Showing posts with label சிவ அதிர்வை உணர்த்தும் ஓம்சிவசிவஓம். Show all posts
Showing posts with label சிவ அதிர்வை உணர்த்தும் ஓம்சிவசிவஓம். Show all posts

Thursday, January 27, 2011

சிவ அதிர்வை உணர்த்தும் ஓம்சிவசிவஓம்



எனது நண்பர் ஒருவர் ஒரு நாளுக்கு மூன்று முறை ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருக்கிறார்.(அவருக்கு அவ்வளவு ஓய்வு நேரம் கிடைக்கிறது).ஓவ்வொரு முறையும் அவர் ஒரு மணி நேரம் வீதம் ஒரு நாளுக்கு மூன்று மணி நேரங்கள் வரை ஜபித்துவருகிறார்.



இவர் நமது வலைப்பூவை தினமும் வாசித்து,அதில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை ஆராய்ந்து,அதன்படி அதைவிட சிறப்பாகவே ஜபித்துவருகிறார்.



இவர் இரண்டு மஞ்சள் நிற டவல்களை வாங்கியுள்ளார்.ஒன்றை விரிப்பாகவும்,மற்றதை தனது இடுப்பில் கட்டியும்,கழுத்தில் ஒரு ருத்ராட்சமும்,இரண்டு கைகளில் தலா ஒரு ருத்ராட்சங்களையும் வைத்தவாறும்,சிவாலயத்தில் வாங்கிய விபூதியை நெற்றி,தோள்பட்டைகள்,மார்பு,வயிறு,கழுத்தில் பூசிய பின்னர் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.



இரண்டாவது மாதத்தில் ஒரு நாள்,அன்று அவரது பிறந்த நட்சத்திரம் நின்றநாளாம்;இவரது வலது கால் பெருவிரலில் இருந்து மூட்டுவரை ஒரு வித மெல்லிய மின் அதிர்வு கோடு போல சில நிமிடம் வரையிலும் அதிர்ந்தது.இவருக்கும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை;



அவர் சொல்வது என்னவெனில், “எப்போதும் சிவ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை தினமும் ஜபித்தாலே,நம்மை சிவன் சோதிப்பார்.ஆனால்,இந்த ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்கியதிலிருந்து,அப்படிப்பட்ட சோதனை எதுவும் வரவில்லை.மனதில் அடிக்கடி எழும் காம எண்ணங்கள் நீங்கியிருக்கின்றன.



முன்பெல்லாம் எளிதில் ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்தாலே காம வசப்படுவது இயல்பு.ஆனால்,இன்றோ,ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பார்த்தும் கூட காம எண்ணம் சிறிதும் வரவில்லை.உங்களுக்கு நன்றிகள்!

நான் ஒருபோதும் இந்த ஒம்சிவசிவஒம் ஜபிப்பதை விட மாட்டேன்”
thanks: http://www.omshivashivaom.blogspot.com/http://www.omshivashivaom.blogspot.com/