Showing posts with label பைரவ ரகசியம். Show all posts
Showing posts with label பைரவ ரகசியம். Show all posts

Monday, March 25, 2013

வெளிப்பட்டு இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோமே!!!


.சென்ற வாரம் 20.2.13 புதன் கிழமையன்று மாலைநேரத்தில் நமது ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு வந்திருந்தபோது ஸ்ரீகாலபைரவரின் சக்தி வெளிப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.அந்த புதன்கிழமையில் இருந்து  தொடர்ந்து ஆறு புதன்கிழமைகளுக்கு இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நேரம் வரை வெளிப்படும்  என்பதையும் தமிழ்நாடு முழுவதும் தெரிவித்து எப்படி வழிபட வேண்டும்? என்பதையும் தெரிவித்தார்.(அசைவம் சாப்பிடுவதைக் கைவிட்டால் மட்டுமே இந்த வழிபாடு பலன் தரும் என்பதை மறவாதீர்கள்;ஏனெனில்,ஜீவ காருண்யமே ஸ்ரீகாலபைரவருக்கு விருப்பமான அம்சம் ஆகும்)


இந்த நேரத்தில் நாம் நமது வீடுக்கு அருகில் இருக்கும் சிவாலயம்/அம்மன் ஆலயம்/முருகன் ஆலயம்/குலதெய்வ ஆலயத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு மரிக்கொழுந்து மாலை அல்லது உதிரி,செவ்வரளி மாலை மற்றும் உதிரி,அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகள்,இரண்டு நெய்தீபங்களுடன் சென்று,முதலில் இரண்டு நெய்தீபங்களையும் ஒருவரே ஏற்றி வைக்க வேண்டும்.பிறகு,கொண்டு வந்திருக்கும் பூ/மாலையை பூசாரியிடம் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அர்ச்சனை முடிந்தப்பின்னர்,இந்த பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் நேரங்கள் நிறைவடையும் வரை அவரது சன்னதியின் முன்பாக அமர்ந்து நமது தேவைகளை மனதார வேண்ட வேண்டும்.நமக்கு என்னென்ன பிரச்னைகள் தொல்லை செய்கின்றனவோ அதை நினைத்து வேண்டி,அவை விரைவாக நீங்கிவிட வேண்டும் என்று வேண்டிவிட்டு வேறு எந்தக் கோவிலுக்கும்/வீட்டிற்கும் செல்லாமல் நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.புறப்படும் போது பிரித்து வைத்த அரைக்கிலோ டயமண்டு கல்கண்டுகளில் பாதியை அங்கே வந்திருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு,மீதியை நமது வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும்;நாம் புறப்படும் போது கொஞ்சமாவது ஸ்ரீகாலபைரவரின் சன்னதியில் டயமண்டு கல்கண்டுகள் வைத்துவிட்டுப்போவது நல்லது;



(சில கோவில்களில் நாம் அர்ச்சனை செய்ய பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளைக் கொடுத்துவிட்டு,அர்ச்சனை முடிந்ததும் அதிலிருந்து கொஞ்சம் கேட்டாலும் அர்ச்சகர்/பூசாரி தருவதில்லை;அப்படிப்பட்ட இடத்தில் பூசாரி/அர்ச்சகரிடம் டயமண்டு கல்கண்டுகளை மட்டும் தர வேண்டாம்.நீங்களே ஸ்ரீகாலபைரவரின் முன்பாக சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்.அவ்வாறு எடுக்கும்போது கொஞ்சம் ஸ்ரீகால பைரவரின் சன்னதியில் அவரது பாதத்துக்கு அருகில் கொட்டி விட்டு வந்துவிடவும்)



இதன் மூலமாக நமது நமது நியாயமான கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேறும்.இந்த ஆறு புதன்கிழமைகளில் எதாவது ஒரு நாளில் மட்டும் ஜபித்தாலும் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.ஐந்துபுதன்கிழமைகளிலும் ஜபித்தாலும் நிறைவேறும்.நைவேத்தியமாக அவல் பாயாசம் வைக்கலாம்;அவல் பாயாசத்தையும் டயமண்டு கல்கண்டுகளைப் போலவே பயன்படுத்தவும்.





