.
பொருள் ஈட்டும் திறன்,வாழ்க்கை அனுபவம் இரண்டும் இணைந்தால்தான் மனிதன் வாழ்வு அமைதியாக, நிறைவாக நன்கு நடைபெறும்.

குழந்தைகளுக்கு இந்த இருவகையும் தெரியாது.வயது முதிர்ந்தவர்(பெற்றோர்கள்)களால் பொருள் ஈட்ட முடியாது.வாலிபப் பருவத்தினர்தான் உழைத்துப் பொருள் ஈட்ட முடியும். அதை குழந்தைகளும்,முதியோர்களும் கூடித் துய்த்து குறைவின்றி வாழ வேண்டும்.இது இயற்கை நியதி. இதனை மாற்ற முடியாது.இந்த இயற்கை நியதியானது பெற்றோர்,மக்கள் பராமரிப்புக் கடமையாக மாறி அது செயலாகும் போது அதைத்தான் குடும்பம் என்கிறோம்.

குடும்பத்தில் ஒருவர் தேவைகளையும் விருப்பங்களையும் மற்றவர் மதித்து, உதவி தன் தேவை விருப்பங்களைக் கட்டுப்பாட்டோடு முடித்துக் கொள்ள வேண்டிய வாழ்ககி அறத்தை கணவன் மனைவி இருவருமே உயிர் போலக் காக்க வேண்டும்.இத்துறையில் அடையும் வெற்றியின் அளவே குடும்பத்தில் அமைதியும், செழிப்பும்,இன்பமும் அமையும்.

















Tuesday, January 13, 2009

மந்திரவாதியிடம் யார் ஏமாறுவர்?



31.12.2009 வரை மகர ராசிக்காரர்களும்,1.1.2010 முதல் தனுசு ராசிக்காரர்கள் 1 1/2 வருடகாலத்திற்குள்ளும் ஏமாறுவார்கள்.பெரும்பாலான காளி கோவில் பூசாரிகள் மந்திரவாதிகளாக உள்ளனர்.உங்களது வாழ்வில் நடந்த கடந்தகால சம்ப்வங்களை அப்படியே அருள்வாக்கு அல்லது ஜாதகம் பார்த்து சொல்லுவர்.அது உங்களுக்கு விரிக்கப்படும் வலை.பெரும்பாலும் பணமோசடி அல்லது பெண்சுகம் இவர்களது இலக்காக இருக்கும்.


மாந்திரீகம் செயல்ப்டவும் காளியே துணை நிற்கிறாள்.மாந்திரீகத்திலிருந்து மீளவும் அதே காளிதான் துணை.பெரும்பாலும் ஏழரைச்சனி காலத்தில்-ராகுதிசை நடந்தால் மந்திரவாதியால் ஏமாற்றம் உண்டு.


குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்தல் அல்லது இஷ்ட தெய்வ வழிபாடு செய்தல் மட்டுமே ஏமாற்றத்திலிருந்து காக்கும்.எந்த கொம்பனாலும் நமது கஷ்டத்தை -ஏழரைச்சனி வேதனைகளை நீக்க முடியாது.தப்பித்தால் போதும் என மந்திரவாதிகளிடம் சிக்கி மானத்தை இழக்க வேண்டாம்.

ஜீனியஸ் தமிழ் புத்தகங்கள்--வலைப்பூவிற்கு அனைவரும் வருக! ஜீனியஸ் ஆகுக! நமது



ஜீனியஸ்தமிழ்புக்ஸ் வலைப்பூவிற்கு வருக! வருக!! வருக!!!


இன்று இணையம் அளவிற்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் பல முக்கிய வேலைகள் மனிதனால் மட்டுமே செய்யமுடியும்.என்வே,presence of Mind & Soft Skill ஒவ்வொருவருக்கும் அவசியமாகிறது.எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அந்தத் தேர்வினை ஒரு இணைய இணைப்புடன் கூடிய கணிப்பொறி இருந்தால் போதும்.அந்த தேர்வினை சுலபமாக எழுதிவிடலாம்.


