Showing posts with label காமரீதியான பிரச்னைகளும். Show all posts
Showing posts with label காமரீதியான பிரச்னைகளும். Show all posts

Thursday, September 29, 2011

காமரீதியான பிரச்னைகளும்,கலியுகத்தின் வீச்சும்










ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழர்ப் பண்பாடிலும் கூட மனித ஆரோக்கியம் ஒளிந்திருக்கிறது.காம இச்சை என்பது மிருக குணம்தான்.அது அளவு மீறும்போது!!!தமிழர் பண்பாடுதான் இந்துப் பண்பாடாக பரிணமித்திருக்கிறது.



சுக்கிலம் என்பது விந்து அல்ல;அது காமக்கிளர்ச்சி உண்டாகும்போது ஆணின் உடலில் இருந்து வெளிப்படுவது! அதே போல பெண்ணின் உடலில் இருந்து வெளிப்படுவதற்கு சுரோணிதம் என்று பெயர்.





ஒரு பெண் ஒரே ஒரு ஆணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்துவருவதாலும்,ஒரு ஆண் ஒரேஒரு பெண்ணுடன் தாம்பத்தியம் கொண்டு வாழ்ந்து வருவதாலும் இந்த ஆணின் சுக்கிலம்,அவனது ஜோடியான பெண்ணின் உடலுக்குள் பாய்கிறது.அதே போல,அந்தப் பெண்ணின் சுரோணிதம்,இந்த ஆணின் உடலுக்குள் பாய்கிறது.இப்படி மாறிமாறிப் பாய்வதால்,இருவரின் உடல் நலமும் பரிபூரணமடைகிறது.இதை 20,00,000 ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழினம் ஆராய்ந்து கண்டறிந்து,ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தனது அடையாளமாக்கிக் கொண்டுவிட்டது.(2005 ஆம் ஆண்டு மாலை முரசு,தீபாவளி மலர்,திருச்சி பதிப்பில் இது தொடர்பாக எனது கட்டுரை வெளிவந்திருக்கிறது)



இந்த தமிழ்ப்பண்பாடுதான் இந்துப்பண்பாடாகவும் பரிணமித்து,மேற்கு நாடுகள் பொறாமைப் படுமளவுக்கு இந்தியா இன்னும் தலை நிமிர்ந்து நிற்கிறது.சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், ‘ காம இச்சை என்பது நெருப்பைப் போன்றது.அது ஒவ்வொரு அனுபவத்திற்குப் பிறகும் வளர்ந்து கொண்டே செல்லும்’ என்றும்;



ஒரு மனிதனுக்கு= அவன் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும்,அவனு/ளுக்கு= காம இச்சையை விட மோசமாக பிணி எதுவும் இந்த பூமியில் இல்லை’ என்றும்;



“ எல்லாப் பிரச்னைகளுக்கும் மூல காரணம் குடும்பம் என்ற அமைப்பு ஆகும்.ஆனால்,அதைவிட வேறு எதுவும் இந்த சமுதாயத்தை கட்டமைக்க உதவாது” என்றும் கூறியிருக்கிறார்.



கலியுகம் பிறந்து 5112 ஆண்டுகள் ஆகின்றன.கடந்த 1000 ஆண்டுகளில் நமது இந்துப்பண்பாடும்,தமிழர் பண்பாடும் இஸ்லாமியப்படைப்பாலும்,கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பாலும் சிதைந்துவிட்டது.இதில் இஸ்லாமியப் படையெடுப்பால் சிதைந்தது மிக மிகக் குறைவு; கிறிஸ்தவ இங்கிலாந்து படையெடுப்பால் சிதைந்ததே மிக மிக அதிகம்.



தமிழ்ப் பண்பாடு பற்றி கடந்த சில ஆண்டுகளாகத் தேடித் தேடி படித்ததன் சுருக்கம்:



ஒரு பெண் தனது உடலைக் காட்டி யாருக்காவது காமக் கிளர்ச்சியை உண்டாக்கினால்,அவனது காமக் கிளர்ச்சியைத் தணிக்க வேண்டும்.அந்தக் காலத்தில் போட்டோக்கள் கிடையாது;ஆனால்,இன்று வக்கிர மனிதர்களாக பிறக்கும் கொடூரம் நிறைந்த காலம்! கேமிராவின் தரமோ,நிஜத்தை விடவும் துல்லியம்.போதையிலோ,காதலனுக்காகவோ ஒரு பெண் தனது முழு உடலை போட்டாவாக / வீடியோவாக எடுக்கச் சம்மதிப்பது தவறில்லை;ஆனால்,அந்த காதல் உடைந்துபோனால்,இணையத்தில் அவளது உடலைத் தாங்கும் போட்டோவும்/வீடியோவும் பல கோடி ஆண்களால் ரசிக்கப்படும்.எத்தனை கோடி ஆண்கள் காம வசப்படுவார்கள்?அது யாரென்றே அந்த பெண்ணுக்குத் தெரியாது.



தவிர,அந்தக் காதலியின் உடலை இணையத்தில் வெளியிடும் காதலன்,வெளியிடும் இணையதளம்,அதை பரப்புபவர்கள் அனைவருமே மறு ஜன்மத்தில் இதே மாதிரியான அவமானத்தை அனுபவிப்பதற்காகவே அப்பாவிப் பெண்ணாகப் பிறப்பார்கள்.இதற்கு பரிகாரமே கிடையாது.