27.3.2013 புதன் மாலை 6.11 முதல் இரவு 8.11 வரை பவுர்ணமியும் புதன் கிழமையும் சேர்ந்து வருவதால் இந்த புதன் கிழமை மிகவும் சக்தி வாய்ந்த பைரவ புதனாக இருக்கப் போகிறது;பிரார்த்தனை செய்து உங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளுங்கள்;கடன்களை அடைத்துக் கொள்ளுங்கள்;நீண்டகால (நியாயமான) லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் (அந்தந்த நாடுகளில் இதே நேரத்தைப் பின்பற்றுங்கள்;அதுதான் சரி)
                                                            கடந்த ஆறு புதன்கிழமைகளில் ஏதாவது ஒரே ஒரு புதன் கிழமையன்று மட்டும் ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்குச் சென்று முறைப்படி வழிபட்டவர்களும்;ஒன்றுக்கும் மேற்பட்ட புதன்கிழமைகள் வழிபட்டவர்களுக்கும் ஏராளமான நற்பலன்கள் கிடைத்துவருகின்றன;தியான தீட்சைகளை பலவிதமான ஆன்மீக பயிற்சி அமைப்புகள் கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றன;அவைகளில் ஏதாவது ஒன்றில் தீட்சை எடுத்தவர்கள்,இந்த புதன்கிழமைகளில் ஏதாவது ஒரு புதன் கிழமையன்று ஸ்ரீகால பைரவரை வழிபடச் சென்றிருக்கின்றனர்;அருள் வாக்கு சொல்பவர்கள்,தனது முற்பிறவிகளால் தவ ஆற்றலை இயற்கையாகவே பெற்றவர்கள் என பலரும் ஸ்ரீகாலபைரவரை வழிபடச் சென்ற போது,பலருக்கு பல்வேறு விதங்களில் ஸ்ரீகால பைரவர் காட்சியளித்திருக்கிறார்;பலருக்கு அவர்களுடைய கடன்கள் தீர சந்தர்ப்பம் அமைந்துவிட்டது;                                              யாரெல்லாம் அடுத்தவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்களோ அவர்களுக்கு அந்த பிரார்த்தனை உடனே நிறைவேறியிருக்கிறது.உங்களில் யாருக்கெல்லாம் இது போன்ற அனுபவங்கள் கிடைத்தனவோ அவைகளை எமது மின் அஞ்சல் முகவரிக்கு  அனுப்பினால் அதற்கான விளக்கங்கள் பதிலாக அனுப்பி வைக்கப்படும்;                        ஓம்சிவசிவஓம்

Friday, October 19, 2012

2வது வீரட்டானம்:திருக்கோவிலூரின் பெருமைகள்






 அவ்வையார் விநாயகரைப்போற்றி விநாயகர் அகவல் பாடியது இங்கேதான்!

இன்றைய ஆசியா(வடக்கே சைபீரியா,மங்கோலியா,சீனா,ஜப்பான்,தாய்லாந்து,திபத்,பர்மா என்ற மியான்மர்,இந்தியா,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,இலங்கை,மாலத்தீவுகள்,அந்தமான் தீவுகள்,மலேஷியா,சிங்கப்பூர்) முழுவதையும்,ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வரையிலும் ஆட்சி செய்த தமிழ் மன்னர் ராஜராஜசோழன் பிறந்த ஊர் இந்த ஊரே!


அசுரர்களின் குருவாகிய பார்க்கவன்,சதாசிவனால் ஒருமுறை விழுங்கப்பட்டு ஆயிரம் யுகங்களுக்குப்பிறகு மீண்டும் சிவனது உடலிலிருந்து வெளிப்பட்டதும் இங்கே தான்.அவ்வாறு வெளிப்பட்டபோது சுக்கிரன் என்ற பெயரோடு வெளிப்பட்டு,இங்கே இருக்கும் சதாசிவனை(ஸ்ரீகாலபைரவரை) வழிபட்டு கிரகப்பதவி பெற்றார்.எனவே,இது சிறந்த சுக்கிர பரிகார ஸ்தலமாக இருக்கிறது.யாருக்கெல்லாம் பிறந்த ஜாதகத்தில் கன்னிராசியில் மற்றும் மீன ராசியில் இருக்கிறதோ அவர்களெல்லாம் இங்கே வந்து சுக்கிர தோஷப் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.களத்திர தோஷம் இருப்பவர்களும் இங்கே அவரவர் ஜன்ம நட்சத்திர நாளன்று வருகை தந்து மூலவருக்கும்,ஸ்ரீகாலபைரவருக்கும் அபிஷேகம் செய்தால் ,சிறப்பான திருமண வாழ்க்கை அமைந்துவிடும்.