நீங்கள் உங்களது உலகத்தில் ஜீனியஸ் என்று மதிக்கப்பட வேண்டுமா?
தனிமனித வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ வேண்டும்.அதற்குத் தேவை முதலில் ஞாபக சக்தி.இந்த ஞாபக சக்தி படிப்பதால் மட்டுமே வளரும்.இந்த வலைப்பூ படிப்பவர்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.வெறும் டிகிரி,டிப்ளமோவால் ஓரளவே உபயோகம் உண்டு.அதற்கும் வெளியே ஒரு பிரம்மாண்டமான உலகம் உள்ளது.அந்த உலகத்தை எதிர்கொள்ள புத்தகம் படிப்பது ஒரு அவசியத் தகுதியாக உள்ளது.புத்தக உலகம் ஒரு மாபெரும் கடல்.அதில் குப்பைகளே அதிகம்.அதில்,நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உள்ள புத்தகங்களை –கடந்த 20 ஆண்டுகளாக நான் படித்து-அதன்படி பின்பற்றி-வெற்றி பெற்றதால்-இந்த புத்தகங்களை உங்களுக்கு நான் பரிந்துரைக்கிறேன்.

டாக்டர் அப்துல்கலாம்,சுவாமி விவேகானந்தர்,எழுத்தாளர் பாலகுமாரன்,இந்திரா நூயி,பாரதியார்,பாரதிதாசன்,ஏக்நாத் ரானடே,விநாயக தாமோதர சாவர்க்கர்,நாதுராம் விநாயக் கோட்சே,ஓசோ,சுத்தானந்தபாரதி,கவிப்பேரரசு கண்ணதாசன்,வ.ரா.,அகிலன்,மிஸ்டிக் செல்வம்,எம்.எஸ்.உதயமூர்த்தி... என மிகப்பெரிய ஆத்மாக்கள் உயிரைக் கொடுத்து தமிழில் படைப்புகள் படைத்துள்ளனர்.அவற்றில் நமது வாழ்க்கையைத் திருப்புமுனையாக்கும் புத்தகங்களைப் பற்றி பார்ப்போம்:

படிப்பது என்பது இலக்கில்லாத பயணம்.. .. அதன் சுகத்தை உணர்ந்தவர்கள் வேறு எதற்கும் மயங்கமாட்டார்கள்.
கல்வி கரையில கற்பவை நாள் சில
மெல்லநினைக்கின் பிணி பல
இந்த வலைப்பூ ஆரம்பத்தில் உங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களாக மாற்றும்.சில வருடங்களில் உங்கள் துறையில் சாதனையாளராக மாற்றும்.நீங்கள் இந்த வலைப்பூவில் பரிந்துரைக்கும்புத்தகங்களைப் படித்தால்.. ..

Monday, January 12, 2009

உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் பத்திரகாளியம்மன்,ஸ்ரீவில்லிபுத்தூர்

உங்களது எல்லா பிரச்னைகளையும் போக்கும் பத்திரகாளி
கலி என்றால் துன்பம் என்று பொருள்.கலியுகம் என்றால் துன்பயுகம் என்றுதான் அர்த்தம்.பிறக்காத குழந்தையும்,இறந்து போன மனிதனும் தான் நிம்மதியாக வாழ்பவர்கள்.அவர்களை விட நிம்மதியாக வாழ்ந்து வருபவர்கள் தான் பத்திரகாளியை வழிபடுபவர்கள்.

இந்தியா,தமிழ்நாடு மாநிலம்,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் சிவகாசி சாலையில் ஊருக்குள் உள்ளது முதலியார்பட்டித்தெரு.அங்கே,மக்கள் வசிப்பிடத்துக்கு நடுவே அமைந்துள்ளது ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில்!
முதலியார்பட்டித் தெரு நெசவாளர்கள் வாழும் பகுதியாகும்.அங்கே சில நூற்றாண்டுகளாக அமர்ந்து கேட்ட வரம் த்ருபவள் பத்திரகாளி!!


