Showing posts with label குருப்பெயர்ச்சி. Show all posts
Showing posts with label குருப்பெயர்ச்சி. Show all posts

Wednesday, May 5, 2010

அதிசார குருப்பெயர்ச்சி 2010

அதிசார குருப்பெயர்ச்சிப்பலன்கள் 2010

2.5.2010 ஞாயிறு மாலை சுமார் 4 மணியளவில் கும்பராசியில் இருந்த குருபகவான்,அதிவேகமாக(அதிசாரமாகி) மீனராசிக்கு பெயர்ச்சியாகிவிட்டார்.கார்த்திகை மாதம் அதாவது நவம்பர் 2010 இல் சில நாட்கள் மட்டும் மீண்டும் கும்பராசிக்கு வந்துவிட்டு,மீண்டும் மீனராசிக்குச் சென்றுவிடுகிறார் என பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.
இதனால்,ஓரளவு ஏழரைச்சனியில் தொல்லையிலிருந்து மீண்ட சிம்மராசிக்காரர்கள் மீண்டும் வேதனைநிறைந்த நாட்களில் வாழத்துவங்கியுள்ளனர்.
ஏழரைச்சனியில் ஜன்மச்சனியின் துன்பத்தைஅனுபவித்துவரும் கன்னிராசிக்காரர்களுக்கும்,அஷ்டமச்சனியை அனுபவித்துவரும் கும்பராசிக்காரர்களுக்கும் இந்த அதிசார குருப்பெயர்ச்சி ஆறுதலளிப்பதாக இருக்கும்.
மீனத்துக்கு வந்துள்ள குருபகவான், ஏழாம் ராசியான கன்னியையும்,கடகத்தையும்,விருச்சிகத்தையும் பார்வையிடுகிறார்.
இதனால்,கடந்த 9 மாதங்களாக படாதபாடு பட்டுவந்த கன்னிராசிக்காரர்களுக்கு டிசம்பர் 2011 வரை இருக்கும் ஜன்மச்சனியால் பெரும் தொல்லைகள் இராது.
ஏழரை முடிந்தும்கூட,ஒரு நல்ல வேலை அல்லது தொழில் அல்லது லைஃப் செட்டிலை எதிர்பார்த்துக்காத்திருக்கும் கடகராசிக்காரர்கள் இதுவரை பொறுமையிழந்து,எதிர்காலம் பற்றிய பயம் கலந்த ? யாக இருந்திருப்பார்கள்.அவர்களுக்குப் பொற்காலம் துவங்கிவிட்டது.இந்த வருடம் ஆவணி மாதத்திற்குள் பெரும்பாலான கடகராசிக்காரர்கள் நிரந்தரமான வேலை அல்லது தொழிலில் அமர்ந்துவிடுவார்கள்.பலருக்கு அரசாங்கவேலை கிடைக்கும்.தைரியமாக முயற்சி செய்யவும்.

விருச்சிகராசிக்காரர்களை 11 ஆம் இடத்து சனி நன்மையைத் தந்தாலும்,சனியில் 3 ஆம் பார்வையால் அடிக்கடி நிம்மதியிழந்துதவிப்பார்கள்.இந்த நிலையை இந்த அதிசாரகுருப்பெயர்ச்சி மாற்றிவிட்டது.ஆம்!
குருவின் 9 ஆம் பார்வையும்,சனியின் 3 ஆம் பார்வையும் சேர்ந்து விருச்சிகராசிக்காரர்களுக்கு இடம் மாற்றத்துடன் கூடிய நிம்மதியான ,நல்ல,வேலை அல்லது தொழிலை அமைத்துத்தரும்.

மிதுனராசிக்காரர்கள் குருவின் பார்வையிலிருந்து தப்புவதாலும்,சனியின் முழுப்பார்வையான 10 ஆம் பார்வையில் சிக்குவதால்,டிசம்பர் 2011 வரை தேவையில்லாத சிக்கல்கள் அல்லது பிரச்னைகளில் சிக்க வாய்ப்பிருக்கிறது.ஏதாவது ஒரு ரூபத்தில்,அவமானம் வரலாம்.
தனுசுராசிக்காரர்கள் இடமாற்றத்துடன்,பதவி உயர்வு கிடைக்கும்.தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும்.குறிப்பாக காதல்,கள்ளக்காதல்,பிறரது அந்தரங்கம் இவற்றில் தலையிடுவதைத் தவிர்ப்பது மிக அவசியம்.
கும்பம்,மேஷம்,கன்னி,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு திடீர் திருமணம் ஏற்படும்.அல்லது திடீரென சுபகாரியங்கள் நடைபெறும்.

வாழ்க வளமுடன்!