ஒரு கண்டமே இதை பொழுதுபோக்காக செய்தால்?

ஐரோப்பாக் கண்டமும்,அமெரிக்கக் கண்டமும் இதை பொழுது போக்காக செய்வதால், இன்று ஐரோப்பா பொருளாதாரம் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கிறது.1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு இணையம் பரவத்துவங்கியது;இன்று 16 ஆண்டுகளில் இந்த இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் எத்தனை ஆண்கள், பெண்கள் ஒழுக்கம் தவறி நாசமாகிட இந்த ஐரோப்பாவும் அமெரிக்காவும் மட்டுமே காரணம்.எனவே, ஐரோப்பாவும்,அமெரிக்காவும் வெகு விரைவில் பொருளாதார பிச்சைக்கார நாடுகளாக மாறப்போவது உறுதி.இதை யாராலும் தடுக்க முடியாது.எந்த பரிகாரங்களாலும் நிறுத்திட முடியாது.



காமிரா செல்போன்கள்,டிஜிட்டல் கேமிராக்கள்,நீலப்படங்கள்,விபச்சார தரகர்கள்,வறுமையால் விபச்சாரம் செய்வோர்கள்,சினிமாவில் கவர்ச்சி போட்டி போட்டு நடித்து பல கோடி ஆண்களை காமக்கிளர்ச்சிக்குள்ளாக்குபவர்கள்,கவர்ச்சியால் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இயக்குநர்கள்,நடிகைகள்,தயாரிப்பாளர்கள் என மிகப் பெரிய நெட்வொர்க் இன்று கலியுகத்தின் அடையாளமாக பெரிய அளவில் செயல்பட, யாகூ குரூப்ஸ்,கூகுள் குரூப்ஸ்,காமரீதியான வலைப்பூக்கள்,காம வீடியோக்களை வெளியிடும் இணையதளங்கள் அனைவருமே பெண் சாபத்துக்கு உள்ளாவர்கள்.இவர்கள் செய்யும் பாவத்தை இவர்களால் ஒரு ஜன்மத்தில் கரைக்க முடியாது.தவிர, இதுபற்றி கிசுகிசு என எழுதுபவர்கள்,நமது தெரு/அலுவலகத்தில் பிறரது அந்தரங்கங்களை சிலாகித்துப் பேசுபவர்களும் இப்படிப்பட்ட பாவத்துக்கு ஆளாவர்கள்.



யாருக்குமே தெரியாமல் காமரீதியான பேராசைகளைச் செய்துவிடலாம்.அதுயாருக்குத் தெரியும் என நினைத்துவிடாதீர்கள்.நம் ஒவ்வொருவரின் கூடவே,நவக்கிரகங்களின் பிரதிநிதிகள் நாம் பிறந்ததிலிருந்து வருகின்றனர்.நாம் செய்யும் பாவ புண்ணிய காரியங்களை உடனுக்குடன் அஷ்டதிக் பாலகர்களிடம் சமர்ப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.ஒவ்வொரு ஏழரைச்சனி,அஷ்டமச்சனி காலத்திலும் இந்த நவக்கிரக பிரதிநிதிகளில் தலா ஒரு பிரதிநிதி நம்மோடு இருந்தாலும்,சனியின் பிரதிநிதி இரண்டுபேர்கள் வந்துசேர்கின்றனர்.அவர்கள் சூட்சுமமாக நமது நன்மைகளை உடனே அனுபவிக்க முடியாமல் தடுக்கின்றனர்.நமது சேமிப்பைக் கரைக்கின்றனர்;நமது மன உறுதியைக் குலைக்கின்றனர்;நம்மை எந்த ஒரு முடிவும் எடுக்க விடாமல் திணறடிக்கின்றன.அதுவும் காமரீதியாக ஆடாத ஆட்டம் ஆடியவர்களின் கதி அதோ கதிதான்.மற்றவை பாவங்களுக்கான தண்டனைகூட,நமது மன உறுதியால் தாங்கிவிடலாம்.காமரீதியான குற்றங்களுக்கான தண்டனை நமக்கு 20 முதல் 40 சதவீதம் நமது அஷ்டமச்சனி சமயத்தில் கிடைக்கிறது.மீதி அடுத்த ஜன்மங்களுக்கு சேமிப்பாகிறது.விடாத பைரவர் வழிபாடு மட்டும் ஓரளவு நம்மைக் காப்பாற்றும்.



எனவே,எனதருமை ஆன்மீகக்கடல் வாசகர்களே, காமரீதியான தவறுகள் எக்காரணம் கொண்டும் செய்ய வேண்டாம்.நிம்மதியாக வாழ்வதும்,ஒழுக்கமாக வாழ்வதுமே கோடீஸ்வர வாழ்க்கை ஆகும்.



தவறான பாதையில் எவ்வ்வ்வளவு தூரம் போயிருந்தாலும் சரி! உடனே திரும்புங்கள்.இந்த நொடியிலிருந்து சரியான பாதையில் வாழத்துவங்கவும்.கூடவே,செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக 6 தடவை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் இருக்கும் மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் திருக்கோவிலுக்குச் சென்று,நெய்தீபம் ஏற்றி,1008 முறை ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு வருக!!!

படத்தில் காணப்படுவது மேலப்பெரும்பள்ளம் அருள்மிகு வலம்புரநாதர் கோவிலில் ஒரே சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சனியும்,சனியின் குரு காலபைரவரும்!!!



ஓம்சிவசிவஓம்