உங்களுக்கு தீராத கடன் அல்லது நோய் அல்லது செலவு அல்லது எதிரிகள் உள்ளதா?இவை அனைத்தும் தீர வேண்டுமா?
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.இந்த பத்திரகாளியம்மன் கோவிலுக்கு தினமும் நேரில் வந்து வழிபடுங்கள்.வழிபட்டபின்னர் நேராக உங்களது வீட்டிற்குச் செல்லுங்கள்.இப்படி ஒருவருடம் வந்து வழிபடவும்.உங்களது சகல பிரச்னைகளும் தீரும்.
நீங்கள் முதல் நாள் இங்கு வந்து பத்திரகாளியை வழிபட்டுவிட்டுப் போனதும்-24 மணிநேரத்திற்குள் ஒரு அதிசய சம்பவம் உங்களது வாழ்வில் நடக்கும்.அது எப்படி நடந்தது ? என்று உங்களது பகுத்தறிவால் புலனாய்வு செய்து பாருங்கள்.விடை கிடைக்காது.இந்த பத்திரகாளியை வழிபட்டதால் தான் அந்த அதிசயம் நடந்தது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.
சரி! விருதுநகர் மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கு தினமும் வரமுடியும்.மற்ற மாவட்டங்கள்,மாநிலங்கள்,நாடுகளைச் சேர்ந்தவர்களால் எப்படி தினமும் வர முடியும்?
அவர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று இங்கு நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால் போதும்.
ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு 10.30 மணிக்கு பவுர்ணமி பூஜை துவங்கி நள்ளிரவு 1.20க்கு நிறைவடைகிறது.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருட சிவராத்திரியன்றும் கொதிக்கும் நெய்யில் ஒரு 60 வயது பாட்டி வெறும் கையால் பணியாரம் சுட்டுவருகிறார்.கடந்த 30 வருடங்களாக இந்தக் காரியத்தைச் செய்து வருகிறார்.அந்த பாட்டியின் கையில் சிறு மாற்றம் கூட இருப்பதில்லை.கரண்டியைப் பயன்படுத்துவதில்லை.ஒரு முறை நேரில் வந்து பார்க்கவும்.
இந்த பத்திரகாளி நிகழ்த்தும் அதிசயங்கள் ஏராளம்:அவற்றில் சில..
சாதரணமாக தொழில் செய்து வந்த ஒரு நபர் இங்கு தினமும் ஒரு முறை வீதம் 4 வருடங்கள் வந்து வழிபட்டார்.இப்போது அவரது தொழில் சொத்து மதிப்பு சில கோடிகள்....

8 வருடமாக டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு நடையாய் நடந்த ஒருவர் இந்த பத்திரகாளியை சில மாதங்கள் தினமும் வழிபட்டுக் கொண்டே வந்தார்.
ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லாத விதத்தில் டைவர்ஸ் கேஸ் முடிவுக்கு வந்துவிட்டது.

பிறவியிலிருந்தே மனநிலை சரியில்லாமல் இருந்த ஒரு 21 வயது இளைஞன் இந்த கோவிலுக்கு 2 வருடமாக அழைத்து வரப்பட்டான்.தற்போது சராசரி மனிதனாகி விட்டான்.தற்போது அவன் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டான்.

ஒரு டெய்லர் அவர்,14 வருடங்களாக வந்து கொண்டே இருக்கிறார்.மிக சாதாரண நிலையிலிருந்தவர்.கடைக்கு இடம் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தவர்.இது வரை 20 முறை தனது டெய்லர் கடையை மாற்றியிருப்பார்.தற்போது,ஊருக்கு இதயப் பகுதியில்-நிரந்தரமான கடை அவருக்கு அமைந்துவிட்டது.சிலருக்கு நிரந்தரவேலை தருமளவிற்கு வளர்ந்து விட்டார்.
இருந்தபோதிலும், இன்றும் அந்த டெய்லர் ஒரு நாள் விடாமல் பத்திரகாளியை வழிபட்டபின்பே தனது
கடையைத் திறக்கிறார்.
இரண்டு பெண்குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒரு 33 வயது
இளைஞ்ர்.மனைவி,பெற்றோர்,உறவினர் என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டவர்.ஒரே காரணம்-அந்த இளைஞரின்
முன்கோபம்,நிரந்தர வேலையின்மை.,
4 வருடங்களாக தினமும் பத்திரகாளியை வழிபட்டு வருகிறார்.இன்று அவருக்கு நிரந்தரத் தொழில் அமைந்துவிட்டது.அவரது மனைவி பொறுப்பற்று இருந்ததால் அந்த மனைவி தானாகவே பிரிந்து போய்விட்டாள்.
ஆக,நிம்மதியும்,செல்வவளமும் 101% காரண்டி.

