Showing posts with label ராகு பகவான். Show all posts
Showing posts with label ராகு பகவான். Show all posts

Thursday, August 11, 2011

ஆன்மீகக்கடலின் ஜோதிடக்கணிப்பு பலித்தது



மிதுனத்தில் செவ்வாயும்,கன்னியில் சனியும் இருந்து ஒருவரை ஒருவர் 23.7.11 முதல் 10.9.11 வரை பார்ப்பதால்,மிதுனராசிக்காரர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என போனமாதம் ஜோதிடப்படி கணித்திருந்தோம்.மிதுனராசியைச் சேர்ந்த இங்கிலாந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் தனிப்பட்ட விதத்தில் பலருடன் விவாதித்திருந்தோம்.

இன்று நமது ஜோதிடக்கணிப்பின்படி,இங்கிலாந்தின் தலைநகரத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் தலைவிரித்தாடுகிறது.ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம் ஆகும்.

விருச்சிக ராசியில் தற்போது ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்.விருச்சிகராசிக்கு ஆறாமிடமான மேஷத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார்.எனவே,ராகு 2012 முடியும் வரையிலும் விருச்சிக ராசியை ராகுபகவான் கடக்கிறார்.அதே சமயம்,மே 2012 வாக்கில் குருபகவான் ரிஷபராசிக்குப் பெயர்ச்சியாகி,ஏழாம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்க்கப் போகிறார்.எனவே,விருச்சிக ராசியைச் சேர்ந்த இலங்கை,விருச்சிக ராசியில் பிறந்த அதன் அதிபர் ராஜபக்ஷே மாபெரும் பிரச்னைகளை சந்திப்பார்.

மே 2012க்குள் இந்த சூழ்நிலை விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.பக்தியும்,பூர்வபுண்ணியமுமே இந்த அவமான சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கும்.அப்படி பாதுகாப்பதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் மட்டுமே!
இப்படிக்கு
ஆன்மீகக்கடல்

ஓம்சிவசிவஓம்