Showing posts with label மேஷம் விருச்சிகம் ராசி. Show all posts
Showing posts with label மேஷம் விருச்சிகம் ராசி. Show all posts

Thursday, September 8, 2011

மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை







மேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை




மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் நவக்கிரகங்களில் செவ்வாயின் மகன்கள் ஆவர்.10.9.11 முதல் 45 நாட்களுக்கு செவ்வாய் கடகராசியைக் கடக்க இருக்கிறார்.ஜோதிடப்படி செவ்வாய் இந்த 45 நாட்களில் நீசமடைகிறார்.எனவே,மேஷம்,விருச்சிக ராசிக்காரர்கள் கோபத்தைக் கைவிட வேண்டும்.பெரிய பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பது அவசியம்.மேஷத்தில் குரு பகவான் இருந்தாலும்,நீசம் நீசமே!



இந்த காலகட்டத்தில் வாழ்க்கையைச் சமாளிக்க பவளக்கல்லை அணிந்து கொள்வது ஒரு பரிகாரம் ஆகும்.தினமும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது இரண்டாவது பரிகாரம்;தினமும் ஏதாவது ஒரு தியானம் செய்துவருதல் மூன்றாவது பரிகாரம்;தினமும் முருகக் கடவுளைத் தரிசிப்பது(அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று) தரிசிப்பது மூன்றாவது பரிகாரம்;ரத்த தானம் செய்வது நான்காவது பரிகாரம்;இந்த 45 நாட்களில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமையன்று திரு அண்ணாமலை கிரிவலம் சென்று வருதல் ஐந்தாவது பரிகாரம்;தினமும் அதிகாலை 30 நிமிடங்கள் செவ்வாய் பகவானின் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பது ஆறாவது பரிகாரம்.இன்னும் பல பரிகாரங்கள் இருந்தாலும்,இணையம் வழியாக இவ்வளவு பரிகாரங்களை பக்கவிளைவுகளற்ற பரிகாரங்களாகப் பரப்ப முடியும்.ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடம் கற்போர்,ஜோதிடத்தொழில் புரிவோர் இது தொடர்பாக தங்களின் கருத்துக்களை அனுப்பினால்,பரிசீலித்து வெளியிடத்தயார்.

ஓம்சிவசிவஓம்