Tuesday, January 6, 2009

ஞாபக சக்தி பெருக -முருக மந்திரமும் தமிழ்ப் பாடலும்


ஞாபக சக்தி பெருக கூற வேண்டிய முருக மந்திரம்

முருகப் பெருமானது சடாச்சர மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இந்த மந்திரத்தை ஒரு லட்சம் முறை உருப் போட்டால் நல்ல நினைவாற்றல் கிடைக்கிறது.இது அனுபவ உண்மை!

ஓம் ஐம்கிரிம் தோத் தஸ் ஸ்வாகா

தவிர,கந்தரனுபூதியில் உள்ள 15-வது பாடலாகிய “முருகன் குமரன் குகன் என்று மொழிந்து” என்று துவங்கும் பாடலை ஒருநாளுக்கு 108 முறை வீதம் ஜபித்து, 48 நாட்கள் தொடர்ந்து ஜபித்து வந்தாலும் நினைவாற்றல் பெருகும்
.

வீட்டில் நவரத்தினங்கள் பெருக சொல்ல வேண்டிய மந்திரம்-அனுபவத்துடன்


பொன்னும் நவரத்தினங்களும் பெருக சொல்லவேண்டிய மந்திரம்

வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும்.அலங்கரிப்பது உங்கள் வசதியைப் பொறுத்தது.
கீழ்காணும் மந்திரத்தை 108 முறை மனதிற்குள் ஜபிக்கவும்
ஓம் ஸ்ரீம் வஸீதே வஸீதாரே வஸீகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

இப்படி 108 முறை ஜபித்தபின்,பக்கத்தில் உள்ள சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குங்கள்.
வாரா வாரம் இவ்வாறு செய்து வந்தால்,வீட்டில் பொன்னும் நவரத்தினங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.இதை பரீட்சை செய்து பார்த்ததில்,குடும்பத்தில் பணக்கஷ்டம் நீங்குகிறது.

காமமும் வாழ்க்கையும்:சில ஆன்மீக விளக்கங்கள்


காமம் பற்றிய சில விளக்கங்கள்:

இந்து மதத்தில் காமம் பற்றிய கோட்பாடு சமுதாய நன்மையை மையப்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
மனைவியைத் தவிர மற்ற அனைத்து பெண்களும் பெற்ற தாய்க்குச் சமம்.
மேல் நாடுகளில்-பெற்ற தாயைத் தவிர அனைத்து பெண்களும் மனைவிக்குச் சமம்.
இந்து தர்ம கோட்பாட்டால் காம நோய்கள் உருவாகுவதே குறைவு.மேல்நாட்டுக் கோட்பாட்டால் காம நோய்களால் பாதிக்கப் படாதவர்கள் குறைவு.

ஒரு தொழில்ஸ்தானத்தில்(அலுவலகம் அல்லது தொழிற்சாலை அல்லது பணியிடம்) ஒருமுறை காம நடவடிக்கை(உடலுறவு) நிகழ்ந்துவிட்டால் அங்கிருந்து தொழில் தேவதை வெளியேறிவிடும்.காம தேவனின் ஆட்சி துவங்கிவிடும். காமம் சார்ந்த நடவடிக்கைகள் நடந்தால்-தொழில் நலிவடையத்துவங்கும்.

ஒரு பெண்ணை அவளது அனுமதி-ஆசையின்றி அவளது வாயில் உடலுறவு கொண்டால்-அந்த வினாடி முதல் அந்த ஆணின் வாழ்க்கை,குடும்ப அமைப்பு சர்வநாசமடையத் துவங்கிவிடும்.ஒரு தனிமனிதனது நிலையே இப்படி என்றால்,இந்தத் தவற்றை ஒரு நாட்டின் மன்னன் செய்தால்.. ..இதைத் தான் பில்கிளிண்டன் செய்தான்.அமெரிக்கா ஏன் சர்வநாசமடையத் துவங்கியுள்ளது?என்பது புரிகிறதா?
பில்கிளிண்டன் தனது அலுவலக உதவியாளினி மோனிகா லெவின்ஸ்கியிடம் மேலே சொன்னது போலத் தான் நடந்து கொண்டான்.இதற்குப் பரிகாரம் கிடையாது.
பில்கிளிண்டனுக்கு என்ன தண்டனை தெரியுமா?
கருடபுராணம் கூறுகிறது:விந்துக் கடலில் வாழ்க்கை வாழ
வேண்டும்.விந்து தான் (சொர்க்கத்தில்)மூன்று வேளை உணவும்.

