Showing posts with label ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம். Show all posts
Showing posts with label ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கம். Show all posts

Tuesday, August 30, 2011

ஆர்.எஸ்.எஸ்.பற்றி ஒரு நீதிபதியின் கருத்து




நான் 1979 இல் கோழிக்கோடு மாவட்ட கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டேன்.மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்தவர் திரு.ஏ.ஆர்.ஸ்ரீனிவாசன்.நூற்றுக்கு நூறு நேர்மையாளர் என எல்லோராலும் மதிக்கப்பட்டவர்.அவர் அப்பழுக்கற்ற தேசபக்தர்.அபார விஷயஞானம் உள்ளவர்.அவர் கடைபிடித்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் போற்றுதலுக்குரியவை.ஓய்வு பெற்றதும் அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் செயல்துடிப்புடன் ஈடுபட்டார்.நாங்கள் இருவரும் தொடர்ந்து தகவல் பரிமாறிக்கொள்வோம்.பல விஷயங்களை விவாதிப்போம்.இதனால் ஆர்.எஸ்.எஸ். பற்றி சுயலாபப்புள்ளிகள் சிலரின் அவதூறுப்பிரச்சாரத்தை அடியோடு நிராகரித்தேன்.என் மனதிலிருந்தும் அதையெல்லாம் வெளியேற்றினேன்.ராஷ்டீரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் உண்மையான ஆதரவாளர் ஆனேன்



பாரத உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.கே.டி.தாமஸ் கொச்சியில் 2011,ஆகஸ்டு 1,அன்று ஆர்.எஸ்.எஸ்.குருபூஜை விழாவில் தலைமை வகித்துப்பேசுகையில் தெரிவித்த தகவல்.