வாஸ்து புருஷன் இங்கே வந்து ஸ்ரீகாலபைரவரை வழிபட்டதால்,மிகச் சிறந்த வாஸ்து பரிகாரக்கோவிலாகவும் இது அமைந்திருக்கிறது.
அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிக்கவே சதாசிவன்,ஸ்ரீகாலபைரவரை தனது நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.அந்தகாசுரனுக்கும் ஸ்ரீகாலபைரவருக்கும் நடந்த யுத்தத்தினால் எட்டு திசைகளிலும் ஸ்ரீகால பைரவரின் ரத்தம் சிந்தியது;அந்த ரத்தத்திலிருந்து எட்டுவிதமான பைரவர்கள் தோன்றினர்;அந்த எட்டு பைரவர்களின் தாக்குதலுக்கும் ஈடுகொடுத்து அந்தகாசுரன் போரிட்டதால்,எட்டு பைரவர்களும் மேலும் எட்டுவிதமான பைரவர்களாக அதாவது 64 விதபைரவர்களாக தோன்றினர்.அந்தகாசுரன் அழிந்தான்;அவனது அழிவால் பிரபஞ்சம் முழுவதற்கும் பரவியிருந்த இருட்டு நீங்கியது.இதனால்,மனம் மகிழ்ச்சியடைந்தார் சதா சிவன்.எனவே,இந்த பிரபஞ்சம் முழுவதையும் நிர்வாகிக்கும் பொறுப்பை ஸ்ரீகாலபைரவரிடம் ஒப்படைத்தார்.இந்த புராணச் சம்பவம் நிகழ்ந்த இடமும் இந்த திருக்கோவிலூர் வீரட்டானமே!!

எனவே,தேய்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் திருக்கோவிலூர் வீரட்டானத்தின் வெளிப்பிரகாரத்தை 64 முறை சுற்றினால்,ஏழேழு ஜன்மங்களாக உண்டான பாவவினைகள் நசிந்து போகும்;வளர்பிறை அஷ்டமி நாட்களில் வரும் இராகு காலத்தில் திருக்கோவிலூர் வீரட்டானத்தின் வெளிப்பிரகாரத்தை 64 முறைச் சுற்றினால் சகல செல்வ வளங்களும் இந்தப் பிறவியிலேயே உண்டாகும்.ஒருமுறையாவது தேய்பிறை அஷ்டமியில் 64 முறை திருக்கோவிலூர் வீரட்டானத்தை வலம் வந்தப்பின்னரே வளர்பிறை அஷ்டமியன்று இங்கே வருகை தந்து 64 முறை சுற்ற வேண்டும்;நமது கர்மவினையை கழிக்காமல் நாம் ஒரு போதும் செல்வச் செழிப்பை அடைய முடியாது என்பது ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு ஆகும்.

சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூரைத் தலைமையகமாகக் கொண்டு உலகத்தை(இன்றைய ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா) ஆண்ட சோழ மன்னர் ராஜராஜசோழன் ஆவார்.அவர் கருவூர் சித்தரின் வழிகாட்டுதலின் படி,திருக்கோவிலூர் வீரட்டானத்தில் இருக்கும் ஸ்ரீகால பைரவரை வழிபட்டார்;அப்படி வழிபாடு செய்ததால் தான் உலகத்தை ஆளும் வல்லமையைப் பெற்றார்.

இரண்டாவது வீரட்டானமான திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் திருக்கோவிலூர் விழுப்புரம்,திரு அண்ணாமலைக்கு அருகில் அமைந்திருக்கிறது.
மறுபிறவியிலும்,இப்பிறவியிலும் சனியின் தாக்கம் இல்லாமல் இருக்கவும்,சகலவிதமான கர்மங்களை சுலபமாகவும்,விரைவாகவும் கரைக்கவும் நாம் செய்ய வேண்டிய வழிபாடு ஸ்ரீகால பைரவர் வழிபாடு மட்டுமே!!!


ஓம்சிவசிவஓம்