ஒரு ஆண் அல்லது பெண் உங்கள்மீது காமவெறி கொள்கிறான் அல்லது கொள்கிறாள்.நீங்கள் அவன/ளது காம இச்சையைத் தீர்க்க வேண்டும்.தீர்க்காவிட்டால்,அதன் அடையாளமாக உங்களது வீட்டில் சிறிய சிற்றெறும்புகள் வரும்.இதற்குப் பரிகாரம்-விநாயகருக்கு வெல்லம் அன்பளிப்பாக வழங்க வேண்டும்.இதனால் சிற்றெறும்புகள் வராது.ஆனால்,ஏங்க வைத்த பாவத்தால் நீங்கள் சில மாதமாவது உங்களது துணையைப் பிரிந்து இருக்கவேண்டும்.இது தான் தண்டனை!

ஒரு முறை மட்டும் உங்களால் காமசுகத்தை அனுபவித்தவர்கள்-உங்களை நினைத்து ஏங்கினால் அதுவும் உங்களுக்கு பாவத்தைச் சேர்க்கும்.இதனால் தான் நீங்கள் யாருடன் காம உறவு கொள்கிறீர்களோ,அவர்களையே வாழ்க்கைத் துணையாக ஆக்கிக் கொள்ளுங்கள்.இதுவே,இந்து தர்ம-குடும்பக் கோட்பாடு.

கோபம்,ஆவேசம்,எதற்கெடுத்தாலும் சண்டை போடும் பெண்கள்-அடங்குவது காமசுகத்திற்கு மட்டுமே.பணம் சம்பாதிக்கும் வேகத்தில் மனைவிக்கு சுகம் தர மறந்துவிடாதீர்கள்.அப்படி மறந்தால்.. ..திருட்டுப் பயலே கதையாகிவிடும்.ஜாக்கிரதை!
நமது பெர்சனாலிட்டியால் ஒரு ஆண் அல்லது பெண் நம்மீது காம வயப்பட்டால் நமக்கு பிரம்மஹத்தி தோஷமாக மாறும்.
முற்பிறவியில் துறவிகளாக இருந்தவர்களே இப்பிறவியில் நடிகர்-நடிகைகளாக பிறந்துள்ளனர்.நாம் அவர்கள் வாழ்க்கை காமச்சுவை நிரம்பியது என நம்புகிறோம்.அது முழுக்க உண்மைதான்!! அதே சமயம் அவர்களது திரைப்படங்களைப் பார்க்கும் நாம் காம வயப்பட்டால், (அது அந்த நடிகையாக-நடிகராக இருந்தாலும் சரி,வேறு யாராக இருந்தாலும் சரி) அந்த பாவத்தை உருவாக்கிய நடிகர்-நடிகை-திரைப்பட இயக்குநர்-இவர்கள் அனைவரும் அடுத்த பிறவியில் என்ன பாடு படுவார்கள்?

காமம் சார்ந்த வெப்சைட்டுகள் நடத்துபவர்கள்-அதில் நடித்துள்ளவர்கள்; காமக்கிளர்ச்சியைத் தூண்டும் விதமாக சினிமா எடுத்து-கோடி கோடியாக சம்பாதித்துள்ள தமிழ் இயக்குநர்கள்-அடுத்த பிறவியில் எப்பேர்பட்ட பாவியாக பிறப்பார்கள்?!
எனவே புரிந்து கொள்ளுங்கள்-பாவங்களில் கொடியது பிறரின் காம உணர்ச்சியைத் தூண்டுவது தான்!!!
முற்பிறவியில் அடுத்தவர் மனைவியை புணர்ந்தவன் இப்பிறவியில் விரை சிதைக்கப் பட்ட குதிரையாக அல்லது ஆணும் பெண்ணுமல்லாத அலி/பேடியாக பிறப்பான்.
முற்பிறவியில் சிவாலயத்தில் ஒரு பெண்ணை அவளது விருப்பமின்றிப் புணர்ந்தவனே இப்பிறவியில் எய்ட்ஸ் வியாதியால் அவதிப்படுவான்.