Showing posts with label milkyway. Show all posts
Showing posts with label milkyway. Show all posts

Saturday, October 3, 2009

வானவியல் உண்மைகளைக் கண்டறிந்த தமிழர்கள்



“அண்டற் தொகுதியின் உண்டைப் பிறக்க
நூற்றி யொரு கோடியின் மேல்பட விரிந்தன”
என்பது திருவாசகத்தின் வரிகளாகும்.இதன் அர்த்தம் பூமி உருண்டை வடிவமானது என்பதேயாகும்.

பூமிக்கு தமிழர்களாகிய நாம் நம்முடைய சங்க இலக்கியங்களில் ஞாலம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.ஞாலம் என்ற அழகிய தமிழ்வார்த்தைக்கு தொங்குதல் என்று ஒரு அர்த்தமும் உண்டு.நிறையீர்ப்பு விசையால் பூமி அந்தரங்கத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது என்பதை உலகின் மூத்த குடியாகிய நம் தமிழ்க்குடி கண்டறிந்துள்ளது.

கடந்த சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் நியூட்டன் இந்த உண்மையைக்கண்டறிந்தார்.
நமது கந்த புராணத்தில் சூரபத்மன் என்ற அரக்கன் ஆயிரம் அண்டங்களை பலயுகங்களாக ஆட்சிபுரிந்தான்.அவனது அக்கிரமத்திற்கு முடிவு கட்டவே முருகக்கடவுள் அவதரித்தார் என படித்திருக்கிறோம்.
இதையே இன்றைய நவீன வானியல் விஞ்ஞானிகள் பல்லாயிரம் அண்டங்கள்(காலக்ஸி) பிரபஞ்சத்தில் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.


நாம் வாழும் அண்டத்தின் பெயர் பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே ஆகும்.நமது அருகில் உள்ள அண்டத்தின் பெயர் அண்ட்ரோமீடா ஆகும்.இந்த அண்ட்ரோமீடாவுக்கு நாம் ஒளி வேகத்தில் (விநாடிக்கு 3,00,000 கி.மீட்டர் வேகத்தில்) சென்றாலே அங்கு சென்றடைய 2000 ஆண்டுகளாகும் என பிரபஞ்சவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ராஜராஜ சோழன் அரசாண்டபோது,இந்தப் பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு மூலையில் பிறந்த ஒரு நட்சத்திரத்திலிருந்து புறப்பட்ட ஒளி தற்போதுதான் (கி.பி.2009) நம்மை(பூமியை)வந்தடைந்துள்ளது.அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த நட்சத்திரத்தொகுதியை நாம் தற்போதுதான் பார்க்கிறோம்.இந்தத்தகவல்கள் நமது வானசாஸ்திர நூல்கள் மற்றும் புராதன ஜோதிடநூல்களில் இருக்கின்றன என்பதை நாம் அறியும்போது இந்துக்களாகிய தமிழர்களாகிய நாம் எப்பேர்ப்பட்ட அறிவுஜீவி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.