Showing posts with label மேஷராசி. Show all posts
Showing posts with label மேஷராசி. Show all posts

Wednesday, December 21, 2011

கண்டச்சனி துயரம் நீங்கிட செய்ய வேண்டிய காலபைரவர் வழிபாடு



21.12.11 முதல் மூன்றாண்டுகளுக்கு மேஷராசியினருக்கு கண்டச்சனி எனப்படும் ஏழாமிடத்துச்சனி நடைபெறுகிறது.இது இல்லறத்தில் இணையற்ற துன்பங்களைத் தரும்.இதைச் சரி செய்ய, அசைவம் சாப்பிடுவதை கைவிட வேண்டும்.கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஓவ்வொரு திங்கட் கிழமையும் காலை 7.30 முதல் 9 மணிக்குள் அல்லிமலர் மாலை ,புனுகு பூசி,சாம்பல் பூசணியில் இலுப்பையெண்ணெய் தீபமேற்ற வேண்டும்.பாகற்காய் கலந்த சாதத்தை படையலிட்டு,அர்ச்சனை செய்ய வேண்டும்.அல்லது அர்ச்சனை செய்வதற்குப் பதிலாக பைரவ சதநாமாவளியை மனதுக்குள் பாட வேண்டும்.
இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அருளிய ஆன்மீக ஆராய்ச்சியாளர் சிவமயம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கு கோடி கோடி கூகுள் நன்றிகள்!!!

சனிப்பிரதோஷ நாட்களான 2.6.12; 16.6.12;13.10.12;27.10.12;23.2.13;9.3.13 இந்த தேதிகளில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருக்கும் கால பைரவரை இவ்வாறு வழிபாடு செய்வது உடனடி பலன்களைத் தரும்.இது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
அல்லது
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் ஊரில் அமைந்திருக்கும் சிவாலயமானது தென் தமிழ்நாட்டின் நவகைலாசங்களில் ஒன்றாகும்.இங்கு இருக்கும் சிவபெருமான்,சனி பகவானின் அம்சத்தோடு அருள்கிறார்.இங்கு மேற்கூறிய சனிப்பிரதோஷ நாட்களில் கால பைரவர் வழிபாடு செய்வது சிறப்பாகும்


ஓம்சிவசிவஓம்   ஓம்ஹரிஹரிஓம்

Saturday, August 29, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(அசுபதி)

அபூர்வ செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் ஆரம்பம்


கி.பி.1977க்குப் பிறகு செவ்வாய்க்கிரகமானது தொடர்ந்து 9 மாதங்கள் நீசமாகப்போகிறது. யுத்தகாரகன், ரத்த காரகன், சகோதரக்காரகன் என போற்றப்படும் செவ்வாய் கடகராசியில் 7.10.2009 முதல் 15.5.2010 வரை நீசமாக சஞ்சரிக்கப்போகிறார்.இதனால், ராணுவம், காவல்துறையிலும் கலகம் வரலாம்.சில மாதங்களுக்கு முன்பு வங்காளதேசத்தில் ராணுவம் கலகம் செய்தது ஞாபமிருக்கிறதா? அதுபோல!!!

தவிர, மேஷம், விருச்சிகம் ராசியில் பிறந்த மனிதர்கள், நிறுவனங்கள், மாநிலங்கள், நாடுகளில் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறது. செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாடுகளில் சீனா, ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் கொரியாக்கள்.(அதனால்தான் அங்கே விதவிதமான யுத்தக்கலைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. கராத்தே, குங்பூ,டோக்வாண்டே மற்றும் 100 விதமான சண்டைக்கலைகள்) நம்ம பக்கத்து நாடு இலங்கையின் ராசி விருச்சிகம்.அதன் தற்போதய அதிபர் ராஜபக்ஷேயின் பிறந்த ராசியும் விருச்சிகம். தமிழர்களின் துருவ நட்சத்திரம் பிரபாகரன் அவர்களின் பிறந்த ராசியும் விருச்சிகம்!!! ஆக இலங்கையில் என்னமோ நடக்கப்போகுது. சரி அதை பேப்பரில் பார்த்துக் கொள்ளலாம்.

தனி மனிதர் வாழ்வில் என்ன நடக்கும்? என்பதை பிரபல ஜோதிடர் ஏ।எம்।ஜே। என்பவர் நட்சத்திர வாரியாகக் கணித்திருக்கிறார்।உங்களது பிறந்த நட்சத்திரம் எதுவோ அதன்படி இந்த பலன்கள் உங்கள் வாழ்வில் செயல்படும்। இந்தப் பலன்கள் எண்பது சதவிகிதம் துல்லியமானவை।மீதி இருபது சதவீதம் அவரவர் ஜாதக பூர்வபுண்ணியத்தைப் பொறுத்து மாறுபடும்.


இனி செவ்வாய் பெயர்ச்சி பலன்களைக்காணலாம்:

அசுபதி: தெய்வீக அருளைப் பெற்றவரும், தனவான் சாஸ்திரங்களை அறிந்தவருமாகிய அசுவினி நட்சத்திரக்காரர்களே!

நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல விஷயங்களை போதிப்பவராகவும் தைரியசாலியாகவும் இருக்கும் தாங்கள் 7.10.2009 முதல் 16.11.2009 வரை இருப்பிடப்பிரச்சனை, தயாரின் உடல்நலத்தில் சீர்கேடு, நண்பர்களிடையே பகை,தொழிலில் மந்தம் அல்லது தொழில் சார்ந்த குளறுபடிகள் ஏற்படும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரையில் இந்த குளறுபடிகள் மாறி எதிர்பாராத தொழில் வளர்ச்சி லாபங்களும் ஏற்படும்.இருப்பிடப்பிரச்னை நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.தங்களுக்கு அல்லது தங்களைச் சார்ந்தவருக்கோ சுபகாரியம் உண்டாகும்.வண்டி வாகன வசதிகள் உருவாகும்.

23.12.2009 முதல் 13.3.2009 வரை மன தைரியம் அதிகரிக்கும்.தங்களது வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவர். முன்கோபமும் பிடிவாதமும் இந்நேரங்களில் தங்களிடம் அதிகம் காணப்படும்.உங்களுக்கு அல்லது உங்களது ரத்த உறவுகளுக்கு ஏற்படும் காயம் அல்லது நோய்க்கு தகுந்த மருத்துவ நிபுணர்(எக்ஸ்பர்ட்)ரிடம் ஆலோசனை கேட்கும் நிலை உருவாகும்.தொழில்நிலை சுமாராகும்.நிலம் சார்ந்த விஷயங்களில் சிறு லாபம் ஏற்படும்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை சுப நன்மைகள் உண்டாகும்.இளைய சகோதரத்தாலும் கடனாலும் சில தொல்லைகள் வந்து தீரும்.

இக்காலகட்டத்தில் திருப்பரங்குன்றம் முருகக் கடவுளை அடிக்கடி வழிபட நன்று.